Showing posts with label கார்ட்டூன். Show all posts
Showing posts with label கார்ட்டூன். Show all posts

Wednesday, August 6, 2025

இதுதான் நெசம் முட்டாள் சங்கிகளே

 

இந்த கார்ட்டூனை நினைவு படுத்த வேண்டிய அவசியத்தை முட்டாள் சங்கிகள் உருவாக்கி விட்டார்கள்.

ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியது நான்தான் என்று  27 முறை ட்ரம்ப் சொல்லிவிட்டார். இந்தியப் பொருளாதாரத்தை செத்துப்போன பொருளாதாரம் என்று சொல்லி ஒரு வாரமாகிவிட்டது. ரஷ்யாவோடு எந்த வியாபாரமும் செய்யக்கூடாது என்று மிரட்டி மூன்று நாளாகி விட்டது. ஆனால் மோடியோ வாய் திறக்கவே இல்லை.

இந்த சூழலில் இப்படி ஒரு படத்தை சங்கிகள் பரப்புகிறார்கள்.


அதனால்தான் சொல்ல வேண்டியுள்ளது. அடேய் முட்டாள் சங்கிகளே, உங்க மோடி பில்டிங், பேஸ்மெண்ட் எல்லாம் பலவீனமாக இருக்கிற. மேல் மண்டையில ஒன்னும் இல்லாத  வெறும் டம்மி பீஸ்.  ட்ரம்பைப் பார்த்து நடுங்குபவர் என்பதுதான் யதார்த்தம்.

அதனால் இந்த பில்ட் அப் வேலையை எல்லாம் நிறுத்திக் கொள்ளுங்கள். 

Thursday, July 10, 2025

இதுதாண்டா குஜராத் மாடல்

 


தோழர் ரவி பாலேட் வரைந்த அருமையான ஓவியம்.

அது சொல்லும் உண்மையை தாங்க முடியாத சங்கிகள் அவர் மீது ஆபாச வாந்தியை கக்கிக் கொண்டிருக்கின்றனர். 

Saturday, February 22, 2025

மோடியை ட்ரம்ப் அசிங்கப்படுத்தினால் கோபம் வராதா?



 மோடி இந்தியா திரும்பிய பிறகு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ட்ரம்ப் பேசியது கீழே உள்ளது. தமிழாக்கத்திற்கு ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் ஆர்.விஜயசங்கருக்கு நன்றி.

 மகாவும் மிகாவும்

 டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் அமெரிக்க அதிபர் டொனால்ட்  டிரம்பின் மூத்த ஆலோசகருமான ஈலான் மஸ்க் இந்தியாவில் கார் தொழிற்சாலை தொடங்கப் போவதாகத் அறிவித்திருந்தார். டிமோ அமெரிக்கா சென்ற போது அவரை மஸ்க் சந்தித்தார். ஆனால் நேற்று நடந்த ஒரு ஊடக சந்திப்பில் மஸ்க்கை பக்கத்தில் வைத்துக் கொண்டே மஸ்க்கின் திட்டம் அமெரிக்க நலனைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது நியாயமில்லை என்று கூறியிருக்கிறார். இந்தியா அமெரிக்கப் பொருட்களின் இறக்குமதி மீது அதிக காப்பு வரி விதிக்கிறது என்கிற குற்றச்சாட்டின் பின்னணியில்தான் டிரம்ப் இப்படிக் கூறியிருக்கிறார். மஸ்க்கும் அதை ஒப்புக் கொள்கிறார்.

 டிரம்ப் மேலும் கூறியது: “காப்பு வரியைப் பொறுத்தவரையில் யாரும் என்னுடன் வாதிட முடியாது. நான் பிரதமர் மோடியிடம் கூறினேன். இதைத்தான் நாங்கள் செய்யப் போகிறோம். பரஸ்பர வரி விதிப்பு. நீங்கள் என்ன வசூலிக்கிறீர்களோ, நாங்களும் அதையே வசூலிப்போம்.”

 Making America Great Again (MAGA) என்பதுதான் டிரம்பின் தேர்தல் முழக்கம். நம்மவரும் எசப்பாட்டுப் பாடி a Making India Great Again (MIGA) என்று அசடு வழிந்தார்.

 MAGA ஆவதற்கு MIGAவைத் தடுத்துச் சுரண்டுவதுதான் டிரம்பின் திட்டங்களில் ஒன்று.

 அமெரிக்கச் சங்கிலி அதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.

 நியாயமாக பார்த்தால் சங்கிகள் இதற்குத்தான் பொங்க வேண்டும். ஆனால் ட்ரம்பை ஏதாவது சொன்னால் அடி விழும் என்பதால் கள்ள மவுனம் சாதிக்கிறார்கள்.

Monday, December 2, 2024

கோயில், மசூதி, பின்னே . . .

ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களிடமிருந்து சுட்ட படமும் பதிவும். (இரண்டு தனியான பதிவுகள்தான், ஆனால் ஜி.டி.பி வளர்ச்சிக்கும் இது பொருந்துகிறது.)

 


வாட்ஸாப்பில் வந்தது

1.மசூதிக்குக் கீழே கோயில் இருக்கிறது
2.கோயிலுக்குக் கீழே புத்த விகார் இருக்கிறது
3.புத்த விகாருக்குக் கீழே சமணப் பள்ளி இருக்கிறது
4.சமணப் பள்ளிக்குக் கீழே இருக்கிறது இந்தியாவின் ஜி.டி.பி ( பொருளாதார வளர்ச்சி)

Monday, June 24, 2024

ஒத்த செருப்பு உருவாக்கிய . . .

 


அபூர்வப் பிறவி மீது வாரணாசியில் வீசப்பட்ட ஒத்த செருப்பு உருவாக்கிய கார்ட்டூன்கள்  கீழே . . .

 





ஒத்த செருப்பு என்ற பெயரில் தமிழ்நாடு  திரைப்படமே அளித்தது குறிப்பிடத்தக்கது.

Wednesday, March 1, 2023

ஆட்டுக்காரன் காண்பித்த வழியிலா . . .

 


கீழேயுள்ள கார்ட்டூனைப் பார்த்தேன் . .



மோடியை விமர்சிப்பவர் பயணிக்கிறார். ஆகவே விமானத்தை உடனே தரையிறக்க வேண்டும் என்ற உத்தரவு இருப்பதாக சொல்கிறது கார்ட்டூன். இப்படி நடக்காது என்று சொல்ல முடியாது. விமானத்தில் ஏறியவரை மூன்று நாட்கள் முன்பாகத்தான் கீழிறக்கி கைது செய்தார்கள். 

விமானத்தை தரையிறக்க முடியாத போது என்ன செய்வார்கள்? 

அப்போதுதான் ஆட்டுக்காரன் வழி நினைவுக்கு வந்தது, அதாங்க எமர்ஜென்சி கேட் . . .

பிகு:இந்த பதிவை எழுதி பகிரும் முன்பாக காபி குடிக்கும் போது தொலைக்காட்சியில் ஒரு படம் பார்த்தேன். அந்த கொடுமையை நாளை எழுதுகிறேன் . . .

Friday, February 10, 2023

பசுக்காதலர் தினத்தை முன்னிட்டு

 Cow hug day ஐ முன்னிட்டு  . . .

 விளக்கம்  தேவைப்படாத படங்கள், நீங்கள் பார்த்து ரசிக்க, சிரிக்க . . .











Friday, December 9, 2022

எல்லா பணமும் அதுக்குத்தான்

 தேர்தல் முடிவுகளுக்கு முன்பே முகநூலில் பார்த்த கார்ட்டூன்  இது.



இமாச்சல் பிரதேசத்தில் தோற்றுப் போன பாஜக இது போல பல மடங்கு பணத்தை செலவு செய்து விரைவில் ஆட்சி அமைத்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை

Monday, April 4, 2022

நேரு இல்லையேல் மோடியில்லை

 

+

    

முக நூலில் பார்த்த படம் மேலே உள்ளது.

"எட்டு வருடமாக ஆட்சி நடத்துகிறாய், இனியாவது என் மீது பழி போடுவதை  நிறுத்தி விட்டு உன் சொந்தக்காலில் நிற்க முயற்சி செய்" என்று நேரு மோடியிடம் சொல்வது போல் அமைக்கப்பட்ட கார்ட்டூன் அது.

நேரு இல்லாமல் மோடியின் ஆட்சியே இல்லை என்பதுதான் யதார்த்தம்.

ஆம்.

மோடி ஒரு அழிவு சக்தி.

மோடி அழிப்பதற்கான அனைத்தும் நேரு உருவாக்கவில்லை என்றால் சாத்தியம் கிடையாதல்லவா!

நேரு உருவாக்கிய/உயர்த்திப் பிடித்த

மதச்சார்பின்மை,

மத நல்லிணக்கம்,

அரசியல் சாசனம்,

ஜனநாயக விழுமியங்கள்,

பொதுத்துறை நிறுவனங்கள்,

சுயேட்சையான அரசியல் சாசன அமைப்புக்கள் (நீதி மன்றம், தேர்தல் ஆணையம், சி.பி.ஐ)

இவற்றை நேரு உருவாக்கியதால்தானே மோடியால் அழிக்க முடிகிறது!

இவை எல்லாம் இல்லையென்றால் மோடியின் அழிவாட்டம் இன்னும் எவ்வளவு அராஜகமாக இருந்திருக்கும்!

நினைத்துப் பார்க்கவே முடியவில்லை 😥😥😥😥😥

Sunday, September 12, 2021

பிள்ளையார் அருள் யாருக்கு?

 


நான் ரசித்த கேலிச்சித்திரம்.

நிர்மலா அம்மையாரை விலைவாசியை குறைக்கச் சொல்லுங்கள் 

என்று

வேண்டுகிற பக்தனுக்கா

அல்லது

விலைவாசியை சகித்துக் கொள்ளும் சக்தியை பக்தனுக்கு அளி

என்று

உத்தரவிடும் நிர்மலா அம்மையாருக்கா

யாருக்கு பிள்ளையார் அருள் பாலிக்கப் போகிறார்?


Saturday, September 4, 2021

மோடியின் ஆடைகளும் கூட . . .

 


"தி இந்து" ஆங்கில நாளிதழிலிருந்து ஓய்வு பெற்ற கார்ட்டூனிஸ்ட் திரு சுரேந்திரா அவர்களின் அற்புதமான கற்பனை.

அதில் சொல்லியிருப்பது போல மோடியின் அலமாரியில் உள்ள ஆடைகளை குத்தகைக்கு விட்டால் ஒன்றிய அரசு திட்டமிடுவதைக் காட்டிலும் அதிகமான தொகை கிடைக்கும்.

மோடியின் வசம் உள்ள ஆடைகளின் எண்ணிக்கை நிச்சயம் A 1 இடமிருந்ததை விட அதிகமாகவே இருக்கும்.

அதனால் மோடியின் ஆடைகளையும் பணமாக்குங்கள் அம்மணி.

Tuesday, April 27, 2021

ட்விட்டர் நீக்கம் - உண்மை என்பதால்தான்

 கொரோனா பாதிப்பு, ஆக்சிஜன் பற்றாக்குறை, மயான ஓலங்கள் குறித்த பல ட்விட்டர் பதிவுகளை மத்தியரசு நீக்க வைத்துள்ளது.

 ஏன்?

அவை வதந்தியா இல்லை தவறான தகவல்களா?

 


பல ஆண்டுகளுக்கு முன்பாக ஆர்.கே.லட்சுமண் கார்ட்டூனாகவே போட்டு விட்டார். “வதந்தியைப் பரப்பியதற்காக நீ கைது செய்யப்படவில்லை. அவை உண்மை என்பதற்காகவேதான்”

Friday, November 13, 2020

வார்த்தைகளாலும் வாட்டும் கார்ட்டூனிஸ்ட்

 



ஹிந்து ஆங்கில நாளிதழின் கார்ட்டூனிஸ்ட் திரு சுரேந்திரா முகநூலில் செய்திருந்த பதிவின் தமிழாக்கத்தை கீழே தந்துள்ளேன்.

சில பக்தாள், பீகார் தொடர்பான என்னுடைய கார்ட்டூன்கள் முழுமையாக பொய்த்துப் போய் விட்டதாகவும் நான் துறவறம் பேண வேண்டும் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. 

அன்பான பக்தர்களே, உங்களுக்கு பட்டாணி அளவிற்காவது மூளை இருந்தால் என்னுடைய கார்ட்டூன்கள்  அனைத்தும் எவ்வாறு கச்சிதமாக பொருந்தியது என்பதை புரிந்து கொண்டு வியப்பீர்கள்.

 1)     மோடியின் ஆசீர்வாதம் நிதீஷிற்கு பலித்தது என்றா நினைக்கிறீர்கள்? அவர் கட்சியின் எண்ணிக்கை மிகவும் மோசமாகக் குறைந்தது. மக்களின் மதிப்பை இழந்த அவர் மீண்டும் முதல்வராகப் போகிறார். பாஜக அவரை எடுபிடியாக பயன்படுத்தப்போகிறது. இதனை ஒப்புக் கொள்ளாமல் அவர் பாஜகவை அரசமைக்க விட்டிருக்க வேண்டும்.  பாஜக அவரது ஐக்கிய ஜனதா தளம் கட்சியை விழுங்கி விடும் என்று அவர் அஞ்சியிருக்கலாம்.

 2)      பாஜக அரசின் ஒரு அங்கமாக இருந்தாலும் அரசு மீதான எதிர்ப்பு முழுதையும் நிதீஷே சந்திக்க வேண்டியிருந்தது.

 3)     பாஜக கூட்டணியின் வாக்குகளை பிரிக்கும் வேலையை சிராக் பஸ்வான் கச்சிதமாக செய்தார்.

 4)     தன்னுடைய கடினமான உழைப்பின் மூலமாக தேஜஸ்வி உங்களை நடுங்க வைக்க வில்லையா, கோலியாத்துக்களா?

 கார்ட்டூன்கள் போலவே பதிவும் செம ஷார்ப்

புதிய அடிமை நிதீஷ்குமார்

 



 நிதீஷ்குமார் மீண்டும் பீகாரின் புதிய முதல்வராகப் போகிறாராம். வாழ்த்துக்கள் சொல்வதை விட அனுதாபம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

 ஆர்.ஜே.டி, காங்கிரஸ் இணைந்த கூட்டணியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வராகி அந்த கூட்டணியை அப்படியே உதறித்தள்ளி பாஜகவோடு கை கோர்த்து முதல்வராக நீடித்த நிதீஷ்குமாரின் கட்சி பெற்ற எம்.எல்.ஏக்களை விட கூடுதல் எம்.எல்.ஏ க்களை வைத்திருந்தும் நிதீஷ்குமாரே முதல்வராக இருக்கட்டும் என்று  பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்துள்ளது.

 முதலில் நிதீஷ்குமார் எத்தனை நாள் முதல்வராக இருப்பார் என்று பார்க்க வேண்டும். திரிபுராவில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களை திரிணாமுல் காங்கிரஸ் விலைக்கு வாங்கியது. அதை அப்படியே  தன் எம்.எல்.ஏ க்களாக நிறம் மாற்றி விட்டது பாஜக. திரிபுரா மாநில பாஜகவில் பெரும்பாலானவர்கள் முன்னாள் காங்கிரஸ்காரர்களே!

 குஜராத்திலும் மத்தியப் பிரதேசத்திலும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ க்களை விலைக்கு வாங்கியது. குஜராத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற இந்த வணிகம் உதவியது என்றால் ம.பி யில் ஆட்சியையே பிடிக்க முடிந்தது. ராஜஸ்தானில்தான் டீலிங் முடியும் முன்பாக காங்கிரஸ் கட்சி விலை போக இருந்தவர்களோடு சமரசம் செய்து கொண்டுவிட்டது.

 இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கிற பாஜக நிச்சயம் எல்லா கட்சிகளில் இருந்தும் எம்.எல்.ஏ க்களை இழுக்கும். எங்களை அலட்சியப் படுத்திய எதிர்க்கட்சிகளுக்கு பாடம் கற்றுக் கொடுத்தோம் என்று சொல்கிற உவைஸி கூட பாஜகவை ஆதரிக்கலாம். கம்யூனிஸ்டுகளை மட்டும் அவர்களால் நெருங்க முடியாது.  ஆகவே நிதீஷ்குமாரின் நாற்காலி எப்போது வேண்டுமானால் கவிழலாம்.

 அதுவரையிலும் கூட அவருக்கு எந்த சுதந்திரமும் இருக்கப் போவதில்லை.

 ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத போதே எடப்பாடியை ஆட்டி வைக்கிற பாஜக, நிதீஷ்குமாரை விட கூடுதல் எம்.எல்.ஏ க்கள் இருக்கிற போது அவரை என்னவெல்லாம் செய்யும்?

 பாவம் நிதீஷ்குமார்.

பிகு

கார்ட்டூன் நன்றி திரு சுரேந்திரா, தி ஹிந்து.

மாலையில் பக்தாளுக்கு அவர் அளித்த சூடான பதில் 

 

Friday, October 16, 2020

யானை மேல் - யோகாவும் அம்மையாரும்

திரு சுரேந்திரா இந்து இதழில் வரைந்த கார்ட்டூனை பார்த்த போது

 


யானை மீது யோகா செய்து கீழே விழுந்த காணொளிதான் நினைவுக்கு வந்தது.

 


மோசமான பொருளாதாரச் சூழல் அம்மையாரை நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து எப்போது கீழே தள்ளப் போகிறதோ?

 

அந்த இனிய நாளுக்காக காத்திருக்கிறேன்.

  

Saturday, September 5, 2020

மயிலுதான் காரணமாம் !

 


இந்தியா இன்று சந்தித்துள்ள பொருளாதார பின்னடைவிற்கு கடவுளின் செயல்தான் காரணம் என்று சொன்னதற்காக அனைவரும் நிர்மலா அம்மையாரை தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

 ஆனால் அப்படி சொன்னதற்கு அவர் காரணம் இல்லையாம்.

 என்ன காரணம் சொல்லலாம் என்று அவரும் மோடியும் கிளி ஜோசியத்திற்குப் பதிலாக மோடியின் சமீபத்திய செல்லப் பிராணியான மயில் மூலம் ஜோசியம் பார்த்துள்ளார்கள்.

 கடவுள் ,

கொரோணா தொற்று,

நேருவே காரணம்,

முகலாயர்களே காரணம்,

 என்று நான்கு சீட்டை போட்டிருக்கிறார்கள்.

 இதிலே மிகவும் ஜாக்கிரதையாக செல்லா நோட்டு, அவசரகதியில் ஜி.எஸ்.டி அமலாக்கம் போன்ற  சீட்டுக்களை மயிலிடம் காண்பிக்காமல் இருந்துள்ளார்கள்.

 கடவுள்  என்ற சீட்டை மயில் எடுத்துக் கொடுக்க, அதைத்தான் நிர்மலா அம்மையார் சொல்லியிருக்கிறார்.

 உண்மை இவ்வாறு இருக்க மயிலுக்குப் பதிலாக நிர்மலா அம்மையாரை திட்டலமா?

 நியாயமா இது?

 என்ன புரியலையா?

 கீழே உள்ள கார்ட்டூனுக்கான விளக்கம்தான் மேலே உள்ளது.



Thursday, September 3, 2020

மொட்டைச் சாமியார் மூக்குடைந்தது. சங்கிக்கும் . . .

 டாக்டர் கஃபீல் கான் – யாராலும் மறக்க இயலாத பெயர்.

 யோகியின் சொந்தத்தொகுதியில் ஆக்ஸிஜன் கம்பெனிக்கு ஒழுங்காக உபி அரசு பணம் கொடுக்காததால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்து போன கொடூரத்திற்கு சாட்சியாய் திகழ்பவர். தன் சொந்த முயற்சியால் அலைந்து திரிந்து ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கி பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய உன்னத மருத்துவர்.

 உ.பி மாநில மொட்டைச்சாமியாரோ, அரிய சேவை செய்தவரை பாராட்டி விருதுகள் கொடுப்பதற்குப் பதிலாக அவரது ஆட்சியின் அவலம் அம்பலமானதால் கைது செய்து சிறையிலடைத்தார். பணி நீக்கம் செய்தார்.

 சிறையிலிருந்து மீண்ட அவரை சிஏஏ போராட்டத்தில் பங்கேற்றார் என்பதால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தது.

 அப்படி செய்தது தவறு என்று என்று அலகாபாத் உயர் நீதி மன்றம் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. அவரும் இன்றும் வெளியே வந்து விட்டார்.



 யோகியின் மூக்குடைந்தது போலவும் நீதிமன்ற குட்டினால் தலையில் வீக்கம் வந்தது போலவும் இந்து நாளிதழில் திரு சுரேந்திரா ஒரு அருமையான கார்ட்டூனை போட்டு அவரது முக நூல் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டிருந்தார்.



 அதற்கு ஒரு சங்கி “இந்த  கார்ட்டூனை நீங்கள் மாற்ற வேண்டியிருக்கும்” என்று தெனாவெட்டாக பதில் போட

 “ஆமாம். இன்னும் கொஞ்சம் வீக்கங்களை சேர்க்க வேண்டி இருக்கும்” என்று நச்சென்று பதில் சொன்னார் திரு சுரேந்திரா.

 பாவம் மொட்டைச்சாமியாரின் மூக்கு மட்டும் உடையவில்லை. அவருக்கு முட்டு கொடுத்த சங்கியின் மூக்கும் சேர்ந்தே!

Friday, August 7, 2020

இதுதான் மோடி ராஜ்யம்

 

சதீஷ் ஆச்சார்யா என்பவரின் கார்ட்டூன் இது. 



மோடி ராஜ்யம் இதுதான். தோற்றுப் போன பிரதமர் இவர். அவ்ளோதான் மேட்டர். ராமர் அல்ல அந்த துரோணரே வந்து கற்றுக் கொடுத்தாலும் தேறாத கேஸ். 

Friday, August 23, 2019

கட்சிக்கு வரியா? ஜெயிலுக்கு போறியா?

கங்கை நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தமும் கோமியமும் கலந்த ஒரு தூய்மையான கலவையில் சில துளிகள் தெளிக்கப்பட்டால் எந்த ஒரு ஊழல்வாதியும் மகாபுனிதராக மாறும் மோடி மகாத்மியத்தைத்தான் இந்த கார்ட்டூன் சொல்கிறதாம்.

எங்க கட்சிக்கு வர மாட்டேன்னு சொன்னா ஜெயில்தான்.