Showing posts with label வலையுலகம். Show all posts
Showing posts with label வலையுலகம். Show all posts

Monday, March 9, 2020

தமிழ்ப் பதிவர்களுக்கோர் நற்செய்தி


தமிழ்மணம் செயலிழந்து போனது தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஒரு பெரிய இழப்பு என்பதை யாரும் மறுக்க முடியாது.

அந்த குறையை நீக்க இப்போது வந்து விட்டது வலை ஒலை.



ஆம். 

புதிய வலைத் திரட்டி.

அதன் இணைப்பு இங்கே உள்ளது

நண்பர் சிகரம் பாரதி மற்றும் சில நண்பர்களின் முயற்சியில் உருவான வலை ஓலை தளத்தில் பரிட்சார்த்த முயற்சியாக பதிமூன்று வலைப் பக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

அந்த பக்கங்களின் விபரங்கள் கீழே.



உங்களது வலைப்பக்கத்தையும் நீங்கள் இணைத்துக் கொள்ளலாம்.

தமிழ்ப் பதிவர்களுக்கு நிச்சயம் உதவிகரமாக இருக்கும், உற்சாகம் அளிக்கும்.

இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் 

நன்றியும் வாழ்த்தும் பாராட்டுக்களும்.






Saturday, June 6, 2015

வேலூரில் (மினி) பதிவர் சந்திப்பு

பதிவர் திரு  விசுawesome  அவர்களின் விசுவாசமின் சகவாசங்கள் நூல் வெளியீட்டு விழா இன்று வேலூர் ஊரிஸ் கல்லூரியில் நடைபெற்றது.

வி.ஐ.டி வேந்தர் திரு ஜி.விஸ்வநாதன் அவர்கள் நூலை வெளியிட்டு உரையாற்றினார். திரு விசுவாசம் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டனர். திரு விசுவாசம் அவர்களின் தாயார் செய்து வரும் சமூக நலப் பணிகள் குறித்து பலரும் பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது. மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களின் கொள்ளுப் பேரன் பாடிய ஒரு பாடலும் நன்றாக இருந்தது. த,மு,எ,க,ச மாநிலப் பொறுப்பாளர்களில் ஒருவரான தோழர் கவிஞர் முத்து நிலவன் தன் அழகு தமிழால் நிகழ்ச்சிக்கு மெருகூட்டினார். 

இந்த நூல் விற்பனை மூலம் வரும் தொகையை வேலூரிலேயே சமூக நலப் பணிகளுக்கு பயன்படுத்தப் போவதாக திரு விசுவாசம் அறிவித்தார். பாராட்டத்தக்க செயல் இது.

பல வலைப் பதிவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஒரு சிறப்பம்சம். 

திருவாளர்கள் திண்டுக்கல் தனபாலன், மதுரைத் தமிழன், தருமி, ராயல் செல்லப்பா, கோவை ஆவி, தில்லையகத்து துளசிதரன், கீதா. மகேஷ், வாத்தியார் எனும் அன்பு பால கணேஷ், மூங்கில் காற்று முரளி மற்றும் உள்ளூர் அன்பே சிவம் சிவசக்தி என பலரையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. இன்னும் ஓரிருவர் கூட இருந்தார்கள்.

அத்தனை பேரோடும் அறிமுகம் செய்து கொண்டு  புகைப்படமும் எடுத்துக் கொண்டேன். இன்னும் கொஞ்ச நேரம் கூட இருந்து பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் வேறொரு பணி காரணமாக புறப்பட வேண்டியதாயிற்று.

புதுக்கோட்டையில் பதிவர் திருவிழா நடத்தலாம் என்ற யோசனை இருப்பதாக தோழர் முத்துநிலவன் கூறினார். நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் அப்போது அனைவரையும் நேரில் சந்திக்கலாம். 

நூல் வெளியீட்டிற்கும் பல பதிவர்களை சந்திக்கும் வாய்ப்பை உருவாக்கியதற்கும் திரு விசுவாசம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

இன்றைய நிகழ்வின் புகைப்படங்கள் கீழே.