Showing posts with label கலப்படம். Show all posts
Showing posts with label கலப்படம். Show all posts

Saturday, December 19, 2020

கழுதைச்சாண மருத்துவ மகாத்மியம்

 


கொரோனா குணமாகும். கொரோனா வராமல் தடுக்க முடியும். இதய நோய் வராது. கிட்னிக்கு நல்லது. சர்க்கரை, ரத்தக் கொதிப்பு ஆகியவை கட்டுக்குள் இருக்கும்.

மொட்டைச்சாமியார் சீடன் கழுதை சாணத்தை மசாலா பொடியில் கலந்து விற்று மாட்டிக் கொண்டது தெரியுமல்லவா!

அந்த மோசடிப் பேர்வழிக்கு முட்டு கொடுக்க கழுதை சாணத்தால் கிடைக்கும் மருத்துவப் பலன் என்ன தெரியுமா என்று சங்கிகள் ஏன் இன்னும் மேலே சொன்னபடி இன்னும் கதை அளக்க தொடங்கவில்லை!



Sunday, January 3, 2016

வேர்கடலையிலும் சாயமா? விளக்குங்களேன் Please




மேலேயுள்ள படத்தில் இருப்பது என்ன சொல்லுங்கள் பார்ப்போம்.

இது  ஒன்றும் ஏதோ ஒரு பானமோ இல்லை எண்ணெயோ இல்லை.

சமையலில் போடுவதற்கு வேர்கடலை நன்றாக வேக வேண்டும் என்பதற்காக  என் மனைவி சுடு நீரில் கொஞ்ச நேரம் ஊற வைத்தார்கள். சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் இப்படி செந்நிறத்தில் தண்ணீர் இருந்தது. 

மற்ற சில பொருட்களில் சாயம் ஏற்றுவது போல வேர்கடலையிலும் சாயம் ஏற்றுகிறார்களா என்று ஒரு சந்தேகம் உள்ளது.

இயற்கையிலே கூந்தலுக்கு மணம் உண்டா என்று பாண்டிய மன்னனுக்கு வந்த சந்தேகம் போல இயற்கையிலேயே வேர்கடலைக்கு அப்படி ஒரு நிறம் உண்டா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

விஷயம் தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்குங்களேன்.