மேலே உள்ள இரண்டு படங்களும் முக நூலில் உலா வந்து கொண்டிருக்கிறது. கர்னாடகாவில் உள்ள கலாபுராகி என்ற ஊரில் சரணபசவேஸ்வரா கோயிலில் நடைபெற்ற தேர்த்திருவிழாவின் போது எடுக்கப்பட்டவை.
இத்திருவிழா மார்ச் மாதம் 13 ம் தேதி நடைபெற்றுள்ளது. மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்த பின்பும் நடை பெற்றுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர் என்பதும் தனி மனித இடைவெளி பின்பற்றப் படவில்லை என்பதும் படத்தைப் பார்க்கையிலேயே தெரிகிறது.
இணையத்தில் செய்திகளை ஆய்வு செய்கிற போது கலாபுராகியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருப்பதும் இறப்புக்களும் நேர்ந்துள்ளதும் தெரிகிறது.
இந்த நிகழ்விலே கலந்து கொண்ட இத்தனை ஆயிரம் மக்களை கர்னாடக அரசு எப்படி கண்டுபிடிக்கும்? எப்படி அவர்களை சோதனை செய்யும்? கலாபுராகியில் தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் மருத்துவ சோதனைக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாகவும் தெரியவில்லை.
ஒரு வேளை பீலா ராஜேஷ் கர்னாடக சுகாதாரத்துறை செயலாளராக இருந்திருந்தால் "இந்த சிங்கிள் சோர்ஸ்" பற்றி கவலைப் பட்டிருப்பாரோ?
No comments:
Post a Comment