Sunday, April 12, 2020

கொரோனா - கேரள உதாரணம், குஜராத் மாடல்



மேலே உள்ளது அமெரிக்காவிலிருந்து வெளியாகும் வாஷிங்க்டன் போஸ்ட் பத்திரிக்கை கேரள மாநிலம் எடுத்த கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டி வெளியிட்ட கட்டுரையின் சுருக்கம்.

அக்கட்டுரையை முழுமையாக வாசிக்க கீழே உள்ள இணைப்பிற்குச் செல்லவும்.


கம்யூனிஸ்ட் அரசு என்பதால் இதனை ஏற்கும் மனம் இல்லாதவர்கள் கீழே உள்ள படத்தையும் பார்த்து விடுங்கள்.



மேலேயுள்ள புள்ளி விபரங்கள் எல்லாம் மத்தியரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் உள்ளதுதான். 

கேரள அரசின் செயல்பாட்டை மட்டும் இந்த விபரங்கள் சொல்லவில்லை. மத்தியரசின் வஞ்சனையையும் கூட.

கேரள அரசை பாராட்டும் அதே நேரத்தில் இன்றைய ஹிந்து நாளிதழில் வெளி வந்துள்ள ஒரு செய்தியையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

நேற்று குஜராத் மாநிலம் சூரத் நகரில் புலம் பெயர் தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். பத்து நாட்களில் இது இரண்டாவது சம்பவம். 

இச்சம்பவம் தொடர்பாக குஜராத் மாநில காவல்துறை தலைவர் (DGP) சிவானந்த ஜா, உள்துறை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதம் முக்கியமானது.

"நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு போதுமான உணவும் அடிப்படை சுகாதார வசதிகளும் கிடைக்காத காரணத்தால்தான் அவர்கள் பதட்டமடைகிறார்கள். எந்த வருமானமும் இல்லாமல் உணவும் இல்லாமல் இன்னல்களை அனுபவிப்பதற்கு பதிலாக சொந்த ஊருக்கே திரும்புவது மேல் என்ற சிந்தனைக்கு அவர்களுக்கு தள்ளப்படுகின்றார்கள்"

என்று அக்கடிதத்தில் அவர் எழுதியுள்ளார்.

மிகவும் பெரிதாக காண்பிக்கப்பட்ட குஜராத் மாடலே இப்படி என்றால் 

ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு காசு கொடுக்காமல் நூற்றுக் கணக்கான குழந்தைகளை சாகடித்த யோகி சாமியாரின் உ.பி மாநில நிலை என்னவோ?

மோடியின் தொகுதியில் குழந்தைகள் புல்லைத் தின்றார்கள் என்ற செய்தியை வெளியிட்ட ஊடகவியாளர்கள் மிரட்டப் பட்டார்கள்.

உபி எல்லைக்கு வந்த தொழிலாளர்கள் மீது ப்ளீச்சிங் பௌடர் கலந்த தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

மற்ற பணிகள் மட்டும் உன்னதமாகவா இருக்கப்போகிறது?


No comments:

Post a Comment