Showing posts with label விடுதலை. Show all posts
Showing posts with label விடுதலை. Show all posts

Wednesday, April 9, 2025

மொழி புரியாவிட்டாலும் உணர்வூட்டும் . . .

 


முகநூலில் பார்த்த காணொளி கீழே உள்ளது.

அரசியல் சாசனத்தின் முகப்பு பின்புலத்தில் உள்ளது. இது பாடலா, முழக்கமா அல்லது சேர்ந்திசையா?

மொழி புரியவில்லை.

ஆனால் உணர்வூட்டுகிறது.

ஆசாதி என்று மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது. அது விடுதலைக்கான தேடல் என்பது புரிகிறது. 

அரசியல் சாசனத்தை முடக்க நினைக்கும் அராஜக சக்திகளிடமிருந்து மக்களுக்கான விடுதலையை வலியுறுத்தும் பாடலாக நான் கருதுகிறேன். மொழி தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். 

பிகு: நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. மொழித் திணிப்புக்கு மட்டுமே எதிரானவர்கள்.

இப்போது காணொலிக்கு செல்லுங்கள்



Friday, November 11, 2022

அறுவர் விடுதலை - வரவேற்பும் எதிர்பார்ப்பும்

 

தோழர் சம்சுதீன் ஹீரா அவர்களின் பதிவை பகிர்ந்து கொள்கிறேன். அறுவர் விடுதலை போல நீண்ட காலமாக சிறையில் வாடும் இஸ்லாமியர்களின் விடுதலையும் மிக முக்கியமானது. அது மட்டுமல்ல, மோடியை கொலை செய்ய திட்டமிட்டார்கள் என்று அபாண்டமாக குற்றம் சுமத்தப்பட்டு UAPA சட்டத்தின் கீழ் பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு இன்னும் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படாமல் மூன்றாண்டுகளாக சிறையில் வாடும் அண்ணல் அம்பேத்கரின் உறவினர் தோழர் ஆனந்த் டெல்டும்ப்டே உள்ளிட்ட தலித், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் விடுதலையும் கூட அவசியமானது. 



மாநில அரசின் முயற்சியில் பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து இந்த அறுவர் விடுதலையும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

இதன் நீட்சியாக, அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்ட நிலையில் வாடுகிற இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்டுள்ள ஆணையம், அரசுக்கு சரியான அறிக்கை வழங்குமென்றும், இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை என்கிற 'சட்டப்படியான' நோக்கம் நிறைவேறும் என்றும் நம்புகிறேன்.

இஸ்லாமிய சிறைவாசிகள் குறித்துப் பேசினாலே 'தீவிரவாதிகளுக்கு?' ஆதரவாகப் பேசுவதைப்போன்றும், ஏதோ இஸ்லாமிய சிறைவாசிகளுக்குச் சிறப்புச் சலுகைகளைக் கேட்பது போன்றும் ஒரு பொது மனநிலை ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. அந்த மனநிலைக்குப் பயந்தே பேசவேண்டியவர்களும் கூட பேசத்தயங்குகிறார்கள்.

முன்முடிவுகளோடு கட்டுண்டுபோய்க் கிடக்கும் அந்த மனநிலைக்குள் உணமையைக் கொண்டு சேர்ப்பது சவாலானதுதான்.

1. இஸ்லாமியரல்லாத மற்ற சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் அதே உரிமையை ( கவனிக்கவும், சலுகையல்ல) இஸ்லாமிய சிறைவாசிகளுக்கும் வழங்கு என்பதுதான் கோரிக்கை.

2. இந்திய அரசியலமைப்புச் சட்டம் கைதிகளுக்கு வழங்கியுள்ள உரிமையை மத வேறுபாடு பாராமல் எல்லாக் கைதிகளுக்கும் ஒரே தராசில் வழங்கவேண்டும் என்றுதான் கேட்கிறோம்.

3. அரசும், சிறைத்துறையும், நன்னடத்தை போர்டுகளும் நிர்னயித்துள்ள 'முன் விடுதலைக்கான தகுதிக் குறியீட்டின்' அடிப்படையில் மற்ற சிறைவாசிகளை விடுதலை செய்வதுபோல இஸ்லாமிய சிறைவாசிகளையும் விடுதலை செய். பாகுபாடு காட்டாதே என்பதுதான் கோரிக்கை.

4. மற்ற கைதிகளுக்கெல்லாம் எஸ்கார்ட் இல்லாத பரோல் வழங்கப்படும்போது இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மட்டும் எஸ்கார்டுகளோடு பெயில் வழங்கி பதட்டப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்பதுதான் கேள்வி?

இதுபோல சொல்லிக்கொண்டே போகலாம்.

என் கேள்வியெல்லாம் இந்திய அரசியலைப்புச்சட்டம் சிறைவாசிகளுக்கென உறுதிப்படுத்தியுள்ள உரிமைகளை வழங்காமல், அவர்கள் சார்ந்துள்ள மதத்தின் அடிப்படையில் பாராபட்சம் காட்டப்படுவதைச் சகித்துக்கொண்டு கடக்கும் நாம் நம்மை நாகரீகச் சமூகம் என்று சொல்லிக்கொள்ள எதாவது முகாந்திரம் இருக்கிறதா..? என்பது மட்டும்தான்.

Wednesday, May 18, 2022

பேரறிவாளன் - பெரும் நிறைவு

 



பேரறிவாளன் விடுதலையானது உண்மையிலேயே மகிர்ச்சியளிக்கிறது.


அற்புதம் அம்மையாரின் நீண்ட கால சட்டப் போராட்டம் நிறைவுக்கு வந்தது முதல் மகிழ்ச்சி.


மாநிலங்களின் உரிமையை மதிக்காத ஆட்டுத்தாடிக்கு கிடைத்த அடி என்பது இரண்டாவது காரணம்.


பேரறிவாளன் வாக்குமூலத்தில் இல்லாததை நான்தான் இணைத்தேன் என்று எப்போது புலனாய்வு அதிகாரி தியாகராஜன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாரோ, அப்போதே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். காலம் கடந்தாவது நடந்ததே என்பது மகிழ்ச்சிக்கான மூன்றாவது காரணம்.


விசாரணையே இல்லாமல் பல இஸ்லாமியர்கள் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் நியாயம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.


பிகு: அற்புதமான ஓவியத்தை தீட்டிய ஓவியர் தோழர் ரவி பாலேட் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Monday, January 22, 2018

கலவரம் செய் . . . கேஸை ஊத்தி மூடலாம்.



முஸாபர்நகர் கலவரத்தை மறந்து விட முடியுமா? போலீஸ் ஸ்டேஷன் அளவில் முடிக்க வேண்டிய ஒரு சாதாரண அடிதடி பிரச்சினையை மாவட்ட அளவிலான கலவரமாக மாற்றிய பெருமை பாஜகவிற்கு உண்டு. அகில இந்திய தலைவராக அமித் ஷா பொறுப்பேற்ற பின்பு உத்தரபிரதேச மாநிலத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதே அவருக்கு கொடுக்கப்பட்ட  முதல் அஸைண்மெண்ட். 

அதற்காக நடத்தப்பட்டதே முஸாபர்நகர் கலவரங்கள். இதிலே பாதிக்கப் பட்டவர்கள் இஸ்லாமியர்கள் மட்டுமே என்பது நினைவுக்கு வருகிறதா?

மஹா பஞ்சாயத்,
போலி வீடியோ வினியோகம், 
அறுபது பேர் மரணம்,
பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் நாசம்,
ஆயிரக்கணக்கானவர்கள்  அகதிகள் முகாமில் குடியேற்றம்,
கலவரத்தை தூண்டியவர்களுக்கு மலர் கிரீடம் அணிவித்து மோடி மரியாதை

போன்றவையெல்லாம் நினைவுக்கு வருகிறதா?

இவை நினைவுக்கு வராவிட்டாலும்

கலவரங்கள் நிகழ்ந்தால் எங்கள் வெற்றிகள் தொடரும் என்று அமித் ஷா ஆணவத்தோடு சொன்னதாவது நினைவிற்கு வரும் என்று நம்புகிறேன்.

வன்முறைக்கலவரத்தை தூண்டியதாக பாஜக எம்.பி, எம்.எல்.ஏ, வட்ட, சதுர, செவ்வக பொறுப்பாளர்கள் மீதெல்லாம் அப்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை எல்லாம் திரும்பப் பெற வேண்டும் என்று மாநில உள்துறை செயலாளர் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆமாம், நியாயம்தானே?

மோடி பிரதமராவது அதிக எம்.பிக்களை கொடுத்த மாநிலம் உத்தரப் பிரதேசம். அதற்கு உதவியது முஸாபர்நகர் கலவரம்.

மோடியை பிரதமராக்கிய கலவரத் தளகர்த்தர்களுக்கு பதவியும் பொன்னும் மணியும் அள்ளி அள்ளி கொடுத்து அழகு பார்ப்பதுதானே முறை? அதுவும் கலவர மன்னன் யோகிசீசீ முதல்வராக இருக்கையில் ????

பேயரசு ஆட்சி செய்கையில் பிணம் தின்னுபவர்களுக்குத்தானே முதல் மரியாதை!

அவர்கள் மீது வழக்கு இருப்பதா?

ப்ளடி ஃபூல்ஸ், முதலில் அதை திரும்பப் பெறு.

அப்போதுதானே அவர்கள் தொடர்ந்து கலவரம் செய்ய முடியும் . . .