Showing posts with label அராஜகம். Show all posts
Showing posts with label அராஜகம். Show all posts

Monday, February 23, 2026

தொழிற்சங்கமாய் ஒன்றிணைவோம் - மோடியிடம் லூலா

 


இன்று காலையில் ஆங்கில இந்து நாளிதழின் முதல் பக்க தலைப்புச் செய்தியை பார்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தது. கொஞ்சம் சிரிப்பும் வந்தது.

ஏன்?

முதலில் அந்த செய்தியை பாருங்கள்.


தொழிற்சங்கவாதியும் பிரேசில் தொழிலாளர்கள் கட்சியின் தலைவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதிகளை முறியடித்து ட்ரம்ப், மோடி போன்ற கிறுக்கு பிடித்த தலைவர்களின் வரிசையில் வரும் போல்சனரோவை தோற்கடித்து இப்போது பிரேசிலின் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர் லூலா பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் மோடியை பக்கத்தில் வைத்துக் கொண்டு என்ன சொன்னார்?

டொனால்ட் ட்ரம்பின் அராஜக வரி விதிப்பால் பாதிக்கப்படும் நாடுகள், தனியாக அவரோடு பேசுவதற்குப் பதிலாக ஒரு தொழிற்சங்கம் போல ஒன்றிணைந்து பேசினால் நிச்சயம் பலன் கிடைக்கும். ஒரு தொழிற்சங்கவாதியாக என் அனுபவமும் இதுதான். ஒரு தனி தொழிலாளி, ஒரு கம்பெனி நிர்வாகத்தின் கொள்கைக்கு எதிராக பேசினால் எந்த பயனும் கிடைக்காது. அதுவே தொழிற்சங்கமாக ஒன்றிணைந்து போராடும் போது அந்த கூட்டு சக்தியால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

இதுதான் லூலா சொன்னது. 

அப்போது மோடியின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருந்திருக்கும்?

என் அனுமானங்கள் இரண்டு.

முதல் அனுமானம் மேலே உள்ள படத்தில் உள்ளது.

இரண்டாவது குரங்குக் குளியல் கீழே உள்ளது. 

"நானே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ட்ரம்பை குஷிப்படுத்த எனென்னம்மோ செஞ்சிக்கிட்டு இருக்கேன். இதிலே இந்த ஆளு பேசினது ட்ரம்புக்கு தெரிஞ்சா அதுக்கு என்ன திட்டுவாரோ?"


Tuesday, March 25, 2025

அநாகரீகம்-அசிங்கம்-அராஜகம்

 


சவுக்கு சங்கர் ஒரு அரசியல் தரகன், பிளாக் மெயிலர், பணத்திற்காக பொய்ப் பிரச்சாரம் செய்யும் கீழ்த்தரமான நபர்.

துப்புறவுத் தொழிலாளர்களைப் பற்றி அந்தாள் பேசியது கேவலமானது. 

அதற்கான எதிர்வினையாக அந்தாள் வீட்டில் கழிவு நீரையும் மனிதக் கழிவுகளையும் வீசியது என்பது மிகவும் அநாகரீகமான செயல்.

இதுதான் சரியான எதிர்வினை என்று சிலர் பாராட்டுவது அசிங்கமாக இருக்கிறது. சொல்லப்போனால் துப்புறவுத் தொழிலாளர்கள் மீது இந்த சம்பவம் ஏற்படுத்திய களங்கத்தை இவர்கள் அதிகமாக்குகிறார்கள்.

இந்த சம்பவத்தை கண்டித்தால் நீங்கள் சவுக்கு சங்கருக்கு நீங்களும் ஆதரவாக செயல்படும் தரகர்தான் என்று சில உ.பி க்கள் சொல்வது அராஜகமானது.

உங்கள் அராஜகத்தால் பாதிக்கப்படப் போவது திமுக மட்டுமே. இது கூட புரியாத முட்டாள்களா அவர்கள்! அல்லது அவர்கள் திமுகவில் உள்ள பாஜக ஸ்லீப்பர் செல்களா? 

Monday, March 10, 2025

பெருமையில்லை, ஆணவம், திமிர்


 நேற்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா வென்றுள்ளது. 

அது தொடர்பாக சங்கிகள் பலரும் பகிர்ந்து கொண்டுள்ளது கீழே உள்ளது. 

கடந்த ஆண்டு இந்தியா நடத்திய உலகக் கோப்பை போட்டியில் விளையாட பாகிஸ்தான் இந்தியா வந்தது. அதிலும் முதல் போட்டி மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. குஜராத் சங்கிகள் பாகிஸ்தான் வீரர்களை வெறுப்பேற்ற கீழ்த்தரமாக நடந்து கொண்டதையும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இப்போது பாகிஸ்தான் நடத்தும் போட்டியில் விளையாட இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுக்கிறது. அதனை கண்டிக்க யாரும் தயாரில்லை, பாகிஸ்தான் உட்பட. பல நாடுகள் பாகிஸ்தானிலிருந்து துபாய் வந்து இந்தியாவோடு விளையாடி விட்டு சென்றன.

சேர்த்து வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தைக் கொண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தை ஆட்டி வைப்பது பல ஆண்டுகளாக நடக்கும் கதை. போதாக்குறைக்கு  கிரிமினல் ஷா மகன் ஜெய்ஷா இப்போது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர்.

அதனால் இந்தியா என்ன அராஜகம் செய்தாலும் எல்லா நாடுகளும் அமைதியாகத்தான் இருக்கும்.

இந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு இந்திய அணி பாகிஸ்தான் செல்லாமல் இருந்தது என்பது பெருமைக்குரிய விஷயம் இல்லை. ஆணவம், திமிர். அவ்வளவுதான்.

 ஒரிஜினலாக இவர்கள் பீற்றிக் கொண்ட துல்லிய தாக்குதலே ஒரு ஏமாற்று வேலை என்கிற போது, இந்த திமிரை துல்லிய தாக்குதல் என்று வர்ணிப்பது அசிங்கத்தின் உச்சம். 

Tuesday, July 23, 2024

காவடி யாத்திரையில் கலவரத்துக்கு விதையா?

 



வட இந்தியாவில் கான்வர் யாத்திரை நடந்து கொண்டிருக்கிறது. நம்ம ஊர் காவடி போலத்தான் அதுவும்.

கங்கை நதி நீரை முக்கியமான தளங்களிலிருந்து காவடியில் உள்ள பானைகளில் சேகரித்து அந்த கங்கை நீரைக் கொண்டு தங்கள் ஊரில் உள்ள சிவன் கோயில்களில் அபிஷேகம் செய்வார்கள்.

கிட்டத்தட்ட இரண்டு மாதம் நடக்கும் இந்த யாத்திரை செல்லும் வழியில் உள்ள உணவகங்கள், கடைகளில் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகளில்  முதலாளிகளின் பெயரை எழுதி வைக்க வேண்டும் என்று மொட்டைச் சாமியார் உத்தரவு போட்டுள்ளார்.

என்ன காரணம்?

இஸ்லாமியர்கள் தங்கள் கடைகளுக்கு பொதுவான பெயர்கள் வைக்கிறார்களாம். அப்படி இருக்கிற இஸ்லாமியர்களின் கடைகளில் சாப்பிட்டு யாத்திரை செல்பவர்களின் புனிதம் கெட்டு விடுமாம். இஸ்லாமியர்களின் வணிகத்தை அழிக்க நினைக்கும் சில்லறை புத்தி இது.

இது மட்டுமா நோக்கமாக இருக்கும்?

மக்களவைத் தேர்தலில் வாங்கிய அடியை சட்டப்பேரவை தேர்தலில் சரி செய்ய இந்துக்களின் உணர்வுகளை உசுப்பேற்றி விடும் ஆபத்தான சதி இது.

இன்னும் கூட ஒரு காரணம் இருக்கும் என்று அனுமானிக்கிறேன்.

உணர்வுகளை தூண்டி விடுவது கலவரத்தை உருவாக்கவே! முசாபர்நகர் கலவரத்தை நடத்தித்தான் மொட்டைச்சாமியார் ஆட்சிக்கு வந்தார். இப்போது இன்னொரு கலவரம் அந்த கிரிமினல் சாமியாருக்கு தேவைப்படுகிறது. கடைகளில் பெயர்ப்பலகைகளில் இஸ்லாமியர்களின் பெயர் இருந்தால் அவர்களை தாக்குவது சுலபமாக இருக்கும் என்பதுவும் இந்த அறிவிப்பின் பின்னணியில் இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன்.

உத்திரப்பிரதேச மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது. . .

 பிகு: அயோக்கியத்தனமான உத்தரவை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது ஒரு நல்ல செய்தி

Friday, July 19, 2024

மாட்டுக் குண்டர்களும் மோடி போலீஸும்

 


எருமை மாடுகளை வியாபாரத்திற்காக கொண்டு சென்ற மூன்று மாட்டு வியாபாரிகளை மோடியின் மாட்டுக் குண்டர்கள் அடித்து கொன்று விட்டனர். 

இது நடந்தது கடந்த மாதத்தில்.

நடந்தது பாஜக ஆளும் சத்திஸ்கர் மாநிலத்தில் . .

வாகனத்தில் சென்ற வியாபாரிகளை மோடியின் மாட்டுக்குண்டர்கள் வழி மறித்து அடித்தார்கள் என்பது இறந்து போனவரில் ஒருவர் மரண வாக்குமூலமாக தன் நண்பருக்கு தொலைபேசியில் சொன்னது.

ஆனால் மோடியின் போலீஸோ, மோடியின் மாட்டுக் குண்டர்களை பாதுகாக்க கதையை மாற்றி விட்டது.

மாட்டுக்குண்டர்கள் ஒரு பாலத்தின் மீது துரத்திய போது வியாபாரிகளே  லாரியிலிருந்து குதித்து செத்துப் போனார்கள். அவர்கள் அடிக்கப்படவெல்லாம் இல்லை என்று காவல்துறை கண்காணிப்பாளர் சொல்லி விட்டார்.

அவங்க லாரியிலிருந்து எப்படி குதிச்சாங்க? அவங்க மேல இருந்த காயம் எப்படி வந்தது என்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல அவரால் இயலவில்லை.

எப்படி முடியும்?

மாட்டுக்குண்டர்களை பாதுகாக்க மக்களை மடையர்களாக கருதுகிறோம் என்று அவரால் எப்படி சொல்ல முடியும்!

Friday, February 24, 2023

நரேந்திர கௌதம் மோடியென்றால் ஜெயில்

 


காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா என்பவர் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் மோடியை "நரேந்தர் கௌதம் மோடி" என்று சொன்னதற்காக

அஸ்ஸாமில் புகார் கொடுத்து டெல்லி போலீசுக்கு தகவல் செய்து ரெய்ப்பூர் செல்ல விமானத்தில் அமர்ந்த கேராவை கீழிறக்கி கைது செய்துள்ளார்கள்.

மோடிக்கு பயம் வந்து விட்டதன் அடையாளம் இது!

மோடியும் அதானியும் ஒன்றுதானே! கேரா சொன்னதில் என்ன தவறென்று நீங்கள் யோசிக்கலாம்.

அது தவறு.

படியளக்கும்  எஜமானும் வாங்கித்தின்னும் சேவகனும் ஒன்றாக முடியாது என்று மோடி நினைப்பதால்தான் கைது. 

Thursday, August 18, 2022

மோடி மந்திரியால் உள்ளதும் போச்சு . .

 


நேற்று மதியம் மோடியின் மந்திரி சபையில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருக்கும் ஹர்தீப் சிங் பூரி என்பவர், டெல்லியில் அகதிகள் முகாமில் இருக்கும் மியன்மர் ரோஹிங்க்யா அகதிகள்  ஏழை மக்களுக்காக கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்புக்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கிறார்.




அடுத்த ஒரு மணி நேரத்தில் உள்துறை அமைச்சகம், வீட்டு வசதித்துறை மந்திரி சொன்னதை மறுத்தது மட்டுமல்ல, ரோஹிங்க்யா அகதிக்ள் இப்போதிருக்கும் அகதிகள் முகாமை தடுப்புக்காவல் மையமாக மாற்றி விட்டது.



அதாவது அந்த முகாம் இப்போது ஒரு திறந்த வெளிச் சிறை. உள்ள சொற்ப சுதந்திரமும் மோடியின் மந்திரியால் பறி போகிவிட்டது.

பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகளின் ஆட்சியில் முஸ்லீம்களுக்கு எப்படி நல்லது நடக்கும்!!!

Wednesday, August 17, 2022

இந்தியாவின் துயரம் . . .

 ....

தோழர் சம்சுதீன் ஹீரா அவர்களின் முக நூல் பக்கத்திலிருந்து பகிர்ந்து கொள்கிறேன்.

மோடியின் கொடூரத்திற்கு வாழும் சாட்சி இந்த பதிவில் எழுதப்பட்டுள்ள பில்கிஸ் பானு. திட்டமிட்ட கொலைகளின் சூத்திரதாரி மோடி . . .

மனிதனாகக் கூட மதிக்கப்பட முடியாத ஒரு ஜந்து பிரதமராக இருப்பதும் தேசபக்தி வஜனம் பேசுவதும் இந்தியாவின் துயரம் . . .




சினிமாக்களில் மட்டுமே பார்த்திருக்க முடிந்த கற்பனைக்கும் எட்டாத கொடூரங்களை ஒரே நாளில் சந்தித்த , 'வாழும் துயரம்' அவர்.

பிப்ரவரி 27, 2002ல் கோத்ரா ரயிலில் பற்றிய தீ கலவரமாக உருவெடுத்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை காவு வாங்கியது. தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்வதற்கு பலர் உயிரோடு இல்லை, பலர் உயிருக்கு பயந்து சொல்லத்தயாராய் இல்லை! ஆனால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காய் படிப்பறிவற்ற ஓர் இளம்பெண் துணிந்து வந்தார்.
அதனை அவர் சொல்லக் கேட்போம்...
"என் கணவர் வேலையில்லாதவராக அப்போது இருந்தாலும் , வசதிக்கொண்ட வீட்டில் திருமண வாழ்க்கை சுகமாக சென்றுக்கொண்டிருந்தது. எங்களுக்கு 3 வயதில் ஓர் மகள் இருந்தாள். பெயர் சாலிஹா. நான் 5 மாத குழந்தையை வயிற்றில் சுமந்தவளாக இருந்தேன்.
பிப்ரவரி 28! சரியாக கோத்ரா சம்பவத்திற்கு அடுத்த நாள் எங்கள் கிராமத்தின் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்துத்துவாவினரால் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது கலவரமாக மாறிப்போக பல முஸ்லிம் வீடுகள் தீக்கிரையாகின. நாங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் செல்ல நாடிய போது ஊர்த்தலைவர் தடுத்து "யாராலும் உங்களுக்கு தீங்கு ஏற்படுத்த முடியாதென்று" உறுதி கூறினார்.
ஆனால் ,அதன் பின்னர் கலவர கும்பல் எங்கள் இல்லங்களை நோக்கி கற்களை வீசத்தொடங்கினர். அதிலிருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தோம். அப்போது நான் செருப்பு கூட அணிய அவகாசம் பெற்றிருக்கவில்லை. உறுதி கொடுத்த ஊர் தலைவர் வீட்டில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் , குழந்தைகள் ஒன்று கூடினோம். ஆனாலும் பாதுகாப்பற்றவர்களாய் உணர்ந்தோம். நாங்கள் தப்பி வேறிடம் செல்பதற்குரிய எல்லா வழிகளும் கலவரக்காரர்களால் அடைக்கப்பட்டிருந்தன. 28ம் தேதி நள்ளிரவில் எங்கள் வீடுகள் திட்டமிட்டு எரிக்கப்பட தொடங்கின. நாங்கள் உங்களை கொல்வோம், நாங்கள் உங்களை வெட்டியே தீருவோம் எனும் கோஷங்கள் உரக்க ஒலித்தன.
எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவைப்பட்டது. அதற்காக கிராம ஆண்கள் காவல்நிலையத்தில் உதவி கேட்டனர். ஆனால் எங்களுக்கு பாதுகாப்பு மறுக்கப்பட்டது. வேறு வழியில்லாமல் பல முஸ்லிம்கள் தங்கள் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள காடுகளுக்கு சென்று சில நாட்கள் மறைந்து வாழ்ந்தனர்.
அன்றைய நாள் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை உண்ண உணவின்றி அருந்த நீருமின்றி உயிருக்கு பயந்து எங்கள் கிராமங்களிலேயே பல்வேறு இடங்களில் ஒளிந்துக்கொண்டே இருந்தோம். ஆனால் அசாதரண சூழல் திணிக்கப்பட்ட நிலையில் அது சாதாரண விஷயமாக இருக்கவில்லை. எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களுக்கெல்லாம் மிரட்டல் விடுக்கப்பட்டது. அவர்களை வெளியே அனுப்பவில்லை எனில் உன் வீட்டையும் கொளுத்துவோம் என்று ஆவேசமாக அவர்கள் கத்தியதால் பலரும் அடைக்கலம் கொடுக்க அஞ்சினர்.
மிரட்டலுக்கு அஞ்சிய , உறுதி அளித்த எங்கள் ஊர் தலைவரும் அவர் வீட்டிலிருந்து எங்களை வெளியேற்றிவிட்டார். எங்கள் வீடுகளுக்கே செல்லலாமென நினைத்தால் , அது ஏற்கனவே தீக்கு இரையாகியிருந்தது. மீண்டும் காவல்துறை அதிகாரிகளிடம் பாதுகாப்பு கோரினோம். அவர்களோ எங்களை அக்கிராமத்தை விட்டு வெளியேறிச்செல்ல அறிவுறுத்தினர்.
இரவாகியிருந்தது. அருகிலிருக்கும் கிராமத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிஜல்பாய் தாமோர் வீட்டுக்கு அடைக்கலம் தேடி சென்றோம். துரதிஷ்டவசமாக அவர் அப்போது ஊரிலில்லை. அவர் மகனும் கூட எங்களை ஆசுவாசப்படுத்த குடிக்க நீரும் சில திண்பண்டங்களையும் கொடுத்துவிட்டு அங்கிருந்து செல்லும்படி சொல்லிவிட்டார்.
வேறு வழியில்லை! வேறிடம் செல்ல வேண்டும். இன்னுமொரு கிராமத்திற்கு சென்றால் அங்குள்ள முஸ்லிம்கள் உயிருக்கு பயந்து எங்கோ தப்பியோடியிருந்தனர். அங்கிருந்த பள்ளிவாசல் அன்றைய இரவுக்கு பாதுகாப்பு கொடுத்தது.
ஷாமின்! என் ஒன்றுவிட்ட சகோதரி... நிறைமாத கர்ப்பிணி. திடீரென பிரசவ வலி ஏற்பட மருத்துவ உதவியும் கிடைக்காத அந்த நேரம் செய்வதறியாது திகைத்தோம். அவள் பள்ளிவாசலிலேயே தன் குழந்தையை பிரசவித்தாள்.
பள்ளிவாசல் அமைந்திருந்த நாங்கள் தங்கியிருந்த கிராமம் ஏற்கனவே இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டதால் அங்கிருப்பது பாதுகாப்பற்றது என எண்ணி குத்ரா எனும் கிராமத்திற்கு பழங்குடியினர் உதவியுடன் சென்றோம்.
எங்கள் கிராமத்திலிருந்து 500 முஸ்லிம்கள் தப்பி வந்தோம். 17 உறுப்பினர்கள் மட்டும் குத்ராவில் தங்கிக்கொண்டோம். ஷாமினால் பயணிக்க முடியவில்லை. ஈன்றெடுத்த வேதனை அவளை சோர்வாக்கியிருந்தது. ஆகையால் இக்கிராமத்திலேயே 3 நாள் வரை மறைந்திருக்க எண்ணினோம். எங்கள் அடையாளங்களை மறைக்க பழங்குடியினர் அவர்களின் துணிகளை எங்களுக்கு அணியவைத்தனர். ஷாமின் மீதான இரக்கத்தால் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். இல்லையேல் அதுவும் கிடைத்திருக்காது.
ஆனால் அதுவும் எளிதானதாக இருக்கவில்லை. முஸ்லிம்களை அவர்கள் தங்களுடன் வைத்துள்ளார்களா என பல விசாரணைகளுக்கு உள்ளாகினர். எனவே அதிகாலை 4 மணிக்கு மாறுவேடத்தில் அங்கிருந்து புறப்பட்டோம்.
உயிருக்காய் பயந்தோடிய நாட்கள் எல்லாம் கண்ணீர் மட்டுமே சுமந்திருந்தோம். அடுத்த நொடி என்ன ஆபத்திருக்கிறது என்பதை அறியாத படபடப்புகள் கொடூரமானவை. எதுவும் சிந்திக்க முடியவில்லை! சிந்தனையெல்லாம் எப்படி உயிரை காப்பாற்றுவதிலேயே இருந்தது.
இரு நாட்களுக்கு பிறகு பழங்குடியினரின் வழிகாட்டல் உதவியுடன் சபர்வாட் கிராமத்திற்கு சென்றோம். இங்கிருந்து ,மானாபாய் எனும் நீண்டநாள் நண்பரை சந்தித்து உதவி பெற நினைத்தோம். அவர் இருக்கும் பகுதி பனிவேலா. அங்கு செல்லும் வழியில் ஒரு குக்கிராமத்தில் ஓய்வெடுத்துக்கொண்டோம். அது இரு மலைகளுக்கு இடைபட்ட இடம் . குருகிய சாலை வழியே செல்லக்கூடிய பகுதி.
நாங்கள் சாலை வழியே சென்ற போது திடீரென ஒரு நபர் என் மாமாவை தாங்கினான். கீழே சரிந்த அவர் ஒரு மணி நேரத்திற்கு பின்பே சுயநினைவு பெற முடிந்தது. விரைவிலேயே சில நபர்கள் சூழ்ந்துக்கொண்டனர். அவர்களை முன்பே எனக்கு தெரியும். ஆம்! அவர்கள் என் சொந்த கிராமத்தை சேர்ந்தவர்கள். சற்று முன்னர் நாங்கள் தங்கிய சபர்வாட் கிராமத்தினர் தான் நாங்கள் எங்கேசெல்கிறோம் என்ற தகவலை இவர்களுக்கு கொடுத்துள்ளார்கள். இவ்வெறியர்கள் டாட்டா ஸ்மோவில் வந்திருந்தனர்.
"முஸ்லிம்கள் இங்கேயிருக்கிறார்கள்! கொல்லுங்கள்! கொல்லுங்கள்" எனும் ஆவேச குரல்களை எழுப்பினர்.
அவர்கள் சபர்வாட் மற்றும் பனிவேலா கிராமத்திலிருந்த வெறிபிடித்த மக்களை திரட்டி வந்திருந்தனர். தொடர் ஓட்டத்தின் காரணமாக எங்கள் உடல் சோர்ந்திருந்தது, உதவிக்கு ஆள் இல்லாத நிலை உள்ளத்தையும் சோர்வடைய செய்திருந்தது. எங்களால் இனி அவர்களுடன் சண்டையிட முடியாது! அதற்குரிய சக்தியையும் இழந்துவிட்டோம். ஆனாலும் ஆளுக்கொரு திசையாக ஓட்டம் பிடிக்க நினைத்தோம்! பயனில்லை- சுற்றிவளைக்கப்பட்டோம். நாங்கள் 17 நபர்கள் தான்... நான்கு ஆண்கள் மட்டுமே எங்களில் உண்டு! எட்டு பெண்களும் மீதமுள்ளவர்கள் சிறு குழந்தைகளாகவும் இருந்தனர். அவர்களிலோ 25க்கும் மேற்பட்ட வெறியர்கள் இருந்தனர்.
அவர்கள் எம் பெண்களின் ஆடைகளை கிழித்தெறிந்து பாலியல் தொல்லைக்கு ஆளாக்கினர். நிர்வாணமாக்கப்பட்ட பெண்கள் கூட்டத்தினர்க்கு முன் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர்.
அவர்களின் வெறி 2 நாட்களுக்கு முன் பிறந்த குழந்தையையும் விட்டுவைக்கவில்லை! ஷாமின் 2 நாள் வயது குழந்தையை கொடூரமாக கொன்றனர். என் தாய்மாமா, என் தந்தையின் தங்கை மற்றும் அவரின் கணவரையும் அடித்துக்கொன்றனர். வன்புணர்வுக்காளான பெண்களையும் கொன்றனர்.
அதன் பின் என்னிடம் வந்தனர். நான் என் 3 வயது மகளை கையில் ஏந்தியிருந்தேன். என்னிடமிருந்து வலுக்கட்டாயமாக அவளை பறித்துக்கொண்ட அந்த வெறியர்கள், தன் வெறியின் விசைக்கேற்ப அவளை தூக்கி வீசினர். அவளின் பிஞ்சு தலை பாறையில் மோதிய போது என் இதயமே சுக்குநூறாய் உடைந்தது. அவள் இறந்து போனாள். நான்கு பேர் என் கை மற்றும் கால்களை பிடித்துக்கொள்ள பலபேர் ஒருவர் பின் ஒருவராக என்னை வன்புணர்வுக்குள்ளாக்கினர். அவர்களின் வெறி அடங்கிய பின்பும் கூட கண்மூடித்தனமாக என்னை உதைத்தும் அடித்தும் துன்புறுத்தினர். என் கழுத்துப்பகுதியினை காலால் அழுத்தியிருந்தான் ஒருவன். கற்கள் கொண்டு தாக்கப்பட்டேன். இரும்பு தடியால் என் தலையில் தாக்கிய போது நினைவிழந்து போனேன். நான் இறந்துவிட்டதாக நினைத்த அந்த வெறியர்கள் என்னை புதருக்குள் தூக்கி வீசினர்.
எங்களை தாக்கிய போது அவர்கள் உதிர்த்த முறைகேடான வார்த்தைகளை என்னால் எப்போதும் திருப்பிச்சொல்ல முடியாத அளவுக்கு கேவலமானவை. " கோத்ராவில் எங்கள் மக்கள் கொன்றதற்காக உங்களை கொல்வோம்! எந்த ஒரு முஸ்லிமையும் உயிருடன் விட்டு வைக்க மாட்டோம்" என ஆக்ரோஷமாக கத்தினர்.
என் கண் முன்னே என் அம்மா, என் தங்கை மற்றும் என் 12 உறவினர்களும் கொல்லப்பட்டன்னர். தன் துன்பத்தை கத்தி சொல்ல முடியாத மிருகங்களை துன்புறுத்தி துடிதுடிக்க வைத்து கொல்லப்படுவதை போலவே என் உறவினர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இத்தனைக்கும் 28ம் தேதி காலையில் என் கணவரும் இன்னும் சில உறவினர்களும் பிஜேபி ஊழியர் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட கிராமத்தினர்க்கான மீட்டிங்கில் எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் படி கெஞ்சியுள்ளார். இப்போது எங்களை வன்புணர்வுக்கு ஆளாக்கி கொன்றவர்கள் அப்போது அக்கூட்டத்தில் இருந்தவர்கள் தான்!
17 பேரில் 2 குழந்தைகளும் (சதாம் -வயது 7, ஹுசைன் -வயது 5) நானும் மட்டும் பிழைத்துக்கொண்டோம்! அவர்கள் இருவரும் எப்படி தன்னை காத்துக்கொண்டார்கள் என எனக்கு தெரியவில்லை.
நாங்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட போது சுற்றி நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்களில் எவரும் ஹிந்து பெண்கள் இல்லை. அவர்கள் அனைவரும் நடுத்தர வயது ஆண்கள் மட்டுமே. நாங்கள் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட போது இவர்களெல்லாம் ஆபாச வார்த்தைகளில் கத்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னை வன்புணர்வுக்கு உள்ளாக்கிய போது நான் ஐந்து மாத கற்பிணி என கூட என்னால் சொல்ல முடியாத அளவுக்கு அவர்களின் கால்கள் என் கழுத்திலும் , வாயிலும் மிதிப்பட்டிருந்தது.
ஹிந்துக்களில் சாதி பேதமின்றி இந்த கொடூரத்தில் பங்காற்றினர். என் கிராமத்தை சேர்ந்தவர்களும் அதில் ஒரு பகுதியினர் தான்! எப்படி என்னால் அவர்களை அடையாளம் காண முடியாமல் போகும் ? அவர்கள் என் கிராமத்தை சேர்ந்தவர்களே!
இரண்டு மணி நேரத்திற்கு பின் என் கண்களை திறந்த போது என் உலகம் சிதைக்கப்பட்டதை கண்டேன். என்னால் நிற்க கூட முடியவில்லை! ஆனால் அவர்கள் கையில் மீண்டும் சிக்க விரும்பவில்லை. நிர்வாணத்தை மறைத்துக்கொள்ள கந்தல் துணியேனும் கிடைக்குமா என தேடியலைந்தேன். மேலங்கி கிடைத்தது. என்னை சுற்றி என் உறவினர்களின் பிணங்கள் இருந்தது. மண்ணில் சரிந்திருந்த அந்த உடல்களை பார்க்கவும் என்னால் முடியவில்லை.
ஓர் இரவும் கழிந்து, அடுத்த நாள் பகல் பொழுதும் கழிந்தது. தண்ணீர் தாகமும் பசியும் என்னை மேலும் துன்புறுத்தியது. என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை! தாகத்திலேயே செத்துவிடுவேனோ என எண்ணத்தோன்றியது. அதனால் மலைப்பாங்கான அந்த இடத்தை விட்டு கீழிறங்கி உணவும் உடையும் கிடைக்குமா என தேடியலைய ஆரம்பித்தேன்.
சில தொலைவில் அடிகுழாய் ஒன்றை பார்த்தேன். அது அந்த பகுதியில் வாழும் பழங்குடியினர்க்கு சொந்தமானது. என்னை கண்டதும் நான் ஒரு முஸ்லிம் என அறிந்து என்னை தாக்க வந்தனர். அதிலிருந்து என்னை காத்துக்கொள்ள நான் முஸ்லிம் இல்லை என்றும் உங்களை சேர்ந்தவள் தான் என்றும் பொய் சொன்னேன் அவர்கள் மொழியிலேயே. அவர்கள் நம்பினார்கள். எனக்கு நீரும் உடையும் கொடுத்தனர்.
கொஞ்சம் உறங்கினேன். அப்போது தான் போலிஸ் வேன் அந்த பகுதிக்கு வந்து தேட ஆரம்பித்தது. ரந்திக்புர் கிராமத்திலிருந்து வந்த குடும்பத்தினர் கொல்லப்பட்டதை குறித்து அவர்கள் அங்கே கேட்டார்கள்.
போலிஸ்காரர்கள் எனக்கு பாதுகாப்பு தருவார்கள் என நம்பினேன். அவர்களும் என்னை அவர்கள் கொண்டு வந்த வண்டியின் பின்புறம் ஓய்வெடுத்துக்கொள்ள சொன்னார்கள். உயிர் பிழைத்தது என் அதிஷ்ட்டம் என்றார்கள். அவர்களுடன் அங்கிருந்து புறப்பட்டேன். லிம்கேதா விற்கு அழைத்து சென்றனர். எனக்கு உணவு கொடுத்த பின் என் கதையை கேட்டார்கள். ஆனால் என் புகாரை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக அவர்கள் என்னை பயம் காட்டினர்.
ஒருவேளை இந்த வன்புணர்வு சம்மந்தமான குற்றச்சாட்டை சொன்னால் என்னுடல் இருக்கும் மோசமான நிலையில் என்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள் என்றும் விஷ ஊசி செலுத்தி என்னை மருத்துவர்கள் கொல்வார்கள் என்றும் கூறினர். நான் பயந்தேன் , எனினும் நான் சொன்னவற்றை ஒன்று விடாமல் புகாராக ஏற்றுக்கொள்ளச் சொன்னேன். ஆனால் அவர்களோ நான் சொன்னவற்றுக்கு புறம்பாக 500 பேர் சேர்ந்த மக்கள் குழு என்னையும் உறவினரையும் அடித்துவிட்டதாக கதை கட்டி எழுதினர். சக்தி முழுவதும் இழந்த என்னால் என் புகார் குறித்து போலிஸாருடன் முறையிட முடியவில்லை.. இவர்களிடம் அது பயனளிக்காது என்பதையும் அறிந்துக்கொண்டேன். ஆகையால் என் எண்ணத்தை கைவிட்டு என்னை கோத்ரா முகாமிற்கு அழைத்துச்செல்லும்படி வேண்டுகோள் விடுத்தேன்! நான் என் உறவினர்களை பார்க்க விரும்பினேன்.
நான் படிக்காதவள். நான் சார்ந்த அமைப்பு பெண்களை பள்ளிக்கு செல்வதை அனுமதிக்காத தப்லீக் ஜமாத்தை சேர்ந்தது. ஆனாலும் கற்பழிப்பு நடத்தப்பட்ட ஐந்து நாட்களுக்கு பிறகு, மெடிக்கல் செக்கப் செய்ய முடிவெடுத்தேன். நான் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதை உறுதி செய்யும் சான்றிதழை பெற்றேன்.
என் அம்மா, என் 2 சகோதரர்கள், இரு சகோதரிகள் மற்றும் என் மூன்று வயது மகள் கொல்லப்பட்டனர். ஆனாலும் என்னால் அந்த குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியும். அந்த மிருகங்களை பல வருடங்களுக்கு முன்பிருந்தே எனக்கு நன்கு தெரியும். நாங்கள் ஊரில் பால் விற்று வந்தோம். எங்களிடம் பால் வாங்கிச்செல்லும் வாடிக்கையாளர்கள் அவர்கள். ஒருவேளை அது அவர்களுக்கு அவமானமாக இருந்தால் அதற்காக அவர்கள் இவ்வாறு என்னை செய்திருக்க வேண்டியதில்லை. இந்நிகழ்வுகளுக்கெல்லாம் பிறகு என் தந்தை மனநிலை குன்றியவராகிவிட்டார். எண்ணிப்பார்க்க முடியாத திருப்பங்களுடனும் மோசமான சொற்ப நாட்களுக்குள்ளும் நான் அனாதையாக்கப்பட்டுவிட்டதால் சக்தி முழுவதும் இழந்துவிட்டேன் ! ஆனாலும் இதனை பாதியிலேயே நான் கைவிடுவதாக இல்லை! எப்படி என்னால் அவர்களை மன்னிக்க முடியும் ? "
முடித்தார். பத்திரிக்கையாளர் ஷீலா பட்-இடம் தனக்கு நேர்ந்தவற்றையெல்லாம் விவரித்தார் பில்கிஸ். அதன் பின்னர் தான் பலரின் கவனத்திற்கு இக்கொடூரம் சென்றது.
எதிர்பார்த்த படியே மோடியின் காவல்துறை 2003ல் இந்த வழக்கை "சம்பவம் உண்மைதான். ஆனால் கண்டுபிடிக்க இயலாதவை" என கூறி முடிவுக்கு கொண்டு வந்தது. இதுபற்றி சகோதரி பில்கிஸ் குறிப்பிடுகையில் " இருமுறை புகார் அளித்தேன். முதலாவதாக லிம்கேதா வில், அடுத்ததாக நான் தங்கியிருந்த கோத்ரா முகாமில் . அவர்கள் என் கைரேகையை பெற்றுக்கொண்டார்கள். ஆனால் படிப்பறிவற்றவளாக இருந்ததால் அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதை நான் அறியவில்லை"
அதன் பின் பில்கிஸ் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை அணுக அஃது அஹ்மதாபாத் சுப்ரிம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. பின்னர் இவ்வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்ட பின் உண்மைகள் வெளிவர ஆரம்பித்தன. மருத்துவர்களும் போலிஸும் இந்நிகழ்வுக்கு துணை புரிந்ததும், தடயங்களை அழித்ததும் அம்பலமானது. 2 மருத்துவர்கள், 6 போலிஸ் உட்பட 20 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. சிபிஐ தன் அறிக்கையில் இந்நிகழ்வு குஜராத் போலிஸ்ஸின் ஒட்டுமொத்த தோல்வியையும் அவர்களின் உடந்தையையும் சுட்டிக்காட்டியது. இந்த வழக்கு போக்கின் காரணமாக பில்கீஸ் அச்சுறுத்தல்களை சந்திக்க நேர்ந்ததன் காரணமாக அவருக்கு CISF பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. சம்பவம் நடந்தது முதல் வழக்கு முடியும் வரையில் 20க்கும் அதிகமான இடங்களுக்கு பாதுகாப்பு கருதி மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பில்கிஸ் குஜராத் க்கு வெளியே வழக்கு விசாரணை நடத்தும்படி சுப்ரிம் கோர்டில் மனு கொடுத்தார். அவரின் கோரிக்கையை ஏற்று இவ்வழக்கு மும்பைக்கு மாற்றப்பட்டது. "நீதியின் மீதான நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுக்க வைத்தது" என இம்முடிவு குறித்து கூறினார்.
இதற்கிடையில் போலிஸாரால் பில்கீஸ் உறவினர்கள் புதைக்கப்பட்ட பனிவேலா கிராமத்தை ஏய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர் தோஹ்ரா குழு ஆய்வு செய்த போது அங்கே 60 கிலோ உப்பு கிடைத்தது. உடலை சீக்கிரமாக மக்கச்செய்வதற்காக திட்டமிட்டு போலிஸார் இவ்வாறு செய்தது நிரூபணமானது. மண்ணின் ஈரப்பதம் காரணமாக அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை. பில்கிஸ் சொன்ன அடையாளங்கள் வயதும் மருத்துவகுழு ஆராய்ச்சி முடிவோடு ஒத்துப்போனது. 8 பேரின் உடல்கள் மட்டும் கிடைத்தன. மீதம் ஆறுபேர் காணாதவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். மருத்துவக்குழுவின் அறிக்கை இவ்வழக்கின் போக்கை மேலும் வலுவாக்கியது.
ஆறுவருட போராட்டத்தின் பயனாக , பில்கிஸ் வைத்திருந்த நம்பிக்கையை காக்கும் வண்ணம் சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தீர்ப்பளித்தது. பிடிபட்ட 20 பேரில் 12 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு 2008, ஜனவரி 18ல் ஆயுள் தண்டனை விதித்தது. ஒருவர் விசாரணையின் போதே இறந்துவிட்டிருந்தார். 7 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டனர்.
நீதி கிடைத்த போதும் விடுவிக்கப்பட்ட ஆறுபேருக்காக தன் ஆதங்கத்தையும் சகோதரி பதிவு செய்தார். அந்நபர்களுக்கும் தண்டனை பெற்றுத்தருவதில் உறுதியாய் உள்ளார். இனிவரும் காலங்களில் அடுத்தடுத்த கேஸ்களுக்கும் சிபிஐக்கு தன் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறினார். இத்தீர்ப்பு பற்றி ப்ரஸ் மீட்டிங்கில் பேசியபோது " இது என் தனிபட்ட போராட்டமல்ல. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பல பெண்களுக்கான போர். பாலியல் வன்முறை திட்டமிடப்பட்டு எங்கள் சமுதாயப் பெண்கள் மீது நடத்தப்பட்டது. என்னுடைய இப்போராட்டம் பாதிப்படைந்த பல பெண்களுக்கு சக்தியை கொடுக்கும். அவர்கள் தண்டிக்கப்படுவதால் மட்டுமே வெறுப்பு ஓய்ந்து விடாது. ஆனால் நீதி இன்னும் சாகவில்லை என்பதற்கான சிறிய அறிகுறிதான் இது..!" என்றார். உண்மை தான் ! எவ்வித பணபலமும் இன்றி, எந்த ஒரு அதிகார வர்க்கத்தின் ஆதரவும் இன்றி தனித்து போராடி தனக்காக நீதியை தனியாளாய் நிலைநாட்டிய பில்கிஸ்ஸின் செயல் ஒவ்வொரு பாதிப்படைந்தவர்களுக்கும் ஒரு முன்மாதிரி தான்.
மோடிக்கு பெரும் தலைவலி என்றே தான் எண்ணத்தோன்றும் சகோதரி பில்கிஸ் அவர்கள் தரும் பதிலடிகளைப்பார்த்தால்! முதலமைச்சர்க்கான தேர்தல் சமயத்தில், "நீங்கள் ஓட்டுப்போடுவீர்களா?" என கேட்கப்பட்ட போது, "நான் ஏன் ஓட்டளிக்க வேண்டும் ?, பல கொடுமைகள் எனக்கு நிகழ்த்தியதோடு என் குடும்பத்தாரை என் கண் முன்னே கொடூரமாய் கொன்றார்கள். இவற்றுக்கு பின்னாவது குஜராத் அரசு என்னை பாதுகாத்திருக்க வேண்டும், எனக்கு நீதி பெற்றுத் தந்திருக்க வேண்டும். இவையெல்லாம் செய்ய வக்கற்ற அரசு இயந்திரத்திற்காகவா நான் ஓட்டளிக்க வேண்டும். முடியாது. நான் விரும்பவுமில்லை" என்றார் காரமாக.
இப்படியான விரக்தியாளர்களை தான் இந்த மதவாத அரசு உருவாக்கியுள்ளது. உங்களுக்கு நீதி கிடைக்க வேண்டி மோடியின் ஆதரவுக்காக அவரை சென்று சந்திப்பீர்களா என கேட்டபோது " தன் சொந்த மாநிலத்தில் எனக்கு நீதியும் பாதுகாப்பும் தர முடியாத நபரை நான் எப்போதும் சந்திக்க விரும்பவில்லை. நான் அவரை நம்பப்போவதுமில்லை " என்ற அவரின் ஒவ்வொரு சொல்லும் மோடியின் ஒவ்வொரு பிம்பத்தையும் உடைத்துக்கொண்டே வந்தன.
இன்று இவரை நாம் மறந்திருக்கலாம், இவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மக்கள் புறக்கணித்திருக்கலாம். நமக்கொரு துன்பம் நிகழாத வரை அத்துன்பத்தின் ரணங்கள் நமக்குப் புரியப்போவதில்லை! ஆனால் அவருக்கான அநீதிகளை ஒதுக்கிவிட்டு கொடூரனை ஆட்சிகட்டிலில் அமர வைக்க துடித்த ஒவ்வொரு சாமானியனும் குற்றவாளிகளே தான். வெட்கபட வேண்டும் நாம்...
மூன்று பெண்குழந்தை ஒரு ஆண் குழந்தையுடன் 20க்கும் மேற்பட்ட முறை வீடும் ஊரும் மாறி மாறி அலைகழிக்கப்பட்டும், அவ்வபோது போலிஸ் நெருக்கடிகளோடும் , இதற்கு சாவே மேலோ என்ற சிந்தனையில் அடிக்கடி வயப்பட்டும் கூட "வாழ்வதற்காய் போராட வேண்டுமெனில் போராடத் தயங்கமாட்டேன்" என திடமாய் வாழ்நாளை கழித்துக்கொண்டிருக்கிறார்... 14 வருடத்தில் ஏதேதோ நடந்துவிட்டது! குற்றவாளிகளெல்லாம் சுதந்திரமாய்... பில்கிஸ் மட்டும் கேள்விக்குறியாய்......... டெல்லி மாணவி நிர்பயா இறந்ததே நலம் தான்! இந்தியாவில் நீதி வேண்டுவோர் தான் குற்றவாளிகள்.
சகோதரி பில்கிஸ்ஸின் நல்வாழ்வுக்காய் பிரார்த்திப்போம்.

Wednesday, June 29, 2022

இதுதான் இன்றைய அராஜகம்


ஐயா, இந்த பத்திரிக்கைக்காரன் இரண்டு சமூகங்களுக்கு இடையே பகைமை உணர்ச்சியை தூண்டக் கூடிய விதத்தில்  சில பதிவுகள், ட்வீட்டுகள் ஆகியவற்றை செய்தான். வீடியோவை வேறு பகிர்ந்தான்.

ஆமாம் ஐயா, உங்கள் வெறுப்புப் பேச்சு வீடியோவைத்தான்.

இதுதான் கார்ட்டூன் சொல்லும் செய்தி. 

இன்றைய நிலைமையும் இதுதான்.

குஜராத் கலவரக் குற்றவாளிகளை அம்பலப்படுத்திய டீஸ்ட்டா செதல்வாட், எம்.பி,ஸ்ரீகுமார், ஐ.பி,எஸ், பொய் செய்திகளை அம்பலப்படுத்தும் ஆல்ட் நியூஸ் முகமது சுபைர் ஆகியோரின் கைதுகள் சொல்லும் செய்தியும் இதுதான்.

பாசிஸம் என்பதைத்தாண்டிய  அராஜகம் இதுதான்.

Tuesday, June 14, 2022

புல்டோசர் பொய்களை புரிந்து கொள்ள

 புல்டோசரை அழிவாயுதமாக பயன்படுத்தும் பாஜக, பொய்யை இன்னொரு ஆயுதமாக பயன்படுத்துகிறது. சட்ட விரோதமாக கட்டப்பட்ட வீடு, இடிப்பது குறித்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டது, கலவரக்காரர்கள் என்றெல்லாம் பல முட்டுக்களை முட்டாள் சங்கிகள் கொடுத்து வருகின்றனர். " அரசு செய்த குற்றம் - நடந்தது என்ன?" என்று பெல்ஜியம் தோழர் இ.பா.சிந்தன் விரிவாக எழுதியுள்ளார். 

நாம் படிப்பது மட்டும் போதாது. நாம் அறிந்த அனைவரிடமும் பரப்ப வேண்டும். 



உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் நகரில் அஃப்ரீன் ஃபாத்திமா என்கிற மாணவியின் வீட்டை காவல்துறை ஞாயிற்றுக்கிழமையன்று இடித்துத் தரைமட்டமாக்கி இருக்கிறது.

வீட்டை இடித்ததற்கான காரணம் என்ன?

ஒருபுறம், அந்த வீடு சட்டவிதிகளுக்கு மீறி கட்டப்பட்டிருப்பதாகக் கூறி அதனை இடித்ததாக அலகாபாத் அரசு நிர்வாகம் தெரிவிக்கிறது.

மற்றொருபுறம், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழத்தைல் ஆராய்ச்சி மாணவியாக இருக்கிற அஃப்ரீன் ஃபாத்திமா, அங்கு மாணவர் போராட்டங்களில் கலந்துகொண்டதாலும் மாணவர் அமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பதாலும் தான் அவரைக் குறிவைத்து அவரது வீட்டை அலகாபாத்தில் பாஜக திட்டமிட்டே இடித்துத் தள்ளி இருக்கிறது என்பது இன்னொரு வாதமாக இருக்கிறது.

இதில் எது உண்மை? நடந்தது என்ன? என்பதை இதுவரை நடந்த சம்பவங்களை ஒவ்வொன்றாக சரிபார்த்தால் நமக்குப் புரிந்துவிடும்.

ஜாவித்துக்கு இரண்டு மகள்கள். சுமையா ஃபாத்திமா என்கிற ஒருமகள் அலகாபாத்தில் பெற்றோருடனே இருக்கிறார். இன்னொரு மகளான அஃப்ரீன் ஃபாத்திமா டெல்லியில் இருக்கும் ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருக்கிறார். வெல்ஃபேர் கட்சியின் உள்ளூர் தலைவராக ஜாவித் இருக்கிறார். அவருடைய மகளான அஃப்ரீன் ஃபாத்திமாவோ அக்கட்சியுடைய மாணவர் அமைப்பின் தேசிய செயலாளராக இருக்கிறார். தானொரு இந்தியர் தான் என்று 50 ஆண்டுகால ஆதாரத்தைக் காட்டமுடியாமல் போகிற முஸ்லிம்களின் குடியுரிமையை பறித்து, அவர்களை சிறையில் அடைத்து நாடுகடத்தும் சிஏஏ சட்டத்தை எதிர்த்து கடுமையாகப் போராடியவர் அஃப்ரீன் ஃபாத்திமா. அது மட்டுமின்றி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் பாஜகவுக்கு எதிரானவர்களை எல்லாம் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தியபோது அங்கேயும் போராடியவர் அஃப்ரீன் ஃபாத்திமா. அத்துடன், நூல்களை வாசிப்பது தான் உலகின் பல கதவுகளைத் திறக்கும் என்று உறுதியாக நம்பிய அஃப்ரீன் ஃபாத்திமா, அலகாபாத்தில் பெண்களுக்கென்று ஒரு வாசிப்பு வட்டத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் உருவாக்கி, தொடர்ச்சியாக சந்திப்புகளை நடத்தி பல்வேறு நூல்களை கூட்டாக வாசிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியவர்.

அஃப்ரீன் ஃபாத்திமாவின் தந்தையான ஜாவித்தும் உள்ளூரில் முஸ்லிம் மக்கள் நடத்தப்படுகிற ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை அவ்வப்போது நடத்திவந்திருக்கிறார்.

இப்படியான சூழலில் தான் கடந்த மே மாதம் 26 ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பைக் காட்டும்விதமாக நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினைப் பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா பகிர்ந்தார். அதே போல ஜூன் ஒன்றாம் தேதியன்று பாஜகவைச் சேர்ந்த நவீன் ஜிண்டால் என்பவர் டிவிட்டரில் பகிர்ந்திருந்தார்.

இவ்விரண்டு செய்திகளும் அரபுலகத்தின் கத்தார், குவைத் போன்ற நாடுகளில் தெரியவந்ததும், சர்வதேச கவனத்தை ஈர்த்துவிட்டன. இந்திய அரசை மன்னிப்பு கேட்கவைக்கிற அளவுக்கு சர்வதேச அளவில் பாஜகவினரின் செயல்பாடுகள் அவமானத்தை ஏற்படுத்திவிட்டன. இந்தியாவிலும் பாஜகவினரின் இந்த வன்மத்திற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாகத்தான் அலகாபாத்திலும் வெள்ளிக்கிழமையன்று மசூதியில் தொழுகை முடித்ததும் ஒரு அமைதிப் போராட்டத்தை அங்கு வாழும் இஸ்லாமிய மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அதில் ஜாவித்தும் பங்கெடுத்தார். அந்தப் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் பணியிலும் முன்னணியில் இருந்தார் ஜாவித்.

வெள்ளிக்கிழமை மாலை ஜாவித்தின் வீட்டிற்கு கோட்வாலி காவல்நிலையத்தில் இருந்து ஒரு காவலர் வந்திருக்கிறார். காவல்துறை துணை ஆய்வாளர் அழைத்ததாக சொல்லி இருக்கிறார். உடனே ஜாவித் தன்னுடைய ஸ்கூட்டரிலேயே காவல்நிலையத்திற்கு சென்றிருக்கிறார். சில மணி நேரங்கள் ஆகியும் ஜாவித் வீட்டிற்கு வரவில்லை. அதன்பிறகு காவல்நிலையத்தில் இருந்து சில காவலர்கள் ஜாவித்தின் வீட்டிற்கு வந்து, ஜாவித்தின் மனைவி பர்வீன் ஃபாத்திமாவையும் மகள் சுமையா ஃபாத்திமாவையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கே சென்றபின்னர் தான், இது ஏதோ சாதாரண விசாரணை இல்லையென்பதையே அவர்கள் உணர்ந்திருக்கின்றனர்.
ஜாவித்தை ஒரு பயங்கரவாதியாக சித்தரிக்கும் முயற்சியில் அங்கிருந்த காவலர்கள் முயன்றுகொண்டிருப்பது அவர்களுக்கு புரிந்திருக்கிறது. திட்டமிட்டு மக்களைத் தூண்டி ஒரு கலவரத்தை நிகழ்த்த ஜாவித் முயன்றதாகவும், அவருக்கு மூளையாக டெல்லியில் படித்துவரும் அஃப்ரீனா ஃபாத்திமா இருந்துவருவதாகவும் காவல்நிலையத்தில் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

இப்படியே சனிக்கிழமை இரவுவரையிலும் அவர்கள் காவல்நிலையத்தில் தான் வைத்திருக்கின்றனர். வழக்கெல்லாம் எதுவும் பதியவும் இல்லை. இதற்கிடையில் சனிக்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் அவசர அவசரமாக ஒரு அறிவிப்பை எழுதி அச்சடித்து, ஜாவித்தின் வீட்டு வாசலில் ஒட்டிச் சென்றிருக்கிறது அலகாபாத் அரசு நிர்வாகம். அந்த அறிவிப்பின்படி, சட்டவிரோதமாக அந்த வீடு கட்டப்பட்டிருப்பதால், மறுநாள் ஞாயிற்றுக்கிழமையன்று அந்த வீட்டை இடிக்கப்போவதாக எழுதியிருந்தது. அதாவது ஒரு வீட்டில் இருக்கிற அனைவரையும் சட்டவிரோதமாக காவல்நிலையத்தில் அடைத்துவைத்துவிட்டு, அந்த நேரத்தில் அவர்கள் படிக்கமுடியாதபடி ஒரு அறிவிப்பை அவர்கள் வீட்டிலேயே ஒட்டிவிட்டு, அடுத்த 12 மணி நேரத்திற்குள்ளாக அந்த வீட்டையே இடிக்கப் புறப்பட்டிருக்கிறது உத்தரப்பிரதேச அரசு.

செய்தி கேள்விப்பட்டதும் அக்கம்பக்கத்து மக்கள் கோட்லா காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். ஆனால் ஜாவித்தையோ மற்றவர்களையோ பார்க்கக் கூட எவரையும் அனுமதிக்கவில்லை.

நீதிமன்றத்திற்கும் போகவில்லை, வீட்டை இடிக்கிறோம் என்று வீட்டு உரிமையாளர்களுக்கும் தெரிவிக்கவில்லை, ஏன் இடிக்கிறோம் என்று கூட எவரிடமும் சொல்லவில்லை. ஆனால் ஞாயிறு காலை புல்டவுசர்களைக் கொண்டுவந்து ஜாவித் குடும்பத்தின் இருபதாண்டு கால வாழ்க்கையை அரவணைத்து வைத்திருந்த அந்த வீட்டினை தரைமட்டமாக இடித்துத் தள்ளியது உத்தரப்பிரதேச அரசும் காவல்துறையும்.

24 மணி நேரத்தில் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை குப்பைக்கூளமாக்கி இருக்கிறது இந்த அரசு.

அவர்கள் அவசர அவசரமாக அச்சிட்டு ஒட்டிய அறிவிப்பில், அந்த வீட்டை சட்டவிரோதமாகக் கட்டியிருப்பதாக ஜாவித்துக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அந்த வீடே ஜாவித்துக்கு சொந்தமானது கிடையாது. அது ஜாவித்தின் மனைவியான பர்வீன் ஃபாத்திமாவுக்கு சொந்தமானது. இடித்துத் தள்ளவேண்டும் என்கிற அவசரத்தில் அது யாருடைய வீடு என்பது கூடத் தெரியாமல் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இடித்துத் தள்ளியிருக்கிறார்கள்.

இனி எவரும் எங்களை எதிர்த்துப் போராடவோ, கேள்வி கேட்கவோ அல்லது நிமிர்ந்து பார்க்கவோ கூட கூடாது என்கிற எச்சரிக்கையைக் கொடுப்பதற்காகத் தான் போராட்டத்தை ஒருங்கிணைத்த ஜாவித்தின் வீட்டை இடித்துத் தள்ளியிருக்கிறார்கள். போராட்டத் தலைவருக்கே இந்த நிலையென்றால், நாமெல்லாம் எம்மாத்திரம் என்கிற பயம் மற்ற அனைவருக்கும் வரவேண்டும் என்பது தான் இந்தக் கொடுங்கோலர்களின் திட்டம்.

இன்னமும் ஜாவித் காவல்நிலையத்தில் தான் இருக்கிறார். இரண்டு மாடிக் கட்டிடமாக இருந்த அவரது வீடு இருந்த இடத்தில், வெறும் இடிக்கப்பட்ட செங்கல்களும் மணலும் தான் இருக்கிறது என்பதை யாராவது சொல்லியிருப்பார்களா என்று கூடத் தெரியவில்லை.

இனிமேலாவது, எல்லாம் சட்டப்படி தான் நடக்கிறது என்கிற வாதத்தை பாஜகவுக்கு முட்டுக்கொடுப்போர் எவரும் சொல்லாதீர்கள்.

இவ்வளவையும் செய்துவிட்டு, அந்த வீட்டை முன்னின்று இடித்த எஸ்பி அஜய் குமார் என்ன சொன்னார் தெரியுமா?
“இந்த வீட்டை இடிக்கும்போது தான் உள்ளே பயங்கரவாதத் துப்பாக்கிகளும் ஆயுதங்களை இருந்ததைப் பார்த்தோம்” என்று ஊடகங்களில் தெரிவித்தார்.

ஆனால், அந்த வீட்டை இடித்தபின்னர், அதன் இடிபாடுகளில் என்ன இருந்தது தெரியுமா?

“When injustice becomes law, resistance becomes duty.”

என்கிற வாசகம் எழுதப்பட்ட ஒரு அட்டை தான் இருந்தது.

இது ஏதோ அலகாபாத்தில் இருக்கிற சில முஸ்லிம்களின் பிரச்சனை தானே என்று பொதுச்சமூகம் அமைதியாக இருக்கப் போகிறதா?

அல்லது "அநீதியே சட்டமாகும் போது, அதனை எதிர்த்துப் போராடுவதே எங்கள் கடமை" என்று நாம் சொல்லப் போகிறோமா?

வரலாறு நம்மை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கிறது. நாம் அமைதியாக இருக்கிற ஒவ்வொரு நொடியும் கொடூர இந்துத்துவக் கொலைகாரர்களுக்கு மறைமுகமாக அல்லாமல் நேரடியாகவே ஆதரவளிக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வோமாக..


Monday, January 31, 2022

கோட்ஸே பல் இளிக்கிறான்.

 




இந்த ஏழாண்டுகளில் நிலைமை மாறியுள்ளது. முன்பெல்லாம் காந்தி ஜெயந்தியோ, காந்தி நினைவு நாளோ வந்தால் சங்கிகள் அடக்கி வாசிப்பார்கள். கோட்ஸேவுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று ஆர்.எஸ்.எஸ் சொன்னது போல அவர்களும் ஒதுங்கி நிற்பார்கள்.

 ஆனால் மோடி எனும் கேடி பிரதமரான பின்பு நிலைமை மாறிக் கொண்டே இருக்கிறது.

 காந்தியை எந்த அளவு திட்ட முடியுமோ, அந்த அளவு திட்டுகிறார்கள். காந்தி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் கிடையாது. அவருடைய கொள்கைகள், செயல்களோடு கண்டிப்பாக முரண்பாடு உண்டு. ஆனால் இந்திய விடுதலைப் போராட்டத்தில் அவரது மகத்தான பங்கையோ, விடுதலைப் போரில் சாமானிய மனிதர்களை ஈர்த்தவர் அவர்தான் என்பதையோ யாராலும் மறுக்க முடியாது.

 விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த கருங்காலிகள் என்பதால் விடுதலைப் போராட்டத்தையும் அதிலே மகாத்மாவின் பங்களிப்பையும் கொச்சைப் படுத்திய பல பதிவுகளைப் பார்த்தேன். (மத்யமர் அரசியல் என்று தனியாக ஒரு குழுவே உருவாக்கப்பட்டு விட்டது. என் ரத்த அழுத்தம் அதிகரிக்கக் கூடாது என்று அதில் இணையவில்லை. அதில் என்னென்ன அபத்தங்களோ தெரியவில்லை)

 அது மட்டுமல்ல, கோட்சே காந்தியைக் கொன்றது நியாயமே என்ற பதிவுகளும் பல. தோழர் ஜெயச்சந்திர ஹாஷ்மி அவரது நட்புப் பட்டியலில் உள்ள ஒருவருடய பதிவை மனம் நொந்து பகிர்ந்து கொண்டார். அது இங்கே.



 காந்தியைக் கொன்றது கோட்ஸே என்று சொல்லக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் கூட்டத்தில் புகுந்து தடுக்குமளவு காவல்துறையில் சில கறுப்பாடுகள் காவிமயமாகி உள்ளன. வழக்கு வேறு பதிந்துள்ளார்கள்.

 இதையெல்லாம் பார்த்தால் கோட்ஸே கண்டிப்பாக பல் இளிப்பான்.

 அதிகாரத்தின் உச்சத்திற்கு ஒரு மோசமானவன் வந்தால் அவனால் அந்த ஒட்டு மொத்த அமைப்பையுமே நாசமாக்கி விட முடியும்.

 இன்றைக்கு இந்தியாவில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மோடி எனும் மோசமான மனிதன் ஆட்சிக்கு வந்து விட்டதால் சங்கிகள் எல்லோருமே தங்கள் கோரப் பற்களோடு ரத்தம்  ருசிக்க துடிக்கிறார்கள். பொய் சொல்லவோ விஷத்தைப் பரப்பவோ கொஞ்சமும் கூசாத ஜந்துக்கள் இவர்கள்.

 சுயேட்சையாக செயல்பட வேண்டிய அனைத்து அரசியல் சாசன அமைப்புக்களுமே, நீதிமன்றங்கள் உட்பட அரசின் கடைக்கண் பார்வைக்கு ஏற்ப செயல்படுகின்றன.

 மோடி ஆட்சியை தூக்கி எறிவதைத் தவிர வேறு எப்படியும் இந்த நிலைமையை மாற்ற இயலாது.

Sunday, January 23, 2022

உமக்கும் இடமுண்டு மோடி

 


நாளொரு அக்கிரம், பொழுதொரு அராஜகம் என்பதையே பிழைப்பாகக் கொண்டுள்ள நரேந்திர மோடிக்கு இந்திய வரலாற்றில் இடமுண்டா?

உண்டு.

முட்டாள் மன்னனுக்கு நிச்சயம் இடமுண்டு.

மனிதன் என்று மதிக்க முடியாத மோடி எனும் ஜந்து ஆட்சி செய்த காலம்தான் இந்தியாவின் இருண்ட, கற்காலம் என்று இந்திய வரலாற்றில் மோடிக்கு நிச்சயம் ஒரு இடமுண்டு.


Monday, December 6, 2021

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை . . .

 


இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள்.  அதனை மட்டும் நினைவு கூற முடியாமல் சங்கிகள் இந்நாளை கருப்பு நாளாக மாற்றி விட்டார்கள்.

 ஆம்.

 டிசம்பர் 6 என்றால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளாகவும் மாறி விட்டது. இந்த நாளில் அதுதான் முதலில் நினைவுக்கு வருகிறது. வீட்டிற்கு வெளியே வந்தால் அங்கங்கே தென் படும் காக்கிச்சட்டைகள் பதற்றத்தை மேலும் அதிகரிக்கின்றன.

 மசூதி இடிக்கப்பட்டது மட்டுமல்ல கொடுமை!

அந்த இடம் ராமர் கோயிலுக்கு அளிக்கப்பட்டது மட்டுமல்ல கொடுமை!

 மசூதி இடிப்பு ஒரு குற்றச்செயல் என்று சொல்லப்பட்ட தீர்ப்பில் அந்த குற்றச்செயலை செய்தவர்களை, குற்றத்தை தூண்டியவர்களை, குற்றத்திற்கு தலைமை தாங்கியவர்களை விடுதலை செய்தது மிகப் பெரிய கொடுமை.

 அரசியல் சாசனத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரின் ஓர் நினைவு நாளன்று நிகழ்ந்த ஒரு அராஜகத்தை செய்தவர்கள்  இன்று வரை  எந்த தண்டனையும்  இல்லாமல் வசதியாக இருப்பதும் குற்றச்செயல் என்று சொல்லி விட்டு அவர்களை விடுதலை செய்தவர், அந்த குற்றவாளிகளின் தயவில் எம்.பி யாக இருப்பதும் மிகப் பெரிய முரண் நகை.

 

Tuesday, November 30, 2021

திரிபுரா - அவர்கள்தான் வெட்கப்பட வேண்டும்

 தீயில் எரியும் திரிபுரா



 மூன்று நாட்களுக்கு முன்பு எழுதிய “தக்காளி இல்லா வெங்காய சட்னி” என்ற பதிவில் செல்வகுமார் என்பவர் திரிபுரா உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அகர்தலா மாநகராட்சியில் சி.பி.ஐ(எம்) ஒரு இடம் கூட பெறாதது குறித்தும் ஒரு பின்னூட்டமிட்டிருந்தார்.

 பதிவிற்கு தொடர்பில்லாத பின்னூட்டமென்பதால் நீக்கியிருந்தேன். ஆனால் திரிபுரா பற்றி விரிவாக எழுதுவேன் என்று கூறியிருந்தேன். அந்த அடிப்படையில்தான் இந்த பதிவு.

 திரிபுராவில் சில ஆண்டுகளுக்கு முன்பாக பாஜகவிற்கு அமைப்பு என்பதோ உறுப்பினர் பலம் என்பதோ கிடையாது. அங்கே எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியினர் ஒட்டு மொத்தமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியாக மாறினார்கள். அப்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினராக மாறியவர்களை நல்ல விலை கொடுத்து பாஜகவாக மாற்றிக் கொண்டார்கள்.

 மற்ற இடங்களில் தேச பக்தி வேடம் போடும் பாஜக, திரிபுராவில் தனி நாடு கேட்கும் அமைப்போடு கூட்டணி வைத்துக் கொண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தது. இடது முன்னணி ஆட்சியைப் பற்றி எந்த குற்றச்சாட்டையும் முன் வைக்க முடியாததால் மத்தியில் ஆட்சி செய்யும் ஆட்சியே மாநிலத்திலும் ஆட்சி செய்தால்தான் வளர்ச்சி சாத்தியம் என்று பிரச்சாரம் செய்தது. பிரிவினைவாத சக்திகளால் மோதல்களிலும் தாக்குதல்களிலும் மூழ்கிக் கிடந்த மாநிலத்தை அமைதிப் பூங்காவாக மாற்றியது இடது முன்னணிதான் என்ற வரலாறு தெரியாத இளைஞர்கள் பாஜகவின் பொய் முழக்கங்களில் ஏமாந்து பாஜகவை வெற்றி பெறச் செய்து பிப்ளப் தேவ் எனும் கோமாளியை முதல்வராக்கினார்கள்.

 அப்போது முதல் திரிபுராவில் நடைபெறுவது ரௌடிகள் ராஜ்ஜியமே. அகர்தலாவில் லெனின் சிலை வீழ்த்தப்பட்டதை நம்மால் மறந்து விட முடியுமா?

 எதிர்க்கட்சிகள், அவர்கள் நடத்தும் இயக்கங்கள் மீது கொலை வெறித் தாக்குதல்கள் நடத்துவது என்பது இயல்பான நடவடிக்கையாகி விட்டது.

 ஆட்சியாளர்களின் செயலின்மையைக் கண்டித்து மார்க்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செப்டம்பர் மாதம் கண்டனப் பேரணிகள் நடத்திய போது பாஜகவைச் சேர்ந்த ரௌடிகள் வெறித் தாக்குதல்கள் நடத்தினார்கள். காவல்துறை ஆட்சியாளர்களின் ஏவலர்களாக மாறினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தை காவல் காத்தவர்கள் திரும்பப் பெறப்பட்டு குண்டர்கள் அலுவலகத்தை தாக்கினார்கள்.

 அப்போதைய புகைப்படங்கள் நிலைமையின் தீவிரத்தை உணர்த்தும்.
















 உள்ளாட்சித் தேர்தல்கள் நெருங்கிய நிலைமையில் வங்க தேசத்தில் நடந்த சம்பவங்கள் அவர்களுக்கு ஊக்கமளித்தது. துர்கா பூஜை பந்தலொன்றில்  குரான் நூலொன்றை காளி சிலை அருகில் வைக்க இந்துக்களுக்கு எதிராக கலவரம் வெடித்து அவர்கள் தாக்கப்பட்டார்கள்.  வங்க தேச அரசு எடுத்த உறுதியான நடவடிக்கைகள் காரணமாக ஓரிரு நாளில் இயல்பு நிலை திரும்பியது. சமூக அமைதியைக் கெடுப்பதற்காக இச்சதிச்செயலில் ஈடுபட்டவர்களையும் கண்டு பிடித்து கைது செய்தார்கள்.

 இந்த சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டு திரிபுரா மாநிலத்தில் பாஜக ரௌடிகள் இஸ்லாமியர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள், மசூதிகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்குதல்கள் உள்ளாட்சித் தேர்தல் வரை தொடர்ந்தது. எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மிரட்டப்பட்டார்கள். பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. பல வேட்பாளர்கள் ஆயுதங்கள் மூலம் மிரட்டப்பட்டு வேட்பு மனுவை திரும்பப் பெற வைத்தார்கள். எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்க வாய்ப்புண்டு என்று கருதப்பட்டவர்கள் எல்லாம் வாக்குச்சாவடிக்கு அருகில் செல்லக் கூட அனுமதிக்கவில்லை.

 அகர்தலா உயர் நீதிமன்றம் தலையிட்டும் கூட மாநில தேர்தல் ஆணையமும் காவல் துறையும் வேடிக்கை பார்த்தது.

 இப்படிப்பட்ட சூழலில் திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி என்பது ஜனநாயகத்துக்குக் கிடைத்த தோல்வியே. இந்த அராஜகத்திற்கு காலம் பதில் சொல்லும்.

 தோல்விக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வெட்கப்பட வேண்டியதில்லை.  கீழ்த்தரமான முறையில் வெற்றி பெற்றதற்காக பாஜகதான் வெட்கப்பட வேண்டும்.

 ஆனால் இந்த நிலைமை தொடர அனுமதிக்க முடியுமா?

 தோழர் பி.சீனிவாச ராவ் சொன்ன வழிமுறையை திரிபுரா மாநில மக்கள் கையிலெடுத்தால் மட்டுமே அராஜகம் நிற்கும்.