மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அளித்த ஒரு புதிய தகவல் கீழேயுள்ள காணொளியில் உள்ளது. அரசியல்வாதியை மீறி எழுத்தாளர் கம்பீரமாய் நிற்கும் தருணம் இது.
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அளித்த ஒரு புதிய தகவல் கீழேயுள்ள காணொளியில் உள்ளது. அரசியல்வாதியை மீறி எழுத்தாளர் கம்பீரமாய் நிற்கும் தருணம் இது.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி சொல்லும் தீர்மானம் பிரதமர் பதில் அளிக்காமலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது.
என்ன காரணம்?
சீனப் படைகள் முன் வந்த போது முடிவெடுக்க திராணியில்லாமல் நடுங்கியதை சொல்லும் ராணுவத் தளபதியின் புத்தகத்தைக் கொடுக்க ராகுல் காந்தி காத்திருக்கிறார்.
எங்கய்யா போச்சு உன் 56 இஞ்ச் மார்பு என்று எதிர்க்கட்சிகள் குடைவார்கள்.
டொனால்ட் ட்ரம்பின் நிபந்தனைகளுக்கு அடி பணிந்து அவர் அடிமையாய் மாறி விட்டாயே என்ற கேள்விகள் வேறு.
இதைத் தவிர மோடிதான் முஜ்ரா நடனம் (விபரங்களுக்கு இந்த இணைப்பை பார்க்கவும்) ஆடினார் என்று எப்ஸ்டீன் கோப்புகள் சொல்வதாக வேறு ஒரு தகவல்.
இப்படிப்பட்ட சூழலில் அவர் எப்போதுமே வெறுக்கும் நாடாளுமன்றத்திற்கு மோடி எப்படி வருவார்?
ஓடி ஓளிவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.
வழக்கமான பாஜக அயோக்கியத்தனம்.
நாடாளுமன்றம் கூட பாதுகாப்பில்லை என்றால் உள்துறை அமைச்சர் பதவி எதற்கு? அமித் ஷா ராஜினாமா செய்யட்டும்.
பிகு : நான் பனையூரிலேயே பதுங்கி இருப்பதைப் பற்றி பாஜகவினர் யாரும் பேச முடியாது என்று விஜய்க்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
நேற்று மணிப்பூரில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது.
யும்மாம் கேம்சந்த்சிங் என்ற மெய்தி இனத்தவர் முதலமைச்சராகவும் நிம்சேன் கிப்கேன் என்ற குக்கி இனப் பெண் எம்.எல்.ஏ வும் லோசில் டிகோ என்ற நாகா இனத்தவரும் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.
மணிப்பூரில் உள்ள அனைத்து குக்கி மற்றும் நாகா அமைப்புக்கள், அரசில் தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இணையக்கூடாது என்றும் தாங்கள் வாழும் பகுதியை தனியான யூனியன் பிரதேசமாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
அவர்களை பாஜக அரசு தாக்கியதன் ஒடுக்கியதன் விளைவு அது. மத்திய அரசின் மீதும் மோடியின் மீதும் அவர்கள் எப்போதோ நம்பிக்கை இழந்து விட்டனர். புதிதாக உருவான அமைச்சரவை ஒரு வெத்து வேட்டு என்பதையும் அவர்கள் அறிவார்கள்.
அவர்கள் சந்தித்த இன்னல்கள், கொடுமைகள், பெண்களுக்கு ஏற்பட்ட அராஜகங்கள், இழந்த உயிர்கள், அழிந்த உடமைகள் அப்படிப்பட்ட நிலைமைக்கு அவர்களை தள்ளியுள்ளன.
இந்த சூழலில் குக்கி இனத்தையும் நாக இனத்தையும் சேர்ந்தவர்களை துணை முதலமைச்சராக்கினால் பிரச்சினை தீரும் என்று சாணக்கியத்தனமாக முடிவெடுத்துள்ளதாக பாஜக கருதுகிறது.
நிம்சேன் கிப்கேனும் லோசில் டிகோவும் குக்கி, நாகா இனத்தவர்கள்தான். ஆனால் அந்த இனத்தை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களா? அவர்களின் நியாயத்திற்காக குரல் கொடுத்தவர்களா? அம்மக்களின் நம்பிக்கையை பெற்றவர்களா?
இல்லை,
இல்லவே இல்லை.
இதுதான் யதார்த்தம்.
அந்த இனங்களை சேர்ந்தவர்களை துணை முதல்வராக்குவது என்பது பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற விருப்பத்தின் பேரில் செய்யப்பட்டது அல்ல. எப்படி ராம்நாத் கோவிந்த் ஒரு பொம்மையாக இருந்தாரோ, எப்படி திரௌபதி முர்மு பொம்மையாக இருக்கிறாரோ, அது போன்ற பொம்மைகளாக இருக்க பதவி கொடுக்கப்பட்டவர்கள்.
அதனால் அமைதிக்கு வாய்ப்பில்லை.
பிகு: நேற்று மாநிலங்களவையில் கமலஹாசனின் உரை நன்றாக இருந்தது என்பதை இரண்டு மூன்று முறை பார்த்து கேட்ட பின்பே புரிந்தது. எளிய மொழியில் நேரடியாக இருந்திருந்தால் வீச்சு இன்னும் நன்றாகவே இருந்திருக்கும்.
ஒரு குழப்பமான தலைப்பை வைக்க அவரது உரையே காரணமாக இருந்தது.
உருப்படியாக எதையும் செய்ய இயலாத மோடி, நாடாளுமன்றத்தில் நடத்திய ஒரு வெட்டி விவாதம்தான் "வந்தே மாதரம்" 150 வது ஆண்டு.
அதையும் ஜவஹர்லால் நேருவை வசை பாடத்தான் பயன்படுத்திக் கொண்டார்.
அதற்கு பதிலளித்து நேருவின் கொள்ளுப் பேத்தி பிரியங்கா கொடுத்த பதிலடி சிறப்பாகவே இருந்தது.
அந்த காணொளி கீழே
ஏற்கனவே பட்ட அசிங்கம் போதும் என்ற அறிவு கூட மோடிக்கு கிடையாதா என்ன!
திருப்பரங்குன்றம் தீர்ப்பாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்தியா கூட்டணி அளித்த மனு சங்கி சுமந்தின் உறக்கத்தை கலைத்து விட்டது போல . . .
ட்விட்டரில் நேற்று ஒரே புலம்பல்.
காங்கிரஸ் கட்சி ஆதரிக்குதா?
ம்ம்ம்ம், அவங்களும் கையெழுத்து போட்டுட்டாங்க போல.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு இந்து விரோத முத்திரை வந்துடுச்சு, பிரயோசனமில்லாத இந்த நடவடிக்கையால் அது இன்னும் தீவிரமாகும்னு கூட புரியலையே.
நிச்சயமாக தோத்துப் போகும்னு தெரிஞ்சே இப்படி செய்யறாங்களே! நீதிபதியோட ஜாதி மேல வெறுப்பால செய்யறாங்க. மைனாரிட்டி மதத்தை சேர்ந்தவர் என்றாலோ ஆதிக்க ஜாதியைச் சேர்ந்தவர் என்றாலோ இப்படி செய்ய தைரியம் வருமா?
திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் மீது நடவடிக்கை என்றால் சுமந்திற்கு ஏன் பதறுகிறது?
இதுவே தாமதம்.
சகோதரி செய்த விபத்தை தான் ஏற்றுக் கொண்டு சிறை சென்றது என்பது ஒரு மோசடி. அப்படி மோசடி செய்தவரை வேதம் படித்தவர் என்பதற்காக நான் காப்பாற்றினேன் என்று சொன்ன போதே அவர் நீதிபதியாக இருக்கும் தகுதியை இழந்து விட்டார்.
இதிலே ஜாதியின் பெயரால் ஒளித்து வைக்க சுமந்து முயல்கிறார். அய்யா சுமந்து, தீர்ப்பாளரின் பல நடவடிக்கைகளுக்கு காரணமே அவருடைய ஜாதிய மேட்டிமை மனோபாவம்தான். அதையே அவருக்கு அனுதாபம் தேட நீர் முயற்சிப்பது அயோக்கியத்தனம்.
சரி உமக்கு ஏன் இவ்வளவு பதற்றம்?
திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் போல நமது மனைவியின் செயல்பாடுகள் அமைந்தால் அவர் மீதும் பதவி நீக்க நடவடிக்கை வரும் என்பதால் உருவான பயமா சுமந்து?
நேற்று நாடாளுமன்ற மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் ஆற்றிய அற்புதமான, ஆவேசமான, அர்த்தம் மிக்க உரை.
அவசியம் கேளுங்கள்.
என்னைப் போல மீண்டும் மீண்டும் கேட்பீர்கள் . . .
இந்த உரையில் தோழர் சு.வெ எழுப்புகிற மூன்று கேள்விகளுக்கு மோடியாலோ அல்லது சங்கிகளாலோ பதில் சொல்ல முடியுமா?
வந்தே மாதரம், ஜெய் ஹிந்த், இன்குலாப் ஜிந்தாபாத் ஆகிய மூன்று முழக்கங்களின் பின்னணியில் லட்சக்கணக்கானவர்கள் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
எந்த முழக்கத்தின் கீழ் நீங்கள் விடுதலைக்காக திரண்டீர்கள்?
"ஈஸ்வர அல்லா தேரா நாம்" என்ற முழக்கத்தை ஒரு முறையாவது உங்கள் உதடுகள் உச்சரித்துள்ளதா?
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் சிவன், விஷ்ணு, துர்கா என்று பனிரெண்டு திரு உருவச் சிலைகளை வைத்துள்ளீர்கள். கிறிஸ்துவத்திலிருந்து ஒரு திரு உருவச்சிலையோ, திருக்குரானின் அடையாளத்தில் எதுவுமோ உங்களுக்குக் கிடைக்கவில்லையா?
பதில் சொல் மோடி.
உம்மால் முடியாது, முடியாது, முடியாது.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் புகழ் நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை ( IMPEACHMENT MOTION) எடுக்கப் போவதாக "இந்தியா" கூட்டணி முடிவு செய்துள்ளது.
அரசியல் சாசனத்தின் விழுமியங்களைப் பற்றி கவலைப்படாமல், ஜன நாயகத்தை காலில் போட்டு மிதித்துக் கொண்டு காவிக் கண்ணாடி அணிந்து கொண்டு தீர்ப்புக்கள் மூலம் கலவரத்துக்கு வித்திடுபவர் நிச்சயம் நீதிபதி பொறுப்பிற்கு தகுதியற்றவர்தான்.
அவரை பணி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தின் முன்மொழிவு கொண்டு வர்ய்வது மிகவும் நல்ல விஷயம்.
எண்ணிக்கை அடிப்படையில் அந்த தீர்மானம் வெற்றி பெறாது.
ஆனால்
உங்கள் நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியது, ஏற்றுக் கொள்ள முடியாதது, நீதிபதி பதவிக்கு பொருத்தமற்றது என்று இந்திய ஜனநாயகத்தின் அடையாளமான நாடாளுமன்றத்தில் பதிவாவது மிகவும் முக்கியமானது.
சரியான முடிவை எடுத்த அனைத்து தலைவர்களுக்கும் வணக்கமும் வாழ்த்துக்களும் . . .
கீழேயுள்ள செய்தியை படிக்கையில் எனக்கு அதிர்ச்சியோ, ஆச்சர்யமோ ஏற்படவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெம்கடேசன் இன்று மக்களவையில் நிகழ்த்திய உணர்ச்சிகரமான உரை.
சங்கிகளுக்கு வெ.மா.சூ.சொ.ரோ இருந்தால் தூக்கில் தொங்குவார்கள். அது எதுவும் இல்லையென்பதால்தான் நாலு கால் ஜந்துகளாக திரிகிறார்கள்.
காணொளியை முழுமையாக பாருங்கள். அதில் வெடிக்கும் கோபத்தை பார்க்க தவறாதீர்கள்.
பட்டினி போட்டாலும் பணியாத தன்மானமும் , பகுத்தறிவும் கொண்ட தமிழ்சமூகம் உங்களுக்குப் பாடம் புகட்டும்
பில்லா ரங்கா இரிமினல் கூட்டாளிகளில் இளைய கூட்டாளி அமித்ஷா, அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்தி பேசியதற்கு முட்டுக் கொடுக்கும் பெரிய கூட்டாளி மோடி, தாங்கள் அண்ணல் அம்பேத்கரை மிகவும் மதிப்பதாக கூவிக் கொண்டே இருக்கிறார்.
அவர்கள் மதிக்கிற லட்சணம் என்ன என்பதை மக்களவை சபாநாயகருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் எழுதிய கடிதம் அம்பலப் படுத்துகிறது.
இந்திய அரசியல் சாசனத்தின் 75 வது ஆண்டுக்காக வெளியிட்ட காலண்டரிலேயே அவர் படத்தை வெளியிடப் பிடிக்காத நீங்களா அவரை மதிக்கிறீர்கள்.
கடுப்படிக்கும் காமெடியை நிறுத்தவும் மோடி
இன்று
மக்களவையில் தள்ளு முள்ளு நடந்துள்ளது.
முதல்
தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அநேகமாக ராகுல் காந்தியை கைது செய்யலாம். அதை
வைத்து எம்.பி பதவியிலிருந்து நீக்கும் முயற்சியைக் கூட மோடி செய்யலாம்.
ஆக
மிகப் பெரிய கிரிமினல் மூலம் மோடியின் புது நாடகம் அரங்கேறியுள்ளது. அண்ணல் அம்பேத்கரை
இழிவு படுத்திய அமித்ஷாவை பாதுகாக்க நடத்திய திசை திருப்பும் நாடகம். அமித்ஷாவை பாதுகாப்பது
மோடியின் கடமை அல்லவா! மோடிக்காக இளம் பெண் பொறியாளரை உளவு பார்த்த உத்தமனல்லவா!
பிகு:
ஆமாம், எந்த மருத்துவமனையில் ஐ.சி.யு வில் ஒரு நோயாளியை எந்த மானிட்டர் இணைப்போ, குளுக்கோஸ்
கூட ஏற்றாமல், தொலைக்காட்சி கேமராக்கள் புடை சூழ மந்திரிகள் வருவதை அனுமதிக்கிறார்கள்.
போடும் நாடகத்தையாவது ஒழுங்கா போடுங்கடா . . .
அரசியல் சாசனத்தை திருத்த மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும் என்பதும் அப்படி நிறைவேற்ற வாய்ப்பில்லை என்பதும் தெரிந்தும் ஏனய்யா மோடி, "ஒரே நாடு, ஒரே தேர்தல் " மசோதாவை கொண்டு வந்தீர்?
உங்க ஆட்களிலேயே எத்தனை பேர் ஓடிப் போவார்கள் என்பதை அறிந்து கொள்ளவா?
பிகு: இது ஒற்றை மீமோடு முடிக்கிற விஷயமில்லை. விரிவான பதிவு விரைவில் . . .
சி.ஏ.ஏ சட்டத்தை ஆதரித்து இஸ்லாமியர்களுக்கு துரோகம் இழைத்த அதிமுக, ஒரு நாடு, ஒரே தேர்தல் மசோதாவை ஆதரித்து இந்திய ஜனநாயகத்திற்கே துரோகம் இழைத்துள்ளது.
என்ன எடப்பாடி ரெண்டு நாள் முன்னாடி பொதுக்குழுவில பாஜகவை தாக்கினீங்களாம், அதெல்லாம் செட்டப்பா?
இந்த கேவலமான வேலைக்கு என்ன டீலிங் போட்டிருக்கீங்க?
யானை மாலை போட்டு பிச்சைக்காரன் ராஜாவானது மாதிரி தவழ்ந்து போய் முதலமைச்சரான உங்க கிட்ட எல்லாம் அரசியல் நாணயம் எல்லாம் எதிர்பார்க்க முடியுமா?
நீங்களும் ஒரு அமைதிப்படை அமாவாசைதானே!
இந்திய ஜனநாயகத்தின் துரதிர்ஷ்டம் மோடி பிரதமராக இருப்பது மட்டுமல்ல. ரௌடி கவர்னராக இருந்த ஜகதீப் தன்கர் இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருப்பதும் கூடத்தான்.
அவரை துணை ஜனாதிபதி பதவியிலிருந்தும் மாநிலங்களவை தலைவர் பொறுப்பிலிருந்தும் நீக்க வேண்டும் என இந்தியா கூட்டணி எம்.பி க்கள் மாநிலங்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தீக்கதிர் செய்தியில் முழுமையாக உள்ளது.
ஜகதீப் தன்கர் வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை உள்ள மனிதராக இருந்தால் பதவியிலிருந்து ராஜினாமா செய்திடுவார்.
ஆனால் சங்கிகளுக்குத்தான் அப்படிப்பட்ட எதுவும் கிடையாதே! அதனால் பதவியில் ஒட்டிக் கொண்டுதான் இருப்பார்.
ஜகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் தாக்கல்
புதுதில்லி, டிச. 10 - நாடாளுமன்ற மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப்
தன்கருக்கு எதி ராக, அரசியலமைப்புப் பிரிவு 67(பி)-ன் கீழ், இந்தியா கூட்டணி கட்சி
கள் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்துள்ளன.
அதானி முறைகேடு குறித்த விவா தத்திற்கும், எதிர்க்கட்சிகள் அளிக்
கும் நோட்டீஸ்களுக்கும் மாநிலங் களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் தொடர்ந்து அனுமதி
மறுத்து வரு கிறார். அதேவேளையில், அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரசுக்கும்,
காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறி, அதுபற்றி விசாரிக்க
வேண்டும் என்று பாஜக எம்.பி.க்கள் அளித்த நோட்டீஸ்களுக்கு வேகவேகமாக அனுமதி
அளித்துள்ளார்.
இவ்வாறு, மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஒரு தலைப்பட்சமாக
செயல்படுவதால், அவர் அவைத் தலைவராக நீடிக்கத் தகுதியில்லை என்று கூறி எதிர்க்
கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளன.
இதில், காங்கிரஸ், திமுக, ராஷ்டி ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி,
திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள்
60-க்கும் மேற்பட்டவர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீ சை தாக்கல் செய்துள்ளனர்.
அதானி ஊழலை
மூடிமறைக்க முயற்சி
இந்தியாவில் ‘அதானி கிரீன் எனர்ஜி’ நிறுவனம் விநியோகித்த சூரிய
மின்சக்தியை வாங்க பல் வேறு மாநில மின்பகிர்மான நிறுவன அதிகாரிகளுக்கு 265
மில்லியன் டாலர் (சுமார் 2,039 கோடி ரூபாய்) லஞ்சம் அளிக்கப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில்
குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதேபோல அமெரிக்க முதலீட்டாளர்களிடம் அதானி ரூ. 6,300
கோடி மோசடி செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில் அதானியைக் கைது செய்யவும், நாடாளுமன்ற
கூட்டுக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளவும் நட வடிக்கை எடுக்க வேண்டும்,
ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் மணிப்பூர் மாநில வன்முறை மற்றும் சம்பல் பகுதி
மசூதி விவகாரத்தில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும்
என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
ஆனால், மோடி அரசு அதனை ஏற்பதாக இல்லை. நாடாளுமன்றமே முடங்கினாலும்,
அதானிக்கு எதிராகஎந்த நடவடிக்கையும் எடுக்கமாட் டோம் என்று பிடிவாதமாகஉள்ளது.
11 நாட்களாக தொடரும்
போராட்டம்
இந்நிலையில், செவ்வாயன்று (டிச.10) பதினொன்றாவது நாளாக
நாடாளுமன்றம் கூடியது. அப்போது இரு அவைகளிலும் அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு அதானி
உள்ளிட்ட விவகாரங்களை விவா திக்க வேண்டுமென எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ்
அளித்தனர்.
ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க் களின் நோட்டீஸ்கள் எதையுமே ஏற்க
முடியாது என்று அவைகளின் தலை வர்கள் தள்ளுபடி செய்தனர்.
இதனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் முழக்கங் களை
எழுப்பவே, பகல் 12 மணி வரையும், பின்னர் நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்
பட்டன. இதனால் 11-ஆவது நாளாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின.
இதனிடையே தான், மாநிலங் ளவைத் தலைவர் ஜகதீப் தன்கருக்கு எதிராக,
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸ்களை அளித்துள்ளனர்.
பாரபட்சமான
நடவடிக்கைகள்
மாநிலங்களவைத் தலைவராக இருக்கும் ஒருவர் யாருக்கும் ஆதர வாக
இருக்கக்கூடாது என்ற போதி லும் தன்கர் எப்போதும் ஆளும் கட்சி எம்.பி.க்களுக்கு
சாதகமாக இருப்பதுடன், அவர்களுடன் சேர்ந்து எதிர்க்கட்சியினரை குற்றம் சாட்டு வதை
வாடிக்கையாக வைத்துள் ளார் என்பது நீண்டகால குற்றச் சாட்டாகும். எதிர்க்கட்சி
எம்.பி,க்கள் பேசும்போது வேண்டுமென்றே குறுக்கீடு செய்வது; தடுத்து நிறுத்து வது,
போதிய நேரம் வழங்காதது, என்று ஜகதீப் தன்கரின் பேச்சுக் கள், நடவடிக்கைகள்
எதேச்சதிகார மாகவும் அராஜகமான முறையிலும் உள்ளன என்று ஏற்கெனவே புகார்கள்
உள்ளன.
மாநிலங்களவை
விதிகளையும் மீறுகிறார்
எதிர்க்கட்சித் தலைவர் பேச எழுந்திருக்கும் போது அவரை பேச
அனுமதிக்க வேண்டும் என்பது மாநி லங்களவையின் விதியாகும். ஆனால், காங்கிரஸ்
தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மல்லி கார்ஜூன கார்கே பேசுவதற்கு அனுமதி
மறுப்பதுடன், வேண்டு மென்றே அவரது ஒலிவாங்கி அணைக்கப்படுகிறது. இதுதவிர, ஒரு
எம்.பி. தனது பேச்சில் மற்ற வர்கள் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டுக் கள் கூறக்கூடாது
என்று மாநிலங்கள வையின் விதி 238(2) தெளிவுபடுத்து கிறது. இந்த விதி மாநிலங்களவை
யின் தலைவருக்குமே பொருந்தக் கூடியது தான். ஆனால், மாநிலங் களவைத் தலைவர் ஜகதீப்
தன்கர், சில எம்.பி.க்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் கருத்துகளைக் கூறுவதாக
கூறப்படுகிறது.
பல்வேறு பிரச்சனைகள் தொடர் பாக எதிர்க்கட்சிகள் அளிக்கும்
நோட்டீஸ்களில் ஒன்றைக்கூட விவாதத்திற்கு எடுக்க மறுப்பதுடன், அவற்றை மொத்தம்
மொத்தமாக தள்ளுபடி செய்வதும், எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் கடுமையாக நடந்து
கொள்வதுமாக உள்ளார்.
நம்பிக்கையில்லாத்
தீர்மானம்
அந்த வகையில் அதானியின் ஊழல் பற்றி விவாதத்திற்கு 11 நாட் களாக
அனுமதி மறுத்துவரும் மாநி லங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், தற்போது அமெரிக்கத்
தொழி லதிபர் ஜார்ஜ் சோரஸூக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் தொடர்பு இருப்ப தாக
பாஜக உறுப்பினர்கள் அளித்த நோட்டீஸ்களை மட்டும் வேகமாக விவாதத்திற்கு
எடுத்துள்ளார்.
எனவே தான், மாநிலங்களவைத் தலைவரின் பாரபட்சத்தைக் கண்டித்து,
அவருக்கு எதிராக தற்போது நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸ்களை எதிர்க்கட்சி
உறுப்பி னர்கள் அளித்துள்ளனர்.
மோடி - அதானி உருவம்
பதித்த பைகளுடன் எம்.பி.க்கள் போராட்டம்!
அதானி, மணிப்பூர், சம்பல் விவ காரங்களை விவாதிக்க மறுக்கும் ஒன்றிய
மோடி அரசின் பிடிவாதத்தை கண்டித்து, செவ்வாயன்று 6-ஆவது நாளாக இந்தியா கூட்டணி
எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.