Showing posts with label ராமர் கோயில். Show all posts
Showing posts with label ராமர் கோயில். Show all posts

Saturday, January 6, 2024

ராமர் கோயிலும் ஜூம்லாவா டிமோ?

 


அயோத்தியில் 22 அன்று திறப்பு விழா கம் கும்பாபிஷேகம் மற்றும் சனாதன சக்திகளின் எதிர்ப்புகளுக்கிடையில் சிலை பிரதிஷ்டை நடக்கப் போகும் அயோத்தி ராமர் கோயிலின் இன்றைய நிலை கீழே உள்ளது. 


கட்டி முடிக்க இன்னும் இரண்டு வருடங்கள் தேவைப்படும் கோயிலை இப்போது ஏன் திறந்து வைக்க வேண்டும்?

15 லட்ச ரூபாய் வாக்குறுதி கொடுத்து அதை ஜூம்லா என்று சொன்னது போல டிமோவின் இன்னொரு ஜூம்லாவாக ராமர் கோயில் அமைந்துள்ளது. 

தேர்தல் வரப்போகிறது, அதனால் இப்போது திறப்பு விழா. தேர்தல் இல்லையென்றால் மதுரை ஏ.ஐ.ஐ.எம்.எஸ் போல ஒற்றைச் செங்கல்லோடு நின்றிருக்குமோ!

Sunday, June 20, 2021

அயோத்தி கோயில் - புது ஊழல்

 


இது அயோத்தியில் புதிதாக கண்டறியப்பட்ட ஊழல்.

அயோத்தி நகர மேயர் ரிஷிகேஸ் உபாத்யாயாவின் அண்ணன் மகன் தீப் நாராயணன் என்பவர் ராமர் கோயில் அருகாமையில் தேவேந்திர பிரசாதாச்சார்யா என்ற லோக்கல் ராமர் கோயில் பூசாரிக்கு சொந்தமான 890 சதுர மீட்டர் நிலத்தை 20 லட்சத்துக்கு பிப்ரவரி மாதம் வாங்குகிறார். அதன் சந்தை மதிப்பு 36.50 லட்சம்.

பூசாரியிடம் 16.5 லட்சம் குறைவாக வாங்கிய தீப் நாராயணன், மே மாதம் அதனை ராமர் கோயில் ட்ரஸ்டுக்கு இரண்டு கோடியே ஐம்பது லட்சத்துக்கு விற்கிறார்.

இவர்களின் கொள்கை, லட்சியம், இலக்கு எல்லாமே ராமர் கோயில் என்று தம்பட்டமடித்துக் கொண்டு இருந்தார்கள்.

அதிலேயே கோடிக்கணக்கில் ஊழல் செய்து கொள்ளையடிக்கும் பாஜக இந்திய கஜானாவிலிருந்து இதுவரை எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள்?

ஆனால் முட்டாள் சங்கிகள் இப்போதும் மோடி வாழ்க என்றே கூச்சல் போடுவார்கள்.