Friday, April 3, 2020

மகாத்மா சொன்னதையாவது சொல்லியிருக்கலாமே மோடி



15.08.1947 அன்று இந்தியா விடுதலை பெற்று சுதந்திர தினம் கொண்டாடப் பட்ட நேரத்தில் மகாத்மா காந்தி டெல்லியில் இல்லை. பிரிவினையை ஒட்டி நடைபெற்ற கலவரங்களை கட்டுப்படுத்த கல்கத்தா சென்றிருந்தார்.

15.08.1947 அன்று மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று அவரை பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது 

"ஒன்றுமில்லை"

என்று பதிலளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் தொற்று இந்தியாவில் எந்த அளவில் உள்ளது?

கட்டுப்படுத்துவதற்கு இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் போதுமானதாக உள்ளதா?

நிலைமையில் முன்னேற்றம் உள்ளதா அல்லது மோசமாகி உள்ளதா?

அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன?

போதுமான மருத்துவ உபகரணங்கள் நாடு முழுதும் சீராக உள்ளதா?

ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 க்குப் பிறகும் தொடருமா?

வாழ்வாதாரம் இழந்து நிற்கும் தொழிலாளர்களுக்கு அரசு என்ன செய்யப் போகிறது?

மூன்று மாத இ.எம்.ஐ தள்ளி வைப்பு என்ற பெயரில் நிவாரணத்திற்குப் பதிலாக தண்டனை வழங்கப்பட்டுள்ளதே, அதை அரசு மாற்றி அமைக்கப் போகிறதா?

பிரதமர் நிவாரண நிதி என்று ஏற்கனவே ஒரு நிதி உள்ள போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பிஎம்-கேர்ஸ் நிதி பற்றி எண்ணற்ற ஐயங்கள் எழுப்பப்பட்டுள்ளதே, அது பற்றிய விளக்கம் என்ன?

ஒரு பிரதமர் மக்களிடம் உரையாற்றினால் இந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

அதற்கெல்லாம் பதில் இல்லையென்றால் அல்லது பதில் சொல்வது சங்கடமான ஒன்றாக இருந்திருந்தால் மகாத்மா காந்தி போல "ஒன்றுமில்லை" என்றாவது சொல்லியிருக்க வேண்டும்.

அதை விடுத்து 

"விளக்கேற்று, டார்ச் அடி, செல்போன் லைட் காண்பி"

என்று சொல்வதெல்லாம் பிரதமரின் வேலை அல்ல. இந்த சமயத்தில் அதெல்லாம் பொருத்தமும் அல்ல.

அப்படி சினிமாத்தனமான அறிவிப்புக்களை மட்டுமே அவரால் செய்ய முடியும் என்றால் அவரை கலாய்ப்போம், நக்கலடிப்போம், கழுவி கழுவி ஊற்றுவோம். 

ஏனென்றால் 

அவை பொறுப்பற்ற மனிதனின் பொறுப்பற்ற செய்கைக்கான எதிர் வினை. அவ்வளவுதான்.

கண்ணாடியை திருப்பினா ஆட்டோ ஒடாது மோடி . . . 


No comments:

Post a Comment