Showing posts with label நிர்வாகம். Show all posts
Showing posts with label நிர்வாகம். Show all posts

Tuesday, April 14, 2026

காப்பான் வில்லனும் விவசாயிகள் விரோத நிர்மலா அம்மையாரும்

 


காப்பான் திரைப்படத்தின் ஒரு காட்சியை கீழேயுள்ள காணொளியில்  பாருங்கள். 



அந்த வில்லனின் இடத்தில் அதானி, அம்பானியை வைத்துப் பாருங்கள்.  வில்லனின் ஆலோசனையை மறுக்கும் ஆர்யா, சூர்யாவின் இடத்தில் தமிழக, கேரள முதல்வர்கள்,  கம்யூனிஸ்டுகள், விவசாய சங்கங்கள், எதிர்க்கட்சிகள்  ஆகியோரை வைத்துப் பாருங்கள்.

காட்சியின் இறுதியில் வில்லன் கொதிப்பது போலத்தான் இப்போது நிர்மலா அம்மையார் கொதித்துக் கொண்டிருக்கிறார்.

திரைப்படத்தின் இறுதியில் எப்படி வில்லனின் சூழ்ச்சி முறியடிக்கப்படுமோ அது போல நெல், கோதுமை உற்பத்தியை நாசமாக்க நினைக்கும் மோடி, நிர்மலா வகையறாக்களின் சதியும் தோற்றுப் போகும்.

பிகு: காப்பான் திரைப்படத்தை முதல் முறை பார்க்கும் போது பிரதமர் மோகன்லால் தாடி வைத்திருந்ததால் மோடியை குறிப்பிடுகிறார்களோ என்று நினைத்தேன். இன்னொரு முறை தொலைக்காட்சியில் பார்த்த போதுதான் நான் நினைத்தது தவறு என்று புரிந்தது. அது தனி பதிவாகவே எழுத வேண்டிய ஒன்று. 



Wednesday, February 18, 2026

அழிவை அழைக்கும் அழகிய நிக்கோபார் தீவுகள்


 












மேலே உள்ள அழகான படங்களை நன்றாக இன்னொரு முறை கூட பார்த்துக் கொள்ளுங்கள்.

அழகு சொட்டும் இந்த இடங்கள் இனி இதே போல இருக்குமா என்பது ஐயே.

பத்து லட்சம் மரங்களை வெட்டி, 130 ஏக்கர் காட்டை காலி செய்து 166 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு துறைமுகம், ஒரு விமான நிலையம், ஒரு மின் உற்பத்தி நிலையம், ஒரு பிரம்மாண்ட மால் உள்ளிட்ட நகரியம் கொண்ட 82,000 கோடி மதிப்பிலான மெகா திட்டத்தில் தாங்கள் தலையிட எந்த அவசியமும் இல்லை என்று தேசிய பசுமை தீர்ப்பாணையம் திட்டவட்டமாக கூறி விட்டது.

அதன் பொருள் என்ன?

நிக்கோபார் தீவுகளை உங்கள் இஷ்டத்திற்கு எப்படி வேண்டுமானால் அழித்துக் கொள்ளுங்கள் என்று பச்சைக் கொடி காட்டி விட்டார்கள்.

விமான நிலையம், துறைமுகம், மின் உற்பத்தி நிலையம் ஆகிய மூன்றுமே அதானி நடத்தும் முக்கியத் தொழில்கள் என்பதை நினைவில் கொள்க.

சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர்களின் ஆட்சேபத்திற்கு அரசு என்ன விளக்கம் கொடுத்தது என்பதைக் கூட சொல்ல அவசியமில்லை என்று தேசிய பசுமை ஆணையம் சொல்லி விட்டது.

கண்ணை விற்று சித்திரம் வாங்குவது போல இயற்கையை அழித்து விட்டு சுற்றுலாவை மேம்படுத்தப் போகிறார்களாம்! என்ன கேலிக்கூத்து இது!

புவி வெப்பமயமாதல் காரணமாக அந்தமான்-நிக்கோபார் தீவுகள், மாலத்தீவுகள்  ஆகியவை கடலில் முழுகிப் போகும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் விற்பன்னர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். 

பத்து லட்சம் மரங்களை வெட்டி அந்த அழிவை முன் கூட்டியே வரவேற்கிறது மோடி அரசு.

பிகு: ஒரு புறத்தில் பத்து லட்சம் மரங்களை வெட்டும் மத்திய அரசு இன்னொரு புறம் அழிவதற்காகவே பிறந்தது என்று மோடியால் சொல்லப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ ஆகியவற்றை "மரங்களை நடுங்கள்"  என்று அழுத்தம் கொடுப்பார்கள். அரசின் அரசியல் புரியாத இந்நிறுவனங்களும் தங்களது முன்னுரிமைப் பணிகளை கோட்டை விட்டு விட்டு "கிடப்பது கிடக்கட்டும், கிழவனைத் தூக்கி மனையில் வை" என்பது போல எம் கடன் மரம் நடுவதே என்று அலைந்து கொண்டிருக்கின்றன. 

Thursday, July 10, 2025

இதுதாண்டா குஜராத் மாடல்

 


தோழர் ரவி பாலேட் வரைந்த அருமையான ஓவியம்.

அது சொல்லும் உண்மையை தாங்க முடியாத சங்கிகள் அவர் மீது ஆபாச வாந்தியை கக்கிக் கொண்டிருக்கின்றனர். 

Wednesday, January 29, 2025

தொழிற்சங்கம் இருந்திருந்தால் ? சங்கிகளே சொல்லுங்கள் . . ..

 


சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது “தொழிற்சங்கம் அமைத்தால் நிறுவனத்தை மூடி விடுவார்கள்” என்று சங்கிகளும்  சில உடன் பிறப்புக்களும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள்.

எல்.ஐ.சி நிறுவனத்தின் காவல் அரணாக திகழ்கின்ற அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் உறுப்பினராக இந்த முட்டாள்தனமான கூச்சல்களை கேட்டு மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.

அப்போது எழுதிய

தொழிலாளர் போராட்டம் -  மூடச்சங்கிகளின் பொய்க்கணக்குகள்”  என்ற பதிவின்  இணைப்பு  இது.

அவசியம் படியுங்கள்.

இந்த பட்டியலில் புதிதாக ஒரு நிறுவனம் இணைந்துள்ளது.

கோவையில் செயல்படுகின்ற ஃபோகஸ் எடுமேடிக் என்ற அமெரிக்க நிறுவனம்  திங்கட்கிழமையன்று திடீரென மூடப்பட்டுள்ளது. வெறும் மின்னஞ்சல் மூலமாக தகவல் சொல்லப்பட்டுள்ளது. 1500 ஊழியர்கள் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டனர்.

தொழிற்சங்கம் எதுவும் அங்கே இல்லை. அதனால் போராட்டம் காரணமாக நிறுவனம் மூடப்பட்டது என்று சங்கிகள் கதை விட வாய்ப்பில்லாமல் போய் விட்டது.

நடுத்தெருவில் நின்ற ஊழியர்களுக்காக,  தொழிலாளர் நல அலுவலகம் முன்பாக குவிந்த அந்த ஊழியர்களுக்காக சி.ஐ.டி.யு தலையிட்ட பின்னணியில் ஜனவரி மாதம் பணி செய்தமைக்கான ஊதியத்தையும் ஐந்து வருடம் பணி செய்த ஊழியர்களுக்கு மட்டும் பணிக்கொடை சட்டத்தின் கொடுக்கப்பட வேண்டிய பணிக் கொடையையும் வருங்கால வைப்பு நிதியில் சேர்க்கப்பட்டுள்ள நிதியையும் மட்டும் தர முன்வந்துள்ளது நிர்வாகம். இதற்கே ஒரு தொழிற்சங்கம் தலையிட வேண்டியிருக்கிறது.

இதுவே அந்த நிறுவனத்தில் தொழிற்சங்கம் இருந்திருந்தால்

ஒரு வேளை நிறுவனம் மூடப்படுவதைக் கூட தவிர்த்திருக்க முடியும்.

அம்போவென்று தெருவில் நிறுத்தப்ப்பட்ட ஊழியர்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுக் கொடுத்திருக்கலாம்.

இப்போது அதற்கெல்லாம் வாய்ப்பு மிகவும் குறைவு.

சாம்சங் பிரச்சினையில் நிர்வாகத்திற்கு ஆதரவாக கூக்குரல் எழுப்பிய சுமந்து, எஸ்.ஜி.சூர்யா, ஆட்டுக்காரன் உள்ளிட்ட சங்கிகள் யாரும் இப்போது எங்கே இருக்கின்றார்கள் என்றே தெரியவில்லை. ஒரு வேளை உயிரோடு இருந்தாலும் கூட தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேச மாட்டார்கள். ஆம். அவர்களின் வர்க்க குணாம்சம் அதுதான்.

மீண்டும் அழுத்தமாக சொல்கிறேன்.

ஒரு தொழிற்சங்கம் இருப்பதுதான், அதுவும் செங்கொடி சங்கமாக இருப்பதுதான் அந்த ஊழியர்களுக்கு மட்டுமல்ல நிறுவனத்திற்கும் பாதுகாப்பு.

 

Monday, August 7, 2023

சிறுவன் இறப்பிற்கு யாரெல்லாம் பொறுப்பு?

 முக நூலில் பார்த்த செய்தி கீழே உள்ளது.

 


வாகன ஓட்டுனர் உரிமம் 18 வயது நிரம்பினால்தான் தரப்படும். அப்படி 18 வயது நிரம்பாவதவர்கள் வாகனங்களை ஓட்டினால் அவர்களின் பெற்றோரை அழைத்து எச்சரிக்கை செய்வார்கள்.

 

அப்படி இருக்கையில் 12 வயது பசங்களுக்கு எல்லாம் போட்டி நடத்துவதெல்லாம் அநியாயம்.

 

இந்த பையனின் இறப்புக்கு யாரெல்லாம் காரணம்.

 

வண்டி வாங்கிக் கொடுத்து போட்டியில் கலந்து கொள்ள வைத்த பெற்றோர்,

 

இதையெல்லாம் கண்டு கொள்ளாத காவல் துறை

 

ஓட்டுனர் உரிமம் வாங்கவே முடியாதவர்களை வைத்து போட்டி நடத்திய பொறுப்பாளர்கள்.

 

இவர்கள் அனைவருமே குற்றவாளிகள். மரணத்திற்கு காரணம். இவர்கள் அனைவருமே குற்றவாளிகள். சிறையில் தள்ளப்பட வேண்டியர்கள்.

 

Sunday, July 31, 2022

சாமியைக் கேட்டீங்களா ஆபீஸர்ஸ்? தெய்வக் குற்றமாயிடுச்சே!

 


கோயிலுக்கு அருகில் இருக்கிறது என்ற காரணம் சொல்லி சேலத்தில் ஒரு மாட்டுக்கறி கடையை மூட வேண்டும் என்று இந்து முன்னணியினர் கலாட்டா செய்ததால் கார்ப்பரேஷ்ன், காவல்துறை எல்லாம் சேர்ந்து அந்த கடையை மூடி விட்டார்கள்.

கலவரம் செய்வோம் என்று சொன்னவர்களை கைது செய்து உள்ளே தூக்கிப் போட துப்பில்லாதவர்களாக அரசு நிர்வாகம் இருப்பது ஆபத்தானது. அண்டா பிரியாணி திருடர்களை வளர்க்கிறார்கள்.

நிற்க, அது என்ன கோவில் (எந்த கோயிலாக இருந்தாலும் அரசு செய்தது தவறுதான் என்பது வேறு விஷயம்)  என்று பார்த்தால்  அது


ஏன்யா சுருட்டும் சாராயமமும் எடுத்துக் கொள்கிற முனியப்ப சாமி, ஃபீப் சில்லி மட்டும் வேண்டாம் என்றா சொல்லப் போகிறார்?

அடப்பாவிகளா, இந்து முன்னணிக்கு பயந்து இப்படி தெய்வக்குற்றம் செஞ்சுட்டீங்களே!


Friday, April 29, 2022

5 G அவரும் சொல்லவில்லை, இவர்களும் . . .

 


"இன்னும் மூன்று நான்கு மாதத்தில் 5 ஜி சேவை அறிமுகமாகும். கட்டணம் தொடர்பாக தனியார் தொலைபேசி நிறுவனங்களோடு ஒரு உடன்பாடு விரைவில் வரும். முன்பு சொன்ன கட்டணத்திலிருந்து 30 லிருந்து 40 % வரை குறைத்துள்ளோம்"

இது தொலைதொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் என்பவர் பத்திரிக்கையாளர்களிடம் சொன்னது.

5 ஜி க்காக தனியார் தொலைபேசி நிறுவனங்களோடு பேசிக் கொண்டிருப்பதாக சொன்ன மந்திரியும்

4 ஜி சேவையை பி.எஸ்.என்.எல் நடத்த எப்போது அனுமதி தரப் போகிறோம் என்று சொல்லவில்லை.

அப்படி ஏதாவது திட்டம் உண்டா என்று பத்திரிக்கையாளர்களும் கேட்கவில்லை. 

பிகு: முன்பு முன்மொழிந்த கட்டணத்திலிருந்து 90 % குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காததால் தனியார் தொலைபேசி நிறுவனங்கள் கடும் அதிருப்தியாம் . . . 


Tuesday, January 25, 2022

சூப்பரான கொள்கைதானே மோடி?

"லாபம் தனியாருக்கு, அரசுக்கு நஷ்டம்" என்ற உங்கள் கொள்கை சூப்பரான கொள்கை மோடி.

ஆமாம்.

பெரு முதலாளிகளுக்கு சூப்பரான கொள்கை. நாட்டு மக்களுக்குத்தான் சுடுகாட்டுக் கொள்கை. . . 



*நாளொரு கேள்வி: 23.01.2022*

 தொடர் எண் : *602*

 இன்று நம்மோடு அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் *சி. எச். வெங்கடாசலம்* அவர்கள்

##########################

 *லாபம் தனியாருக்கு...*

*நட்டம் அரசுக்கு...*

 கேள்வி: தனியார் மயக் கொள்கையில் வெளிப்படும் பெரும் முரண் என்ன? 

 *சி.எச். வெங்கடாசலம்*

 ஒரு உதாரணம்.

 *ஐ.டி.பி.ஐ வங்கி* 2021 - 22 இல் ஜூன் மாதம் முடிந்த காலாண்டில் ரூ 603 கோடி நிகர லாபத்தையும், செப்டம்பர் மாதம் முடிந்த காலாண்டில் ரூ 567 கோடி நிகர லாபத்தையும் காண்பித்தது. அரசு, இப்படி லாபம் காண்பித்துள்ள ஐ.டி.பி. ஐ வங்கியை தனியார் வசம் ஒப்படைக்க முடிவெடுக்கிறது. 

 *வோடா ஃபோன் ஐடியா நிறுவனம்* 2021 - 22 இல் ஜூன் மாதம் முடிந்த காலாண்டில் ரூ 7317 கோடி நிகர நட்டத்தையும், செப்டம்பர் மாதம் முடிந்த காலாண்டில் ரூ 7132  கோடி நிகர நட்டத்தையும் சந்தித்துள்ளது. அரசோ, நட்டம் காண்பிக்கும்  வோடா ஃபோன் ஐடியா நிறுவனத்தின் 35.8 சதவீத பங்குகளை ரூ 16000 கோடிகளுக்கு வாங்கி தனிப் பெரும் பங்குடமையாளராக மாறி இருக்கிறது. 

 இதுவே பொதுத்துறை  தனியார் மயக் கொள்கையில் வெளிப்படும் பெரும் முரண். 

 *செவ்வானம்*

 

Saturday, January 15, 2022

அதிகாரிகள் அரசியலுக்கு வரலாமா?

 


இந்திய ராணுவத்தின் தளபதியாக இருந்த ஜெனரல் வி.கே.சிங் பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் பாஜகவில் இணைகிறார். மத்திய மந்திரியாகிறார்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது ஏராளமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஐ.பி.எஸ் அதிகாரிகள் விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு பாஜகவில் இணைந்து தேர்தலிலும் போட்டியிட்டார்கள்.

ஆட்டுப் பண்ணை வைப்பதற்காக ஐ.பி.எஸ் பணியை ராஜினாமா செய்ததாக சொன்ன அண்ணாமலை சட்டசபைத் தேர்தலில் தோற்றாலும் பாஜகவின் மாநிலத் தலைவராகிறார்.

கான்பூர் கமிஷனராக இருந்த  உபி உதவி டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலிஸான அசிம் அருண் விருப்ப ஓய்வில் வெளி வந்த மறு நாளே பாஜக வேட்பாளராகிறார். உபி டிஜிபி ஆக இருந்த அவரது தந்தைக்கும் சீட் உண்டாம்.

ரஞ்சன் கோகாய் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற உடனேயே பாஜகவில் சேராமலேயே மாநிலங்களவை உறுப்பினரானார்.

சகாயம் போன்ற குறைந்த எண்ணிக்கையிலான சிலர் தனி ஆவர்த்தனம் செய்தார்கள்.

இவர்கள் எல்லாம் அரசியல் கட்சியில் இணைய அரசியல் சாசனப்படி தடை ஏதாவது உண்டா?

ரௌடிகளும் கொலைகாரர்களும் திருடர்களும் கடத்தல் காரர்களும் அரசியலுக்கு வரும் போது இவர்கள் மட்டும் ஏன் வரக்கூடாது என்ற கேள்வி கூட நியாயமாகத் தோன்றலாம்.

சட்டப்படி எதுவும் கிடையாது.தாராளமாக சேரலாம்.

 பிறகு ஏன் இந்த கேள்வி?

 ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகள், நீதிபதிகள், ராணுவ அதிகாரிகள் ஆகியோரின் பணிகள் என்பது மிக முக்கியமானது. அரசு இயந்திரத்தை கையாள்பவர்கள் குடிமைப் பணி அதிகாரிகள் என்றால் பாதுகாப்பு இயந்திரம் ராணுவ அதிகாரிகளிடமும் நீதி பரிபாலனம் நீதிபதிகள் கையிலும் உள்ளது.

 பல ஆட்சியாளர்களின் கீழ் இவர்கள் பணியாற்றலாம். ஆனால் இவர்கள் இந்திய அரசியல் சாசனத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள். எந்த விருப்பு, வெறுப்புக்கும்  அப்பாற்பட்டு பாரபட்சமின்றி மக்கள் நலனை மட்டுமே முதன்மையாகக் கொண்டு செயல்பட  வேண்டியவர்கள். எப்படிப்பட்ட அழுத்தம் ஆட்சியாளர்களிடமிருந்து வந்தாலும் அவற்றை நிராகரிக்கும் உரிமையை அரசியல் சாசனம் கொடுத்துள்ளது.

 அப்படி இருக்கும் போது முதல் நாள் வரை பணி செய்து விட்டு மறு நாள் ஒரு கட்சியில் சேர்ந்தால் அந்த நாள் வரை அவர்கள் எப்படி வேலை பார்த்திருப்பார்கள் என்ற கேள்வி வருவது இயல்பானது.

 அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆளுங்கட்சிக்கு சாதகமாக எத்தனை எத்தனை முடிவுகளை எடுத்திருப்பார்கள்!

 ஒப்பந்தங்களை அளித்திருக்கலாம்,

கைது செய்யாமல் இருந்திருக்கலாம்.

அரசியல் எதிரிகளை கைது செய்திருக்கலாம்.

சாதகமான தீர்ப்புக்களை வழங்கியிருக்கலாம்.

எதிர்த் தரப்பிற்கு பாதகமான தீர்ப்புக்களை வழங்கி இருக்கலாம்.

உளவுத்துறை அறிக்கையை உதாசீனம் செய்யச் சொன்னதை கேட்டிருக்கலாம் (புல்வாமா போல).

 இப்படி பட்டியல் போட்டால் நீண்டு கொண்டே இருக்கும்.

 அதிகாரிகள் தங்கள் பணிக் காலத்தில் நேர்மையுடன் நடந்து கொண்டிருந்தால் இது போன்ற சந்தேகங்களுக்கு வாய்ப்பு இருக்காது. ஆனால் யதார்த்தம் அப்படி இல்லையே!

 பிறகு என்ன செய்யலாம்?

 அரசியலில் நுழைய ஆசைப்படும் குடிமைப்பணி, பாதுகாப்புப் படை அதிகாரிகள், நீதியரசர்கள் ஆகியோர் தங்கள் பணிக்காலத்தில் எடுத்த முடிவுகள், குறைந்த பட்சம் ஐந்து வருட காலத்துடையதாவது, அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், அரசியல் சாரா அமைப்புக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று ஆய்வு செய்ய வேண்டும்.

 அவரது பணி நேர்மையானதாக இருந்தால் அரசியலுக்கு வருவதற்கு அனுமதி வழங்கலாம்.

 எதிர்கால அரசியல் ஆதாயம் கருதி செயல்பட்டது தெரிய வந்தால் துறைசார் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 இப்படிச் செய்தால் நிகழ்கால முறைகேடுகளும் அதிகார துஷ்பிரயோகங்களும் குறையும்.

 ஆனால் ஒன்று.

 பாஜகவுக்கு யாரும் வர மாட்டார்கள்.

 ஆமாம். யோக்கியர்களுக்கு அங்கே என்ன வேலை !!!!!

Tuesday, October 26, 2021

அச்சப்படுத்தும் செஞ்சுரி



 *நாளொரு கேள்வி: 25.10.2021*


வரிசை எண்: *512*

இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *க.சுவாமிநாதன்*
##########################

*செஞ்சுரி அடித்த டீசல்*

கேள்வி: டீசல் விலை உயர்வு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

*க.சுவாமிநாதன்*

இது கிரிக்கெட் சீசன். ஆனால் இந்தியா பாகிஸ்தான் மேட்ச் ஆரம்பிப்பதற்கு முன்பே டீசல் செஞ்சுரி அடித்து விட்டது. *தேசம் என்ற கேலரியில் அமர்ந்திருக்கிற யாரும் கை தட்டவில்லை. ரசிக்கவில்லை.* அதிர்ந்து போயிருக்கிறார்கள். 

நேற்று காலை இந்து நாளிதழின் மாநகர பக்கத்தில் டீசல் விலை உயர்வு பற்றிய செய்தி ஒன்று உள்ளது. மேற்கு மாம்பலத்தில், வேளச்சேரியில், மேட வாக்கத்தில், கேளம்பாக்கத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ 100 ஐ கடந்து விட்டது. பைசாக்களில் மட்டும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும். 

முன்பெல்லாம் *பெட்ரோலுக்கும் டீசலுக்கும் விலை வித்தியாசம்* நிறைய இருக்கும். ஆனால் இப்ப பெட்ரோல் லிட்டர் விலையான ரூ 104 ஐ டீசல் நெருங்கி விட்டது. டூரிஸ்ட் டாக்சி ஒட்டுபவர்கள் டீசல் வண்டி என்றால் லாபம் என்று நினைத்த காலம் மலையேறி விட்டது.

அண்ணா நகரில் ஒருவர் புலம்பியது அதில் செய்தியாக உள்ளது.  _" _சில ஆண்டுகளுக்கு முன்பு நான் கார் வாங்கினேன். அப்போது பெட்ரோலை விட டீசல் விலை லிட்டருக்கு ரூ 15 குறைவாக இருந்தது. இன்னைக்கு கார் டேங்க் ஐ நிரப்ப ரூ 5000 ஆனவுடன் திக் கென்று இருந்தது_ " 
_ 
டூரிஸ்ட் கார்களின் ரேட் அதிகரித்தால் வாடிக்கையாளர்கள் சண்டை போடுகிறார்கள். இருந்தாலும்  டூரிஸ்ட் கார்காரர்கள் ரேட்டை ஏற்றி விட்டார்கள். ஃப்ரீடம் டிராவல்ஸ் என்ற கம்பெனியின் உரிமையாளர் கூறும் போது " _கிலோ மீட்டருக்கு ரூ 4 அல்லது ரூ 5 உயர்த்த வேண்டும். இப்போது உள்ள ரேட்டுகள் டீசல் விலை ரூ 70 ஆக இருந்த போது நிர்ணயித்தது ஆகும். இப்ப எப்படி கட்டுப்படியாகும்_ ?"
என்கிறார். நிறைய பேர் காரில் போவதை குறைத்து விட்டார்கள். 

இந்த செய்தி எல்லாம் நடுத்தர மக்களின் கஷ்டங்கள். இவர்கள் நிலைமையே இதுவெனில் சாதாரண மக்களின் நிலைமை என்ன? அவர்கள் முதுகு மீது மறைமுக சுமையாக ஏறுவதால் நேரடியாக கோபப்பட கூட முடியாது. ஆமாம். அவர்கள் வாங்குகிற *காய்கறி, பலசரக்கு சாமான்கள் எல்லாவற்றின் விலையும்* ஏறிவிடும். இவற்றை ஏற்றி வருகிற லாரி, அரைபாடி லாரி, வேன் கட்டணங்களை யார் சுமப்பது? 

பெட்ரோல் டீசல் ஆகியன இடையீட்டு சரக்காகும். இதன் விலை நிறைய சரக்குகளின் விலைகளில் பிரதிபலிக்கும். *நுகர்வோர் விலை குறியீட்டெண், பணவீக்கம்* அதிகரிப்பது இதனால்தான். 

விலையில் பாதிக்கு மேல் உள்ள வரிகளை குறைக்காமல் மக்களின் பாடுகள் குறையாது. ஆனால் வேதனை என்னவென்றால் விலை கூட கூட வரியும் கூடும் என்பதே. எடைக்கு வரி இல்லை, விலைக்கு வரி என்பதே காரணம். 

*செவ்வானம்*

Monday, October 18, 2021

மோடியின் கடும் உழைப்பின் பலன்???????

 


இருபதாண்டுகளாக, ஒரு நாள் கூட விடுமுறையே எடுக்காமல், ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம், விமானத்தில் செல்லும் போது கூட உழைக்கிற உலகின் ஒரே ஒப்பற்ற மனிதனின் ஆட்சிக்காலத்தில் இந்தியா மேலும் ஓர் சாதனை படைத்துள்ளது.

உலகப் பட்டினிப் பட்டியலில் 2020 ம் வருடம் 94 ம் இடத்தில் இருந்த இந்தியா, 2021 ம் வருடம் 101 ம் இடத்தை வென்றுள்ளது. 

மோடி அடித்துள்ள இன்னொரு செஞ்சுரிக்கு அவரை பாராட்டுங்கள் ப்ரெண்ட்ஸ். ப்ளீஜ்  . . .

Thursday, September 23, 2021

இரண்டாய் உடைந்த ஊழல் பாலம்.

 





செலவு எவ்வளவு? ஊழல் எவ்வளவு?

 நேற்று முன் தினம் காலை அலுவலகம்  செல்கையில் எங்கள் பகுதி பரபரப்பாக இருந்தது. எங்கள் நேதாஜி நகரையும் அருகில் உள்ள காந்தி நகரையும் ஒரு கால்வாய் பிரிக்கிறது.  அதன் மீது கட்டப்பட்ட ஒரு சிறு பாலம் ஒரு லாரியின் சுமை தாங்காமல் இரண்டாய் உடைந்து அப்படியே கீழே உட்கார்ந்து விட்டது.

 இந்த பாலம் நான்கைந்து  வருடங்கள் முன்பாகத்தான் கட்டப்பட்டது. அதற்குள்ளாக இடிந்து விட்டது என்றால் அதன் தரம் எப்படி இருக்கும் என்று பாருங்கள்.

 இப்போது ஸ்மார்ட் சிட்டி என்று வேலூர் மாநகரம் முழுதும் வேலை நடக்கிறது. கழிவு நீர் கால்வாய்கள் கட்டி அதன் மீது அழகுக்காக ஓடுகளும் ஸ்டீல் குழாய்களும் கட்டுவதுதான் முக்கியமான பணி. கழிவு நீர் கால்வாயின் மேற்புறம் சரியாக அமையாததால் மழை நீர் தேங்கி பாசி படிந்துள்ளது பாருங்கள்.

 


கழிவு நீர் கால்வாய்க்காக போடப்பட்ட  காங்கிரீட் காலம் ஒரே நாளில் பிரிக்கப் பட்டு விட்டது என்பது மட்டும் அச்சத்தைத் தரவில்லை, எடப்பாடியின் சம்பந்திதான் ஒப்பந்ததாரர் என்ற தகவல்தான் அதிக அச்சத்தை தருகிறது. 

 முந்தைய அதிமுக ஆட்சியாளர்கள் காலத்து கட்டுமானத்தில் எவ்வளவு ரூபாய் செலவானது, எவ்வளவு ரூபாய் ஊழலுக்காக ஒதுக்கப்பட்டது என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

 ஊழல் தொகை அதிகரிக்க, அதிகரிக்க கட்டுமானத்தின் ஆயுள் குறைந்து கொண்டே இருக்கும் என்பதே யதார்த்தம்.