Showing posts with label வெடிகுண்டு சாமியார். Show all posts
Showing posts with label வெடிகுண்டு சாமியார். Show all posts

Saturday, June 11, 2022

காலையில் செம காமெடி

 


இன்று காலை இந்து ஆங்கில நாளிதழில் பார்த்த செய்தி கீழே


 இன்னமும் ஜாமீனில் குப்பைக கொட்டிக் கொண்டிருக்கிற எம்.பி யான  வெடிகுண்டு சாமியார் பிரக்யா தாகூர், பாஜகவிலிருந்து நீக்கப் பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ள நூபூர் சர்மாவுக்கு ஆதரவாக பேசி இஸ்லாமியர் மீது விஷத்தை வீசியுள்ளார்.

இதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

ஆனால் இதற்கு இந்து ஒரு தலைப்பு கொடுத்துள்ளதே, அதுதான் காமெடி.

"தலைமையின் கட்டளையை மீறி நூபூர் சர்மாவுக்கு ஆதரவு" 

"மற்ற மதங்களை தாக்கக் கூடாது என்று பாஜக தலைமை சொன்ன போதிலும் அதற்கு இவர் கட்டுப்படவில்லை" என்பது உள்ளே ஒரு செய்தி.

"இன்னுமாடா இந்த ஊர் நம்புது" என்பதைப் போல

"ஏதோ பாஜக நிஜமாகவே நூபூர் சர்மாவை நீக்கி விட்டது, மாற்று மதங்களை மதிக்கிறது"

என்று இந்து நம்புகிறது போல . . .

வெடிகுண்டு சாமியாரை லோக்சபா எம்.பி ஆக்கியது போல நூபூர் சர்மாவை மோடி ஒரு நாள் ராஜ்யசபா எம்.பி ஆக்குவார்.

ஏனோ ஒரு சில சில்லறைகள்தான் மோசம், மற்றபடி பாஜகவில் மற்றவர்கள் யோக்கியம் போன்ற காட்சியை உருவாக்குகிறார்கள்.

அதை நம்புகிறவர்கள், மோடியை நம்புகிறவர்கள் போலவே முட்டாள்கள்தான்.