Showing posts with label ஜாதி வெறி. Show all posts
Showing posts with label ஜாதி வெறி. Show all posts

Thursday, April 17, 2025

நெல்லை - கொடுமை ஏன் தொடருது?

 


கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பாகத்தான் சின்னத்துரை மீது கொலைத் தாக்குதல் சக மாணவர்களால் நிகழ்த்தப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.

இந்த மாணவனைப் போல் நன்றாக படியுங்கள் என்று ஆசிரியர் அறிவுரை கூறியதுதான் முதல் தாக்குதலுக்குக் காரணம்.

உயிர் பிழைத்ததும் தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றதும் இப்போதைய தாக்குதலுக்குக் காரணமா?

சில நாட்கள் முன்பாகத்தான் நெல்லை மாவட்டத்தில் காதியப் பிரச்சினை இல்லை என்று சபாநாயகர் சொன்னார். ஜாதி வெறி கொடி கட்டிப் பறக்கிறது என்றும் தீண்டாமை வெறி ஊறிப்போயிருக்கிறது என்பதும்தான் இந்த தாக்குதலுக்குக் காரணம்.

நெல்லைக்கு வந்திருப்பது புற்று நோய்.. அறுவை சிகிச்சை, கீமோ தெர்பி, ரேடியோதெரபி என எல்லா சிகிச்சைகளும் தேவை. அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகும். அரசு தவறவிட்டால் ....... நிலைமை சரி செய்ய முடியாத அளவுக்கு மிகவும் கேவலமாகி விடும். 

பிகு : இப்பதிவை முதலில் நேற்று இரவு எழுதினேன். காலையில் பார்த்தால் காவல்துறை தன் வழக்கமான கட்டுக்கதையை பரப்பி பாதிக்கப்பட்டவர் மீது பழி போடும் கீழ்த்தர உத்தியை கையாண்டுள்ளது தெரிகிறது. தீவிர சிகிச்சை தர வேண்டிய பிரச்சினைக்கு பாரசிட்டமால் கொடுத்தால் போதும் என்று அரசு கருதுகிறது. இந்த அறிக்கையெல்லாம் முதல்வருக்கு தெரியுமா?

திரு மு.க.ஸ்டாலின் அவர்களே, 2026 ல் நீங்கள் ஆட்சியை இழந்தால் அதற்குக் காரணம் உங்களால் கட்டுப்படுத்த முடியாத உங்களின் கட்சி பெரும் தலைவர்கள், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளில் இருந்து கான்ஸ்டபிள், கடை நிலை ஊழியர்கள் வரை ஊடுறுவி தங்களின் செயல்திட்டத்தை அமலாக்கிக் கொண்டிருக்கும் காவிகள். விழித்துக் கொண்டால் உங்களுக்கு நலம். 

Tuesday, March 25, 2025

பூசணித்தோட்டத்தை கவளம் சோற்றில் மறைக்காதீர் சபாநாயகரே . . .

 



சபாநாயகர் அப்பாவு சொன்னது கீழே உள்ளது.


இவனைப் போல் நன்றாக படியுங்கள் என்று ஆசிரியர் சொன்னதால் வெட்டப்பட்டான் ஒரு மாணவன்.

புல்லட் வாங்கியதனால் வெட்டப்பட்டான் இன்னொரு வாலிபன்.

கபடி போட்டியில் வெற்றி பெற்ற காரணத்தால் சில வாலிபர்கள் வெட்டப்பட்டார்கள்.

இவை அனைத்தும் நடந்தது நெல்லைச் சீமையில். அங்கே ஊறிப் போயிருக்கிற ஜாதி வெறியால்.

ஆட்டுத்தாடி ஆரெஸெஸ் ரெவியை நன்றாகவே  டீல் செய்கிறீர்கள். அதற்காக உங்களை பாராட்டுகிறேன். அதனால் ஒரு கவளம் சோற்றில் பூசணித் தோட்டத்தை மறைக்க நினைப்பதை எப்படி ஏற்க முடியும்?

Monday, May 6, 2024

தாக்கப்பட்ட பையன் பாஸ், தாக்கியவர்கள்.

 


ஜாதிய வெறியேறிய மாணவர்களால் நெல்லை மாவட்டம் நாங்குனேரியில் சின்னத்துரை என்ற மாணவன் சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிர் பிழைத்த சம்பவம் நினைவில் உள்ளதல்லவா!

முழுமையாக குணமாகவில்லை. தாக்குதலின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் வெளிவரவில்லை. தங்கையும் தாக்கப்பட்ட துயரம், படிப்பதற்கான உடல் நிலையும் இல்லை, மன நிலையும் இல்லை.

அத்தனையையும் மீறி பனிரெண்டாவது வகுப்பு பொதுத்தேர்வில் சின்னதுரை தேர்ச்சி பெற்று விட்டான். வாழ்த்துக்கள் சின்னதுரை.  மாநிலத்தின் முதல் மதிப்பெண்ணிற்கு நிகரானது சின்னதுரை பெற்ற வெற்றி.

சின்னதுரை தன்னை சந்தித்த பத்திரிக்கையாளர்களிடம் சி.ஏ படிக்க வேண்டும் என்பதே தன் லட்சியம் என்று சொல்லியுள்ளான். அவனுக்கு உள்ள உறுதி, நம்பிக்கை ஆகியவை அவனது இலக்கை அடைய அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

சின்னதுரையை தாக்கியவர்கள் அவனது பள்ளி மாணவர்கள். அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். சிறுவர் சீர்திர்திருத்தப் பள்ளிகளில் அவர்கள் சேர்க்கப்பட்டிருப்பார்கள்

அவர்கள் பரிட்சை எழுதியிருப்பார்களா?   எழுதியிருந்தாலும் தேர்ச்சி பெற்றிருப்பார்களா? குற்றவாள்:இ என்ற முத்திரையோடு    அவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

 ஜாதிய வெறியை தூண்டி விட்டவர்கள் சொகுசாகவே இருப்பார்கள். ஆனால் அவர்களால் வெறியூட்டப்பட்டவர்கள் நிலைமைதான் பாவம் ! 

ஆம் எப்போதுமே தூண்டி விடும் அயோக்கியர்கள் தங்கள் பெயர் வெளியே தெரியாமல் உத்தமர்கள் போல நடிப்பார்கள். அதையும் ஒரு முட்டாள் கூட்டம் நம்பும். ஆனால் தூண்டப்பட்டு தவறிழைப்பவர்கள்தான் மாட்டிக் கொண்டு தண்டனை பெறுவார்கள்.

 

Thursday, October 12, 2023

விளக்கம் சொல்வீங்களா தமிழிசை?

 


புதுவை அரசின் ஒரே பெண் அமைச்சர் சந்திரா பிரியங்கா தன் அமைச்சர் பதவியை தம் மீது நிகழ்த்தப்படும் ஜாதிய, பாலின பாகுபாடு காரணமாக ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளார்.

அக்கடிதம் கீழே


இதற்கு தமிழிசை எதற்கு விளக்கம் சொல்ல வேண்டும் என்று கேட்பீர்கள்!

புதுவையில் முதல்வர், சபாநாயகர், துணை நிலை ஆளுனர் என்று மூன்று அதிகார மையங்கள் உண்டு என்றும் அதிலே சக்தி மிக்கவர் தமிழிசைதான் என்று எங்கள் புதுவை தோழர்கள் சொல்வார்கள்.

அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் ஆட்டுக்காரன் பதில் சொல்ல வேண்டிய விஷயங்களில் கூட இவர் ஆளுனர் என்ற பொறுப்பை மறந்து பேசுவார்.

அதனால் தலித் என்ற காரணத்தாலும் பெண் என்ற காரணத்தாலும் தனக்கு பிரச்சினை வந்தது என்று அமைச்சர் சொன்னதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு தமிழிசை அம்மையாருக்கே அதிகம் உண்டு,

சொல்வீர்களா? 

Sunday, August 13, 2023

எரிச்சலூட்டாதீர் அன்புமணி

 


நாங்குனேரி சம்பவம் படிக்க மனம் பதை பதைத்தது. சக மாணவனை வெட்டிக் கொல்ல துணியும் அளவிற்கு மாணவர்கள் மனதில் ஜாதி வெறி ஊறிப் போனது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. ரத்தம் தோய்ந்த படிக்கட்டுக்கள் கொடுத்த வேதனையை வார்த்தையில் விவரிப்பது கடினம். 

வேங்கைவயல், நாங்குனேரி போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய களங்கம்.

இப்பிரச்சினை குறித்து ஆராய நீதியரசர் சந்துரு தலைமையில் குழு அமைத்துள்ளது நல்லது.

குழு அமைப்பது போதாது. அளிக்கும் பரிந்துரைகளை நேர்மையாக அமலாக்க வேண்டும்.

இச்சூழலில்தான் சின்ன டாக்டரின் அறிக்கை. . .


யார் எதைச் சொல்வது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. ஜாதி வெறியை பரப்புவதும் அதை தக்க வைப்பதிலும் நிலைக்க வைப்பதிலும் இவரும் இவர் அப்பாவும்தான் மிகப் பெரிய குற்றவாளிகள்.  சாதி என்பது ஒரு அழகிய சொல் என்று வர்ணித்தவரும் இவரே . . .

இப்படியெல்லாம் எரிச்சலூட்டும் அறிக்கை தருவதற்குப் பதில் அன்புமணி வகையறாக்கள் அமைதியாக இருக்கலாம்.

இதுதான் திராவிட கருத்தியலா, பெரியாரிசமா. முற்போக்கா, அதுவா இதுவா என்று இதுதான் வாய்ப்பு என்று சங்கிகள் ஓவராக குதிக்கிறார்கள். 

அவர்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள வேண்டும்.

நாங்குனேரி சம்பவம் மட்டுமல்ல அனைத்து ஒடுக்குமுறை நிகழ்வுகளுமே சங்கிகள் உயர்த்தி பிடிக்கும் மனு தர்மத்தின் வெளிப்பாடு. சாதி படிம நிலைகள்தான் சாதி ஒழிப்பிற்கான தடையாக உள்ளது. 2000 ஆண்டுகள் ஊறிப்போன ஒரு சூழலை மாற்ற ஐம்பதாண்டுகள் போதுமானதல்ல. அப்படி மாற்ற விடாமல் தடுக்கும் சக்திகளும் அவர்கள்தான்.

முற்போக்கு சிந்தனைகள் இம்மண்ணில் விதைக்கப்பட்டிராவிடில் நிலைமை இன்னும் கேவலமாக இருந்திருக்கும், உபி, மபி, குஜராத், ஹரியானா போல.. 

Tuesday, April 11, 2023

துர்வாசரின் துர்நாற்றம்

 



முதலில் உள்ளது நேற்று மாலை பகிர்வதற்காக எழுதியது. ரவியின் பல்டி காரணமாக இயலவில்லை.

 

அதற்குள் பிரச்சினை முற்றியுள்ளதால் பிற்சேர்க்கையும் அவசியமாகி விட்டது.

 

துர்வாசர் பயந்துட்டாரு

 

துக்ளக் பத்திரிக்கையின் முன்பு துர்வாசர் என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்த வண்ண நிலவன், எழுத்தாளர் இமையத்தின் மீது விஷத்தை கக்கியுள்ளார்.

 

வண்ண நிலவனின் பதிவுகளும் அதற்கு இமையம் ஆற்றிய எதிர்வினையும் கீழே உள்ளது.

 






“செல்லாத பணம்” நாவலுக்கு இமையம் பெற்ற சாகித்ய அகாடமி விருதும் இமையம் தன்னை திமுக உறுப்பினர் என்று வெளிப்படையாக அறிவித்ததும் துக்ளக் பத்திரிக்கையின் முன்னாள் எழுத்தாளர் வண்ண நிலவனுக்கு எரிச்சலை உருவாக்கி விட்டது போல. . .

 

இமையத்திற்கு சாகித்ய அகாடமி விருது அளிக்கப்பட்ட போதே தன் வயிற்றெரிச்சலை மூத்த்த்த்த்த மாலன் வெளிப்படுத்தி இருந்தார். அப்போது எழுதிய பதிவு கீழே.

 

வெட்கமே இல்லையா மாலன்?

 




மூத்த்த்த்த பத்திரிக்கையாளரின் முக நூல் பக்கமே நீண்ட காலமாக செல்லவில்லை.  பத்தாண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிமுக அரசு பற்றி கருத்து கேட்காமல் 2006-2011 கலைஞர் அரசு பற்றி கருத்து கேட்கும் அவரது புத்திசாலித்தனம் மெய்சிலிர்க்க வைத்தது. (பத்து வருட அதிமுக ஆட்சியைப் பற்றி எதுவும் பேசாமல் அதற்கு முந்தைய திமுக ஆட்சியைப் பற்றி பேசுவதன் சூட்சுமம் பற்றி தனியாக எழுத வேண்டும்)

 அப்போதுதான் சாகித்ய அகாடமி விருது பற்றிய இந்த பதிவு கண்ணில் பட்டது.



 இந்த பதிவின் மூலம் மாலன் யாரை தூண்டி விடுகிறார்?

 பரிசு கிடைத்த இமையத்தின் படைப்பை விட இவர் படைப்பு தேவலாமே! அதற்கு கிடைத்திருக்கலாமே! இதற்கு கொடுத்திருக்கலாமே என்ற விவாதத்தை உருவாக்குவதன் நோக்கம் என்ன?

 மாலனின் சிண்டு முடிதலுக்கு இரண்டு காரணம் இருக்கலாம்.

 

ஒன்று திரு இமையம் தன்னை திமுக உறுப்பினர் என்று வெளிப்படையாகவே பிரகடனம் செய்துள்ளவர்.

 

இரண்டு திரு இமையம் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர், அவர்களின் வலிகளை தன் எழுத்தில் கொண்டு வருபவர்.

 இரண்டு காரணங்களுமே மாலனின் வெறுப்புக்குக் காரணமாக இருக்கலாம்.

 அதை நேரடியாக வெளிப்படுத்தாமல் இப்படி நரித்தந்திரத்தின் மூலம் வெளிப்படுத்துகிறார்.

திராவிட இயக்கத்தின் மீது, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் மீது பொய்யும் புரட்டுமாக வரலாற்றுத் திரிபோடு விஷம் கக்கிய காரணத்தால் கடந்தாண்டு "சூல்" நாவலுக்கு விருது கிடைத்த போது இவர் அப்படி கேட்டிருந்தால் நியாயமாக இருந்திருக்கும். 

 ஆனால் இது எனக்கு அதிர்ச்சியாக இல்லை. இதை விட அசிங்கமாக அவர் நடந்து கொண்டதைத்தான் பார்த்து விட்டோமே!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்க நெருங்க மாலனின் விஷக் கூச்சல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இன்று கூட தீக்கதிர் முன்னாள் பொறுப்பாசிரியர் தோழர் அ.குமரேசனின் முக நூல் பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டு வாங்கிக் கட்டிக் கொண்டார். ஆனால் பதில் மட்டும் சொல்லவில்லை.

 இப்படி இங்கே கம்பு சுத்துகிற மாலன், ட்விட்டரில் என்ன செய்கிறார் தெரியுமா?

 அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

வண்ண நிலவன் ரொம்பவுமே லேட் . இப்போதுதான் எழுதுகிறார். நெல்லை எழுத்தாளனான எனக்கு கிடைக்காத ஒன்று விருத்தாசலம் எழுத்தாளனுக்கு கிடைப்பதா என்ற விருதோஃபோபியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சாகித்ய அகாடமி விருது கொடுத்து விட்டால் சரியாகி விடுவார்.  

 

இமையத்தின் எழுத்துக்களை படித்ததற்கான விஷ முறிவு வைத்தியமாக ராஜநாராயணன் எழுத்துக்களை படிக்க வேண்டும் என்று இவர் சொல்வதும் மிகப் பெரிய போலித்தனம்.

 

ஆம்.

 

கிரா இறந்த போது அவருக்கு அரசு மரியாதை கொடுக்கப்பட்டதை  நக்கல் அடித்தவர் இவர். அப்போது இவர் எழுதிய பதிவு கீழே உள்ளது.

 மிகைப் படுத்தப் பட்ட புகழை,ஊதிப்பெருக்க வைக்கப்பட்ட புகழை அடைந்தவர் ராஜநாராயணன்.அவருடைய கரிசல் இலக்கியம் என்பதெல்லாம் இட்டுக் கட்டப் பட்டது.தஞ்சாவூர் இலக்கியம், திருநெல்வேலி இலக்கியம், கொங்கு இலக்கியம் , திருவண்ணாமலை இலக்கியம் என்றெல்லாம் வகைப்படுத்துவதைப் போன்ற அபத்தம் வேறில்லை.இலக்கியம் வட்டாரம் சார்ந்ததல்ல. மொழி,நிலம் சார்ந்த விஷயங்களை வைத்து இலக்கியத்தைப் பிரிப்பது சரியில்லை,நியாயமும் இல்லை.

ராஜநாராயணன் முதல் தரமான,இலக்கியபூர்வமான சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதிய சிறந்த எழுத்தாளர்.(கதைசொல்லி என்பது செல்லம் கொஞ்சுதல். நான் செல்லம் கொஞ்ச விரும்பவில்லை) அவருடைய கரிசல் சொல் அகராதி முக்கியமானது.அவருடைய நாட்டுப்புறக் கதைச் சேகரமும் அவருடைய தனித்த முயற்சிகளே.ஆனால்,அந்தப் பாலியல் கதைச் சேகரிப்பு அவருடைய பெருமைக்கு இழுக்கு சேர்ப்பது.

அவருக்கு ஞானபீடம் கொடுக்கும் அளவுக்கு அவரது கதைகளில் வாழ்வு குறித்த விசாரணைகள் , அல்லது தத்துவார்த்த ஆன்மீக மனநெருக்கடிகள் எதுவும் இல்லை.ஜெயகாந்தன் உரத்த குரலில் கதை சொன்னாலும் அவரது கதைகளில் மேற்குறித்த அம்சங்கள் நிறையவே உண்டு.அதனால்தான் அவருக்கு ஞானபீடம் வழங்கப்பட்டது.ராஜநாராயணனிடம் இது தேடினாலும் அகப்படாது.

அவருக்கு அரசு மரியாதை தரப்படுவது ரொம்ப அதிகப்படியானதே.

சரி,” துர்வாசர் பயந்துட்டாரு” என்று ஏன் தலைப்பு என்று கேட்கிறீர்களா?

 

அதொன்றுமில்லை.

 

எழுதிய பதிவுகளை எல்லாம் வண்ண நிலவன் நீக்கி விட்டார்.

 

பிற்சேர்க்கை

 

முதலில் எழுதிய பதிவுகளை நீக்கிய வண்ண நிலவன் இன்னொரு பதிவு எழுதியுள்ளார்.

 


இந்த பதிவிற்கு இமையம் ஆற்றிய எதிவினை கீழே…

 


வட்டார இலக்கியம் என்றெல்லாம் கிடையாது என்று சொல்கிற வண்ண நிலவன், எழுத்தாளர்களை ஜாதிய ரீதியில் பிரிக்கிறார். இது ஜாதிய மேட்டிமை புத்தி அன்றி வேறில்லை.

 

இவர் போன்றவர்கள்தான் சிறந்த எழுத்தாளர்கள் என்றால் இவர்கள் எழுதுவதுதான் சிறந்த படைப்பு என்றால்

 

அந்த எழுத்தும் படைப்பும் நாசமாய் போகட்டும்.

 

 

Friday, February 17, 2023

எடுபிடிக்கான மீசை வச்ச கண்ணன்

 


எடுபிடி பழனிச்சாமி ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் "நீ ஆம்பளயா இருந்தா, மீசை வச்ச ஆம்பளையா இருந்தா" என்றெல்லாம் வஜனம் பேசியதாக படித்தேன்.

கண்ணன் குலத்தவர், கண்ணன் குலத்தை சேர்ந்த தனது வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று எழுதிய கடிதத்தையும் பார்த்தேன்.


பல படங்களில் என்.டி.ராமாராவ், படிக்காத மேதையில் நடிகர் திலகம், சில படங்களில் சிவகுமார், இந்தி தொலைக்காட்சித் தொடர் மகாபாரதம் எதிலுமே கண்ணனுக்கு மீசை கிடையாதே, மீசை இருந்தால் எடுபிடி இன்னும் சந்தோஷமாகி விடுவாரே என்று யோசித்த போது கிடைத்தவர்தான் கிரேசி மோகன்.

மீசை வச்ச ஆம்பள + கண்ணன் : இந்த காம்பினேஷன் ஓகேதானே எடுபிடி? 

பிகு: இப்படி ஜாதியைச் சொல்லி ஓட்டு கேட்பதெல்லாம் சட்ட பூர்வமானதுதானா?

Friday, November 4, 2022

ராஜராஜ சோழன் நான் இல்லைடா

 


கீழே உள்ள படங்கள் மற்றும் பதிவு - உபயம் தோழர் அ.மு.நெரூடா. தஞ்சைக் கூத்துக்களைப் பார்த்தால் "நான் ராஜராஜசோழனே இல்லைடா, என்னை விடுங்கடா" என்று கவுண்டமணி பாணியில் அவரே ஓடி விடுவார் என்று தோன்றுகிறது.

இராஜ ராஜ சோழ நாடார்!
இராஜ ராஜ சோழ நாயுடு!
இராஜ ராஜ சோழ உடையார்!
இராஜ ராஜ சோழ தேவர்!
இராஜ ராஜ சோழ மள்ளர்!
இராஜ ராஜ சோழ முத்தரையர்!
இராஜ ராஜ சோழ வன்னியர்!
இராஜ ராஜ சோழ பறையர்!
இராஜ ராஜ சோழ மறவர்!
இராஜ ராஜ சோழ வேளாளர்!
யே யப்பா...
விடுபட்ட வீர குலம், உயர் குலம், ஃபயர்குலம்லாம் சீக்கிரமா வந்து சேருங்கப்போய்.....
அப்புறம் சோழ பரம்பரை குலுக்கல் போட்டிக்கு எஞ்சாதி விட்டுப்போச்சு... உஞ்சாதி விட்டுப்போச்சின்னு மூக்க சிந்தப்புடாது ஆமா.











இவற்றை மிஞ்சும் இன்னொன்று

பாக்கி உள்ளது கிறிஸ்துவ, புத்த, ஜைன மதங்கள் மட்டும். அடுத்த வருடம் பார்க்கலாம். அங்கேயும் சில கிறுக்கர்கள் இருப்பார்கள் அல்லவா!

Friday, October 21, 2022

என்ன எழவிற்கு கிழக்கில் தமிழ்

 


கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி ஜாதி வெறிப் பித்து தலைக்கேறி மன நிலை பாதிக்கப்பட்டு அபத்தமாக உளறிக் கொண்டு இருக்கிறார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அமெரிக்காவில் இருந்தாலும் சந்தோஷமாக இருந்தது என்று சொன்ன மனிதன் தானே!



அறிஞர் அண்ணாவை IDIOT என்று திட்டிய மனிதன்.




சமஸ்கிருதம் போல தமிழில் இலக்கியம் இல்லை என்று தொடர்ந்து தமிழ் மீது வக்கிரத்தை கக்கிக் கொண்டிருக்கிற பேர்வழி.





வரும்படி இல்லாத பதவி போனால் நஷ்டமில்லை என்று திராட்சை கிட்டாத நரியாய் புலம்பும் ஜந்து.

எனக்கு ஒரே ஒரு கேள்விதான். உனக்கு மிகவும் உயர்ந்ததாக, உன்னதமாக தோன்றும் சமஸ்கிருதத்தில் புத்தகங்களை வெளியிட வேண்டியதுதானே!

என்ன எழவுக்கு தமிழில் நூல்களை வெளியிடுகிறார் இந்த வெறியர்?

கசு, துட்டு, பணம், Money, Money

Sunday, April 24, 2022

அளுனரை அவமதித்தால் ஆட்டுக்காரருக்கு?????

 


முதலில் இந்த காணொளியை பார்த்து விடுங்கள்.


விஜேயேந்திர சரஸ்வதி எவ்வளவு அலட்சியமாக தமிழிசையை டீல் செய்கிறார் பாருங்கள்! ஜாதி மேலாதிக்க வெறியும் பெண்ணடிமைத்தன சிந்தனையும் மனு தர்மத்தை போதிப்பவர்களுக்கு இருப்பதில் வியப்பேது!

தமிழ்நாட்டு ஆட்டுத்தாடி மீது நடக்காத தாக்குதலுக்கு கிரிமினல் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதப்போவதாக சொன்ன ஆட்டுக்காரருக்கு தமிழிசைக்கு காஞ்சிபுரத்தில் நடந்த இழிவு பற்றி தெரியுமா? அதை கண்டித்து சங்கர மடம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவாரா?


ஆமாம்.

என்னதான் மூடச்சங்கியாக இருந்தாலும் சங்கர மடத்துக்கு எதிராக பேசி பதவியை இழக்குமளவிற்கு ஆட்டுக்காரன் அறிவற்றவனில்லை.

இன்னொன்றும் சொல்ல வேண்டும்.

தமிழிசை மீதெல்லாம் எனக்கு அனுதாபம் கொஞ்சமும் கிடையாது.

முன்னாள் பிரதமர் என்றாலும் கைம்பெண் என்பதால் இந்திரா அம்மையாரை முதுகுக்குப் பின் நிற்க வைத்தது சங்கர மடம்.

சுப்ரமணியசாமியை நாற்காலியில்  அமர வைத்து பொன்னாரை தரையில் உட்கார வைத்தது சங்கர மடம்.

ஒன்றிய அமைச்சர் எல்.முருகனை கொல்லைப்புறத்தில் புல்லில் உட்கார வைத்ததும் இதே மடம்தான்.

ஆக இது தமிழிசை அவரே தேடிக்கொண்ட இழிவு. அதனால் அவருக்கு அனுதாபம் அவசியமில்லை. 

Thursday, December 16, 2021

சீமானே! கொலையில் என்னய்யா பெருமை?


 

ஜாதி மறுப்பு திருமணங்கள் செய்து கொண்டவர்களையோ, அல்லது அப்படி ஒரு திருமணம் நடந்து விடக் கூடாது என்பதற்காகவோ செய்யப்படும் கொலைகளை ஒரு காலத்தில் "கௌரவக் கொலைகள்" என்று அழைத்து வந்தார்கள்.

பிற்போக்கு சிந்தனையோடு செய்யப்படும் கொலைகளில் என்ன எழவு கௌரவம் இருக்கிறது என்ற விவாதம் சில காலம் நடந்து அப்படிப்பட்ட கொலைகள்  "ஜாதி ஆணவக் கொலைகள்" என்றே இப்போது அழைக்கப்பட்டு வருகின்றது.

ஜாதி ஆணவக் கொலைகளை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க, ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை பாதுகாக்க தனிச்சட்டம் வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராடிக் கொண்டிருக்கிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி மூன்றாண்டுகள் முன்பு சேலம் தொடங்கி சென்னை ஒரு நடைப்பயணம் கூட நடத்தியது.

இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டின் பெரும் பொய்யர் சீமான், ஜாதி ஆணவக் கொலைகளுக்கு புதிய பெயர் சூட்டியுள்ளார்.

அவை  இனி  "குடிப் பெருமை கொலைகள்" ஆம்.

சீமானும் சங்கிகளும் அய்யாக்களும் ஒன்று என்று சொல்லிக் கொண்டிருப்பதை அவர் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.

ஜாதி ஆணவத்தில் செய்யப்படும் கொலைகளுக்கு "குடிப் பெருமை" என்று பெயர் வைப்பதன் மூலம் அப்படிப்பட்ட கொலைகளுக்கு கௌரவம் தருகிறார் சீமான். நியாயப் படுத்துகிறார். குடிப்பெருமையை பாதுகாக்க தவறில்லை என்று சொல்கிறார்.

வார்த்தையில் என்ன இருக்கிறது என்ற கேள்வி சில சமயம் வரும்.

வார்த்தைகளில்தான் எல்லாம் இருக்கிறது, சீமான் போன்றோரின் பிற்போக்குத்தனமான அரசியல் உட்பட . . .




Thursday, August 5, 2021

தேஷ் பக்தாஸ் கண்டித்தனரா?

 பாராட்டுக்கு உரியவரும் பாதகம் செய்தோரும்.

 


டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை ஐந்து பதக்கங்களை வென்றுள்ளது. மல்யுத்தத்தில் இன்று ரவிகுமார் தாஹியா  வெள்ளி வென்றுள்ளார். வாழ்த்துக்கள். நிச்சயம். நாளை மகளிர் ஹாக்கி அணி வெண்கலம் வெல்வார்கள் என்று நம்புகிறேன்.

 


இந்த ஒலிம்பிக் போட்டியைப் பொறுத்தவரை இந்தியாவைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமான அம்சம் ஹாக்கி அணிகளின் மறுமலர்ச்சிதான்.

 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஆடவர் அணி பதக்கம் வென்றுள்ளது. மகளிர் அணி முதல் முறையாக அரையிறுதியில் விளையாடியது. இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தாலும் நாளை வெண்கலம் வெல்லும் வாய்ப்பு  பிரகாசமாகவே உள்ளது,

 எப்படி வந்தது இந்த மாற்றம்? முன்னேற்றம்?

 அனைத்துப் புகழும் ஒடிஷா முதல்வர் நவீன் பட்னாயக்கையே சாரும்.

 இந்திய ஹாக்கி அணிக்கு ஸ்பான்ஸர் செய்ய எந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனமும் முன் வராத போது, கிரிக்கெட்டிற்கு கொட்டிக் கொடுப்பவர்கள் ஹாக்கிக்கு கிள்ளிக் கொடுக்கக் கூட தயாராக இல்லாத போது ஹாக்கியை அரவணைத்துக் கொண்டவர் நவீன் பட்னாயக்.

 இந்திய அணிகளின் ஸ்பான்ஸ்ராக பொறுப்பேற்று பயிற்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வீரர்களை ஊக்கப்படுத்துவதோடு மட்டும் அவர் பணி நிற்கவில்லை. நவீன ஹாக்கி ஸ்டேடியம் ஒன்றையும்ஒடிஷா மாநில அரசு கட்டி வீரர்களை தயார்ப்படுத்தியது.

 இது மிக மிக முக்கியமானது.

 புல்தரையில் விளையாடப்பட்ட ஹாக்கி அஸ்ட்ரோடர்ஃப் என்று அழைக்கப்படும்  செயற்கை தளத்திற்கு மாறியதிலிருந்துதான் இந்திய அணியின் வீழ்ச்சி தொடங்கியிருந்தது. அதை மாற்ற அவர் எடுத்த இந்த முக்கியமான நடவடிக்கை இப்பொது பலனளித்துள்ளது.

 இந்தியாவின் தேசிய விளையாட்டிற்கு மீண்டும் வேகம் கிடைக்க காரணமான ஒடிஷா மாநிலத்தின் தலைமைச்செயலாளரும் முதலமைச்சரின் ஆலோசகர்களும் தமிழர்கள் என்பதால்  நமக்கும் பெருமை.

 இந்திய மகளிர் அணி நேற்று அரையிறுதியில் தோற்றுப் போனதற்காக ம் உண்மையான விளையாட்டுப் பிரியர்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிற அதே நேரத்தில் இந்திய மகளிர் அணியின் தோல்வியை கொண்டாடியவர்களும் உள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

 மகளிர் ஹாக்கி அணியின் மிக முக்கியமான வீரர் வந்தனா கத்தாரியா. உத்தர்காண்ட் மாநிலம்  ஹரித்வாருக்கு பக்கத்தில் உள்ள ரோஷனாபாத் என்ற கிராமத்தில் உள்ள அவர் வீட்டு முன்பாக இரண்டு அயோக்கியர்கள் பட்டாசு வெடித்து இந்திய அணியின் தோல்வியை கொண்டாடியுள்ளார்கள். (தந்தையின் மரணத்திற்குக் கூட வராமல் பயிற்சிக்கு முன்னுரிமை கொடுத்தவர் வந்தனா)

 


சத்தம் கேட்டு வெளியே வந்த வந்தனாவின் குடும்பத்தினரை ஜாதிய ரீதியில்  திட்டி “அதிகமான தலித்கள் இடம் பெற்றதால்தான் இந்தியா தோற்றுப் போனது. ஹாக்கி மட்டுமல்லாமல் எந்த விளையாட்டிலும் தலித்களுக்கு வாய்ப்பு தரக்கூடாது”  என்று சத்தம் போட்டு விட்டு ஆடைகளை அவிழ்த்து நடனம் ஆடியு:ள்ளனர்.

 இந்த அயோக்கியர்கள் மீது இதுவரை உத்தர்கண்ட் போலீஸ்  வழக்கு பதியவில்லை. மறக்க வேண்டாம், உத்தர்கண்டில் ஆட்சி செய்வது பாஜக.

 எந்த ஒரு சங்கியும் இந்த இழி செயலை, இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வீரரை அவமானப்படுத்தியதை, இந்தியாவின் தோல்வியை கொண்டாடியதை கண்டிக்கவில்லை.

 அவர்கள் கள்ள மவுனம்தான் சாதிப்பார்கள்.

ஏனென்றால் அவர்களின் தேச பக்தி  போலியானது.

நாட்டை விட ஜாதி மேலாதிக்கம்தான் அவர்களுக்கு முக்கியமானது.

 பிகு: மேலே உள்ள படத்தை பகிர்ந்து கொண்ட இளம் எழுத்தாளர் தோழர் கரீம், இந்த புகைப்படத்தில் நவீன் பட்னாயக்கிற்கு பதிலாக தாடிக்கார மோடியின் படத்தை போட்டோஷாப் செய்து வெளியிடுவார்கள் என்று எச்சரித்துள்ளார். அதனால் கவனமாக இருங்கள். அப்படி ஏதாவது படம் வந்தால் அது கண்டிப்பாக போட்டோஷாப் மோசடிதான்.

 

Wednesday, July 28, 2021

ஜாதிச் சாக்கடையில் புரளும் ஜெமோ

 


கீழே உள்ளது புளிச்ச மாவு ஆஜானின் இணையப் பக்கத்தில் .பாரி என்ற பெயரில் பதிவாகியுள்ள ஒரு செல்ஃபி கேள்வி. மொட்டைக்கடிதாசி போல தானே கேள்வி எழுதும் கேவலமான பழக்கத்தை ஜெமோ என்று கைவிடப் போகிறாரோ?

-------------------------------------------------------------------------------------

ஆனால் அவர்களை இன்று இடைநிலைச் சாதியைச் சேர்ந்த குஞ்சுகுளுவான்களெல்லாம் அலட்சியமாக விமர்சனம் செய்கிறார்கள். அவர்களின் தகுதியை மட்டம் தட்டுகிறார்கள். அவர்களுக்கு ஆலோசனை சொல்கிறார்கள். தாங்கள் அவர்களுக்கு வழிகாட்டி அழைத்துச்செல்லவேண்டுமென நினைக்கிறார்கள். அது வேண்டுமென்றே செய்வது இல்லை. உண்மையிலேயே அவர்களுக்கு அந்த தெனாவெட்டு இருக்கிறது. நம்பித்தான் செய்கிறார்கள்.

 

அந்த தோரணையுடன் பேசுபவர்கள் யாரெல்லாம் என்று பார்த்தால் நீங்கள் குறிப்பிட்ட  புலியூர் முருகேசன், யமுனா ராஜேந்திரன், யுவகிருஷ்ணா, தமிழ் ஸ்டுடியோ அருண் போன்றவர்கள் அவர்களெல்லாம் என்ன எழுதியிருக்கிறார்கள்? என்ன ஆய்வுசெய்திருக்கிறார்கள்? என்ன வாசித்திருக்கிறார்கள்? வெறும் முகநூல்வம்பாளர்கள். பழங்காலத்தில் ஐம்பது வயதான தலித் முதியவரை பத்துவயதான ஊர்க்காரப் பையன் அடா புடா என அழைப்பான். அதே மனநிலைதான் இது.

 இந்த கூட்டம் மறந்தும் இந்த தலித் ஆய்வாளர்களின் நூல்களை குறிப்பிடுவதில்லை. அவற்றைப்பற்றி ஒருவரி எழுதுவதில்லை. அவர்கள் ஆய்வுசெய்கிறார்கள் என்பதையே மறைத்துவிடுவார்கள். தங்கள் பட்டியல்களில் அந்தப்பெயர்களை மறைத்து தொ.பரமசிவம் போன்ற தங்களுக்கு வேண்டியவர்களையே முன்வைப்பார்கள்.

------------------------------------------------------------------------------------

அயோக்கியர்களின் கடைசி புகலிடம் ஜாதி என்பதை நிரூபிக்கிறார் ஜெயமோகன். உண்மையில் அவர் எழுத்திலும் செயலிலும்தான் ஜாதி வெறி மேலோங்கி இருக்கும். ஆனால் அவர் தோழர் யமுனா ராஜேந்திரன், தோழர் புலியூர் முருகேசன் மற்றும் யுவகிருஷ்ணா, தமிழ் ஸ்டூடியோ அருண் ஆகியோர் மீது ஜாதி வெறி பிடித்தவர்கள், தலித் எதிரிகள் என்று சகதியை அள்ளி வீசுகிறார்.

சீமானைப் போல, நாம் தமிழர் தம்பிகளைப் போல இவரும் அவர்களுடைய ஜாதி என்னவென்று டி.என். ஆராய்ச்சி செய்வார் போல இருக்கிறது. இவரை தோலுரித்த நூலின் மையப்புள்ளி தோழர் யமுனா ராஜேந்திரன், அதிலே ஒரு கட்டுரை எழுதியுள்ள தோழர் புலியூர் முருகேசன் ஆகியோர் மீது இவர் வெறுப்பாக இருக்க அனைத்து காரணங்களும் உண்டு. இதிலே தோழர் புலியூர் வேறு இவரது குண்டர் படை லட்சுமி, வெண்பா ஆகியோர் பதிவுகளில் அவ்வப்போது நக்கலாய் பின்னூட்டம் போடுவார். யுவகிருஷ்ணா இவரை சமீப காலத்தில் சீண்டியதாக நினைவில்லை. அருணுக்கும் இவருக்கும் என்ன பஞ்சாயத்தோ?

கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் இப்படி ஜாதி மோதலுக்கு அடித்தளமிடும் இந்த அற்பப் பதர்தான் எப்போதும் "அறம், அறம்" என்று கூச்சலிடுவது எவ்வளவு பெரிய நகை முரண்!