Showing posts with label லட்டு. Show all posts
Showing posts with label லட்டு. Show all posts

Tuesday, October 1, 2024

லட்டு பஞ்சாயத்து ஓவர். அடுத்து

 


உச்ச நீதிமன்றம் சந்திரபாபு நாயுடுவை கழுவி கழுவி ஊற்றியுள்ளது.

"லட்டு பிரசாதத்தில் கலப்படம் நேர்ந்துள்ளதாக செப்டம்பர் மாதம் 25 ம் தேதிதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 26 ம் தேதிதான் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பாக சந்திராபாபு நாயுடு செப்டம்பர் 18 ம் தேதியே பத்திரிக்கையாளர்களை சந்தித்து அறிக்கை வெளியிடுகிறார், அவரிடம் எந்த ஆதாரமும் இல்லை. இது வரை வெளி வந்துள்ள எந்த ஆவணங்களிலும் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை. ஆய்வுக்கு அனுப்பப்பட்ட லட்டு பிரசாதம், கலப்பட நெய்யால் செய்யப்பட்டதா என்பதற்கும் எந்த தகவலும் இல்லை. 

ஒரு அரசியல் சாசனப் பொறுப்பில் இருக்கும் முதலமைச்சர், கோடி பேருடைய உணர்வுகளை பாதிக்கும் விஷயத்தில் பொறுப்பில்லாமல் செயல்படக் கூடாது.

உங்கள் அரசியலில் இருந்து கடவுளை தள்ளி வையுங்கள்"

இதுதான் நீதிபதிகள் சொன்னது. லட்டு பிரசாதம் கெட்டுப் போனதாக சில வி.ஐ.பி க்கள் தெரிவித்துள்ளார்கள் என்று வக்கீல் சொன்ன போது, அந்த லட்டுக்கள் சோதிக்கப்பட்டதா என்று நீதிபதி கேட்ட போது பதில் சொல்லவில்லை.

கீழ்த்தரமான அரசியல் ஆதாயத்திற்காக லட்டு பிரச்சினையை சந்திரபாபு நாயுடு கையிலெடுத்துள்ளார் என்று முன்பே எழுதினேன். அவருடைய ஹெரிட்டேஜ் நிறுவனத்திற்கு நெய் ஒப்பந்தம் வேண்டும் என்பதும் கூட ஒரு காரணம்.

இதிலே பவன் கல்யாணின் கோமாளிக் கூத்துகள் வேறு. 

சங்கிகளுக்குத்தான் ஏமாற்றமாக இருக்கும். லட்டை வைத்து நடத்த நினைத்த கலவரங்களுக்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டது.

அதனால் என்ன?

அடுத்த பொய்ப்பிரச்சாரத்துக்கு தயாராகி விடுவார்கள். . . .

Monday, September 23, 2024

தி.லட்டு - தானா மாட்டிக் கொள்ளுதா அமுல்?

 


திருப்பதி லட்டு சர்ச்சையில் தமிழ்நாட்டு நிறுவனம் ஒன்றின் மீதுதான் குற்றம் சுமத்தப்படுகிறது.

சந்திரபாபு நாயுடுவின் ஹெரிட்டேஜ் நிறுவனத்திற்கு திருப்பதி லட்டு செய்ய நெய் அனுப்பும் ஒப்பந்தம் கிடைப்பதற்காகத்தான் இந்த சர்ச்சை உருவாக்கப்பட்டது என்பதுதான் பெரும்பாலானவர்களின் சந்தேகம்.

குஜராத் ஆய்வக அறிக்கை என்பதால் அமுல் நிறுவனமும் லட்டுக்கு நெய் அனுப்பும் போட்டியில் உள்ளதா என்றொரு சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளது.

இந்த சூழலில் அமுல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

எங்க நெய்யெல்லாம் ரொம்ப தரமானது. ஆனா நாங்க திருப்பதி லட்டு செய்ய நெய் அனுப்பியதே இல்லை என்று சொல்லியுள்ளது அமுல்.

இது வரை அமுல் நெய் திருப்பதி லட்டுக்கு பயன்படுத்தப்படவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அதையே அறிக்கை விட்டது கூட சரி, அந்த அறிக்கையில் தங்கள் நெய்யின் நிறம், திடம், குணம், மணம் பற்றியெல்லாம்  த்ரீ ரோஸஸ்  விளம்பரம் போல சொல்ல வேண்டும்! இதுதான் அமுல் மீது சந்தேகத்தை எழுப்புகிறது.

பார்ப்போம் முதலமைச்சரின் நிறுவனமா? குஜராத் நிறுவனமா? லட்டுக்கு நெய் அனுப்பப் போவது யாரென்று! 

Sunday, September 22, 2024

ஒரு லட்டு, எத்தனை "அம்மா"?

 


திருப்பதி லட்டு சர்ச்சை ஓடிக் கொண்டிருந்தது. சந்திரபாபு நாயுடு சொன்ன குற்றச்சாட்டு உண்மையா என்பது ஆய்வு செய்யப்பட்டு தவறு நடந்திருந்தால் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குற்றச்சாட்டு பொய்யென்றால் சந்திரபாபு நாயுடு பதவி விலக வேண்டும்.

லட்டு பிரச்சினையை சங்கிகள் மாற்று மததவர்கள் மீது புழுதி வாரி தூற்றவும், கோயில்களில் முறைகேடுகள் செய்யும் உரிமைகள் தங்களுக்கே வேண்டும் என்பதற்காகவும் பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

இதனை அரசியல் ஆதாயத்திற்காகவே சங்கிகள் பயன்படுத்துகின்றனர். மண்டையை மறைத்தாலும் கொண்டையை மறைக்காத முட்டாள்கள், அதனை அவ்வப்போது நிரூபித்து விடுகிறார்கள்.

கீழேயுள்ளது பல சங்கிகள் போட்ட ட்விட்டர் பதிவுகள்.



அதெப்படி அத்தனை பேரின் அம்மாக்களுக்கும் இரண்டு வருடமாகவே திருப்பதி லட்டு சாப்பிட்டால் உடம்பு சரியில்லாமல் போகிறது? அதெப்படி எல்லா அம்மாக்களும் ஒரே மாதிரி சுகாதாரத்தில் கருத்தாக நூறு ஆலோசனைகள் சொல்பவர்களாக இருக்கிறார்கள்?

ஏண்டா சொல்ற கதையை கொஞ்சம் கூட மாத்த மாட்டீங்களா?

அப்படியே ஈயடிச்சான் காப்பி. இதுதான் டூல்கிட்டா மோடி?

என்ன வழக்கமா சச்சின் டெண்டுல்கர், பி.வி.சிந்து, கௌதம் கம்பீர் போன்றவர்களை ட்வீட் போட வைப்பார்கள். அவர்கள் அதிர்ஷ்டவசமாக இப்போது தப்பியுள்ளார்கள்.