சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Thursday, May 16, 2024
நடிகர் திலகம் என்னை மன்னிப்பாராக . . .
Friday, February 2, 2024
தவெக : இப்படித்தான் சிவாஜியும் . . .
வார இதழ்கள் வாங்குவதை நிறுத்தி இரண்டாண்டுகளுக்கு மேலாகிறது.
அதனால் ஜூனியர் விகடன் இதழ் நடிகர் விஜயை உசுப்பேற்றி விட்டதா என்று தெரியாது.
Tuesday, November 28, 2023
வேண்டியது நடக்கும் டிமோ
நேற்று முன் தினம் விமானப்படை பைலட் வேஷம் கட்டிய டிமோ நேற்று திருப்பதியில் பக்தர் வேஷம் கட்டியுள்ளார். 140 இந்திய மக்களின் வளமான, ஆரோக்கியமான எதிர்காலத்துக்காக வெங்கடாசலபதியிடம் வேண்டியதாக வஜனமும் பேசியுள்ளார் அந்த மகா நடிகர்.
உங்கள் வெறியர்கள் சொல்வது போல அரபிக்கடலில் விழுந்து விடுங்கள், பாகிஸ்தானுக்கு போ என்றெல்லாம் அநாகரீகமாக நான் சொல்ல மாட்டேன்.
உங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் நிச்சயம் உங்களை வீட்டுக்கு அனுப்புவார்கள். அப்போது நீங்கள் வேண்டியது நடக்கும் டிமோ . . .
Saturday, November 11, 2023
ஓயாத உருட்டுக்கள்.
மூன்று வருடம் முன்பு எழுதிய பதிவையே மீண்டும் பகிர்கிறேன். ஏனென்றால் ராஜராஜனிடமிருந்து தோழர் ஹோசிமின் வீரத்தை கற்றுக் கொண்டதென்ற கட்டுக்கதை மீண்டும் சுற்றுக்கு வந்துள்ளது. அதனால் அப்போது எழுதிய பதிவை மீண்டும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் வந்துள்ளது.
முன்னே சிவாஜி, இப்போ ராஜராஜன்
பிகு 2
தோழர் ஹோசிமின் உடல் புதைக்கப்படவில்லை, எரிக்கப்படவில்லை. மாறாக தோழர் லெனின் உடல் போல ஹனாய் நகரில் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
ஹனாய் நகரத்தில் உள்ள அவர் சிலையும் நினைவகமும் பாதுகாக்கப்பட்டுள்ள அவர் உடலும் கீழே உள்ள புகைப்படங்களில் ...
Sunday, July 23, 2023
நடிகர் திலகமும் இந்தியாவின் தேவையும்
முன் குறிப்பு : நடிகர் திலகம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது மூன்று பாடல்களை பகிர்ந்து கொள்ள தயார் செய்திருந்த பதிவு இது. மணிப்பூர் கொடூரம் காரணமாக அதனை அன்று பகிர்ந்து கொள்ள இயலவில்லை. இன்றைய சூழலில் அவசியமான ஒன்றாக கருதுவதால் தலைப்பை மாற்றி பகிர்ந்து கொள்கிறேன்.
அவருக்கு எம்மதமும் சம்மதமே
நடிகர் திலகம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது மூன்று பாடல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
இந்துவாக, முஸ்லீமாக, கிறிஸ்துவராக அவர் நடித்த படங்களின் பாடல்கள். இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு உதாரணமாக, எம்மதமும் சம்மதமே என்ற சிந்தனை மக்களின் மனதில் பதிய வேண்டும் என்பதற்காக மதத்தின் மீது நம்பிக்கையில்லாவிட்டாலும் பகிர்கிறேன். அடுத்தவர்கள் உணர்வுகளை மதிப்பது என்பதும் இந்தியாவின் பன்முகத் தன்மையின் ஒரு அம்சமல்லவா!
சித்தமெல்லாம் எனக்கு ......
தேவனின் கோயிலிலே . . .
Wednesday, April 19, 2023
பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள் ஒன்றிய அரசே!
உச்ச நீதிமன்றத்தை ஒன்றிய அர்சு எப்படி மதிக்கிறது என்று காலையில் எழுதியிருந்தேன்.
ஏதோ ஒரு கூட்டத்தில் பாக்யராஜ் பேசிய காணொளியை இன்று பார்த்தேன். அந்த காணொளி கீழே. . .
நீதிமன்றத்தை எப்படி மதிக்க வேண்டும் என்பதை ஒன்றிய அரசு இதைப் பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டும். அது போலவே நீதிமன்றத்தின் மதிப்பை சில நீதிபதிகளும் பாதுகாக்க வேண்டும், குறிப்பாக மதுரை பெஞ்சில் இருக்கும் ஒருவர்.
எச்.ராசா, ஒன்றிய அரசு ஆகியோர் நீதிமன்றத்திற்கு கொடுக்கும் மரியாதையை அறிந்தால் நடிகர் திலகத்தின் முகம் மேலே உள்ள படம் போல மாறியிருக்குமோ!
Thursday, February 2, 2023
ரசிகரென்றாலும் நியாயம் வேண்டாமா?
இன்று ஒரு குழுவில்
பார்த்த பதிவு.
வீர பாண்டிய கட்டபொம்மனை
நம் கண் முன்னே நிறுத்தியவர் நடிகர் திலகம்தான் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
கட்டபொம்மன் என்றால் சிவாஜி கணேசன் நினைவுதான் முதலில் வரும். அந்த அளவிற்கு அந்த பாத்திரமாகவே
அவர் வாழ்ந்திருந்தார்.
ஆனாலும் வீர பாண்டிய
கட்டபொம்மன் பிறந்த நாளுக்குக் கூட நான் நடிகர் திலகத்திற்குத்தான் நான் வாழ்த்து சொல்வேன்
என்பதெல்லாம் ரொம்பவே ஓவர்.
ஒரு நடிகராய் ரசிகராய்
பார்ப்பதிலிருந்து அடுத்த கட்டமாக வழிபாட்டு மன நிலைக்குப் போவதன் அடையாளம் இதுதான்.
இந்த நாயக வழிபாடுதான்
திரைக்கு வருபவர்கள் எல்லோருக்கும் முதலமைச்சர் கனவை வேறு கொடுத்து விடுகின்றது.
பிகு : மேலே உள்ளது
வீர பாண்டிய கட்டபொம்மன் தூக்கிலடப்பட்ட கயத்தாறில் அமைக்கப்பட்ட கட்டபொம்மன் சிலை. இதை அமைத்தது நடிகர் திலகம் சிவாஜி
கணேசன்தான்.
Tuesday, January 24, 2023
பகவத் (ஆர்.எஸ்.எஸ்) வாங்கிய பல்பு
காட்டிக் கொடுத்ததும்
மன்னிப்பு கேட்டதுமே சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் காரர்களின் பங்காக வரலாற்றில்
பதிவாகியுள்ளதால் சுதந்திரப் போராட்ட நாயகர்களை தங்களவர்களாக காண்பித்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள்
சங்கிகள். “நான் ஏன் நாத்திகன் ஆனேன்?” என்று நூலெழுதிய, ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசுப் படை என்று
தனது இயக்கத்திற்கு பெயர் சூட்டிய பகத்சிங்கை கைப்பற்ற முன்பு முயன்று தோற்றுப் போனார்கள்.
Saturday, December 31, 2022
சாவே கிடையாது
தமுஎகச பொதுச்செயலாளர் தோழர் ஆதவன் தீட்சண்யா எழுதிய பதிவு கீழே உள்ளது. இப்படி அனைவரும் கேட்டால் உலகில் மரண தண்டனையே கிடையாது.
Monday, November 21, 2022
வசனங்களில் வாழ்வார்
Saturday, October 1, 2022
எத்தனை முறை பார்த்தாலும் . . .
Thursday, July 21, 2022
21 வருடங்கள் ஆனாலும்
21 வருடங்கள் ஆலாலும் . . .
நடிகர் திலகம் மறைந்து 21 வருடங்கள் ஆயிற்று. ஆனாலும் அவர் தமிழ்த் திரை ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்.
அவருக்கு நிகரான நடிகர் இப்போதும் இல்லை. இனியும் வரப்போவதில்லை.
நாதஸ்வரத்தை அனுபவித்து வாசிக்கும் சிக்கல் சண்முகசுந்தரத்தை கண்டு ரசியுங்கள் . . .
Friday, October 1, 2021
கூகிள் சிவாஜி
காலையில் ஒரு தகவலை சரி பார்க்க கூகிளாரை நாடிய போது ஒரு இன்ப அதிர்ச்சியாக இன்றைய கூகிள் முகப்புப் படமாக நடிகர் திலகத்தின் படத்தை வைத்திருந்தார்கள்.
அதன் விளைவாக
தேடச் சென்ற தகவலை விட்டு விட்டு,
எழுத நினைத்த பதிவை ஒத்தி வைத்து விட்டு
நடிகர் திலகத்தின் பிறந்த நாள் சிறப்புப் பதிவாக அவரது ஆறு பாடல்களை பகிர்ந்து கொள்கிறேன்.
யாரடி நீ மோகினி
பொட்டு வைத்த முகமோ
நல்லதொரு குடும்பம்
ஆனந்தம் விளையாடும் வீடு
பூங்காற்று திரும்புமா
இந்த ஆறு பாடல்களும் அவரது பலவித பரிமாணங்களை உணர்த்தும், காலத்தை வென்று நிலைத்து நிற்கும் கலைஞன் அல்லவா சிவாஜி!
Wednesday, September 8, 2021
அமுதே, தமிழே, அழகிய மொழியே, எனதுயிரே . . .
இன்று
மறைந்த புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு மனமார்ந்த அஞ்சலி. கவியரசு கண்ணதாசனும் வாலியும்
கோலோச்சிய காலத்திலும் பல முத்தான பாடல்கள் மூலம் முத்திரை படைத்தவர். எம்.ஜி.ஆரின்
துவக்க கால அரசியலுக்கு பட்டுக்கோட்டையார் பாடல்கள் உதவியது என்றால் திரைத்துறையிலிருந்து
தீவிர அரசியல் களத்திற்கு என்ற காலத்தில் உதவியது புலமைப்பித்தனின் பாடல்களே.
திரைத்துறைக்கே
உரித்தான பந்தாக்கள் இல்லாத எளிமையானவர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல முறை
அவரை கையில் ஒரு சின்னப்பையோடு தன்னந்தனியே பார்த்த காரணத்தால் இதைச் சொல்கிறேன்.
திரு புலமைப்பித்தனை நினைவு கூர்கிற வகையில் அவர் எழுதிய சில பாடல்களை பகிர்ந்து கொள்கிறேன்.
அமுத தமிழில் எழுதும் கவிதை
நாளை உலகை ஆள வேண்டும்
இந்த பச்சைக்கிளிக்கொரு
பூமழை
தூவி
நீங்க நல்லா இருக்கோணும்
அந்தப்புரத்தில் ஒரு மகராணி
மான்
கண்டேன், மான் கண்டேன்
அமுதே
தமிழே
செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
ஓ வசந்த ராஜா
தமிழே, எனதுயிரே என வாழ்ந்தவருக்கு என் அஞ்சலி
பிகு : மேலே உள்ள பாடல்களில் எம்.ஜி.ஆர் பாடல்கள் மெல்லிசை மன்னரின் இசையமைப்பிலும் மற்ற பாடல்கள் இளையராஜாவின் இசையிலும் அமைந்தது யதேச்சையான ஒற்றுமையே.
Sunday, September 5, 2021
மோடிக்கு க.ஓ.த பாடல் சமர்ப்பணம்
Thursday, July 22, 2021
நடிகர் திலகம் 3+3
அவரைப் பற்றி புதிதாக என்ன எழுத?
விபரம் தெரிந்த நாள் முதல் அவர் படங்களை ஆவலாக பார்த்த ரசிகனாக அவர் நடித்த காட்சிகள், பாடல்கள் ஆகியவற்றை மீண்டும் மீண்டும் பார்த்தால் மட்டும் போதுமே!
அனைத்தையும் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தின் இடம் போதாது என்பதால் மூன்று காட்சிகளும் மூன்று பாடல்களும் பகிர்ந்து கொள்கிறேன்.
கம்பீர நடைக்கு ஓர் உதாரணம். தேவேந்திரன் தன்னை வஞ்சிக்க மாறு வேடத்தில் வந்திருப்பதை அறிந்ததும் முகத்தில் காண்பிக்கிற கர்ணன்.
பணி
ஓய்வை எதிர்பாராததால் எதிர்காலம் பற்றிய பதற்றத்தில் தவிக்கும் பிரெஸ்டீஜ் பத்மநாபன்
கிராமந்து
வெள்ளந்தியான சாப்பாட்டு ராமன்.
இன்றைய
இந்தியா உயர்த்திப் பிடிக்க வேண்டிய மத நல்லிணக்கத்தை வலியுறுத்த முத்தான மூன்று பாடல்கள்
உங்களுக்காக.
திரை
இசை திலகம், மெல்லிசை மன்னர்கள், இசை ஞானி என மூவரின் கைவண்ணத்தில் இந்த மூன்று பாடல்கள்
அமைந்துள்ளன என்பது இன்னொரு சிறப்பு.
நடிகர் திலகம் என்றுமே நம் தமிழ் நாட்டின் பெருமை.
Saturday, January 9, 2021
அனுபவிச்சு பாடறாரய்யா!
Thursday, October 1, 2020
இன்றும் என்றும் பார்த்து ரசிக்க . . .
இன்று
நடிகர் திலகத்தின் பிறந்த நாள். அவரது சிறப்பான பதினோரு காட்சிகளை இன்று பகிர்ந்து கொள்கிறேன்.
இன்றும் என்றும் பார்த்து ரசிக்க . . .
இரும்புச்
சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட மனோகரன்
அவமானம்
தாங்காமல் பொங்கியெழும் கர்ணன்.
எதிரிக்கும்
துரோகிக்கும் நடுவே வீரன்
தமிழுக்காக
ஒரு திருவிளையாடல்
சத்ரபதி
சிவாஜியாக நடிகர் திலகம் சிவாஜி
முதல்
முறை சந்திக்கும் தந்தை மகன் உணர்ச்சிக் கொந்தளிப்பு
ஒப்புதல்
வாக்குமூலமும் பிந்தைய அதிர்ச்சியும்
அடுத்தவர்
நடிப்பில் விஞ்ச கொடுத்த வாய்ப்பு
ஆணவ
வேடமும் தொடர்ந்த அடக்கமும்
ருசித்து சாப்பிடும் மீன் குழம்பு
பிகு 1:
“யூட்யூபிலிருந்து டௌன்லோட் செய்ய கற்றுக் கொடுத்தது தப்பா போச்சு, ரொம்ப ஓவரா போற”
என்று மகன் எப்போது தொலைபேசி செய்து டோஸ் விடுவானோ
என்ற அச்சம் உள்ளூர இருக்கத்தான் செய்கிறது. எஸ்.பி.பி அஞ்சலி பதிவுகள் வேறு அப்படியே
நிற்கிறது.
பிகு 2 : மேலே உள்ள படத்தை வரைந்தது எங்கள் புதுவை 2 கிளைத் தோழர் எஸ்.செல்வராஜின் மகன் அனீஷ்