Showing posts with label பாரத ரத்னா. Show all posts
Showing posts with label பாரத ரத்னா. Show all posts

Saturday, February 10, 2024

A 1 அம்மாவுக்கு அடுத்த பாரத ரத்னா

 


பீகார் மக்களின் ஓட்டுக்களை வாங்க 1988 ல் இறந்து போன கர்ப்பூரி தாகூருக்கு  கொடுத்தாச்சு

ஆந்திரா மக்களின் ஓட்டுக்களை வாங்க 2004 ல் இறந்து போன பி.வி.நரசிம்மாராவுக்கும் கொடுத்தாச்சு.

உ.பி ஜாட் ஓட்டுக்களாக 1987 ல் இறந்து போன சரண்சிங்கிற்கும் கொடுத்தாச்சு.

இவங்களுக்கு எல்லாம் பாரத ரத்னா கொடுக்கனும்னு பத்து வருஷமா தோன்றாம, தேர்தலுக்கு ரெண்டு மாசம் முன்னாடித்தான் தோன்றியிருக்கு, அப்போ ஸ்டேட்டுக்கு ஒத்தரா விருதுகள் அறிவிப்பு வந்துகிட்டே இருக்கும். நவீன் பட்னாயக்கை வளைச்சுப் போட பிஜூ பட்னாயக்கிற்கு கொடுப்பார்கள் பாருங்களேன்.

இந்த வரிசையில் அடுத்த அறிவிப்பு A 1 அம்மையாருக்குத்தானே டிமோ?

Sunday, November 17, 2013

உங்களுக்குப் போய் பாரத ரத்னா கொடுத்தானுங்களே, அவங்க முட்டாளுங்கதான்

 https://news.uns.purdue.edu/images/+mugshots/Rao-CNR.jpg

பாத்திரமறிந்து பிச்சை போடு என்பார்கள்.
பதவிகளும் விருதுகளும் அது போல
ஆட்களின் தரம் அறிந்துதான் அளிக்க
வேண்டும் என்ற பாடத்தை கற்றுக்
கொடுத்துள்ளார் பாரத ரத்னா சி.என்.ஆர்.ராவ்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த
முட்டாள் அரசியல்வாதிகள் அறிவியலுக்கு
போதுமான நிதி எதுவும் தரவில்லை என்று
வெடித்து தள்ளியுள்ளார்.

அந்த முட்டாள் அரசியல்வாதிகள்தான்
இவருக்கு பிரதமரின் அறிவியல் ஆலோசகர்
பதவியும் இப்போது பாரத ரத்னா விருதும்
தந்துள்ளார்கள்.

பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
என்று எம்.ஜி.ஆர் பாடிவிட்டுப் போனார்.
ஆனால் இவரோ தேசத்தின் மிக உயர்ந்த
விருதைப் பெறும் போதுதான் அராஜகமாக
ஆணவமாக நடந்து கொள்கிறார்.

சச்சின் டெண்டுல்கருக்கு மட்டும் பாரத ரத்னா
விருது கொடுத்தால் சர்ச்சை உண்டாகும் 
என்று இலவச இணைப்பாக இவருக்கும்
விருது கொடுத்த ஆட்சியாளர்களுக்கு
இந்த இழிவு தேவைதான்.