Showing posts with label உரையாடல். Show all posts
Showing posts with label உரையாடல். Show all posts

Sunday, June 11, 2017

மனசாட்சியே இல்லாமல் 24 தடவை




வார இதழ்கள் வாங்க வழக்கமான பெட்டிக்கடைக்கு சென்ற போது கேட்ட உரையாடல்

பைக்கில் அமர்ந்து கொண்டிருந்த ஒரு இளைஞர், கடையில் பொருள் வாங்கிக் கொண்டிருந்த நண்பரிடம்

"மனசாட்சியே இல்லாமல் 24 தடவை மிஸ்ட் கால் கொடுத்திருக்கியே" 

என்று சொல்ல

"மனசாட்சியே இல்லாமல் 24 தடவையும் என்னன்னு கேட்கலையே"

என்று இவர் பதில் சொல்ல.

அதன் பின்னும் 

எதற்கு அழைத்தாய் என்று அவரும் சொல்லாமல்
எதற்கு அழைத்தேன் என்று இவரும் சொல்லாமல்

தண்ணீர் பாக்கெட், டிஸ்போசபள் டம்ப்ளர், இத்யாதிகளோடு இருவரும் பைக்கில் விரைந்து விட்டனர்.

எங்கே சென்றனர் என்பதை புரிந்து கொள்வது எளிது.
24 தடவை அழைத்ததும் வேறெதற்கு இருக்கப் போகிறது?