Showing posts with label திரை இசை. Show all posts
Showing posts with label திரை இசை. Show all posts

Wednesday, July 20, 2022

உனக்கென்ன குறைச்சல் . . .


 

இன்று காலை தோழர் ச.சுப்பாராவ் எழுதியிருந்த எம்.எஸ்.வி பற்றிய பதிவை பகிர்ந்து கொண்டிருந்தேன். 

அப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த பாடல்களான "உனக்கென்ன குறைச்சல்?" பாடலும் "மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்" பாடலும் இன்று நாள் முழுதும் மனதின் ஒரு ஓரத்தில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

மனதில் ஒலித்த பாடலை வீட்டிற்கு வந்ததும் கேட்டேன். அதனை உங்களோடும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

இதிலே ஒரு விஷயத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

"உனக்கென்ன குறைச்சல்" பாடல் இடம் பெற்ற வெள்ளி விழா திரைப்படத்திற்கு இசையமைத்தவர் வி.குமார். மெல்லிசை மன்னர் திரை வாழ்வில் உச்சத்தில் இருந்த நேரம் அது. ஆனாலும் அவர் இன்னொருவர் இசையில் பாடினார் என்பது சிறப்பான செய்கை அல்லவா!







Saturday, October 30, 2021

கவிதை கேளுங்கள். என்ன குரல் 👍👍👍👍

 



நேற்று மாலை அலுவலகத்திலிருந்து  வீடு திரும்புகையில் ஒரு டீக்கடையில் ஒலித்த பாடல் சில நொடிகள் காதில் விழுந்து வீட்டிற்கு வந்ததும் முழுமையாக கேட்க வைத்தது.


நான் பெற்ற இன்பம் நீங்களும் பெறுங்கள்.

 


யப்பா! வாணி ஜெயராமின் குரல், அது என்ன குரல்!

சூப்பர் குரல்

Wednesday, July 21, 2021

கண்ணம்மா, கனவில்லையா?

 


சில நாட்களுக்கு முன்பாக சேனல்களை மாற்றுகையில் விஜய் டிவி சூப்ப்ர் நிகழ்ச்சியில் ஒரு பாடலை முதல் முறையாகக் கேட்டேன். எஸ்.பி.பி பாடிய அந்தப் பாடலை அதற்கு பிறகு ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கேட்டிருப்பேன். ஒரு முக்கியமான தமிழாக்கப்பணியை செய்து கொண்டிருந்த போது எஸ்.பி.பி யின் குரலும் மெல்லிசை மன்னரின் இசையும் காதுகளைத் தாண்டி உள்ளத்தையும் வருடிக் கொண்டிருந்தது. பணியின் கடுமை தந்த சோர்வையும் போக்கியது.



விஸ்வதுளசி என்ற இப்படத்தின் பாடல்களை மெல்லிசை மன்னர் உருவாக்க பின்னணி இசையோ இளையராஜாவின் கை வண்ணத்தில் என்பதை கூகிளார் சொல்ல, டைட்டில் இசையை யூட்யூபார் அளித்தார். அதுவும் உங்கள் நெஞ்சை வருடிச் செல்லும்.



 

Tuesday, January 19, 2021

கணீர் குரல் நாயகர்

 


இன்று சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பிறந்த நாள் என்று சில நிமிடங்கள் முன்பாக முக நூல் வாயிலாக அறிந்து கொண்டேன்.

ஒரு மாதத்திற்கு முன்பாகத்தான் ஒரு தோழர் சீர்காழியின் குரலைப் போய் ஒரு சங்கி கர்ண கொடூரமான குரல் என்று சொன்னதாக கோபப்பட்டிருந்தார். 

அப்போதே அவரது சில முக்கியமான பாடல்களை தரவிறக்கி பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்போது முடியவில்லை. 

அந்த பாடல்களை இன்று பகிர்ந்து கொள்கிறேன்.

அவரது குரல் பிரத்யேகமான கணீர் குரல். அக்குரலை ஒருவர் குறை கூறுகிறார் என்றால் அவரது செவியிலும் மூளையிலும் ஏதோ சிக்கல் என்றுதான் அர்த்தம்.













Thursday, November 19, 2020

யூட்யூப் உபயத்தில்

 

நான் பெற்ற இன்பம் நீங்களும் பெறவே இப்பதிவு

 


 இன்று மறைந்த பாடகர் திரு திருச்சி லோக நாதன் அவர்களின் நினைவு நாள் என்பதை முக நூல் வாயிலாக அறிந்து அவரது மிகச் சிறந்த பாடல்களை கேட்கும் ஆவலில்  யூட்யூப்பை நாடினேன், மகிழ்ந்தேன். நான் பெற்ற மகிழ்ச்சியை உங்களுக்கும் கடத்த சில பாடல்களை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 

வாராய் நீ வாராய்

 


ஆசையே அலை போலே

 


கல்யாண சமையல் சாதம்

 


என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

 


வீணைக் கொடியுடைய வேந்தனே

 


(இப்பாடலில் முதல் பகுதியை பாடியவர் திருச்சி லோகநாதன். இரண்டாம் பகுதியை பாடியவர் சிதம்பரம் எஸ்.ஜெயராமன். கலைஞரின் மைத்துனர்)

 

மழை கொடுக்கும் கொடையும்

 


(இப்பாடலின் முதல் பகுதியை பாடியவர்சீர்காழி கோவிந்தராஜன்)

போனஸாக அவரது இரண்டு மகன்கள் டி.எல்.மகராஜன் மற்றும் தீபன் சக்ரவர்த்தி பாடிய பாடல்கள், சாம்பிளுக்கு ஒவ்வொன்று.

 

டி.எல்.மகராஜன், ரதிதேவி சன்னிதியில்

 


தீபன் சக்ரவர்த்தி – செவ்வந்தி பூக்களில் செய்த வீடு

 


(“பூங்கதவே தாழ் திறவாய்” பாடலை எதிர்பார்த்திருந்தால் “சாரி”


பிகு: இரண்டு நாட்களுக்கு முன்பே எழுதியதுதான். தவிர்க்க இயலா சூழலில் பதிவு செய்ய முடியவில்லை.

 

 

Friday, September 30, 2016

பூங்காற்று திரும்புமா - ரசிகன்யா!!!




இளங்கோ என்ற முக நூல் நண்பர், எல்.ஐ.சி நிறுவனத்தில் வளர்ச்சி அதிகாரியாகவும் பணியாற்றுபவர், முதல் மரியாதை படத்தின் "பூங்காற்று திரும்புமா" பாடலை நுணுக்கமாக ஆராய்ந்து அனுபவித்து எழுதியுள்ளார். அதை படிக்கிற போதே பாடலை கேட்ட உணர்வு உருவானது. 

அவர் எழுதியதை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தோடு அப்பாடலின் இணைப்பையும் அளித்துள்ளேன். படித்து விட்டு பாடலையும் பார்க்கவும். 

நல்லதொரு அனுபவத்தை அளித்த நண்பர் இளங்கோவிற்கு நன்றி

 
படம்: முதல் மரியாதை
பாடல்: பூங்காத்து திரும்புமா என் பாட்டை...
எழுதியவர்: வைரமுத்து
பாடிய்வர்: மலேசியா வாசுதேவன், ஜானகி
இசை: இசை ஞானி


தன் மனைவியின் கெட்ட குணங்களாலும் நடத்தை சரியின்மையாலும் உள்ளுக்குள் புழுங்கி மன அழுத்தத்தில் இருக்கும் ஒரு மனிதரின் உணர்வுகளை மயிலறகினிலே வருடுவது போல் தேற்றிட, ஆன்மாவின் இசையை நமக்கு வழங்கிட ஞானியைத் தவிர நமக்கு வேறு யாருமில்லை.

இப்பாடலின் சூழலுக்கு முன் தன்னுடைய மனைவி(வடிவுக்கரசி) பேசிய தகாத வார்த்தைகளால் மனம் வெறுத்துப் போய் இருக்கும் கணவன்(நடிகர் திலகம் சிவாஜி கணேசன்) தன் மன ஆறுதலுக்குப் பாடும் பாடலில் தாய்மை பரிவுக்கும் அன்புக்கும் ஏங்குவதை வார்த்தைகளினால் விவரிக்க முடியாத வலியை இயல்பான நடிப்பில் வெளிப்படுத்தி நம்மை சோகத்தினிலே மூழ்கச் செய்து விடுவார்.
நடிகர் திலகத்தை வெகு இயல்பான கிராமத்து மனிதர் போல் நம்மிடையே உலவச் செய்த இயக்குநர் இமயம் பாரதி ராஜாவை எப்படிப் பாராட்டுவது??

சிவாஜி அவர்கள் நடித்த அழியாக் காவியப் படைப்புகளால் நம்மிடையே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த அற்புத மாபெரும் கலைஞன். உடல் மொழியை பேச வைப்பதில் அவருக்கு நிகர் அவரே.

இப்பாடலில் சாய்த்து கிடக்கும் மரத்தின் மீது சிவாஜி ஆரம்பக் காட்சியில் அமர்ந்து இருப்பார். பாரதி ராஜாவின் இயக்கத்தின் திறமையில் வெட்டி வீழ்த்தபட்ட மரம் வெறுத்துப் போன மனதிற்கு சமம் என்பது போல் காட்சி அமைத்திருக்கும். 

மலேசியா வாசுதேவன் குரல் சிவாஜிக்கு
கனக் கச்சிமாக பொருந்தியிருப்பது இப் பாடலின் சிறப்பு. ஜானகியின் வெள்ளந்தி குரல் ராதா பாடுவது போலவே தெரியும். 


ஆரம்பத்தில் சிவாஜி தலை குனிந்தே
"பூங்காற்று திரும்புமா?
எம்பாட்டை விரும்புமா?"

பாடி பின் மரக் கிளையை மேலேக் கண்டு
தபேலா இசையுடன்

"பாராட்ட மடியில் வச்சுத் தாலாட்ட"
பாடி பிறகு ஆட்டுக் குட்டிகள் பாசம் கண்டு
"எனக்கொரு தாய் மடி கிடைக்குமா?"
என கண்களில் ஏக்கமும் மெல்லியப் புன்னகையுமாய் வாழ்ந்திருப்பார்.

பின் ராதா ஆற்றஙகரையோரம் ஆறுதல் தரும் ஜானகி குரலில்
"ராசாவே வருத்தமா?"
எனும் போது சிவாஜி அண்ணாந்து பார்க்க குயிலின் ஒசையை அற்புதமாக புல்லாங் குழலில் வடிவமைத்திருப்பார் ஞானியார். பின் மேகங்கள் விலகும் போது பியானோ இசையுடன் மன ஆறுதலுடன் ராதா பாடும்
"ஆகாயம் சுருங்குமா?
ஏங்காதே! அதை ஓலகம் தாங்காதே!
அடுக்குமா? சூரியன் கருக்குமா?"


உலகம் என்பதை ஒலகம் என கிராமத்து பெண் வெள்ளந்தித் தனமாக பாடுவது போல் அழகுற ஜானகி பாடியிருப்பார். அடுத்து வரும் நாதஸ்வர இசையானது சோகத்தினை ஆழமாக்கச் செய்து பின் பியானோவும், புல்லாங் குழலும் ஆறுதல் செய்து விடும்.

பிறகு சிவாஜி அவர்கள் பாடும்
"என்ன சொல்லுவேன்! என்னுள்ளம்
தாங்கலே! மெத்தை வாங்குனேன்!
தூக்கத்தை வாங்கலை!"


என்று எதிர் பாடுவது யார் என்று கூடத் தெரியாமல் தன் சோகத்தினை முக பாவனைகளால் வெளிப்படுத்தி அழகுற நடித்திருப்பார்ர். பின்னர் ராதா ஆற்றங் கரையோரம் அமர்ந்து சிவாஜி மனதுக்கு ஆறுதல் பதிலைப் போல் கன்னத்தில் கை வைத்து

இந்த வேதனை யாருக்குத் தான் இல்லை
உன்னை மீறவே ஊருக்குள் ஆள் இல்லை

என பாட பிறகு சிவாஜி அவர்கள்
"ஏதோ என் பாட்டுக்குப் பாடி
சொல்லாத சோகத்தை சொன்னேனடி"

கடைசியில் சொன்னேன(டி) அந்த ஒரு சொல்லினை ம.வாசுதேவன் அழகாக இழுத்துப் பாடியிருப்பார் பாருங்கள் ஆஹா!

பின் ராதா பாடும்
"சொக ராகம் சோகம் தானே"
ஜானகி சுக ராகம் என்பதை ஏதோ வட்டார வழக்கு பாஷை போல் சொக ராகம் என பாடியிருப்பார். அடுத்து சோகம் தானே... முடியாமல் ஜானகி இழுக்கும் வேளை குயிலின் ஓசையை புல்லாங்குழலில் வழங்கி நம்மைத் தேற்றியிருப்பார்.

பின் சிவாஜி அவர்கள் பாடும்
"யாரது போறது?"
என்றவுடன் ராதா பாடும்
"குயில் பாடலாம்
தன் முகம் காட்டுமா?"


என பாடி பரிசலில் சென்றவுடன் பின் வரும் சரணம் முன்பு புல்லாங் குழலில் தபேலாவுடன் மனதை வருடியிருப்பார். அடுத்து எதிர்ப் பாட்டு பாடும் பெண்ணை காணும் ஆவலில் வேகமாக நடந்து மரத்தின் மீது கை வைத்து

"உள்ள அழுகிறேன்! வெளிய
சிரிக்கிறேன்! நல்ல வேஷந்தான்!
வெளுத்து வாங்குறேன்!"

எனப் பாட ராதா பதிலுக்கு
"உங்க வேஷந்தான்
கொஞ்சம் மாறனும்
இந்தச் சாமிக்கு
மகுடம் ஏறனும்"


பின் சிவாஜி அவர்கள் அந்தப் பெண்ணை காணும் ஆவல் அதிகமாகிட அவர் பாடும்
"மானே என் நெஞ்சுக்குப்
பால் வார்த்த தேனே!
பொன்னே! என் பார்வைக்கு
வா! வா! பெண்ணே!


என ஏக்கத்தில் கரைந்து மரத்தின் ஓரத்திவ் பாடிட ராதா ஜானகி குரலில்
"எசப் பாட்டு படிச்சேன் நானே"
என பரிசல் ஓட்டிக் கொண்டே குயிலின் ஒசையில் புல்லாங்குழல் இசையுடன் பாட

பின் சிவாஜி அவர்கள்
"பூங்குயில் யாரது?"
என பாடி மரத்தினைத் தாண்டி எட்டிப் பார்க்க
ராதா பாடும்
"கொஞ்சம் பாருங்க"
பெண் குயில் நானுங்க"


பாடி பரிசலை குனிந்து ஒரு சிறிய் கட்டையில் கட்டி கைகளால் தலைமுடி கோதி நிமிரும் போது பிண்ணணி இசை இன்றி குயில்களின் ஓசையுடன் சிவாஜி அவர்கள் தோளில் உள்ள துண்டை எடுத்து வேட்டியை சற்று தூக்கி நடந்து வந்து ராதா எதிரில்

"நீதானா அந்தக் குயில்?"(குக்குக்.... கூ..)
யார் வீட்டு சொந்தக்குயில்?"(குக்குக்....கூ)

(குககுக்....கூ) குயிலின் ஓசையை புல்லாங் குழலில் இசைஞானி நன்றாக வழங்கியிருப்பார்.

பிறகு சிவாஜி அவர்கள் மெல்லிய புன்னகைக்யுடன் புருவம் உயர்த்தி ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள்! ஆஹா எந்த வயதிலும் அசத்தும் இப்பபடி ஒரு மகா கலைஞனை இனி நாம் காண முடியுமா? வாய்ப்பே இல்லை. பிறகு 

"ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே உலகமே மறந்ததே"


என பாடி சிவாஜி அவர்கள் ராதாவை கண்களால் மேலும் கீழும் அசைத்து புன்னகை செய்வார் பாருங்கள் கொள்ளை அழகு! பின் ராதா மெல்லிய நடையுடன் வெட்கய் யார்வையுடன் மெல்லிய சிரிப்புடன் தலையாட்டி 

"நான் தானே அந்தக் குயில்(குக்குகக் கூ)
தானாக வந்தக் குயில்(குக்குக் கூ)
ஆத்தாடி மனசுக்குள காத்தாடி
பறந்ததா? ஒலகமே மறந்ததா?


என பாடி முடிக்கும் தருணம் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்கள் கையில் உள்ள துண்டினை தன் தோளில் போடும் சமயம் இசை ஞானி, இயக்குநர் இமயம், கவிப் பேரரசு ஆகிய அனைவருக்கும் அவர் பொன்னாடை போர்த்தியது போல் எனக்கு தோன்றியது

வெகு இயல்பாக சிவாஜியின் நடிப்பும், உறுத்தாத ஒப்பனையும் இருக்கும்.திரைக் கதையில் இவர்கள் உறவில் சிறிதளவும் காமம் கலக்காமல் இயக்கிய பாரதிராஜா போற்றுதலுக்குரியவர். ஏனெனில் சிறிய் இச்சையும் கள்ளக் காதலாக மாறிட வாய்ப்புண்டு. அதை நேர்த்தியாக கையாண்ட விதம் அருமை. ராஜாவுக்கு இப்படம் தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை என்றாலும் தனது உயிரை உருக்கி உன்னத இசையை வழங்கியுள்ளார்.

இப்பாடல் விமர்சனம் மறைந்த நடிகர் திலகம் சிவாஜிக்கும், பாடகர் மலேசியா வாசு தேவன் அவர்களது ஆன்மாவுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன். ...மிகவும் பொறுமைமாக இந்தப் பதிவினைப் படித்த என் நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!!! எனக்குத் தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் நண்பர்கள் அனைவரையும் தலை வணங்குகிறேன்!!! வாழ்க வளமுடன்!!! இசைஞானியின் இசை அருளால் அனைவரது ஆயுளும் நீடிக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன்!!!! நன்றி!! வணக்கம்!!!!

இங்கே பாடலைப் பாருங்கள் 

 

Friday, June 24, 2016

புதிதாய் என்ன சொல்ல?




கவியரசு கண்ணதாசனுக்கும்  மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விக்கும் இன்று பிறந்த நாள்.

கடந்த வருடம் பதிவு செய்த அவர்கள் நிரந்தரமானவர்கள். எந்த நிலையிலும் மரணம் அவர்களுக்கில்லை   என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல?

தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்தவர்கள் அல்லவா அவர்கள்!

சரி சரி இந்த வருடத்திற்கு இரண்டு பாடல்களையாவது மீண்டும் பார்க்காவிட்டால் எப்படி?

கவியரசரின் வரிகள் மெல்லிசை மன்னரின் குரலில் வரும் அதிரடிப் பாடல்

மெல்லிசை மன்னரின் இசையில் கவியரசர் தன் பாடலை தானே தோன்றி பாடுவதாக  அமைந்த பாடல்.

எத்தனை ஆண்டுகளானாலும் அவர்கள் நம்மோடுதான் இருப்பார்கள். 

 

Thursday, June 4, 2015

எஸ்.பி.பி பிறந்தநாளை முன்னிட்டு




இன்று பிறந்தநாள் கொண்டாடும் இன்னிசைக் குரலோன் எஸ்.பி.பி க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு 

அவரது ஆரம்பக் காலப் பாடல்கள் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.

மாதமோ ஆவணி 

வான் நிலா நிலா அல்ல 

பாடும் போது நான் தென்றல் காற்று 

பொட்டு வைத்த முகமோ 

அவள் ஒரு நவரச நாடகம் 

அன்பு மேகமே 

நந்தா என் நிலா 

விழியிலே மலர்ந்தது 

பூ போலே உன் புன்னகையில் 

இறுதியாக எஸ்.பி.பி நடித்த ஒரு தெலுங்குப் படத்தின் பாடல் இது. ருசியான உணவை நேசிப்பவர்களுக்கு இப்பாடல் நிச்சயம் பிடிக்கும்

Monday, December 22, 2014

கமல் 60 - கடைசி பதிவு




கமலஹாசனின் அறுபது சிறந்த பாடல்களை பதிவு செய்யலாம் என்று சென்ற மாதம் தொடங்கினேன். ஆனால் நிறைவுப் பகுதியை எழுதும் முன்னர் வேறு பல வேலைகள் வந்து விட்டதால் முடியவில்லை. இன்றுதான் அதற்கான நேரம் கிடைத்தது.

அதற்கு முன்பாக ஒரு ப்ளாஷ் பேக் போய் வந்து விடலாமா?

முதல் பத்து பாடல்கள் கறுப்பு வெள்ளை காலத்து பாடல்கள்.

அடுத்த பத்து பாடல்கள் மைக் கமல் பாடல்கள் 


நான்காவது பதிவு கமலஹாசனின் காதல் பாடல்கள் 

ஐந்தாவது பதிவும் கூட கமலின் காதல் பாடல்கள்தான் 

சரி நிறைவுப் பகுதிக்குச் செல்வோம்.

இதில் கொஞ்சம் சோகம், தத்துவம் என இருக்கும்.

சொந்த சோகத்தை மறைத்துக் கொண்டு ரசிகர்களுக்கான ஒரு கலைஞன் பாடும் பாட்டு 

எப்போது கேட்டாலும் மனதைக் கவ்வும் ஒரு தந்தையின் சோகம் 

இன்றைக்கு மிகவும் அவசியமான ஒரு பாட்டு. மோடி கேட்கட்டும் 

ஆட்சியாளர்களுக்கு மதம் பிடித்தால்  பக்தனுக்கு கடலில் கல்லறை.

மறைந்து கொண்டிருக்கும் மனிதத்தை  நினைவு கொள்வோம்.

அனேகமாக பெரும்பாலானவர்கள் இப்படி பாதி பாதியாகத் தான் இருக்கிறோம் 

டாஸ்மாக்கில் வசூலித்து விலையில்லா திட்டங்கள்   கொடுப்பதற்கு இதுதான் அர்த்தமோ?

பாடுபட்டு உழைப்பவர்களின் உண்மையான நிலையை சொல்லும் பாடல் இது.

எத்தனை முறை கேட்டாலும் மனதை பாதிக்க வைக்கும் பாடல் இது  என்பதை நீங்களும் கண்டிப்பாக ஒப்புக் கொள்வீர்கள்.

சென்ற பாடல் போலவே இதுவும் உள்ளத்தை உருக்கும் பாடல்தான்..  ஆனால் இப்பாடலில் கமலை விட ஒரு எள்ளல் சிரிப்பால் நாசர் அசத்தி விடுவார்.

ஆக மொத்தம் அறுபது பாடல்களை என்னுடைய ரசனையின் அடிப்படையில் தேர்வு  செய்திருக்கிறேன். உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

நல்ல பாடல்களை போடலாமே என்று எனக்கு ஆலோசனை சொன்னது யார் என்பதை கடைசி பதிவில் சொல்கிறேன் என்று சொல்லியிருந்தேன்.

அந்த ஆலோசனையை அளித்தவர்




என் மனைவிதான்.

மனைவி சொல்லை மதிக்க வேண்டுமல்லவா!

கமல் அறுபது பதிவு என்றுமே நினைத்தாலே இனிக்கும் என்ற நம்பிக்கையோடு விடை பெறுகிறேன்.

 


Sunday, November 23, 2014

வாழ வைக்கும் காதலுக்கு ஜே

கமல் காதல் பாடல்கள் இறுதி பகுதி

 http://mimg.sulekha.com/tamil/virumandi/stills/viru_1.jpg

ராஜாவும் கமலும் கை கோர்த்துக் கொண்டால் காதலுக்கு ஒரு ஜே 

கடிதத்தை பாட்டாவே படிச்சுட்டாங்க 

நல்லா எழுதறாங்க கதை 

நெஞ்சில் நீங்காத ஜில் ஜில் தில்லானா

தமிழ்ப்படத்தில் ஒரு மலையாளப் பாட்டு 

பார்த்த முதல் நாளிலியே  இதெல்லாம் சாத்தியமா?

ராஜாவின் பார்வைக்கு ஒரு நன்றி

இவரது ஓவியத்தில் உள்ள  மலரும் வாசம் தருமாம்.

ஏன் தவிக்கிறார்கள்  இவர்கள்?

ஈடு இணையற்ற இந்த பாடலை விட உலகத்தில் உசந்தது எதுவுமில்லை.

நாளை பத்து வித்தியாசமான பாடல்களோடு சந்திப்போம்.

 

Saturday, November 22, 2014

கமல் காதல் பாடல்கள் - பகுதி 1

கமல் அறுபது பாடல்கள் பதிவின் தொடர்ச்சி.
 


காதல் இளவரசன் என்று பட்டம் சூட்டப்பட்ட கமலஹாசனின் காதல் பாடல்கள் இல்லாமல் எப்படி இந்த பதிவு முழுமை பெறும்? பத்து பாடல்களோடும் கட்டுப்படுத்துவது சிரமம். அதனால் இரண்டு பதிவுகள்.

இன்று முதல் பகுதி.



ஜெர்மனியின் செந்தேன் மலரும் மனதிற்கு நறுமணம் சேர்க்குமே!

விழியில் கூட  பூ பூக்குமா என்ன?

பாரதியின் கண்ணம்மாவை படித்திருப்பீர்கள், இப்போது பாருங்கள்.

மற்ற நேரத்து மழையை விட அந்தி மழை அற்புதமாகவே இருக்கும்.


 

Wednesday, November 19, 2014

கமல் ஸ்ரீதேவி காலமிது



தமிழ்த் திரையுலகில் சில இணைகள் மட்டுமே மிகவும் பொருத்தமாகவும் இயல்பாக இருந்திருக்கிறது. சிவாஜி பத்மினி, ஜெமினி சாவித்ரி  போன்ற அந்த வரிசையில் மிகவும் இய்ல்பாக இருந்தது கமல் ஸ்ரீதேவி இணை. இதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன்.

அந்த இணை நடித்த பத்து பாடல்கள் இன்று.

கறுப்பு வெள்ளைக் காலத்திலேயே தொடங்கியது இந்த இணை. கவியரசரின் அருமையான அந்தாதிப் பாடலை மெல்லிசை மன்னரின் இசையில் பாருங்கள்.

இதுவா,அதுவா எது என்று யோசித்து ஆட்டுக்குட்டியை சுதந்திரமாக மேயவிட்டு ராஜாவின் துள்ளல் இசையில் தாளம் போட வைக்கும்  இந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்தேன்.


கவியரசரும் மெல்லிசை மன்னரும் இப்படித்தான் இப்பாடலை உருவாக்கியிருப்பார்களோ?  

நான் சொல்லாவிட்டாலும் பாட்டைக்   படத்தின் பெயர் உங்களுக்கே தெரிந்து விடும்.

வானிலிருந்து மண்ணிற்கு இறங்கி வந்து   பாடுகிறார்கள், ஆடுகிறார்கள்.

பாடலைக் கேட்கையில் என் நினைவும் எங்கோ பறந்து விடுகிறது.

மண்டபத்தில் யாரோ எழுதிய  பாடலோடு வந்தால் இப்படித்தான் மறந்து போய்க் கொண்டே இருக்கும்.

நடிகனிடமே நாடகம்   நடத்துவதா? யார் கிட்ட?

மீண்டும் ஒரு குழப்பம், இதுவா, அதுவா என்று. முன்பொரு பதிவில் கவியரசரின் அந்த கடைசிப் பாடலை பகிர்ந்து கொண்டதால் இப்போது இன்னொரு இனிய புத்துணர்வு அளிக்கும் பாட்டு

இந்தப் படத்திற்குப் பிறகு கமலும் ஸ்ரீதேவியும் ஏன் இணைந்து நடிக்கவில்லை?

 

 

Tuesday, November 18, 2014

மைக டைசன் இல்லையில்லை மைக் கமலஹாசன்

கமலஹாசன் ஒரு பேட்டியில் சொன்னார்.

"நல்ல வேளையாக மோகன் வந்தார். என் கையிலிருந்த மைக்கை அவரிடம் கொடுத்து விட்டு  நான் தப்பித்து விட்டேன்"

 
 http://moviegalleri.net/wp-content/gallery/ninaithale-inikkum-movie-stills/rajini_kamal_ninaithale_inikkum_movie_stills_1ef578b.jpg

ஆரம்ப காலம் தொட்டே அவரது படங்களில் மேடையிலோ இல்லை விடுதியிலோ நடனமாடும் பாடல் ஒன்று கண்டிப்பாக இருக்கும். அப்படி அவர் மைக் பிடித்துப் பாடிய அல்லது ஆடிய மேடைப் பாடல்கள் அல்லது விடுதிப்பாடல்களைப் பார்ப்போம். நேற்றைய கறுப்பு வெள்ளை பதிவிலேயே மூன்று மைக் பாடல்கள் இருந்தது என்பது கவனத்திற்குரியது.

 ஆனந்தம் அது என்னது என்று  பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேச பக்தியைச் சொன்ன  நாம் பிறந்த மண்ணா இது?

எங்கேயும் எப்போதும் இப்பாட்டைக்     கேட்டால் தாளம் போடுவது நிச்சயம்.

வெண்ணிலா வேளையில் பார்த்தால்    இப்படித்தான் உற்சாகம் வரும்.

வார்த்தை தவறியவரைப் பார்த்தால்    கோபம் வரும். ஆட்டமும் வருமா?

ஆப்பிரிக்காவிலிருந்து வந்து ஒருவர்   இங்கே ஆடுகிறார்.

ஒரு நட்பின் கதை இப்படியா   சோகத்துடன் ஒலிக்க வேண்டும்?

என்னால் மழையில் நனைய மட்டும்தான்  முடியும். இவரால்தான் ஆட முடியும்.

மோகனிடம் மைக்கை ஒப்படைத்த பின்பும் இவரை மைக் விடவில்லை.

ஆனால் இங்கே கோபத்தோடு தந்தையிடம் பாட்டாலே  சண்டையிடுகிறார்.

இது சமீபத்திய ஆரவாரம்.

நாளை மீண்டும் சந்திப்போம்.


Sunday, June 22, 2014

சர்ச்சைக்கு வாய்ப்பில்லாத டாப் டென் பாடல்கள் பட்டியல்

நேற்று உலக இசை தினம் என்று நேற்றைய தீக்கதிரை இன்று
படித்து அறிந்து கொண்டேன்.  எனக்கு பிடித்த பாடகர்களின்
சிறந்த பாடல் என்று நான் ஒரு பட்டியல் தயாரித்துள்ளேன்.

எனக்கு பிடித்த பாடல்கள்தான். ஆகவே இதிலே நம்பிக்கை
அளிக்கும் நட்சத்திரங்கள், இளம், கிழம் என்றெல்லாம் எந்த
ஒரு சர்ச்சைக்கும் இடமில்லை.

ஐந்து ஆண் பாடகர்கள், ஐந்து பெண் பாடகர்கள் - இதிலே 
எனக்கு பிடித்த ஒரு பாடல். ஆனால் இந்த பட்டியல் தயாரிப்பதே
சிரமமாகி விட்டது. 

சரி இப்போது பட்டியலுக்குள் செல்வோம்.



இசை அரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் காற்றினிலே வரும் கீதம்
இன்னும் காற்றில் தவழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

பி.சுசீலா அவர்கள் நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா 
என்று சொன்னாலும் கேட்க மறுத்து பாடலை முழுதாகக் 
கேட்பேன் என அடம் பிடிக்கிறது நிலா.

என் மன்னன் எங்கே என்று எஸ்.ஜானகி கேட்ட கேள்விக்கு
செந்தூரப் பூ பதில் சொல்லவே இல்லை.

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல் என்று தொடங்கி
தத்துவங்களை இசையாய் பொழிகிறார் வாணி ஜெயராம்.

பாடறியேன், படிப்பறியேன் என்று அப்பாவியாய் பாடத்
துவங்கும் சித்ரா, தன்னுடைய இசையறிவை நிரூபிக்கிறார்.

இனி ஆண்கள் பக்கம் வருவோம்.

பால முரளி கிருஷ்ணாவின் குரலைக் கேட்டு மகிழ்ந்திட
நமக்கு ஒரு நாள் போதுமா? 

பி.பி.ஸ்ரீனிவாஸ் போல நாமும்  நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
என்று பாடினால் வந்த கோபமும் மறைந்திடுமல்லவா?

யார் அந்த நிலவு என்று டி.எம்.சௌந்தரராஜன் தேடுகிறாரே,
கொஞ்சம் உதவி செய்யுங்களேன்.

அவரோகணம் இன்றி கே.ஜே.யேசுதாஸ்  கலைவாணியே உனைத்தானே   
என்று அழைத்த போது உள்ளம் உருகி உள்ளேன் ஐயா என்று
வந்தவர்கள் எத்தனை பேர்.

இளைய நிலா பொழிகிறது என்று எஸ்.பி.பாலசுப்ரமணியன் 
பாடுகையில் இசையல்லவா பொழிகிறது!

என்னங்க, இந்த டாப் டென் பட்டியல் சரியா?

Saturday, June 21, 2014

மீண்டு, மீண்டும் வந்த "என்னடி மீனாட்சி"

நேற்றைய பதிவின் தொடர்ச்சி இது.

என்னைப் போன்ற வயதானவர்களுக்கு நிச்சயம் நினைவில்
இருக்கும் என்று நம்புகிறேன்.

எழுபதுகளின் இறுதியில் ரேடியோ சிலோனில் இசைச்செல்வம்
என்று ஒரு நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மதியம்
மூன்று மணி முதல் நான்கு மணி வரை நடைபெறும். கே.எஸ்.ராஜாவா,
இல்லை அப்துல் ஹமீதா , யார் தொகுத்து வழங்கினார் என்பது
நினைவில் இல்லை.

இன்றைய டாப் டென் பாடல்கள் நிகழ்ச்சிகளுக்கு முன்னோடி
அந்த நிகழ்ச்சி.

ஒவ்வொரு வாரமும் பதினொன்று  பாடல்களை ஒலிபரப்புவார்கள்.
போன வார பாட்டு பத்து, புதிய அறிமுகம் ஒன்று.  நேயர்கள் அனுப்பும்
தபால் அட்டையின் அடிப்படையில் தர வரிசை போட்டு ஒலி பரப்புவார்கள்.

இந்நிகழ்ச்சியில் வெகு காலம் முதலிடத்தில் இருந்த பாடல்தான்
என்னடி மீனாட்சி. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக புதிய பாடல்கள் 
வர, அதன் தர வரிசை குறைந்து கொண்டே போய் பத்தாவது இடத்திற்கு
வந்து சேர்ந்தது.

அடுத்த வாரம் வெளியேறிவிடும் என்ற நிலையில் திருச்சியிலிருந்து
ஒரு ரசிகர் 2000 க்கு மேற்பட்ட தபாலட்டைகளை அனுப்ப என்னடி
மீனாட்சி மீண்டும் முதலிடத்திற்கே வந்து விட்டது. அதன் பின்பு
மூன்று மாதங்களுக்கு மேல் அந்த இடத்திலே இருந்தது என்பது
வரலாறு

Friday, June 20, 2014

இந்த பாட்டுதான் சூப்பர், ஆனால் ஹிட்டானதோ?

 http://tamil.oneindia.in/img/2012/10/05-ilayaraja6-300.jpg

ஒரு படத்தின் எல்லா பாட்டுக்களும் ஹிட்டாவது என்பது தமிழ்
திரையுலகில் இளையராஜாவால்தான் அதிகமான முறை
சாத்தியமாகியுள்ளது.

சில சமயங்களில் மிகவும் சூப்பரான பாட்டு என்று நாம் நினைக்கிற
பாடலை விட வேறு ஒரு பாட்டு சூப்பர் ஹிட்டாகி விடும். அதற்காக
அந்த பாட்டு சுமார் என்று அர்த்தமில்லை.அதுவும் நல்ல பாட்டுதான்.

அப்படி சில பாடல்களை பார்ப்போமா?

பொண்ணு ஊருக்குப் புதுசு படத்தில் எனக்கு இந்த  பாட்டுதான்
ரொம்ப பிடிக்கும். ஆனால் சூப்பர் ஹிட்டானது ஓரம் போ பாடல்.

சொல்லத் துடிக்குது மனசு என்ற மொக்கைப் படத்தில் எல்லா
பாடல்களும் அருமை. இந்த பாடலில் இளையராஜாவயலினில் 
அப்படியே இழைத்திருப்பார். பெரிய ஹிட்டானது பூவே செம்பூவே.

தளபதியில் ராக்கம்மா கையை தட்டு பட்டிதொட்டியெங்கும்
பயங்கர ஹிட். ஆனால் ராஜாவின் மேதமையோ இந்த பாடலில் 
இன்னும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கும்.

இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் இனிமை கொஞ்சும்பாடல்
இதுதான் இப்பாடலை விட தண்ணி கருத்துருச்சு வும் என்னடி
மீனாட்சியும் இன்னும் அதிகமாக ஒலித்தது.

இதிலே என்னடி மீனாட்சி பற்றி ஒரு சுவார்ஸ்யமான தகவல்
ஒன்று உண்டு. என்னைப் போன்ற வயதானவர்களுக்கு 
நினைவில் இருக்கலாம். அதை நாளை பார்ப்போம்.
 

Thursday, June 19, 2014

பெண்களின் விடுதலை வேட்கையை விவரிக்கும் சில திரைப்படப் பாடல்கள்



என்னுடைய மெமரி கார்டில் இந்த பாடல்கள் எல்லாம் வரிசையாக ஒலிப்பது போல வைத்துள்ளேன். இவை எல்லாவற்றுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.

சவாலே சமாளி படத்தில் ஜெயா  பாடும் பாடல் சிட்டுக்குருவிக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் எதற்கு தேவையற்ற கட்டுப்பாடு என்று கேட்கும்.

காற்றுக்கு இல்லாத  வேலி பெண்களுக்கு எதற்கு என்று இங்கே சுஜாதா https://www.youtube.com/watch?v=RSICeyfMSO0 கேள்வி கேட்பார்..

பெண்களுக்கானது இந்த உலகம் என்று ராஜாவின் இசையில் பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவில் https://www.youtube.com/watch?v=cmQZ9GMt71M மிகவும் அழகானது என்று ஷோபா சொல்லிடுவார்.

காதல்வயப்பட்ட பெண்ணின் ஆனந்த ராகம் எப்படி இருக்கும் என்பதை இளையராஜா வயலினும் புல்லாங்குழலும் கொஞ்ச கொஞ்ச உற்சாகமாய் சாந்தி கிருஷ்ணா https://www.youtube.com/watch?v=_j3goSKLjaw வலம் வந்து சொல்வார்.

மழையில் நனைந்து தங்களின் உரிமையை நிலைநாட்டும்https://www.youtube.com/watch?v=1hC7mpoBxdo ரேவதி இங்கே.

கூண்டிலிருந்து வெளியேறும் பறவையின் மகிழ்ச்சியை https://www.youtube.com/watch?v=NYFYZW7sw5Qபாடலோடு உணர்த்துவார் அதே ரேவதி.

இவையெல்லாம் என்னைக் கவர்ந்த பாடல்கள். கேளுங்கள், ரசியுங்கள். உங்களின் ரசனைக்குரிய பாடல்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆனால் பெண் விடுதலையை ஒரு நாளிதழ் எப்படி கொச்சைப்படுத்திப் பார்த்தது என்ற வேதனையான நிகழ்வும் இருக்கிறது.

அந்த சம்பவத்தை பின்பு பதிவு செய்கிறேன்.

Tuesday, June 17, 2014

கார்த்திக், மாளவிகா, பி.வாசு, விவேக் எனும் கூலிப்படை கொலையாளிகள்



இசை வாரத்தில் இன்று இரண்டு மலையாளப் பாடல்கள்
http://upload.wikimedia.org/wikipedia/en/5/51/Bharatham.jpg
நேற்று “ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா” படத்தின் பாடலுக்கான இணைப்பை அளித்து இந்த படத்தை தமிழில் தயாரிக்காததால் நாம் தப்பிப் பிழைத்தோம் என்று குறிப்பிட்டிருந்தேன்.

வேதனையோடு அவ்வாறு சொல்ல வைத்தவர்கள் நமது தமிழ்படக் காரர்கள்தான். “ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா” படத்தை தயாரித்த அதே குழு தயாரித்த இன்னொரு அற்புதமான மலையாளப்படம் “பரதம்”. மோகன்லால், நெடுமுடி வேணு, ஊர்வசி, லட்சுமி ஆகியோர் நடித்த படம்.

அப்படத்தின் டைட்டில் பாடலை கேட்டு ரசியுங்கள். இரண்டு இசை இமயங்களான பாலமுரளி கிருஷ்ணாவும் கே.ஜே.யேசுதாசும் இணைந்து பாடியுள்ள பாடல். நெடுமுடி வேணுவிடம் மோகன்லால் சங்கீதம் கற்றுக்கொள்வது போல அமைந்துள்ள பாடல். பாடலை மட்டும் தனியாக கேட்டாலும் பாலமுரளி கிருஷ்ணா கற்றுக் கொடுப்பது போலவும் யேசுதாஸ் கற்றுக்கொள்வதும் போலவும் நாம் உண்ர்வோம். நாற்பது வருடங்களாக பாடிக்கொண்டிருக்கிற நான் கற்றுக்கொள்வது போல பாடுவதா என்று யேசுதாஸ் நினைக்காதது இப்பாடலின் சிறப்பு. கொஞ்சம் நீண்ட பாடலாக இருந்தாலும் நிச்சயம்  ரசிப்பீர்கள்.

இப்படத்தின் இன்னொரு பாடல் “ராம கதா, கான லயம்” என்று தொடங்கும். யேசுதாஸிற்கு மேலும் ஒரு தேசிய விருது பெற்றுக் கொடுத்த பாடல் இது. மோகன்லாலும் இப்படத்திற்காக சிறந்த நடிகர் விருது பெற்றார்.

படமே அழகிய கவிதையாக இருக்கும். நீங்களே படத்தைப் பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள்.

இப்படத்தை தமிழில் சீனு என்ற பெயரில் எடுத்து படுகொலை செய்தார்கள் படுபாவிகள். கார்த்திக், பி.வாசு, மாளவிகா, விவேக் எல்லோரும் கூலிப்படை கொலையாளிகளாக ஒரு நல்ல படத்தை தமிழில் சாகடித்தார்கள். பரதம் அவசியம் பாருங்கள். சீனு தொலைக்காட்சியில் கூட பார்க்க தகுதியற்ற படம்.