Showing posts with label அற்ப மனிதர்கள். Show all posts
Showing posts with label அற்ப மனிதர்கள். Show all posts

Tuesday, December 31, 2024

ஒலிம்பிக்கில் வென்றாலும் NO விருது

 


பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய பதக்கப்பட்டியலை போணி செய்தவர் ஹரியானாவைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர் மனு பாக்கர். அவர் பெற்ற வெண்கல பதக்கமே இந்தியாவுக்குக் கிடைத்த முதல் பதக்கம். அவர் இன்னொரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

அப்போது மோடி அந்த இளம் பெண்ணோடு வீடியோ காலெல்லாம் பேசி அதை ட்விட்டரில் எல்லாம் பகிர்ந்து கொண்டு சீன் போட்டார். அவர் பகவத் கீதை பற்றி குறிப்பிட்டார். அதனால் இந்துத்தவ பெண் என்று சங்கிகளும் சீன் போட்டார்கள்.

இந்திய அரசின் இளைஞர் நலத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் அந்த குறிப்பிட்ட ஆண்டில் விளையாட்டுத்துறையில் சாதனை செய்த இளைஞர்களுக்கு கேல்ரத்னா விருது கொடுக்கும். 25 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசும் அடங்கியது இந்த விருது.

1991ல் நரசிம்மராவ் அரசால் ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது என்று அறிவிக்கப்பட்டு கொடுக்கப்பட்ட விருதின் பெயரில் மோடி அரசு ராஜீவ்காந்தியின் பெயரை அகற்றி தயான்சந்த் கேல்ரத்னா விருது என்று மாற்றி விட்டார்கள் என்பது தனிக்கதை.

இப்போதைய பிரச்சினைக்கு வருகிறேன்.

இந்த வருட கேல் ரத்னா விருதுப் பட்டியலில் மனு பாக்கரின் பெயர் இடம் பெறவில்லை. அவர் விண்ணப்பிக்கவில்லை என்று அமைச்சகம் காரணம் சொன்னது. “நான் உரிய முறையில்தான் விண்ணப்பித்தேன். பிச்சை எடுத்தால்தான் விருது கிடைக்கும் என்றால் எதற்கு பதக்கங்களை வெல்ல வேண்டும்” என்று அவரின் அப்பா கோபமாக கேட்டுள்ளார்,

பின் என்ன காரணம்?

ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு அவர் சோனியா காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது ஒன்று போதாதா? அற்பர்கள் அரசு அற்பத்தனமாக முடிவெடுத்து விட்டது.

கடைசிச் செய்தி

நான் விண்ணப்பித்த முறையில் ஏதாவது தவறு இருக்கலாம். அதனை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்று மனு பாக்கர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த அரசினை முறைத்துக் கொண்டால் தன் எதிர்காலம் என்னவாகும் என்பதை அறியாதவரா அவர்! வினேஷ் போகத் பதக்கம் வெல்ல முடியாமல் நடந்த சதி பற்றி அவருக்கும் தெரிந்திருக்குமல்லவா!

ஒரு கேள்வி

ஒரு சாதனையாளர் தனக்கு விருது வேண்டுமென்று அவர்தான் விண்ணப்பிக்க வேண்டுமா? அந்த வேலையைக்கூட தானாக செய்ய முடியவில்லை என்றால் பின் என்ன எழவுக்கு ஒரு அமைச்சகம், அமைச்சர் மற்றும் அரசு?

Wednesday, March 29, 2023

அற்பத்தனம் "வெறும் நரேந்திரா"

 


தீர்ப்பு வந்த மறுநாள் எம்.பி பதவி பறிக்கப்படுகிறது. எம்.பி பதவி பறிக்கப் பட்ட மறுநாளே, அவர் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப் படுகிறது.

இந்த வேகமே சொல்கிறது பாஜக அரசின் பழி வாங்கும் குணாம்சத்தையும் "வெறும் நரேந்திரா"வின் அற்பத்தனத்தையும்.

தலைவன் போலவே தொண்டர்களும் கேடு கெட்ட அற்பர்கள் என்பதற்கு "மத்யமர் ஆட்டுக்காரன்" குழு பதிவு ஒன்று மாதிரிக்காக.


ஆனாலும் ஒரு அதிசயம்.

அவர்கள் தரப்பிலேயே ஒருவர் இச்செயலை அற்பத்தனம் என்று ட்வீட்டியுள்ளார்.



ஆமாம், சுமந்துதான். அவராலேயே பொறுக்க முடியவில்லை. 

Saturday, December 10, 2022

ஆஜானின் குடிகார, பிச்சைக்கார சீடன்

 


குடிகாரக்கவி என்று பிரசித்தி பெற்ற ஆஜானின் குண்டர்படை தளபதி லட்சுமி மணிவண்ணனின் இரு முகநூல் பதிவுகள் கீழே.

பொருநை

 நகைப்பிற்குரிய ஏராளம் குளறுபடிகள். ஒரு இலக்கிய விழாவை இந்த திராவிட அரசால் திறம்படச் செய்ய இயலாது என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

 பள்ளிக் குழந்தைகளை வலிந்து அழைத்து வந்து அரங்குகளில் இறக்குகிறார்கள். வந்திருக்கும் கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே விளங்கவில்லை. குழந்தைகளிடம் தனியே அதற்கென்றே உரையாடுவது வேறு விஷயம். வழியின்றி பார்வையாளர்கள் என்கிற பெயரில் அவர்களை கொண்டு நிரப்புவது அராஜகம்

 இரண்டு அரங்குகளில் பங்கு பெற்றேன். அதில் ஒன்று கவிதை அமர்வு. மூன்று கவிஞர்கள் பங்கேற்றோம். அதில் சபரிநாதனுக்கு ஆறாயிரம் ரூபாய் ஊதியம். அதே அமர்வில் பங்கேற்ற எனக்கு மூவாயிரம். சபரிநாதன் பதறி இதை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். அதை என்னிடம் கொடுங்கள் என்றார். உங்களுக்கு கிடைத்தது உங்களுக்கு என்று அவருக்குச் சொன்னேன். அவர் கழுகு மலையில் இருந்து வருகிறார். நான் நாகர்கோயிலில் இருந்து சென்றிருக்கிறேன். முதலில் அரசு இப்படி எளிய கூலியை சரஸ்வதிக்குத் தருவதே தவறு .இப்படி தந்தால் ஒழுங்கு செய்யும் அதிகாரிகளுக்கும்,அவர்களுக்கு எடுபிடிகளாக காலங்காலமாக இருக்கும் இடதுசாரிகளுக்கும் வாக்தேவி பேரில் மதிப்பே உண்டாகாது. அதிலும் இடது வலது சாதி மத என்ஜிஓ என்னும் பாரபட்சங்கள். உண்மையில் இவை அசிங்கங்கள். இத்தகைய விழாக்களில் பத்தாயிரத்திற்கும் குறைவாக எழுதுகிறவர்களுக்கு கொடுக்க கூடாது. பாரபட்சம் கடைபிடித்தல் கூடவே கூடாது

 இந்த பாரபட்சம் எங்கிருந்து வருகிறது? இலக்கியத்தில் இருந்து அல்ல .இடதுசாரிகளே அரசின் பண்பாட்டு புரோக்கர்களாக இருக்கிறார்கள். இடதுசாரிகள் நுட்பமான பாரபட்சம் கொண்டவர்கள். இடதுசாரிகளுக்கு இந்த பிச்சை வருமானம் அதிகமாக இருக்கும் படி அமைப்பை அவர்கள் வளைத்துக் கொள்கிறார்கள். இத்தகைய குறைபாடுகள் இலக்கியத்தின் நன்மதிப்பை தரம் இறக்கக் கூடியவை. கடமைக்காக அரசு இலக்கிய விழாக்கள் உருவாக்கி இலக்கியத்தை இழிவு செய்யக் கூடாது

இரண்டாவது அமர்வுக்காக இன்று பணமே தரவில்லை. இரண்டு அட்டைத் தட்டிகள் தந்திருக்கிறார்கள். அதை வைத்து நான் என்ன செய்ய? தமிழக முதல்வருக்கு தபால் செய்து விடட்டுமா?

 *********************************************************************

திருநெல்வேலி ஆட்சியரிடம் இருந்து பொருநை இலக்கியத் திருவிழாவில் பங்கேற்றமைக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்கள். அதற்கு நான் எழுதி அனுப்பிய பதில் கடிதம் இது

 அன்புடன் உங்களுக்கு,

 வணக்கம். இந்த நன்றி அறிவிப்பினை நான் ஏற்கவில்லை. ஒரே அரங்கில் பங்கேற்றவர்களிலேயே தாங்கள் தந்த சன்மானத்தில் பாகுபாடு காட்டினீர்கள். கவிதை அரங்கில் நாகர்கோயிலில் பணிபுரியும் கழுகுமலையைச் சார்ந்த சபரிநாதனுக்கு ஆறாயிரம் தரப்பட்டது. அருகில் இருந்த எனக்கு மூவாயிரம் தரப்பட்டது. சன்மானத்தில் இத்தகைய பாகுபாடுகளை ஒரு எழுத்தாளராக நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

 இரண்டாம் நாள் நாஞ்சில் இலக்கியம் அமர்வு என்னுடைய தலைமையில் நடைபெற்றது. அதற்கு எனக்கு சன்மானம் வழங்கப்பட வில்லை. பிறர் முன்னிலையில் எனக்கு அவமானமும் தலைகுனிவும் ஏற்பட்டது.    இத்தனைக்கும் நான் இரண்டாம் நாளுக்கு மட்டுமே வர சம்மதம் தெரிவித்து இருந்தேன்.

 எனவே தங்களின் பாகுபாடான நடத்தைக்கு எனக்கு விளக்கம் தேவை. அது எனக்கு ஏற்புடையதாக இல்லை ஆயின் நீங்கள் பொருநை அரங்குகளில் தந்த இரண்டு அட்டைத்தட்டிகளையும் பணம் மூவாயிரத்தையும் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி விடுவேன் என்பதை தாங்களுக்கு தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

 உண்மையுள்ள,

லக்ஷ்மி மணிவண்ணன்

*********************************************************************************

 பத்தாயிரம் ரூபாய்க்கு சரக்கு வாங்கி அடித்து மட்டையாக முடியாத ஆத்திரத்தை இந்த குடிகார பிச்சைக்கார கவிஞன் இடதுசாரிகள் மீது வெளிப்படுத்துகிறான்.  இதுவே இவனுக்கும் ஆறாயிரம் ரூபாய் கொடுத்திருந்தால் மாவட்ட  ஆட்சியரை பாராட்டி  கவிதை பாடியிருப்பான்.

 இது போன்ற  குடிகார பிச்சைக்காரனையெல்லாம் இலக்கிய விழாவுக்கு அழைத்து ஒரு அமர்வுக்கும் தலைமை தாங்க வைத்த நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்.  வீட்டின் அலமாரியில் வைக்க வேண்டிய நினைவுப்பரிசு இவனுக்கு  அட்டைத் தட்டியாகத் தெரிகிறது, நாயிடம் கிடைத்த தேங்காய் போல . . .

 பிகு: எழுதி நாளாச்சு. ஆஜான் சீடன் யோக்கியதை தெரிய வேண்டும் என்பதால் வெளியிடுகிறேன்.

Sunday, February 13, 2022

இவனெல்லாம் முதல் மந்திரி!


 அஸ்ஸாம் முதல் மந்திரியை பதவி நீக்க வேண்டும் என்று தெலுங்கானா முதலமைச்சர் கூறியதாக படித்தேன்.

தெலுங்கானாவுக்கும் அஸ்ஸாமுக்கும் சம்பந்தமே இல்லையே என்ற சிந்தனையில் தேடினால் விஷ(ய)ம் தெரிந்தது.

"பாலக்கோடு துல்லிய தாக்குதலுக்கு ராகுல் காந்தி ஆதாரம் கேட்கிறார். நீ ராஜீவ் காந்தியின் மகன் தானா என்பதற்கு எப்போதாவது நாங்கள் ஆதாரம் கேட்டுள்ளோமா?"

என்று அந்த முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா  பேசியுள்ளான்.

" குழந்தைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைதான் குஜராத் அகதிகள் முகாம்' என்று ஆபாசமாக பேசிய கேடு கெட்ட மனிதனை பிரதமராகக் கொண்ட கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் மட்டும் எப்படி யோக்கியமாக இருப்பான்!!!

Tuesday, August 3, 2021

மோடியின் சாதனையில்லை முட்டாள்களே!

 


ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் ஐந்து நாடுகள். 

அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், சீனா ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே வீட்டோ அதிகாரம் கொண்ட அந்த ஐந்து நாடுகள்.

நிரந்தரமில்லாத உறுப்பினர்களாக பத்து நாடுகள் இரண்டாண்டு கால அளவிற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பத்து நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் கிடையாது. பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை ஏற்கும் பொறுப்பு ஒவ்வொரு மாதமும் சுழற்சி அடிப்படையில் அகர வரிசையில் ஒவ்வொரு நாட்டுக்கும் வழங்கப்படும்.

2021 - 22 காலகட்டத்திற்கு நிரந்தரமில்லாத உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறைப்படி இம்மாதத்திற்கு இந்தியா தலைமை. 

இதை ஒரு சங்கி எப்படி எழுதியுள்ளது என்றும் அதற்கு மற்ற சங்கிகள் எப்படி புளகாங்கிதம் அடைந்துள்ளது என்பதையும் பாருங்கள். 



மிகவும் கடுப்பாகி அங்கேயே ஒரு பின்னூட்டம் இட்டேன்.





இந்தியா இதற்கு முன்பாக ஏழு முறை இவ்வாறு இரண்டாண்டு கால நிரந்தரமில்லாத உறுப்பினராக

1950-1951,

1967-1968,

1972-1973

1977-1978,

1984-1985,

1991-1992,

2011-2012

இந்த காலகட்டம் எதிலும் பாஜக ஆட்சியில் இல்லை. ஆட்சியில் இருந்த யாரும் இதனை தங்கள் சாதனையாக பீற்றிக் கொண்டதும் இல்லை.

பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு மோடி தலைமை தாங்கினார் என்ற பீற்றல் வேறு ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் சார்பாக ஐ.நாவில் வேலை பார்க்கும் வெளியுறவுத்துறை அதிகாரி (Indian Foreign Service Officer)  செய்ய வேண்டிய வேலை இது. வேறு எந்த நாட்டு பிரதமரும் இப்படியெல்லாம் கீழிறங்கிப் போனதில்லை.

அற்பருக்கு வாழ்வு வந்தால் 15 லட்ச ரூபாய் கோட்டும் போடுவார். இது போல அற்ப சந்தோஷமும் அடைவார்.

இதையெல்லாம் சாதனை என்று பரப்புகிற, நம்புகிற முட்டாள்கள்தான் மோடியை விட அதிகம் எரிச்சலூட்டுகிறார்கள். 

Monday, May 10, 2021

அவர்களை ஏன் கை விட்டீர் கடவுளே?

 அவர்கள்

உனக்கு நீ பிறந்ததாக அவர்கள் நம்பும் இடத்தில் கோயில் கட்ட அங்கே இருந்த வழிபாட்டுத் தளத்தை இடித்தார்கள்.ரத்த ஆற்றை நாடெங்கும் ஓட வைத்தார்கள். நீதி பரிபாலண அமைப்பையே கட்டப் பஞ்சாயத்தாக மாற்றினார்கள்.



அவர்கள் 

அந்த மசூதிக்கு கீழே கோயில் உள்ளதா பாருங்கள் என்று உனக்கான அடுத்த சேவையை தொடங்கி விட்டார்கள்.



அவர்கள்

பெண்கள் கோயிலுக்கு வந்தால் உன் புனிதம் கெட்டு விடும் என்று உன்னை பலவீனமான ஒருவராக சித்தரித்து கலவரம் செய்தார்கள்.



அவர்கள்

வேல் பூஜை என்ற பெயரில் அட்டை வேலுக்கு தெருவோரத்திலும் செருப்பு வைக்கும் இடத்திலும் சமையலறையிலும் பூஜை செய்து வேலின் பெருமை என்ன என்பதை உலகிற்கு எடுத்துச் சொன்னார்கள்.

வேல் யாத்திரை என்ற பெயரில் தினம் தினம் கைதாகி கைதாகி விளையாடினார்கள். அந்த விளையாட்டை மக்கள் தவற விடக்கூடாது என்பதற்காக குத்து டேன்ஸ் போட்டார்கள்.



இப்படி உனக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்ட சங்கிகளையும் அவர்களின் அடிமைகளையும் ஜெயிக்க வைக்காமல் ஏன் கை விட்டீர்கள் கடவுளே?



உன் மீது நம்பிக்கையற்ற ஒருவரின் மனைவியின் வேண்டுதலை மட்டும் ஏற்றுக் கொண்டது தகுமோ?


Wednesday, August 26, 2020

வெட்டி பிரதமர். பரிதாப போட்டோகிராபர்

 


கொரோனா தொற்றிலிருந்து எப்போது விடுதலை?

பொருளாதாரம் நிமிருமா?

வேலையிழந்த தொழிலாளிகளின் வாழ்க்கையில் வசந்தம் ஏற்படுமா?



இப்படி எதைப் பற்றியும் கவலைப் படாமல் பொறுப்பில்லாத ஒரு பேர்வழி பிரதமராக அமர்ந்து கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். யானை மாலை போட்டு மகாராணியானது போல பதவிக்கு வந்தவர்தானே! இந்த மோசடிப் பேர்வழிக்கு எதைப்பற்றித்தான் கவலை இருக்கப் போகிறது!

இதிலே இந்த மனிதனை பலர் வெட்கமே இல்லாமல் புகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை நினைத்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. அவர்களை விடவும் பரிதாபமான ஒருவர் இருக்கிறார்.

அவர்தான் மோடியின் புகைப்படக்காரர்.

மோடியின் கோமாளித்தனமான போஸ்களை சிரிப்பு வராமல் புகைப்படம் எடுப்பது என்பது எவ்வளவு கஷ்டம்!

மயிலு, வாத்து, அடுத்து . . .

 


போட்டோவுக்கு போஸ் கொடுப்பதை மட்டுமே தொழிலாக வைத்துள்ள ஒரு வெட்டி வீரர், மயிலோடு போட்டோ எடுத்தார், அடுத்து வாத்தோடு போஸ் கொடுத்துள்ளார். இந்த மாதிரி ஒரு அற்ப மனிதரை உலகம் இதுவரை கண்டதில்லை.

அடுத்து யாருடன் போஸ் கொடுக்கப் போகிறார்?

பிகு: இன்று அகில உலக நாய்கள் தினம் என்று ஒரு செய்தி படித்தேன். ஆமாம். நிஜமாகத்தான். முதன் முதலாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட லைகா என்ற நாயின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது. 

பிகு 2 : இப்பதிவை எழுதி முடிக்கும் போது நினைவுக்கு வந்ததால் தனியாக ஒரு பதிவு அவசியமில்லை என்பதால் பின் குறிப்பாக எழுதினேன். வேறு ஏதாவது நீங்கள் புரிந்து கொண்டால் நான் பொறுப்பில்லை. 

பிகு 3 : மயில் போஸேக்கே மோடி ஒரு மனித நேயர் தெரியுமா, அவரை கிண்டல் செய்பவர்கள் சூடு, சொரணை இல்லாத ஈனப் பிறவிகள் என்று ஒரு உறவினர் முக நூலில் சண்டைக்கு வந்து விட்டார் (நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்: என்ற ரீதியில் சூடாக பதில் கொடுத்து விட்டேன் என்பது வேறு விஷயம்). இந்த வாத்து போஸைப் பார்த்து "வாத்துக்களுடன் ஒரு வாத்து" என்று யாராவது கமெண்ட் போட்டால் அவர் டென்ஷன் ஆகி விடுவாரே என்று எனக்கு டென்ஷனாக இருக்கிறது.