ஆமாங்க.
நெஜமாத்தான் . . .
ஆதாரம் வேணுமா?
கீழேயுள்ள படத்தை பாருங்க . . .
அவரு இந்தியாவில எப்படி இருக்காரு, வெளிநாடு போனா எப்பாடி இருக்காரு என்று.
படம் ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கரிடமிருந்து சுட்டது.
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
ஆமாங்க.
நெஜமாத்தான் . . .
ஆதாரம் வேணுமா?
கீழேயுள்ள படத்தை பாருங்க . . .
அவரு இந்தியாவில எப்படி இருக்காரு, வெளிநாடு போனா எப்பாடி இருக்காரு என்று.
படம் ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கரிடமிருந்து சுட்டது.
மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் சங்கிகள் பெருமிதத்தோடு பகிர்ந்து கொண்டுள்ள படம் கீழே உள்ளது.
ட்ரம்ப் என்றால் நடு நடு என்று நடுங்குகிற மோடி, ட்ரம்ப்போடு பேச மறுத்து விட்டாராம். ட்ரம்ப் கூப்பிட்டால் போனாக இருந்தால் கூட நின்று கொண்டே பவ்யமாக பேசும் மோடி, அவரது அழைப்புக்களை நிராகரித்து விட்டாராம்.
கொஞ்சமாவது பொருத்தமா பொய் சொல்லுங்க சங்கிகளா!
மனிதன் திரைப்படத்தில் "இறந்து போனதாக போலீஸால் கணக்கு காண்பிக்கப்பட்ட ஒருவர் க்ளைமாக்ஸில் வந்து சாட்சி சொல்லுவதாக காட்சி இறக்கும்.
பீகாரில் மரணமடைந்து விட்டார்கள் என்று சொல்லி தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இரு வாக்காளர்களை டெல்லி முன்னாள் துணை முதல்வர் யோகேந்திர யாதவ் உச்ச நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளார்.
திரைப்படத்தை மிஞ்சும் இக்காட்சி தேர்தல் ஆணைய, மோடி கூட்டணியின் அயோக்கியத்தனத்திகுச் சான்று
சமூக செயற்பாட்டாளர் தோழர் அ.முத்துக்கிருஷ்ணன் பகிர்ந்து கொண்ட பதிவையும் காணொளியையும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
இந்திரா காந்தி 1966-1977 மற்றும் 1980-1984 காலகட்டத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்தார். இந்த காலத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தொடங்கப்பட்டு, ஆரம்பகட்ட வளர்ச்சியில் இருந்தது. 1983இல் இந்தியாவின் முதல் விண்வெளி வீரரான ராகேஷ் ஷர்மா, சோவியத் யூனியனின் சோயூஸ் T-11 விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணித்தார். இது இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு மைல்கல்.
தினமலரின் ஜால்ரா முடியல
கீழே உள்ள தின மலர் செய்தியை ஒரு தோழர் மெனக்கெட்டு கொண்டு வந்து கொடுத்தார். எதுக்கு என்னை டென்ஷன் செய்கிறாய் என்று கேட்டதற்கு நீங்க எழுத மேட்டர் கொடுத்திருக்கேன் என்றார்.
ஒரு பிரதமராக உருப்படியாக எதையும் செய்ய துப்பில்லாத மோடி, மாறு வேடப் போட்டியில் கலந்து கொள்வது போல விதம் விதமாக ஆடைகள் மட்டும் அணிந்து கொள்வார்.
இசையைத் தாண்டி வேறெதற்காவது இளையராஜா வாய் திறந்தால் அது அபஸ்வரமாகவே இருக்கிறது.
மோடியைப் போல இந்தியாவுக்காக பாடுபட்ட பிரதமர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பட்டியல் போடலாமா என்று கேட்கிறார்.
மோடியைப் போல இந்தியாவை சீரழித்த பிரதமர்கள் யாரும் கிடையாது என்ற உண்மையை கூட புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு சங்கியாக மாறியிருக்கிறார்.
விரிவாக ஒரு பட்டியல் நாளை நான் போடுகிறேன். அதை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு அவருக்கு மனம் இருக்குமா தெரியவில்லை.
அவருடைய வீழ்ச்சி மனதிற்கு வருத்தமாக இருக்கிறது. இனி அவரால் மீள முடியுமா என்பது சந்தேகமே. . .
மாலேகான் குண்டு வெடிப்பு நிகழ்த்தியவரும் பாஜக முன்னாள் எம்.பி யுமான போலிச்சாமியார் சாத்வி பிரஞ்யாசிங் தாகூருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று தேசிய புலனாய்வு முகமை (NIA) நீதிமன்றத்திடம் கேட்டுள்ளது.
NIA ஒன்றும் சுயேட்சையான அமைப்பு இல்லை. மோடியின் ஏவல்படைகளில் ஒன்றுதான். 2017 ல் NIA தான் அந்த சாமியார் மீதான குற்றச்சாட்டுக்களை எல்லாம் நீர்த்துப் போக வைத்து பிணை கிடைக்க வழி வகுத்தது.
அதன் பின்புதான் மோடி அவருக்கு லோக்சபா டிக்கெட் கொடுத்து எம்.பி ஆக்கி அழகு பார்த்தார்.
இதுதான் இந்த அரசின் உண்மையாக முகம்.
இப்படி இருக்கையில் இந்த சாமியாருக்கு மரண தண்டனை தர வேண்டும் என்று NIA வே கேட்பது நிஜமாகவே மர்மமாகத்தான் இருக்கிறது. இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. ஏதோ பிரச்சினையை மடை மாற்ற இப்படி செய்துள்ளது. அதுவும் பஹல்காம் தாக்குதல் நடந்த அன்று இந்த முடிவு என்பதால் அந்த ஐயம் வருகிறது.
பார்ப்போம். மோடி அம்பலமாகாமலா போகப் போகிறார்!
காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் இறந்து போனவர்களின் இறுதிச் சடங்கு இன்றுதான் நடந்திருக்கும்.
எந்த குடும்பங்களில் கல்லறையோ நினைவுச் சின்னமோ அமைக்கும் வழக்கம் இருந்தால் அவர்கள் அதைப் பற்றி இன்னும் நினைத்திருக்கக் கூட மாட்டார்கள்.
காலையில் எழுதிய பதிவின் படி "பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதன் பலனை பாஜக அறுவடை செய்யும்" என்பதை மோடி நிஜமாக்கி விட்டார்.
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரக்கூட்டத்தை துவங்கி விட்டார். அதிலே அவரது வழக்கமான வாய்ச்சவடாலும் உண்டு.
அதே போலத்தான் நேற்று விருந்து வைத்த எடப்பாடியையும்!
என்ன ஜென்மங்கள் இதெல்லாம்!
மோடியைப்
போலவே ஆட்டுக்காரனும் போட்டோகிராபருடனே
மோடி
மாதிரி நீயும் போட்டோகிராபருடன் தான் சென்றாயா ஆட்டுக்காரா? என்னையே காப்பியடிக்கறியா
என்று மோடி கோபமடையப் போகிறார். ஜாக்கிரதை.
மேற்கு வங்கத்தின் முன்னாள் ரௌடி ஆட்டுத்தாடியும் இப்போதைய துணையும் கூட உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக. கேரள ஆட்டுத்தாடி போலவே அபத்தமாக பொங்கியுள்ளது.
அதனை படித்ததும் எனக்கு தோன்றியதுதான் மேலே உள்ள படமாக உள்ளது.
நேற்று மோடி புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்துள்ளார். ஏற்கனவே நூறாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலத்திற்கு பதில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. பழைய பாலத்தை கட்டியது குஜராத்திகள் என்று பொய் சொல்லி அசிங்கப்பட்டது வேறு கதை. அந்தாளு உண்மை பேசினால்தான் அது அதிசயம்.
மோடி துவக்கி வைத்த எல்லா திட்டங்களிலும் சிக்கல் வருகிறது என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் உண்டு.
அந்த திட்டங்கள் முழுமையடையும் முன்பே மோடி திறக்க வேண்டும் என்று அவசரம் அவசரமாக அரைகுறை வேலை செய்தால் அவை இப்படித்தான் பல் இளிக்கும்.
இந்த பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் சரியாக இல்லை, ஏராளமான குறைபாடுகள் இருக்கிறது என்று ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது.
ராம நவமி அன்று ராமேஸ்வரத்தில் மோடி ஒரு பாலத்தை திறந்தார் என்று சீன் போட்டால் அது ரிப்பேர்தான் ஆகும்.
மோடி கைய வச்சா அது ராங்காதான் போகுமடா . . .
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் உங்கள் அரசின் இந்தி திணிப்பு முயற்சிகளுக்கு முட்டு கொடுக்கும் உங்கள் தமிழ்த்துரோகத்தைக் கூட மன்னிப்பேன், டமில் மூசிக் மேடம் . . .
ஏனென்றால் மோடி செய்தது.
தமிழ்க் கொலை.
பாஜக வில் சேர்ந்தாலே இப்படித்தான் மனசாட்சி இல்லாமல் அபாண்டமாக பொய் பேசனும் போல . . .
நேற்று இளையராஜா, மோடியை சந்தித்துள்ளார். அதனை தமிழ்நாடு பாஜகவும் மற்ற சங்கிகளும் எப்படி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்கள் என்று பாருங்கள். . .
இந்த சந்திப்பு குறித்து மோடியும் ட்விட்டரில் பதிவு போடுகிறார்.
இளையராஜாவும் ஒரு பதிவு போட்டுள்ளார்.
இதில் என்ன டெக்னிகாலிட்டி இருக்கிறது என்று தோன்றலாம்.
சிம்பனிக்கு முன்பாக முதல்வர் இளையராஜாவை சந்தித்தது தொடர்பாக அவர் ஒரு பதிவு போட்டுள்ளார்.
சிம்பனிக்கு பிறகு மோடியை சந்தித்ததை பதிவு செய்த இளையராஜா, சிம்பனி முடிந்து சென்னை வந்த பின்பு அவர் சென்று முதல்வரை பார்த்ததை மட்டும் பதிவு செய்யவில்லை. ஆனால் முதல்வர் முன்பும் பதிவு செய்திருந்தார். இப்போதும் பதிவு செய்துள்ளார்.
முதல்வரை நேரில் சென்று சந்தித்தது தெரிந்தால் மோடி கோபப்படுவார் என்ற அச்சமோ!
இளையராஜாவின் இசை இணையற்றதுதான். ஆனால் அவர் அரசியல்?
இதற்கிடையில் மோடி அழைத்து பாராட்டினார் என்று சங்கிகள் ஏன் வெட்டி விளம்பரம் செய்கிறார்கள்! மானங்கெட்டவர்கள்!
கீழேயுள்ள செய்தியை படிக்கையில் எனக்கு அதிர்ச்சியோ, ஆச்சர்யமோ ஏற்படவில்லை.
நேற்று காவல்துறை கைது செய்த போது எச்.ராசா எனும் ஐகோர்ட், போலீஸ் வேனில் ஏற மாட்டேன் என்று கலாட்டா செய்துள்ளது. நாய் ஏற்றும் வண்டியில் நான் ஏற மாட்டேன் என்று விளக்கமும் சொல்லியுள்ளது.
லெக்ஸ் ஃப்ரீட்மென் என்ற ஊடகவியலாளரிடம் மோடி நடத்திய பேட்டி நாடகத்தில் தன் கால் வெள்ளை ஷூவுக்கு பாலிஷ் போட காசில்லை என்று மோடி உருட்டிய உருட்டு மட்டுமே மக்களால் கலாய்க்கப்பட்டது. அதை தாண்டியும் பல முக்கிய விஷயங்கள் அந்த பேட்டியில் உள்ளது. (இரண்டு பதிவுகளுக்கான content)
அந்த பேட்டியில் ட்ரம்பை புகழோ புகழு என்று புகழ்கிறார். அமெரிக்காதான் முக்கியம் என்ற நிலைப்பாட்டில் அவர் இருப்பது என்னை பார்ப்பது போலவே இருக்கிறது என்று செல்பி பீற்றல் வேறு. ட்ரம்பின் நடவடிக்கைகள் இந்தியாவிற்கு உருவாக்கும் பாதிப்புக்கள் பற்றி வாய் திறக்கவே இல்லை.
அதே போல சீனா பற்றியும் பம்முகிறார். அண்டை நாடுன்னா எல்லைப் பிரச்சினை இருக்கத்தான்யா இருக்கும், அதையெல்லாம் பேசித்தான் தீர்க்கனும், சீனா ஜனாதிபதி கூட நான் பேசியிருக்கேன். என்று பதுங்குகிறார்.
ஆனால் அதே சமயம்
பாகிஸ்தான் மீது சீறுகிறார், அதானிக்கு வணிக ஒப்பந்தம் பெறுவதற்காக நானே பாகிஸ்தான் போனாலும் கதைக்காகவில்லை என்பதை வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் அதுதான் உண்மை என்பது நமக்கு தெரியுமல்லவா!
பேட்டியில் இல்லாவிட்டாலும் இன்னொரு செய்தியை காலையில் படித்தேன். சீனாவுடன் எல்லை பிரச்சினை தீவிரமானது. ஆனால் அது பற்றி பம்மும் மோடி மியன்மர் எல்லையில் 1500 கிலோ மீட்டர் தூரத்திற்கு முள் வேலி போடுகிறார்.
ஆக இவர் வீரமெல்லாம் எளியோருடன் மட்டுமே . . .
மோகன் பகவந்த் உதிர்த்த முத்து கீழே . . .