Showing posts with label சுரண்டல். Show all posts
Showing posts with label சுரண்டல். Show all posts

Saturday, September 25, 2021

அழகல்ல, ஆனந்தக் குளியலுமல்ல, அபாயம் . . .

 


இன்று காலை இந்து ஆங்கில இதழை புரட்டியதுமே முதல் பக்கத்தில் இருந்த புகைப்படம் இது.

ஆனந்த குளியலை அனுபவிக்கும் யானையின் படத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்கள் என்றுதான் முதல் பார்வைக்கு தோன்றியது.

ஆனால் விஷயம் வேறு.

ஒடிஷா மாநிலத்தில் மகாநதியை ஒரு யானைக் கூட்டம் கடந்து கொண்டிருந்த போது திடீர் வெள்ளம் வர ஒரு யானை மட்டும் கூட்டத்திலிருந்து பிரிந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. 

அதனை மீட்பதற்காகச் சென்ற அதிரடிப்படை வீரர்களோடு அரிந்தம்தாஸ் என்ற பத்திரிக்கை நிருபரும் இன்னொரு தொலைக்காட்சி நிருபரும் சென்றுள்ளனர்.

அவர்கள் சென்ற படகு கவிழ்ந்து போக அரிந்தம்தாஸ் மகாநதி ஆற்றின் சுழலில் சிக்கி இறந்து போயுள்ளார். அந்த தொலைக்காட்சி நிருபர் காணவில்லை.

யானைக்கு என்ன ஆனது என்பது பற்றிய மேலதிக விபரங்கள் அச்செய்தியில் இல்லை. 

யானையின் வலசைப் பாதைகள், குறிப்பாக மகாநதி ஆற்றங்கரையில் ஆக்கிரமிக்கப்பட்டு உல்லாச விடுதிகள் கட்டப்பட்டதால் யானைகள் திசை மாறி இது போன்ற சிக்கல்களில் மாட்டிக் கொள்வதாக சூழலியலாளர்கள் சொல்கின்றனர்.

இந்த பூவுலகம் தனக்கானது மட்டும் என்ற சிந்தனையை மனிதன் விட்டொழிக்க வேண்டும், எல்லா இயற்கை வளங்களையும் உடனடியாக பணமாக்க வேண்டும் என்ற வெறியை முதலாளித்துவம் கைவிட வேண்டும்.

அப்போதுதான் இது போன்ற அபாயங்கள் நின்று போகும்.

பிகு: காடு எப்படி சுரண்டப்படுகிறது என்பதை உணர "காடர்" எனும் சிறுகதைத் தொகுப்பை அவசியம் படியுங்கள்.

அந்நூல் பற்றிய அறிமுகம் இங்கே உள்ளது

Thursday, June 23, 2016

ஆனாலும் பாட்டி ஆக்ஷன் சூப்பர்




அலைபேசியிலிருந்த  பழைய புகைப்படங்கள், வீடியோக்களை நீக்கிக் கொண்டிருந்தேன். அப்போது தேர்தல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கஸ்தூரி பாட்டியின் வீடியோ கிடைத்தது. மீண்டும் ஒரு முறை போட்டுப் பார்த்தேன். 

இரு கட்சியின் விளம்பரங்களிலுமே பாட்டி சூப்பராகத்தான் நடித்துள்ளார். அவருக்கு கொடுத்த சம்பளமான ஆயிரத்து ஐநூறு ரூபாயும் ஆயிரம் ரூபாயும்தான் மிகவும் குறைவு. வெறும் இரண்டு வோட்டுக்கு செலவு செய்த தொகைதான்.

இந்த விளம்பரங்கள் மட்டுமல்ல, இன்னும் இரண்டு திரைப்படக் காட்சிகளும் வருகிறது. அதில் தனுஷ் நடிக்கும் படத்தில் பாட்டியின் நடிப்பு சூப்பரோ சூப்பர்.

இந்த காணொளியை அவசியம் பார்த்து ரசியுங்கள்.