Showing posts with label அசிங்கம். Show all posts
Showing posts with label அசிங்கம். Show all posts

Saturday, February 22, 2025

மோடியை ட்ரம்ப் அசிங்கப்படுத்தினால் கோபம் வராதா?



 மோடி இந்தியா திரும்பிய பிறகு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ட்ரம்ப் பேசியது கீழே உள்ளது. தமிழாக்கத்திற்கு ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் ஆர்.விஜயசங்கருக்கு நன்றி.

 மகாவும் மிகாவும்

 டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் அமெரிக்க அதிபர் டொனால்ட்  டிரம்பின் மூத்த ஆலோசகருமான ஈலான் மஸ்க் இந்தியாவில் கார் தொழிற்சாலை தொடங்கப் போவதாகத் அறிவித்திருந்தார். டிமோ அமெரிக்கா சென்ற போது அவரை மஸ்க் சந்தித்தார். ஆனால் நேற்று நடந்த ஒரு ஊடக சந்திப்பில் மஸ்க்கை பக்கத்தில் வைத்துக் கொண்டே மஸ்க்கின் திட்டம் அமெரிக்க நலனைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது நியாயமில்லை என்று கூறியிருக்கிறார். இந்தியா அமெரிக்கப் பொருட்களின் இறக்குமதி மீது அதிக காப்பு வரி விதிக்கிறது என்கிற குற்றச்சாட்டின் பின்னணியில்தான் டிரம்ப் இப்படிக் கூறியிருக்கிறார். மஸ்க்கும் அதை ஒப்புக் கொள்கிறார்.

 டிரம்ப் மேலும் கூறியது: “காப்பு வரியைப் பொறுத்தவரையில் யாரும் என்னுடன் வாதிட முடியாது. நான் பிரதமர் மோடியிடம் கூறினேன். இதைத்தான் நாங்கள் செய்யப் போகிறோம். பரஸ்பர வரி விதிப்பு. நீங்கள் என்ன வசூலிக்கிறீர்களோ, நாங்களும் அதையே வசூலிப்போம்.”

 Making America Great Again (MAGA) என்பதுதான் டிரம்பின் தேர்தல் முழக்கம். நம்மவரும் எசப்பாட்டுப் பாடி a Making India Great Again (MIGA) என்று அசடு வழிந்தார்.

 MAGA ஆவதற்கு MIGAவைத் தடுத்துச் சுரண்டுவதுதான் டிரம்பின் திட்டங்களில் ஒன்று.

 அமெரிக்கச் சங்கிலி அதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.

 நியாயமாக பார்த்தால் சங்கிகள் இதற்குத்தான் பொங்க வேண்டும். ஆனால் ட்ரம்பை ஏதாவது சொன்னால் அடி விழும் என்பதால் கள்ள மவுனம் சாதிக்கிறார்கள்.

Saturday, February 24, 2024

சாக்கடைக்கும் சர்டிபிகேட்டாம் வானதியம்மா . .

 


தன லாபம் அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஓ சான்றிதழ் கிடைத்துள்ளதாக பாஜக வானதி சீனு பீற்றிக் கொண்டாரல்லவா, அந்த சர்டிபிகேட் கொடுத்த நிறுவனத்தின் யோக்கியதை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்கள் எழுதியுள்ள பதிவை படியுங்கள். 

சங்கிகள் எது செய்தாலும் அது திருட்டுத்தனம் மட்டுமே . . .

ISO 9001:2015 - த(ர்)ர சர்டிபிகேட்டா? வாங்குற சர்டிபிகேட்டா?

சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு பாஜகவின் BJP Tamilnadu எம்எல்ஏ திரு. வானதி ஸ்ரீனிவாசன் Vanathi Srinivasan அவர்கள் தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் கிடைத்துவிட்டதாகவும் தமிழகத்திலேயே அதுதான் முதல் என்றும் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்.
நிற்க...
அந்த சர்டிபிகேட் எவ்வளவு தரமானது என்பதை இப்போது பார்க்கலாம்...

மதுரை நகரத்தின் ஊடாக பாயும் வைகையின் கிளை நதியான கிருதுமால் நதி சாக்கடை நதியாகவே இப்போதும் இருக்கிறது. இதை சுத்தப்படுத்த வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மதுரை மாவட்டக்குழு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளது. இயக்கங்களையும் நடத்தியுள்ளது. ஆனால், இப்போதும் சாக்கடை கழிவுகள் கலக்கும் இடமாகவே இருந்து வருகிறது.

அந்த நதிக்கு ISO 9001:2015 தரச் சான்று வேண்டுமெனக் கோரி மதுரையைச் சார்ந்த ஆர்.எம்.பாபு RM Babu Mallanginar என்பவர் விண்ணப்பிக்க, 5000 கொடு, 3000 கொடு என்று கேட்டு, இறுதியாக 1000 ரூபாய் வாங்கிக் கொண்டு கிருதுமால் சாக்கடை நதி என்கிற பெயரில் சர்டிபிகேட் வழங்கியிருக்கிறது அந்த நிறுவனம். பாராட்டப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் அவர்கள் கறாராக 180 ரூபாய் ஜிஎஸ்டி வசூலித்துவிட்டார்கள். அவ்வளவு தேசபக்தி.

அந்த நிறுவனம் திரு. வானதி ஸ்ரீனிவாசன் அவர்களின் அலுவலகத்திற்கு தரச் சான்று வழங்கிய அதே Quality Research Organization நிறுவனம்தான். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்தச் சாக்கடையை குடிநீர் என்று தரச் சான்று வழங்கியிருப்பதுதான். சாக்கடைக்கு குடிநீர் என்று தரச் சான்று கொடுத்தவர்கள்தான் திரு. வானதி ஸ்ரீனிவாசன் அவர்களின் சட்டமன்ற அலுவலகத்திற்கு சிறந்த சட்டமன்ற அலுவலகம் என்று சான்று வழங்கியிருக்கிறார்கள்.


இப்போது திரு. வானதி ஸ்ரீனிவாசனும் பாஜகவும் அந்த சர்டிபிகேட்டை அலுலவகத்தில் மாட்டி வைப்பார்களா? கிருதுமால் நதியில் வீசிவிடுவார்களா என்பதுதான் சாதாரணமான கேள்வி.

Wednesday, March 15, 2023

சங்கி டாக்டர் துவங்கிய அசிங்கம்

 


இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் பார்த்த செய்தி கீழே.

அமிர்தசரஸிலிருந்து கொல்கத்தா செல்லும் ட்ரெயினில் ஒரு டிக்கெட் பரிசோதகர் ஒரு பெண் பயணியின் மீது சிறுநீர் கழித்துள்ளான். அவன் பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளான்.

விமானப் பயணிகள் சக பயணிகள் மீது இதே அசிங்கத்தை செய்த இரண்டு சம்பவங்களை கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பார்த்துள்ளோம்.

இந்த அசிங்கத்தின் துவக்கப் புள்ளி யார்?

பாஜகவின் ரௌடி மாணவர் பிரிவான ஏ.பி,வி,பி யின் அகில இந்திய தலைவரும் கட்டப்படாத மதுரை ஏ.ஐ.ஐ.எம்.எஸ் மருத்துவமனையின் ஆலோசனைக்குழு உறுப்பினருமான பொறுக்கி டாக்டர் சரவண சுப்பையா தான். 

இந்தியாவின் எல்லா அசிங்கத்தையும் அரங்கேற்றுபவர்கள் சங்கிகள்தான்.

Tuesday, February 21, 2023

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை . . .

 


நீங்கள் தமிழ்நாட்டு மக்கள், எங்களுக்கு ஓட்டு போடாமல் எங்களை தோற்கடித்தீர்கள். நாங்கள் ஜெயித்திருந்தால் அமைச்சராகி இருப்போம். இருந்தாலும் எங்கள் திறமையை புரிந்து கொண்ட மோடி எங்களை கவர்னராக்கினார். 

இது தமிழிசை அம்மையார் உதிர்த்த பொன்மொழி

தோற்றுப் போன எல்.முருகனை மந்திரியாக்கினார் என்பதை அவருக்கு நினைவு படுத்தி, மக்களால் நிராகரிக்கப்பட்ட உங்களை கவர்னராக்கியது பெருமை அல்ல, உங்களை நிராகரித்த ஜனநாயக நடைமுறைக்கு செய்யப்படும் அசிங்கம். ஆணவம்.

இதே அசிங்கத்தை இதர கட்சிகள் கூட சில முறை செய்துள்ளனர் என்பது இந்திய ஜனநாயகத்தின் களங்கம்.

Monday, December 10, 2018

மோடி பேச்சும் காக்கா கறியும் . . .



"இந்தியாவில் பிறக்காதவர்களுக்கு காங்கிரஸ் கட்சி பிறப்புச் சான்றிதழ் வழங்குகிறது. இறப்புச் சான்றிதழும் தருகிறது. அவர்களுக்கு விதவை பென்ஷனும் தருகிறது.  போலி அக்கவுண்டுகள் மூலமாக தரப்படும் விதவைப் பென்ஷன் தொகையெல்லாம் காங்கிரஸ் கட்சியின் எந்த விதவைக்கு  செல்கிறது?"


இதுதான் ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியது.

விதவைப் பென்ஷன் திட்டத்தில் ஊழல் நடந்திருந்தால் அந்த ஊழலைச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும். அதைச் செய்தவர் சோனியா காந்தி என்றால் அவரை கைது செய்து வழக்கு போடட்டும்.

அதை விடுத்து இந்தியாவில் பிறக்காதவர், காங்கிரஸ் கட்சியின் விதவை என்றெல்லாம் பேசுவது படு மட்டமாக உள்ளது.

சோனியாவை இழிவு படுத்துவது மட்டுமல்லாமல் ஒட்டு மொத்தமாக விதவைகளையே நையாண்டி செய்வதாக அவரது உடல் மொழி அமைந்துள்ளது. நாடாளுமன்ற விவாதத்திலேயே அவரது உடல் மொழி எவ்வளவு அசிங்கமாக, தரம் கெட்டுப் போயிருந்தது என்பதை நாம் பார்த்தோம்.

இப்போது இன்னும் கேவலமாக கீழிறங்கியுள்ளார்.

நாலாந்தர, ஐந்தாம்தர பேச்சாளர்களை விட நரகல் நடையில் பேசும் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமர் என்பது எவ்வளவு வெட்கக் கேடானது?

இவரது பேச்சை இவர் கட்சிக்காரர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து ரசிக்கிறார்கள்.

தலைவனே படு கேவலம் என்கிற போது தொண்டர்கள் மட்டும் என்ன உத்தமர்களாகவா இருக்கப் போகிறார்கள்!

காக்கா கறி சாப்பிட்டால் காக்கா குரல் வராம உன்னிகிருஷ்ணன் குரலா வரும்!!!

Wednesday, August 29, 2018

அவசரக்குடுக்கை கேமராமேன் அசிங்கப் படுத்திட்டாரே!!!!


காவிக் கூட்டத்தினரின் தூய்மை இந்தியா நாடகம், ஒரு அவசரக் குடுக்கை காமெராமேனால் அம்பலமான ஒரு அசிங்கமான மொமெண்ட் இது.

காணொளியைப் பார்த்து சிரித்து மகிழுங்கள் . . .

இதற்கு முட்டு கொடுத்து கூட அந்த பீட்டர் விடும் அனாமதேயம் பின்னூட்டம் எழுதுமோ? இல்லை வழக்கம் போல commie, jihadi  என மூளைச் சலவை செய்யப்பட்ட வாந்தியை மட்டும் எடுத்திடுமா?