செவ்வணக்கம் தோழர் பிடல் காஸ்ட்ரோ
கியூபப் புரட்சியின் தலைவரான தோழர் பிடல் காஸ்ட்ரோவின் மரணம் அதிர்ச்சியும்
துயரமளிக்கிறது.
சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி சோஷலிச ஆட்சியை மலர வைத்தவர்.
பசிப்பிணியை முற்றிலும் போக்கியவர்.
அனைவருக்கும் கல்வி என்பதை உறுதி செய்தவர்.
மருத்துவத்தையும் மருத்துவக் கல்வியையும் விரிவுபடுத்தியவர்.
குழந்தைகள் இறப்பு விகிதத்தை உலகிலேயே மிகவும் குறைவாக மாற்றிக்
காட்டியவர்.
பொருளாதாரத் தடைகள் என்று புரட்சியை முடக்க நினைத்தாலும் அதை
முறியடித்தவர்.
அவரை கொலை செய்ய நடந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொண்ட அனைத்து
முயற்சிகளும் தோற்றுப் போய் இன்று அவரை இயற்கையால் மட்டுமே வெல்ல முடிந்திருக்கிறது.
லத்தீன் அமெரிக்க நாடுகள் மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து சோஷலிச
சக்திகளுக்கும் ஆதர்ஸம்.
சோர்வுறும் தருணங்களில் நீதிமன்றத்தில் அவர் ஆற்றிய உரையைக் கொண்ட “வரலாறு
என்னை விடுவிக்கும்” நூலை படித்தால் போதும். எழுச்சியும் வேகமும் உடனடியாய்
கிடைக்கும்.
மகத்தான புரட்சித்தலைவருக்கு செவ்வணக்கம்