Saturday, February 29, 2020

கம்பீரமாய் அவர் . .
கடந்த மாதம் பதினேழாம் தேதி நெல்லைக் கோட்டச்சங்கம், நாகர் கோவிலில் "முற்றுகை" நூல் அறிமுகக் கூட்டம் நடத்தி அதற்காக வரச் சொல்லி இருந்தார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை  மாவட்டக்குழு அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோழர் லெனின் அவர்களின் சிலையை பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தேன். அதனால் நாகர்கோவில் செல்லும் வழியில் கட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

தோழர் லெனினின் சிந்தனை, செயல்பாடு போலவே அவரது சிலையும் கம்பீரமாக இருந்தது.

திரிபுராவிலே அல்பர்களின் ஆட்சி தோழர் லெனினின் சிலையை அப்புறப் படுத்திய அநாகரீகம் நடந்த பின்னணியில் நெல்லையில் அவருக்கு சிலை வைப்பது என்ற முடிவும் கூட கம்பீரமானதுதானே!

2000 ரூபாய் - மரண பயத்தை மறக்கலாமோ?


2000 ரூபாய் – என்ன வேணா செய்வானுங்கநேற்று ஒரு கடையில் மூவாயிரத்து எழுநூறு ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது.

இரண்டு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை கொடுத்தேன். அந்த கடைக்காரர் அதை வாங்க தயங்கி

“சார் ரெண்டாயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்கறதை நிறுத்திட்டாங்களாம். இனிமே ஏ.டி.எம் மில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு வராதுன்னு சொல்றாங்களே சார், இதுவும் செல்லாதுன்னு சொல்லிடுவாங்களா”

என்று கேட்டார்.

“அப்படியெல்லாம் இல்லைங்க, நேற்றைக்கு இந்த நோட்டு ஐ.ஓ.பி ஏடிஎம் மில் எடுத்ததுதான்”

என்று சொன்ன பின்பு அவற்றை வாங்கிக் கொண்டபடியே

“ஆனாலும் இவனுங்களை நம்ப முடியாது சார். எப்ப வேணா எது வேணா செய்வானுங்க. மறுபடியும் ரோட்டில அலைய வச்சுடுவானாங்களோன்னு பயமாத்தான் இருக்கு”

என்று சொல்ல

ஆம். அப்படிப்பட்ட மோசமான அரசுதான் இது என்று ஆமோதிப்பதை விட வேறென்ன பதிலை சொல்லிட முடியும் !!!!

Friday, February 28, 2020

வக்கீலாக இருக்கையிலேயே . . .

கிரிமினல் கூட்டாளிகளால் வஞ்சிக்கப்பட்ட நீதிபதி முரளிதர் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் எழுதிய நெகிழ்ச்சியூட்டும் பதிவினை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அவசியம் முழுமையாக படிக்கவும்
முளையிலேயே விளையும் விதம் காட்டிய உண்மையான மாண்புமிகு நீதிபதி எஸ்.முரளிதர்.

அநேகமாக அது 90களின் ஆரம்பம். அப்போது நான் ஸ்பிக்கில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலு மூலை கிணறு என்கிற கிராமத்தில் இருதரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலை பயன்படுத்திக் கொண்டு காவல்துறை தலித் மக்கள் மீது கடுமையான வன்முறை வெறியாட்டத்தை ஏவிவிட்டது.

இதன் மீது செய்யப்பட்ட எந்த முறையீடுகளையும் அப்போது ஆட்சிப் பொறுப்பிலிருந்த செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசாங்கம் செவி சாய்க்க மறுத்துவிட்டது. வேறு வழியின்றி அந்த மக்கள் அந்த ஊருக்கு அருகே பரமன்குறிச்சி என்கிற கிராமத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டிருந்த தோழர் பாலகிருஷ்ணன் அவர்களை சந்தித்து இருக்கிறார்கள்.

அவர் இந்தப் பிரச்சினையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையிட்டால்தான் நியாயம் கிடைக்கும். எனவே அவர்களை சென்று பாருங்கள் என்று அனுப்பி வைத்திருக்கிறார். அப்போது கட்சியின் மாவட்டச் செயலாளராக இப்போது மத்தியக்குழு உறுப்பினராக இருக்கும் தோழர் பி.சம்பத் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரை வந்து சந்தித்த பிறகு கட்சியின் மாவட்ட தலைமை முழுவதும் அந்த கிராமத்திற்கு சென்று விவரங்களை சேகரித்தனர். அந்த மக்கள் சொன்ன விபரங்கள் தோழர்களை மனம் பதைக்கச் செய்திருக்கிறது.

பின்னர் மாவட்டக்குழு செயலாளராக பணியாற்றிய தோழர் இசக்கிமுத்து, பெரம்பூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் எஸ்.கே.மகேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் தேவபிரகாஷ், மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் சங்கர கோமதி, செயலாளர் தோழர் ஆர்.மல்லிகா, மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்த தோழர் என்.வெங்கடேஷ், திருச்செந்தூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக மதிக்கப்பட்ட தோழர் பி.கே.பொன்னையா, ஒன்றிய செயலாளர் தோழர் பன்னீர்செல்வம், தோழர் ஜெயபாண்டியன், தோழர் கிறித்துவராஜ் உள்ளிட்ட தோழர்கள் அந்தப் பிரச்சினையில் முழுமையாகத் தலையிட்டனர்.

அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த தோழர் பாப்பா உமாநாத்தும் அந்த கிராமத்திற்கு வந்திருந்தார்.


இந்தப் பிரச்சனையை தோழர் மல்லிகா பெயரில் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார்கள். உச்சநீதிமன்றம் அப்போது அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு வழக்கறிஞரை சட்ட உதவிக்காக நியமித்தது. அந்த வழக்கறிஞர் மிகத் திறமையாக வாதாடினார். அதன் காரணமாக முதலில் முனிராம் என்கிற ஐஏஎஸ் அதிகாரி விசாரணைக்காக நியமிக்கப்பட்டார். அவர் முழுக்க முழுக்க காவல்துறைக்கு ஆதரவாகவும் அந்த மக்களுக்கு எதிராகவும் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார். அந்த வழக்கறிஞர் முனிராமின் அறிக்கையை நிராகரிக்க வேண்டுமென்றும் இன்னொரு விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டுமென்றும் வாதாடினார். உச்சநீதிமன்றம் அதை ஏற்றுக் கொண்டது.

அதன் பிறகு பாஸ்கரதாஸ் என்கிற ஐஏஎஸ் அதிகாரி விசாரணைக்கு நியமிக்கப்பட்டார். அவரும் முனிராம் ஐஏஎஸ் போலவே ஒரு உண்மையை மூடி மறைக்க அறிக்கையை உச்சநீதிமன்றத்திடம் சமர்ப்பித்தார். இத்தனைக்கும் இந்த இரண்டு அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள். அரசு அதிகாரிகளான பிறகு அவர்கள் அதிகாரத்தின் சாதியாக மாறிவிட்டார்கள். அந்த வழக்கறிஞர் அந்த அறிக்கையிலிருந்தமோசடிகளை அம்பலப்படுத்தி வேறொரு அதிகாரியை நியமிக்க வேண்டுமென வாதாடி அது வெற்றியும் பெற்றன.

அதன் பிறகு, அப்போது தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதியாக இருந்த திரு ஓ.வெங்கடாச்சலம் அவர்கள் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். திரு ஓ.வெங்கடாச்சலம் மிக நேர்மையாக விசாரணை நடத்தி உச்சநீதிமன்றத்திற்கு ஒரு பரிந்துரையை அளிக்கிறார்.

அதிகாரம் கையில் இருப்பதால் காவல்துறையை வைத்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் நடத்தலாம் என்று அன்றைக்கு ஜெயலலிதா தலைமையிலான அரசாங்கம் முடிவு செய்ததை கடுமையாக விமர்சித்திருந்தார். அதோடு கூட அப்போது எஸ்பியாக இருந்த அசுதோஷ் சுக்லா நேரடியாக அவருக்கு இந்த வன்முறைகளில் தொடர்பில்லை என்றபோதும் அவர் உட்பட 83 காவல்துறையினர் மீது கடுமையான விமர்சனங்களை அவர் வைத்திருந்தார். தலித் மக்கள் அதிகம் வாழும் பகுதியில் இவர்கள் திருந்தும் வரை அவர்களை நியமிக்க கூடாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 23 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். அந்த ஊருக்கு சாலை வசதி கூட இல்லை. எனவே அந்த சாலைகளை மேம்படுத்த 28 லட்ச ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும். அந்த கிராமத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் புகுந்து யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்கிற நிலைமை இருந்ததை கவனத்தில் கொண்டு யாரையேனும் கைது செய்ய வேண்டுமென்றால் அந்த கிராமத்திலுள்ள போஸ்ட் மாஸ்டர் தலைமை ஆசிரியர் ஊர் தலைவர் உட்பட 5 பேர் கொண்ட குழுவின் அனுமதி பெற்றே கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை அவர் செய்திருந்தார்.

அந்தப் பரிந்துரைகள் முழுவதையும் தனது திறமையான வாதத்தின் மூலம் உச்சநீதிமன்றத்தின் ஆணையாக அந்த வழக்கறிஞர் பெற்றுத் தந்தார்.

வழக்கு நடந்து கொண்டிருந்தபோது அந்த வழக்கறிஞர் எந்த பணமும் பெற்றுக் கொள்ளவில்லை. எனவே வழக்கு முடிந்த பிறகு அந்த கிராமத்தைச் சார்ந்த மக்கள் தங்களுக்கு கிடைத்த இழப்பீட்டில் 10 சதவீதத்தை வசூலித்து சுமார் இரண்டரை லட்ச ரூபாயை அவருக்கு அனுப்ப வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் கொடுத்துவிட்டார்கள். அந்த பணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு அனுப்பி இருந்தது. அந்த வழக்கறிஞர் அந்தப் பணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு கடிதத்தோடு திருப்பி அனுப்பி இருந்தார். மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் பெற்றுத் தருவதற்கு தனக்கு ஒரு வாய்ப்பு அளித்ததற்காக அந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவித்து, அந்த பணத்தை அப்படியே திருப்பி அனுப்பி இருந்தார்.


அந்த இளம் வழக்கறிஞர் தான் இன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து அவசர வழக்கின் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும். தவறு செய்த பாஜகவினர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்கிற ஆணைகளைப் பிறப்பித்த திரு ஐஏஎஸ்.முரளிதர்.

நேர்மையான நீதிபதிகளை இன்றைக்கு சங்பரிவார் தேடித்தேடி வேட்டையாடுகிறது. தங்கள் கருத்துக்கு, தங்கள் சதிக்கு ஒத்துப்போகாதவர்களை எல்லாம் விரட்டி விரட்டி வேட்டையாடும் இந்தக் காலத்தில் தன்னுடைய நேர்மையை அப்படியே பாதுகாத்து வைத்திருக்கிறார் நீதிபதி எஸ்.முரளிதர்.

பாதிக்கப்பட்ட மக்களோடு எந்தத் தொடர்பும் இல்லாத போதும் அவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக வாதாடியதோடு அதற்காக எந்த பணத்தையும் பெற்றுக் கொள்ளாத அந்த நீதிபதிதான், தில்லி சங்பரிவாரின் வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதி வழங்க வேண்டும், வெறுப்புப் பேச்சின் மூலம் வன்முறைக்கு வித்திட்ட பாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டு என ஆணையிட்டதற்காக இப்போது பஞ்சாப்புக்கு மாற்றப்பட்டிருக்கும் நீதிபதி எஸ்.முரளிதர்.

நீதிபதி எஸ்.முரளிதர் அவர்களின் நேர்மைக்கும் ஏழை எளிய மக்களின் பால் அவர் கொண்டிருந்த பேரன்பிற்கும் நமது பாராட்டுக்கள். அவருக்கு ராயல் சல்யூட்.

சூப்பர்டா கண்ணா . . .நீ யாரு, என்ன பேரு, எந்த ஊரு என்றெல்லாம் தெரியாது.

டெல்லி வன்முறை மூலம் கொதிப்படைந்த மனதிற்கு ஆறுதலாக இருந்தது உன் பாட்டு.

உன் குரலும் உச்சரிப்பும் உடல் மொழியும் அற்புதம். எதிர்காலத்தில் சிறந்த கலைஞனாக உருவாக வாழ்த்துக்கள்

வெறும் புகைப்படங்கள் அல்ல . . .

கீழே உள்ளவை வெறும் புகைப்படங்கள் அல்ல.

டெல்லியில் நடந்து கொண்டிருக்கும் துயரத்தின் சாட்சியங்கள்.
பாசிச கொடூரத்தின் கரங்கள் ரத்தம் தோய்ந்தவை என்பதன் அடையாளங்கள்.
மனசாட்சியுள்ள மனிதர்களை உறங்கச் செய்யாமல் தவிக்க வைக்கிற வலி.
கீழே உள்ள படங்கள் இன்னும் கவலை தருகின்றன.

காவிக்கயவர்கள் தங்களின் வெறியாட்டத்திற்கு இச்சிறார்களை இரையாக்கி விட்டார்களே என்று கோபத்தையும் வேதனையையும் தருகின்றது.

இன்னும் யாராவது மோடியை ஆதரிப்பவர்கள் இருந்தால் அவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை சங்கிகளின் குரங்குப்படைக்கு அனுப்பட்டும். 

Thursday, February 27, 2020

திசை திருப்பாதீர் வெங்காய நாயுடு . . .


இந்தியா சந்தித்த விபத்துக்களில் வெங்காய நாயுடு துணை ஜனாதிபதி என்ற பொறுப்பில் இருப்பதும்தான்.

புதுவைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர் "நீங்கள் உங்கள் தாய் மொழியை நேசியுங்கள். ஆனால் பல மொழிகளையும் கற்றுக் கொள்ளுங்கள்" 

என்று கூறியுள்ளார்.

இதுவரை சரிதான்.

அதற்கடுத்த வார்த்தைதான் சங்கி மங்கி குணாம்சத்தை காண்பித்து விட்டது.

"ஹிந்தி தெரிந்தவராக இருப்பதால்தான் நாராயணசாமிக்கு அவர் கட்சியில் மரியாதை" 

என்று  அவரை சீண்டி விட்டு

"ஒரு மொழிக்கு எதிரான வெறுப்பு என்பது மோசமானது. அதை கண்டிக்க வேண்டும்"

என்று விஷத்தை கக்கி உள்ளார்.

திருவாளர் வெங்காய நாயுடு அவர்களே, தமிழகத்தில் யாரும் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல. இந்தியை திணிப்பதற்கு எதிரானவர்கள். இந்தியை மட்டும் முன்னிறுத்து மற்ற மொழிகளை குழி தோண்டி புதைக்க எண்ணும் உங்கள் இந்தி வெறிக்கு எதிரானவர்கள். 

இந்த உண்மை தெரிந்தும் தமிழர்களை இந்தி மொழிக்கு எதிரானவர்கள் என்று திசை திருப்புவது விஷமத்தனமானது.

உங்கள் பதவிக்கேற்ற கண்ணியத்தோடு பதவிக்காலம் முடியும் வரையிலாவது செயல்படுங்கள்.
நீதிபதியை ஏன் நீக்கவில்லை?டெல்லி வன்முறையை தூண்டிய பாஜக ரௌடிகள் மீது வழக்கு பதிய வேண்டும் என்று வலியுறுத்திய, காவல்துறையின் பொறுப்பற்ற தன்மையை கண்டித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் பஞ்சாப் உயர் நீதிமன்றத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்.

மோடி வகையறா, நீதித்துறைக்கு இரண்டே சாய்ஸ்தான் கொடுத்துள்ளது.

அமித்ஷாவை விடுதலை செய்து ஆளுனர் பதவி பெற்ற சதாசிவம் போலவா?

அமித்ஷாவை விடுவிக்காமல் கொலை செய்யப்பட்ட லோயாவைப் போலவா?

உயிர் பயம் காரணமாக யாரும் லோயாவாக செயல்பட விரும்பவில்லை என்பதுதான் துயரமான யதார்த்தம். தீபக் மிஸ்ரா மீது புகார் சொன்ன ரஞ்சன் கோகாய் எப்படி பின்னாளில் மாறினார் என்பதையும் நாம் மறந்து விட முடியாது.

அதனால் நீதிபதி முரளிதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதில் எந்த வியப்பும் இல்லை.

அவரை பணி நீக்கம் செய்யாமல் விட்டு வைத்ததுதான் வியப்பளிக்கும் செய்தி.

பில்லா, ரங்கா கிரிமினல் கூட்டாளிகள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் அல்லவா!

Wednesday, February 26, 2020

ட்ரம்ப் மட்டுமல்ல மோடியும்தான் . . .


சேலம் கோட்டச்சங்கத்தலைவர் தோழர் நரசிம்மன் இந்த காணொளியை இப்போதுதான் அனுப்பினார்.

டொனால்ட் ட்ரம்ப் விவேகானந்தரின் பெயரை கொலை செய்தால் மோடி ட்ரம்பின் பெயரையே மாற்றி விட்டார்.இரண்டும் கூமுட்டைகள். இப்படித்தான் நடக்கும்

மிக்ஸர் திங்கத்தான் லாயக்கு
கலவரம் நடந்தாலும் கைது கிடையாது.டெல்லியைப் போல சென்னையிலும் கலவரம் செய்வோம் என்று வெளிப்படையாகவே மிரட்டுகிறான் எச்.ராசா. முன்பு காவல்துறை ஆணையாளர் தாக்கப்பட்டார் என்று கதை விட்டது போல முஸ்லீம் பெண்கள் கல்லால் அடித்தார்கள் என்று புது கதை கட்டுகிறான்.

டெல்லி, சென்னை என்றில்லை எல்லா இடங்களிலும் அரசுக்கு எதிரான போராட்டம் அமைதியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது.  சி.ஏ.ஏ ஆதரவு என்று புறப்படும் காவிக் கயவர்கள்தான் கலவரம் செய்கிறார்கள்.

டெல்லியில் கபில் மிஸ்ரா என்ற பொறுக்கி வன்முறையை தூண்டினான். அதே அயோக்கியத்தனத்தை தமிழகத்தில் செய்ய இந்த பொறுக்கி தூண்டுகிறான்.

ஆயுதம் வரும் முன்பு அப்புறப்படுத்த வேண்டாம். ஆயுதம் இந்த பொறுக்கிகள் கையிலும் இவர்களின் எடுபிடிகளான போலீஸ் கையிலும்தானே உள்ளது!

கலவரம் வருவதை தடுக்க வேண்டுமென்றால் தமிழக அரசு எச்.ராசாவை கைது செய்து உள்ளே தள்ள வேண்டும்.

ஆனால் கலவரம் வந்து மனித உயிர்கள் மாண்டாலும் இந்த அரசு அதனை செய்யாது.

ஏனென்றால் உலகிலேயே கையாலாகாத கேவலமான அரசே எடுபிடி அரசுதானே!

மிக்ஸர் திங்கத்தான் லாயக்கு

துக்ளக் படிச்ச ரஜினி நிலை . . .தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த அருணா ஜகதீசன் விசாரணைக் கமிஷனுக்கு ரஜினிகாந்த் நேரில் வந்துதான் ஆக வேண்டுமாம்.

ஒரு வேளை துக்ளக் படிக்காமல் இருந்திருந்தால், குருமூர்த்தி எழுதிக் கொடுத்த வசனத்தைப் பேசாமல் தப்பித்திருப்பாரோ?

பாவம் துக்ளக் அறிவாளி!!!!!


Tuesday, February 25, 2020

விவேகானந்தர் பாவம்டொனால்ட் ட்ரம்பிடம் மாட்டிக் கொண்டு முழிக்கிறார் விவேகானந்தர்


Monday, February 24, 2020

உடான்ஸ் புதையலுக்கு இவ்வளவு அளப்பறையா?
இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒரு புதிய சங்கி, ஒரு வாட்ஸப் குழுவில் ஒரு செய்தியை பரபரப்பாக பகிர்ந்து கொண்டிருந்தார்.

உத்திரபிரதேச மாநிலம் சோன் பத்ரா மாவட்டத்தில் தங்கம் உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அங்கே உள்ள தங்கத்தின் அளவு 3,350 டன். அதன் மதிப்பு 12 லட்சம் கோடி ரூபாய்.  இப்போது இந்தியாவில் உள்ள தங்கத்தின் கையிருப்பை விட மூன்று மடங்கு அதிகம் இது. யோகி தங்க வேட்டையாடி விட்டார். ராமருக்கு கோயில் கட்டுவது என்று முடிவெடுக்கப்பட்டதால் ராமரைத் தேடி லட்சுமியே வந்து விட்டார்.

மூத்த சங்கி குருமூர்த்தியாரோ இனி தங்கத்தின் விலையை உலகச் சந்தையில் நிர்ணயம் செய்யும் சக்தியாகவே திகழும் என்று புளகாங்கிதம் அடைந்து விட்டார்.

மோடி வகையறாக்களின் புளுகு வேலைகளுக்கு எப்போதுமே அல்பாயுசுதான் என்பது இந்த விஷயத்திலும் நிரூபணமாகி விட்டது.

மத்தியரசின் புவியியல் ஆய்வு மையம் யோகியின் தங்க வேட்டையை வெட்டி பந்தா என்று அறிவித்து விட்டது.

சோன் பத்ரா மாவட்டத்தில் ஏற்கனவே பல ஆய்வுகள் நடந்துள்ளது என்று அங்கே கிடைக்க வாய்ப்புள்ள 52,665 டன் தங்கத்தாதுவை பிரித்தெடுத்தால் அதிகாட்சம் 160 கிலோ தங்கம் மட்டுமே கிடைக்கும் என்றும் 3350 டன் தங்கம் என்பதெல்லாம் தவறான தகவல்  என்று தெரிவித்து சங்கிகள் வாய் திறந்தாகே அதெல்லாம் பொய்தான் என்பதை நிரூபித்து விட்டது.

160 கிலோ தங்கம் கிடைக்கும் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். முப்பத்தி மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் கிலோவிற்கும் 160 கிலோ என்பதற்கும் வித்தியாசம் உள்ளதல்லவா?

ஒரு  படத்தில் கவுண்டமணியின் வலையில் திமிங்கலம் சிக்கியிருப்பதாக நினைத்து “திமிங்கலத்தில் பல், தோல் எல்லாம் மருந்து, அதனால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று கற்பனைக் கோட்டை கட்டுவார்கள். ஆனால் வலையில் சிக்கியது என்னவோ அவரது முறைப் பெண் கோவை சரளாவின் காதலனான செந்தில்.

அது போன்ற காமெடியாகி விட்டது யோகியின் தங்க வேட்டை.

உண்மை தெரிவதற்கு முன்பாக

“ராமரைத் தேடி லட்சுமி வந்து விட்டார்”
“தங்கத்தின் விலையை முடிவு செய்யும் கட்டுப்பாடு இந்தியாவிற்கு வந்து விடும்”

என்று கதை கட்டிய சங்கிகள் யாரும் இப்படி தவறான தகவலை பரப்பி விட்டோமே என்று  அசிங்கப்பட்டு வருத்தமோ, மன்னிப்போ தெரிவிக்க மாட்டார்கள்.

ஏனென்றால் பொய் பேசுவதும் வதந்திகளை பரப்புவதும்தான் அவர்களின் தொழில். வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை எல்லாம் இருப்பவர்கள் எப்படி சங்கியாக இருக்க முடியும்!


அயோக்கியர்கள் ஆட்டம் ஆரம்பம் . . .


டெல்லியில் நடந்து கொண்டிருக்கும் மோசமான சூழல் பற்றி தோழர் ஷாஜஹான் அவர்களின் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அமைதியாக நடைபெற்று வரும் போராட்டங்களை வன்முறை கொண்டு ஒடுக்க முயலும் அயோக்கியத்தனத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். 

ஆட்சி செய்ய அருகதை அற்ற பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகள் வேறென்ன செய்வார்கள்?


தில்லியில் நிலைமை மோசம் என்று தகவல்கள் வருகிறதே என்னவாயிற்று என்று இன்பாக்சில் ஆட்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். வீடியோக்களும் வந்து கொண்டே இருக்கின்றன.

ஷாஹீன்பாக் பகுதியில் பல நாட்களாக அமைதியான போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

இப்போது பிரச்சினை ஏற்பட்டிருப்பது யமுனைக்கு அப்பால் வடகிழக்கு தில்லிப் பகுதியில். இந்தப் பகுதியில் முஸ்லிம்களின் குடியிருப்புகள் அடரத்தியாக உள்ளன.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக அங்கும் பெண்கள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுவரையிலும் அமைதியான போராட்டமாகவே நடந்து வந்திருக்கிறது.

அவர்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள் பாஜகவினர். இதைத்தூண்டி விட்டவர் பாஜவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா. சிஏஏ ஆதரவுப் போராட்டம் என்ற பெயரில் ஊர்வலம் நடத்தி, சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இவர்கள் திட்டமிட்டு டிராக்டர்களில் கற்களைக் கொண்டு வந்து இறக்கி வைத்த வீடியோக்களும் வெளிவந்துள்ளன. சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்களை விரட்டியடித்து அதை முடிவுக்குக் கொண்டு வரவில்லை என்றால், நாங்களே அதைச் செய்வோம், டிரம்ப் போகட்டும் என்றுதான் விட்டுவைத்திருக்கிறோம் என்று பகிரங்கமாக போலீசுக்கு மிரட்டல் விட்டிருக்கிறார் கபில் மிஸ்ரா.

பாஜக பலத்த அடி வாங்கிய தில்லி தேர்தலில் தோல்வி கண்டவர்களில் இவரும் ஒருவர். தில்லி தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த அடிக்கு பழிவாங்குவதும் ஒரு நோக்கமாக இருக்கலாம்.

தில்லி போலீஸ் வழக்கம்போல பாஜகவினருக்கு ஆதரவாக, கண்டு கொள்ளாமல் இருக்கிறது. அவர்கள் கல்வீச்சு நடத்தியதால் சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்களும் திருப்பி கல்வீசியிருக்கிறார்கள். இப்போது “இருதரப்பும் மோதிக்கொண்டதாக” செய்திகள் வெளியிடப்படுகின்றன.

பொதுமக்களில் ஒருவரும் காவலர்களில் ஒருவரும் உயிரிழந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எல்லா ஊடகங்களும் டிரம்ப்பின் பின்னால் இருப்பதால் செய்தி ஊடகங்களில் இதுகுறித்த செய்திகள் இப்போதுதான் மெதுவாக வந்து கொண்டிருக்கின்றன. அதுவும்கூட சமூக ஊடகங்களில் வெளிவந்த காரணத்தால்தான்.

நிலைமை வருத்தம் தருவதாக கேஜ்ரிவால் அறிக்கை விட்டிருக்கிறார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்று கவர்னர் சொல்கிறார்!

முஸ்லிம்களின் வீடுகள் குறிவைத்துத் தாக்கப்படுவதும், அடையாளம் கண்டு தாக்குவதும் பாஜக ஆர்எஸ்எஸ்காரர்களுக்கு பழகிப்போன விஷயம்.

நிலைமையைப் பார்த்தால், பழைய தில்லியில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் பாதிக்கப்படும் ஆபத்துகள் இருப்பதாகவே தெரிகிறது. காவல்துறை மனச்சாட்சிப்படி செயல்பட்டால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

சபர்மதி ஆஸ்ரமத்தில்1994 ம் வருடம் எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பதினைந்தாவது பொது மாநாடு அகமதாபாத் நகரில் நடைபெற்றது. 

மாநாடு முடிந்த இரண்டாவது நாள்தான் எங்களுக்கு ட்ரெய்ன் என்பதால் மறைந்த மூத்த தோழர் ஆர்.பி.எஸ், அதிகாரியாக சமீபத்தில் ஓய்வு பெற்ற தோழர் கே,அண்ணாதுரை ஆகியோரோடு சபர்மதி ஆஸ்ரமம் சென்றிருந்தேன்.

முழுக்க முழுக்க அமைதியாக இருந்த ஆஸ்ரமத்தை சுற்றி வருகையில் "காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டபோது அணிந்த ஆடை" என்று ரத்தக் கறை தோய்ந்த ஆடை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

"மதுரையில் உள்ள காந்தி நினைவகத்திலும் இதே போல் ரத்தக்கறை தோய்ந்த ஆடை உள்ளதே, இங்கேயும் எப்படி உள்ளது?"

என்று உடன் வந்த தோழர்களிடம் சற்று உரக்க கேட்டவுடன்,  ஒரு வாலிபர் வேகமாக வந்து

"பாபுஜி இங்கே இன்னும் வாழ்வதாக நாங்கள் உணர்கிறோம். இங்கே சத்தம் போடாதீர்கள்"

என்று ஆங்கிலத்தில் மெல்லிய குரலில் அதட்ட

அதன் பின்பு வாயே திறக்கவில்லை.

அந்த இடத்திற்குத்தான் இரண்டு கொடியவர்கள் சென்றுள்ளார்கள். மகாத்மா காந்தியைப் பற்றி ஏதும் அறியாத ஒரு  கொடியவர்கள், அங்கே இருந்த புத்தகத்தில் இன்னொரு கொடியவருக்கு நன்றி சொல்லியுள்ளார். 

பிகு:

அன்றைய தினம் காலையிலே இன்னொரு பல்பு வாங்கினோம். அது பற்றி நாளை 

தாளினாமிக்ஸ் காலினாமிக்ஸ்*தாளினாமிக்ஸா...*
*காலினாமிக்ஸா...*

க.சுவாமிநாதன்
துணைத்தலைவர்,
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு
**********************************

மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய நாள்  வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையின் (2020)  பகுதி 1 ன் கடைசி அத்தியாயம் "தாளினாமிக்ஸ்" என்ற தலைப்பில் உள்ளது.

"தாளி" என்றால் இந்தியில் சாப்பாடு என்று அர்த்தம். பொருளாதார ஆய்வறிக்கை மக்களின் பசியைப் பற்றி ரொம்ப கவலைப்பட்டிருக்கிறது என்று இத் தலைப்பை பார்த்தால் தோன்றும். 

"மேக்ரோ ஸ்கேன்" இணைய பக்கத்தில் பிப்ரவரி 6, 2020 அன்று பொருளாதார நிபுணர் பேரா சுப்பிரமணியம் எழுதியுள்ள கட்டுரையைப் படியுங்கள். 

அவர் போடுகிற கணக்கு இது. இந்த ஆய்வறிக்கை தேச அளவில் ஒரு வேளை உணவுக்கு சைவம் எனில் ரூ 23 ம், அசைவம் எனில் ரூ 37 ம் சராசரியாக ஆகுமென (2019-20 விலைகள் அடிப்படையில்) மதிப்பிட்டுள்ளது. சைவம் சாப்பிடுபவர்கள் 3 பேர், அசைவம் சாப்பிடுபவர்கள் 7 பேர் என விகிதம் இருக்கலாம் என்கிறது அதே அறிக்கை. அப்படியெனில் ஒரு வேளை சைவம், அசைவம் இரண்டிற்குமான சராசரி உணவு செலவுக்கு  ரூ (23×3) + (37×7) ÷ 10 என்று கணக்கு போட வேண்டும். கால்குலேட்டரை தட்டுங்கள். (69) + (259) ÷ 10 = ரூ 32.8.  சரியா கணக்கு? அறிக்கை இரண்டு வேளை உணவாவது வேண்டாமா என்று "கருணை கணக்கும்" போடுகிறது. எவ்வளவு ? ஒரு நாளைக்கு ஒருவருக்கு ரூ 32.8× 2 வேளை= ரூ 65.60. ரூ 65 என வைத்துக் கொள்வோம். இது இருந்தால் ஒரு மனிதர் பசியில்லாமல் இருக்கலாம். 

"சாப்பாட்டு கணக்கை" இப்படிப் போடுகிறது ஆய்வறிக்கை. ஆனால் "நிதி அயோக்" வறுமைக் கோட்டிற்காக அங்கீகரித்த டெண்டுல்கர் குழு 2012 ல் நிர்ணயித்த தொகை கிராமங்களில் ஒருவருக்கு ஒரு நாளைக்கு வருமானம் ரூ 27, நகரங்களில் ரூ 33. அப்படியெனில் சராசரி ரூ 30. விவசாயத் தொழிலாளர், ஆலைத் தொழிலாளர்க்கான விலைவாசி குறியீட்டெண் 2012 ல் இருந்து 2020 வரை 150 சதவீதம் உயர்ந்துள்ளது. அப்படியெனில் வறுமைக் கோட்டிற்கு 2012 ல் ரூ 30 எனில் இப்போது ரூ 30× 150 %= ரூ 45 ஆகும். மறுபடியும் கால்குலேட்டரை தட்டி சரி பாருங்கள். 

இரண்டு கணக்குகளும் அரசாங்க கணக்குகளே. ஒரு மனிதர் பசியில்லாமல் இருக்க "தாளினாமிக்ஸ்" கணக்குப்படி ரூ 65  வேண்டும். ஆனால் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் இவர்கள் கணக்குப்படி தின வருமானம் ரூ 45 க்கு கீழே இருப்பவர்கள். சாப்பாட்டுக்கே வழி இல்லாதவர்கள் கூட வறுமைக் கோட்டிற்கு மேல் வந்து விடுவார்கள் என்பதே  கணக்கு. இவர்கள் சொல்கிற வறுமை கோட்டிற்கு மேலே உள்ளவர்களும் சாப்பாட்டுக்கு அல்லாடுவார்கள் என்று அர்த்தம். 

கணக்கு தெரியவில்லையா? கால்குலேட்டர் இவர்களிடம் இல்லையா? எல்லாம் உண்டு. உதட்டுக்கும் உள்ளத்திற்கும் சம்பந்தமில்லாதவர்கள் என்பதுதான். 

பொருளாதார நிபுணர் சுப்பிரமணியம் வார்த்தைகளில் சொல்வதானால் " இது தாளினாமிக்ஸ் அல்ல; காலினாமிக்ஸ்". 

*(நன்றி : "A brief exercise not taking the Economic survey 2020 seriously" By S. Subramaniam, Economist- Wire 06.02.2020.)*

நன்றி தீக்கதிர் 24.02.2020

Saturday, February 22, 2020

முற்றுகைக்கு அணிந்துரை
“முற்றுகை”  நூலிற்கு எங்கள் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் எழுதிய அணிந்துரையை பெருமிதத்தோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி தோழரே . . .

*அணிந்துரை*"இன்று பிற்போக்கான கருத்தியலால் பெரும் தாக்குதலுக்கு அதிகமாக  ஆளாக்கப்படுவது வரலாறுதான்

*கே.என்.பணிக்கர்,* வரலாற்றியலாளர்

இன்று உள்ளூர் வரலாறுகளில் துவங்கி தேசத்தின் வரலாறு வரை இந்த அபாயம் நீள்கிறது. கருத்து மோதல்கள், போராட்டங்கள் எல்லாம் நவீன இந்திய நிர்மாணத்தின் பிரிக்க இயலாத பகுதி. அவை குறித்த பதிவுகள், பகிர்வுகள், பார்வைகள் தலைமுறையாய் தலைமுறையாய் எடுத்துச் செல்லப்பட வேண்டியுள்ளது. அத்தகைய முயற்சி ஒன்றை தோழர் எஸ்.ராமன் (பொதுச் செயலாளர், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், வேலூர் கோட்டம்) செய்துள்ளார். சமூக வலைத்தளத்தில் ஆயிரத்திற்கும் மேலான கருத்தாழமிக்க பதிவுகளை செய்திருக்கிற அவர் மிகுந்த அக்கறையோடு "முற்றுகை" புனைவு இலக்கியம் மூலம் ஓர் பெருமைமிகு வரலாற்றை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்

*"இலாக்கோ விஜில்"* என்பது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பெருமை மிக்க வரலாற்றில் ஓர் முக்கியமான நிகழ்வு. 1960 களில் இயந்திர மயத்திற்கு எதிராக மாதக் கணக்கில் நீடித்த போராட்டம். கம்ப்யூட்டரை நிறுவ விடாமல் இலாக்கோ கட்டிடத்தை சுற்றி அமர்ந்து இரவும் பகலும் கண்காணித்து தடுத்து நிறுத்திய காவியம். அன்றைய இயந்திர மயத்திற்கும், இன்றைய இயந்திர மயத்திற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. வளர்ச்சியின் தேவை உருவாக்கிய இயந்திர மயம் அல்ல அது. அது மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தால் பல ஆண்டுகளுக்கு எல்..சியில் புதிய ரத்தம் பாய்ச்சப்பட்டிருக்காது. பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் பிந்தைய பல ஆண்டுகளில் பணி நியமனம் பெற்று எல்..சிக்கு வந்திருக்க இயலாது. எல்..சியே வெளியிட்டுள்ள *"Tryst with trust"* வரலாற்று நூலில் இந்த போராட்டம்  பற்றி எழுதப்பட்டுள்ளது. அதன் வெற்றி பல நடுத்தர வர்க்க வேலை வாய்ப்பு உள்ள நிறுவனங்களில் இயந்திர மயத்தை பல ஆண்டுகளுக்கு தள்ளிப் போட்டுவிட்டது எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. எதிர்க் கருத்து கொண்டிருப்போர் கூட இதன் தாக்கத்தை இப்படி தங்கள் கோணத்தில் இருந்து "அங்கீகரிக்க" வேண்டியிருந்தது இதன் வெற்றிக்கு சாட்சியம்

இப் போராட்டம், ஓர் தொழிற்சங்கம் எப்படி சமூக பிரச்சினைகளோடு தொழிலரங்க நிகழ்வுகளை இணைக்க வேண்டும்; அதற்கான கருத்துருவாக்கம் விரிந்த தளத்தில் எவ்வாறு நடந்தேற வேண்டும்; அயர்வில்லாமல் நீடித்த களங்களை எப்படி கட்டமைப்பது; அரசியல் முரண்பாடுகளை எவ்வாறு கையாள்வது; இதர நேச சக்திகளை எப்படி இணைப்பது... என்கிற முன்னுதாரணத்தை இந்திய தொழிற்சங்க இயக்கத்திற்கு தந்த வரலாற்று நிகழ்வாகும்

இனி எஸ்.ராமனின் படைப்பிற்கு வருவோம். இந்த நூலை உருவாக்க இராமன் கொல்கத்தாவிற்கு நேரில் சென்று தரவுகளைத் திரட்டியுள்ளார். இன்னும் இப் போராட்டத்திற்கு வாழும் சாட்சியமாக உள்ள 97 வயதான முன்னோடித் தலைவர் சந்திர சேகர போஸ் அவர்களோடு கொல்கத்தாவில் சந்திப்பை நிகழ்த்தி மணிக் கணக்கில் உரையாடியுள்ளார். "இலாக்கோ விஜில்" நிகழ்ந்த இடம் எப்படி பளபளக்கிற கட்டிடமாக எழுந்துள்ளது என்பதை முகப்பு அட்டை நமக்கு காண்பிக்கிறது. 1960- பிரம்மாண்ட களத்தின் காட்சியும் முகப்பு அட்டையில் உள்ளது. கட்டிடம் மாறியிருக்கலாம், ஆனால் அன்று கட்டப்பட்ட இயக்கம், ஒற்றுமை இன்றும் வலுவோடு உள்ளது. இதை நயத்தோடு, ரசிப்போடு இப் புனைவு நம்மிடம் பேசுகிறது. இந்த புனைவு முழுக்க உண்மைகள், ஆதாரங்கள் அடிப்படையில் அமைந்திருப்பதால் நம்பகத்தன்மை சற்றும் சிதையாமல் எங்கும் மனதிற்குள் நெருடாமல் நம்மை அழைத்து செல்கிறது

ஓர் "பிளாஷ் பேக்" ஆகத் துவங்கும் இக் கதை நிகழ் கால கேள்விகளை வரலாற்றோடு இணைப்பது சிறப்பு. 1960 களில் இயந்திரமயத்தை எதிர்த்து வெற்றி கண்ட அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் 1990 களில் நவீன தொழில் நுட்பத்தை ஏற்றுக் கொண்டது ஏன்? என்ற வினாவே அது. அன்று களம் கண்ட அசோக் பானர்ஜி என்கிற பாத்திரம் இது குறித்து போஸ் பாபுவிடம் எழுப்புவதாக துவங்குகிறது. அன்று விரிவாக்கத்தின் பின்புலத்தில் அல்லாது கொணரப்பட்ட இயந்திரமயத்திற்கும் 1990 களில் வளர்ச்சியும், போட்டியும் உருவாக்கிய தேவை அடிப்படையில் கொண்டு வரப்பட்ட நவீன தொழில் நுட்பத்திற்குமான வித்தியாசத்தை இப் படைப்பு அருமையாக விளக்குகிறது.

1994 ல் இன்சூரன்ஸ் துறையில் பன்னாட்டு மூலதனம், தனியார்களை அனுமதிக்க வேண்டுமென்று வழங்கப்பட்ட மல்ஹோத்ரா குழு பரிந்துரைகள் ஐந்தாண்டுகள் தள்ளிப் போடப்பட்டதால் அந்த கால அவகாசம் எல்..சி தன்னை தொழில் நுடப ரீதியாக தயார் செய்ய பயன்படுத்திக் கொண்டது என முன்னாள் எல்..சி சேர்மன் ஒருவரே 2006 எல்..சி பொன்விழா மலரில் எழுதியதை இங்கு இணைத்துப் பார்க்க வேண்டியது அவசியம். (ஐந்தாண்டுகள் தள்ளிப்போனதற்கான .... வின் போராட்டம் தனி அத்தியாயமாக வேறு வாய்ப்பில் பகிரப்பட வேண்டும்). போராட்ட வளர்ச்சி- நவீன தொழில் நுட்பம்- உபரி- மேலும் வளர்ச்சி- உபரியை உள் வாங்குதல் என்ற புதிய அனுபவத்தை இதன் மூலம் எல்..சி 1990 களுக்கு பிந்திய 20 ஆண்டுகளில் காண்பித்தது. இருப்பினும் முதலாளித்துவ சமூகம் பிக் டேட்டா, செயற்கை அறிவூட்டல் போன்று அடுத்தடுத்து நகரும் வேளையில்  தொழிற்சங்கமும் தனது எதிர் வினையை காலத்திற்கேற்ப வழி வகுக்க வேண்டி இருக்கும். " அதீத இயந்திர மயம் வேலைகளை பறிக்கும்; தேவைக்கு குறைவான இயந்திர மயம் தொழிலையே பாதிக்கும்" என்ற உலகமயப் போட்டிச் சூழலுக்கு ஏற்ப அணுகுமுறைகள் அமைய வேண்டியுள்ளன.

1960 களில் இப் பிரச்சினையை முதன் முதலில் சங்கத்திற்குள் விவாதத்திற்கு கொண்டு வந்த பெருமை தமிழகத்திற்கு உண்டு. திண்டுக்கல் ஆர். நாராயணன் தகவல்களோடு இது குறித்த தரவுகளை திரட்டி . ... வின் அவையில் தோழர் ஆர்.கோவிந்தராஜன் முன் வைத்தார் என்பதே அது

எஸ்.இராமனின் இப் படைப்பு இலாக்கோ விஜில் இயக்கத்தை உணர்ச்சிபூர்வமாக மட்டும் நம்மோடு பேசவில்லை. அரசியல் பின் புலத்தோடு ஆழமாக உரையாடுகிறது. எல்..சி தேசிய மயமான வரலாற்றையும் அது தொட்டுச் செல்கிறது

தொழிற்சங்கத் தலைமையின் காதுகள் ஊழியர்களின் குரல்களை கேட்பதாகவும், அவர்களின் உரையாடல்கள் ஊழியர் கேள்விகளுக்கு விடை அளிப்பதாகவும் இருக்க வேண்டும் என்பதை 1965 டிசம்பர் 7,8 டில்லி கருத்தரங்கத்திற்கான ரயில் பயணம் குறித்த சித்தரிப்பின் மூலம் அழகாக எடுத்துரைத்துள்ளார்

இயந்திரமயம் உருவாக்குகிற அபாயங்களை வேலையின்மை என்கிற சமூகப் பிரச்சினையோடு இணைத்ததால் விரிந்த சமூக ஆதரவை இந்த போராட்டம் பெற முடிந்தது.

டெல்லி கருத்தரங்கில் 1965 ல் பங்கேற்ற மூன்று தலைவர்கள் (ஜோதி பாசு, பேரறிஞர் அண்ணா, எச்.என். பகுகுணா ஆகியோர்) பிற் காலத்தில் முதல்வர்களாக அடுத்த சில ஆண்டுகளிலேயே அமர்ந்தார்கள் என்பது இவ் வியக்கம் எவ்வளவு உயர் கவனத்தை அரசியல் அரங்கில் பெற்றது என்பதற்கு சான்று. காங்கிரசின் அன்றைய "இளம் துருக்கியர்", பிற் காலத்தில் பிரதமர் நாற்காலியில் அமர்ந்த சந்திரசேகர் அவர்கள் வங்க தேர்தல் பிரச்சாரத்தில் இயந்திர மயத்தை ஆதரிக்க இயலாமல் பின் வாங்கியதும் இன்னொரு சாட்சியம். சுவையாக இத்தகைய தகவல்கள் இலக்கிய நயம் சிதையாமல் இதில் விரவிக் காட்சியளிக்கின்றன. ஜோதிபாசு அவர்கள் விஜில் இயக்கத்திலேயே கலந்து கொண்டதும் இபக்கத்தின் வீரியம், வீச்சுக்கு உதாரணம்

மாதக் கணக்கில் நடைபெற்ற விஜில் போராட்ட களம் எப்படி பயிலரங்குகளாக மாறின என்பதை அசோக், நாகேன் சௌத்திரி உரையாடல்கள் விவரிக்கின்றன. துர்க்கா பூஜைதானே வங்கத்தின் தீபாவளி. மாதக் கணக்கில் தொடர்ந்த இலாக்கோ விஜில் போராட்டத்திற்கு இடையில் துர்க்கா பூஜை வருகிறது. களத்திலே அது கொண்டாடப்படுவது உணர்ச்சிபூர்வமானது. ராமனின் விவரிப்பும் அருமை

கொல்கத்தா நகர தொழிற்சங்கங்களின் பிணைப்பு இந்த போராட்டத்திற்கு பெரும் பலமாக இருந்தது. துறைமுகத்தில் இருந்தும், தொலைத் தொடர்பு துறையில் இருந்தும் கிடைத்த தகவல்கள் எதிர் வியூகத்தை அறியவும், உடைக்கவும் பயன்பட்டன. எல்லாத் தரப்பு தொழிலாளர்களும்- அமைப்பு சார் துறைகள் துவங்கி துப்புரவு தொழிலாளர் உள்ளிட்டடர்ன் போட்டு இலாக்கோ விஜிலில் அமர்ந்ததும் பரவசப்படுத்துகிற நிகழ்வு

கொல்கத்தாவில் நடைபெற்ற முத்தரப்பு மாநாடு பற்றிய விவரிப்புகள் பிரமிப்பை உண்டாக்குகின்றன. அரசு தரப்பில் தொழிலாளர் அமைச்சர், .... தரப்பில் சரோஜ் சவுத்ரி, சுனில் மைத்ரா ஆகியோர் பங்கேற்ற கூட்டம். அதில் சுவாரசியமான தகவல் உண்டு. பெரும் தொழிலதிபர்  ஜே.ஆர்.டி. டாட்டா அந்த முத்தரப்பு மாநாட்டில் கலந்து கொண்டு இருந்தார். அது குறித்த உரையாடல்கள் அரசியல் ஆழ்த்தோடு விவரிக்கப்பட்டுள்ளன. எல்..சி சேர்மனின் அதிகார தோரணை, தொழிற்சங்கத் தலைவர்களின் உறுதியான பதில்கள் வரலாறு குறித்த பெருமிதம் தருபவை. சந்திரசேகர போஸ் அவர்களின் பகிர்வுகளின் தாக்கம் அதில் வெளிப்படுகிறது

ஜோதிபாசு துணை முதல்வராக அமர்ந்தவுடன் போராட்டம் முடிவுக்கு வருகிறது. இடதுசாரி அரசு, தொழிற்சங்கப் போராட்டத்திற்கு எதிராக காவல் துறையைப் பயன்படுத்த மாட்டோம் என்ற நிலையை எடுத்த பின் புலத்தில் எல்..சி நிர்வாகத்திற்கும் வேறு வழியில்லை.

இவ் வரலாறை கற்பனை வளத்தோடு மெய்த் தன்மைக்கு பங்கம் வராமல் சொல்லியிருப்பது இராமனின் வெற்றி. அவரின் எழுத்து சுகமான வாசிப்பை தருகிறது. 22 அத்தியாயங்கள் 80 பக்கங்கள் என்று விரிகிற நூல் அலுப்பு தட்டாமல் நம்மோடு கைகோர்த்து பயணிக்கிறது

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் விசாகப்பட்டினம் மாநாட்டையொட்டியும், எல்..சியில் 8000 புதிய ஊழியர்கள் உள்ளே வரும் வேளையிலும் இது அச்சாகி வருவது பொருத்தமான நேரம்

வேலூர் கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் முன் முயற்சிக்கும், தமிழக கோட்டங்களின் ஒத்துழைப்பிற்கும் பாராட்டுக்கள்

தோழர் எஸ்.ராமனின் அரும் பணிக்கு வாழ்த்துக்கள்.

அணிந்துரை எழுதுகிற வாய்ப்பிற்கு மனம் நிறைந்த நன்றி.

*.சுவாமிநாதன்*

துணைத் தலைவர்,
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு
சென்னை.