முகநூலில் நான் பார்த்து ரசித்த, வாய் விட்டு சிரித்த ஒரு சீமான் காமெடி, கீழே, நீங்களும் சிரிக்க . . .
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
முகநூலில் நான் பார்த்து ரசித்த, வாய் விட்டு சிரித்த ஒரு சீமான் காமெடி, கீழே, நீங்களும் சிரிக்க . . .
சமீபத்தில் சீமானும் ஆட்டுக்காரனும் ஒரே மேடையில் பேசியுள்ளார்கள். அதிலே ஆட்டுக்காரன் சீமான் பற்றி ஆட்டுக்காரன் பேசியதுதான் மேலே உள்ளது. அந்த பேச்சை கேட்ட போது நினைவுக்கு வந்த காட்சிதான் மேலே உள்ளது.
சீமானும் ஆட்டுக்காரனும் நிறைய மேடைகளில் ஒன்றாக பேச வேண்டும். அப்போதுதான் நிறைய காமெடி காட்சிகள் கிடைக்கும் .. .
விளக்கம் ஏதும் தேவையில்லை. காணொளியை பாருங்கள் புரியும்.
வடிவேலு
இல்லாத குறையை போக்கும் சீமானுக்கு மனமார்ந்த நன்றி.
பதிவுகள் ரொம்பவுமே சீரியஸாக இருந்து கொண்டிருப்பதால் மாறுதலுக்கு ஒரு பழைய அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
எனக்கு தெரிந்த ஒரு நிறுவனம் ஆசிரியர் தினத்தை கொண்டாடி நல்லாசிரியர் விருது வாங்கிய சில ஆசிரியர்களை கௌரவித்தது. அதிலே ஒரு ஆசிரியர் எனக்கு தெரிந்தவர். அந்த நிறுவனத்தில் உள்ளவர்களும் கூட நன்றாக தெரிந்தவர்கள்தான். அதனால் அந்த விழாவிற்கு சென்றிருந்தேன்.
அந்த நிறுவனத்தின் உயரதிகாரி ஆசிரியர்களின் மேன்மை குறித்து உணர்ச்சிகரமாக உரையாற்றிக் கொண்டிருந்தார். அவர் ஒரு சம்பவத்தை வேறு மேற்கோள் காட்டினார்.
அவர் பேசியதை அப்படியே தருகிறேன்.
“இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து விட்டது. ஆகஸ்ட் 14 ம் தேதி அன்று காந்தியும் நேருவும் பால கங்காதர திலகரிடம் செல்கிறார்கள். இந்த நாட்டை நீங்கள்தான் தலைமை தாங்க வேண்டும். ஜனாதிபதி பதவியா இல்லை பிரதமர் பதவியா எது வேண்டுமோ அந்த பதவியை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுத்துக் கொண்டது போக மீதமுள்ள பதவிகள்தான் மற்றவர்களுக்கு. என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் என வலியுறுத்துகிறார்.
ஆனால் திலகரோ மறுக்கிறார். நான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் ஆசிரியர் பணியே மேன்மையானது. பொறுப்பான இந்தியப் பிரஜைக்களை உருவாக்கும் பணியை நான் மிகவும் நேசிக்கிறேன். இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய ஒரு ஆசிரியரால்தான் வழி காட்ட முடியும். அதனால் எனக்கு எந்த பதவியும் வேண்டாம் என்று அவர் மறுக்கிறார்.
பிரதமர் பதவியை விட, ஜனாதிபதி பதவியை விட ஆசிரியராக இருப்பதுதான் முக்கியம் என்று பால கங்காதர திலகர் சொன்னதை நாம் மறக்கக் கூடாது”
அவர் அப்படியே பேசிக் கொண்டே போக நான் அந்த விழாவை விட்டு வெளியேறி விட்டேன். அதற்கு முன்பாக அந்த உயரதிகாரிக்கு ஒரு நிலை கீழே இருந்த அதிகாரிக்கு மட்டும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.
அந்த குறுஞ்செய்தி
“:இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு 25 வருடங்கள் முன்பாகவே பால கங்காதர திலகர் இறந்து விட்டார்”
கீழேயுள்ள பதிவை ஆட்டுக்காரனின் ஒரு அல்லக்கையின் ட்விட்டர் பக்கத்தில் பார்த்தேன். அதை படித்து முடித்ததும் சிரிக்கக் கூடாது.
பில்ட் அப் கொடுத்து கொடுத்து அடி வாங்கிய பின்பும் திருந்த மாட்டாங்க போல!
என்ன செய்ய நாய்களின் வால் எப்போதுமே நிமிராதே!
வாசன் சொன்னதற்கெல்லாம்
பதில் எழுத வேண்டிய அவசியமில்லை. நான் மனம் விட்டு சிரித்தேன். நீங்களும் சிரிக்கவே
பகிர்ந்து கொண்டுள்ளேன்.
நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவில் புறக்கணிக்கப்பட்டது போலவே ராமர் கோயில் பிராண பிரதிஷ்டையிலும் புறக்கணிக்கப்பட்டார் இந்திய முதல் குடிமகள்.
ஆனாலும் அவர் தன் குடியரசு தின உரையில் ராமர் கோயிலை விதந்தோந்தி பேசினார். இந்திய நீதித்துறையின் மீது மக்கள் வைத்த நம்பிக்கையின் அடையாளம்தான் ராமர் கோயில் என்று வேறு காமெடியாக பேசினார். அதை எழுதிக் கொடுத்த ஆளுக்கே எழுதும் போது சிரிப்பு வந்திருக்கும்.
எவ்வளவுதான் அரசால் இழிவு படுத்தப்பட்டாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் அரசை பாராட்டவே செய்கிறார்.
பாவம் ரொம்பவே நல்லவர்!
கீழே உள்ள செய்தி தனிப்பட்ட முறையில் மூவரிடமிருந்து வந்தது. நான்கு குழுக்களிலும் வந்தது.
இதில்
குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் 02.02.2024 ஒரு நாள் மட்டுமே வெள்ளிக்கிழமையில் வருகிறது.
கொஞ்சம் கவனித்திருந்தால் இந்த போலிச் செய்தியை பகிராமல் தவிர்த்திருக்க முடியும்.
ஆனால் செய்திகளை முந்தித் தரும் வேகம் அறிவை பின்னுக்கு தள்ளி விடுகிறது.
ஒரு காணொளி ஒன்று பார்த்தேன். செம காமெடி அது.
வள்ளிக்கும்மி நடனம் என்று சமீபத்தில் ஆட்டுக்காரனின் சொகுசுப்பயணம் மூலம் செய்திகளில் அடிபட்டது. அப்படிப்பட்ட ஒரு நடன நிகழ்வில் ஒரு விஷயத்தில் நடனமாடும் பெண்களிடம் ஒரு சத்தியம் வாங்குகிறார்கள்.
அதென்ன சத்தியம் ? காணொளியை பாருங்கள் . . .
பிற்போக்குத்தனமான இந்த சத்தியத்தை காப்பாற்றுவார்களா என்பது ஒரு புறம் இருக்கட்டும். அதை திருப்பிச் சொல்லக்கூட பெரும்பாலான பெண்கள் தயாராக இல்லை என்பது அவர்களிடமிருந்து வந்த சப்தத்தில் இருந்தே தெரிந்தது.
சத்தியம் கேட்பது சங்கித்தனம். அதை அந்த பெண்கள் மதிக்கவில்லை என்பது இன்னொரு செய்தியையும் சொல்கிறது.
தமிழ்நாட்டில் ஆட்டுக்காரன் கட்சிக்கும் நோட்டாவுக்கும்தான் போட்டி . . .
க்ளோடன் க்ளோப் என்று ஒரு விருது உள்ளது என்று தெரிந்த சங்கிக்கு அது யாருக்கு கொடுக்கப்பட்டது என்று தெரியவில்லையே!
அவங்களை சொல்லி என்ன செய்யறது!
சங்கிங்க என்றாலே முட்டாள்கள்தானே!
பிகு: ஒரு வார இடைவெளிக்குப் பின் வந்தவனுக்கு நல்ல காமெடியை கொடுத்த அந்த சங்கிக்கு நன்றிதான் சொல்ல வேண்டும்.
தோழர் சம்சூதீன் ஹீரா, தோழர் சாத்திரியின் பதிவை பகிர்ந்து கொண்டிருந்தார். அதை நானும் பகிர்ந்து கொள்கிறேன். கடைசி வரை கண்டிப்பாக படிக்கவும்.
அதிர்ச்சியூட்டும் அரசியல் திருப்பம்..!!
ஆஜானும் சாரு நிவேதிதாவும் கூட்டணி அமைத்துள்ளார்கள். மோடியும் மம்தாவும் அமைக்கும் கூட்டணீ போல ஆபத்தான கூட்டணி இது.
நிற்க
ஆஜான் சாரு நிவேதிதாவுக்கு விருது அளிக்கவுள்ள செய்தியை படித்தவுடன் ஏனோ ஐந்தாண்டுகளுக்கு முன்பு எழுதிய ஒரு பதிவு நினைவுக்கு வந்தது.
இதோ அது மீண்டும்.
இது ஒரு ஜாலியான பதிவு.
மறந்து போச்சே…
வாயிருந்தும்….
சொல்வதற்கு…
வார்த்தையின்றி… தவிக்கிறேன்
பின்னூட்டங்கள்.
கிளியைப் புடிச்சு கூண்டில் அடைத்து பாடச் சொல்லுகிற உலகம்..
ஒரு
மத்யமர் சங்கியின் ஒப்புதல் வாக்குமூலம் கீழே.
ஆக
இந்தி தெரிந்தவர்களுக்கு அமெரிக்கா போனாலும் பெட்ரோல் பங்க் வேலையோ அல்லது வால் மார்ட்டில்
சுமை தூக்கும் தொழிலாளி வேலைதான் கிடைக்கிறது போல.
அதே
போல தமிழ் பேசுபவர்கள் என்றால் அவர்களுக்கு ஆங்கிலமும் நன்றாக தெரியும் என்பதால் ஆங்கிலத்தில்
பேசுகிறார்கள். இந்தி பேசுபவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதையும் ஒப்புக் கொள்கிறார்.
இப்படித்தான்
பல சமயம் சங்கிகள் யாரையோ மட்டம் தட்டுவதாக நினைத்து தாங்களே மாட்டிக் கொள்கிறார்கள்.
இன்று காலை என்னை சிரிக்க வைத்த ஒரு பதிவும் ஒரு பின்னூட்டமும். தங்களை மிகவும் பிரம்மாண்டமாக நினைத்துக் கொண்டிருக்கிற ஒரு வியாதி (Megalomania) யால் பாதிக்கப்பட்டவர்களாக ஒருவர் இருந்தால் பரவாயில்லை. அத்தனை பேருமே வியாதியஸ்தர்களாக இருந்தால் என்ன செய்வது?
மணிரத்தினம் எடுத்துக் கொண்டிருக்கிற பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பவர்களின் தோற்றங்களை வெளியிட்டார்கள். அப்போதே ஒருவர் சொன்னார், அத்தனை பாத்திரங்களிலும் வடிவேலுவை வைத்து கூடிய சீக்கிரம் படம் வரும் பாருங்கள் என்று சொன்னார்.
எஞ்சாய் . . . .
முக நூலில் பார்த்த மூன்று பதிவுகளை மேலே ஒன்றாக மாற்றி உள்ளேன்.
இது போன்ற செண்டிமெண்டுகள் மூட நம்பிக்கை என்று மூளை சொன்னாலும்
மோடியின் நம்பர் இரண்டாக ஓ.பி,எஸ் வர வேண்டும் என்று மனம் விரும்புகிறதே!
ஏன்?