Showing posts with label வாலிபர் சங்கம். Show all posts
Showing posts with label வாலிபர் சங்கம். Show all posts

Wednesday, February 19, 2025

மதுரை போலீஸுக்கு மட்டும் காவி சீருடையா முதல்வரே?

 


நேற்று மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் வலியுறுத்தியும் திருப்பரங்குன்றத்தின் அமைதியை குலைக்க சதி செய்யும் அழிவு சக்திகளை முறியடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுமான பிரசுரத்தை மக்கள் மத்தியில் வினியோகித்தனர்.


ஆனால் இதனை மக்களிடம் கொடுக்க விடாமல் திருப்பரங்குன்றம் போலீஸ் தலையிட்டு அதனை பறித்துக் கொண்டு போய் அராஜகம் செய்தார்கள்.

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு மூல காரணம் அரசு நிர்வாகமும் போலீஸும்தான். 

காவல்துறையில் காவி ஆடுகள் ஊடுறுவியுள்ளது என்பது தொடர்ந்து நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. 

இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தல்லையிட்டு களையெடுக்காவிட்டால் நாளை அவருக்குத்தான் சிக்கல்...

Saturday, January 21, 2023

வாலிபர்களுக்கு வாழ்த்துக்கள்

 

விளக்கம் தேவையில்லை. கீழேயுள்ள படமே சொல்லும் செய்தியை . . .

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்களுக்கு பாராட்டுக்கள். . .