Showing posts with label புல்வாமா. Show all posts
Showing posts with label புல்வாமா. Show all posts

Monday, June 19, 2023

செய்தி-கருத்து-அவதூறு

 


 எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்தது கருத்துச் சுதந்திரப் பிரச்சினையா? சங்கிகள் குதிப்பதில் நியாயம் இருக்கிறதா?

ஒரு செய்திக்கும் அதன் மீதான கருத்துக்கும் அவதூறுக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.

புல்வாமாவில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டது அனைவரும் அறிந்ததே.

தாக்குதல் நிகழ்ந்த பின்பு ஒரு தகவல் வெளி வந்தது.





எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் பயணிக்கும் பாதையில் தீவிரவாதத் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக வந்த உளவுத்துறை தகவலை மத்தியரசு அலட்சியம் செய்தது.

மேலே உள்ளது செய்தி.

மக்களவை தேர்தலில் ஆதாயம் பெற மத்தியரசு உளவுத்துறை தகவலை அலட்சியம் செய்திருக்கலாம்.

இது கருத்து.

மக்களவைத் தேர்தலில் ஆதாயம் அடைய மத்தியரசே தீவிரவாதத் தாக்குதலை ஏற்பாடு செய்தது என்று சொன்னால் இதுதான் அவதூறு. சங்கிகள் செய்வதெல்லாம் வெறும் அவதூறு.



Monday, February 15, 2021

புல்வாமா – மோடி, கொலைகளை வேடிக்கை பார்த்த குற்றவாளி

 


இரண்டு வருடத்திற்கு முந்தைய நிகழ்வுகளை நினைவு படுத்திக் கொள்ள, நினைவு படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.  புல்வாமா சம்பவம் தொடர்பாக எழுதிய சில பதிவுகளின் இணைப்புக்களை மீண்டும் பகிர்கிறேன். தயவு செய்து அவசியம் படியுங்கள். அவற்றைப் படித்தால்தான் இப்போது சொல்லப் போகும் செய்தியின் தீவிரம் புரியும்.

 அயோக்கியத்தனம், கோழைத்தனம், முட்டாள்தனம்

 கார்கிலைப் போலவே கோட்டை விட்ட

 வீரர்கள் மரணம். இப்போது கேட்காமல் வேறெப்போது?

மோடிக்கு போட்டோதான் முக்கியம்

 பக்தர்களே பதில் சொல்லுங்கள்

 புல்வாமா சம்பவம் முடிந்து ஒரு ஆண்டிற்குப் பிறகு எழுதிய பதிவு

 இதெல்லாம் நாம் கேட்டா?

 முந்தைய பதிவுகளைப் பார்த்தால் ஒரு விஷயம் உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும்.

 தீவிரவாதத் தாக்குதல் நடக்கப் போகிறது என்ற தகவல் முன் கூட்டியே கிடைத்தும் அதை அரசு அலட்சியம் செய்துள்ளது. தாக்குதல் நிகழ்ந்த பின்னும் மோடி உள்ளிட்ட யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மோடி, சாக்சி மகராஜ் ஆகியோரின் புகைப்படங்களே அவற்றுக்கு சாட்சி. தேர்தல் பேரம் முதற்கொண்டு பிறந்த நாள் விழா வரை எல்லாம் இயல்பாகவே நடந்துள்ளது. ஒரு வருடத்திற்குப் பின்பே குற்றப் பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடி மருந்து எப்படி கிடைத்திருக்கும் என்பது பற்றி அதில் சொல்லியுள்ளார்களா என்று தெரியவில்லை.

 மூன்றாவது பதிவில்  ஒரு உளவுத்துறை குறிப்பு இருப்பதை கவனித்திருப்பீர்கள். அது 08.02.2019 அன்று அனுப்பப்பட்ட செய்தி.

 இப்போது ஃப்ரண்ட் லைன் இதழ் ஒரு மிகப் பெரிய அதிர்ச்சியளிக்கும் செய்தியை அளித்துள்ளது.

 


தாக்குதல் சம்பவம் நடப்பதற்கு முன்பாக ஒரு வார காலத்தில் ஆறு எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்படுள்ளதற்கான ஆதாரங்கள் தங்கள் வசம் உள்ளதாக சொல்லியுள்ளார்கள். அதிலே ஒரு செய்தி 24 மணி நேரத்திற்கு முன் அனுப்பப்பட்டதாகவும் ஜெய்ஷ் இ முகமது அமைப்புதான் தாக்குதல் நடத்தப் போவதென்றும் அதில் சொல்லப் பட்டுள்ளது. புல்வாமா மற்றும் அவந்திபுரா பிராந்தியங்கள் அதிக அபாயம் உள்ள இடங்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு வருட கால முயற்சிக்குப் பிறகு இந்த ஆவணங்கள் கிடைத்ததாக சொல்லியுள்ளார்கள்.

 பயணம் மேற்கொள்ளும் வீரர்கள் மீது தாக்குதல் நடக்கப் போகிறது என்று தெரிந்தும் அச்செய்திகளை அலட்சியப் படுத்தியுள்ளனர். தேர்தல் கால ஆதாயத்திற்காக வீரர்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்த மிகப் பெரிய குற்றவாளி மோடி என்பதற்கு வேறு சான்று வேண்டுமா என்ன?

 பாலகோட் துல்லிய தாக்குதல் பற்றியும் குறிப்பிட வேண்டும். 500 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றெல்லாம் பீற்றிக் கொண்டது டுபாக்கூர் செய்திகள் என்பது அப்போதே அம்பலமாகி விட்டது.

 என்னுடைய சந்தேகம் வேறு.

 துல்லிய தாக்குதல் நடக்கப் போவது எனக்கு இரண்டு நாட்கள் முன்பே தெரியும் என்று அர்ணாப் கோஸ்வாமி பீற்றிக் கொண்ட ஆதாரம் கடந்த மாதம் வெளிவந்தது. அர்ணாபெல்லாம் அடிப்படையில் ஒரு வியாபாரி. அவன் ஏன் பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்து தீவிரவாதிகளை அந்த இடத்திலிருந்து வெளியேற்ற வைத்திருக்கக் கூடாது. ராணுவ ரகசியம் அர்ணாப் கோஸ்வாமிக்கு கசிந்திருக்கும் போது ஏன் இது சாத்தியமாகாது? கட்டுமான வேலையை வாங்கிக் கொண்டு காசு கொடுக்காமல் ஏமாற்றி தற்கொலைக்கு தள்ளிய ஃப்ராடுதானே இவன்!

 என்ன கொடுமை என்றால்  இந்த தேசத் துரோகிகள் அனைவரும்தான் நமக்கு தேச பக்தி பாடம் எடுப்பார்கள். 

பிகு: மோடி நல்லவர், வல்லவர் என்று மூளைச்சலவை செய்யப்பட்டுள்ள ஒருவரின் பதிவு பற்றி நாளை பார்ப்போம்.