Showing posts with label தர்மபுரி கலவரம். Show all posts
Showing posts with label தர்மபுரி கலவரம். Show all posts

Friday, July 5, 2013

ஏன் கலைஞரே? ஏன் ஜெ? ஏன் வைகோ?

தமிழகத்தில் மிகக் கொடூரமான ஒரு சம்பவம் நடந்துள்ளது.

தமிழக முதல்வர் வாய் திறக்கவில்லை,
தமிழினக் காவலர் என்று இன்னமும் கூட சிலரால்
அழைக்கப்பட்டும் கலைஞர் வாய் திறக்கவில்லை,
தமிழர்களை உய்விப்பதற்காக நடையோ நடை என்று
அலையும் வைகோ வாய் திறக்கவில்லை.

வடை  போச்சே என்ற வருத்தத்தில் தா.பா மவுனமாக
இருக்கலாம்,

கருத்து தெரிவிக்கும் நேரத்தில் எந்த எம்.எல்.ஏ வாவது
ஓடிப் போய்விட்டால் என்ன செய்வது என்று விஜயகாந்த
வாய் திறக்காமல் இருக்கலாம்.

ஒட்டு மொத்த தமிழர்களே இறந்து விட்டால் நன்றாக
இருக்குமே என்று காங்கிரஸ் யோசிக்கலாம்.

மேலே சொன்ன பேருக்கும் என்ன ஆச்சு?
வாயில கொழுக்கட்டை அடைச்சிருக்கோ? 

Thursday, July 4, 2013

முகநூல் பார்க்கவே அருவெறுப்பாய் உள்ளது

முகநூல்  பக்கம் வரவே வெட்கமாயிருக்கிறது.
ஒரு உயிரின் மரணத்திற்கு காரணமாகி விட்டோமே
என்ற குற்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல்
மருத்துவரின் வாரிசுகள் முகநூலில் போடும்
பின்னூட்டங்கள் அருவெறுப்பாக உள்ளது.

இந்த நவீன காட்டுமிராண்டிகளை தமிழக மக்கள்
ஒட்டு மொத்தமாக புறக்கணிப்பதுதான் 
தமிழகத்திற்கு நல்லது.

 

இளவரசனும் இறந்தாகி விட்டது. இப்போது திருப்தியா?

மருத்துவர் ஐயா வகையறாக்களுக்கு இப்போது மிகவும் மகிழ்ச்சியாக
இருக்கும். அவர்களின் குலப்பெருமை, இனப்பெருமை, ஜாதிப் 
பெருமையை நிலை நாட்டப்பட்டு விட்டது. இரண்டு உயிர்களை
பலி கொடுத்து அந்த வெட்டிப் பெருமை நிலை நாட்டப்பட்டிருக்கிறது.

முதலில் தர்மபுரி திவ்யாவின் தந்தை நாகராஜனை அழுத்தம்
கொடுத்து, மன உளைச்சலை உருவாக்கி தற்கொலை செய்ய வைத்த
படுபாவிகள் அதே எமோஷனல் பிளாக்மெயில் மூலம் திவ்யா,
இளவரசனை பிரித்தார்கள்.

நான் இன்னும் இளவரசனை காதலிக்கிறேன், என் அம்மாவின்
அனுமதியோடு மீண்டும் வாழ்வேன் என்று சில தினங்கள் மூலம்
சொன்ன திவ்யாவை இனி இளவரசனோடு வாழப் போவதில்லை
என்று சொல்ல வைத்து விட்டார்கள்.

இதோ இப்போது ரயில்வே தண்டவாளம் அருகில் இளவரசனின்
சடலத்தை பார்க்கும்போது உள்ளமெல்லாம் பதறுகிறது.
நெஞ்சமெல்லாம் கொதிக்கிறது. அது கொலையா, தற்கொலையா
என்ற விவாதத்திற்குள் நான் செல்லவில்லை.

எதுவாக இருந்தாலும் அந்த மரணத்திற்கு இவர்கள்தான் பொறுப்பு.
இருவரையும் பிரித்து விட்டீர்கள். இனி எக்காலத்திலும் ஒன்று
சேர வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

மரணங்கள் மூலம் உங்கள் கௌரவம் காக்கப் பட்டிருக்கலாம்.
ஆனால் இனி அந்தப் பெண் திவ்யாவின் வாழ்க்கை?
அந்தப் பெண் இனி நிம்மதியாக, மன உறுத்தல் இல்லாமல்
வாழ முடியுமா?

தமிழகத்தை பிடித்துள்ள சாபம் நீங்கள்

 

Monday, December 3, 2012

மருத்துவர் ஐயாவை மருத்துவமனையில் சேருங்கள்

மருத்துவர் ஐயாவிற்கு ஜாதி வெறி தலைக்கேறி விட்டது.
அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் வன்மத்தோடுதான்
வருகிறது.

தமிழகத்தில் பல் இல்லாமல் இருக்கும் சட்டம் தீண்டாமை
வன் கொடுமை தடுப்புச்சட்டம். காவல்துறை வழக்கு பதிவு
செய்யாது. செய்தாலும் நடவடிக்கையோ, கைதோ 
இருக்காது. இறுதியில் தண்டனை என்பதும் கிடைக்காது.

இதுதான் யதார்த்தம்.

இதைத்தான் ஆதிக்க சக்திகளும் அரசுகள் உருவாக்கி
வைத்துள்ளது. 

அப்படி இருக்கையில் இதையும் நீர்த்துப் போக வைத்தால்
ஆதிக்க சக்திகளுக்கு இன்னும் கொண்டாட்டம்தான்.

அப்போதுதான் இவரது பாட்டாளி சொந்தங்கள்
தீப்பந்தம் ஏந்தி காலனிகளை கொளுத்திக் கொண்டே
இருக்கலாம்.

ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக இவர் 
சொல்வதெல்லாம் அபத்தம்.

கறுப்புக் கண்ணாடியையும் ஜீன்ஸையும் பார்த்து
மயங்கி விடுகின்றனர் என்று சொல்வது
ஒட்டு மொத்த பெண்களுக்கே இழுக்கு.

மருத்துவர் ஐயாவின் வெறி முற்றி 
பார்ப்பவர்களையெல்லாம் கடித்துக் குதறும்
முன் யாராவது அவரது மருத்துவமனையில் 
சேருங்களேன்.

Thursday, November 29, 2012

தர்மபுரி அராஜகப் புகைப்படங்கள்

தர்மபுரி கலவரத்தில் நடைபெற்ற தாக்குதல்கள்
மிகைப்படுத்தப் பட்டதாகவும்
ஓரிரு வீடுகள்  மட்டுமே  தாக்கப்பட்டதாகவும்
சில அறிவுஜீவிகள் இணையத்தில்
அபத்தமாக உளறிக் கொண்டுள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு  எங்களது
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்
சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

அப்போது எங்கள் சேலம் கோட்ட தோழர்கள்
பாதிப்புக்களை படம் எடுத்துள்ளனர்.

அதிலிருந்து மாதிரிக்காக சில படங்கள்
மட்டும் இங்கே.

அதைப் பார்த்தால் தெரியும். உண்மை என்னவென்று.

கொள்ளையடிக்கப்பட்ட பீரோக்களின் படமும்
எரிக்கப்பட்ட வாகனங்கள் படமும் மட்டுமே
இங்கே உள்ளது. இன்னும் ஏராளமாய் உள்ளது.