Monday, April 13, 2020

பாஜக அரசே பொய் வழக்கு புனையாதே





வன்மத்தோடு வேட்டையாடும் அரசு.

சு. வெங்கடேசன் எம்பி

கொரொனா போன்ற கொடிய நோயின் பிடியில் இருக்கிறோம். சட்டென்று ஒரே இரவில் வேலையை இழந்த மக்கள் வீதிகளில் சாரை சாரையாக திசையறியாமல் நடந்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் கொரொனாவில் பாதிப்புக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இப்படியொரு பதற்றமான நிலையிலும் கூட ஒரு அரசு தன்னை விமர்சிக்கும் அறிவு ஜீவிகளை கைது செய்யத்துடிப்பது எவ்வளவு  அறமற்ற செயல் ?

இன்றைய இந்தியாவின் தலைசிறந்த சிந்தனையாளர்களும் களப் பணியாளர்களுமான ஆனந்த் டெல்டும்ப்டே கௌதம் நவலாகா மேல் தான் இவ்வளவு வன்மத்தோடு கிட்டத்தட்ட ரத்த வேட்டையாடுகிறது அரசு. 

பீமா கரோகான் வன்முறை வழக்கில் இவர்கள் மீது பொய் புகார் புனையப்பட்டு, எந்த முறையான விசாரணையுமின்றி அவர்கள் மீது கைது நடவடிக்கை பாயவிருக்கிறது. அதுவும் எப்படி, கொரொனா காரணமாக சிறை கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களுடைய வயது, பணி, உடல்நிலை எதுவும் கருத்தில் எடுக்காமல் முன் ஜாமின் மனுவை ரத்து செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

அம்பேத்கர் பிறந்த நாளான நாளை சரணடையப் போவதாக சொல்லியிருக்கிறார் ஆனந்த்.

தேசத்தின் மனசாட்சியை நோக்கி இதைவிட வேறு எப்படி பேசமுடியும்.
மனசாட்சி கொண்ட தேசம் விழித்தெழட்டும்.

அரசே!
உடனடியாக வழக்குகளைத் திரும்பப்பெறு!

#ஆனந்த்_டெல்டும்ப்டே #gautham_navalkha #பொய்புகார் #வழக்கு_திரும்பப்பெறு #ReturntheCase

No comments:

Post a Comment