Showing posts with label கொலை. Show all posts
Showing posts with label கொலை. Show all posts

Sunday, July 13, 2025

தந்தையால் கொல்லப்பட்ட வீராங்கனை

 


மேலே படத்தில் உள்ளவர் ராதிகா யாதவ், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சிறந்த டென்னிஸ் வீராங்கனை.

அவரை இரண்டு நாட்கள் முன்பாக  அவரது அப்பா தீபக் யாதவ் சுட்டுக் கொன்று விட்டார்.

காரணம் என்ன?

டென்னிஸ் போட்டிகளில் பெறும் வெற்றிகள் மூலம் டென்னிஸ் பயிற்சிப் பள்ளி மூலமும் அவருக்கு பணம் குவிகிறது.

சமூக வலைதளங்களிலும் அவருக்கு லைக்குகள் குவிகிறது.

பெண்ணின் பணத்தில் பிழைப்பு நடத்துபவன் என்று கிராமத்தினர் கிண்டல் செய்ய, வலைதள செல்வாக்கு பொறாமையை வளர்க்க, தந்தையே மகளை சுட்டுக் கொன்று விட்டு இப்போது சிறையில் . . .


நாலு பேர் சொல்வதைக் கேட்டு நம்ம வீட்டு முடிவுகளை எடுப்பதன் விளைவுதான் இந்த கொலை.

மனதில் ஊறிப் போன ஆணாதிக்க சிந்தனை மகளையும் கூட பலி வாங்குகிறது. மாநிலத்தின் பிற்போக்குச் சிந்தனையும் ஒரு காரணி. பல வருடங்களாக பாஜக திணித்த பிற்போக்கு இது . . .

Tuesday, October 15, 2024

கனடா கொலைகளும் அமித்ஷாவும்

 


கனடா இந்திய ஹைகமிஷனரையும் எட்டு தூதரக அதிகாரிகளையும் வெளியேற்றியுள்ளது.

காரணம் என்ன?

சில மாதங்களாகவே கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடந்து கொண்டிருக்கிற பிரச்சினைதான்.

கனடா குடிமகனான ஒரு சீக்கியர், காலிஸ்தானி இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறவர், கனடாவிலேயே கொல்லப்படுகிறார்.

அக்கொலைக்கான உத்தரவு இந்திய அரசிடமிருந்துதான் வந்தது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சுமத்தினார்.

கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் அமெரிக்காவிலும் ஒரு சீக்கியர் கொல்லப்படுகிறார். அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்தே கொலைக்கான ஏற்பாடு நடந்தது அமெரிக்க காவல் துறை ஃஎப்.பி.ஐ கூறுகிறது.

கனடா நடத்திய விசாரணைக்குப் பிறகு அங்கே நடந்த கொலைக்கான ஏற்பாடுகள் இந்திய தூதரகத்தின் மூலமே செய்யப்பட்டது என்றும் அதற்கான உத்தரவை பிறப்பித்தது இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்று தெரிய வருகிறது.

வழக்கு விசாரணைக்காக தூதரக அதிகாரிகளை விசாரிக்க வேண்டும் என்று கனடா அரசு கேட்டதற்கு இந்தியா மறுத்து விட்டது. அதன் எதிர்வினையாகத்தான் கனடா இந்திய ஹைகமிஷனரையும் தூதரக அதிகாரிகளையும் வெளியேற்றியுள்ளது.

இந்தியாவும் அதே போல செய்துள்ளது.

இந்தியாவின் உள்துறை அமைச்சர், வெளி நாட்டு குடிமகனை கொலை செய்ய ஏற்பாடு செய்துள்ளார் என்று கனடாவில் இந்தியாவின் மானம் கப்பலேறியுள்ளது என்பதுதான் கொடுமையான யதார்த்தம்.

அமித்ஷா அப்படியெல்லாம் செய்வாரா என்றெல்லாம் உங்களுக்கு சந்தேகம் தேவையில்லை.

குஜராத்தில் மோடியின் செல்வாக்கு சரிந்த நேரத்தில் சொராபூதீன், பிரஜாபதி என்ற இருவர் மோடியை கொலை செய்யப்பார்த்தார்கள் என்று போலி எண்கவுண்டர் கொலைகள் செய்தவர்.

அந்த வழக்கினால் பலனடைந்தவர் கேரள ஆளுனராக இருந்த திரு சதாசிவம். அமித்தை அவர்தானே விடுதலை செய்தார்!

இந்தியா கனடா உறவு பாதிக்கப்படுகிறதே! அதனால் இந்தியர்கள்தானே மிகவும் பாதிக்கப்படுவார்கள்!

அதைப் பற்றியெல்லாம் மோடிக்கு என்ன கவலை! 

Sunday, February 12, 2023

அந்த திரைப்படங்கள் போலவே . . .

 


ஹைதராபாத்திலிருந்து  70 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிற வெங்கட்பூர் எனும் கிராமம். ஜனவரி 9 ம் தேதி காலை வழக்கம் போல பணிக்கு வருகிற துப்புறவுத் தொழிலாளர்கள் ஒரு கார் எரிந்து போயும் அதில் ஒரு ஆண் கால்கள் தவிர கருகிய நிலையில் இருப்பதையும் பார்க்கிறார்.

தகவல் பறக்கிறது. ஊரார் வருகின்றனர். போலீசும் வருகிறது. எரிந்த காருக்குப் பக்கத்தில் ஒரு பையில் ஒருவரின் ஆதார் கார்ட், ரேஷன் கார்ட், ஊழியர் அடையாள அட்டையின் ஜெராக்ஸ் நகல்கள்.

அவர் தெலுங்கானா தலைமைச்செயலகத்தில் அதிகாரியாக பணியாற்றியவர். ஆசிரியராக வேலை பார்த்தவருக்கு அரசு அதிகாரியாக வேலை கிடைக்கிறது.

அவருடைய கார்தான் என்று ஊரே சொல்கிது. இறந்த்து என் கணவர்தான் என்று மனைவி அடையாளம் காட்ட தகனமும் முடிந்தது.

ஆனாலும் போலீசுக்கு கொஞ்சம் நெருடல்.

 காரில் எரிந்த உடலின் கால்கள் மட்டும் கருப்பாக இருக்கிறது. ஆனால் இறந்து போனவரின் புகைப்படமோ, அவர் சிவப்பு நிறம் என்று சொன்னது. போதாக்குறைக்கு எரிந்த காருக்கு பக்கத்தில் இரண்டு லிட்டர் பெட்ரோல் பாட்டில் வேறு.

 போலீஸ் விசாரிக்கிறது. ஒரு விபத்தில் அடிபட்டதால் காலில் தழும்புகள் உருவானது. அதனால் அவை சிவப்பாக இல்லை என்று மனைவி சொல்கிறார். அவரை கொலை செய்ய் எந்த முகாந்திரமும் யாருக்கும் கிடையாது என்று ஊர் மக்கள் சொல்கிறது.

 இறந்தவரின் தொலைபேசியை ஆராய்கிறது. ஸ்ரீனிவாஸ், பாபு என்ற இருவருடன் நிறைய பேசியதாக தொலைபேசி ஆவணங்கள் சொன்னது. அவர்களை விசாரித்த போது சந்தேகப்படும் படி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

 தொலைபேசி எண்களை நன்கு ஆராயும் போது ஜனவரி மாதம் 7 ம் தேதி மட்டும் ஒரே ஒரு தொலைபேசி ஒரு புதிய எண்ணிலிருந்து வந்துள்ளது. அந்த எண்ணை கண்டுபிடித்தால் அது விபத்து நடந்த ஊரிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ஒரு ஊரில் உள்ள ஒரு டீக்கடை முதலாளியின் எண். போலீஸ் நேரில் விசாரித்த போது, ஒரு வாடிக்கையாளர், தன் போனில் பணம் இல்லாததால்  என் போனை வாங்கி பேசினார் என்றும். அந்த நபரை இன்னொரு முறை பார்த்தால் என்னால் அடையாளம் காட்ட முடியும் என்று சொல்ல, போலீஸ் அந்த அரசு ஊழியர் மற்றும் அவரது உறவினர்களின் புகைப்படங்களை காண்பிக்க தொலைபேசி செய்த அந்த நபர் ஸ்ரீனிவாஸ்.

 போலீஸ் மீண்டும் விசாரிக்க ஸ்ரீனிவாஸ் சொன்ன உண்மை அவர்களுக்கு அதிர்ச்சியளித்தது.

 தன் மாமாவான அரசு ஊழியரை தானும் கொல்லவில்லை என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை, அவரே இறந்து போகவில்லை என்பதையும் சொல்ல போலீஸின் கவனிப்பில் மற்ற உண்மைகளும் வெளி வந்து விட்டது.

 ஆசிரியராக வேலை பார்த்து  அரசு அதிகாரியாக மாறிய பிறகு கடன் வாங்கி ஆடம்பரமாக வீடு கட்டுகிறார். வட்டி கட்ட முடியவில்லை. சிட்பண்டுகளில் கட்டியிருந்த சீட்டுப் பணத்தை எடுக்கிறார். சீட்டு தவணைகளை கட்ட முடியவில்லை. பங்குச்சந்தைக்குப் போகிறார். அங்கும் நல்ல அடி.  நிலைமையை சமாளிக்க கிரிமினல்தனமாக யோசிக்கிறார்.

 வெவ்வேறு மாதங்களில் எட்டு கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசிகள் எடுக்கிறார். ஒரு செகண்ட் ஹாண்ட் கார் வாங்குகிறார்.

 வீட்டு வேலைக்கு ஆள் வேண்டும் என்று தேடுகிறார். வலையில் இரை சிக்குகிறது. ஊருக்கு அழைத்து போவதாக சொல்கிறார். அந்த மனிதன் நிறைய மது அருந்தியிருந்ததால் திட்டத்தை கை விடுகிறார். இறந்து போகும் மனிதன் வயிற்றில்  ம்து இருப்பது போஸ்ட் மார்ட்டத்தில் தெரிய வந்து அதன் மூலம் டெத் க்ளெய்ம் நிராகரிக்கப்படுமா என்ற  அச்சமே காரணம்.

 மறு நாள் இன்னொரு இரை சிக்குகிறது. இவரும் இவர் உறவினர் ஸ்ரீனிவாசும் அந்த இரைக்கு கள் வாங்கிக் கொடுத்து (போஸ்ட்மார்ட்டம் பற்றிய கவலையை  மறந்து விட்டார்கள் போல) தலையில் தட்டி கொன்று விட்டனர். காரின் ட்ரைவர் சீட்டில் உட்கார வைத்து ஒரு பள்ளத்தில் தள்ளி விட்டார்கள். காரின் மீது பெட்ரோலை  ஊற்றி கொளுத்தி விட்டார்கள். விபத்து போல காட்சியளிக்க வேண்டுமென்பதுதான் திட்டம்.

 கடைசியில் எரியாத கால்களும் இரண்டு லிட்டர் பெட்ரோல் பாட்டிலும் பேலன்ஸ் தீர்ந்து போன போனும் காட்டிக் கொடுத்து விட்டது. அவரும் ஸ்ரீனிவாசும் மட்டுமல்ல, கொலைக்கு உடந்தையாக இருந்த காரணத்தால் மனைவியுமே இப்போது சிறையில் உள்ளனர்.

 நடிகர் திலகம் மூன்று வேடங்களில் நடித்த “பலே பாண்டியா”  நாகேஷ் இரட்டை வேடத்தில் நடித்த “கை நிறைய காசு” அகிய இரண்டு படங்களின் கதையும் ஒன்றுதான். தன்னைப் போலவே இருக்கும் நபரை கொலை செய்து தான் காப்பீடு செய்திருக்கிற தொகையை பெறுவது என்பதுதான்.

 உருவ ஒற்றுமை இல்லாத போதும் வேறு ஒருவரைக் கொன்று தான் இறந்து போனதாக நாடகமாடி இன்சூரன்ஸ் பணத்தை பெற மோசடி செய்தவர்கள் இப்போது சிறையில் தவிக்கிறார்கள்.

 முக்கியமான விஷயத்தை சொல்லவில்லையே!

 அந்த மோசடிப்    பேர்வழியின் பெயர்

 தர்மா

Saturday, July 2, 2022

கும்பல் படுகொலைகள் - விரிவாக

 கும்பல் படுகொலைகள் பற்றி பெல்ஜியம் தோழர் இ.பா.சிந்தன் எழுதிய விரிவான பதிவு. இன்றைய சூழலையும் சங்கிகளின் கொலை அரசியலையும் விளக்கும் பதிவு. அவசியம் படியுங்கள். 



கும்பல் படுகொலை என்றால் என்ன?


(ஒரு விரிவான கட்டுரை)

இக்கட்டுரையைத் துவங்குவதற்கு முன்னர் ஒரு சிறிய பட்டியலைப் பார்த்துவிடுவோம்.

ஜூன் 2021, காஷ்மீர், Aijaz Dar
ஜூன் 2021, இராஜஸ்தான், Babu Bheel
ஜூன் 2021, அசாம், Sarat Moran
ஜூன் 2021, உத்தரப்பிரதேசம், Mohammad Shera
மே 2021, உத்தரப்பிரதேசம், Mohammad Shakir
ஜூன் 2020, கர்நாடகா, Mohammed Hanif
செப்டம்பர் 2019, மேற்குவங்கம், Kabir Sheikh
ஜூலை 2019, மேற்குவங்கம், Faiz
ஜூன் 2019, ஜார்கண்ட், Tabrez Ansari
டிசம்பர் 2018, பீகார், Mohammed Kabul
அக்டோபர் 2018, பீகார், Zainul Ansari
செப்டம்பர் 2018, ராஜஸ்தான், Azhar Khan
செப்டம்பர் 2018, மணிப்பூர், Mohammed Farooque Ahmad
ஆகஸ்ட் 2018, உத்தரப்பிரதேசம், Shahrukh Khan
ஜூலை 2018, ஆந்திரப்பிரதேசம், Farooq Sheik Hussein
ஜூலை 2018, ராஜஸ்தான், Akbar Khan
ஜூலை 2018, கர்நாடகம், Mohammad Azam
ஜூலை 2018, பீகார், Mohammad Riyaz
ஜூன் 2018, திரிபுரா, Zahir Khan
ஜூன் 2018, உத்தரப்பிரதேசம், Mohammad Qasim
ஜூன் 2018, ஜார்கண்ட், Murtaza Ansari
ஜூன் 2018, ஜார்கண்ட், Sirabuddin Ansari
மே 2018, மத்தியப் பிரதேசம், Siraj
டிசம்பர் 2017, ராஜஸ்தான், Mohammad Afrazul Khan
நவம்பர் 2017, ராஜஸ்தான், Ummar Khan
செப்டம்பர் 2017, ராஜஸ்தான், Amad Khan
ஆகஸ்ட் 2017, மேற்குவங்கம், Hafizul Sheikh
ஆகஸ்ட் 2017, மேற்குவங்கம், Anwar Hussain
ஜூன் 2017, ஜார்கண்ட், Asgar Ali aka Alimuddin Ansari
ஜூன் 2017, மேற்குவங்கம், Md Nasir
ஜூன் 2017, மேற்குவங்கம், Mohammad Samiruddin
ஜூன் 2017, மேற்குவங்கம், Nasirul Haque
ஜூன் 2017, ஹரியானா, Hafiz Junaid
ஜூன் 2017, ராஜஸ்தான், Zafar Khan
மே 2017, ஜார்கண்ட், Sheikh Siraj
மே 2017, ஜார்கண்ட், Sheikh Naim
ஏப்ரல் 2017, அசாம், Riazuddin Ali
ஏப்ரல் 2017, அசாம், Abu Hanifa
ஏப்ரல் 2017, ராஜஸ்தான், Pehlu Khan
செப்டம்பர் 2016, குஜராத், Mohammad Ayyub Mev
மார்ச் 2016, ஜார்கண்ட், Inayatullah Khan
மார்ச் 2016, ஜார்கண்ட், Mohammad Majloom
ஜனவரி 2016, மத்தியப் பிரதேசம், Mohammed Hussain
அக்டோபர் 2015, ஹிமாச்சல் பிரதேசம், Noman
அக்டோபர் 2015, ஜம்மு, Zahid Ahmad Bhat
செப்டம்பர் 2015, உத்தரப்பிரதே சம், Mohammad Akhlaq
ஜூன் 2014, மகாராஷ்டிரா, Mohsin Shaikh

இங்கே மேலே குறிப்பிட்ட பட்டியல் ஏதோவொரு ஊரின் வாக்காளர் பட்டியல் கிடையாது. இதில் உள்ளவர்களுக்கெல்லாம் சில பொதுத்தன்மை இருக்கிறது.

1. அவர்களின் பெயர்களை வைத்தே கண்டுபிடித்துவிடுவீர்கள். அவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்

2. 2014 இல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நாடு முழுவதிலும் பாசிச இந்துத்துவத்தால் “கும்பல் படுகொலை” செய்யப்பட்டவர்கள்

3. அவங்க அனைவரும் எந்த அமைப்பிலோ தத்துவத்தின்
பின்னாலோ இல்லாதவர்கள்

4. கொல்லப்பட்ட யாருக்குமே இதுவரையிலும் சரியான நீதி கிடைக்கவில்லை

அதென்ன கும்பல் படுகொலை?

கும்பலாகப் போய் கொலை செய்வதுதான் கும்பல் படுகொலையா? என்கிற கேள்வி நமக்கு வரும். கிட்டத்தட்ட உண்மை தான். ஆனால் அதற்கு மேலும் கொஞ்சம் விளக்கம் சொல்லலாம். இதனை இந்தியாவில் அறிமுகப்படுத்திய பெருமை(?) இந்துத்துவ பாசிசத்தைத் தான் சேரும். கும்பல் படுகொலைக்கு முன்னோர்கள் யாரெல்லாம் என்று பாத்தால், இஸ்ரேலும் அமெரிக்க வெள்ளையின வெறியர்களும் தான்.

இயல்பாகவே ஒவ்வொரு மனிதரிடமும் ஏராளமான அடையாளங்கள் இருக்கும். ஒரேயொரு அடையாளம் கொண்ட மனிதர் என்று எவருமே இருக்கவே முடியாது.

நம்மையே உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

தமிழில் எழுதவும் பேசவும் செய்கிறோம் என்பதால் மொழிவழியாகப் பார்த்தால் நாம் தமிழர்கள் என்கிற அடையாளம் கிடைக்கலாம். அதுவே தேசம் என்று பார்த்தால், இந்தியாவில் பிறந்து வளர்ந்து இந்தியக் குடியுரிமையை வைத்திருப்பதால், இந்தியர் என்கிற அடையாளம் இருக்கலாம். பிறப்பால் பெண்ணாக இருப்பவர்கள், பாலினரீதியாக பெண் என்கிற அடையாளத்துடனும், ஆணாகப் பிறக்கிறவர்கள் ஆண் என்கிற அடையாளத்துடன் இருக்கலாம். பெற்றோரின் மதத்தை நமக்கும் அளித்து ஒரு மத அடையாளமும் வந்துவிடுகிறது. நமக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ நம்முடைய பிறப்பின் அடிப்படையில் இந்த சமூகம் ஒரு சாதியைச் சூட்டி நமக்கு ஒரு அடையாளம் கொடுக்கிறது. நாம் செய்யும் வேலையின் காரணமாக வேலை தொடர்பான அடையாளாம் இருக்கலாம். வேலையைத் தாண்டி வேறு ஏதாவதொரு பொழுபோக்கோ திறமையோ இருந்து அதில் கவனம் செலுத்துவோருக்கு அந்த அடையாளம் இருக்கலாம். ஒருவர் கிரிக்கெட் விளையாடுபவராக இருந்தால், கிரிக்கெட்டர் என்கிற அடையாளம் வருமல்லவா, அதுபோல.

ஆக, எந்த மனிதரை எடுத்துக்கொண்டாலும் ஒற்றை அடையாளம் என்பது இருக்கவே இருக்காது. இடத்திற்கும் சூழலுக்கும் நேரத்திற்கும் தகுந்தவாறு எவரொருவருக்கும் ஏராளமான அடையாளங்கள் நிச்சயமாக இருக்கும்.

அப்படி இருக்கிற பல அடையாளங்களில் தனக்கு வசதியாக இருக்கிற ஒரேயொரு அடையாளத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அதே அடையாளத்திற்குள் வருவதாக அவர்கள் கணக்கிடப்படுபவர்கள் அனைவரையும் “நாம்” என்று சொல்லிக்கொண்டும், அந்த அடையாளத்தில் வராதவர்களை எல்லாம் “அவர்கள்” என்று எதிர்தரப்பில் நிற்கவைத்தும் வகைப்படுத்துவதற்குப் பெயர்தான் பாசிசம். பாசிசம் பற்றி பெரிய பெரிய விளக்கங்கள், தத்துவங்கள், கொள்கைகள் எல்லாம் இருக்கு. அதை அறிவில்பெரியவர்கள் விளக்குவார்கள். ஆனால் ரொம்ப ரொம்ப எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், “நாம்” யாரென்றும், நாமல்லாத “அவர்கள்” யாரென்றும் தீர்மானித்துவிட்டு, “நாம்” வெர்சஸ் “அவர்கள்” என்ற முடிவுக்கு வருவது தான் பாசிசம்.

ஹிட்லர் காலத்தில் “ஆரியர்கள் தான் நாம்” என்று ஹிட்லர் முடிவுசெய்து, “கம்யூனிஸ்ட்டுகளையும் யூதர்களையும் அவர்கள்” என்று முடிவு செய்து இனவழிப்பையும் போரையும் படுகொலைகளையும் நிகழ்த்திய நாஜியிசம் தான் அன்றைய பாசிசம்.

இன்றோ அது உலகெங்கிலும் உள்ள கம்யூனிஸ்ட்டுகளையும் முஸ்லிம்களையும் முற்போக்காளர்களையும் எதிர்க்குரல் எழுப்புபவர்களையும் “அவர்கள்” என்று முடிவுசெய்துவிட்டு, அந்தந்த நாட்டுக்கு ஏற்ப “நாம்” என்பதை நவீன பாசிஸ்ட்டுகள் முடிவெடுத்து விடுகிறார்கள். ஐரோப்பாவைப் பொறுத்தவரை வெள்ளைக் கிருத்துவர்கள் “நாம்” ஆகவும், முஸ்லிம்களும் அகதிகளும் கம்யூனிஸ்ட்டுகளும் “அவர்கள்” ஆகவும் இன்றைக்கு இருக்கிறார்கள். அப்படியே அமெரிக்கா போனால், அங்கே வெள்ளையின அமெரிக்கர்கள் “நாம்” ஆகவும், தென்னமெரிக்கர்களையும் முஸ்லிம்களையும் பூர்வகுடி செவ்விந்தியர்களையும் “அவர்கள்” ஆகவும் நிர்ணயித்திருக்கிறது அமெரிக்க பாசிசம். இந்தியாவிற்கு வந்தால், முஸ்லிம்களையும் கிருத்துவர்களையும் தலித்துகளையும் கம்யூனிஸ்ட்டுகளையும் “அவர்கள்” ஆக நிர்ணயித்துவிட்டு, “நாம்” யாரென்பதை மட்டும் நேரத்திற்கு ஏற்றவாறும் ஒவ்வொரு மாநிலத்திற்குத் தகுந்தவாறும் மாற்றிக்கொள்கிறது இந்தியாவின் இந்துத்துவ பாசிசம்.

ஹிட்லர் காலத்தில் ஹிட்லர் மட்டுமே சர்வாதிகாரத்துடன் இத்தனை கோடி யூதர்களைக் கொன்றிருக்க முடியாது. “நாம்” வெர்சஸ் “அவர்கள்” என்பதை எளிய மனிதர்களின் மனதில் ஆழமாக வேரூன்றவைத்ததன் மூலமாகத் தான் செய்ய முடிந்தது. இன்றைக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஊழியர்களா நாடு முழுவதும் அலைந்து திரிந்து அப்பாவி முஸ்லிம்களை கும்பல் படுகொலை செய்துகொண்டிருக்கிறார்கள்? நிச்சயமாக இல்லை. அதற்கு பதிலாக முஸ்லிம்கள் யாருமே “நம்முடைய கூட்டத்தில் கிடையாது” என்று ஆழமாக மக்கள் மனதில் பதிய வைத்துவிட்டு, கொலைகள் செய்யும் பொறுப்பை மக்களிடமே கொடுத்துவிடுகிறார்கள்.

அக்லக் கொலை – சொல்லமறந்தவை:
நம்ம எல்லாருக்கும் அக்லக் கொலை குறித்து நன்றாகவே தெரியும் என்று நினைக்கிறேன். அக்லக்கிற்கு நடந்த அநியாயத்தில் நாம் கவனிக்காமல் தவறவிட்ட சில சின்னஞ்சிறியய செய்திகளை இணைத்து சொல்ல விரும்புகிறேன்.

அக்லக் என்பவர் உத்தரப்பிரதேசத்தில் தாத்ரி என்னும் ஊரில் மனைவி, தம்பி, மகன்களுடன் வசித்து வந்தார். பக்ரித்தோ ரம்சானோ வந்துவிட்டாலே, “என்ன பாய், பிரியாணி இல்லையா?” என்று மற்ற மதத்தினர் கேட்கும் வழக்கம் நம் ஊரில் இருக்கிறது. அத்துடன் முஸ்லிமல்லாத குடும்பங்கள் வீட்டில் அன்றைக்கு பிரியாணி செய்திருக்க மாட்டார்கள் என்கிற காரணத்தினாலேயே அந்த பண்டிகை நாட்களில் அக்லக் வீட்டில் இருந்து அக்கம்பக்கத்து இந்துக் குடும்பங்களுக்கு பிரியாணி சென்று சேர்ந்துவிடும். இது இன்று நேற்றல்ல. அவருடைய குடும்பம் 5 தலைமுறைகளாகவும் 70 ஆண்டுகளுக்கு மேலாகவும் தாத்ரி பகுதியில் வசித்துவந்த காலகட்டத்தில் தொடர்ந்து நடந்துகொண்டே தான் இருந்திருக்கிறது.

மோடி பிரதமராவதற்கு சில ஆண்டுகள் முன்பிருந்தே மிகப்பெரிய இயக்கமாக வளர்ச்சியடைந்துகொண்டிருந்த பசு பாதுகாப்பு இயக்கங்கள் உத்தரபிரதேசத்தின் பல ஊர்களில் நுழைந்து வேலையைக் காட்டத் துவங்கின. அப்படித்தான் வேலை வெட்டியே இல்லாமலும் வாழ்வாதாரம் பெரிதாக பாதிக்கப்பட்டு ஊரில் சும்மா சுற்றிக்கொண்டிருந்த இந்து இளைஞர்களிடம் பசு பாதுகாப்பு என்கிற எண்ணம் ஊடுருவியது.

“ஒவ்வொரு முஸ்லிம் வீட்டிலும் தினமும் மாடு வெட்டி தின்னுட்டே இருப்பாங்க”

“நம்ம குலதெய்வத்தை வெட்டி தின்பது நம்ம தாயை வெட்டி தின்பது போல”

போன்ற செய்திகளைப் பரப்ப ஆரம்பித்துவிட்டார்கள். அதனால், முஸ்லிம்கள் என்றாலே தன் தாயைக் கொல்பவர்கள் என்பதான பிம்பம் அந்த இளைஞர்களின் மனதில் இறக்கிவிடப்பட்டுவிட்டது. அந்த சூழலில் ஒரு நாள் திடீரென்று தாத்ரியில் ஒரு மாடு காணாமல் போய்விட்டது என்கிற செய்தி பரவுகிறது. அது யாருடைய மாடு, அந்த மாட்டின் உரிமையாளர் யார், உண்மையிலேயே ஒரு மாடு காணாமல் போயிருக்கிறதா என்று எதுவுமே தெரியாமல், அந்தப் பகுதியில் வாழ்ந்த அக்லக்கிடம் போய் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் விசாரித்திருக்கிறார்கள்.

“ஐயோ, எங்க பரம்பரையே மாடு சாப்பிட்டதே இல்லை. மாடு சாப்பிடும் பழக்கம் எங்க குடும்பத்துக்கே இல்லை”

என்று அக்லக் சொல்லியதை யாரும் நம்பவில்லை. மாலை ஆனது, அந்த ஊர் கோவிலில் இருக்கிற மைக் செட்டில், அந்தக் கோவிலின் பூசாரி ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார்.

அதாவது,

“அக்லக் தான் ஒரு பசு மாட்டைக் கடத்திக்கொண்டு போய் வெட்டி சாப்பிட்டுவிட்டார். இதற்கு ஒரு முடிவுகட்ட நம் ஊரில் இருக்கும் ட்ரான்ஸ்பார்மருக்கு அருகே இந்துக்கள் அனைவரும் உடனடியாக வரவேண்டும்”

என்று பூசாரி அறிவித்தார்.

பூசாரியின் வார்த்தையைக் கேட்டும், பசு குண்டர்களின் ஒருங்கிணைப்பினாலும் பலரும் டிரான்ஸ்பார்மருக்கு அருகே ஒன்று கூடினர்.

அக்லக்கின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து, “மாட்டுக்கறி வைத்திருந்தார்” என்று சொல்லி அவரை அடித்தே கொன்றது அந்த கூட்டம். வெறுமனே அவரைக் கொன்றால் மட்டுமே போதும் என்கிற வகையிலான தாக்குதல் அல்ல அது. கொடூர வெறிகொண்டு தாக்கியிருக்கிறார்கள். அக்லக்கின் ஒரு காது முழுமையாக துண்டாக்கப்பட்டிருந்தது. இன்னொரு காது வெட்டப்பட்டிருந்தது. உதடுகள் இரண்டும் துண்டுகளாக இருந்தன. மூக்கில் இருந்து இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. வலது கண் அது இருக்க வேண்டிய இடத்தில் இல்லை, கன்னத்தில் இருந்து முழுவதுமாக தோல் உரித்து எடுக்கப்பட்டிருந்தது. மண்டையின் ஓடு உடைந்திருந்தது. இடது கை உடைக்கப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தது. கழுத்து எலும்பும் முதுகெலும்பும் கைவிரல்களும் முறிக்கப்பட்டிருந்தன. முட்டி உடைக்கப்பட்டிருந்தது. முட்டிக்குக் கீழே உள்ள கால்கள் ஹேங்கரில் தொங்க விடப்பட்டிருக்கிற சட்டை போல தொங்கிக் கொண்டிருந்தது.

இதையெல்லாம் செய்தவர்கள் யார்?
அதே ஊரில் பல ஆண்டுகளாக ஒவ்வொரு பண்டிகைக்கும் அக்லக் கொடுத்த பிரியாணியை உண்டவர்களில் சிலரும், அவர்களை ஊக்கப்படுத்திய பசு குண்டர்களும், அடுத்த வேளை உணவுக்கோ வேலைக்கோ கூட வழியில்லையென்றாலும், தன்னுடைய அடையாளமாக முன்னிறுத்தப்படும் இந்து என்கிற அடையாளத்தை நம்பிய இளைஞர்களும் தான்.

அதன்பின்னர் நடந்தவை எல்லாம் பல ஊடகங்கள் சொல்ல மறந்தவை. அக்லக்கின் ஒரு மகனான டேனிஷ் அக்லக்கும் மிகக்கடுமையாக தாக்கப்பட்டார். அதன்பின்னர் இரண்டு முறை ஆப்பரேசன் செய்ய நேர்ந்தது. அதிர்ச்சியில் தான் இன்னமும் இருக்கிறார். இரவு 10.30க்கு காவல்துறை அங்கே வருகிறது. கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் கழித்து, சுமார் 1.30 க்கு தான் அக்லக்கின் வீட்டில் இருந்த குளிர்சாதனப்பெட்டியில் இருந்து 2.5 கிலோ ஏதோவொரு இரைச்சியை எடுத்ததாக காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் எழுதப்பட்டிருக்கிறது.

மரண ஊர்வலத்தில் அந்த ஊரைச் சேர்ந்த இந்துக்களே வரமுடியாத சூழல் உருவாக்கப்பட்டது. “என்ன இருந்தாலும் அக்லக் மாட்டுக்கறி தின்னதால தான் பிரச்சனை. அக்லக் அதை சாப்பிடாம இருந்திருந்தா எதுவும் ஆயிருக்காது தான” என்று பொதுப்புத்தியில் திணிக்கப்பட்டது. அக்லக்கின் சொந்தக்காரர்களையே இறுதிச்சடங்கிற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. இறுதிச்சடங்கு முடிந்த சற்று நேரத்தில் அந்த எம்பி தொகுதியான கௌதம் புத்தா நகரின் பாஜக எம்பி மகேஷ் ஷர்மா அங்கே வந்தார்.

“இது தெரியாமல் நடந்த ஒரு விபத்து தான். இதைப் போய் பெரிதுபடுத்த வேண்டாம்” என்றார்.

ஒரு கொடூரமான கொலையைச் செய்துவிட்டு, ஒட்டுமொத்த மக்களும் அக்கொலையை நியாயப்படுத்தி பேசவைக்கும் செயலில் இறங்கினர். இதுதான் கலவரத்திற்கும் கும்பல் படுகொலைக்குமான மிகப்பெரிய வித்தியாசம். அடித்துக்கொன்றபின்னரும், செத்தவன் மேல்தான் தப்பு என்று பரப்புரை செய்யப்பட்டது. மாட்டுக்கறி வைத்திருந்ததாக அக்லக்கின் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டது.

ஆனால் மறுபுறம் அந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியே கொண்டு வரப்பட்டனர். அதற்கு இந்துத்துவ வக்கீல்கள் சங்கத்தினர் களத்தில் இறங்கி வேலை செய்தனர். ஜாமீனில் வெளிவந்த அந்த கொலைகாரர்களுக்கு National Thermal Power Corporation நிறுவனத்தில் வேலை வாங்கித் தந்தார் பாஜகவின் தாத்ரி நகர் எம்எல்ஏ தேஜ்பால் சிங்.

அக்லக்கின் இன்னொரு மகன் என்ன செய்கிறார் தெரியுமா? இந்திய இராணுவத்தில் பணிபுரிகிறார். இனி அவர் குடும்பத்தில் யாராவது இராணுவத்தில் சேர்வார்களா? இனி இந்தியா தன்னுடைய தேசம் என்கிற எண்ணம் அவர்களுக்கு வருமா?

தாத்ரி நகர் பகுதியில் இஸ்லாமியர்கள் நடத்திவந்த அனைத்து உணவகங்களும் மூடப்பட்டிருக்கின்றன. இங்கு இஸ்லாமியர்கள் வாழ்வதற்கான அச்சத்தை திட்டமிட்டு உருவாக்கிக்கொண்டே இருக்கின்றனர்.

இப்படியாக அவர்கள் செய்த ஒவ்வொரு கொலைக்குப் பின்னாலும் உண்மையான கதைகள் நிறைய இருக்கின்றன.

பாஜக தேர்தலில் வெல்லும் போதெல்லாம் “பாசிச ஹிட்லரையே தோற்கடித்த செங்கொடி எங்களுடையது. அதனால் நிச்சயமாக இந்துத்துவ பாசிசத்தையும் தோற்கடிப்போம்” என்று சொல்வோம். இது தளர்வடைந்திருக்கும் நம் மனதைத் தேற்றுவதற்கு உதவும் தான். இந்துத்துவாவை தோற்கடிப்பதற்கான கொள்கை வலு நம்மிடம் இருக்கிறது தான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், ஹிட்லர் காலத்தில் ஹிட்லரை எதிர்த்தவர்களிடம் இருந்த பலம் இன்றைக்கு நம்மிடம் இல்லை என்கிற உண்மையை ஒப்புக்கொண்டு களத்தில் பணி செய்தால் தான் இந்த இந்துத்துவாவைத் தோறகடிப்பதற்கான பலத்தினைப் பெறமுடியும். உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், ஹிட்லர் காலத்தில் ஹிட்லருடன் சரிசமமாக சண்டை போடுமளவுக்கு ஒரு சோவியத் யூனியன் இராணுவம் நம்மிடம் இருந்தது. அதற்கு துணையாக சிலப்பல நாடுகளின் இராணுவமும் அரசுகளும் இருந்தன. ஆனால் அப்படியான இராணுவமெல்லாம் நம்மிடம் இன்றைக்கு இல்லை. ஜெர்மனியில் அட்டூழியம் செய்த நாஜிக் கொடூரர்களைத் தேடிப்போய் ஒழிப்பதற்கு சோவியத் யூனியன் இருந்தது. ஆனால், இன்றைக்கு இந்தியாவில் இருக்கிற இந்துத்துவ பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு வெளியில் இருந்தெல்லாம் வருவதற்கு யாருமில்லை.

இன்றைக்கு பாசிச சக்திகளாக இருக்கிற அரசுகள் உருவாக்கி வைத்திருக்கிற சட்டங்களுக்கு எதிராக செயல்படமுடியாத நிலையில் நாம் இருக்கிறோம். இப்படியான சூழலில் நம் பழைய வரலாற்று வெற்றிகளை மட்டுமே பேசுவதோடு நிற்காமல், இன்றைய காலகட்டத்தில் இந்துத்துவ பாசிசம் எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதை மிகவிரிவாக ஆய்வு செய்து, அதனை வெல்வதற்கான திட்டத்தை அனைவரும் ஒருங்கிணைந்து வகுக்கவேண்டும். நாம் காலம் தாழ்த்தினால் என்னவாகும் என்பதற்கு இஸ்ரேல் என்கிற ஒரு நாட்டினை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.

இஸ்ரேலில் தொடர்ச்சியாக பரப்பட்டு வந்த முஸ்லிம்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் எதிரான யூத ஜீயோனிச அரசியலால், இன்னைக்கு என்ன ஆகியிருக்கிறது. அந்த அரசியலை எதிர்க்கிறவர்களே இஸ்ரேலிய அரசியல் சூழலில் கிட்டத்தட்ட இல்லை என்றாகிவிட்டது. முதலிரண்டு கட்சிகளில் ஒன்றாக இருந்த தொழிலாளர் கட்சி காணாமல் போய்விட்டது. அதற்கு பதிலாக, யார் மிகச்சிறந்த யூத இனவெறிக்கட்சி என்பதில் தான் இன்றைக்கு இஸ்ரேலில் இருக்கிற முதல் ஐந்து கட்சிகளிடையே இருக்கிற பலமான போட்டியே. இதை அப்படியே இந்தியாவுடன் இணைத்துப் பாருங்கள். இன்னும் ஒன்றிரண்டு பாராளுமன்றத் தேர்தல்களில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றால், “யார் சிறந்த இந்துத்துவக் கட்சி” என்கிற போட்டியில் தான் எல்லா முன்னணிக் கட்சிகளும் இறங்கிவிடும். அதற்கு சாத்தியமே இல்லை என்றெல்லாம் சொல்லவே முடியாது. பாஜகவைத் தவிர வேறு பல கட்சிகளும் கூட இன்றைக்கு இஸ்லாமியர்களை வேட்பாளர்களாக அறிவிப்பதை நிறுத்தவோ அல்லது குறைக்கவோ செய்ய ஆரம்பித்திருக்கின்றன.

கும்பல் படுகொலையை நாம் அனைவரும் கும்பலாக ஒன்றிணைந்து கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளவேண்டும்.

Thursday, March 31, 2022

ஜட்ஜய்யா ரொம்பவே நல்லவரா ?

 


காலையில ஒரு செய்தியை படிச்சுட்டு கபகபன்னு சிரிச்சுட்டேன். சுப்ரீம் கோர்ட் ஜட்ஜய்யா மொட்டைச்சாமியார் மாநில வழக்கறிஞரைப் பாத்து கேட்டாரே ஒரு கேள்வி, அதுதான் சிரிப்புக்குக் காரணம்.

போராடிய விவசாயிகளை மோடியோட அயோக்கிய மந்திரி ஒத்தனோட அயோக்கிய மகன் காரேத்தி கொன்னது ஞாபகம் இருக்கில்ல! 

அந்த அயோக்கிய சிகாமணிக்கு அலகாபாத் நீதிமன்றம் ஜாமீன் கொடுத்துருச்சு, செத்துப் போனவங்களோட சொந்தக்காரங்க, அந்த ஜாமீனை ரத்து செய்யச் சொல்லி சுப்ரீம் கோர்ட்டுக்கு போய்ட்டாங்க.

அப்போதான் நம்ம ஜட்ஜய்யா "ஜாமீனை ரத்து செய்யச் சொல்லி உபி மாநில அரசு ஏன்யா மேல் முறையீடு செய்யலை/" ன்னு கேட்டாரு.

இவ்ளோ நல்லவரா இருக்கீங்களே ஜட்ஜய்யா! கொலைகாரன், கொலைகாரனோட அப்பன், கொலைக்கு திட்டம் போட்டுக் கொடுத்தவன். கொலை நடக்க ஆசி கொடுத்தவன், வேடிக்கை பாத்து சந்தோஷப் பட்டவன் அம்புட்டு பேரும் ஒரே கட்சி. அவன் எப்படி ஜட்ஜய்யா அப்பீல் செய்வான்?

ரொம்ப நல்லவரா கேள்வி கேட்காம, மனிதன் படத்து ராதாரவி மாதிரி பேப்பர் வெயிட்டை தூக்கி போடுங்க. அப்போவாவது கோர்ட் மேல அந்த அயோக்கியக் கூட்டத்துக்கு பயம் வருதா பாப்போம். 

Monday, October 11, 2021

கொலைக்கு கைது எப்போது?

 


உ.பி யில் விவசாயிகளை காரேற்றிக் கொன்ற கயவன் ஆசிஷ் மிஸ்ரா ஞாயிறு அன்று கைது செய்யப்பட்டுள்ளான்.

முதல் தகவல் அறிக்கையில் கொலை, அஜாக்கிரதை காரணமாக விபத்தில் மரணம் ஏற்படுத்துதல், சதிச் செயல் ஆகிய பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கொலை மற்றும் சதிச்செயல் ஆகிய பிரிவுகளும் அஜாக்கிரதை காரணமாக விபத்தில் மரணம் ஏற்படுத்துதல் என்ற பிரிவும் முரண்பாடு உடையதாக உள்ளது. மந்திரி மகனைக் காப்பாற்ற மொட்டைச்சாமியார் போலீஸின் ஏற்பாடோ?

ஆனால் அந்த கயவனின் கைதுக்கு என்ன காரணத்தை உ.பி சொல்கிறது தெரியுமா?

விசாரணைக்கு உடனடியாக வராதது, ஒத்துழைக்காதது, சில கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தவிர்த்தது ஆகிய காரணங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக ஒரு மேலதிகாரி தெரிவிக்கிறார்.

சரி,

கொலை வழக்கில் எப்போது அவனை கைது செய்வீர்கள்?

Tuesday, July 6, 2021

உங்களைக் கொன்றது எது?



 அருட்தந்தை ஸ்டேன் – உங்களைக் கொன்றது எது?

எஸ்.வி.ராஜதுரை
பழங்குடி மக்களின் கண்ணியத்தை, பண்பாட்டை
அவர்களது சுயத்தை
உயர்த்துப் பிடித்தீர்களே
அந்தக் குற்றமா?
சிங்கமும் மானும் ஒரே குட்டையில்
நீர் அருந்தும்
சமாதான சகவாழ்வு பற்றிக் கனவு கண்டீர்களே
அந்தக் கனவா?
எந்தக் கொடுஞ்சிறையாலும் உங்களிடமிருந்து அகற்ற முடியாதபடி உங்கள் தோலைப் போலக்
கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த உங்கள் உன்னத இலட்சியங்களா?
மனித விரோதத்தையும் மூர்க்கதனமான அதிகாரத்தையும்
வைத்துக்கொண்டிருக்கும் மூர்க்கர்களைத்
தட்டிக் கேட்ட உங்கள் அறத் துணிச்சலா?
தாதுப் பொருள்களைச் சுரண்டும் உரிமையையும் உரிமத்தையும்
பெற்றுள்ள டாட்டா, அதானி, எஸ்ஸார் குழுமங்களை விடக்
காலங்காலமாகக் கானகத்தைக் காத்து நின்ற ஆதிவாசிகளின்
உரிமைகள் புனிதமானவை என்று கருதினீர்களே,
அந்தக் கருத்தா?
இந்த பூமியில் சபிக்கப்பட்ட
உழைக்கும் மக்களுக்கும்
ஒடுக்கப்பட்டோர்களுக்கும்
பரலோக சாம்ராஜ்யத்தைக் காட்டாது
இவ்வுலகில், இங்கே, இன்றே விடுதலை சாத்தியம்
என நம்பினீர்களே, அந்த நம்பிக்கையா?
வன்முறை வழி விடுதலைக்கு
ஒரு போதும் வழிவிடாது
என்று போதித்து வந்தீர்களே,
அந்த போதனையா?
தள்ளாடும் உடல் தடுமாறி விழாமலிருக்க
ஒரு கைத்தடிக்காக சிறையில் ஏங்கினீர்களே,
அந்த ஏக்கமா?
ஒரு ஜோடி செருப்புக்காக சிறையதிகாரிகளின்
கருணைக்குக் காத்திருந்தீர்களே,
அந்த அவலமா?
நீதி தேவதையின் கண்கள்
ஒருபோதும் திறக்காது
பார்த்துக்கொண்டவர்களின் கதவுகளைத்
தட்டிக் கொண்டிருந்தீர்களே
அந்தத் தட்டல்களா?
எந்தக் குற்றத்தை இழைத்தீர்கள்
நீங்கள் கொல்லப்படுவதற்கு?
நோபல் பரிசு பெற்ற போலந்துக் கவிஞர்
விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா எழுதியது போல:
எதுவும் மாறவில்லை
உடல் நடுங்குகிறது
ரோமப் பேரரசுக்கு முன்
அதற்குப் பின் இருபதாம் நூற்றாண்டில்
ஏசுவுக்கு முன், அவருக்குப் பின்
நடுங்கியதைப் போலவே.
சித்திரவதை எப்போதும் போலவே இப்போதும்
ஒரே வேறுபாடு –
இன்று உலகம் சுருங்கிவிட்டதால்
பக்கத்து அறையில் நடப்பது போல அது
நன்றி: மின்னம்பலம்.காம்

அரசு பயங்கரவாதம் செய்த இந்த கொலையைக் கூட காவிக்கயவர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். சங்கிகள் அயோக்கியர்கள் என்று ஒவ்வொரு நிமிடத்திலும் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர்.

Sunday, April 11, 2021

அவர்கள் எழுத மாட்டார்கள்

தோழர் கவிஞர் சுகிர்தராணியின் கவிதையை பகிர்ந்து கொள்கிறேன்.


 சாதியற்றவனின் மரணம்

******************************
நீங்கள் யாவற்றையும் எழுதுங்கள்



ஒரு ரயில் நிலையத்தில் அமர்ந்துகொண்டு
அதன் நடைபாதையில்
கொட்டிக் கிடக்கும் மஞ்சள் பூக்களை

தூரத்தில்
தாய்ப்பால் புகட்டியபடி
வேர்க்கடலையைப் படி நிறைய
அளந்து விற்கும் பெண்ணொருத்தியின்
தாய்மை பூத்திருக்கும் முகத்தை

சிதிலமடைந்த கற்கோவிலின்
படியிலமர்ந்து
உங்கள் முகத்தை நீங்களே ஏந்தி
தொல்பொருளாய்க் காத்திருக்கும்
அந்த ஏகாந்தத்தை

நீங்கள் யாவற்றையும் எழுதுங்கள்

உங்கள் பண்ணைநிலம் ஊடாக
நடக்கும்போது
நடவு நடும் பெண்ணின்
ரவிக்கைக் கிழிசலை மறைக்க
நீங்கள் வீசி எறிந்த
துண்டின் பெருமையை

வீட்டு முற்றத்தில்
காலைநேர தேநீரை
நீங்கள் அருந்தும்போது
நேநீர்க் கோப்பையின் நிழலில்
இளைப்பாறும் சிட்டுக்குருவியை
நீங்கள் யாவற்றையும் எழுதுங்கள்

இராக்கால மொட்டைமாடி பொழுதுகளில்
எரிந்து விழும் நட்சத்திரங்களுக்கிடையே
குளிர்ந்து வீசும் தென்றலை

உங்களுக்கான மர அலமாரியில் ஒளித்து வைத்திருக்கும்
உங்கள் காதலியுடையதோ காதலனுடையதோ
பழந்துணியின் வாசத்தை

நீங்கள் யாவற்றையும் எழுதுங்கள்



ஆனால் ஒருபொழுதும்
எழுதி விடாதீர்கள்

அரிவாளால் வெட்டுண்டு
ஈ மொய்த்தபடி
வாய் பிளந்து கிடக்கும்
ஒரு சாதியற்றவனின் மரணத்தை.

Monday, August 19, 2019

நினைவுக்கு வந்தாரா சங்கரராமன்?


அத்தி வரதரை தரிசிக்கச் சென்ற விஜயேந்திரரே,

அத்திவரதர் சயனக் கோலத்தில் வைக்கப்பட்ட அதே இடத்தில்தான் 

உங்களது கூலிப்படை வெட்டிக் கொன்ற சங்கரராமனின் உடல்
ரத்த வெள்ளத்தில் கிடந்தது என்பது உங்களின் நினைவுக்கு வந்ததா?

மனசாட்சி கொஞ்சமாவது உங்களை உறுத்தியதா?

Friday, December 28, 2018

அவரது கொலையின் பின்னே . . .





காவிகளால் கொல்லப்பட்ட எழுத்தாளர் கௌரி லங்கேஷ் அவர்களின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பினை “கௌரி லங்கேஷ், தெரிவு செய்யப்பட்ட சொற்கள்” என்ற தலைப்பில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. இந்தாண்டு வெண்மணியில் வாங்கிய நூல் இது.

மொத்தம் பத்து கட்டுரைகள் அடங்கிய நூல் இது.  மோடி ஆட்சியில் ஒடுக்கப்படும் பேச்சுரிமை, மாட்டரசியல், உ.பி தேர்தலுக்கு முன்பாக மத்தியப் பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சிறைக் கைதிகள், கால்நடை விற்பனை தடைச்சட்டத்தின் பின்னே உள்ள பொருளாதார அரசியல், நக்ஸலைட்- சி.ஆர்.பி.ஃஎப் மோதல்கள், பெரும் தெய்வங்களை உருவாக்கும் பின்னணி, இஸ்லாமியப் பெண்களின் துயரம், சித்தராமையா மீது செய்யப்பட்ட விஷமப் பிரச்சாரம் என்று பல தளங்களில் கட்டுரைகள் விரிகிறது.

லிங்காயத் மதத்தின் தோற்றமும் அதன் சீர்திருத்தக் கருத்துக்களும் எப்படி தந்திரமாக இந்து மதத்தால் நீர்த்துப் போக வைக்கப்பட்டது என்பது பற்றியும் தாங்கள் ஏன் தனித்த மதம் என்று லிங்காயத்துக்கள் போராட்டம் நடத்துகின்றனர் என்பதும் இதனால் யெடியூரப்பாவிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி  பற்றியுமான கட்டுரை மிக முக்கியமானது.

அந்த போராட்டத்தின் கருத்தை முன்னெடுத்துச் செல்லும் முக்கியமானவராக கௌரி லங்கேஷ் இருந்தார் என்பதால்தான் அவரை காவிகள் குறி வைத்தார்களோ என்று இந்த நூலைப் படிக்கையில் தோன்றியது.

Thursday, September 14, 2017

கொலையெல்லாம் ஒரு மேட்டரா. . .

சற்று நேரம் முன்பு வீடு திரும்புகையில் காகிதப்பட்டறை பகுதியில் உறியடி திருவிழா என்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. 

இரண்டு வருடங்கள் முன்பாக இதே பகுதியில் வேலூரின் ஒரு பெரிய தாதாவை கொலை செய்ய முயற்சி நடந்தது. கொலை செய்ய முயற்சி செய்த நபரை தாதாவின் ஆட்கள் துரத்திக் கொண்டு ஓட, ஒரு கட்டத்தில் அவன் சிக்கிக் கொள்ள தாதாவின் இரு மகன்கள் கல்லை முகத்தில் போட்டு கொன்று விட்டார்கள். அந்த கொலை தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. அதிலே ஒரு படம் கீழே உள்ளது. முகங்களை, சடலத்தை நான் மறைத்துள்ளேன்.


அந்த தாதாவும் சில மாதங்கள் முன்பு கொலை செய்யப்பட்ட ஆட்களின் கோஷ்டியால் கொல்லப்பட்டு விட்டார்.

போக்குவரத்து நெரிசலின் போது சாலையின் இருபக்கமும் கட்டப் பட்டிருந்த ஃப்ளெக்ஸ் பேனர்களைப் பார்த்தேன்.

கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்த அந்த இரண்டு மகன்களும் பேனர்களில் மீசையை முறுக்கிய படி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

பின் குறிப்பு : ஒரு ஜாதி சங்கம் பெயரில் அந்த பேனர்கள் வைக்கப் பட்டிருந்தது.

 

Friday, March 17, 2017

குரானை முழுமையாகப் படித்திருந்தால் ??????




சில மாதங்களுக்கு முன்பாக வாட்ஸப்பில் படித்தது.

நானும் என் குடும்பத்தினரும் காரில் சென்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு கும்பல் எங்களை மடக்கியது. தாங்கள் ஐ.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களை கொல்வதுதான் தங்கள் முக்கியப்பணி என்று சொன்னார்கள்.

நானும் இஸ்லாமியன்தான் என்று சொன்னேன். அப்படியானால் குரானிலிருந்து ஏதாவது சொல் என்று சொன்னார்கள். நானும் சொன்னேன். எங்களை புறப்பட்டு போகச் சொல்லி விட்டார்கள்.

கார் சிறிது தூரம் சென்றதும் என் மனைவி சொன்னார். "நீங்கள் பைபிளை சொன்னபோது நான் மிகவும் அச்சப்பட்டேன். நீங்கள் சொல்வது குரான் அல்ல என்று தெரிந்து கொண்டு நம் அனைவரையும் கொன்று விடுவார்களோ என்று நடுங்கிக் கொண்டிருந்தேன்"

"குரானை முழுதுமாக படித்திருந்தால் அவர்கள் ஏன் இப்படி கொலைகாரர்களாய் மாறி இருக்கப் போகிறார்கள்"  என்றேன் நான். 

 
கோவையில் பாரூக் என்ற பெரியார்  திராவிடர் கழகத் தோழரை இன்னொரு இஸ்லாமியர் படுகொலை செய்ததையும் பாரூக் இறை மறுப்பாளர் என்பதே அதற்குக் காரணம் என்ற செய்தியை படிக்கும் போது எனக்கு மேற்கண்ட செய்திதான் நினைவுக்கு வந்தது.

மதத்தின் பெயரால், மத வெறியர்கள் செய்யும் அராஜகம் கண்டிக்கத் தக்கது, அது எந்த மத வெறியராக இருந்தாலும். 

ஆர்.எஸ்.எஸ் செய்யும் அக்கிரமங்களைக் கண்டிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பாரூக் படுகொலையையும் கண்டிக்க வேண்டும். மதத்தின் பெயரால் இது போன்ற கொடுமைகள் நிகழ்வதை தடுக்க உரக்க குரல் கொடுப்போம். 

தோழர் பாரூக்கிற்கு அஞ்சலி.

 

"அனைத்து மதங்களும் போதிப்பது அன்பைத்தான்"  என்ற வாக்கியத்தையே மத அடிப்படைவாதிகள் கேலிக்குரியதாய் மாற்றி விடுகிறார்கள்.