சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Friday, November 21, 2025
குற்ற உணர்ச்சியா நீதி(அற்ற) அரசர்களே!
REASONABLE TIME தான் பிரச்சினை ஜட்ஜய்யா . . .
Tuesday, July 18, 2023
புதிய INDIA வெல்லும்
இன்று பெங்களூரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் 2024 மக்களவைத் தேர்தலை சந்திக்க புதிய கூட்டணி உருவாகியுள்ளது.
Indian National Developmental, Inclusive Alliance என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இக்கூட்டணி நிச்சயம் வெல்லும்.
பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்கும் பின்னணியில் 38 கட்சிகளின் கூட்டத்தை பாஜக கூட்டுவதும்
INDIA என்ற பெயரைக் கண்டு புலம்புவதுமே சங்கிகளின்
பதற்றத்தை காண்பிக்கிறது.
ஒன்பது
ஆண்டு காலமாக இந்தியாவை பீடித்திருக்கும் பாசிச, மத வெறி, தரகு கிரகணம் அகன்று ஜனநாயக
ஒளி பரவட்டும்.
Thursday, May 25, 2023
நாடாளுமன்றக் காவலர்கள்
Wednesday, May 17, 2023
நந்தவனத்து ஆண்டியாகாதீர் காங்கிரஸாரே!
வாராது வந்த மாமணியாய் வந்துள்ளது கர்னாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள வெற்றி.
முடிவுகள் வந்த சனிக்கிழமையன்று பெங்களூரில்தான் இருந்தேன். பெரிய அளவில் வெற்றிக் கொண்டாட்டங்கள் எதுவும் கண்ணில் படவில்லை.
நாங்கள் அன்று சென்ற ஓலா டாக்ஸியின் ஓட்டுனர், பயண நேரம் நாற்பத்தி ஐந்து நிமிடம் முழுதும் பாஜகவின் தோல்வி குறித்து யாரிடமோ அலைபேசியில் புலம்பிக் கொண்டே வந்தார். ஸ்ரீராமுலுவை முதல்வர் வேட்பாளர் என்று சொல்லியிருந்தால் கோடிக்கணக்கில் பணத்தை வாரி விட்டு பாஜகவை ஜெயிக்க வைத்திருப்பார். யெடியூரப்பாவை விட அவர் ஒன்றும் ஊழல் பேர்வழி கிடையாதே என்றெல்லாம் அவர் புலம்பல் அமைந்திருந்தது.
ஆனாலும் அவரிடம் ஒரு நம்பிக்கையும் இருந்தது. காங்கிரஸ் கட்சியினர் சண்டை போட்டுக் கொண்டு ஆட்சியை ஒரு வருடத்தில் நம்மிடமே கொடுத்து விடுவார்கள் என்பது அவரது நம்பிக்கை. கர்னாடகத்திலும் ஏக்நாத் ஷிண்டே கிடைப்பார் என்பது மத்யமர் ஆட்டுக்காரன் குழு சங்கிகளின் நம்பிக்கை.
இந்த நம்பிக்கை நிஜமாகிடுமோ என்ற அச்சத்தை முதல்வர் தேர்வுக்கான இழுபறி அளிக்கிறது.
பாஜக தோற்க முடியாத கட்சி அல்ல என்ற நம்பிக்கையை நாடு முழுவதற்கும் அளித்தது கர்னாடக வெற்றி.
நந்தவனத்து ஆண்டி போல இந்த வெற்றியை போட்டுடைத்தால் அதன் பாதிப்பு நாடு முழுதும் எதிரொலிக்கும்.
ஆகவே காங்கிரஸாரே, பெற்ற வெற்றியை தக்க வைக்க உங்கள் கட்சிக்குள் ஒற்றுமையை முதலில் தக்க வையுங்கள்.
2024 ஐ மனதில் கொண்டு செயல்படுங்கள்.
Thursday, March 23, 2023
போஸ்டரை கிழி, மோடியை . . . .
Tuesday, March 21, 2023
மோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ராகுல்
காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென்று பாஜகவினர் நாடாளுமன்றத்தில் கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்திய
ஜனநாயகத்தைப் பற்றி அவர் வெளி நாட்டில் பேசியதாக அவர்கள் காரணம் சொல்கிறார்கள்.
ராகுல்
பேசியது வெளிநாடாக இருக்கலாம்.
இதோ
உள்நாட்டிலேயே இந்திய ஜனநாயகம் சிதைக்கப்பட்டு வருகிறது என்று நாங்கள் குற்றம் சுமத்துகிறோம்.
கீழே
உள்ள பத்திகளை முதலில் படியுங்கள்.
********************************************************************************************
ஆட்சியாளர்களால் இந்திய ஜனநாயகம் கடுமையாக தாக்கப்பட்டு
வருகிறது. மிகவும் நுணுக்கமாக திட்டமிட்டு அமைக்கப்பட்ட ஜனநாயக அமைப்புக்கள் பெரும்
சவால்களை சந்தித்து வருகின்றன. சில அமைப்புக்களோ தங்களை ஆட்சியாளர்களின் முழுமையான
கட்டுப்பாட்டுக்கு உட்படுத்திக் கொண்டு விட்டன. முதலாளிகள் கட்டளையிடும் செயல்திட்டங்களை
எந்தவொரு விவாதமும் இல்லாமல் நிறைவேற்றும் இடமாகவே நாடாளுமன்றம் மாறி விட்டது. நாட்டின்
பாதுகாப்பு என்ற பெயரில் ஆட்சியாளர்கள் அடிப்படை உரிமைகளை முடக்குவதால் இந்திய அரசியல்
சாசனமே கறை படிந்து காட்சியளிக்கிறது
**************************************************************************************
பண
மதிப்பிழப்பு மற்றும் அவசர கதியிலான ஜி.எஸ்.டி அமலாக்கம் ஆகியவற்றில் இருந்தே இந்தியப்
பொருளாதாரம் சரிவுப் பாதையில் பயணிக்கத் தொடங்கி விட்டது. 2019-20 ஆண்டின் 3.1% உயர்வுதான்
ஆறரை ஆண்டுகளின் மிகக் குறைவான பொருளாதார வளர்ச்சி விகிதம்தான். மதியற்ற, பயனற்ற கதவடைப்பு முடிவின் காரணமாக, பொருளாதாரம் சரியத்
தொடங்கியது. அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் முடக்கப்பட்டதால் 2020-21 ல் ஒட்டு மொத்த
உற்பத்தியில் 7 % சுருங்கியது. பண மதிப்பிழப்பு ஜி.எஸ்.டி ஆகியவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த
சிறுதொழில் துறை ஒழுங்காக திட்டமிடப்படாத கதவடைப்பின் மூலம் முற்றிலுமாக அழிந்து போனது.
லட்சக்கணக்கானவர்கள் வேலையிழந்தனர்.
**************************************************************************************
ஜனநாயகம்
என்பது வெறுமனே தேர்தல்களை நடத்துவதும் அரசுகளை மாற்றுவதும் மட்டுமல்ல என்பதை நாம்
புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் சாசனத்தின் முகப்பில் சொல்லப்பட்டுள்ள சுதந்திரம், சமத்துவம், நீதி ஆகியவையே உண்மையான
ஜனநாயகம். உண்மையான ஜனநாயகம் என்பது முடிவெடுக்கும் நடைமுறைகளில் மக்களையும் ஈடுபடுத்துவதாகும்.உண்மையான
ஜனநாயகம் என்பது ஆட்சியில் உள்ளவர்களை கேள்வி கேட்பதும் அவர்களின் தவறுகளுக்கு அவர்களை
பொறுப்பாக்குவதாகும். உண்மையான ஜனநாயகம் என்பது அனைத்து குடிமக்களையும் சமமாக கருதுவதும்
யாருக்கும் சிறப்பு அந்தஸ்து தராமல் இருப்பதுமாகும்.
ஜனநாயகம் இன்று பல முனைகளிலிருந்தும் தாக்கப்படுவது மிகவும்
கவலையளிக்கிறது. அனைத்து மசோதாக்களும் ஆளும் கட்சியின் மிருக பலம் மற்றும் மோசடி உத்திகள்
மூலம் எதிர்க்கட்சிகளுக்கு விவாதிக்கும் வாய்ப்பே தரப்படாமல் நிறைவேற்றப்படுகின்றன.
இதன் மூலம் முடிவெடுக்கும் நடைமுறையில் மக்களின் பங்கேற்பு நீர்த்துப் போகச் செய்யப்படுகிறது.
எந்த வித பாகுபாடும் இல்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் நேர்மையாக தேர்தல்களை நடத்த வேண்டிய
தேர்தல் ஆணையம் எடுக்கிற பல முடிவுகள் ஆட்சியில் உள்ளவர்களுக்கு சாதகமாகவே அமைகிறது.
பல முக்கியமான பிரச்சினைகள் குறித்து விசாரணை நடத்தாமல் தவிர்த்து வரும் உச்ச நீதிமன்றத்தின்
போக்கு அவ்வமைப்பின் பாகுபாடற்ற தன்மை குறித்தே சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. ஜனநாயகத்தின்
நாலாவது தூண் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிற ஊடகங்கள், அவை அச்சு ஊடகங்களோ அல்லது காட்சி
ஊடகங்களோ பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்கு சென்று விட்டது. அவை
ஆளும் கட்சிக்கு சேவை செய்வதையும் எதிர்கட்சிகளை சிறுமைப்படுத்துவதையுமே வழக்கமாகக்
கொண்டுள்ளன.
இந்த ஜனவரி மாதம்,
கொல்கத்தாவில் நடைபெற்ற எங்கள் அகில இந்திய
இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 26 வது பொது மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்
பகுதிகள்தான் மேலேயுள்ள பத்திகள்.
இவற்றில் எதையாவது
மோடியாலோ அல்லது முட்டாள் சங்கிகளாலோயோ மறுக்க முடியுமா?
இந்திய ஜனநாயகம் இன்று
கேலிக்கூத்தாக மாற்றப்பட்டுள்ளது.
அதனால் மன்னிப்பு
கேட்க வேண்டியது மோடிதான் . . .
Tuesday, February 21, 2023
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை . . .
Wednesday, January 18, 2023
அரசாணை 1 - அராஜகம்
ஆந்திரப் பிரதேச அரசு தனது அரசாணை 1 ன் மூலம் மாநிலத்தில் யாரும் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், மக்கள் சந்திப்பு இயக்கங்கள் என எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்தக் கூடாது என்று தடை விதித்துள்ளது. அதற்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்க அரசு உச்ச நீதிமன்றத்துக்கு சென்று விட்டது.
சந்திரபாபு நாயுடு கூட்டத்தின் நெரிசலில் உயிரிழப்பு காரணமாக இத்தடை என்று சொல்லப்படுகிறது.
நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் சில விதிகளை கொண்டு வருவதற்குப் பதிலாக ஒட்டு மொத்த தடை என்பது அராஜகம், ஜனநாயக விரோதம்,
Tuesday, December 13, 2022
ஜனநாயகம் என்பது . . .
எங்கள் சங்க மாத இதழான “இன்சூரன்ஸ் வொர்க்கர்” டிசம்பர் 2022 இதழின் அட்டைப்பட செய்தி மிகவும் கவர்ந்தது. அர்த்தம் நிறைந்தது, ஆழமானது.
Thursday, June 3, 2021
புதுவைக்கு பொங்குங்கய்யா
தமிழக
அரசை கலைக்க வேண்டும், மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சங்கிகள் அவர்
பதவியேற்ற நாள் முதலாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
Tuesday, December 15, 2020
கூடாவிட்டால் குடி முழுகாது
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடக்கப் போவதில்லை என்று மோடி அரசு முடிவெடுத்துள்ளது.
விவசாயிகள் போராட்டம் அவையில் எதிரொலிக்கக் கூடாது என்ற அச்சம் இம்முடிவின் பின்னணியில் உள்ளது. ஜனநாயகத்தை முடக்கும் இன்னொரு நடவடிக்கை இது.
இருந்தாலும் இக்கூட்டத் தொடர் நடக்காதது நல்லது என்றே நினைக்கிறேன்.
ஏனென்றால்
கடந்த தொடரில் இந்த அரசு
தொழிலாளர் நலச்சட்டங்களை நான்கு தொகுப்புக்களாக மாற்றியது.
மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது.
மாநிலங்களில் வாக்கெடுப்பு நடத்தவில்லை.
இந்த அரசு இது வரை மக்களுக்கு எந்த நல்லதும் செய்யவில்லை. தன்னுடைய மிருக பலம் கொண்டு மக்கள் விரோதச் சட்டங்களை நிறைவேற்ற மட்டுமே நாடாளுமன்ற கூட்டத்தொடர்களை பயன்படுத்திக் கொண்டுள்ளது. விவாதத்திற்கோ நிலைக்குழு பரிசீலனைகளுக்கோ வாய்ப்பில்லாமல் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிக் கொண்டு மக்களை தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட தாக்குதல்கள் அடுத்த பட்ஜெட் தொடர் வரை ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. அவ்வளவுதான்.
கூட்டத்தொடர் தள்ளி வைக்கப்பட்டதால் ஒன்றும் குடி முழுகிப் போகப் போவதில்லை. அடுத்த தொடர் வரை மக்கள் உயிர் வாழ்வது நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் கூடினாலும் ஜனநாயத்தை படுகொலை செய்பவர்கள் இப்போது கூடாமல் செய்துள்ளார்கள்.




























