Showing posts with label அநாகரீக மனிதர்கள். Show all posts
Showing posts with label அநாகரீக மனிதர்கள். Show all posts

Tuesday, March 25, 2025

அநாகரீகம்-அசிங்கம்-அராஜகம்

 


சவுக்கு சங்கர் ஒரு அரசியல் தரகன், பிளாக் மெயிலர், பணத்திற்காக பொய்ப் பிரச்சாரம் செய்யும் கீழ்த்தரமான நபர்.

துப்புறவுத் தொழிலாளர்களைப் பற்றி அந்தாள் பேசியது கேவலமானது. 

அதற்கான எதிர்வினையாக அந்தாள் வீட்டில் கழிவு நீரையும் மனிதக் கழிவுகளையும் வீசியது என்பது மிகவும் அநாகரீகமான செயல்.

இதுதான் சரியான எதிர்வினை என்று சிலர் பாராட்டுவது அசிங்கமாக இருக்கிறது. சொல்லப்போனால் துப்புறவுத் தொழிலாளர்கள் மீது இந்த சம்பவம் ஏற்படுத்திய களங்கத்தை இவர்கள் அதிகமாக்குகிறார்கள்.

இந்த சம்பவத்தை கண்டித்தால் நீங்கள் சவுக்கு சங்கருக்கு நீங்களும் ஆதரவாக செயல்படும் தரகர்தான் என்று சில உ.பி க்கள் சொல்வது அராஜகமானது.

உங்கள் அராஜகத்தால் பாதிக்கப்படப் போவது திமுக மட்டுமே. இது கூட புரியாத முட்டாள்களா அவர்கள்! அல்லது அவர்கள் திமுகவில் உள்ள பாஜக ஸ்லீப்பர் செல்களா? 

Wednesday, March 5, 2025

தமிழிசையின் வாழ்த்து சில்லறைத்தனமானது . . .

 


தமிழக முதல்வ மு,க.ஸ்டாலினுக்கு டமில்மூயூசிக் மும்மொழியில் பிறந்த நாள் வாழ்த்து சொல்லியுள்ளார்.

தமிழ், ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் அவரது பிறந்த நாள் வாழ்த்து அமைந்துள்ளது.


எனக்கு தெலுங்கு தெரியாது. தெலுங்கானா ஆளுனராக இருந்ததால் தமிழிசை குறைந்த காலத்தில் தெலுங்கு கற்றுக் கொண்டுள்ளார் என்று பெருந்தன்மையாக ஸ்டாலின் பதில் சொல்லியுள்ளார்.

தமிழிசையின் மும்மொழி வாழ்த்து பாஜகவின் மும்மொழி அரசியலை வெளிப்படுத்துகிறது என்று மேம்போக்காக கருதக் கூடாது.

ஸ்டாலினின் பூர்வீகம் ஆந்திரா என்று சங்கிகள் பல ஆண்டுகளாக கட்டமைத்துக் கொண்டிருக்கிற ஒரு கதையைத்தான் டமில்மூயூசிக் தெலுங்கு வாழ்த்தின் மூலம் சொல்லியுள்ளார். இது சில்லறைத்தனமான செயல். . . .


Monday, September 26, 2022

சங்கிகள் பிச்சை எடுக்கலாம்.

 


வேலூரில் இந்து முன்னணி ஒட்டியுள்ள சுவரொட்டி கீழே உள்ளது.

 


முதலில் அவர்கள் ஆ.ராசாவை குறை சொல்வதே அநியாயம். மக்களை நான்கு வர்ணங்களாக பிரித்து இழிவு செய்யும் மனு தர்மத்தின் மீது கோபம் வராமல் அந்த இழிவை சுட்டிக்காட்டியவர்கள் மீது கோபப்படுவது அயோக்கியத்தனம். சில மாதங்கள் முன்பாக இதே விஷயத்திற்காக தோழர் தொல்.திருமாவளவன் மீது தாக்குதல் நடத்தினார்கள். இப்போது இலக்கு மாறி விட்டது. உண்மையிலேயே இவர்களுக்கு ரோஷம் வந்தால் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் முன்பு அமைக்கப்பட்டிருக்கிற மனு சிலையை உடைக்க வேண்டும் அல்லது மனு தர்மம் அப்படியெல்லாம் சொல்லவில்லை என்றாவது நிரூபிக்க வேண்டும். அதை அவர்களால் செய்ய முடியாது.

 இந்த சுவரொட்டி மிகவும் அபாயகரமானது. பிரிவினையை தூண்டுகிறது. “சாமி கும்பிடும் இந்துக்கள்” என்று புதிய கேட்டகரியை உருவாக்கி பக்தர்களை உசுப்பேற்றுகிறார்கள். இவர்களுக்கு என்ன பக்தர்கள் மீது பாசமா? சாமி கும்பிடும் இந்துக்கள், சாமி கும்பிடாத இந்துக்கள் என்று இந்துக்களையே இரண்டாகப் பிரிக்கும் இந்த கயவர்களா இந்துக்களை பாதுகாப்பார்கள்!

 மோடி அரசின் பொருளாதார நடவடிக்கைகளால், விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பகுதியினர் இந்துக்கள்தானே! சாமி கும்பிடும் இந்துக்களுக்காக ஏதாவது தனி சலுகை கொடுத்துள்ளார்களா என்ன!

 உண்மையைச் சொல்லி இவர்களால் கட்சியை நடத்த முடியாது. ஆட்சியைப் பிடிக்க முடியாது. மோடி சொல்லும் கதைகளை நம்ப தமிழ்நாட்டு மக்கள் தயாராக இல்லை. அதனால் கலவரத்தைத் தூண்டியாவது தேர்தலில் வெற்றி பெற முடியுமா என்று பார்க்கிறது பாஜக.

 இப்படியெல்லாம்  அரசியல் செய்வதற்கு பதிலாக பாஜகவினர் பிச்சை எடுக்கலாம்.  அது கொஞ்சம் கௌரவமாக இருக்கும்.

 பிகு: பிச்சை எடுப்பது என்பதற்குப் பதிலாக இன்னும் ஒரு கடுமையான வார்த்தையைத்தான் முதலில் பயன்படுத்தி இருந்தேன். அதுதான் பொருத்தமான வார்த்தையும் கூட. என் தளத்தின் நாகரீகத்தைக் காக்க கடைசியில் வார்த்தையை மாற்றி விட்டேன்.

 

Monday, September 19, 2022

மோடி போலவே ஆபாசமானவர்கள்தான் . .

 


சி.டி.ஆர்.நிர்மல் குமார் என்ற பாஜக ஐ.டி.விங் தலைமைப் பொறுக்கி ராகுல்காந்தி, ஏழு வருடங்களுகு முன்பு தன் சகோதரி பிரியங்கா காந்தியின் மகளோடு உடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை போட்டு ஆபாசமான அர்த்தம் வருவது போல ட்விட்டரில் பதிவு போட்டிருந்தான்.

ஜனநாயக உணர்வும் பொறுப்புணர்வும் உள்ளவர்கள் அனைவரும் கொதித்து விட்டனர்.

நிர்மல் குமார் என்பவன் தனிப்பட்ட பொறுக்கியல்ல. ஆபாச மோடியின் சீடன்.

தங்கள் எதிர்காலத்தை, சுற்றத்தை, உடமைகளை இழந்து அச்ச உணர்வோடு இஸ்லாமியர்கள் தங்கியிருந்த அகதிகள் முகாமை "குழந்தை உற்பத்தி தொழிற்சாலைகள்" என்று கேவலமாக பேசிய, ஆபாச சைகைகளோடு நாடாளுமன்றத்தில் பேசிய மோடியின் கட்சிக்காரர்கள் மட்டும் என்ன நாகரீகமாகவா இருப்பார்கள்!!!!!

எல்லோருமே ஆபாசமானவர்கள்தான்!!!!!

Sunday, February 13, 2022

இவனெல்லாம் முதல் மந்திரி!


 அஸ்ஸாம் முதல் மந்திரியை பதவி நீக்க வேண்டும் என்று தெலுங்கானா முதலமைச்சர் கூறியதாக படித்தேன்.

தெலுங்கானாவுக்கும் அஸ்ஸாமுக்கும் சம்பந்தமே இல்லையே என்ற சிந்தனையில் தேடினால் விஷ(ய)ம் தெரிந்தது.

"பாலக்கோடு துல்லிய தாக்குதலுக்கு ராகுல் காந்தி ஆதாரம் கேட்கிறார். நீ ராஜீவ் காந்தியின் மகன் தானா என்பதற்கு எப்போதாவது நாங்கள் ஆதாரம் கேட்டுள்ளோமா?"

என்று அந்த முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா  பேசியுள்ளான்.

" குழந்தைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைதான் குஜராத் அகதிகள் முகாம்' என்று ஆபாசமாக பேசிய கேடு கெட்ட மனிதனை பிரதமராகக் கொண்ட கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் மட்டும் எப்படி யோக்கியமாக இருப்பான்!!!

Saturday, April 24, 2021

சங்கிகள் எனும் மனித குல எதிரிகள்.

 


தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களுக்கு இரங்கல் செய்தியை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடலாம் என்று சென்ற போது பார்த்த நான்கு பின்னூட்டங்களை மட்டும் கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 


மேற்கு வங்கத் தேர்தலில் அனுதாப ஓட்டு வாங்குவதற்காக இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டாயா என்று கேட்கும் இந்த நபர் ஒரு வேளை ஏதோ அரசியல் சாரா அரசியல் கோஷ்டியோ என முதலில் நினைத்தேன். மோடி, அமித்து, ரவிசங்கர் பிரசாத், நட்டா உள்ளிட்ட சீனியர் சங்கிகளை பின்பற்றும் சங்கி என்பது அந்தாளின் ட்விட்டர் பக்கத்திற்கு போன பின்பே புரிந்தது.

 மற்றவர்களும் லேசுப்பட்டவர்கள் அல்ல என்பதை அவர்களின் ட்வீட்டுகளை பார்த்தாலே தெரியும்.

 




ஒரு மரணத்தின் போது கூட  இவர்கள் அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள் என்பது எனக்கு அதிர்ச்சியோ ஆச்சர்யமோ இல்லை.

 

மகாத்மா காந்தியை திட்டம் போட்டு கொன்று விட்டு இனிப்பு கொடுத்து கொண்டாடிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வளர்ப்புக்கள் வேறெப்படி இருப்பார்கள்!

Sunday, April 18, 2021

விவேக்கின் இறுதிச்சடங்கும் நிறைவேறாத இன்னொரு . . .

 


மூத்த தோழர் கா.சின்னையா பகிர்ந்து கொண்ட இந்த பதிவு, விவேக்கின் இறுதிச்சடங்குகளை அவர் மகள் செய்ததை மட்டும் கூறவில்லை.

இன்னொருவரின் ஆசையை நிறைவேற்ற விடாமல் தடுத்த மோசமான நிகழ்வையும் சொல்கிறது.

விவேக் படங்களில் சொன்னது போல நூறு பெரியார்கள் இன்னும் தேவைப்படுகின்றனர்.

Vidya Subramaniam page..
//நேற்று மாலை நான் டிவி போடும்போது பாலிமரில் நடிகர் விவேக்கின் இறுதி காரியங்கள் நடந்து கொண்டிருந்தன. அவரது பெண் தன் தோளில் பானை சுமந்து தகப்பனின் உடலை வலம் வந்து கொண்டிருந்ததைக் கண்டதும் ஏனோ கண்ணீர் பீறிட்டது எனக்கு. கூடவே சுப்ரமணியத்தின் மரணமும் நினைவுக்கு வந்ததை ஒதுக்க முடியவில்லை.

விழுப்புரத்தில் இறந்தவரின் மரணச் செய்தி எங்களுக்குத் தெரியவே இரண்டு நாளாயிற்று. உடல் டீகம்போஸ்ட் ஆகியிருக்க, முகத்தைக்கூட பார்க்க முடியாத நிலை. நான் அதிர்ச்சியில் இறுகிப் போயிருந்தேன். வித்யாதான் ஒவ்வொருவருக்காகத் தகவல் சொல்லிக் கொண்டிருந்தாள். நடுவில் நான் அவளை அழைத்தேன்.

"நீதான் அப்பாக்கு எல்லாம் பண்ணணும்"

"செய்யறேன். ஆனா என்னை பண்ண விடுவாளா?"

"பண்ணிதான் ஆகணும். நா எல்லார்ட்டயும் சொல்றேன்." என்று கூறிவிட்டு சுருண்டு படுத்தேன். அழவில்லை. மனசு இறுகிப் போயிருந்தது.

மரணச் செய்தியின் அதிர்ச்சியினால், நாற்பத்து நான்கு வயதில் ஏற்கனவே இருந்த மெனோபாஸ் பிரச்சனை அந்த நிமிடம் தலைதூக்க, பெருமளவில் நானே பதறுமளவுக்கு உதிரப்போக்கு துவங்கியது எனக்கு. நிற்க முடியவில்லை. உடலின் உதிரமெல்லாம் வழிந்து போனாற்போல் உடற்சோர்வு, நடுக்கம். யார் யார் வந்தார்கள், யாரிடம் என்ன பேசினோம்...எனப்புரியாத அளவுக்கு ஒரு அரை மயக்க நிலை. உதிரம் சிந்தவே பிறந்தவள் பெண். பதினாலு வயதில் ஆரம்பித்து, பின்னர் பிரசவங்களில் குடம் குடமாய் இரத்தம் சிந்தியது போக, பாலாக மாறி குழந்தைக்கு உணவாகும் உதிரம், மெல்ல வயதேறி நாற்பதுகளுக்கு மேல் மெனோபாஸில் நினைத்தால் கொட்டும் உதிரம் என..... உடல்ரீதியாய்ப் பெண் படும்பாட்டை அறிந்தவர் எவரும் அவளை ஒருபோதும் உதாசீனம் செய்ய மாட்டார்கள். இத்தனைக்கும் நடுவில்தான் அவள் பல சாதனைகள் புரிகிறாள்.

மறுநாள் மாலை வாசலில் ஆம்புலன்ஸ் வந்து நிற்க, சுப்பிரமணியத்தின் மத்திய புலனாய்வுத் துறையின் சார்பில் வாசலிலேயே ஆம்புலன்ஸ் முன் துப்பாக்கி ஏந்தியவர்களின் அஞ்சலி நடக்க, நான் வித்யாவிடம் ரெடியா இரு என்றேன்.

மன்னி அவளோட நானும் போறேன் என்று கிளம்பினாள் தோழி இந்திரஜா(நடிகை). 19 வயது பெண்ணை மயானத்திற்கு அனுப்பி வைத்தேன். உடன் சென்றவர்களிடம் விவரமாகச் சொல்லியும் அனுப்பினேன்.

எட்டுமணியாயிற்று எல்லோரும் வீடு திரும்ப. வந்ததும் குளித்து ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு இந்திரஜா கிளம்பிச் செல்ல, நான் வித்யாவிடம் தேங்க்ஸ்டி என்று சொல்லிவிட்டு உதிரப்போக்கின் காரணமாக நிற்கக்கூட முடியாமல் சுருண்டு படுத்தேன். அம்மா பயந்து போய் குணாளம்மனுக்கு குங்குமம் சார்த்துவதாக வேண்டிக் கொண்டாள். அடுத்த இரண்டு நாட்களும் காரணமின்றி உறக்கம் அதிகம் வர, வித்யா மருத்துவரிடம் ஆலோசித்தாள். வீட்டுக்கே வந்து பிளட் டெஸ்ட் செய்ய டயபடிக் என்பது உறுதியாயிற்று. அதிர்ச்சியில் பான்க்ரியாஸ் பாதிக்கப்பட்டாலும் சட்டென ஷுகர் தாக்குமாம். அப்பா அத்தைக்கு இருப்பதால் வாய்ப்பு அதிகமிருந்தது. அது சற்று முன்னமேயே வந்துவிட்டது. சரி இதையும் எதிர்கொள்வோம் என்று தேற்றிக் கொண்டேன்.

துக்கம் விசாரிக்கறேன் என்று பலரும் வந்தார்கள். அழுதார்கள். நான் அழவில்லை. என் முன் அழுதவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினேன். பெண்களின் சோகத்தைப் போக்கும் வகையில் அவர்களோடு ஸ்க்ராபிள் விளையாடினேன். சிரித்துப் பேசினேன். அடுத்து வாழ்வை எப்படி எதிர் கொள்வது என்று யோசனையோடு அடுத்து நடக்க வேண்டிய கர்ம காரியங்கள் குறித்து பேசி வேண்டிய பணத்தைக் கொடுத்தேன்.

பதிமூன்று நாள் காரியம் குறைவின்றி நடந்தது. இருபதாவது நாள் அம்மாவும் கிளம்பிச்செல்ல, வீட்டில் நானும் என் பெண்களும் மட்டுமே. மேலும் பத்து நாட்களாகியிருக்கும்.

"அம்மா நா ஒரு விஷயத்தை உங்கிட்ட சொல்லாம் மறைச்சுட்டேன்" என்றாள் ஒருநாள் இரவு வித்யா தயங்கியபடி.

என்ன விஷயம்?

"அப்பாக்கு நா எதுவும் பண்ணலை. கணேஷ் மாமாதான் பண்ணினா".

நான் அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தேன். "என்னடி சொல்ற? நா அவ்ளோ தூரம் சொல்லியனுப்பினேனே...."

"என்னை யாரும் பண்ண விடலைம்மா. என் பேச்சை யாருமே மதிக்கலை. என்னோட வந்த ஒருத்தர் கூட எனக்காக அங்க சப்போர்ட் பண்ணலை".

நீ எப்டிடி விட்டுக் கொடுத்த? பிடிவாதமா பண்ண வேண்டியதுதானே?

"அந்த சாஸ்திரிகள் ரொம்ப கேவலமா பேசினார்மா. பொம்மனாட்டிகள் பண்ணப்படாதுன்னார். ஏன் பண்ணப்படாதுன்னு கேட்டேன். உன்னால புருஷா மாதிரி மேல்சட்டையை அவுத்துப் போட்டுட்டு காரியம் பண்ண முடியுமான்னு கேட்டார். அவர் அப்டி கேட்டதும் என்னால கோவத்தை அடக்க முடியலை. எங்கப்பாக்காக நா அதையும் செய்ய ரெடியாராக்கேன். ஆனா உங்களால ஒழுங்கா மந்திரம் சொல்ல முடியுமான்னு திருப்பிக் கேட்டேன். இந்தப் பொண்ணு அதிகப் பிரசங்கித்தனமா பேசறது...யாரானம் இவளை அந்தண்ட இழுத்துண்டு போங்கோன்னு கத்தினார். மாமா உட்பட எல்லாரும் சேர்ந்து என்னை சமாதானப் படுத்தி கூட்டிண்டு போய்ட்டா. என்னால எதுவுமே பண்ண முடியல. மாமா பண்றதை வேடிக்கைதான் பார்க்கமட்டும்தான் முடிஞ்சுது. அவள் சொல்லிவிட்டு அழ,.....நான் சிலையாய் அமர்ந்திருந்தேன். வேதம் படித்த ஒரு மனிதரால் தந்தையை இழந்த ஒரு இளம் பெண்ணிடம் இத்தனை வக்கிரமாகக்கூடப் பேச முடியுமா? வேதம் சொல்லும் வாயிலிருந்து சாக்கடையும் கொட்டுமா? அடக்கி வைத்திருந்த அழுகையெல்லாம் வெடித்துக் கிளம்ப ஒரு மாதம் கழித்து சுப்ரமணியத்திற்காக நான் வாய்விட்டு கதறியழுதேன்.

நமக்கு பிள்ளையில்லைன்னு வருத்தமுண்டா உங்களுக்கு? ஒருநாள் சிரித்தபடி அவரிடம் கேட்டதற்கு, "ஒரு வருத்தமும் இல்ல? நீ எதுக்கு கேக்கறன்னு தெரியும். நமக்கு ஏதானம் ஆச்சுன்னா கொள்ளிபோட ஒண்ணுக்கு ரெண்டு பொண்கள் இருக்கறப்போ எனக்கென்ன வருத்தம்? "

சாரி சுப்ரமண்யா! நாங்க தோத்துட்டோமா இல்ல ஏமாந்துட்டோமான்னு தெரியலை. உனக்கு இதைக்கூட பண்ண முடியலை. சாரி...வெரி சாரி....

நான் கரைந்து அழுதேன். தூங்காத இரவு அது. (இன்றுவரை அந்த வேதனையும் வலியும் இருக்கத்தான் செய்கிறது.)

"சாரிமா என்னால எதுவுமே பண்ண முடியலை." வித்யா என்னிடம் மன்னிப்பு கேட்டாள். நான் அவளிடம் சொன்னேன். "போகட்டும். என் விஷயத்துல ஏமாந்துராதே. உன் உரிமை அது." என்று.

விவேக்கின் பெண் தன் தகப்பனுக்கு காரியங்கள் செய்தது மிகப்பெரிய மன நிறைவைத் தந்தது.

பெண் மகாசக்தி. அதை நன்கு உணர்ந்தும்கூட அதன் காரணமாகவே அவளை உதாசினம் செய்வோரும் எக்காலத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்பதிவு யாரும் அழுவதற்காக அல்ல, சிந்திப்பதற்காக.
Vidya subramanian


சங்கிகள் எப்போதும் அசிங்கமானவர்களே!

 


நடிகர் விவேக்கின் மரணத்தை சங்கிகள் எப்படி அணுகினார்கள் என்பதற்கு இரண்டு மாதிரிகள் கீழே




மரணத்தில் மகிழ்வது சங்கிகளுக்கு புதிதல்ல.

தமிழகத்தில் கலைஞர் மறைவின் போதும் கர்னாடகத்தில் எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி மறைவின் போதும் சங்கிகளின் அசிங்கம் உச்சத்திற்குப் போனது.

சங்கிகள் திருந்துவார்கள் என்று யாராவது எதிர்பார்த்தால் அது மூட நம்பிக்கை. 

தலைவன் எப்படியோ தொண்டர்கள் அப்படியே.

மோடியின் சீடர்களிடம் மட்டும் நீங்கள் எப்படி நாகரீகத்தை எதிர்பார்க்க முடியும்!

Monday, March 29, 2021

அருகதை கிடையாது வானதி மேடம்

வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராமன் அவர்களின் முகநூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

நான் சொல்ல வருவதும் அதைத்தான்.

வானதி சீனிவாசன் மட்டுமல்ல, பாஜகவில் உள்ள யாருக்குமே யாரையும் குறை சொல்ல அருகதை கிடையாது. 

காஷ்மீரில் கொல்லப்பட்ட ஆசிபா முதல் உத்தரப் பிரதேச பாலியல் கொலைகள் வரை குற்றவாளிகள் பாஜகவினரே. அந்த குற்றவாளிகளை கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பாதுகாக்கும் பொறுக்கிக் கட்சியும் அதுதான். 



ராதாரவியை தனக்கு பிரச்சாரத்தில் பேசவைத்துவிட்டு, ஆ.ராசாவை எதிர்த்து ஆர்பாட்டம் செய்வதற்கெல்லாம் வெட்கப்படனும் வானதி!

இந்த ராதாரவி, நடிகை நயன்தாராவை விமர்சித்தற்காக திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். நீக்குவதற்கு முன்பாக பெண்களை இழிவுபடுத்திவிட்டார் என நீங்களெல்லாம் குதித்தீர்கள். நீக்கிய பின்னர், ராதாரவியை தங்கள் கட்சியில் இணைத்துக்கொண்டு, வெட்கமே இல்லாமல் ஓட்டு கேட்டு வருகிறீர்கள்.

ஆ.ராசா பேசியதற்கு அந்த கட்சியின் தலைவரும் கண்டித்துள்ளார். மகளிர் அணி செயலாளரரும் கண்டித்திருக்கிறார்.இணையத்தில் எதிர்கட்சி பெண் தலைவர்களை இழிவாக பேசிய உங்கள் கட்சியினரை இதுவரை கண்டித்திருக்கிறீர்களா?

கனிமொழியை கள்ளக்குழந்தை என்றானே உங்கள் கட்சியின் காரைக்குடி வேட்பாளர், எச்.ராஜா, எங்கே கண்டித்தீர்கள்? நீங்களும் தமிழிசையும் ஒரு நாள் கூட கண்டித்ததில்லை.

உங்கள் கட்சியின் மதன் ரவிச்சந்திரன், மாரிதாஸ் ஆகியோர் தோழர் சுந்தரவள்ளியை ஆபாசமாக பேசினார்களே அப்போது எங்கே சென்றீர்கள்?

அதற்கெல்லாம் இது சமம் என்பது என் வாதமல்ல. ஆனால், இதை விமர்சிக்க ஒரு சதவீதம் கூட உங்களுக்கு உரிமையே இல்லை.ஏனெனில் ஆர்.எஸ்.எஸ் எனும் பெண்கள் விரோத, மனித குல விரோத அமைப்பினை தங்கள் தாயாக நீங்கள் அறிவித்துள்ளீர்கள்.

உங்களுக்கு அருகதை இல்லை.





Thursday, February 4, 2021

இர்ஃபான் பந்தில் எகிறியது சச்சின் ஸ்டம்ப்

 


அதெப்படி வெளிநாட்டு பாடகி, இந்திய விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி கருத்து சொல்லலாம் என்று சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட சில பிரபலங்களை பில்லா ரங்கா கூட்டாளிகள் ட்வீட் செய்ய வைத்துள்ள நிலையில் இன்னொரு கிரிக்கெட் வீரரான இர்ஃபான் பதான், ட்விட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார்.


"அமெரிக்காவில் ஒரு காவலரால் ஜார்ஜ் ப்ளெய்ட் கொடூரமாக கொல்லப் பட்டபோது நம் நாடு மிகச் சரியாக தன் துயரத்தை வெளிப்படுத்தியது" என்று எழுதி விட்டு "சும்மா சொன்னேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இர்ஃபான் பதான் வீசிய இந்த பந்தில் சச்சினின் மூன்று ஸ்டெம்புகளும் எகிறி எங்கோ விழுந்து விட்டது.

சுயநலமிக்க கோழைகள் மத்தியில் இப்படியும் ஒருவர்.

பிகு: அவரது பதிவுக்கு பதில் சொல்ல முடியாத கேடு கெட்ட காவிக் கயவர்கள் கூட்டம் அவரது மதத்தை வைத்து அசிங்கமாக திட்டிக்கொண்டு இருக்கிறது.

பன்றிகள் வேறெங்கே உழலும் !  👿👿👿👿👿👿👿👿👿👿

Sunday, January 17, 2021

அதே நாடகம் - ஆட்கள் வேறு


2014 ம் வருடம் விருத்தாச்சலத்தில் எங்கள் கோட்டச்சங்க மாநாடு நடைபெற்ற போது "ராஜா-மகராஜா" என்றொரு நாடகம் போட்டோம்.

நரேந்திர மோடி எப்படி மன்மோகன் சிங்கை நல்லவராக்குகிறார் என்று சொல்லும் நாடகம் அது. அந்த நாடகத்தை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

இப்போது அதைப் பேச வேண்டிய அவசியம் என்ன என்றொரு கேள்வி வரலாம்!

விஷமூர்த்தியை விமர்சிக்கிறவர்களில் சிலர் (டி.டி.வி.தினகரன் உட்பட) குருமூர்த்தியால் சோ வுக்கு களங்கம், குருமூர்த்தியால் சோ மாதிரி ஆக முடியாது என்றெல்லாம் சொல்வதைப் பார்த்த போது பழைய நாடகம் நினைவுக்கு வந்தது. 

குருமூர்த்தி ஓவராக போனதால் அவரை விட நல்லவராகி விட்டார் சோ. அவ்வளவுதான் அதற்கு மேல் அவரும் வொர்த் அல்ல.

பிகு: இறந்து போனவரை விமர்சிப்பது நாகரீகமா என்று எனக்கு அறிவுரை சொல்லும் முன் வி.பி.சிங் இறந்த போது அது நாட்டுக்கு நல்லது என்று சொன்னவர் சோ என்பதை மனதில் கொள்ளவும்.

இப்போது நாடகம்

நேர்மையற்றவர்களைப் பற்றி நேர்மையாக. - ஒரு நாடகம்



விருத்தாச்சலத்தில் நடைபெற்ற எங்களது கோட்டச்சங்க மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற மக்கள் ஒற்றுமை கலை விழாவில் அரங்கேற்றப்பட்ட நாடகம் “ராஜா மகாராஜா”. நல்ல வரவேற்பு கிடைத்ததால் நேற்று வேலூரில் நடைபெற்ற இன்சூரன்ஸ்துறை பாதுகாப்பு வேலூர் மாவட்ட கருத்தரங்கிலும் நடத்தப்பட்டது.

அந்த நாடகம் இதோ வலைப்பக்க வாசகர்களுக்காக

ராஜா, மகாராஜா
பின்னணியில் ஒலிக்கும் குரல்:

ராஜா,மகாராஜா – இதோ உங்களுக்காக வேலூர் மையத்தில் பணியாற்றும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் வழங்குகிறார்கள். இது சரித்திர நாடகமா இல்லை சமூக நாடகமா? மனோரஞ்சிதப் பூவை நீங்கள் என்ன நினைத்து முகர்ந்து பார்க்கிறீர்களோ, அதைப் போன்ற வாசம் தருமாம். அது போலத்தான் இந்த நாடகம் சரித்திர நாடகமா இல்லை சம கால நாடகமா என்பதை நீங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம். ஆனால் காலங்கள் மாறினாலும் மக்களின் துன்பங்கள் மாறவில்லை. நேர்மையற்றவர்களின் செயல்களை நேர்மையாகச் சொல்லும் “ராஜா மகாராஜா” இதோ உங்களுக்காக.

காட்சி 1 சாலை

எங்கே செல்லும் இந்த பாதை?
      
என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க தலையில் சுமையை சுமந்து கொண்டு ஒருவர் நடந்து வருகிறார்.

எதிரில் வரும் இன்னொருவர்.

பயணி 2: “என்ன மச்சான்” ? மூட்டையை தலையில  சுமந்து போய்க்கிட்டு இருக்க? உன் டி.வி.எஸ் பிப்டிக்கு என்னாச்சு?

பயணி 1: இந்த படுபாவி ராஜா, வாரத்துல ஒரு நாள் பெட்ரோல் விலையை ஏத்திக்கிட்டே இருந்தா என்ன செய்ய முடியும்? அதான் வண்டியை வித்துட்டேன்.

பயணி 2: சரி இப்ப எங்க போறே?

பயணி 1 : குடியாத்தம் வரைக்கும்

பயணி 2: நடந்தேவா?

பயணி 1: ஆமாம் பஸ்ஸில போக முடியாமா ட்ரெயினில சீப்பா இருக்குனு அதில போனா, அதயும் நம்ம ராஜா விலையேத்திட்டான். எல்லாம் நம்ம தலைவிதி. இப்படி ஒரு ராஜா கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டியிருக்கு. நமக்கெல்லாம் ஒரு நல்ல காலம் எப்போதான் வருமோ?
     
பயணி 2: இவன் போயி இன்னொரு ராஜா வந்தா வேணா நடக்கலாம். சரி பாத்து போ, நடந்து போறதுக்குக் கூட டோல்கேட்டுல காசு கேட்டுற போறான். ரோடு குண்டும் குழியுமா இருந்தா கூட காசை மட்டும் மாசம் ஒரு தடவை ஏத்திடுவான்.

காட்சி 2
 இடம் அரசவை

ராஜாவும் மூன்று மந்திரிகளும் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒரு நாற்காலி காலியாக இருக்கிறது.

வாயிற்காப்பாளன் : அரசே ; உங்களைப் பார்க்க பேரரசரின் தூதர் வந்துள்ளார்.

ராஜா: அவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். அவர் வந்தவுடன் எல்லோரும் சல்யூட் அடித்து வணக்கம் சொல்லுங்கள்.

தூதர் வருகிறார்.
       
அனைவரும் எழுந்து மிலிட்டரி சல்யூட் அடித்து

வணக்கம் ஐயா

தூதர் காலியாக இருந்த நாற்காலியில் உட்காரப் போகிறார். அரசர் தனது சிம்மாசனத்தில் அவரை உட்கார வைத்து தரையில் அமர்கிறார். மந்திரிகளும் அப்படியே தரையில் அமர்கிறார்கள்.

மந்திரி 3 (மனதிற்குள்) தலையெழுத்துடா சாமி, இந்தாளால நாமெல்லாம் வேற தரையில் உட்கார வேண்டியிருக்கு

தூதர் ; இந்த மரியாதைக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லை.


ராஜா:  எஜமான் ஏதோ கோபமா இருக்கீங்க போல, ராஜான்னு நான் பெயருக்கு இருந்தாலும் நீங்க சொல்றதைத்தானே செய்யறேன். அதுக்கே என்னை அவனவன் கன்னாபின்னான்னு திட்டறாங்க.

தூதர் : உங்க நாட்டில யாரும் அரிசி தயார் செய்யக் கூடாது. நான் அனுப்பற ப்ரெட்டத்தான் சாப்பிடனும்னு சொன்னோம்.

மந்திரி : எங்க ஊர்ல இப்பல்லாம் யாரும் காய்ச்சலுக்குக்கூட பிரெட் சாப்பிடறதில்லை.

மந்திரி 2 : நீ வேற, சும்மா இருய்யா, அப்படியெல்லாம் கிடையாது. எங்க பசங்களையெல்லாம் இப்போ நூடுல்ஸ், பீஸா இதை மட்டுமே சாப்பிட பழக்கிட்டு இருக்கோம்.

தூதர் : உங்க நாட்டுல இருக்கிற எல்லா பாங்கு, இன்சூரன்ஸ் எல்லாத்தையும் இடிக்கச் சொன்னோம் இல்லை.

மந்திரி 3 : (மனதிற்குள்) அதெல்லாம் அவங்க நாட்டுல இடிபட்டு இருக்கு. அதனால இங்கயும் இடிக்கச் சொல்றான்.

பின்பு சத்தமாக:   நல்ல மனசுக்காரன் சார் நீங்க.

மந்திரி : ஏரியில பில்டிங் கட்டி ஏற்கனவே இடிஞ்சு விழுந்து கிட்டு இருக்கு. இது போதாதா?

தூதர் : உங்க ஊர்ல எதுக்குய்யா பொட்டிக்கடை? உங்களுக்கெல்லாம் பீடி, சிகரெட் விற்கத் தெரியுமா? இல்லை கூல் ட்ரிங்க்ஸ் செய்யத் தெரியுமா? அப்புறம் எதுக்கய்யா விற்கறீங்க. இனிமே இங்கே எல்லாம் நாங்கதான்.

கோபமாக அவர் வெளியேறுகிறார்.
      
மந்திரி 1 : ராஜா அவர் சொன்னதை செய்யப் போறீங்களா?

மந்திரி 2 : வேற வழி?

மந்திரி : வேணாம் ராஜா, இப்பவே உங்களை மோசமா திட்டிக்கிட்டு இருக்காங்க, இதெல்லாம் செஞ்சா அடிக்கவே வந்துடுவாங்க.

ராஜா: நான் வெளிநாட்டுல படிச்சவன். அவங்களாலதான் ராஜாவா இருக்கேன். எனக்கு மட்டும் நல்லவன்னு பெயர் வாங்க ஆசை இருக்காதா? என்னை எல்லாரும் திட்டறாங்கனு தெரியும். ஆனா மக்களுக்கு நல்லது செய்யனும்னு தோணவே மாட்டேங்குதே.

பேசும் போதே தொண்டை அடிக்கிறது.

மந்திரி 3: இதுக்குதான் எப்பவும் போல பேசாம இருக்கனும்.. எப்பவாவது பேசினா இப்படித்தான் ஆகும்.
     
மந்திரி 2 : யாரங்கே மருத்துவரைக் கூப்பிடுங்கள்

ராஜா : வேண்டாம். என்னோட முடிவு நெருங்குது. இளவரசனை வரச் சொல்லுங்க.

இளவரசன் வருகிறார்.

மந்திரி : (மனதிற்குள்) வரான் பாரு, தாடி வச்ச கேடி, இவனும் இவன் பேச்சும், இவன் ட்ரெஸ்ஸும், இவனெல்லாம் இளவரசன்.


இளவரசன்: நைனா என்னாச்சு உனக்கு?

ராஜா: மகனே நான் மேலே போகிறேன். எனக்கு ஒரே ஒரு ஆசை. அதை நிறைவேற்றுவாயா?

இளவரசன் : நைநை னு பேசாத, விஷயத்தை சொல்லு நைனா.

ராஜா : இந்த நாட்டு மக்களெல்லாம் என்னை ரொம்ப கெட்டவன்னு பேசறாங்க. அவங்க எல்லாம் என்னை நல்லவன்னு சொல்லனும்.
      
இளவரசன் : அவ்வளவுதானே, விடு நான் பாத்துக்கிறேன்.

ராஜா தலை தொங்குகிறது.
காட்சி 3
இடம் :சாலை


“இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே” என்ற பாடல் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.

பயணி : என்ன மச்சான், ரொம்ப சந்தோஷமா இருக்க?
           
பயணி : ஒழிஞ்சான்யா ராஜா. இன்னிக்கு புது ராஜா பதவியேற்கிறாரு. இனிமே எல்லாம் மாறிடும். எல்லாம் மாறிடும்.

பயணி 2 ; அப்படிங்கறே?

பயணி : ஆமாம் மாப்ள, இளவரசன் ரொம்ப நல்லவராம், வல்லவராம், பலசாலியாம், நம்ம ஊரு ஆளுங்க போன மாசம் பாலாறு வெள்ளத்தில மாட்டிக்கிட்டபோது ஒத்தக்கையாலயே நூறு பேரை தூக்கிக்கிட்டு வந்தவராம்.

பயணி 2 : ஏம்பா உனக்கு என்ன மூளை வயித்துலயா இருக்கு? பாலாறுல தண்ணி வந்தே பத்து வருஷமாச்சு, இதுல போன மாசம் வெள்ளம் வந்ததாம். அதில இவரு நூறு பேரை காப்பாத்தினாராம், அதுவும் ஒத்தக்கையால? காஷ்மீருல போய் காப்பாத்தச் சொல்லேன்.

பயணி 1 : ஆமாம் இல்லை? நான் கூட ஏமாந்துட்டேனே.

பயணி : நீ மட்டுமா ஏமாந்த ?
காட்சி 4
இடம் அரசவை

மந்திரி 1 : நமது அரசர் மறைவிற்குப் பின் இளவரசர் அரசராக முடி சூடப் போகிறார். இந்த கிரிடத்தை அவருக்கு சூட்டப் போகிறேன்.


இளவரசர் ; ஸ்டாப், ஸ்டாப். என் தலையில நீ கிரீடத்தை வைச்சு என்னை விட பெரியாளுனு காண்பிச்சுக்கப் பாக்கிறயா? எந்த பெரிசுக்கும் என் கிட்ட வேலை இல்லை. வயசான ஆளுங்கள்ளெல்லாம் வீட்டுக்குப் போய்டுங்க. யாராவது மந்திரி பதவி, முந்திரி பதவி னு கேட்டு வந்தீங்க, தொலைச்சிடுவேன்.

இளவரசரே கிரீடத்தை தன் தலையில் வைத்துக் கொள்கிறார்.

எங்கப்பாதான் ராஜா. ஆனா நான் இனிமே மகாராஜா. எல்லோரும் அப்படித்தான் கூப்பிடனும். நான் மகாராஜாவாக வேண்டும் என்று ஜலகண்டேஸ்வர் என் கனவில் வந்து கெஞ்சிக் கேட்டுக் கிட்டாரு. அதனால் நான் மகாராஜா.


மந்திரி :  மனதிற்குள் ( போன ராஜா பேசாம சாகடிச்சான், இவன் பேசியே சாகடிக்கிறான்) வணக்கம் மகாராஜா

மகாராஜா ; என்னது வணக்கமா? ஆப் கி சர்க்கார் ஹிந்துஸ்தான் சர்க்கார். நமஸ்தே மகாராஜா னுதான் சொல்லனும்.

மந்திரி 3 : உங்கள் வரவு நல்வரவாகட்டும் மன்னர்மன்னா?

மகாராஜா: ஏன்யா உங்களெக்கெல்லாம் அறிவு கிடையாதா? இப்பதான சொன்னேன். ஸ்வாகதம்னு சொல்லுய்யா. புதுசா மகாராஜாவிற்கு கிரீட உத்ஸவ்  நடந்திருக்கு, யாரையாவது பாடச் சொல்லுங்க.

மந்திரிகள் இருவருமே எழுந்து கொண்டு பாடுகிறார்கள்.

“ராஜா, ராஜாதிராஜன் இந்த ராஜா, கூஜா, தூக்காதே, வேறு எங்கும் கூஜா, நேற்று இல்லை, நாளை இல்லை, எப்பவும் நீ ராஜா, கோட்டையில்லை, கொடியுமில்லை, அப்பவும் நீ ராஜா”

மகாராஜா: நிறுத்து நிறுத்து, கோட்டையில்லை, கொடியில்லையா? என்னய்யா எங்கப்பா எல்லாத்தையும் தொலைச்சிட்டுரா இல்லை வித்துட்டாரா?

சரி எங்கப்பா அவரை நல்லவன்னு சொல்லனும்னு சொன்னாரா, அதுக்கு ஒரு ஐடியா குடுங்க.

மந்திரி : மகாராஜா, மக்களுக்கு விலையில்லா காற்று, விலையில்லா சுடுகாடு இதையெல்லாம் வழங்கி இத்திட்டங்களுக்கு அவர் பெயரை வைத்து விடலாம்.

மகாராஜா : இங்க பாரு இந்த ஆட்சியில எது நடந்தாலும் அது என் பெயரில்தான் இருக்கனும். அப்பா திட்டமில்லாம் கிடையவே கிடையாது.

வெளிநாட்டு தூதர் வருகிறார்.

தூதர் : மகாராஜா, உங்கள் தந்தை இறந்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன்.

மகாராஜா : நானே வருத்தப்படல, உனக்கென்ன வருத்தம்?  நீ விஷயத்துக்கு வா

தூதர் : உங்கள் அப்பாவிடம் நான் சில கோரிக்கைகளை

மகாராஜா : அந்த பெட்டிக்கடை, பாங்க், இன்சூரன்ஸ் இதெல்லாம்தான? இங்க பாரு, என் வழி தனி வழி. உனக்கு என்ன வேணும்மோ அதை நான் செய்வேன். அதையெல்லாம் நீ கேட்டு நான் செய்யறதா இருக்காது. நானே செய்வேன்.

தூதர் : இதை, இதை, இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்

தூதர் : நம்ம வேலை ஈஸியா முடிஞ்சுது. இவன் அப்பனை விட பெரிய லூசா இருக்கானே!


மந்திரிங்களா, உடனே எல்லா பெட்டிக்கடைகளையும் மூடிடுங்க, எல்லா பேங்கு, இன்சூரன்ஸ் கம்பெனிங்களயும் இடிச்சுடுங்க,  இந்த நாட்டில மக்கள் உயிர் வாழறதே என்னோட கருணையாலதான். அதனால உயிர் வரி கட்டனும்னு ஒரு தண்டோரா போட்டுடுங்க. பாலாறுல எப்பயாவது தண்ணி வந்தா அதுல குளிக்க வரி கட்டனும். எருமை மாட்டை குளிப்பாட்ட எக்ஸ்ட்ரா வரி. நான் எவ்வளவு நல்லவன்னு போய் எல்லா ஸ்கூல் பிள்ளைங்க கிட்டயும் போய் சொல்லுங்க.

மந்திரி : அடப்பாவி பதவியேற்ற முதல் நாளிலேயே இப்படி என்றால், போகப் போக? இவனை விட இவன் அப்பா நிஜமாவே நல்லவன்தான்.

பின்னணியில் குரல் ஒலிக்கிறது.

முதல் நாளா இல்லை முடிந்து போன நூறு நாட்களா என்பதல்ல நம் பிரச்சினை. முகங்கள் மாறலாம். ஆனால் அந்த முகங்களுக்குப் பின்னே இருக்கிற மூளைகள் மோசமானதாக உள்ளவரைஅவை முதலாளிகளை மட்டுமே நேசிக்கிறதாக உள்ளவரை மக்களின் துயரங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

மக்களை உண்மையாகவே நேசிப்பவர்கள் யார் என்பதை மக்களும் இனியாவது புரிந்து கொண்டு அவர்களை ஆதரிக்க  வேண்டும். இல்லையென்றால் இந்த மகாராஜாக்களின் கொட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். என்ன செய்யப் போகிறோம்? வெற்று முழக்கங்களுக்கு மயங்கிய பேதைகளாக இன்னும் எத்தனை நாட்கள் இருக்கப் போகிறோம்.? சிந்தியுங்கள், உங்களுக்காகவும், இந்த தேசத்திற்காகவும் கூட. .

பயணி 1 : தோழர் சி.ஸ்ரீதர்
பயணி 2 : தோழர் வி.திருமாவளவன்
ராஜா     :தோழர் ஆர்.குமரேசன்
மகாராஜா :தோழர் சி.சோமசுந்தரம்
வாயிற்காப்போன் : தோழர் சி.கணேசன்
மந்திரி 1  : தோழர் சி.சேகரன்
மந்திரி 2  : தோழர் ஜி.ரவி
மத்திரி 3 :  தோழர் பி.எஸ்.பாலாஜி
தூதர்     : தோழர் கே.அதாவூர் ரஹ்மான்