Thursday, May 31, 2018

ரஜனிகாந்திற்கான இடம் எது?


நேற்று பண்ருட்டியில் எங்கள் சங்க மாநாட்டை நடத்துவதற்கான வரவேற்புக்குழு அமைப்பதற்கான கூட்டம்.  இரவு வீடு திரும்ப தாமதம் ஆனதால் காலையிலும் அவகாசம் இல்லாமல் ரஜனிகாந்த்திற்கு தூத்துக்குடியில் கிடைத்த வரவேற்பையும் அதற்கு அவர் விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் காண்பித்த எதிர்வினை ஆகியவற்றின் காணொளியை இப்போதுதான் பார்க்க முடிந்தது.

எழுதிக் கொடுத்த கதை, திரைக்கதை, வசன ஸ்கிரிப்டில் மாணவன் சந்தோஷ் கேட்ட கேள்வி இல்லாததால் அவரால் அங்கே எதுவும் பேச முடியவில்லை.

ஆனால் அந்த சம்பவம் உருவாக்கிய மன அழுத்தம் அந்த முதியவரை மிகவும் பாதித்து விட்டது.  அதன் விளைவாகத்தான் பத்திரிக்கையாளர்களிடம் அவ்வளவு ஆணவமாக நடந்து கொண்டிருக்கிறார். 

சமூக விரோதிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் காவல்துறையை தாக்கியதால்தான் பிரச்சினை

என்றும்

யூனிபார்ம் போட்டவர்கள் யாரை தாக்கினாலும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்

என்றும்

போராட்டங்களால்தான் தமிழ்நாடு சுடுகாடாகிறது

என்றும் 

காவிக்கூட்ட டயலாக்கை அப்படியே வாந்தியெடுத்துள்ளார். 

கல்லூரி படித்த காலத்தில் மதுரையில் ரஜனி ரசிகர்களைத் தவிர மற்றவர்கள் அவரை "மெண்டல்" என்றுதான் அழைப்பார்கள். அது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். அப்படி சொல்பவர்களோடு கடுமையான விவாதம் எல்லாம் செய்துள்ளேன்.

ஆனால் நேற்றைய பேச்சைக் கேட்கையில் அது உண்மைதான் என்றும் வயதாலும் அவருக்கு ஏற்கனவே உள்ள கடன் பிரச்சினை, வாடகை பாக்கி பிரச்சினை இவற்றோடு நேற்றைய "அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்" மொமெண்டும் சேர்ந்து கொள்ள  மனதின் குறைபாடு வெளியே வந்து விட்டது.

"ஏய், வேற கேள்வி இருக்கா ?" என்பதுதான் அதிலே உச்சகட்டம். 

அந்த பேட்டியில் சொல்லப்பட்ட ஒவ்வொரு கருத்தும் அபத்தம். ஒவ்வொன்றுக்கும் அவரை கேள்வி கேட்க முடியும் என்றாலும் அனுதாபத்தின் காரணமாக எதுவும் கேட்கப் போவதில்லை.

யூனிபார்மில் உள்ள போலீஸின் கைகளை ரஜனி வெட்டுவது போல காட்சியமைத்த மணிரத்னத்தின் இன்னொரு படமான அஞ்சலியில் இதே போன்ற பிரச்சினை உள்ள ஜனகராஜை எங்கே அனுப்புவார்கள் என்று நினைவு படுத்திக் கொள்ளுங்கள். 



மேலே உள்ள படம் உங்கள் நினைவுகளைத் தூண்டுவதற்காக


அதுதான் ரஜனிகாந்திற்கான இடம்.

நிச்சயமாக சட்டசபை இல்லை. 


மாறாத நேர்மையாளர் ரஜனி . . .

கடந்த வருடம் எழுதிய இரண்டு பதிவுகளை மீண்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 

நேற்றைய சம்பவம் குறித்து மாலையில் விரிவாக எழுத வேண்டும். 

போராட்டங்களுக்கு எதிரான ஆளும் வர்க்க சிந்தனையில் இருந்து மாறாத நேர்மையாளராக ரஜனிகாந்த் தன்னை நிரூபித்துக் கொண்டுள்ளார்.

இப்போது சகவாச தோஷமும் முதலமைச்சராகி விட்ட நினைப்பும் சேர்ந்து கொண்டு அந்த வயோதிகரின் நோயை முற்ற வைத்திருக்கிறது. 


உங்களுக்கு பிடிக்கிறதா என்பது முக்கியமே இல்லை ரஜனி . . .


உங்கள் நிறம் என்ன என்பதை இத்தனை நாள் புரியாமல் இருந்தவர்களுக்கும்  நீங்கள் யார் என்பதை காண்பித்துக் கொண்டதற்கு மிகவும் நன்றி மிஸ்டர் ரஜனிகாந்த்.

தமிழில் உங்களுக்கு பிடிக்காத வார்த்தைகளில் ஒன்றாக "வேலை நிறுத்தம்" என்பதை சொல்லியுள்ளீர்கள். உங்கள் படத்தைப் பார்த்து உங்களை உழைப்பாளியாக, ஆட்டோ தொழிலாளியாக நினைத்துக் கொண்டு இருக்கும் அப்பாவி ரசிகர்களுக்கு நீங்கள் ஒரு முதலாளி, முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதி என்பதை  அம்பலப்படுத்திக் கொண்டதற்கு நன்றி.  

வேலை நிறுத்தம் என்பது எங்களுக்கும் அவ்வளவு பிடித்தமானது அல்ல. ஒரு வேலை நிறுத்தம் நடத்துவது எவ்வளவு சிரமம் என்பது எங்களுக்கே நன்றாகத் தெரியும். உங்கள் படங்களில் காண்பிப்பது போல நொடிப் பொழுதில் துவக்கப்படுவதல்ல வேலை நிறுத்தம். எவ்வளவு தயாரிப்பு தேவைப்படும் தெரியுமா? ஒரு தொழிலாளியை மனரீதியாக தயார் செய்யாமல் வேலை நிறுத்தம் செய்திட முடியாது.

வேலை நிறுத்தம் என்பது தொழிலாளிகளின் கடைசி ஆயுதம். அவனது நியாயம் தொடர்ந்து மறுக்கப்படும் போது, பேச்சுவார்த்தை உள்ளிட்ட அனைத்து வாய்ப்புக்களும் மறுக்கப்படும் போதுதான் அந்த இறுதி ஆயுதத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது. 

துரோகிகள், கருங்காலிகள், உடனிருந்து குழி பறிக்கும் நயவஞ்சகர்கள் என பல சவால்களை எதிர் நோக்க வேண்டியிருக்கும் என்பது தெரியுமா உங்களுக்கு? ஊதிய வெட்டு தொடங்கி பணி இழப்பு வரை அனைத்து அபாயங்களுக்கும் தயாராகித்தான் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. 

ஒரு வேலை நிறுத்தம் தோற்றுப்போனால் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு தொழிலாளர்களை அணி சேர்ப்பதன் சிரமம் புரியுமா உங்களுக்கு?

யாருக்கும் யாருக்கும் என்றோ, எதற்காக என்றோ சொல்லாமல் உங்கள் ரசிகர்களை ஏமாற்ற  போர், போர் என்று சில நாட்கள் முன்பாக முழங்கினீர்கள் அல்லவா?  

தொழிலாளி நடத்தும்  வர்க்கப் போர்தான் வேலை நிறுத்தம். 

அந்த போரிலே நீங்கள் யார் பக்கம் இருப்பீர்கள் என்பது நன்றாக தெரிந்து விட்டது. உங்கள் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்த தமிழர்களில் 90 % க்கும் மேற்பட்டவர்கள் உழைப்பாளி மக்கள்தான். நீங்கள் அவர்கள் பக்கம் நிற்க மாட்டீர்கள் என்று எங்களுக்கு முன்பே தெரிந்த உண்மையை இப்போது நீங்களே சொல்லி விட்டீர்கள்.

உங்களுக்கு பிடிக்கிறதா, பிடிக்கவில்லையா என்பது எங்களுக்கு முக்கியமுமில்லை, அவசியமில்லை.

எங்களுக்கு அவசியம் என்றால் நிச்சயம் நாங்கள் நடத்துவோம் "வேலை நிறுத்தம்" 

ஏனென்றால் அதுதான் எங்கள் வாழ்க்கையை பாதுகாக்கும். சோறு போடும். மனிதனாய் கௌரவமாய் நடைபோட வைக்கும்.

உங்கள் திரைப்படங்கள் அல்ல. 


இது கூட ஸ்ட்ரைக் போலத்தான் ரஜனி




ஆஸ்ரம் பள்ளி கட்டிடத்திற்கு வாடகை கொடுக்காத பிரச்சினை தொடர்பாக அப்பள்ளியின் சார்பாக அளிக்கப்பட்டுள்ள அறிக்கை.

தங்கள் பிரச்சினைகளுக்காக, தாங்கள் சுரண்டப்படுகையில் தொழிலாளர்கள் "வேலை நிறுத்தம்" செய்வதை தமிழில் பிடிக்காத வார்த்தை என்று சொன்னது நினைவில் உள்ளதல்லவா? 

இதோ, அதே சுரண்டல் என்ற வார்த்தையைப் போட்டு வாடகை கொடுக்காத போராட்டத்தை ரஜனியின் குடும்பத்தினரே நடத்தியுள்ளார்கள்.

இடத்தின் உரிமையாளருக்கு எதிராக அவர்கள் நடத்தியுள்ள இந்த வேலை நிறுத்தம் இப்போது உங்களுக்கு பிடித்தமான வார்த்தையா திரு ரஜனிகாந்த் அவர்களே!

Wednesday, May 30, 2018

என்ன தைரியம் இருந்தா அந்த கொடியை?



ஸ்டெரிலைட் துப்பாக்கிச் சூட்டின் காரணமாக கொல்கத்தா பயண அனுபவங்களை பகிர்ந்து கொள்வதை நிறுத்தி வைத்திருந்தேன். இப்போது அதனை தொடரலாம் என்று உள்ளேன்.

எங்கள் விருந்தினர் இல்லத்துக்கு அருகில்தான் ஈடன் கார்டன் மைதானம் உள்ளது.  நான் அங்கே இருந்த நாள் ஒன்றில்தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே  ஒரு போட்டி இருந்தது.

அன்று மாலை ஏழு மணி அளவில் ஈடன் கார்டன் மைதானத்துக்குச் செல்லும் சாலை வழியாக நான் எங்கள் விருந்தினர் இல்லத்திற்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தேன். கூட்டம் கூட்டமாக மைதானத்தை நோக்கி ரசிகர்கள் சென்று கொண்டிருக்க எதிர் திசையில் நடந்து செல்வதே சிரமமாக இருந்தது.

பல சாலையோர வியாபாரிகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கொடியையும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கொடியையும் விற்றுக் கொண்டிருந்தார்கள். விறுவிறுப்பாகவே வணிகம் நடந்து கொண்டிருந்தது. ஒரு இளைஞர் கூட்டத்திடம் ஒரு வியாபாரி, மும்பை இந்தியன்ஸ் அணி கொடியை  வேண்டுமா என்று கேட்க அவர்களுக்கு கோபம் வந்து விட்டது.

அந்த வியாபாரியிடம் சத்தம் போட ஆரம்பித்து விட்டார்கள். நான் புரிந்து கொண்ட வரை அவர்கள் கேட்டது

“எங்கே வந்து எந்த கொடியை விற்கிறாய்?  கொல்கத்தாகாரனிடம் மும்பை கொடியை வாங்கச் சொல்வதற்கு உனக்கு எவ்வளவு தைரியம்?”

அடிதடி என்று முற்றுவதற்கு முன்பாக மற்ற வியாபாரிகள் வந்து விலக்கி விட்டார்கள்.

அந்த இளைஞர்களை நினைத்தால் பாவமாக இருந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என்ற அணி

கொல்கத்தா நகரத்தின் அணியும் கிடையாது,
மேற்கு வங்க மாநிலத்தின் அணியும் கிடையாது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வீரர்கள் அந்த அணியில் இருந்தார்களா என்ற விபரம் எனக்கு தெரியாது.

அது ஷாருக்கானின் அணி.

அது போல மும்பை இந்தியன்ஸ் அணி முகேஷ்  அம்பானியின் அணி.

முதலாளிகளின் அணிக்காக நீங்கள் ஏனப்பா தேவையே இல்லாமல் உணர்ச்சி வசப்படுகிறீர்கள் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

பின் குறிப்பு

மேலே உள்ள படம், எங்கள் விருந்தினர் இல்லத்திலிருந்து ஈடன் கார்டன் மைதானத்தை எடுத்த படம். ஒளி விளக்குகள் மட்டும்தான் தெரிகிறது.


யதார்த்தம் புரிகிறதா டாக்டர் கி.சாமி ?


தீக்கதிர் நாளிதழில் இன்று வந்த செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளேன். மருத்துவர் கிருஷ்ணசாமி இச்செய்தியை அறிந்திருப்பார் என்று நம்புகிறேன்.

பாஜகவின் சதிக்கு இரையாகி நாங்கள் பட்டியலினத்தவர் இல்லை என்று நீங்கள் சொல்லிக் கொண்டாலும் தீண்டாமைக் கொடுமை இன்னும் துரத்திக் கொண்டுதான் இருக்கிறது என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள். 

தீண்டாமைக்கொடுமைக்கு எதிரான போராட்ட களத்திலிருந்து விலகி ஓடாதீர்கள்.




பட்டியலினத்தவர் மீது சாதி ஆதிக்கச்சக்தியினர் கொடூரத் தாக்குதல்
சிவகங்கை அருகே 2 பேர் படுகொலை

சென்னை, மே 29-

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் சாதி ஆதிக்கச்சக்தியினரின் சாதி வெறித்தாக்குதலில் பட்டியலினத்தவர் 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர். பி.சம்பத், பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் 50 தேவேந்திரகுல வேளாளர் குடும்பங்களும் சாதிஆதிக்கச் சமூகத்தின் 5 குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இதில் சாதி ஆதிக்கச் சமூகத்தின் சுமன் என்பவரின் குடும்பம் மட்டும் கஞ்சாவியாபாரம் செய்து வருகிறது. இதனை எதிர்த்து அங்கு வாழும் பட்டியலின மக்கள் காவல்துறைக்கு புகார் கொடுப்பதும் , காவல்துறை இதில் உறுதியான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டும் நிலையும் இருந்துள்ளது. 

இதன் காரணமாக கடந்த நான்கு வருடத்துக்கு மேலாக சிறு சிறு பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டுள்ளன.இந்நிலையில் திங்களன்று கச்சநத்தம் கிராமத்தில் திருவிழா முடிந்த நிலையில் சாதி ஆதிக்கச் சக்தியினர் வெளியூரிலிருந்து ஆட்களை அழைத்து வந்து பட்டியலினமக்கள் மீது கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் அறிவழகன் மகன் சண்முகநாதன் (39), கோனான் மகன் ஆறுமுகம் (65) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும் சுகுமாறன், தனசேகர், மலைச்சாமி உள்ளிட்ட ஆறு பேர் படுகாயம்அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். இறந்தவர்களின் உடல்களும் மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இக்கொடூர, கொலைவெறித் தாக்குதலை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் அடுத்தடுத்து சாதிய ரீதியான வன் கொடுமை தாக்குதல்கள் அதிகரித்து வருவதையும், பட்டியலின மக்களை படுகொலை செய்வதையும் தமிழகஅரசு தடுத்து நிறுத்த வேண்டும். கச்சநத்தம் கிராமத்தில் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளுக்கு காரணமானவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலைவழக்கு பதிவு செய்து கைது செய்திட வேண்டும் . பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியும்,நிவாரணமும், அரசு வேலையும் வழங்கிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

படுகொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களை வாங்க மறுத்துஅவர்களது உறவினர்கள் 300-க்கும் மேற்பட்டோர் மதுரை மாவட்டஆட்சியர் அலுவலகம் அருகே அண்ணா பேருந்து நிலைய சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கைமாவட்டச் செயலாளர் மு.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துராமலிங்கபூபதி, வீரையா, வீரபாண்டி,திருப்புவனம் ஒன்றிய செயலாளர் அய்யம் பாண்டி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைச் செயலாளர்செல்லக்கண்ணு, சிவகங்கை மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி, மதுரை மாவட்டத்துணைத் தலைவர் மீனாட்சிசுந்தரம், மாநிலக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

5 பேர் நீதிமன்றத்தில் சரண்


இச்சம்பவத்தில் தொடர்புடைய5 பேர் மதுரை நீதிமன்றத்தில் செவ்வாயன்று சரணடைந்தனர்.இக்கொலை சம்பவத்தில் சுமன், அருண்குமார், ராஜேஷ், அஜய் தேவன், அக்னி ஆகிய 5 பேர் மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர்(ஜேஎம் கோர்ட் 4) கௌதமன் முன்பாக சரணடைந்தனர்.

Tuesday, May 29, 2018

சுடச்சொன்னவர்களைப் பற்றி சுட்டது . . .

சுடச் சொன்னவர்களைப் பற்றி
இல்லையில்லை
சுடச் சொன்னதாக சொல்லப்படுகிற
டெபுடி தாசில்தார்கள் பற்றி

தோழர் ஜெயச்சந்திர ஹாஷ்மி அவர்களின்
முக நூல் பக்கத்திலிருந்து சுட்ட
ஒரு மீமும் ஜோக்கும் இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.



‘எங்கப்பாக்கு கலெக்ட்டர தெரியும்’
‘எங்கப்பாவுக்கு எஸ்.பி ய தெரியும்’
‘எங்கப்பாவுக்கு மினிஸ்டர தெரியும்’
‘எங்கப்பாவுக்கு துணை வட்டாட்சியரயே தெரியும்டா என் சிப்ஸு’

ஆயிரம் முறை பகிர்வோம். என் செய்வாய்?


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த ஆனந்த விகடனின் இந்த கருத்துப்படத்தை உணர்வுள்ள  லட்சக்கணக்கான தமிழர்கள்  பகிர்ந்து கொண்டுள்ளனர்.

நேற்று சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், நடத்திய கண்டன நிகழ்ச்சியின் மேடையில் இந்த படத்தை பின்னணியில் வைத்ததை காவல்துறை வலுக்கட்டாயமாக அகற்றியுள்ளது. இத்தனைக்கும் அந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை  அனுமதி அளித்திருக்கிறது.

தூத்துக்குடியில் நடந்த கொடூரத்தின் உண்மையான பின்புலத்தை, கார்ப்பரேட்டுகளுக்கும் மத்திய, மாநில ஆட்சியாளர்களுக்குமான கூட்டுக் களவாணித்தனத்தை இந்த படம் அம்பலப்படுத்துவதால் அதை அகற்ற முயன்றுள்ளார்கள்.

இந்த படத்தை மீண்டும் மீண்டும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வோம்.

எங்கெங்கு வாய்ப்பு உள்ளதோ அங்கேயெல்லாம் பகிர்வோம்.

என்ன செய்யும் காவல்துறை?
காவல்துறையால் என்னதான் செய்ய முடியும்?


மோடிக்கு இதுவே ஓவர்

மோடி ஒரு வெத்து வேட்டு என்பதை இப்படத்தை விட தெளிவாக யாராலும் சொல்ல முடியாது.

கோப்பையின் அடியில் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருப்பது கூட மோடிக்கு அதிகம் என்றுதான் தோன்றுகிறது.



Monday, May 28, 2018

ரத்தத்தில் தோய்ந்த வெற்றி . . .



ஸ்டெரிலைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர்  அறிவித்து சீல் வைத்து மூடுகிறார்கள்.

தூத்துக்குடி மக்களின் உறுதியான போராட்டம்,

அப்போராட்டத்திற்கு தமிழக மக்களின் ஆதரவு,

முதலாளிகள் வீசிய எலும்புத் துண்டுகளுக்கு விசுவாசமாய் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய எடுபிடி அரசு, பின்னணியில் இருந்த மோடி அரசு ஆகியவற்றின் மீது உலகெங்கும் எழுந்த வலுவான கண்டனங்கள், தமிழகம் முழுதுமான கடுமையான எதிர்வினை.

ஆகியவையே இம்முடிவை நோக்கி ஆட்சியாளர்களைத் தள்ளியுள்ளது.

இது நிரந்தரமா? நீதிமன்றம் முடிவை மாற்றுமா? 

போன்ற கேள்விகள் இருக்கத்தான் செய்கிறது. 

ஆனாலும் இது குறிப்பிடத்தக்க வெற்றி,
நம்பிக்கை அளிக்கும் வெற்றி.
மக்கள் சக்தி மகத்தானது என்பதை நிரூபிக்கும் வெற்றி.
தியாகத்தின் விளைபயன் இந்த வெற்றி
அஞ்சாத வீரத்தின் அடையாளம் இந்த வெற்றி
உயிர் நீத்த தோழர்களின் குருதியில் நனைந்த வெற்றி.
கார்ப்பரேட்டுகளோ, மோடிகளோ முறியடிக்கப்பட
முடியாதவர்கள் கிடையாது  என்று உணர்த்தியுள்ள வெற்றி.

இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு செவ்வணக்கம்.

கிரிக்கெட் வெற்றி தூத்துக்குடி துயரைத் துடைக்காது




ஐ.பி.எல் விளையாட்டுப் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதன் மூலம் தூத்துக்குடி துயரத்திற்கு ஒரு ஆறுதல் கிடைத்துள்ளது என்ற ரீதியில் பல பதிவுகளை பார்க்க முடிந்தது. இந்த ஆறுதல் உரைகளை ஆரம்பித்து வைத்தவர் ஜல்லிக்கட்டு போராளியாக காண்பித்துக் கொண்டு பின்பு ஆட்சியாளர்கள் மீதான விசுவாசத்தை காண்பித்த காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. விளம்பர இடைவேளை போல தூத்துக்குடியை பயன்படுத்திக் கொண்டவரும் இவரே.

தூத்துக்குடி சம்பவத்தினால் உண்மையாகவே மனம் பாதிக்கப்பட்ட சிலர் அவ்வாறு கூறுவதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் தூத்துக்குடி பற்றி கொஞ்சம் கூட கவலை கொள்ளாமல் “அது எங்கேயோ துபாய் பக்கம், அபுதாபி பக்கம் இருக்கு” என்று இருந்தவர்களும் அதையே சொல்வது எரிச்சலூட்டுகிறது.

தூத்துக்குடி பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தை எப்படியாவது திசை திருப்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு வரப்பிரசாதமாக இந்த வெற்றி அமைந்துள்ளது.

தோனிக்கு அடிக்கும் விசிலில் ஸ்டெரிலைட்டை மூடு எனும் முழக்கங்களை  மூழ்கடிக்கப் பார்க்கிறார்கள்.

வாட்ஸனின் சாதனையில் துப்பாக்கிச்சூட்டின் வாதையை மறைக்க முயல்கிறார்கள்.

சி.எஸ்.கே என்பது  தமிழகத்தின் அணி அல்ல. இந்தியா சிமெண்ட்ஸ் முதலாளி சீனிவாசனின் அணி.  அதனை ஆதரிப்பதாக இருந்தால் ஆதரித்துக் கொள்ளுங்கள். ஆனால் அதோடு தேசப்பற்று, மாநிலப் பற்று, மாநகரப் பற்று ஆகியவற்றை இணைக்காதீர்கள்.

அந்த அணி வெற்றி பெற்றதன் மகிழ்ச்சியை கொண்டாட வேண்டும் என்று நினைப்பவர்கள், கொண்டாடுங்கள், பட்டாசு வெடியுங்கள், விசில் அடியுங்கள். அது முழுக்க முழுக்க உங்கள் விருப்பம்.

ஆனால் அந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் தூத்துக்குடி துயரத்தை இணைக்காதீர்கள்.  துயரத்தில் தவிப்பவர்களுக்கு கிடைத்த இளைப்பாறுதல் என்றெல்லாம் வர்ணிக்காதீர்கள்.

தூத்துக்குடி கொடுமை என்பது  அரசு பயங்கரவாதம். கார்ப்பரேட் நிறுவனத்தின் அடிமையாகிப் போன ஆட்சியாளர்கள், தன் மக்கள் மீது தொடுத்த பெரும் தாக்குதல்.

அந்த துயரத்தை, வலியை ஒரு கிரிக்கெட் வெற்றியால் ஆயிரத்தில் ஒரு பங்கு அளவு கூட குறைத்து விட முடியாது.

தூத்துக்குடியில் நடந்தது  வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக எளிய மக்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டம். அதனுடன் முதலாளிகளின் சூதாட்ட விளையாட்டை ஒப்பிடுவது துப்பாக்கிச் சூடு ஏற்படுத்திய வலியை விட இன்னும் கடுமையாக உள்ளது...

பாவம் மோடி பக்தாள்ஸ்

மோடியை கலாய்த்து எழுதப்பட்ட   சில முகநூல் பதிவுகளை உண்மையெனக் கருதி  

அவையெல்லாம் நிஜமாகவே மோடி செய்த சாதனை என்று மகிழ்ந்து பகிர்ந்து கொண்டுள்ள மோடி பக்தாள்ஸைப் பார்த்தால் மிகவும் பரிதாபமாக  உள்ளது.

அது சரி,

மூளையை கழட்டி வைத்து விட்டுத்தானே அவர்கள் மோடியை ஆதரிக்கிறார்கள் !!!!!!!




Sunday, May 27, 2018

வேலையைப் பாருங்க மந்திரிங்களே!!!!

விளையாட்டுத்துறை மந்திரி ஆரம்பித்து வைத்தது வினையாகிக் கொண்டிருக்கிறது.

தாங்கள் எப்படி உடற்பயிற்சி செய்கிறோம் என்று ஒவ்வொரு மத்திய மந்திரியும்  வீடியோ போட ஆரம்பித்து விட்டார்கள். சவால் வளையத்தை விரிவு படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

கீழே உள்ளது உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு வின் சாதனை. இதை அவர் செய்வது அவர் அலுவலகத்தில். பின்னணியில் வேறு மோடியின் படம்.




ஐய்யா, மத்திய மந்திரிகளே,  நீங்கள் அமைச்சராக இருப்பது உங்கள் உடற்பயிற்சி சாதனைகளை உலகத்துக்கு சொல்வதற்காக அல்ல. அமைச்சராக அதைத் தாண்டி பல கடமைகள், வேலைகள் இருக்கிறது.

அதைச் செய்யுங்கள்.

ஆனால் நீங்கள் எல்லாம் மோடியின் மந்திரிகள் அல்லவா? தலை எப்படி இருக்கிறதோ, அதைப் போலத்தானே வால்களும் இருக்கும்? 

உங்கள் பிரதமர் பார்ப்பதே வெட்டி வேலைகள் எனும் போது நீங்கள் மட்டும் என்ன உருப்படியான வேலைகளை செய்யப் போகிறீர்கள்?

மரணத்திலும் பாமக வன்முறை முத்திரையோடு . . .

எந்த ஒரு மரணமும் துயரமானதுதான். இறந்து போனவர்களை சார்ந்தவர்களுக்கு பெரும் துயரம்.

அந்த துயரத்தை எப்படி வெளிப்படுத்துவது?

இப்படியா?




பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணி தலைவரான காடுவெட்டி குரு நோய்வாய்ப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இறந்து போக அவரது கட்சித் தொண்டர்கள் எழுபத்தி ஐந்து பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அவர் ஒன்றும் காவல்துறை துப்பாக்கிச் சூட்டிலோ அல்லது எதிரிகளின் வன்முறைத் தாக்குதலிலோ இறந்து போகவில்லை. அப்படி ஏதாவது நிகழ்ந்திருந்தால் கூட தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு விட்டனர் என்று சொல்லலாம். 

ஆனால் நடந்ததோ இயற்கை மரணம். அதற்குக் கூட இப்படி தாக்குகிறார்கள் என்றால்  அந்த அளவிற்கு அக்கட்சித் தொண்டர்கள் வன்முறையால் வார்க்கப்பட்டுள்ளனர் என்பது தெரிகிறது.

வாழ்நாள் முழுதும் வன்முறையோடு பிணைக்கப்பட்டிருந்த ஒரு மனிதன் இறந்த பிறகாவது அக்கட்சியினர் கொஞ்சம் அமைதியைக் கடைபிடித்திருக்கலாம்.  இறந்த பிறகும் அவருக்கு வன்முறை முத்திரை பதித்தே அனுப்பியுள்ளனர்.


Saturday, May 26, 2018

மோடியின் "மகா பலி"


எங்கள் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன்  எழுதி இன்றைய தீக்கதிர் நாளிதழில் பிரசுரமான முக்கியமான கட்டுரை. 

அவசியம் முழுமையாக படியுங்கள்


நாலு வருசமா நல்ல காலம் பொறக்கலே!






நான்கு ஆண்டு நரேந்திர மோடி ஆட்சிபற்றிய வித்தியாசமான பரிசீலனையை இந்து பிசினஸ் லைன் (மே 28,2018) இதழில் “மார்க்கெட் வாட்ச்” பகுதியில் பிரியா கன்காரா என்ற செய்தியாளர் செய்துள்ளார். நரேந்திர மோடியின் புகழ்பெற்ற ‘நல்ல காலம் பிறக்கும்” (அச்சே தின்) என்கிற வாக்குறுதி எப்படி தில்லி பங்குச் சந்தையில் பிரதிபலித்துள்ளது என்பதை புள்ளி விவரங்களோடு தந்துள்ளார்.

கொடி பறக்குமா? இறங்குமா?

தில்லி பங்குச் சந்தையின் மூன்று குறியீடுகள் - அதாவது டாப் - 50 நிறுவனங்கள், நடுத்தர நிறுவனங்கள், சிறு முதலீட்டு நிறுவனங்களில் எவ்வாறுபங்கு விலைகள், ஏற்றம் இருந்துள்ளது என்பதைக்காட்டுகிறது.

குறியீடுகள்                  26.5.2014     24.5.2018     வருவாய் (சதம்)
நிப்டி 50                                7359              10514                 42.87
நிப்டி மிட் கேப்                3207              18428               474.61
நிப்டி ஸ்மால் கேப்      2403                7698                220.34


தில்லி பங்குச் சந்தையின் இக்குறியீடுகளே, மும்பை சென்செக்ஸ் உள்ளிட்ட குறியீடுகளே நிறுவனங்களின் உண்மையான இலாபகரமான செயல்பாட்டை உணர்த்துவதில்லை என்பது தனிக்கதை. பங்குச் சந்தையின் கொடிகட்டி பறந்த நிறுவனங்கள் பின்னர் குறுகிய காலத்திற்குள்ளாக அரைக் கம்பத்திற்கு கொடியை இறக்கிய அனுபவங்களும் உண்டு. மேற்கூறிய புள்ளி விபரங்கள் நான்காண்டு பங்குச் சந்தையின் வணிக செயல்பாட்டைக் காண்பிக்கின்றன. ஆனால் துறை வாரியாக இச் செயல்பாட்டைப் பரிசீலித்தால்தான் யாருக்கு பறக்கிற கொடி? யாருக்கு இறங்குகிற கொடி என்பது தெளிவாகும்.யாருக்கு நல்ல காலம்?பங்குச் சந்தை ஏற்ற, இறக்கங்களை செய்தியாளர் பிரியா கன்சாரா தனியார் வங்கிகள், பன்னாட்டு நிறுவனங்கள், நிதிச் சேவைகள், பொதுத்துறைகள், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள் என அக்குவேறாக ஆணி வேறாகப் பிரித்து அலசியுள்ளார். இதில் தனியார் வங்கிகள், பன்னாட்டு நிறுவனங்கள், நிதிச்சேவைகளின் குறியீடுகள் ஏறுமுகமாகவும், பொதுத்துறைகளின் குறியீடுகள் இறங்குமுகமாகவும் இருந்துள்ளதை எடுத்துக்காட்டியுள்ளார் இதோ அப்பட்டியல்:

துறைவாரியாக மே 26,2014       மே24,2018  ஏற்ற இறக்கம் (சதவீதம்)
தனியார் வங்கி           7487              14792                        97.56
பன்னாட்டு
நிறுவனங்கள்              7113               14024                       97.16
நிதிச் சேவைகள்        6137               10782                       75.68
பொதுத்துறை
நிறுவனங்கள்              3670               3661                       (-)0.24
மத்திய பொதுத்துறை
நிறுவனங்கள்              2573               2273                      (-)11.69
பொதுத்துறை
வங்கிகள்                       38.69             29.46                         (-)23.85
மத்திய பொதுத்துறை நிறுவனங்கள்
                                              2573              2273                         (-)11.69
பொதுத்துறை வங்கிகள் 
                                              38.69             29.46                         (-)23.85

யாருக்கு பிளஸ், யாருக்கு மைனஸ் என்பதை இப்பட்டியல் விளக்குகிறது.

இவற்றில் பொதுத்துறை வங்கி பங்கு விலைகளின் பெரும்சரிவுக்கு வராக்கடன்களே காரணம், நான்கு ஆண்டுகளில் 24 சதவீதம் வீழ்ச்சி. திவால்சட்டங்கள், மறுமுதலீடுகள் ஆகியவற்றையெல்லாம் கடந்தும் வராக்கடன் பிரச்சனை தீர்க்கப்படாமல் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. மொத்தக்கடன்களில் செயல்படா சொத்துக்கள் எனப்படும் வராக்கடன் விகிதம் 2010-2017 க்கு இடைப் பட்ட காலத்தில் 2.96 சதவீதமாக இருந்தது. 

ஆனால்‘நல்ல கால’ நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில்- அதாவது 2015 - 2018க்கு இடைப்பட்ட காலத்தில் இவ்விகிதம் 7.95 சதவீதமாக உயர்ந்துள்ளது. வாமன அவதாரத்தில் மூன்றடி கேட்டது போல் வராக்கடனும் மும்மடங்கு உயர்ந்து “மகா பலி” கேட்கிறது.

இன்னொரு “ஷாக்”

பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலைகளும் பெருமளவு சரிந்துள்ளன. இந்த அதிர்ச்சிக்குகாரணம் மின்சாரத் துறையேயாகும். அரசு மின்சாரநிறுவனங்களின் பங்கு விலைகள் 30 சதவீதத்திலிருந்து 60 சதவீதம் வரை கூட வீழ்ச்சியடைந்துள்ளன. 

இப்பட்டியலில் கிராமிய மின்மயக்கழகம் (RURAL ELECTRIFICATION CORPORATION),, மின்சக்தி நிதிக்கழகம் (POWER FINANCE CORPORATION), இந்திய நிலக்கரி கழகம் (COAL INDIA) பாரத் மிகுமின் கழகம் (BHARAT HEAVY ELECTRICALS) ஆகியன அடங்கும்.அது மட்டுமின்றி எண்ணெய் ஆராய்ச்சி நிறுவனங்களும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இதில் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கழகம் (ONGC), , இந்திய எண்ணெய் கழகம் (OIL INDIA)   ஆகியன உண்டு. இவ்வளவுக்கும் “க்ரிசில்” மதிப்பீட்டு நிறுவனத்தின் கருத்துப்படி “மோடி அரசாங்கத்தின் அதிர்ஷ்டமே கச்சா எண்ணெய் விலைகள் உலகச் சந்தையில் சரிந்ததே. இதன்மூலம் சில்லரை விலை பணவீக்கம் கட்டுக்குள் இருந்தது” என்பது ஆகும். ஆனால் இந்த “நல்ல காலமும்” மக்களுக்கு முழுமையாக அனுபவிக்க கிடைக்கவில்லை. 

ஒரு பக்கம் எண்ணெய் மானியம் மிச்சம் இன்னொரு புறம் குறைந்த விலையை எக்சைஸ் வரிகள் மூலம் குறையாமல் பார்த்துக் கொண்ட வஞ்சம். இது தவிர ஆதாரத் தொழில் வளர்ச்சி அடி வாங்கியுள்ளது. உலோகங்கள் 11 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ரியல் எஸ்டேட் வளர்ச்சியை பண மதிப்பு நீக்க நடவடிக்கை காவு வாங்கிவிட்டது.இப்படிச் சரிவுக் கதைகள் வெளிப்படுத்துகிற சோகம் என்னவெனில், மக்களின் வாழ்வோடு நேரடித் தொடர்புடைய அல்லது வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் வழிவகுக்கிற துறைகளெல்லாம் காயப்பட்டுள்ளன. எப்படி நல்ல காலம் பொறக்கும்?

கிடைத்ததைச் சுருட்டியவர்கள்

எப்படி தனியார் வங்கிகள், நிதிச் சேவைகளின் பங்கு விலைகள் மட்டும் ஏறுமுகமாய் இருந்துள்ளன? இதுவே உலகமயத்தின் பாரபட்சமான வளர்ச்சி. உள்நாட்டுச் சந்தை வளர்ச்சி நகரங்களை குறிப்பாக மாநகரங்களைச் சார்ந்ததாக இருப்பதுதான். வாகனங்கள், விரைவு வியாபார நுகர்வு பொருட்கள், பெரும் ஊடக நிறுவனங்கள் 60 சதவீதத்திலிருந்து 98 சதவீதம் வரை அமோக லாபம் பார்த்துள்ளன. கார்ப்பரேட் ஊடகங்கள் “நாலு வருசத்தை” கொண்டாடுவது ஏன் என்று தெரிகிறதா? இதன் சமூக விளைவுதான். உயர், நடுத்தர வர்க்கத்தினரிடம் இன்னும் வெளிப்படும் மோடி மோகம். இதன் மறு விளைவுதான் சாமானிய, நடுத்தர, கிராமப்புற மக்களிடம் எழுகிற மோடி கோபம்.நல்ல காலம் பொறந்ததுயாருக்கு என்பதுதான் கேள்வி.


(விவரங்களும், தகவல்களும் பிரியா கன்சாரா செய்தியிலிருந்து.. 

விமர்சனங்கள் கட்டுரையாளருடையது)

Friday, May 25, 2018

மரணத்தின் வலி அந்த அன்னைக்கு புரியும் . . .




ரோஹித் வெமுலாவை யாரால் மறக்க முடியும்?

கார்ல் ஸேகன் போன்றதொரு விண்வெளி நிபுணராக வேண்டும் என்ற அந்த இளைஞனின் கனவையும் தூக்குக் கயிற்றில் தொங்க வைத்த அந்த கொடூரத்தை எப்படி மறக்க முடியும்?

மனித வளத்துறை அமைச்சராக இருந்த ஸ்மிர்தி இராணி அம்மையாருக்கு ஒரு பொய்க்குற்றச்சாட்டை அனுப்பி ரோஹித் வெமுலாவை பல்கலைக்கழகத்திலிருந்து இடை நீக்கம் செய்ய வைத்து அவருக்கான உதவித்தொகையை நிறுத்தி விடுதியிலிருந்து வெளியேற்ற காரணமாக இருந்தது அப்போதைய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா.

ரோஹித் வெமுலாவின் துயர மரணத்திற்குப் பிறகும் அவரது தந்தை தலித்தா இல்லையா என்று ஜாதி ஆராய்ச்சி செய்து தனது தவறை நியாயப்படுத்த முயன்றவரும் அவர்தான்.

அந்த மனிதரின் மகன், மூன்றாம் வருடம் எம்.பி.பி.எஸ் படிப்பவர் மாரடைப்பால் இறந்து விட்டார். ரோஹித் வெமுலாவிற்கு செய்த கொடுமைக்கு  இப்போது பண்டாரு தத்தாத்ரேயா அனுபவிக்கிறார் என்ற ரீதியில் சிலர் பேசத்தொடங்க

ரோஹித் வெமுலாவின் தாய் திருமதி ராதிகா வெமுலா

“திரு தத்தாத்ரேயா எவ்வளவு துயரத்தில் இருப்பார் என்று எனக்கு தெரியும். புத்திர சோகத்தை தாங்குவது எளிதானதல்ல என்பது எனக்குத்தான் தெரியும். மகனை இழந்த அவருக்கு என் ஆழ்ந்த இரங்கல்”

என்று பதிவிட்டுள்ளார். இப்பதிவின் மூலம் உயர்ந்தும் நிற்கிறார்.

ஆம். மரணத்தின் வலியை அனுபவித்தவர் அல்லவோ அந்த அன்னை !!!


யானையின் தாக்குதல் – ஒரு அனுபவம், ஒரு கேள்வி





கிட்டத்தட்ட முப்பத்தி இரண்டு வருடங்களுக்கு முந்தைய ஒரு  திகில் பொழுதை இன்றைய சமயபுர துயரம் கிளறி விட்டது. 

கல்லூரி இறுதி  ஆண்டு முடித்து விட்டு திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக எம்.பி.ஏ  தேர்வை எழுத புதுக்கோட்டையில் உள்ள எனது அக்கா வீட்டிற்கு வந்திருந்தேன்.

ஏதோ ஒரு திருவிழாவிற்காக எந்த ஊரிலிருந்தோ வந்திருந்த ஒரு கோயில் யானை புதுக்கோட்டை வீதிகளில் வலம் வந்து கொண்டிருந்தது.  ஒவ்வொரு வீட்டு முன்பும் நின்று யானைப்பாகன் கல்லா கட்டிக் கொண்டிருந்தார்.  பல வீடுகளில் வெல்லம், வாழைப்பழம் என்று யானைக்கு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

என் அக்கா கணவரின் அக்காவும் பழங்களையும்  வெல்லத்தையும் ஒரு தட்டில் வைத்து வெளியே நின்று கொண்டிருந்தார். என் அக்காவின் பெண் குழந்தை ( இப்போது திருமணமாகி குழந்தையும் உள்ளது)  அவரது இடுப்பில் இருந்தது. குழந்தை யானையைப் பார்த்து அழுததும் அவர் வேறு யாரிடமோ குழந்தையைக் கொடுத்து விட்டார்.

நான் அப்போது வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டு புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். திடீரென பயங்கரக் கூச்சல். வீதிக்கு சென்று பார்த்தால் யானை அந்த பெண்மணியை தன் துதிக்கையில் தூக்கி இருந்தது. சில நிமிடங்கள் வரை ஏதோ பந்து விளையாடுவது போல துதிக்கைக்கும் கால்களுக்கும் மாற்றிக் கொண்டே இருந்தது.

யாராலும் கிட்டே நெருங்க முடியவில்லை. நெருங்குவதற்கு அச்சமும் கூட. அந்த யானைப்பாகன் டீ சாப்பிடப் போயிருக்க உதவிப் பாகனால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு கட்டத்திற்குப் பிறகு அதற்கு போரடித்ததோ என்னவோ தூக்கிப் போட்டு விட்டது.

பார்த்துக் கொண்டிருந்த யாருக்கும் அவர் உயிரோடு இருப்பார் என்ற எதிர்பார்ப்பும் இல்லை. மயங்கி விழுந்திருந்த அவரை என் அக்கா கணவர், அப்போது அங்கே இருந்த ஒரு மினி லாரியில் ஏற்றி  அவரே ஓட்டிக் கொண்டு உடனே ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின்னாலேயே நாங்கள் எல்லாம் சைக்கிளில் விரைந்தோம்.

நல்ல வேளையாக சில சிராய்ப்புக்களைத் தவிர வேறு பெரிய காயமோ, எலும்பு முறிவோ இல்லை. சில நிமிடங்களில் அவருக்கு நினைவு திரும்பி அன்று மாலையே மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜூம் ஆகி விட்டார். இப்போதும் நலமாக உள்ளார்.

சமயபுரம் பாகனும் அப்படி சொற்ப காயங்களோடு தப்பியிருக்கலாம்.

இரண்டாண்டுகள் முன்பாக தேக்கடி சென்ற போது "யானைச்சவாரி போகலாமா?" என்று எங்கள் வாகன ஓட்டுனர் கேட்க, இந்த சம்பவம் நினைக்கு வந்து "வேண்டாம் சேட்டா" என்று சொல்லி விட்டேன்.

 இப்போது கேள்வி

காட்டில் வாழ வேண்டிய யானையை இப்படி கோயில்களில் அடைத்து வைக்கிறார்களே, இதற்கு எதிராக மேனகா காந்தியோ அல்லது பீட்டாவின் ராதா ராஜன் அம்மையாரோ எப்போதாவது குரல் கொடுத்துள்ளார்களா?


மோடியால இதுதாங்க முடியும் !!!!!



மோடியை பிடிக்காதவங்க எல்லாம் பயங்கரமான போங்கு ஆட்டம் ஆடிக்கிட்டு இருக்காங்க . . .

இந்த விராத் கோலியை விளையாட்டுத்துறை அமைச்சர் ஏதோ  உடற்பயிற்சி தொடர்பான சவாலுக்கு இழுத்தாராம். அதை செஞ்சு முடிச்ச கோலி அதே சவாலுக்கு மோடியை இழுத்தாராம். மோடியும் செஞ்சிடறேன்பா ன்னு சொன்னாராம். 

நாட்டில ஆயிரம் பிரச்சினை இருக்கறப்போ, இதென்னய்யா வெட்டி சவாலுன்னு யாரும் அந்த மந்திரியைக் கேக்கலை! 

அவரென்ன பிரதமரா இல்லை வெட்டியா ஊர் சுத்திக்கிட்டு இருக்கற தற்குறியா, அவரை எதுக்கய்யா சவாலுக்கு இழுக்கறேன்னு யாரும் கோலியைக் கேக்கலை!

சவால்ன்னு வந்தப்பறம் பயந்து போகாம தில்லா நின்ன மனுசன் மோடி, அவரைப் போய் கலாய்க்கறீங்களேய்யா?

தூத்துக்குடி பத்திக்கிட்டு எரியுது. வாய்ல என்ன கொழுக்கட்டை வச்சிருக்கய்யான்னு கேட்கறீங்களேய்யா!

ஆளுக்காளு, அவரை சவாலுக்கு இழுக்கறீங்களேய்யா!

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கத் தயாரான்னு ராகுல் காந்தி கேட்கறாரு.

தான் வாங்கின எல்லா டிகிரியை  எல்லாம் போட்டு உங்களால் நீங்க  படிச்சு வாங்கின பட்டத்தை எல்லாம் பதிவு செய்ய முடியுமான்னு கேட்டு ஒத்தரு மானத்தை வாங்கறாரு.

ஏம்பா யாரு அது?

யெச்சூரியோட ஒரு பத்து மினிட்டாவது விவாதம் நடத்த முடியுமான்னு நீ கூட கேட்டியேன்னு ஞாபகப் படுத்தறது?

ஒரு விஷயம் அல்லாரும் புரிஞ்சுக்குங்க . . .

மோடிக்கு 

பொருளாதாரம் புரியாது.
நிர்வாகம் தெரியாது.
வரலாறு கிடையாது.

சும்மா பேட்டையில உதார் உட்டுத்திரியற தாதாக்கும்
மோடிக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.

அவரால இந்த மாதிரி வெட்டி சவால்தான் முடியும்.

என்னை மாதிரி யாரால நடிக்க முடியும்னு அவர் ஒரு சவால் உட்டா  யாரால அவர கெலிக்க முடியும்?????????





Thursday, May 24, 2018

தூத்துக்குடியின் கணக்கும் கூட . . .



பீரங்கி வாயில் பிணைத்து
சிதறடித்து சாகடித்தான்,
கோட்டை நகரம் வேலூரில்,
சுதந்திரக் கனல் ஓயவில்லை.

“சுட்டேன், சுட்டேன்,
குண்டுகள் தீரும் வரை சுட்டேன்”
கொக்கரித்தான் ஒரு மூடன்
பொற்கோயில் நகரத்தில்.
இந்திய விடுதலை நிற்கவில்லை.

லிட்டில் பாய் என்றும்
ஃபேட் மேன் என்றும்
பெயர் வைத்து
அணுகுண்டு வீசினான்,
ஜப்பான் தலை நிமிராமல் இல்லை.

தொட்டாலே பற்றிக் கொள்ளும்
ரசாயனத்தை தூவினான்.
ஆடைகளை களைந்து
அலறி ஓட வைத்தான்,
வியட்னாமில் பொதுவுடமை
பூக்கத்தான் செய்தது.

குடிசை வீட்டில் அடைத்து வைத்து
நாற்பத்தி நான்கு உயிர் குடித்தான்
வெண்மணி மண்ணில்.
செங்கொடி இன்னும்
பறக்கத்தான் செய்கிறது.

சிந்திய ரத்தத்துளிகள்
ஆவேச நதியின் ஊற்றுக்கண்கள்.
ஒரு தியாகியின் உதிரம்
ஒராயிரம் போராளிகளை
உருவாக்கும் . . .

அடக்குமுறையும் ஆணவமும்
மானுடப் பிரவாகத்தில்
மூழ்கித்தான் போகும்.

அநீதிக்கு என்றும் வாழ்வில்லை.
அதர்மம் நிரந்தரமாய் வென்றதில்லை.
துப்பாக்கிகள் உயிரைக் குடிக்கும்.
உண்மையைக் கொல்ல முடியாது.
உண்மை ஒரு நாள்
பிரளயமாய் திரண்டெழுந்து
அனைத்திற்கும் கணக்கு தீர்க்கும்
தூத்துக்குடி கணக்கும் கூட . . .



இணைய தளத் தடை இன்னொரு கேவலம் . . .



தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இணைய தளம் முடக்கப்பட்டு விட்டது. சமூக வலைத்தளங்கள் மூலமாக அங்கே நடக்கும் அராஜகங்களை வெளி உலகம் அறிந்து கொள்ளக் கூடாது என்ற சதியே இது. 

இணைய தளத்தை முடக்கி மிகப் பெரிய அராஜகத்தை கட்டவிழ்த்து விடப்போகிறதா வேதாந்தா-மோடி-எடுபிடி கூட்டணி?

எதைச் செய்யவும் துணிந்து விட்டார்கள் என்பதைத்தான் நேற்று மறுபடியும் நடந்த துப்பாக்கிச் சூடு உணர்த்துகிறது. 

அறிவிக்கப்பட்ட அவசர நிலைக்காலத்தின் போது கருத்துரிமை பறிக்கப்பட்டது. இப்போது அவசர நிலை என்று அறிவிக்காமலேயே கருத்துரிமை பறிக்கப்படுகிறது.

தமிழக வரலாற்றில் இது இன்னும் ஒரு கேவலமான நிகழ்வு,

ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டிய செய்தி ஒன்று உண்டு.

நீங்கள் அடக்க அடக்கத்தான் போராட்டங்கள் முன்னிலும் வேகமாக பீறிட்டு எழும்பும். 

இதுதான் இயற்கையின் விதி.

சர்வாதிகாரம் எப்போதும் நிலைத்ததில்லை. 

பி.கு

இந்த இணையதளத் தடை தனி நபர்களின் இணைப்புக்களுக்கா இல்லை நிறுவனங்களின் இணைப்பிற்கும் சேர்த்தா என்று தெரியவில்லை. அப்படி நிறுவனங்களின் இணைப்புக்களும் தடை செய்யப்படும் என்றால் வங்கி, காப்பீடு, ரயில்வே போன்ற பல துறைகளின் சேவை கடுமையாக பாதிக்கப்படும்


Wednesday, May 23, 2018

சபாஷ் சூர்யா! சொதப்பல் கமலஹாசன்





"போராட்டம் என்பது இது போல  ரத்தத்தில்தான் முடியும் வாய்ப்பு இருக்கிறது என்பதால்தான் போராட்டத்தில் ஈடுபடவில்லை. புத்தியை உபயோகப்படுத்த வேண்டும்"

என்று வழக்கம் போல விளக்கெண்ணெய் விளக்கம் கொடுத்துள்ளார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசன்,

உங்க புத்தியை உபயோகப்படுத்தியிருந்தா இப்படி அபத்தமா பேசியிருக்க மாட்டீங்க.

கட்சி பேரை மய்யம் னு வைச்சதனால எப்பவுமே  இப்படி நடு சென்டராதான் இருப்பீங்களா?

உயர்மட்ட குழு உறுப்பினரா இருக்கிற பாரதி கிருஷ்ணகுமார் கிட்ட கொஞ்சம் வரலாற்றுப் பாடம் கற்றுக் கொள்ளுங்கள். உங்களோடு சேர்ந்து அவரும் குழம்பிப் போயிருந்தா அதுக்கு நான் பொறுப்பு இல்லை.

சரி உங்க சக நடிகர் சூர்யா எழுதின கட்டுரையை கொஞ்சம் படிங்க.

அரசாங்கத்தின் எதிர்வினைகளுக்கு அஞ்சாமல் உரக்கப் பேசியுள்ள சூர்யாவுக்கு பாராட்டுக்கள்.

சூர்யாவின் கட்டுரை கீழே உள்ளது.

*போராட்டங்கள் ஏன் கலவரங்களாகின்றன?*

சூர்யா

தூத்துக்குடியில் நடந்த மக்கள் போராட்டம் கொடூரமான உயிர் பலிகளைச் சந்தித்திருக்கிறது. தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக ஆங்காங்கே நடக்கிற மக்கள் போராட்டங்களும், அவற்றில் தொடர்ந்து ஏற்பட்டுவருகிற இழப்புகளும் ஒருவிதக் குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது.

போராட்டத்தில் வன்முறை கூடாது என்பதே என்னுடைய நிலைப்பாடு. அதேநேரம், போராடுவதே வன்முறை ஆகிவிடாது. பாதிப்புகள் அதிகரிக்கும்போது போராடுவதுதான் மக்கள் முன்னிருக்கும் ஒரே வழி. மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஆட்சியாளர் கள் மக்களுடைய பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்க்க வேண்டும்.

*மகாராஷ்டிரம் நிராகரித்த ஆலை*

தூத்துக்குடியில் நடந்திருப்பது ஏதோ சாதிக் கலவரமோ, மதக் கலவரமோ அல்ல. வாழ்வாதாரத்துக்கான நீண்ட காலப் போராட்டம். மக்கள்ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திடீரென்று ஒரு நாளில் வீதிக்கு வந்து போராடவில்லை. 25 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் இந்த ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறார்கள். “ஆபத்து நிறைந்த இந்தத் தொழிற்சாலை எங்களுக்கு வேண்டாம்என்று மகாராஷ் டிர மாநில மக்களால் நிராகரிக்கப்பட்டு, தமிழ்நாட்டு மக்கள் மீது சுமத்தப்பட்ட ஆலை இது.

சின்ன குழந்தைகள்கூடஸ்டெர்லைட் ஆலை எங்களுக்கு வேண்டாம்என்று அறிவிப்புப் பலகை ஏந்தி, களத்தில் நின்றனர். ஒரு சமூகத்தில் குழந்தைகள்கூடப் போராட வேண்டியிருக்கிற சூழல் அவமானகரமானது. மக்கள் எதிர்ப்பு, அறிஞர்கள் எதிர்ப்பு, சட்டப் போராட்டம் கடந்து, ஆபத்து விளைவிக்கிற ஒரு ஆலை இயங்குவது நியாயப்படுத்தவே முடியாதது. பல்வேறு அத்துமீறல்களைச் செய்து, மக்களின் உயிருக்கும், தூத்துக்குடி பகுதியில் உள்ள நிலம், நீர், காற்று அனைத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு தொழிற்சாலையை இத்தனை எதிர்ப்புகளையும் மீறி என்ன காரணத்துக்காகச் செயல்பட அனுமதிக்கிறார்கள்?

படப்பிடிப்புக்காகப் பல முறை நான் தூத்துக்குடி சென்றிருக்கிறேன். அங்குள்ள மக்களிடம் பேசியிருக் கிறேன். சாதரண மக்களிடம் பேசும்போதுகூட, ‘ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம்என்று சொல்வார்கள். காரணங்கள் இல்லாமல் இல்லை. பாதிப்புகள் அப்படி!

*குப்பைத்தொட்டியா தமிழகம்?*

2012-ல் மட்டும் 2,552 பேர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையின், புற்றுநோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுச் சென்றிருக்கின்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அறிய முடிந்த தகவல் இது. தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடிநீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் விவசாய நிலங்கள் பாதிப்படைந்திருக்கின்றன. நச்சு கலந்த காற்றைச் சுவாசிப்பதன் மூலம் பல்வேறு விதமான நோய்களால் மக்கள் பாதிப்படைந்திருக்கின்றனர். இதற்கான ஆதாரங்கள் உச்ச நீதிமன்றம் வரை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.

தூத்துக்குடியின்ஸ்டெர்லைட்ஆலைக்கு எதிராக மட்டும் அல்ல; விவசாய நிலங்களையும் வாழ்வாதார இடங்களையும் அழிக்கிறஹைட்ரோ கார்பன் திட்டம்’, ‘மீத்தேன் திட்டம்’, ‘நியூட்ரினோ திட்டம்என்று தமிழக மக்கள் இன்று எதிர்க்கும் பல திட்டங்களும் அடிப்படை யில் இந்த மண்ணைக் காப்பதற்கான போராட்டங்கள். தங்கள் வாழ்க்கையைக் காத்துக்கொள்வதற்காக மக்கள் தன்னெழுச்சியாக வீதிக்கு வந்து போராடுகிறார்கள். ‘ஆபத்துமிக்க திட்டங்கள் அனைத்தையும் ஒரு குப்பைக் கூடைக்குள் தூக்கி எறிவதைப் போல, தமிழகத்தில் செயல்படுத்துகிறார்கள்என்கிற குற்றச்சாட்டை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மக்கள் போராட்டங்களைபல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்ட தொழிற்சாலைகளை மூடச்சொல்வது நியாயமில்லை; திட்டங்களை நிறுத்தச் சொல்வது சரியில்லைஎன்று கொச்சைப்படுத்துபவர்கள், பல ஆயிரம் மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதற்கு என்ன பதில் வைத்திருக்கின்றனர்? மக்கள் தங்களுடைய நலனைப் பாதுகாக்கவே வாக்களித்து அரசைத் தேர்ந்தெடுக்கின்றனர். அந்த அரசு மக்களின் பக்கம் நிற்பதுதானே அறம்?

அரசு என்ன சொல்கிறது, ‘வேலைவாய்ப்பு தருகிறோம்என்கிறது. ‘எங்களுக்கு உங்கள் வேலை வேண்டாம். உயிரும் ஆரோக்கியமான வாழ்க்கையும்தான் முக்கியம்என்று மக்கள் சொல்லும்போது, ‘உங்கள் நலனுக்காகவே இதைச் செய்கிறோம்என்ற அரசின் பதில் உள்நோக்கம் கொண்டதாகவே வெளிப்படுகிறது. அப்படியென்றால், *யாருடைய வாழ்வாதாரத்தை அடகுவைத்து, யாருடைய வளர்ச்சிக்கான திட்டங்களை நீங்கள் நிறைவேற்றுகிறீர்கள்?*

ஒரு பிரச்சினையை எதிர்த்து மக்கள் வீதிக்கு வந்து போராடும்போது, மக்களின் உணர்வுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும். சட்டத்தின் துணை கொண்டும், அதிகாரத்தின் வாள் கொண்டும் அவர்களை எதிர்கொள்ளக் கூடாது. ஆரோக்கியமான உடல் ஒன்றுதான் எளிய மக்களின் ஆதாரம். அதை வைத்துதான் அவர்கள் வாழ்வை எதிர்கொள்கிறார்கள். இன்று வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கொண்டுவரப்படும் திட்டங்கள் பலவும் சுற்றுச் சூழலை நாசப்படுத்தி, எளிய மக்களின் உடலாதாரத் தைக் குலைக்கின்றன.

வயல்களை அழித்து, மலைகளை உடைத்து, வனத்தை நாசப்படுத்தி, ஆறுகளைச் சூறையாடி கொண்டுவரப்படும் எந்தப் பொருளாதார லாபமும் நிச்சயம் மக்களுக்கானவை அல்ல. அது வேறு யாருக்கானதோ என்பது நிதர்சனம். இனி இழப்புகள் மக்களுக்கானதாக இருக்கக் கூடாது. இனியும் இவற்றையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாது!

- *சூர்யா, நடிகர்*, *சமூகச்* *செயல்பாட்டாளர்.*

தொடர்புக்கு: suriya@agaram.in