Showing posts with label மத்யமர் குழு. Show all posts
Showing posts with label மத்யமர் குழு. Show all posts

Wednesday, April 1, 2026

மத்யமர் ஆட்டுக்காரன் குழுவை தடை செய்யுங்கள்

 


மத்யமர் ஆட்டுக்காரன் குழுவை தடை செய்வது தமிழ்நாட்டிற்கு நல்லது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதற்கும் நல்லது.

அந்த குழுவின் சிகண்டி பதிவர் (பெண் பெயரில் செயல்படும் போலிப் பதிவர்) திங்களன்று போட்ட ஒரு பதிவையும் அதற்கு முட்டு கொடுக்கும் மாடரேட்டரின் பதிலையும் பாருங்கள்.




ஒரு வழியாக அந்த பதிவு நீக்கப்பட்டது. ஆனால் செவ்வாய்க் கிழமை அன்று அதே பதிவை வேறு ஒருவர் பதிவு செய்கிறார்.

என்னய்யா நியாயம் என்று கேட்டால் பதில் இல்லை.

தேர்தல் வரைக்கும் இந்த குழுவில் உள்ள சங்கி வெறியர்கள் என்னென்ன பொய்களை பரப்புவார்களோ! அந்த பொய்கள் தமிழ்நாட்டின் சமூக அமைதியை பாதிக்கும். சட்டம் ஒழுங்கை பாதிக்கும்.

அதனால் இந்த குழுவை தடை செய்வது நல்லது.

பிகு: இந்த குழுவை பற்றி இன்னும் ஒரு பதிவை மட்டும்தான் எழுத முடியும். ஏன்? அது நாளை . . .

Thursday, March 12, 2026

நன்றி கெட்ட, துரோக மோடி அரசு . . .

 


சங்கிகள் பீற்றிக் கொண்டிருக்கிற ஒரு செய்தி கீழே உள்ளது.



இந்த செய்தியின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

அதை உண்மை என்றே எடுத்துக் கொள்வோம்.

இரானின் உச்ச தலைவர் அயத்துல்லா காமெனியின் மறைவிற்கு மோடி ஒரு இரங்கல் செய்தி கூட விடுக்கவில்லை.

இரானின் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல், அமெரிக்காவை கண்டிக்கவில்லை, கண்டிப்பதற்கான தைரியம் மோடிக்கு கிடையாது என்பது நாமறிந்த உண்மைதான். போரை நிறுத்துங்களேன் என்று ஒரு சின்ன வேண்டுகோள் கூட விடுக்கவில்லை.

இப்படிப்பட்ட சூழலில் இந்தியக் கப்பல்களுக்கு இரான் அனுமதி கொடுத்தது என்றால் அது இரானின் பெருந்தன்மை. பாரம்பரியமாக நட்பு பாராட்டும் இந்திய மக்கள் மீது கொண்டுள்ள மரியாதை.

இந்திய அரசின்  சிக்கலுக்கு தீர்வு கொடுத்த இரானுக்கு இந்தியா செய்த பதில் மரியாதை என்ன?

இரான் மீதான கண்டனத் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையில் வழிமொழிந்து இஸ்ரேல்-அமெரிக்கக் களவாணிகள் கூட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் மோடி. இதையும் கூட ராஜதந்திரம் என்று  வெட்கமே இல்லாமல் பீற்றிக் கொள்வார்கள் சங்கி மூடர்கள்.

உதவிக்கரம் நீட்டுபவரின் முதுகில் குத்தும் நன்றி கெட்டவர்களின் ஆட்சியில் வாழ்கிறோம் என்று நினைக்கவே கடுப்பாக இருக்கிறது.

ஆட்சியாளர்களின் துரோகத்தால் நாம் என்னென்ன பிரச்சினைகளை அனுபவிக்கப்போகிறோமோ? 

Friday, February 13, 2026

5000 ரூபாயால் சங்கிகள் கதறல் . . .

 


மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 5000 இன்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது ஒரு அதிரடி யுக்தி. பாஜக-அதிமுக கூட்டணி சதி செய்தார்களோ, சதி செய்யவில்லையோ, இந்த முடிவால் அவர்கள் ஆடிப் போயிருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

பீகாரிலும் மகாராஷ்டிராவிலும் பாஜக பயன்படுத்திய ஆயுதம் அவர்களையே தமிழ்நாட்டில் திரும்பத் தாக்கியுள்ளது.

பாஜகவினரின் கதறல் ஓசை காதுக்கு இனிமையாக இருக்கிறது என்பதும் உண்மை.

நான் பெற்ற இன்பம் நீங்களும் பெறுக.

மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் சங்கிகளின் கதறலை கீழே பாருங்கள்.












சங்கிகளிடம் இயல்பாகவே இருக்கிற பெண்களுக்கு எதிரான மனப்பான்மையையும் நாம் மறந்து விடக் கூடாது.

தமிழ்நாடு அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்த நிலைமையை மாற்ற பாஜக-அதிமுக கூட்டணி எந்த அளவிற்கும் கீழிறங்கும். கலவரத்தை தூண்டினால் கூட ஆச்சர்யப்பட வேண்டியதில்லை. 

Sunday, January 4, 2026

நல்லா ஜெயிலில் போடுங்க சார்

 


கீழே உள்ள செய்தியைப் பாருங்கள்


இந்த மனிதன் கண்டிப்பாக ஜெயிலில் கம்பி எண்ண வேண்டிய ஆள்தான். பெரும்பாலான சங்கிகள், ஆட்டுக்காரன் முதற்கொண்டு நிதியமைச்சர் வரை இது போன்ற கேவலமான சிந்தனை கொண்டவர்கள்தான்.

மத வெறியை பரப்புவதற்கு நடவடிக்கை எடுத்தால் மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் உள்ள சிகண்டிகள் முதல் மாடரேட்டர் வரை ஜெயிலுக்கு போக வேண்டியவர்கள். ஏன் அந்த தீர்ப்பாளர் கூட விதிவிலக்கல்ல.

இதெல்லாம் நடந்தால் நிஜமாகவே நன்றாக இருக்கும். 

Thursday, December 25, 2025

மோடிக்கும் வெட்கமில்லை, சங்கிகளுக்கும் . . .

 


கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சங்கிகள் பல இடங்களில் தங்கள் புத்தியை காண்பித்துள்ளார்கள். 

கேரளா போன்ற மாநிலங்களில் கூட அவர்களின் மிரட்டல்களுக்கு பயந்து சில கல்வி நிறுவனங்கள் அவர்கள் வழக்கமாக நடத்தும் கிறிஸ்துமஸ் விழாக்களை ரத்து செய்து விட்டன. இத்தனைக்கும் கேரளாவில் சில கிறிஸ்துவ அமைப்புக்கள் பாஜகவைத்தான் ஆதரிக்கின்றன. அதை சங்கிகள் பெருமையாகவும் பீற்றிக் கொண்டிருக்கின்றனர். 

பாஜக ஆளும் பல மாநிலங்களில் இன்று கிறிஸ்துவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். ஒடிஷா, உத்தர்கண்ட், மத்தியப் பிரதேசம், டெல்லி, உ.பி என்று சொல்லிக் கொண்டே போகலாம். 


உத்திரப்பிரதேசத்தில் கிறிஸ்துமஸ் விடுமுறையை ரத்து செய்து விட்டார் மொட்டைச் சாமியார். 

இவ்வளவு அக்கிரமங்களை சங்கிகள் நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் இன்றைய போட்டோ ஷூட்டுக்காக ஒரு சர்ச்சிற்கு சென்று அவர் பதிவு போட, மத்யமர் ஆட்டுக்காரன் குழு சங்கிகள் அதை பாராட்டி பதிவு போடுகிறார்.




தன் ஆட்கள்  அயோக்கியத்தனம் செய்யும் வேளையில் அமைதி, நல்லெண்ணம் என்று கதை விட மோடிக்கும் வெட்கமில்லை.

மோடியின் பொய்யான பதிவை பாராட்ட சங்கிகளுக்கும் வெட்கமில்லை.

பிகு : எதிரொலி திரைப்படத்தில் சிவாஜி சாட்சியை முறைத்துக் கொண்டே நிற்க, அந்த பார்வையை தாங்க முடியாமல் சாட்சி உண்மையை சொல்லி விடுவார். 



Saturday, November 22, 2025

சங்கிகள் -தமிழ்நாட்டின் துரோகிகள்

 


மதுரை, கோவை நகரங்களுக்கு மெட்ரோ திட்டங்கள் கிடையாது என்று ஒன்றிய அரசு அனுமதி மறுத்து விட்டது. 2011 ல் எடுக்கப்பட்ட மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இந்த நகரங்களின் மக்கட்தொகை இருபது லட்சத்திற்கு குறைவாக இருப்பதால் மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களில் மக்கட்தொகை இருபது லட்சத்திற்கு குறைவாக உள்ள நகரங்களில் மெட்ரோ செயல்படும் போது மதுரைக்கும் கோவைக்கும் மட்டும் மறுப்பது மோடியின் அப்பட்டமான தமிழ்நாட்டு விரோத அரசியல்.

இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால் 2021 மக்கட்தொகை கணக்கெடுப்பு நடத்தியிருந்தால் நிச்சயம் இருபது லட்சம் கடந்திருக்கும். ஆக இவர்கள் மறுத்த காரணத்திற்கும் இவர்களே பொறுப்பு.

மத்தியரசின் செயலை சங்கிகள் கண்டிக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட நேர்மை இருந்தால் அந்த மூடர்கள் ஏன் சங்கிகளாக இருக்கப் போகிறார்கள்!

முதலில் செய்தி தவறு என்றார்கள்.

அடுத்து விளக்கம்தான் கேட்டுள்ளார்கள் என்றார்கள்.

தமிழ்நாடு அனுப்பிய திட்ட அறிக்கை தவறு என்று வியாக்யானம் கொடுத்தார்கள்.

ஆனால்  இவர்களை மக்கள் எள்ளி நகையாடுவதால்

கோவைக்கும் மதுரைக்கும் எதற்கு மெட்ரோ என்று கேட்கத் தொடங்கி விட்டார்கள். மத்யமர் ஆட்டுக்காரன் குழு சங்கிகள் எல்லாம் இப்போது அந்த ஒப்பாரியைத்தான் வைத்துக் கொண்டுள்ளார்கள்.

இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டின் எதிரிகள், துரோகிகள். அவர்களை இந்த மாநிலத்திலிருந்தே துரத்த வேண்டும். 


Tuesday, November 11, 2025

பூடானில்தான் வாய் தொறப்பீங்களா மோடி?

 


மேலேயுள்ள படத்திற்கும் அதில் உள்ள கேள்விகளுக்கும் கீழே உள்ள தகவல்தான் காரணம்.



இதில் என்ன கொடுமை என்றால் 56 இஞ்ச் கோழையின் இந்த காமெடியை நம்பி இரண்டாவது ஆபரேஷன் சங்கி வரப்போவதாக மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் மூடச்சங்கிகள் சில்லறையை சிதற விட்டுக் கொண்டிருக்கிறார்கள். . ..

Saturday, November 8, 2025

சங்கிகளோடு சண்டை ஏன்?

 


மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் நேற்று ஒரு பதிவும் அதற்கு ஒரு போலி ஐ.டி (ஆண்டாளை வைரமுத்து இழிவுபடுத்துகிறார் என்று உருவான சர்ச்சையின் போது உருவான போலி இவர்) போட்ட பின்னூட்டமும் அதற்கு நான் கொடுத்த பதிலும் கீழே உள்ளது.





கௌரி கிஷன் பிரச்சினை உச்சத்தில் சென்று கொண்டிருக்கும் போதே இப்படி உருவக் கேலி செய்கிறார் என்றால், சுட்டிக்காட்டிய பின்பும் அதையே மாற்றிச் சொல்லும் அளவிற்கு ஆணவம் தலைக்கேறியுள்ளது.

சங்கிகளுக்கு சிக்கல் என்றால் பாய்ந்தோடி வரும் நீதி, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை பின்பற்றும் மாடரேட்டர் வழக்கம் போல காணாமல் போகி விட்டார்.

மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் நான் ஏன் தொடர்ந்து சண்டை செய்கிறேன்?

மேலே பராசக்தி சிவாஜி பதில்  சொல்கிறார் . . . 

Friday, October 31, 2025

அந்த பயம் இருக்கனும் சங்கி


 மத்யமர் ஆட்டுக்காரன் குழுவின் மாடரேட்டரான ஒரு முரட்டு சங்கி பற்றி ஏற்கனவே இங்கே பதிவிட்டுள்ளேன்,

நீதி, நேர்மை, நியாயம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை உபதேசித்து ஒரு பின்னூட்டம் போட்டிருந்தார். 


சாத்தான் வேதம் ஓதுகிறதே என்று கடுப்பாகி சூடாக ஒரு பதில் கொடுத்தேன்.


பார்ட்டி கடுப்பாகி இன்னும் ஒரு முறை இடை நீக்கம் செய்யும் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் பம்மி பதுங்கி விட்டது.

இடை நீக்கம் செய்தால் இன்னும் அதிகமாக கழுவி ஊற்றுவேன் என்ற பயம் போல.

அந்த பயம் இருக்கனும் சங்கி . . .

Tuesday, October 7, 2025

நெசமா கோபமா மோடி?

 


நேற்று உச்ச நீதிமன்றத்தில் கேவலமான நிகழ்வு ஒன்று நடந்தது.  ராகேஷ் கிஷோர் என்றொரு வக்கீல் தலைமை நீதிபதி திரு கவாய் மீது காலணியை எரிந்துள்ளான்.

சனாதன தர்மத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்று சத்தம் போட்டுக் கொண்டே அந்த கேவலமான வேலையை செய்துள்ளான். 

கஜராஹூவில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தலையில்லாத விஷ்ணு சிலையை சீரமைக்க வேண்டும்  என்ற வழக்கை தள்ளுபடி செய்கையில் " நீங்கள் ஏன் விஷ்ணுவிடமே வேண்டிக் கொள்ளக் கூடாது" என்று சொன்னமைக்காகத்தான் இந்த கேவலத்தை நிகழ்த்தியுள்ளான்.

தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் மாற்றங்களை ஏன் செய்ய முடியாது என்று தனி பதிவாக எழுதுகிறேன்.

நீதித்துறையின் உச்ச பொறுப்பில் உள்ளவரை இழிவு படுத்தும் தைரியம் எங்கிருந்து வருகிறது?

சனாதனம்தான்.

நீதிபதி கவாய் அவர்களின் சமூகப் பின்னணி காரணமாக அவரை சங்கிகள் பார்க்கும் பார்வை மோசமாகத்தான் இருக்கிறது.  அந்த பார்வையை தருவது சனாதனம்தான்.  

இந்த நிகழ்வுக்காக இந்தியர்கள் அனைவரும் கோபமடைந்துள்ளார்கள் என்று மோடி முதலைக் கண்ணீர் வடித்துள்ளார்.


உண்மையாகவே இந்தியாவை நேசிக்கிற, அரசியல் சாசனத்தின் விழுமியங்களை மதிக்கிற இந்தியர்கள் இச்சம்பவம் குறித்து கோபமடைந்துள்ளனர்.

ஆனால் கண்டிப்பாக சங்கிகள் கிடையாது. 

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் சில சங்கிகளின் அரிய, உயரிய கருத்துக்கள் இங்கே . . .



இப்போ சொல்லுங்க மோடி, நெசமாவே உங்களுக்கு கோபமா? மனசுக்குள்ள சந்தோஷமாத்தானே இருந்தது.

நெசத்தை சொல்லுங்க . . .

Tuesday, September 16, 2025

ஆட்டுக்காரன் குழுவின் திருந்தாத ஜென்மங்கள்

 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி கடந்தாண்டு மறைந்த போது அவரது உடல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அந்த புகைப்படத்தை வைத்துக் கொண்டு சங்கிகள் தோழர் யெச்சூரி மீது ஒரு அவதூறு பிரச்சாரத்தை செய்தனர். அதாவது அவர் கிறிஸ்துவராக மதம் மாறினாலும் சீத்தாராம் என்ற பெயரை மாற்றிக் கொள்ளாமல் ஏமாற்றி வந்துள்ளார் என்பது அந்த பொய்ப்பிரச்சாரம்.

அதனை மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் நான்கைந்து சங்கிகள் பதிவு போட்டு விஷத்தை கக்கியிருந்தனர்.

கடுமையாக சண்டை போட்டதால் என்னை ஒரு வாரம் குழுவிலிருந்து இடை நீக்கம் வேறு செய்திருந்தார்கள்.

அப்போது எழுதிய இரு பதிவுகளின் இணைப்பை கீழே அளித்துள்ளேன்.

அவசியம் படியுங்கள்.

கேவலமான, அயோக்கிய, அடி முட்டாள் சங்கிகள்


மத்யமர் சங்கிகளுடனான சண்டை ஓயவில்லை


இதோ ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் அதே பொய்யை பரப்பத் தொடங்கியுள்ளனர்.





இந்த பதிவிற்கு ஒரு சங்கி ஆபாசமாக ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தான். இதுதான் உங்கள் குழுவில் கடைபிடிக்கும் நாகரீகமா என்று அந்த சங்கி மாடரேட்டரை கேட்டவுடன் அந்த ஆபாச பின்னூட்டத்தை நீக்கி விட்டார்கள். 

ஒரே பொய்யை எவ்வளவு முறை பரப்புவீர்கள்? இந்த குழு பொய்களை, வெறுப்பை, விஷத்தைத்தான் பரப்புகிறது. இதை நீங்கள் ஏற்கிறீர்களா என்று அட்மினிடம் கேட்டதற்கு மட்டும் எந்த பதிலும் இல்லை. 

இவர்களுக்காகத்தான் அன்று வாலி

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் ?
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம் ?

என்று  எழுதியிருக்கிறார்,
இந்த ஜென்மங்கள் மனித குலத்திற்கே பெருத்த அவமானம்.

Wednesday, July 9, 2025

முட்டாள் சங்கிகளின் உலகமே!

 


காலையில் எழுதிய பதிவில் தேதிகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தேன்.

மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஒரு சிகண்டி இன்றைய வேலை நிறுத்தம் தொடர்பாக திமுகவை திட்டி எழுத மற்ற மூடச்சங்கிகளும் அப்படியே அதை வழி மொழிந்திருந்தனர். 

அதிலே ஒரு அடிமுட்டாள் சங்கி, இந்த வேலை நிறுத்தமே, சமீபத்திய கொலையை திசை திருப்ப திமுகவின் ஏற்பாடு என்று எழுதி இருந்தது.

இது ஒரு அகில இந்திய வேலை நிறுத்தம் என்பதோ முதலில் 20.05.2025 அன்று நடத்துவது என முடிவு செய்யப்பட்டதோ பின்பு 20.07.2025 என ஒத்தி வைக்கப்பட்டதோ தெரியாமல் அவர்கள் கட்டமைத்த பொய் உலகிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மூடச்சங்கிகள்.

அந்த அடி முட்டாளுக்கு பதில் போட்டு அவருடைய கருத்து சிறுபிள்ளைத் தனமானது, முட்டாள்தனமானது என்று சொன்னேன்.


எந்த பதிலும் சொல்ல முடியாமல் பதுங்கி விட்டார்கள், பதிவெழுதிய சிகண்டி உட்பட...

Thursday, May 1, 2025

சங்கிகள் சினிமாவுக்கு கதை எழுதலாம்

 சங்கிகளால் மட்டுமே இப்படிப்பட்ட கதைகளை உருவாக்க முடியும். இந்த கதையை ஒரிஜினலாக எழுதிய ஆள் திரைப்படத்துறைக்கு சென்றால் ஒளிமயமான எதிர்காலம் உண்டு.

 இந்த கதையை எங்கே படித்தேன் என்று நீங்கள் சுலபமாக ஊகித்து விடுவீர்கள். ஆமாம். மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில்தான்.

 மத வெறியேற்றுவதற்காகவே  பொய்ப்பிரச்சாரங்களோடும் சிகண்டிகளோடும் செயல்படும் குழு அது.

 


சம்பவம் நடந்த அன்று பஹல்காம் சுற்றுலாவிற்கு சென்று வந்த, மேற்கு வங்கத்தை சேர்ந்த ஏக்தா திரிவேதி என்ற பெண்மணி கொடுத்த வாக்குமூலம் மிகவும் முக்கியமான ஆதாரமாக உள்ளது.

 தாக்குதல் நடந்த நாளிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு பஹல்காம் சென்ற அவரும் & அவரது குடும்பத்தினரும், குதிரை ஓட்டிகளின் சந்தேகத்திற்கிடமாக நடத்தைகளால் mini Switzerland அருகில் வந்தும் உள்ளே செல்லாமல் திரும்பியிருக்கின்றனர்.

 அவரது குதிரையோட்டி, நல்ல ஆங்கிலத்தில் இவரோடு பேசிக் கொண்டே வந்ததில், இவருக்கு சந்தேகம் தோன்றுகிறது. அதற்கு அந்த ஆள், தான் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்ததாகவும், பின் அந்த வேலையை விட்டு ponywala ஆ வந்ததாக சொல்கிறான். பணம் எத்தனை கிடைத்தாலும், எந்த ஒரு மனிதனும் ஆசிரியர் வேலையை விட்டு விட்டு கழுதை மேய்க்க வர மாட்டான். 

 மேலும், மிகச் சிறியதான satellite ஃபோன் ஒன்றை வைத்துள்ளான். அதில் அழைப்பு வரவே, குதிரையை ஓரிடத்தில் நிற்க வைத்து விட்டு, சற்று தள்ளி சென்று பேசி விட்டு திரும்பியிருக்கிறான். உருதுவில் பேசியதில் , சில முக்கிய விஷயங்கள் , இந்த பெண்மணியின் காதில் விழுந்திருக்கின்றன. அதில் முக்கியமானது 35 துப்பாக்கிகளை இன்று மேலே கொண்டு சென்று பதுக்கியிருக்கிறோம் என. 

 இதையெல்லாம், கேட்டு அந்த பெண்மணி mini Switzerland செல்ல சந்தேகப்பட்டு, தன் குழுவினரை அழைத்து திரும்ப சொல்லியிருக்கிறார். அவர்கள் 'இத்தனை தூரம் வந்து விட்டோம், photos எடுத்துக்கொண்டு உடனே திரும்பி விடலாம்' என சொன்னதற்கெல்லாம் ஒத்து கொள்ளாமல் 'உடல் நிலை சரியில்லை, அவசரம்' என சொல்லி, எதற்கும் எங்கும் நிற்காமல் திரும்பியிருக்கிறார்கள். அதற்குள் இன்னோரு ponywala அந்த பெண்மணியிடம் ' yahan rahna teen nahi mam. Sheegra vapaz chale jaayiye ' (இங்கிருப்பது பாதுகாப்பு அல்ல, சீக்கிரம் இங்கிருந்து சென்று விடுங்கள்' என்றிருக்கிறான். அவர்களோடு இரண்டு மணி நேரத்தில் ஜம்மு காஷ்மீரிலிருந்து வெளியேறி, போலீஸூக்கு அழைத்து தகவல் சொல்லியிருக்கின்றனர்.

 இதேபோன்று பல சுற்றுலாப் பயணிகள் சம்பவத்தன்று போலீஸ் அவசர எண்ணில் அழைத்துள்ளனர் ஆனால் எதிர்ப்பக்கம் "அப்படியா ஓகே" என்று சாதாரண பதில் மட்டுமே வந்ததுள்ளது. ஆனால், அந்த புள்ளிகளை இணைக்க போலீஸார் தவறியது ஏன்.!!?

 

 பிகு: ஏக்தா திவாரி என்றொரு உ.பி யைச் சேர்ந்த தொலைக்காட்சி விளம்பர மாடல் சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக பஹல்காம் போனதாகவும்  அந்த தீவிரவாதிகளை பார்த்ததாகவும் சொல்லியுள்ளார். அவரது அறிக்கையே பல முரண்பாடுகளும்  சந்தேகங்களும் நிறைந்துள்ளதாக தெரிகிறது. அதை பட்டி டிங்கரிங் பார்த்து மாநிலம், பெயர் எல்லாம் மாற்றி கதை சொல்லி விட்டார் மத்யமர் சங்கி.