Friday, August 31, 2018

மோடி முட்டாளென்பது . . . .

சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் நகைச்சுவை. 
நகைச்சுவை மட்டுமல்ல உண்மையும் கூட . . .



"மோடி ஒரு முட்டாள்" என்ற அட்டையைத் தாங்கிய படி ஒரு சமூக செயற்பாட்டாளர் டெல்லியின் பிரதான சாலையில் நின்றிருந்தார்.

"பிரதமரையா இழிவுபடுத்துகிறாய்" என்று அவரை காவலர்கள் கைது செய்தார்கள். 

"நான் நீரவ் மோடியைத்தான் சொல்கிறேன்"  

என்று அவர் விளக்கம் கொடுக்க 

காவலர்கள் சொன்ன பதில் 

"எங்களையா முட்டாளாக்கப் பார்க்கிறாய். எந்த மோடி முட்டாளென்பது எங்களுக்கும் தெரியும்" 

இ.பெ.கா நெய்யே . .பாஜக கையே . . .

இந்துஸ்தான் பெட் ரோலிய கார்ப்பரேஷன் நெய்யே . . .
பாஜக கையே . . . .

இந்த பிழைப்புக்குப் பதில் காவிக்கயவர்கள் பிச்சையெடுத்து கொடுத்திருக்கலாம்.



கேரள வெள்ள நிவாரணத்திற்கு ரூ.25 கோடி நிதி அளித்தார்களா?
பாஜக பொய்யை அம்பலப்படுத்திய கேரள மக்கள்! 

திருவனந்தபுரம், ஆக.30-

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு,பாஜக சார்பில் ரூ. 25 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள் ளது என்று பாஜகவினர் சமூகவலைத் தளங்களில் பொய்ப்பிரச்சாரம் மேற்கொண்டது அம்பலமாகியுள்ளது.கேரளம் மிகப்பெரிய அழிவைச் சந் தித்துள்ள போது, பலரும் தங்களால் இயன்ற உதவிகளை கேரளத்திற்கு அளித்து வருகின்றனர். ஆனால், ஆர்எஸ்எஸ், பாஜக-வினர் உள்ளிட்ட சங்-பரிவாரங்கள் மட்டும் கேரள வெள்ளப் பாதிப்பைக் கொண்டாடினர். 

கேரள மக்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதும், ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்ததும்தான் இந்த பேரழிவுக்கு காரணம் என்று வன்மம் கக்கினர். கேரள நிவாரண நிதிக்கு பாஜகவினர் நிதி அளிக்காதது மட்டுமன்றி, மற்றவர்களும் நிதியளிக்க வேண்டாம் என்று தடுத்த சம்பவங்களும்அரங்கேறின.இது கேரள மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பாஜக-வின் உண்மை முகம் அறியாமல் இதுவரை அக்கட்சியில் இருந்த பலர், கூட்டம்கூட்டமாக அங்கிருந்து வெளியேறியதும் நடந்தது. 

தற்போது கேரள மக்களை சமாளிக்கும் வேலையில் இறங்கியுள்ள பாஜகவினர் வழக்கம்போல, ‘போட்டோஷாப்’ கலை மூலம் போலியான புகைப்படங்களை வெளியிட்டு பொய்ப்பிரச்சாரங்களை அவிழ்த்துவிடத் துவங்கியுள்ளனர். அதில் ஒன்றாகத்தான், 

பாஜகவைச் சேர்ந்த ஸ்ரீதரன் நாயர் என்பவர், அவரது முகநூலில் “பாஜக அமைச்சர்களும்,நாடாளுமன்ற உறுப்பினர்களும் கேரள வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 25 கோடி ரூபாயை வழங்கியுள்ளனர் ” என்று குறிப்பிட்டு, ஒரு புகைப்படத்தை உலவவிட்டார்.அந்த புகைப்படத்தில், பாஜக மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம், பாஜக எம்.பி. முரளிதரன் ஆகியோர்கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் காசோலையை வழங்குவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. எப்போது எப்போது என்று எதிர் பார்த்த கேரள பாஜக-வினரும், ஸ்ரீதரன்நாயர் வெளியிட்ட புகைப்படத்தை, இஷ்டத்திற்கு முகநூலிலும், ட்விட்டரிலும் ஆயிரக்கணக்கில் ஷேர் செய்து, பெருமை பீற்ற ஆரம்பித்தனர். 

இது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. நிதியளித்தது உண்மைதானா? என்று சமூகவலைத்தளங்களில் சர்ச்சைகள் எழுந்தன. அதற்கேற்பவே, கெட்டிக்காரன் புளுகு எட்டுநாள் என்பது போல, பாஜகவினரின் புளுகுக் கதை எட்டுமணிநேரம்கூட நீடிக்கவில்லை. மத்திய அமைச்சர் கண்ணந்தானம் தலைமையில் முதல்வரிடம் நிதியளிப் பது போன்ற புகைப்படம் உண்மைதான் எனவும், ஆனால், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பொரேசன் சார்பிலான நிதியளிப்பில்தான் அவர் கலந்து கொண்டிருக்கிறார் என்பதும் சீக்கிரத்திலேயே வெளிப்பட்டு விட்டது. 

படத்தை வெளியிட்ட ஸ்ரீதரன் நாயர், கவனமாக இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் அதிகாரிகளை புகைப் படத்திலிருந்து வெட்டியெறிந்துவிட்டு, அமைச்சர் கண்ணந்தானமும், பாஜக எம்.பி. முரளிதரனும் இருப்பது போன்றபடத்தை மட்டும் போட்டு- பாஜக சார்பில்ரூ. 25 கோடி நிதி என்று கூறியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.பாஜக சார்பில் ஒரு பைசா கூட நிதி அளிக்கப்படாத நிலையில், ஸ்ரீதரன் நாயர் உள்ளிட்ட பாஜகவினர் செய்த பொய்ப்பிரச்சாரம், கேரள மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன், தற்போது பாஜக-வுக்கு எதிராகவே பூமாராங் ஆக திரும்பியுள்ளது.

 — with Sanmuga Veerama

ஜாக்கிரதையாக இருக்கவும் மோடி... . . .

மோடி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது . . .

ஆமாம்



மோடி பிரதமராக இருந்தாலும் அவரை ஆட்டி வைப்பது ஆர்.எஸ்.எஸ்  காவிக் கயவர் கூட்டமே. அவரும் அதில் ஒருவர் அவ்வளவுதான்.

நான்கரை ஆண்டுகளில் மோடியின் பிம்பம் தகர்ந்து போய் விட்டது என்பதை அவர்களும் நன்கு அறிவார்கள்.  அதனால் அடுத்த தேர்தலில் மோடியை முன்னிறுத்துவதை விட மோடியை விட மோசமானவர் என்று மோடியாளம் காட்டப்பட்ட மொட்டைச் சாமியாரை முன்னிறுத்தலாம்.

அதனால் மோடியால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள 'மோடியின் உயிருக்கு ஆபத்து" என்ற கற்பனையை நிஜமாக்கி அனுதாப அலையைக் கூட உருவாக்கி பயன்படுத்தலாம்.

ஆம்

காவிக்கயவர்களை விட மிகப் பெரிய கொலை காரக் கூட்டம் இந்தியாவில் கிடையாதே!

ஆகவே மோடி அவர்களே எச்சரிக்கையாக இருங்கள்.

உங்கள் உயிருக்கு ஆபத்து என்றால்

அது உங்கள் கூட்டாளிகளிடமிருந்தும் உங்கள் குரு பீடத்திடமிருந்தும்தான்.

எளிய மக்களின் உரிமைக்குரலை எழுப்பும்

அர்பன் நக்ஸல்களால் அல்ல


இவங்கதானாம் அது . . . .

யார் அந்த அர்பன் நக்ஸல் என்பதை தெளிவுபடுத்தும் படம் இது ...




இதுதான் மோடியின் உண்மையான முகம்




Thursday, August 30, 2018

மோடியை "வச்சு செய்யும்" கார்ட்டூன்கள்

தேர்தல் பயம் காரணமாக அனுதாப அலையை உருவாக்க "கொலை முயற்சி" என்ற பெயரில் பாசிசத்தை கட்டவிழுத்துள்ள மோடியின் சமீபத்திய கைதுகள் தொடர்பாக பல கார்ட்டூனிஸ்டுகள் அவரை "வச்சு செஞ்சிருக்காங்க"

அவற்றை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.






இந்த நடவடிக்கைகளைக் கண்டு அஞ்சப் போவதில்லை என்பதன் அடையாளமாகத்தான் கீழே உள்ள வாசகம் நேற்று ட்ரெண்டிங் ஆனது.



மோடியை எதிர்ப்பவர்களை எல்லாம் தேச விரோதிகள் என்று முத்திரை குத்த முயலும் காவிக் கயவர்கள், ஆர்.எஸ்.எஸ் அயோக்கியர்கள் அனைவருக்கும் நமது பதில் கீழே உள்ளது.

33 % வாக்குகள் பெற்ற புளுகர் மோடி பிரதமராக இருப்பதை விட இந்தியாவிற்கு வேறு ஏதாவது கேவலம் உண்டோ?  

ஆம். 

நான் இந்தியாவை நேசிக்கிறேன்.

ஆனால் மோடி அரசாங்கத்தால் ஆளப்படுவதை அசிங்கமாக உணர்கிறேன். இந்தியாவின் மீது திணிக்கப்பட்ட களங்கம் இந்த அரசு. 



திரிபுரா தேசத்து செல்லூர் ராஜூ

அடிப்படையில் செல்லூர் ராஜூ, தமிழகத்தின் மோடி.

மோடியின் வாரிசான திரிபுரா முதல்வர் மட்டும் வேறெப்படி இருப்பார்?

இந்தியாவிற்கு மோடி . . .
தமிழகத்திற்கு செல்லூர் . . .
திரிபுராவிற்கு பிப்ளப் . . .

லூசுகளின் தேசமோ இந்தியா ?????


Wednesday, August 29, 2018

அவசரக்குடுக்கை கேமராமேன் அசிங்கப் படுத்திட்டாரே!!!!


காவிக் கூட்டத்தினரின் தூய்மை இந்தியா நாடகம், ஒரு அவசரக் குடுக்கை காமெராமேனால் அம்பலமான ஒரு அசிங்கமான மொமெண்ட் இது.

காணொளியைப் பார்த்து சிரித்து மகிழுங்கள் . . .

இதற்கு முட்டு கொடுத்து கூட அந்த பீட்டர் விடும் அனாமதேயம் பின்னூட்டம் எழுதுமோ? இல்லை வழக்கம் போல commie, jihadi  என மூளைச் சலவை செய்யப்பட்ட வாந்தியை மட்டும் எடுத்திடுமா? 







பேனர்கள் சொன்ன செய்திகள் . . .


பண்ருட்டியில் நடைபெற்ற எங்கள் 31 வது மாநாட்டிற்காக நாங்கள் தயாரித்த பேனர்கள் கீழே உள்ளது.












கீழே உள்ளவை மாநாட்டை வாழ்த்தி பண்ருட்டியில் உள்ள தோழமை அமைப்புக்கள் வைத்த பேனர்கள்





மாநாட்டு அரங்கின் பின் திரை கீழே உள்ளது. மஹாராஷ்டிர  மாநில விவசாயிகளின் போராட்டத்தை கொண்டு வந்தது நிறைவளித்தது என்றாலும் மகத்தான தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் அவர்களின் படத்தை இணைக்க வேண்டிய நிலை வந்தது துயரமானது. 


ஆட்டம் ஓவரா போகுது...அடங்கு மோடி




ஜனநாயகத்திற்காகவும் மக்கள் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வரும் ஐந்து செயற்பாட்டாளர்களை கைது செய்துள்ளது மோடி அரசு.

மேலும் பலர் வீடுகளில் ரெய்ட் நடத்தியுள்ளது. அதிலே ஒருவர் அண்ணல் அம்பேத்கரின் பேரனான ஆனந்த் டெல்டும்ப்டே.

தலித் மக்களின் எழுச்சியை ஒடுக்குவது, அவர்களுக்காக குரல் கொடுப்பவர்களை மிரட்டுவது என்பதைத் தவிர வேறு காரணம் எதுவும் கிடையாது.

ஜனநாயகத்தின் எதிரி காவிக் கூட்டம் என்பது நாளுக்கு நாள் அம்பலமாகிக் கொண்டே இருக்கிறது. 

அவர்களை ஆட்சியை விட்டு துரத்துவது என்பதே இந்த தேசத்தை நேசிக்கும் உண்மையான தேச பக்தர்களின் கடமை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன அறிக்கை கீழே உள்ளது.




 எச்சரிக்கை :

சுதந்திரப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த காவிக் கயவர்களின் வாரிசுகள் எவனாவது commie, jihadi, என்றெல்லாம் பீட்டர் விட்டுக் கொண்டு வந்தால் செருப்படிதான் கிடைக்கும். 

Tuesday, August 28, 2018

நாங்கதான் அப்போவே சொன்னோம்ல !!!





காஷ்மீர் ராணுவ தளபதியான லீடுல் கோகாய், ஒரு பதினெட்டு வயது பெண்ணோடு ஒரு விடுதியில் இருந்ததாகச் சொல்லப்பட்ட குற்றச்சாட்டு உண்மைதான் என்று நிரூபணமாகி விட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது. விதிகளை மீறிய குற்றத்திற்காக ராணுவ நீதிமன்றம் அவருக்கான தண்டனையை முடிவு செய்யும்.

காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு இடைத் தேர்தலின் போது ஒரு அப்பாவி வாலிபரை ஒரு ஜீப்பின் முன்னே கட்டி வைத்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு உலா வந்தது இந்த அதிகாரிதான். இந்த அராஜகத்தை ஒரு வீரச்செயல் என்று “பல உயரதிகாரிகளின் பணி மூப்பை பின்னுக்குத் தள்ளி மோடியால் ராணுவ தளபதியாக்கப்பட்ட” பிபின் ராவத் பாராட்டி விருதும் அளித்தார்.

கோகாயின் நடவடிக்கைகள் வில்லங்கமானது. பதட்டம் நிறைந்த காஷ்மீரின் சிக்கல்களை அதிகரித்து தேவையற்ற மோதல்களை உருவாக்கும் உள்நோக்கம் கொண்டது என்று முன்பே எழுதி உள்ளேன் என்பதை நினைவு படுத்த விழைகிறேன்.

ராணுவ சிறப்பு அதிகாரச்சட்டம் எப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதற்கு கோகாய் ஒரு எடுத்துக்காட்டு.

அவர் மீது ராணுவ நீதிமன்றம் நடவடிக்கை எடுப்பது இருக்கட்டும், அவரது அராஜகத்தை வீரச்செயல் என்று பாராட்டி விருது அளித்து மேலும் உசுப்பேத்தி விட்ட பிபின் ராவத், தார்மீக அடிப்படையில் பதவி விலகுவாரா?


Monday, August 27, 2018

அதுக்கு ஏண்டா கங்கையில் மூழ்கினீங்க?



காசியில் நூற்றி ஐம்பது ஆண்கள் "பெண்ணியம் ஒழிய வேண்டும்" என்று ஹோமம் வளர்த்து பூஜை நடத்தி கங்கையில் மூழ்கி வழிபட்டுள்ளனர்.

ஹோமமெல்லாம் வளர்த்தார்கள் என்றால் அவர்களுக்கு புராணங்களில் நம்பிக்கை உள்ளதென்றுதான் அர்த்தம்.

புராணங்களின் படி கங்கை ஒரு பெண். மகாபாரத பீஷ்மரின் தாய் கங்கைதான் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவும்.

பெண்ணியம் ஒழிய வேண்டும் என்று ஹோமம் செய்தவர்கள் ஏன் பெண்ணாக உருவகப்படுத்தப்பட்ட கங்கையில் மூழ்க வேண்டும். 

பர்வத ராஜன் என்று சொல்லப்படுகிற இமாலய மலையிலிருந்து குதித்தோ அல்லது சமுத்திர ராஜன் என்று வர்ணிக்கப்படுகிற கடலின் நடுப்பகுதிக்குப் போய் குதித்திருக்கலாமே ?

இந்தியாவில் லூசுகளின் எண்ணிக்கையில் நூற்றி ஐம்பது குறைந்திருக்கும். 

பார் வசதி கிடையாதா யுவர் ஹானர்!


இந்திய வங்கிகளை மோசடி செய்த திருடன் விஜய் மல்லய்யாவை மும்பை சிறையில் அடைப்பதற்காக இங்கிலாந்து நீதி மன்றம் போட்ட நிபந்தனைகளுக்கு சி.பி.ஐ அளித்துள்ள பதில் கீழே உள்ளது.


அதை முதலில் படியுங்கள். கடைசியில் எனக்கு ஒரு கேள்வி உள்ளது.

3 பேன்... வெஸ்டர்ன் டாய்லெட்... 40 இன்ச் எல்சிடி டிவி...
மல்லையாவுக்கு தயாராகும் சொகுசு சிறை!




மும்பை, ஆக. 25 -

மும்பைச் சிறையில், மல்லையாவுக்காக, 3 மின்விசிறிகள், பளீச்சென்ற வெஸ்டர்ன் டாய்லெட், 40 இன்ச் எல்சிடி டிவி ஆகியவற்றுடன் சொகுசான அறையை சிபிஐ ஒதுக்கியுள் ளது. மேலும், நூலகம் மற்றும் மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.சாராய ஆலை முதலாளியான விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாயைக் கடனாக வாங்கிவிட்டு, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகருக்கு தப்பினார். தற்போது அவரை இந்தியாவுக்கு கொண்டுவர, சிபிஐ-யும், அமலாக்கத்துறையும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்காக லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தை நாடியுள்ளன.

ஆனால், தன்னை இந்தியாவுக்கு அனுப்பக்கூடாது என்றும், இந்தியச் சிறைகளில் தான் சித்ரவதை செய்யப்படலாம்; தனக்குப் பாதுகாப்பு இருக்காது என்றும் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் கூறிவருகிறார். குறிப்பாக, இந்திய சிறைகளில் சூரிய வெளிச்சம் கூட இருக்காது, சுத்தமான அறைகள் இருக்காது என்றும் அவர் புகார் கூறிவருகிறார்.லண்டன் நீதிமன்றமும் இதனை ஏற்றுக் கொண்டு, மல்லையாவை இந்தியாவுக்கு நாடுகடத்தும் பட்சத்தில், அங்கு அவர் பாதுகாப்பாக நடத்தப்படுவாரா? என்ற கேள்வியை அண்மையில் எழுப்பியது. மல்லையா அடைக்கப்படும் சிறையில் உள்ள வசதிகளையும் கேட்டது.

இதையடுத்து மும்பை ஆர்தர் சாலை சிறையில் 12-ஆம் எண் அறையில்தான் மல்லையா அடைக்கப்படுவார் என்றும், இந்த சிறை அறைஎப்படி இருக்கும், என்னென்ன வசதிகள் உள்ளனஎன்பது குறித்துமான வீடியோவை ஒன்றை சிபிஐ அதிகாரிகள் லண்டன் நீதிமன்றத்தில் தற்போது தாக்கல் செய்துள்ளனர்.

“ஆர்தர் சாலை சிறையின் 12-ஆம் எண் அறையில், நவீனமான வெஸ்டர்ன் டாய்லெட், 6 மின்விளக்குகள், 3 மின்விசிறிகள், சுவற்றில் வெள்ளை நிற பெயிண்ட், 40 இஞ்ச் எல்சிடி டிவிஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன; மருத்துவவசதிகளும் இருக்கின்றன; மேலும், மல்லையாதங்க வைக்கப்பட்டுள்ள சிறை கிழக்கு பார்த்ததாகும்; எனவே அங்கு சூரிய வெளிச்சத்துக்கு பஞ்சமே இல்லை; மல்லையா விரும்பினால் அவருக்கு அறையில் நூலகமும் அமைத்து கொடுக்கப்படும்” என்று வசதிகளை சிபிஐ அடுக்கியுள்ளது. இதனை லண்டன் நீதிமன்றம் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க உள்ளது. 

மக்களுக்கான போராட்டங்களில் கைதாகி சிறை செல்வோரெல்லாம் சித்ரவதை செய்யப்படும் நிலையில், மக்கள் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபருக்கு சொகுசு வசதிகள் செய்துதரப்படுவது பெரும் வெட்கக்கேடாக அமைந்துள்ளது.

இந்த வசதி எல்லாம் போதுமா யுவர் ஹானர்? சாராயக் கம்பெனி நடத்திய விஜய் மல்லய்யாவின் அறையில்  பார் வசதி இல்லையென்றால் எப்படி? அதையும் செய்து தர வேண்டுமென்றும் அந்த பாரில் என்னென்ன சரக்குகள் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடுவீர்களா யுவர் ஹானர்?

நீங்களும் சொல்லலாம். உத்தரவு போடலாம். அதை எங்கள் இந்திய அரசும் ஏற்று அவருக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கலாம்.

ஆமாம்.

கதவில்லாத, தண்ணீரில்லாத கழிப்பறை, புழுக்கள் நிரம்பிய உணவு என்றெல்லாம் ஒடுக்குவதற்கு விஜய் மல்லய்யா ஒன்றும் மக்களின் கோரிக்கைகளுக்கான உரிமைப் போராட்டத்தில் ஒன்றும் பங்கேற்கவில்லையே, !!!

இந்திய மக்களின் பணத்தை கொள்ளையடித்தவருக்கு ஒரு கூட்டாளி இது கூட செய்யவில்லையென்றால் எப்படி!!!

டுபாக்கூர் சாமியாரின் 500 டன் ட்ரக்





மேலே உள்ள செய்தியைப் படித்தீர்களா?

டுபாக்கூர் சாமியார் சீ சீ ரவிசங்கர்,  60 ட்ரக்குகளில் கேரளாவிற்கு  நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளாராம். ஒவ்வொரு ட்ரக்கிலும் 500 டன் அளவிற்கு பொருட்கள் உள்ளதாம். 

மிகப் பெரிய மல்டி ஆக்ஸில் லாரியாக இருந்தாலும் கூட ஐம்பது டன் எடை ஏற்றுவதே மிகவும் சிரமமாக இருக்குமாம். இவர் சாமியாராக இருப்பதால் மந்திர தந்திரம் செய்து இருப்பாரோ?

கதை விடுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா?

என்ன செய்ய?

இன்னோவா கார்கள் மூலமாக பல்லாயிரக்கணக்கான குஜராத்திகளை மோடி காப்பாற்றியதாக விடப்பட்ட கதையை நம்பவும்

அறுபதாயிரம் யானைகள், அவற்றின் பாகன்கள், வீரர்கள், ஆயுதங்கள், அனைவருக்குமான உணவு என்று அனைத்தையும் ஒரே கப்பலில் ஏற்றினார்கள் என்று சீமான் விட்ட கதையை நம்பவும்

இளிச்சவாயர்கள் உள்ள நாட்டிலே

டுபாக்கூர் சீ சீ ரவிசங்கர் விடும் கதையை நம்பவும் 

ஆட்கள் இல்லாமலா இருக்கப் போகிறார்கள் !!!!!!


Sunday, August 26, 2018

தாமதமாய் மூன்று செய்திகள்

கடந்த 19, 20 தேதிகளில் எங்கள் வேலூர் கோட்டச்சங்கத்தின் 
31 வது பொது மாநாடு பண்ருட்டியில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. 

பண்ருட்டி கிளைத் தோழர்கள் அயறாது பணியாற்றி  அனைத்து அம்சங்களிலும் மாநாட்டை  அற்புதமாய் நடத்தினார்கள். மகளிர் தோழர்கள் அசத்தினார்கள். மாநாடு முடிந்த மறுநாளே மாலை ஒரு குடும்பப் பயணத்திற்கு புறப்பட்டு விட்டதால் மாநாடு குறித்து எதுவும் எழுத நேரமில்லாது போய் விட்டது. 

கொஞ்சம், கொஞ்சமாய் பகிர்ந்து கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளது. 

அதற்கு முன்பாக மாநாடு குறித்து தீக்கதிர் நாளிதழில் வந்த மூன்று செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.




காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க வேலூர் கோட்ட மாநாடு பண்ருட்டியில் துவங்கியது

டலூர், ஆக.19-
காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தின் வேலூர் கோட்ட 31வது பொது மாநாடு பண்ருட்டியில் ஞாயிறன்று (ஆக.19) துவங்கியது.இந்த மாநாடு திங்களன்றும் (ஆக. 20)தொடர்ந்து நடைபெறுகிறது.இம் மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியையொட்டி ‘எல்ஐசி பாதுகாப்போம்’ என்ற முழக்கத்துடன் எழுச்சிமிக்கப் பேரணி நடைபெற்றது. காந்தி சாலை அரசு மேனிலைப்பள்ளி அருகிலிருந்து தொடங்கிய பேரணியை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் எஸ். துரைராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியின் வழி நெடுகிலும்கட்டுமான சங்கம், பொதுத்தொழிலாளர் சங்கம், ஆட்டோ தொழிலாளர் சங்கம், மின் ஊழியர் மத்தியஅமைப்பு, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, சுமைப்பணி தொழிலாளர் சங்கங்களின் சார்பில் சாலைகளில் நின்று கொண்டு மாநாட்டை வாழ்த்தி முழக்கமிட்டனர்.

இதனைத் தொடர்ந்து என்.எம்.சுந்தரம் நினைவரங்கத்தில் நடைபெற்ற பொது மாநாட்டிற்கு வேலூர்கோட்டத் தலைவர் எஸ்.பழனிராஜ் தலைமை தாங்கினார். சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் கடலூர் மாவட்டச் செயலாளரும், வரவேற்புக்குழுவின் தலைவருமான வி. உதயகுமார் வரவேற்றார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அகில இந்தியபொதுச் செயலாளர் வி.ரமேஷ் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.

தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் ஆர்.தர்மலிங்கம், இணைச் செயலாளர் எஸ். சிவசுப்பிரமணியன், துணைப் பொருளாளர் வி. ஜானகிராமன், எல்ஐசி முதல் நிலைஅதிகாரிகள் சங்கத்தின் வேலூர் கோட்டத் தலைவர் பி. துளசிராமன், வளர்ச்சி அதிகாரிகள் வேலூர் கோட்டப் பொதுச் செயலாளர் சி.சிவராமன், வேலூர் கோட்டமுகவர் சங்க பொதுச் செயலாளர்கள் ஜே.கே.என். பழனி, தா.வெங்கடேசன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர்.

மாநாட்டில் புதுவணிகம் மற்றும் புதுப்பித்தல் இயக்கத்தில் முதலிடங்கள் பெற்ற முகவர்கள் கவுரவிக்கப்பட்டனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. வேலூர் கோட்டப் பொதுச் செயலாளர் எஸ்.ராமன் நன்றியுரையுடன் துவக்க மாநாடு நிறைவடைந்தது.பின்னர் மாலையில் பண்ருட்டி இந்திராகாந்தி சாலை அருகே மக்கள் ஒற்றுமை கலைவிழா நடைபெற்றது. புதுவை சப்தர்ஹஸ்மி குழு, நடனம், நாடகம், புதுகை பூபாலம் குழுவினரின் அரசியல் நையாண்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், சங்கத்தின் பொறுப்பாளர் சாத்தூர் லட்சுமணப் பெருமாள் ‘தாய் மண்ணே வணக்கம்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். வரவேற்புக்குழுச் செயலாளர் ஏ.ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினார்.



மக்களின் நம்பிக்கையை பெற்றது எல்ஐசி மட்டுமே
ஏஐஐஇஏ பொதுச் செயலாளர் வி.ரமேஷ் பேட்டி
கடலூர், ஆக.19-
தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் எவ்வளவு தோன்றினாலூம் மக்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனம் எல்ஐசிமட்டுமே என அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் (ஏஐஐசிஏ) பொதுச் செயலாளர் வி.ரமேஷ் கூறினார். பண்ருட்டியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-எல்ஐசி 1956 லிருந்து இந்திய தேசத்தை கட்டமைக்க 22 லட்சம் கோடி வழங்கி இருக்கிறது. இப்படிப்பட்ட பொதுத்துறையைதான் அழிக்க மோடி அரசு துடிக்கிறது. லாபம் ஈட்டும்பொதுத்துறைகளை விற்பதன் மூலம்தேசத்திற்கும், மக்களுக்கும் பொருளாதார வளர்ச்சியில் எந்த வகையிலும் உதவாது. அரசின் கொள்கைகளால் அரை மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறான். விவசாயிகளின்ன் ஏழ்மை நிலை மேலும் அதிகரித்துள்ளது. வளர்ச்சிஎன்று கூறுவது மக்களின் வாழ்க்கையில்பிரதிபலிக்கவில்லை.

வறுமையிலும், சத்து குறைபாடாலும் கடந்தாண்டு மட்டும் 25 லட்சம் பேர் இறந்துள்ளனர். பிரதமர் அறிவித்த 50 கோடி மக்களுக்கு காப்பீடு என்பது ஏமாற்று வேலை. 30 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தால்தான் அந்த திட்டம் மக்களுக்கு பயனளிக்கும், மாறாக 2 ஆயிரம் கோடி ரூபாய் என்பது கண்துடைப்பு வேலை.பொதுத்துறை நிறுவனத்தை பாதுகாக்கக் கோரியும், விலை பொருளுக்கு குறைந்த பட்ச ஆதரவிலை அறிவிக்க வேண்டும், தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தக்கூடாது,அணிதிரட்டப்படாத தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு சட்டங்களை உருவாக்க வேண்டும், நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 5 ஆம் தேதி தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளனர். 

இந்த போராட்டத்திற்கு இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஆதரவு தெரிவிப்பதுடன், போராட்டத்திலும் நாங்கள் பங்கேற்கிறோம். எல்ஐசியின் 61 வது தினம் செப்டம்பர் 1 கொண்டாடப்படுகிறது. அன்றுஎல்ஐசியை பாதுகாக்கக் கோரியும், முதலீடு செய்ய கோரியும் மக்களிடம் பிரச்சாரம் செய்ய உள்ளோம்.கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பிற்கு ஒரு நாள் ஊதியத்தை இந்தியா முழுவதும் உள்ள இன்சூரன்ஸ் ஊழியர்கள் வழங்குவார்கள். மேலும், அந்த மாநிலத்தில் விதிகளை தளர்த்தி விரைவாக இன்சூரன்ஸ் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்திப்பின் போது வேலூர் கோட்டச் செயலாளர் எஸ்.ராமன், துணைத் தலைவர் டி.மணவாளன், பொருளாளர் வி.ஜானகிராமன் ஆகியோர் உடனிருந்தனர்.


இன்சூரன்ஸ் பிரிமியம் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்குக
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

கடலூர், ஆக.20-
காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தின வேலூர் மாட்ட 31-வது மாநாடு பண்ருட்டியில் ஆக.19 முதல்20 வரை இரண்டு நாட்கள் நடைபெற்றது. 

இம்மாநாட்டிற்கு வேலூர் கோட்டத் தலைவர் எஸ்.பழனிராஜ் தலைமை தாங்கினார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.ரமேஷ் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-நான்கு இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒரேபொதுத்துறை நிறுவனமாக இணைத்து பங்கு விற்பனையை கைவிட வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் 18 ஆயிரம் வழங்க வேண்டும், டாக்டர்எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி விவசாயப் பொருட்களுக்கான கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.


விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டு பொது விநியோக முறைபலப்படுத்தப்பட வேண்டும், வங்கிகளின் வாரக்கடன்கள் வசூலிக்கப்படுவதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், வங்கிகளை மோசடி செய்துவெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றவர்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும், பென்ஷன் திட்டத் தில் இனைவதற்கான இன்னொரு வாய்ப்பு உடனடியாக அளிக்கப் பட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்துசெய்யப்பட வேண் டும்.பெண்களுக்கான பிரத்யோக உடல் உபாதைகளுக்காக சிறப்பு விடுப்பு வழங்கப்பட வேண்டும், குழந்தை பராமரிப்பு விடுப்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

வேலூர் கோட்டத்தில் வாடகைக்கட்டிடங்களில் செயல்பட்டு வரும்அலுவலகங்கள், சொந்தக்கட்டிடத்தில் செயல்படக் கூடிய விதத்தில் நிலம் வாங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சென்னைக்கான மாறுதல்கள் நடைமுறைப்படுத்த வேண்டும், மக்கள் ஒற்றுமையை சிதைக்க முயல்கிற மதவெறிக் கும்பல்கள் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகமெங்கும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள வீட்டு வரி,சூயஸ் எனும் பன்னாட்டு நிறுவனத்திற்கு கோவை குடிநீர் வினியோகத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தம் உள்ளிட்டவைகளை ரத்து செய்ய வேண்டும், 1.8.2017 முதல் எல்.ஐ.சி ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வை இறுதிப்படுத்த பேச்சு வார்த்தைகளை உடனடியாக துவக்க வேண்டும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள் 

கோட்டத் தலைவராக எஸ்.பழனிராஜ், பொதுச் செயலாளராக எஸ்.ராமன், பொருளாளராக எல்.குமார், துணை பொருளாளராக எம்.ஏ,மங்களகௌரி, துணைத் தலைவர்களாக டி.மணவாளன், ஏ.நாராயணன், டி.தேவராஜ், கே.மீரா, இணைச் செயலாளர்களாக எஸ்.ரமேஷ்பாபு, எஸ்.குணாளன், கே.வேலாயுதம், பி.கங்காதேவி, ஜி.வைத்தியலிங்கம், மகளிர்குழு அமைப்பாளராக ஆர்.அமுதாஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

கண்டோன்மென்ட்டின் நாய்க்காவல் படை !!!!!



ஐந்து நாட்கள் குடும்பப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலையில் வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் இறங்கிய உடன் பார்த்த காட்சி.

பத்து நாய்கள் பிளாட்பார்மில் கூட்டமாக திரிகிறது. பயணிகளின் பைகளை மோப்பம் பிடித்து பின்னால் வருகிறது. குழந்தைகளும் கைக்குழந்தைகளை கையில் வைத்திருப்பவர்களும் அலறிக் கொண்டே வேகமாக விரைகிறார்கள்.

ரயில்வே காவலர்களுக்குப் பதில் இவர்களை காவலர்களாக பயன்படுத்துகிறார்களா என்று கூட சந்தேகம் வருகிறது..

இப்படி நாய்க்கூட்டம் பிளாட்பார்மிலே திரிவதை ரயில்வேதுறை கட்டுப்படுத்த வேண்டும்.




Saturday, August 18, 2018

ஆனாலும் 50 அடி ஓவர் !!!!

கடந்த வாரம் எங்கள் மாநாட்டை ஒட்டி பிரச்சாரத்திற்கு சென்றிருந்த போது கடலூர் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் பார்த்த பேனர் இது.



வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கெல்லாம் பேனர் தேவையா என்பதே ஒரு புறம் இருக்க, அதிலும் ஐம்பது அடி நீளத்தில் வைப்பது எல்லாம் ரொம்பவே ஓவர் . . .

பி.கு : விபரங்கள் இங்கே அவசியமில்லை என்பதால் புகைப் படங்கள் பெயர்களை  மறைத்து விட்டேன்

அம்மனுக்கே அருள் வந்தா????

ஆடி மாதத்தை முன்னிட்டு எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பகுதியில் வைத்திருந்த அம்மன் சிலை கீழே.





கடந்த வருடம் கண்ணை திறந்து மூடுவதாக வடிவமைத்து இருந்தார்கள். இந்த வருடம் அம்மனுக்கே அருள் வருவதாக வைத்திருந்தனர்.



அடுத்த வருடம் என்னவோ?

வாய்ப்புள்ளோர் வாருங்கள் . . .

எங்கள் வேலூர் கோட்டச்சங்கத்தின் முப்பத்தி ஒன்றாவது பொது மாநாடு நாளையும் நாளை மறுநாளும் பண்ருட்டியில் நடைபெற உள்ளது.

மாநாட்டை ஒட்டி நாளை ஞாயிறு இரவு மக்கள் ஒற்றுமை கலை விழா பொது வெளியில் நடைபெறவுள்ளது.

அத்தனை நிகழ்ச்சிகளும் உங்களை சிரிக்க, சிந்திக்க, ரசிக்க வைக்கும்.

பண்ருட்டி மற்றும் அருகாமை பகுதிகளில் உள்ளவர்கள் அவசியம் வாரீர் . . .





நல்லதாய் எழுத ஏதுமில்லையே!



நாம் அமைதியாய் இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அனானிகள் விடவில்லை. 

கலைஞருக்கு அஞ்சலி எழுதிய நீ ஏன் இப்போது எதுவும் எழுதவில்லை என்று கேள்விகள் வந்தது.

என்ன செய்ய?

நல்லதாய் எழுத ஏதுமில்லையே!

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை காட்டிக் கொடுத்ததும்

13 நாட்கள் ஆட்சிக்காலத்தில் எண்ரான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு மகாராஷ்டிர மாநில மின்சார வாரியத்தை கடனாளியாக்கியதும்

பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கென்றே ஒரு அமைச்சரவை வைத்திருந்ததும்

வளர்ப்பு மகளின் கணவனுக்காக யூனிட் ட்ரஸ்ட் நிறுவனத்தையே திவாலின் விளிம்புக்கு கொண்டு வந்ததும்

போன்ற 

செய்திகள்தானே

நினைவுக்கு வந்தது.

நல்லதாய் எழுத ஏதுமில்லை. விமர்சனத்தை முன் வைக்கும் நாள் இதுவில்லை என்று அமைதியாய் இருந்தாலும் வலுக்கட்டாயமாய் வம்பிழுத்தால் நான் என் செய்வேன்?

ஆனாலும் சொல்வேன்.

யாருடைய மரணத்திற்காகவும் மகிழ்கிற குறுகிய புத்தி என்றுமே எனக்கு கிடையாது. சங்கிகள் போல கொண்டாடும் மனநிலையும் கிடையாது.

நல்லதாய் எழுத ஏதுமில்லாததால் மௌனமாய் இருந்தேன். வலுக்கட்டாயமாய் பிடித்து இழுத்ததால் மௌனத்தின் காரணத்தை மட்டும் விளக்கியுள்ளேன்.

ஒரு மனிதர் என்ற முறையில் வருந்துகிறேன். 


Friday, August 17, 2018

நீங்க அவ்வளவு சுத்தமா யெடீ ?



காலில் அணிந்துள்ள ஷூ கூட மண்ணில் படக்கூடாதாம். இரண்டு மிதியடிகள் போட்டு அதன் மீதுதான் நிற்பாராம். யெடியூரப்பா அவ்வளவு சுத்தமாம் . . .

ஆனால் உங்கள் அரசியல் நாற்றமடிக்கும் அழுக்கல்லவா?

ஊழல், மதவெறி, சந்தர்ப்பவாதம் என்று அனைத்து நிரம்பிய உங்களால் என்றுமே சுத்தமாக முடியாதே!

போராட்டத்தின் தேவை புரிந்ததா ரஜனி?


போராட்டம், போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடாகி விடும் என்று சொன்ன ரஜனியா, நானே போராடியிருப்பேன் என்று சொன்னது ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் வரும் வடிவேலு காமெடிக் காட்சியான "அது வேற வாய்'  என்ற வசனம்தான் நினைவுக்கு வந்தது.

ஆனாலும் ரஜனியின் இந்த அறிக்கையை வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்.

கலைஞருக்கு மெரினாவில் இடம் தராவிட்டால் நானே போராடி இருப்பேன் என்று உங்களை போராட்டத்திற்கு தயார் செய்த அதே

எடுபிடி, குருமூர்த்தி, மோடி கும்பல்தான்

எங்கள் வாழ்வாதாரத்தைப் பறித்து, எங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றிக் கொண்டிருப்பவர்கள்.

அதனால்தான் நாங்கள் அன்றாடம் போராட வேண்டிய அவசியம் உள்ளது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.



Thursday, August 16, 2018

அற்புதம், அருமை, பாராட்டுக்கள் . . .


தோழர் வெண்புறா சரவணன் அவர்களின் முகநூல் பதிவு கீழே உள்ளது.

அற்புதமான ஒரு சிந்தனை. அதனை அமலாக்கியவிதம் அருமை. மதுரை புறநகர் மாவட்ட தமுஎகச, நாகமலை கிளைத் தோழர்களுக்கும் தமுஎகச பொறுப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.



தமிழகத்தின் ஹாசினி தொடங்கி, காஷ்மீர் ஆசிஃபா வரை குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படும் அவலமும் அவமானமும் நிறைந்த இந்நாட்டின் தேசியக் கொடியை இந்தாண்டு ஏன் ஒரு பெண் குழந்தை ஏற்றி வைக்கக் கூடாது? என யோசித்தார்கள், எம் மதுரை புறநகர் மாவட்ட தமுஎகச, நாகமலை கிளைத் தோழர்கள். அந்த ஆலோசனை ஏகமனதான ஏற்கப்பட...

நேற்று நடைபெற்ற 24 ஆவது கலை இலக்கிய இரவில், நள்ளிரவு 12 மணிக்கு மக்களிசைப் பாடகன் கரிசல் கருணாநிதியின், உணர்ச்சிகரமான

"புதுயுக நாயகரே
பாரதப் புரட்சியின் தூதுவரே,
வந்தே மாதரத் தாரகை மந்திரம்
மறுபடி இசைத்திட வாருங்கள்..."

என்ற பாடல் ஒலிக்க,

8 வயது குழந்தை எஸ்.நிஃபிக்சா, கம்பீரமாக இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்து பாரதியின் கணல் வரிகளைப் பாடி வீதியை உறைய வைத்தாள்!

இதே போன்றொரு கலை இலக்கிய இரவு மேடையில்தான், மரியாதைக்குரிய மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் "இந்த தேசம் இளைஞர்கள் கையில் பத்திரமாய் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது" என்று கண்ணீர் வழியச் சொன்னது நினைவில் வந்து மோதுகிறது!

Tuesday, August 14, 2018

சுதந்திரத்தைக் கொண்டாடுவோம், பாதுகாப்போம்.



நம் வீர முன்னோர் போராடிப் பெற்றுக் கொடுத்தது சுதந்திரம். 

பாஜக, அதன் குருபீடம் ஆர்.எஸ்.எஸ் தவிர மற்ற அனைவருக்கும் இந்த தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் பங்கு இருக்கிறது.

கொடியேற்றி மிட்டாய் தின்பதோடு சுதந்திர தினம் முடிந்து போவதில்லை.

இந்தியாவில் உள்ள அனைவருக்கும்

அரசியல் சுதந்திரம்,
பொருளாதாரச் சுதந்திரம்,
கலாச்சாரச் சுதந்திரம்,
கருத்துச் சுதந்திரம்

இருக்கிறதா?

இருக்கு, ஆனா இல்லை என்று சொல்லக் கூடிய அளவில் இன்று உள்ளது.

இன்று ஆட்சியில் உள்ளவர்கள் நாளையும் தொடர்ந்தால் எதிர்காலத்தில் எதுவும் இருக்காது.

சுதந்திரத்தைக் கொண்டாடுவோம்.
எதிர்காலச் சுதந்திரத்தைப் பாதுகாப்போம்.

இன்னும் ஒரு வருடத்திற்கு நம் முன் உள்ள கடமை அதுதான்.

சுதந்திர தின வாழ்த்துக்கள்


எப்படி ஆறுதல் சொல்ல?



இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவருமான தோழர் எஸ்.ஜி.ரமேஷ்பாபுவின் மூத்த மகன் சூர்யா, தேர்வில் தோல்வியுற்றதால் மரணத்தைத் தேடிய துயரச் செய்தி காலை முதலே மனதை வாட்டி வருகிறது.

தேர்வு முடிவுகளையெல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாத பெற்றோரின் மகனைக் கூட இப்படிப்பட்ட முடிவிற்குத் தள்ளியது எது?

மாணவர்களுக்கு தொடர்ந்து அழுத்தத்தை அளிக்கும் கல்வி முறையா?

நல்ல மதிப்பெண்கள் எடுக்காதவர்களை அலட்சியமாக பார்க்கும் சமூகமா?

தோழர் ரமேஷ்பாபுவிற்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை.

அவரோடு பேசும் தைரியம் கூட எனக்கு இல்லை.

காலம்தான் இந்த ஆறாத்துயரிலிருந்து அவரை மீட்க வேண்டும்.


சங்கிகளை ஏன் துரத்தியடிக்க வேண்டும்?

இந்தியாவின் இழிபிறவிகள் சங்கிகளை ஏன் துரத்தியடிக்க வேண்டும் என்பது இந்த பதிவைப் படித்தால் புரியும்.




பேரழிவின் விளிம்பில் நிற்கும் கேரள மக்கள் மீது, விஷம் பொழியும் சங்கப் பரிவார் மனித இனத்துக்கே தகுதியற்ற சமூகவிரோதிகள்.

"கேரள மாநிலம், தற்போது எதிர்கொள்ளும் பெருமழையும், பேரழிவும் கேரள மக்களுக்கு தேவை தான்..
.
இந்த பேரழிவுக்கு, ஒரு ரூபாய் கூட இந்துக்கள் நன்கொடை வழங்கக் கூடாது...

கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு, எந்தவித நன்கொடையும் வழங்கக்கூடாது"... என்று

வட இந்தியாவிலிருந்து, தென் மாநிலங்களுக்கு ட்விட்டர், முகநூல், வாட்சப் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் உத்தரவுகளை வழங்குகிறது சங்கப் பரிவார்...

கேரள மக்களை மதரீதியாகவும் அருகில் சார்பு ரீதியாகவும் தரம் பிரித்து, தங்கள் கொடிய கொடுக்குகளை வைத்து கொட்டுகின்றன சங்கப் பரிவார அமைப்புகள்.

பெருவெள்ளம் பாதித்துள்ள பகுதிகளை பகுதி வாரியாகப் பிரித்து, எந்தெந்த பகுதிகளில் கிறிஸ்தவ மக்கள் தொகை அதிகம்; எந்தெந்த பகுதிகளில் இஸ்லாமிய மக்கள் தொகை அதிகம்; எந்தெந்த பகுதிகளில், கம்யூனிஸ்ட்கள் அதிகம் என்பதையும் வரையறுத்து #விளக்கமாகபிரச்சாரம் செய்கின்றனர் சங்கிகள்.

ஆனால், கேரள சமூகம் இவர்களின் முகங்களில் காறித் துப்புவது போல் பதிலடி கொடுத்துள்ளது..

ஆமாம்,

#கணியாசேரி#மகாவிஷ்ணு கோவிலின் காணிக்கை #உண்டியல் வசூலை, அப்படியே முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார் கோவில்#மேல்சாந்தி...

#பெரும்பிலாவு#பருவக்குந்நு, பள்ளிவாசல் உண்டியல் வசூல் அனைத்தையும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியது, ஜமாஅத் நிர்வாகம்.

#மஞ்ஞப்றா#ஃபெரோனா, கிறிஸ்தவ ஆலயம், #ஸ்தோத்திர #காழ்ச்ச இரண்டுநாள் வசூலை முதலமைச்சர் நிவாரணநிதிக்கு வழங்கியுள்ளது...

சங்கப் பரிவாரின் முகத்தில் காறி உமிழ்ந்துள்ளது கேரள சமூகம்.