Tuesday, April 7, 2020

56 இஞ்ச் வீரமென்பது . . .


‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின்'  எனும் மருந்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருந்த தடையை மனிதாபிமான அடிப்படையில் இந்தியா நீக்குகிறது என்று இந்தியா அறிவித்துள்ளது.

இதில் மனிதாபிமானமும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை என்பதுதான் சோகமான யதார்த்தம்.

நம்மிடம் உள்ள மருந்துகளை நம்முடைய தேவைக்கு அதிகமாக இருப்பின் தேவைப்படும் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தவறில்லை. உலகம் முழுதும் நோயின் பிடியில் சிக்கி தவிக்கும் போது அப்படி செய்வதுதான் சரியாக இருக்கும்.

ஆனால் இந்தியத் தேவைகளுக்கே கையிருப்பும் உற்பத்தியும் போதுமானதாக இல்லை என்பதால்தான் ஏற்றுமதி தடை என்பதே கொண்டு வரப்படுகிறது.

இப்போது தடை நீக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் உள் நாட்டு தேவை குறைந்து விட்டதா அல்லது கையிருப்பும் உற்பத்தியும் அதிகரித்து விட்டதா?

இல்லை, நிச்சயமாக இல்லை.

பின் ஏன் தடை நீக்கம்?

"இந்தியா மருந்து ஏற்றுமதி தடையை நீக்கி ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின்"  மாத்திரைகளை எங்களுக்கு அனுப்ப வேண்டும். அனுப்பினால் நல்லது. அனுப்பாவிட்டால் பரவாயில்லை. ஆனால் எங்களின் பதிலடியை சந்திக்க வேண்டியிருக்கும்"

என்று மோடியிடம் கூறி விட்டேன் என்று டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாக அறிவிக்கிறார்.

என்ன இருந்தாலும் மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொடுத்த 

கோழை சவர்க்கர்,
வாஜ்பாய்,
தேவரஸ் 

பாரம்பரியத்தைச் சேர்ந்தவரல்லவா மோடி !

இந்தியா தடையை நீக்குகிறது.

அதாவது 

அமெரிக்கா மிரட்டுகிறது. இந்தியா பணிகிறது.

இந்த பயந்தாங்கொள்ளி மோடிதான்

எதிரிகள் அஞ்சும் 56 இஞ்ச் மார்பு கொண்ட வீரனாம்.

அவரே சொல்லிக் கொள்கிறார். அவரது மோகிகளும் இந்த கட்டுக்கதையை நம்பி காலரை தூக்கிக் கொள்கிறார்கள்.


No comments:

Post a Comment