Showing posts with label சட்டம். Show all posts
Showing posts with label சட்டம். Show all posts

Monday, April 24, 2023

நிறுத்த வேண்டாம். திரும்பப் பெறுக

 


எட்டு மணி நேர வேலை நிறுத்தத்தை 12 மணி நேரமாக உயர்த்திய சட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

கூட்டணிக் கட்சிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் கோபத்தை தெரியப் படுத்திய மக்களுக்கும் கிடைத்த வெற்றி இது.

இறுதித் தீர்வு என்பது நிறுத்தி வைத்தலில் கிடைக்காது. திரும்பப் பெறுவதில்தான் இருக்கிறது.

எனவே அதை தமிழ்நாட்டு அரசு உடனடியாக செய்ய வேண்டும்.

ஒரு கமா கூட மாற்றப்படாது என்று சொல்லப்பட்ட விவசாய சட்டங்களே திரும்பப் பெறப்பட்டது. அதனால் கௌரவம் பார்க்காமல் அந்த நடவடிக்கையை அரசு உடனே எடுக்க வேண்டும். 


Saturday, March 25, 2023

மோடி மந்திரிக்கு சட்டமெல்லாம் ....

 


மேலேயுள்ள படத்தில் இருப்பது பாபுபாய் பொக்காரியா. மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் மந்திரியாக இருந்த நபர். 2013 ல் ஒரு ஊழல் வழக்கில் மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. 

இந்த மனிதனும் பதவி விலகவில்லை. சபாநாயகரும் நீக்கவில்லை. ஒரு மாதம் கழித்து மாவட்ட நீதி மன்றம் அத்தண்டனையை உறுதி செய்த பின்பே அவர் பதவி விலகினார்.

பின்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பிற்கு தடை விதித்த பின்பு 2017, 2022 சட்ட மன்ற தேர்தல்களில் போட்டியிடுகிறார். 2017 ல் வெற்றி பெற்றவருக்கு 2022 ல் தோல்வி கிடைக்கிறது.

வழக்கு????

அந்த கோப்புக்கள் எந்த குப்பைத் தொட்டியில் புதைந்து கிடக்கிறதோ?

மோடி மந்திரிக்கெல்லாம் சட்டம் பொருந்துமா என்ன?

இன்னும் ஒரு விஷயம் . . .

அதென்ன???

பாபுபாய் பொக்காரியா என்ன தொகுதி தெரியுமா?

போர்பந்தர் . . .

ஆம், மகாத்மா காந்தி பிறந்த மண்தான் . . .

Thursday, December 8, 2022

அரசு - நீதிமன்றம் - சரியான போட்டி

 


துணை ஜனாதிபதி மாநிலங்களவையில் தன் முதல் உரையில் உச்ச நீதிமன்றம்  நீதிபதிகள் நியமனச்சட்டத்தை தள்ளுபடி செய்ததற்காக கடுமையாக வசை பாடியுள்ளார். 

இதற்கு முன்பு மந்திரி கிரண் ரஜ்ஜுதான் பேசினார். இப்போது இவர்!

உச்ச நீதிமன்றம் என்ன எதிர்வினையாற்றும்?

சபாஷ், சரியான போட்டி என்று சொல்லலாம் . . .

Tuesday, August 23, 2022

சங்கிகள் ஸ்பெஷல் சட்டம்

 


முக நூலில் பார்த்தது. 

குற்றம் புரிந்தவர்களுக்கு உலகெங்கும் தண்டனை வழங்கப்படுமானால் இந்தியாவில் மட்டும் பாராட்டு கிடைக்கும் என்று சொல்கிறது.

பாராட்டு மட்டுமல்ல பதவியும் கிடைக்கும். அதனால்தானே குஜராத் கலவரக் கொலையாளிகள் மோடியும் அமித் ஷாவும் பிரதமராகவும் மந்திரியாகவும் வலம் வருகிறார்கள்!.

இன்னொரு பக்கமும் உள்ளது. அதை தனியாக எழுத வேண்டும். 

Tuesday, April 5, 2022

தேவையில்லா ஆணி மோடி

 


பில்லா - ரங்கா கிரிமினல் கூட்டாளிகள் நேற்று இந்திய குற்றவியல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்துள்ளார்கள்.

அவை பற்றி வழக்கறிஞர் தோழர் பிரதாபன் அவர்களின் முகநூல் பதிவை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

குற்றவியல் நடைமுறை ( அடையாள சேகரிப்பு) சட்ட முன்வரைவு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி, இனி வழக்கில் கைதாககூடியவர்களுடைய அங்க அடையாளங்கள் மட்டுமில்லாமல், கைரேகை, கால்களின் அச்சு, கண்கள், உடல் அவையங்கள் இதைத்தவிர கையெழுத்து, behavioural attributes உட்பட அனைத்தும் பதிவு செய்ய காவல்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இன்னும் இந்த சட்டம் குறித்த விதிமுறைகளை அரசு தாக்கல் செய்யவில்லை. கேள்விகளுக்கும் திருத்தங்களுக்கு பதில் அளித்த அமித்ஷா, 7 ஆண்டுக்கு குறைவான தண்டனை பெற்ற, பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை செய்யாதவர்கள், தங்களின் அடையாளம் பெறப்படுவதை மறுக்கலாம் என தெரிவித்திருக்கிறார்.
காவல்நிலையத்தில் பேசவே விடமாட்டார்கள். மறுக்க முடியுமா?

புதியவகை குற்றப்பரம்பரை சட்டமாக இது ஆகிடுமா? என்ற அச்சம் எழாமல் இல்லை.

ஒட்டுமொத்தத்தில் ஹிட்லரின் நாஜி ஆட்சி போல, பாஜகவின் திட்டங்கள் அனைத்தும் சட்டபூர்வமாக நிறைவேற்றப்பட்டுவருகிறது. அதை தடுக்காத வகையில் வெறும் கோஷங்களால் பாஜகவை வெல்ல இயலாது.

குற்றவாளிகள் தண்டனை பெறும் விகிதத்தை அதிகரிக்கத்தான் இத்திருத்தங்கள் என்று அமித்ஷா சொல்கிறார்.

"கண்ணாடியை திருப்பினா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும்?" என்பது போல இத்திருத்தங்கள் மூலம் எப்படிய்யா குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதம் அதிகமாகும் என்றுதான் நாம் கேட்க வேண்டும்.

மக்களை எப்போதும் அச்சத்திலேயே வைத்திருக்க மோடி பிடுங்கிய தேவையில்லாத ஆணிகளில் இதுவும் ஒன்று.

பிகு: இந்த கிரிமினல்களுக்கு நிஜமாகவே குற்றவாளிகள் தண்டனை பெற வேண்டும் என்ற விருப்பம் உள்ளதா? வேறு ஒரு வழக்கு பற்றி நாளை பார்ப்போம்.

Saturday, October 31, 2020

பாட்டு கேட்ட பிறகு . . . .

நாசர் -ராஜா -ஹிட்டான பாட்டு






" தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ" என்ற பாடல் உருவானது பற்றி நாசர் சொல்வதே ஒரு அழகு. ஏற்கனவே பார்த்தது நேற்று மீண்டும் கண்ணில் பட்டது. 

அந்த காணொளி உங்களுக்காக



பாடல் வந்த கதையை சொல்லி விட்டு பாடலை பகிர்ந்து கொள்ளாவிட்டால் என்னை சபித்து விடுவீர்கள் அல்லவா?

உங்களுக்கு அப்படி ஒரு தர்மசங்கடம் நான் தருவேனா?

இதோ பாடல்



மாலை வேளை இனிமையாகட்டும். 

பாடலை கேட்டு விட்டீர்கள் அல்லவா!


சரி, வாருங்கள்,

இப்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள்.

இசை வாழ்க்கையை ரசனையுள்ளதாய் மாற்றும்.

ஆனால் இசையை ரசிக்க நமக்கு வாழ்க்கை வேண்டுமல்லவா?

 நம் வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றுகிற அபாயம் என்னவென்று உணர்ந்து கொண்டால்தானே அதை முறியடிப்பதற்கான உபாயத்தை தேட முடியும்!

 ஒவ்வொரு தொழிலாளி, நடுத்தர ஊழியர் ஆகியோரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது மத்தியரசின் தொழிலாளர் சட்ட திருத்தங்கள்.

 வாருங்கள் அது பற்றி அறிந்து கொள்வோம்.

 மத்திய தர ஊழியர் இணையவழி மாநிலக் கருத்தரங்கம்

 #################################################################################

31.10.2020 - சனிக் கிழமை - மாலை 6.45 மணி முதல் இரவு 8.15 மணி வரை ################# ##################################################################  *தலைமை* : தோழர் எஸ்.செல்லப்பா, *BSNLEU*

*வரவேற்புரை* : தோழர் டி.செந்தில்குமார், *AIIEA*

 *சிறப்புரை:*

தோழர் *ஆர். கருமலையான்,* அகில இந்திய செயலாளர், *CITU*

 *தொழிலாளர் நலச் சட்டங்கள் நான்கு தொகுப்புகளாக மாற்றப்பட்டுள்ளதில் உள்ள பாதகமான அம்சங்கள்*

 *நன்றியுரை* தோழர் என். இராஜகோபால், *BEFI*

 ###################################################################################

*நவம்பர் 26 நாடு தழுவிய வேலை நிறுத்தம் வெல்லட்டும்*

 ***********************************************************************************

அனைவரும் வருக!

 Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/84068051428?pwd=VTBaK2d1ZC9QSHl3cCszZjNzWEdIdz09

 Meeting ID: 840 6805 1428

Passcode: alltu


Tuesday, July 28, 2020

குண்டாஸ் ஆக்ட் என்றால் ????

எழுத்தாளரும் வழக்கறிஞருமான தோழர் இரா.முருகவேள் அவர்களின் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.


குண்டாஸ் ஆக்ட், குண்டாஸ் ஆக்ட் என்கிறார்களே அதன் முழுப்பெயர் இதுதான்.

THE TAMIL NADU PREVENTION OF DANGEROUS ACTIVITIES
OF BOOTLEGGERS, CYBER LAW OFFENDERS[6], DRUG
OFFENDERS, FOREST-OFFENDERS,[2] GOONDAS, IMMORAL
TRAFFIC OFFENDERS, SAND OFFENDERS[4], SEXUALOFFENDERS,[7] SLUM-GRABBERS AND VIDEO PIRATES[3] ACT,
1982
TAMIL NADU ACT NO.14 OF 1982

கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள், சைபர் லா குற்றவாளிகள், விடியோ பைரைசி செய்பவர்கள், வனம் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், மணல் திருடர்கள், போதை மருந்து கடத்துபவர்கள், குடிசைப் பகுதிகளைக் கைப்பற்றுபவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துபவர்கள், இவர்களோடு குணடர்கள் . . . .


இப்போது இருக்கும் பிரச்சினைக்கும் இதற்கும் எங்காவது ஒட்டுகிறதா பாருங்கள்?

குண்டர்கள் என்று பொதுவாகச் சொன்னால் யார்? அரசு யாரைச் சொல்கிறதோ அவர்கள்தான். பொது அமைதியைப் பாதிக்கும் வேலையில் ஈடுபடுபவர் எல்லாம் குண்டாதான். டெஃஃபனிசன் படி.

வழக்கமாக ஒருவரை கைது செய்தால் 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும். குற்றத்தைப் பொறுத்து 30, 60,90 நாட்களில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்யாமல் ஒருவரை சிறையில் வைக்க அரசு விரும்பினால் இந்த சட்டத்தில் கைது செய்து மூன்று மாதம் ஜாமீன், விசாரணை, குற்றப்பத்திரிக்கை இல்லாமல் அடைத்து வைக்கலாம். பின்பு அவர் சிறைப்பட்டிருக்கும் காலத்தை மேலும் அதிகரிக்கலாம். இதுதான் குண்டாஸ் ஏக்ட். இதைவிட கடுமையான வேறு சட்டங்களும் உண்டு.

ஒரு மத நம்பிகையை கேள்வி கேட்க உரிமை உள்ளதா? இந்த விஷ்யத்தில் நமது மரபு என்ன என்பதை வேறு தளத்தில் விவாதிக்க வேண்டும். நாத்திகர்களை குண்டர்கள் என்பதும் சட்ட விரோத செயல் செய்தவர்கள் என்பதும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது.

விசாரணை, குற்றப் பத்திரிக்கை, பிணை இல்லாமல் சிறைப்படுத்த வகை செய்யும் எல்லா சட்டஙக்ளுமே மனித உரிமைகளுக்கு எதிரானவைதான்.

எல்லா மனிதர்களுக்கு தங்கள் தரப்பை விளக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒரு தரப்பு சிறையீலும் மறுதரப்பு அனைத்து அதிகாரங்களுடனும் இருக்கும் போது அது எப்படி சமமான விவாதமாக இருக்கும்?

அரசு ஒரு தரப்புடன் சேர்ந்து மாற்றுக் குரல்களை நெறிக்க முயல்கிறது என்ற சந்தேகம் எழூகிறது.

ஆமாம் சாமி படங்களில் நாத்திகர்களைப் பண்ணாத இழிவா? அதற்கெல்லாம் என்ன தீர்வு?

Friday, March 23, 2018

ராமராஜ்ஜிய ரதத்தில் இவ்வளவு ஓட்டைகளா?


ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முகநூல் பதிவிலிருந்து சுட்டது. 

காவிகளால் காவிகளுக்காக நடக்கும் காவிகளின் ஆட்சியில் இதெல்லாம் சகஜம்தானே!

காலிகள் என்று அவசரத்தில் மாற்றிப் படித்து விடவில்லை அல்லவா?




விதிகளை மீறிய ரதம் 


ராமர் கோவிலின் மாதிரியைத் தாங்கி வரும் ரதம் மோட்டர் வாகனச் சட்ட விதிகளை மீறியுள்ளதாக மாநிலப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுவதாக இந்து நாளிதழ் கூறுகிறது 

மீறல்கள்: 

1. அது பதிவுசெய்யப்பட்ட வண்டியாக இருந்தால் அதன் பதிவெண் பட்டை (தமிழில் நம்பர் பிளேட் என்பார்கள்) வண்டியின் முன்புறம், பின்புறம் அல்லது பக்கவாட்டில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அது இல்லை (தேவலோகத்தில் பதிவு செய்யப்பட்ட வண்டிகளுக்கு இந்த விதி பொருந்தாது என தொலைக்காட்சி விவாதத்தில் சமூக ஆர்வலர் சொல்லக் கூடும்) 

2. பதிவுசெய்யப்பட்ட வண்டியின் அமைப்பை கோவில் போல் மாற்றியமைக்கக் கூடாது. ஆம்புலன்சாகவோ, தீயணைப்பு வண்டியாகாவோ மாற்றலாம் 

3. ரதத்தின்     எஞ்சின் அல்லது உடல் (?) சரக்கு வண்டியினுடையதாக இருந்தால் அதில் சாமியார்களை ஏற்றிச்செல்ல முடியாது.

பின் குறிப்பு

இதைப் படித்தவுடன் காவிகளின், அதிலும் குறிப்பாக ஒரு அதிமேதாவி அனாமதேயம் அதிகாலையில் ஆங்கிலத்தில் அராஜகமாக பின்னூட்டம் எழுதும், அவர்களின் மைண்ட் வாய்ஸ் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தேன். அதுதான் மேலே உள்ள படம். 



Saturday, November 18, 2017

சபாஷ் சித்தராமையா

 கீழே உள்ள பதிவு, தீக்கதிர் பொறுப்பாசிரியர் தோழர் அ.குமரேசன் எழுதியது.

அவருக்கு நன்றி சொல்லி, துணிச்சலான முடிவெடுத்த கர்னாடக முதல்வர் திரு சித்தராமையா அவர்களை பாராட்டுவதில் நானும் இணைந்து கொள்கிறேன்







ஏதேனும் வேண்டுதலுக்காக மனிதரை பலி கொடுப்பது...

பிராமணர்கள் சாப்பிட்ட இலைகள் மீது பிற சாதியினர் உருண்டு வரச் செய்வது...

தீக் கங்குகள் மேல் நடக்க வைப்பது...

மாதவிடாய் நாட்களில் அல்லது கர்ப்பக் காலத்தில் பெண்ணைத் தனிமைப்படுத்துவது...

வழிபாட்டின் பெயரால் பெண்களை நிர்வாணமாக நடக்க வைப்பது...

பேய் விரட்டுவதாகச் சவுக்கால் அடிப்பது...

புதையல் எடுப்பதாகக்கூறி பூஜை நடத்தி ஏமாற்றுவது...

விலங்கின் கழுத்தைக் கடித்து அதைக் கொல்ல வைப்பது...

சூனியம் வைப்பதாக, சூனியம் எடுப்பதாகச் சொல்லிச் சடங்குகள் செய்வது...

கன்னத்தில் அல்லது நாக்கில் அலகு குத்துவது...

பாம்பு, தேள், நாய்க் கடிக்கு மருத்துவம் பார்ப்பதைத் தடுத்து வழிபடக் கட்டாயப்படுத்துவது...

கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை மாற்றுவதற்கான பூஜை என மோசடி செய்வது...

நோய்களைக் குணப்படுத்துவதன் பெயரால் குழந்தைகளை அடிப்பது, முள்ளில் நிற்க வைப்பது, உயரத்திலிருந்து கீழே போடுவது...

நாணயத்தை சிவக்கச் சிவக்கத் தீயில் சூடாக்கி வயிற்றில் முத்திரை பதிப்பது...

இவை உள்ளிட்ட கொடுநம்பிக்கைச் செயல்களுக்குத் தடைவிதிக்கும் சட்ட முன்வரைவு கர்நாடக சட்டமன்றத்தில் இன்று (நவ.16) நிறைவேற்றப்பட்டுள்ளது.

தடையை மீறுவோருக்கு மூன்று மாதங்கள் வ்ரை சிறைத்தண்டனை, ரூ.5,000 வரையில் அபராதம்.

வாஸ்து, ஜாதக சோதிடம் போன்றவை ‘கர்நாடக மனிதமற்ற தீய நடைமுறைகள், சூனியம் தடுப்பு மற்றும் ஒழிப்பு சட்ட முன்வரைவு - 2017’ என்ற இந்தச் சட்டமுன்வரைவுக்குள் கொண்டுவரப்படவில்லை. அவற்றில் சித்திரவதைகள் இல்லை என்பதோ, அல்லது அவற்றிற்கு ஆதரவாகப் பெரிய வட்டாரம் இருப்பதோ காரணமாக இருக்கலாம்.

மத வழிபாடுகள், விழாக்கள், ஊர்வலங்கள் ஆகியவற்றுக்குத் தடையில்லை.

சீத்தாராமய்யா அரசுக்குப் பாராட்டுகள். கர்நாடகத்தில் செயல்படும் பகுத்தறிவாளர் அமைப்புகளுக்கு வாழ்த்துகள். பேராசிரியர் எம்.எம். கல்பூர்கி, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் ஆகியோருக்கு செவ்வணக்கம்.

“இந்த சட்ட முன்வரைவு இந்துக்களின் நம்பிக்கைகளைத் தாக்குவதாக இருக்கிறது” என்று சில அமைப்புகளைச் சேர்ந்தோர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். இந்து மக்களின் கவுரவத்தைப் பாதுகாப்பவர்கள்தானா இவர்கள் என்பதை இந்து மக்களே முடிவு செய்யட்டும்.

முறைப்படி இந்தச் சட்டமுன்வரைவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும. மத்திய அரசு அதற்குப் பரிந்துரைக்க வேண்டும். அது நடக்குமா அல்லது தமிழகத்தின் ‘நீட்’ எதிர்ப்புச் சட்ட முன்வரைவுக்கு ஏற்பட்ட கதிதான் இதற்குமா?

Saturday, August 22, 2015

தானாய் கனியட்டும், தடியை தூரப் போடு

 http://www.thehindu.com/multimedia/dynamic/01187/24isbs_EVM_GHB5FF7_1187684e.jpg
உள்ளாட்சித் தேர்தலில் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று குஜராத் மாநில அரசு கொண்டு வந்த அரசாணையை அகமதாபாத் உயர் நீதி மன்றம் தடை செய்துள்ளது.

மேம்போக்காக பார்க்கும் போது ஜனநாயகத்தை தழைக்க வைக்க வந்த சட்ட்ம் என்று தோன்றும். 

ஆனால் அடிப்படையில் ஜனநாயகத்திற்கு எதிரான சட்டம் இது. வாக்குப் பதிவு கிட்டத்தட்ட 65 % இருக்கும் நாட்டில் இது போன்ற  சட்டம் இருந்தால் நல்லதுதானே. மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஒழுங்காக செய்தால் மோசமானவர்கள் ஏன் ஆட்சிக்கு வரப் போகிறார்கள் என்ற கேள்வி கூட எழலாம்.

ஆனால் ஜனநாயகத்தை ஒரு சர்வாதிகாரச் சட்டம் மூலம் அமலாக்க முடியுமா?

தேர்தலில் வாக்களிப்பதற்கான கடமை மக்களுக்கு உள்ளது போல அதை புறக்கணிப்பதற்கான உரிமையும் கூட உள்ளது. மோசமான வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ள போது "எரிகின்ற எந்த கொள்ளியும் நல்ல கொள்ளி இல்லை" என்ற முடிவெடுக்கும் சாய்ஸ் மக்களுக்கு வேண்டுமல்லவா?

தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று சொன்னாலாவது தங்களின் துயரம் மீது ஊடக வெளிச்சமோ, இல்லை அரசியல் அதிகார வர்க்கத்தின் கவனம் படாதா என்று ஏங்குகிற மக்களின் அற்ப சந்தோஷத்தை பறிக்கலாமா?

தேர்தல் நாளன்று அதை விடுமுறையாகக் கருதி வீட்டிலே வீணாக பொழுதைக் கழிப்பவர்கள் நிச்சயம் இருக்கத்தான் செய்கிறார்கள். சட்டம் இயற்றி அவர்களை வாக்குச் சாவடிக்கு கொண்டு வந்து விட முடியுமா? தாங்கள் இழைப்பது தவறு என்ற உணர்வை அவர்களுக்கு உருவாக்காமல் வெறுமனே வம்படியாக அவர்களை வாக்களிக்கச் செய்வது அவர்களுக்கு ஜனநாயக நடைமுறையின் மீதான நம்பிக்கையைத்தான் குறைத்து விடும்.

அதே போல அன்றைய தினம் வேலைக்குப் போனால்தான் அடுப்பெரியும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு  என்ன ஏற்பாடு?

அதே போல் அரசு ஆணையிட்டும் விடுமுறை விடாமல் அலுவலகத்தை நடத்திய ஐ.டி கம்பெனிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது செய்தியாக வெளிவந்தது. ஆனால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா? அது பற்றி ஏதாவது செய்தி வந்ததா?

விழிப்புணர்வை உருவாக்கி  மட்டுமே மக்களை வாக்களிக்கச் செய்வதுதான் ஜனநாயகம் தழைக்க உதவுமே தவிர சட்டம் போட்டு கட்டாயப் படுத்துவது அல்ல.

இன்று  வாக்களிப்பதை கட்டாயப்படுத்துபவர்கள், அடுத்து எங்களுக்கு மட்டும்தான் வாக்களிக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்துவார்கள். திரிணாமுல் காங்கிரஸ் அதைத்தான் செய்கிறது என்பது ஒரு யதார்த்தம்.

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது  காய் தானாகவே இயற்கையாக கனியாவது போன்றது. தடி கொண்டோ, கிராபைட் கல் கொண்டோ கனியாக்க முயற்சிப்பது ஆரோக்கியமானதல்ல, மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும்.