Showing posts with label விஷமூர்த்தி. Show all posts
Showing posts with label விஷமூர்த்தி. Show all posts

Tuesday, April 29, 2025

போலி பேராசிரியனுக்கு அரளி விதை போதும் . . .

 


நெனப்புதான் பொழப்பை கெடுக்கும் என்பார்கள். நெல்லிக் கனி கிடைத்தால் துக்ளக் விஷமூர்த்தி அதனை ஆட்டுக்காரனுக்கும் போலிப் பேராசிரியன் ராம.சீனுவுக்கும் கொடுப்பானாம். அந்த அளவுக்கு இவனுங்க தேசிய உணர்வை ஊட்டறாங்களாம். இதை கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் தன் ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ளான் போலிப் பேராசிரியன்.


உனக்கெல்லாம் அரளி விதையைத்தான் அரைச்சு கொடுக்கனும் என்று அங்கே கமெண்ட் செய்தேன். அதைத்தான் மேலே உள்ள படத்திலும் சொல்லியுள்ளேன். இவனுங்க மட்டும் நெல்லிக்கனி சாப்ப்பிட்டா உலகம் தாங்குமா? 

Monday, January 15, 2024

ஆட்டுக்காரன் -ரஜினி-விஷமூர்த்தி-பொய்

 கீழே உள்ள இரண்டு படங்களையும்  பாருங்கள். ஆட்டுக்காரன் பேசுவது மட்டும் பொய்யல்ல, ஆட்டுக்காரனை பற்றி பேசப்படுவதும் பொய் என்பது தெளிவாகும்.

ரஜினி உண்மை பேசுவது கூட ஆச்சர்யமாக இருக்கிறது. அதிலென்ன ஆதாயம் அவருக்கு இருக்கிறதோ! விஷமூர்த்தி அசிங்கப்பட்டது சந்தோஷம்.







Monday, May 29, 2023

விழுந்தே விட்டானய்யா!

 


"விழுந்தே விட்டானய்யா!" என்ற இம்சை அரசன் திரைப்பட வசனம், சாமியார்களின் கால்களில் விழுந்தால் தமிழ்நாட்டு மக்களின் ஓட்டுக்களைப் பெறலாம் என்று எந்த கூமுட்டையோ (அது விஷ மூர்த்தியோ அல்லது ஆட்டுத்தாடியாகவோ இருக்கலாம்) கொடுத்த ஆலோசனையை நம்பி மோசடி வேலை செய்யும் இன்னொரு கூமுட்டைக்கும் கனகச்சிதமாக பொருந்துகிறது என்று கருதினால் நீயும் என் தோழனே!

Monday, January 23, 2023

கலைஞர், விஷ மூர்த்தி, ரஜினி

 


மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய பாடலின் சில வரிகளை தமிழ்த்தாய் வாழ்த்துக்காக கலைஞர் வெட்டுவதா? முழுப்பாடலையும் நான் ஒலிக்க விடுகிறேன்  என்று விஷ மூர்த்தி துக்ளக் ஆண்டு விழாவில் பாட வைத்தார்.

 இதோ கலைஞர்  வெட்டிய அந்த வரிகள்.

 



“ஆரியம் போல உலக வழக்கொழிந்து  சிதையா உன்”  என்ற வரிகளை பாட வைத்து, சேம் சைட் கோல் போட்டு விட்டார் விஷ மூர்த்தி.

 “ஆரியம் அழிந்து சிதைந்து” என்ற வரிகள் வேண்டாமென்று கலைஞ்ர் பெருந்தன்மையோடு  நடந்து கொண்டால் அவரை மட்டம் தட்டுவதாகக் கருதி முட்டாளென காட்சியளிக்கிறார் விஷமூர்த்தி.

 துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியரே இவ்வளவு பெரிய முட்டாளென்றால் “துக்ளக் படிப்பவர்கள் எல்லாம் புத்திசாலிகள்” என்று சொன்ன ரஜினிகாந்த் மற்றும் துக்ளக் வாசகர்களின் புத்திசாலித்தனம் எப்படி இருக்கும் !


Monday, January 2, 2023

துக்ளக் கழுதைகளே சொல்லுதே!


 

துக்ளக் பாணியிலேயே கழுதைகள் விஷமூர்த்தியை கழுவி ஊற்றுவது போன்ற இந்த டிசைனை தயார் செய்தது யார் என்று தெரியாது. அவருக்கு பாராட்டுக்கள். 

Wednesday, June 22, 2022

விஷமூர்த்திக்கு கன்ப்யூசனா கீதாம் . .

 


விஷமூர்த்திக்கு பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது முன்பே தெரிந்திருக்கிறது போல. 

அதனால்தான் 'சீ, சீ இந்த பழம் புளிக்கும்" என்ற கதையாக "முற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை" என்று கார்ட்டூன் போட்டு தன் கடுப்பை வெளிப்படுத்தினார் போல. 

எதிர்க்கட்சிகள் நிறுத்தியுள்ள வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா குருமூர்த்தியின் வரையறைக்குள் வருபவர். 

இப்போது விஷ மூர்த்தி யாரை ஆதரிப்பார்?

கட்சி வேட்பாளரா? ஜாதி வேட்பாளரா?

பாவம் அவருக்கு ஒரே குழப்பம் . . .

Tuesday, June 14, 2022

கோவிந்த் வேஸ்டா விஷ மூர்த்தி?

 


இந்த வார துக்ளக் பத்திரிக்கையின் அட்டைப்படம் இது. அதன் இணையப் பக்கத்திலிருந்து எடுத்தது.

புதிய ஜனாதிபதிக்கான தகுதி என்று அது சொல்வது இப்போதைய ஜனாதிபதியின் செயல்பாட்டை அடிப்படையாக வைத்துத்தான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்படிப் பார்த்தால்  மோடியால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் ஒரு வேஸ்ட் என்று விஷமூர்த்தி சொல்வதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் முதல் குடிமகனை விஷமூர்த்தி அவமதிக்கிறார். இவருக்கு எதிராக ஆட்டுக்காரர் வாய் திறப்பாரா?

இந்த அட்டைப்படத்தின் மூலம் விஷமூர்த்தி விதைப்பது அவரது ஜாதி மேலாதிக்க சிந்தனையைத்தான்.

முற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது என்ற வாசகத்திலிருந்தே பலவற்றை நாம் உணரலாம்.

முற்பட்டவர், தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர் என்ற பிரிவினையை அவர் அங்கீகரிக்கிறார்.

முற்பட்டவர்கள் அப்படி ஒன்றும் வேஸ்டான வேலைகள் செய்பவர்கள் இல்லை என்ற பெருமிதம் தொனிக்கும் வாசகம் அது.

 

வாயைத் திறந்தாலே விஷம்தான் . . .

 

Monday, May 16, 2022

உமக்கேன் பயம் திருட்டுமூர்த்தி???

 


அரசு வங்கி ஊழியர்கள், அதிகாரிகளை கழிசடை என்று திட்டிய திருட்டுக் கணக்கு விஷமூர்த்தி, அரசு வங்கிகளில் அரசின் பங்கை 50 % ஆகக் குறைக்கச் சொல்லி நிர்மலா அம்மையாருக்கு ஆலோசனை தருகிறார். அப்போதுதான் சி.பி.ஐ, சி.வி.சி தொந்தரவெல்லாம் இருக்காது என்று காரணமும் சொல்கிறார்.

மோடியின் ஆட்சியில் சி.பி.ஐ யும் சி.வி.சி யும் பல் இல்லாத பாம்புகள், பற்களும் நகங்களும் இல்லாத புலிகள். அதைப் பார்த்தே விஷமூர்த்திக்கு ஏனோ பயம்!

ஊழல், முறைகேடுகளை விசாரிப்பதற்குத்தான் இந்த இரண்டு அமைப்புக்களுமே. (அந்த வேலையை செய்யாமல் ஆட்சியாளர்களின் ஏவல் நாய்களாகத்தான் இருக்கிறார்கள் என்பது இன்னொரு விஷயம்) ஊழல் பேர்வழிகளுக்குத்தான் அவர்கள் தொந்தரவு.

பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கு 50 % ஆகுமானால் அதன் பொதுத்துறை தன்மை பறி போகும் என்பது நமது கவலையென்றால், அப்படிப்பட்ட நிலைமை வந்தால் சி.பி.ஐ, சி.வி.சி தலையீடு இல்லாமல் ஊழல், முறைகேடு, மோசடி எல்லாம் செய்யலாம் என்பது விஷமூர்த்தியின் கணக்கு!

நரியின் பார்வை இரையின் மீதுதான் என்பது போல திருட்டுக் கணக்கு விஷமூர்த்திக்கு மாட்டிக் கொள்ளாமல் திருடுவது பர்றித்தான் சிந்தனை.

Friday, May 13, 2022

நீதான் கழிசடை விஷமூர்த்தி

 


தமிழக சங்கிக்கூட்டத்தின் ஒரிஜினல் தலைவனும் மோசமான ஜந்துவுமான குருமூர்த்தி அரசு வங்கி ஊழியர்களை, அதிகாரிகளை கழிசடை என்று திட்டியுள்ளார். 

பணக்காரர்கள் வரி கட்டாமல் ஏய்ப்பதற்கு வழி சொல்லும் திருட்டுத் தொழிலைப் பார்த்துக் கொண்டிருந்த விஷமூர்த்தி, அதே திருட்டு புத்தியோடு பல ஆலோசனையை முன்வைக்கிறார்.

சோ.ராமசாமி குடும்பத்தை ஏமாற்றி கைப்பற்றிய துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழா என்ற கொடியவர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் அவர் கக்கிய விஷத்தின் சில பகுதிகள்.

"இன்றைய அரசு வங்கி ஊழியர்கள், அதிகாரிகளில் திறமையானவர்கள் தனியாருக்கு சென்று விடுகிறார்கள், அதனால் இருப்பதெல்லாம் கழிசடைகள்தான். திறமையானவர்களை கொண்டு வர வேண்டுமானால் இப்போதுள்ள முறைகள் (அதாவது இரு கட்ட தேர்வு, நேர்முகத் தேர்வு, இட ஒதுக்கீடு) பிரச்சினையாக உள்ளது. அரசு வங்கிகளை தனியாருக்கு கொடுத்து விட்டால் சிக்கல் இருக்காது.

50 % பங்குகளை விற்று விட்டால் சி.பி.ஐ, சி.வி.சி பிரச்சினையெல்லாம் கிடையாது. ஆகவே அதனை அரசு செய்ய வேண்டும்.

முன்பெல்லாம் டெல்லியிலிருந்து போன் வரும், கடன் கொடுப்பார்கள், அது வராக்கடன் ஆகி விடும். இப்போதுதான் அது நின்று போயுள்ளது. தனியார் வங்கிகள் ஆனால் அந்த பிரச்சினை கிடையாது"

கடைசி இரண்டு விஷயங்களைப் பற்றி சற்று விரிவாக எழுதுகிறேன்.

அரசு வங்கி ஊழியர்கள், அதிகாரிகளை இழிவுபடுத்தி பேசிய போதே வங்கித்துறைக்கான மந்திரி அந்த பேச்சை நிறுத்தி விஷமூர்த்தியை அறைந்திருக்க வேண்டும்.

அவர் இளித்துக் கொண்டே இருந்ததால்

முகப்புப் படம் அதனை நிறைவேற்றியுள்ளது.


Tuesday, July 27, 2021

விஷ மூர்த்திக்கோர் சவால்

 

முக நூலில் பார்த்த படம். அதில் சொல்லியுள்ளது சரியாகத்தான் உள்ளது.



சொல்லப்போனால் தேவ பாஷயான சமஸ்கிருதத்தில் துக்ளக் வருவதுதான் சரியாக இருக்கும். என்ன பழக்கத்திலிருந்து அழிந்த மொழி விஷ மூர்த்திக்கே தெரியாது.

இந்தி பேச விரும்பும் தற்போதைய துக்ளக் வாசகர்களில் 70 சதவிதம் பேரில் ஐம்பது சதவிகிதமாவது,

அதாவது தற்போதைய துக்ளக் வாசகர்களில் 35 % இந்தி துக்ளக் வாங்கினால் நானும் இந்தி துக்ளக் இதழிற்கு சந்தா கட்டுகிறேன்.

என் சவாலுக்கு விஷ மூர்த்தி தயாரா?

பிகு" இந்தி துக்ளக்கை வாங்கி என்ன செய்யப் போகிறாய் என்று கேட்பது என் காதில் விழுந்து விட்டது. ஒரு பத்திரிக்கைக்கு படிப்பதைத் தாண்டி வேறு சில பலன்களும் உண்டு. அந்த அடிப்படையில் பயன் படும்.

(ரொம்ப எல்லாம் கற்பனை வேண்டாம். சர்ஜிகல் மாஸ்க்கை ஒவ்வொரு நாளும் துக்ளக் இதழ் தாளில் மடித்து குப்பைத் தொட்டியில் போடலாம்) 

Saturday, January 16, 2021

விஷ மூர்த்தியை தொட மாட்டார்கள்

 


விஷ மூர்த்தி உச்ச நீதி மன்ற, உயர் நீதி மன்ற நீதிபதிகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.



ஆனால் அவரைப் பற்றி நம் நீதியரசர்கள் சின்னதாகக் கூட வாய் திறக்க மாட்டார்கள்.

அவர்களுக்கும் நீதிபதி லோயா, நீதிபதி முரளிதரன் ஆகியோர் நினைவுக்கு வருவார்கள் அல்லவா?

சின்னதா ஒரு சந்தேகம்

ஒருவேளை விஷ மூர்த்தி காலில் விழுந்து பதவி வாங்கியிருப்பார்களோ?

Tuesday, December 15, 2020

இதுதான் "உலக மகா நடிப்பு"

 


ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால் வயிறு கலங்கிப் போனவர்களில் ஒருவராக பாஜக எல்.முருகனையும் சேர்த்து அட்டைப்படம் போடுகிறது விஷமூர்த்தியின் துக்ளக்.



ரஜினி வருகையால் பாஜக வாக்கு வங்கிக்கு (அப்படி ஒன்று இருக்கிறதா என்ன?) எந்த பாதிப்பும் வராது என்று சொல்கிறார் எல்.முருகன்.


ரஜினிக்கும் பாஜகவிற்கும் நேற்றோ, இன்றோ, நாளையோ எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல எப்படி நடிக்கிறார்கள் இவர்கள்!

உலக மகா நடிப்பு என்பது இதுதான்.