Showing posts with label ரசிகர்கள். Show all posts
Showing posts with label ரசிகர்கள். Show all posts

Sunday, February 15, 2015

இன்று இந்திய வெற்றியை கொண்டாடுபவர்கள் நாளை?

 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை வென்றவுடன் இந்திய அணியை ஆஹா ஓஹோ என புகழ்ந்து பலரும் பதிவிட்டுக் கொண்டிருப்பதை முகநூலெங்கும் பார்க்க முடிகிறது.

இப்படி ஒரு மொக்கை அணியை வைத்துக் கொண்டு "We Won't Give it Back"  என்ற முழக்கங்கள், விளம்பரமெல்லாம் உங்களுக்கு தேவையா என்று சில நாட்கள் முன்பாக நக்கலடித்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இன்று அப்படியே பல்டி அடித்து விட்டார்கள். இதில் என்ன கொடுமையென்றால் முதல் சில ஓவர்களில் ரன் குவியாத போது "சச்சினும் ஷேவாகும் வேண்டும்" என்ற பதிவுகளை வேறு பார்க்க முடிந்தது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் இந்திய கிரிக்கெட் அணியைப் போல கொஞ்சம் கூட Consistency இல்லாதவர்கள். இன்று தலையில் தூக்கி வைத்துக் கொள்பவர்கள் நாளை ஒரு ஆட்டத்தில் தோற்றுப் போய் விட்டால் கழுவி கழுவி ஊற்றுவார்கள்.

எல்லா கூத்துக்களையும் பார்க்கத்தானே போகிறோம்?