Thursday, April 23, 2020

ஜோதிகா சர்ச்சை - உண்மை என்ன?


ஜோதிகா இந்து கோயில்களை இழிவு படுத்தி விட்டார் என்று சங்கிகள் ஒரு சர்ச்சையை உருவாக்கி வருகின்றனர்.

ஒரு விருது விழாவில் பேசுகிற போது

"தஞ்சை பெரிய கோயிலுக்கு என்னை போகச் சொன்னார்கள். நான் ஏற்கனவே போயிருக்கிறேன். மிகவும் அழகாக இருக்கும். உதய்பூர் அர்ண்மனை போல நன்கு பராமரிக்கப்பட்டிருக்கும். மறு நாள் ஒரு அரசு மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அதன் நிலை அவ்வளவு மோசமாக இருந்தது. நான் பார்த்ததை எல்லாம் என் வாயால் சொல்ல முடியாது.

நாம் கோயிலுக்காக எவ்வளவோ செலவழிக்கிறோம், உண்டியலில் பணம் போடுகிறோம். பராமரிக்கிறோம். அது போலவே பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் செலவழிக்க வேண்டும்.

பள்ளிகளும் மருத்துவமனைகளும் கூட முக்கியம்தானே!"

இதுதான் அவர் உரையின் சாராம்சம். எந்த இடத்திலும் கோயில்களை இழிவுபடுத்தியோ, கோயில்களுக்கு செலவழிக்காதீர்கள் என்றோ சொல்லவேயில்லை.

கோயில்களுக்கு தரும் முக்கியத்துவத்தை பள்ளிகளுக்கும் மருத்துவம்னைகளுக்கும் அளியுங்கள் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது!

இந்த உண்மையைச் சொல்லி சங்கிகளால் வெறுப்பை வளர்க்க முடியாதல்லவா? அதனால் அவர் சொல்லாததை சொன்னதாக பொய் சொல்லி விஷப் பிரச்சாரம் செய்கிறார்கள். 

"வாட்சப் தமிழா" என்றொரு யூட்யூப் சேனல் பார்த்தேன். தமிழர் வரலாற்றையே  இழிவு படுத்தி விட்டதாகவும் ஜோதிகா சொல்லாததை எல்லாம் சொன்னதாக அவ, இவ என்று ஒருமையில் ஒரு ஜென்மம் அளந்து விட்டிருக்கிறது. அதற்கு பின்னூட்டமிட்டவர்களோ அதை விட கேவலமாக எழுதி வருகின்றனர். அசிங்கமாக பதில் போட்ட ஒரு அறிவாளி கூட  ஆதாரம் கேட்கவில்லை. ஆதாரம் கேட்டவர்களையும் கடித்துக் குதறி இருக்கிறார்கள். 

கோயில்களை விடவே கழிப்பறைகள் முக்கியம் என்று மோடி சொன்ன போது "பார்த்தாயா என் தலைவனை" என்று பெருமை பேசிய அதே ஜென்மங்கள்தான் "பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் அதே முக்கியத்துவத்தைக் கொடுங்கள் " என்று சொன்ன ஜோதிகாவை ஆபாசமாக திட்டுகிறார்கள்.

இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

அவர்களின் அறிவு இவ்வளவுதான் . . .


2 comments:

  1. இவர்களுக்கு கோவம் ஜோதிகா மேலேயோ அல்ல அவர்கள் பேசியதின் மேலேயோ இல்லை நண்பரே..

    எம்புட்டு தைரியம் இருந்தா அகரம் என்ற அமைப்பு வாயிலாக அனைத்து சமூகத்தினரையும் சூர்யா படிக்க வைக்கலாம் என்பதே இவர்களின் ஆதங்கம்.

    ReplyDelete
  2. இது தேவையற்ற மடைமாற்றம் அவர் சொன்னது தவறில்லைேயே
    ஆட்சியாளர்கள் கவனக்குவிப்பை மடைமாற்றியதாகவே உணர்ந்தேன்

    ReplyDelete