Showing posts with label வெறுப்பு. Show all posts
Showing posts with label வெறுப்பு. Show all posts

Saturday, November 16, 2024

இப்படித்தான் சங்கிகள் வெறுப்பை விதைக்கிறார்கள்.


மத்யமர் ஆட்டுக்காரன் குழு என்ற பெயரை மத்யமர் பொய்ப்பிரச்சாரக் குழு என்று மாற்றி வைத்து விடலாம். அந்த அளவிற்கு கூசாமல் பொய்களை உலவ விடுகிறார்கள்.

அந்த குழுவில் பார்த்த பதிவொன்று கீழே.


 

 அவர் மசூதி என்று சொல்வது இந்து அறநிலையத்துறையின் இலச்சினை. ஜெயலலிதா காலத்திலிருந்தே பயன்பாட்டில் உள்ளது. “ பக்தர்கள் இரு கை கூப்பி வணங்குவது”  போல வடிவமைக்கப்பட்டுள்ள இலச்சினை  சங்கிகளின் காவிக் கண்களுக்கு மசூதியாகத் தெரிகிறது.

 


அதே போல பசலி ஆண்டு என்பது வருவாய்த்துறை பயன்படுத்தும் ஆண்டாகும். ஜூலை முதல் ஜுன் வரை உள்ள காலகட்டம் இது. இந்தியா முழுதும் பின்பற்றப்பட்டு வருகின்ற ஒன்று. இதிலே எங்கே இருந்து அரேபிய ஆண்டு வருகிறது? இஸ்லாமிய ஆண்டு ஹிஜிரி ஆண்டு என்றுதான் அழைக்கப் படுகிறது,

 இவர்களாகவே ஒரு பொய்யைச் சொல்லி இஸ்லாமிய மயம், வக்ப் வாரியம், நில ஆக்கிரமிப்பு என்றெல்லாம் கதை கட்டுகிறார்கள்.

 மூடச் சங்கிகள் இந்த பொய்யை பரப்புவார்கள். சங்கிகள் அல்லாத இந்துக்களையும் மூளைச்சலவை செய்வார்கள்.

 இப்படி வெறுப்பை விதைத்துத்தான் மோடி வகையறாக்கள் தேர்தலில் அறுவடை செய்கிறார்கள். பொய்கள் எடுபடாத இடமாக தமிழ்நாடு இருப்பதால் மேலும் லேலும் பொய்களைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதற்காகவே இது மாதிரியான குழுக்கள்.

 இந்த பதிவிற்கு முகநூலில் ரிப்போர்ட் செய்துள்ளேன், எந்த பயனும் இருக்காது என்று தெரிந்தும்…

 ஏனென்றால் முகநூல் நிர்வாகமே  மோடியின் பிரச்சாரகராக மாறி பல ஆண்டுகளாகி விட்டது.                                                                                                                                                                                                                                                                                                                      

Friday, October 18, 2024

பஜாஜ் வீட்டுக்கு அமலாக்கப்பிரிவு போகலையா?

 


பஜாஜ் நிறுவனத்தின் முதலாளிகளில் ஒருவரான ராஜீவ் பஜாஜ், நான்கு வருடங்களுக்கு முன் சொன்ன ஒரு கருத்தை இப்போதுதான் பார்த்தேன்.

 


மோடியின் சத்தமான ஜால்ராவான, தன்னை மோடியின் நாய் என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட  அர்ணாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவிக்கு விளம்பரம் தர முடியாது என்று  சொன்ன ராஜீவ் பஜாஜின் வீட்டுக்கோ அலுவலகத்திற்கு ஏன் உங்கள் எடுபிடிகளாக இருக்கும் அமலாக்கத்துறை, வருமான வரித் துறை ஆகியோரை ஏன் இன்னும் அனுப்பவில்லை

Monday, April 22, 2024

மோடியின் பேச்சு அயோக்கியத்தனமாது.

 


தோல்வி பயம் மோடிக்கு வந்து விட்டது.

 முதல் முறை பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்தார்.

 புல்வாமாவில் எல்லைப் பாதுகாப்புப்ப்டை வீரர்கள் கொல்லப்படுவதை அனுமதித்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தார்.

 இனி பொய்களையும் அள்ளி விட முடியாது. ராணுவ வீரர்களையும் சாகடிக்க முடியாது.

 அதனால் மோடி கையிலெடுத்திருப்பது மத வெறிப் பேச்சு.

 “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்  நாட்டு மக்களுடைய செல்வத்தை எல்லாம் பிடுங்கி  இஸ்லாமியர்களிடம் கொடுத்து விடுவார்கள்”

 காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பேசினார்கள், தேர்தல் அறிக்கையில் உள்ளது என்று அவர் சொல்லும் விஷயங்களுக்கு அவரிடம் எந்த தரவுகளோ, ஆதாரங்களோ கிடையாது.

 வாய்க்கு வந்ததை அடித்து விட்டுள்ளார். ஆனால் அது ஆபத்தானது. பிளவு படுத்தும் நோக்கமுடையது. ஒற்றுமையை குலைக்கக் கூடியது. வாக்காளர்கள் மனதில் குழப்பத்தை  உருவாக்கக்கூடியது. வெறுப்பை விதைக்கும் விஷம். மொத்தத்தில் அயோக்கியத்தனமானது.

 இந்த அயோக்கியத்தனமான பேச்சுக்கு கண்டனம் தெரிவிப்பது மட்டும் போதாது. மோடியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். மோடியால் பொறுக்கி எடுக்கப்பட்ட தேர்தல் ஆணையர்கள் அதை செய்ய மாட்டார்கள். அதனால் மக்கள்தான் மோஈடியை முறியடிக்க வேண்டும்.

 

Sunday, October 15, 2023

போட்டிதானடா, போர் இல்லை

 


பீகாரிலிருந்து தமிழ்நாட்டுக்கு பிழைக்க வந்த பாண்டே போட்ட ட்வீட் கீழே


வன்மமே வாழ்வாய் கொண்ட எச்.ராசா, அப்பல்லோ ஹாஸ்பிடலில் படுத்த படி போட்ட ட்வீட் கீழே ...


என் மகனோடு அமர்ந்து நேற்று அந்த போட்டியை கொஞ்ச நேரம் பார்த்தேன். அகமதாபாத்தில் இருந்த அந்த பார்வையாளர்களின் உடல்மொழியும் கோஷங்களும் அருவெருப்பாகவே இருந்தது. 

சங்கிக்கயவர்கள் இத்தனை நாளாக ஊட்டி வளர்த்துள்ள வெறுப்புணர்வு நன்றாகவே வெளிப்பட்டது.

அதெல்லாம் நியாயம்தான் என்று மத்யமர் சங்கிகள் நியாயப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

அவர்களிடம் சொல்ல வேண்டியுள்ளது.

நடைபெற்றது வெறும் போட்டிதான், போர் இல்லை.

கிரிக்கெட்டில் தேச பக்தியை தேடும் இன்னும் சில போலிகள் கூட உள்ளுக்குள் மகிழ்ந்திருக்கும் என்றே நினைக்கிறேன். இப்போதெல்லாம் யாரையுமே நம்ப முடிவதில்லை. . . .



Thursday, June 7, 2018

வெறுப்பின் ஊற்றுக்கண்ணே நீங்கள்தானே!


உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு முன்பாக இஸ்ரேல் அணியும் அர்ஜெண்டினா அணியும் ஜெருசலத்தில் ஒரு நட்பு ரீதியான போட்டி ஒன்றில் விளையாடுவதாக இருந்தது.

ஜெருசலத்தில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கொன்று குவித்து வரும் சூழலில் 

ஜெருசலத்தில் போட்டியில் விளையாடுவது இஸ்ரேலின் அராஜகத்திற்கு ஊக்கம் தருவதாகி விடும் என்று பலரும் அர்ஜெண்டின வீரர்களிடம் கேட்டுக் கொள்ள லயோனல் மெஸ்ஸி உள்ளிட்ட வீரர்கள் தயக்கம் காண்பிக்க, அந்த போட்டி ரத்து செய்யப்பட்டு விட்டது.

வெறுப்பிற்கு அடிபணிந்து விட்டார்கள் என்று இஸ்ரேல் புலம்பியுள்ளது.

நாம் அவர்களுக்கு ஒன்றே ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும்.

இந்த உலகிலேயே மிக மோசமான ரௌடி நாடு என்ற புகழ் உங்களுக்கு மட்டுமே உண்டு. 

ஈவு இரக்கம் இல்லாமல் குழந்தைகளைக் கூட கொன்று குவிக்கும் நாடு.

பழம் தரும் மரங்களைக் கூட அமிலம் வீசி அழிக்கும் நாடு.

அடுத்தவர் மண்ணை ஆக்கிரமித்துக் கொண்டு வெறுப்பை விதைத்தவர்களே நீங்கள்தான்.