மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநிலக் குழு உறுப்பினர் தோழர் பத்ரி அவர்களின் முக நூல் பதிவை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.
பாஸ்டியர் ஆய்வகமும் கொரோனோவும்
பாஸ்டியர் ஆய்வகமும் கொரோனோவும்
பின்னே பி.மோகன் என்றொரு கம்யூனிஸ்ட்டும்..
மதுரையில் அந்த வீட்டுக்கு தோழர்களோடு போயிருந்தேன்.. எங்கள் அனைவரையும் வரவேற்ற அந்த எளிய மனிதர் எங்களுக்கு நாற்காலிகளை எடுத்துப் போட்டுவிட்டு உள்ளே போனார்.. கூட வந்தவர்கள் கேட்டார்கள்.. எம்.பி.மோகன் எப்போ வருவார் என... இதோ நமக்கு நாற்காலியை எடுத்துப் போட்டுட்டு உள்ள போனார்ல.. அவர்தான் MP.. என நான் சொன்ன பதிலை நம்பமுடியாமல் என்னை மலைப்போடு பார்த்தனர்.. ஆடம்பரமான தமிழக அரசியல் சூழலில் அப்படியொரு அதிர்ச்சி அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது நியாயம் தானே..
குன்னூரில் உள்ள ஆய்வகத்தை முழுவதுமாக மூடிவிட்டு செங்கல்பட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் மருந்துகளை தயாரிக்கப் போவதாக மத்திய அரசு திட்டமிட்டிருந்த விஷயங்களை முழுவதும் கேட்டார்.. ஓரிரு நாளில் குன்னூருக்கு வந்து தொழிலாளர்கள் - அதிகாரிகளை சந்தித்து சக்தியான போராட்டங்களை நடத்திட கேட்டுக் கொண்டதோடு, கட்சியும் களத்தில் இறங்கி, மாவட்டத்தின் அனைத்து தரப்பு மக்களிடமும் பிரச்னைகளை விளக்கி தொடர்ச்சியாக போராடவும் கேட்டுக் கொண்டார்... நாடாளுமன்றத்திலும் அவர் உட்பட CPM உறுப்பினர்கள் வலுவாக தலையீடு மேற்கொண்டனர்.
கட்சியும் - வர்க்க வெகுஜன அமைப்புகளும் முன்னெடுத்த அனைத்து போராட்டங்களுக்கும் மாவட்ட மக்கள் பேராதவு அளித்தனர்.. பல மாதங்கள் நீடித்த போராட்டம் வெற்றியில் முடிந்தது.. குன்னூர் ஆய்வகத்தை மூடப்போவதில்லை என்பதோடு ரூ.234 கோடி ரூபாய் நிதி அளித்து மேலும் மேம்படுத்தப்படும் என அரசு அறிவித்தது..
நாடாளுமன்ற சுகாதார நிலைக்குழுவில் இருந்த பிருந்தா காரத், டி.கே.ரங்கராஜன் MP, எம்.கே.பாந்தே, G.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் நேரில் வந்து போராட்டங்களில் பங்கேற்றதோடு, உரிய தலையீடுகளையும் மேற்கொண்டனர்.. நாடு முழுவதுமுள்ள மருத்துவர்கள் ஆதரவு கரம் நீட்டினர். Frontline இதழ் தனியாக ஒரு இதழையே வெளியிட்டது..
இதோ.. பாஸ்டியர் ஆய்வகம் மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறது...கொரோனா நோய்க்கான பரிசோதனைகளையும் துவக்கியிருக்கிறது..
பின் குறிப்பு - " அரசியல் கட்சிகளுக்கு என்னங்க தெரியும்.. இது மருத்துவம் தொடர்பான பிரச்னைங்க.. " என முத்துக்களை உதிர்த்த மாண்புமிகு முதல்வரின் கட்சியினர் கடைசி வரையிலும் எந்த போராட்டங்களிலும் பங்கேற்கவில்லை என்பதும் நினைவில் வந்து போகிறது..
மனிதநேயமிக்க மதுரை மண்ணின் மாமனிதரல்லவா அவர்
ReplyDelete