Showing posts with label திரையுலகம். Show all posts
Showing posts with label திரையுலகம். Show all posts

Wednesday, May 15, 2024

தமிழ் சினிமாவை யார் அழிக்கிறார்கள்?

 


சியல்லோ கார்களை எல்லாம் பள்ளத்தாக்கில் கவிழ்த்து அழிப்பதுதான் பிரம்மாண்டம் என்று நினைத்து கே.டி.குஞ்சுமோனை கடனாளியாக்கி திரை உலகத்திலிருந்து துரத்திய பிரவீண் காந்த் என்ற இயக்குனர் பேசிய ஒரு காணொளியையும் கவுண்டன்பாளையம்  என்ற படத்தின் ட்ரெய்லரையும் பார்க்க     நேரிட்டது.

இத்தனை ஆண்டுகளில் தமிழ் சினிமா ரொம்பவும் சூப்பரா சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக, மக்களின் பிரச்சினைகள பேசி விவாதித்தது போலவும் வெற்றி மாறன், பா.ரஞ்சித் ஆகியோர் படமெடுக்க ஆரம்பித்த பின்புதான் தமிழ் சினிமா அழிந்து கொண்டிருப்பதாக அந்த மனிதனின் பேச்சு அமைந்திருந்தது.

விஜயினுடைய மொக்கைப்படங்களாக பலரும் சுறா, வில்லு, குருவி என்று சொல்வார்கள். என்னைப் பொருத்தவரை அப்படங்களை விட மிகவும் மொக்கையான படங்கள் திருப்பாச்சியும் சிவகாசியும். அதே மாதிரி அஜித்தின் திருப்பதி இன்னொரு கொடுமை. இந்த படங்களை எல்லாம் எடுத்த பேரரசு இயக்கிய கவுண்டன் பாளையம் படம் தொடர்பான நிகழ்ச்சியில்தான் பிரவீன் காந்தி பேசியுள்ளார்.

அப்போ அந்த படம் என்ன தமிழ் சினிமாவை அழிவிலிருந்து காப்பாற்ற வந்த அபூர்வ தேவதையா?

மருத்துவர் ஐயாக்களின் அபாண்டமான குற்றச்சாட்டுக்களுக்கான நாடகக் காதல் என்பதை மொக்கையாக சொல்கிறது ட்ரெய்லர். ஓசிகே கட்சி என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை வம்புக்கு இழுக்கிறது. மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை காம வெறியர்களாக சித்தரித்து பாலியல் வன்புணர்ச்சி செய்பவர்களாக காண்பிக்கிறது.

இரண்டு நிமிட ட்ரெய்லரிலேயே இரண்டு லாரி விஷத்தை கக்குகிறார்கள். அப்பட்டமாக தலித் மக்கள் மீது மற்றவர்கள் வெறுப்படைவது போல ஆதிக்க ஜாதி வெறியை ஊட்டுகிறார்கள்.

பேரரசு ஒரு பாஜக உறுப்பினர். பிரவீன் காந்த் ரஜினி கட்சி ஆரம்பித்திருந்தால் அதன் கொபசெ ஆகியிருப்பார். இத்திரைப்படத்தில் நடிக்கும் ரஞ்சித் வாயைத் திறந்தாலே பிற்போக்குத்தனத்தை வாந்தி எடுப்பார்.

இவர்கள் யாரை குறை சொல்லுகிறார்கள்?

பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த ஆண்டைகளையும் வெண்மணி தீயில் விவசாயத்தொழிலாளர்களை கொளுத்திய பண்ணையார்களையும் இருக்கும் சொற்ப நிலத்தையும் பறிக்க துடிக்கும் எஜமானர்களை அசுரன் என்ற அற்புதமான படத்தில் அம்பலப்படுத்திய வெற்றிமாறனை. ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை திரையில் வெளிப்படுத்துவர்களை.

இது இவர்களின் குரல் மட்டுமல்ல. ஒட்டு மொத்த சங்கிகளின் குரல், சனாதனவாதிகளின் குரல், ஜாதிய மேலாதிக்கத்தை நிலை நிறுத்த வெறி கொண்டலையும் ஆதிக்க சக்திகளின் குரல். பொது வெளியில் உரக்க ஒலிக்கும்  ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல்  திரையில் ஒலிக்க்க் கூடாது என்று விரும்புகிற பிற்போக்குத்தனமாவர்கள்.

தமிழ் சினிமா இது போன்ற கூட்டணிகளால்தான் நாளை நிச்சயம் அழிவும். ஆனால் இந்த கூட்டணியும் கட்டாயம் அழிந்து போகும், இந்த கூட்டணி மட்டுமல்ல எல்லா கிரிமினல் கூட்டங்களும் கூட்டுக் களவாணிகளும்  நிச்சயம் அழிந்து போவார்கள்.

Sunday, February 15, 2015

காசு பார்க்கும் வித்தை தெரிந்தவர்கள்




 http://www.thiraivideo.com/video/wp-content/uploads/2015/02/Evergreen-80s.jpg

நண்பர்கள்  சாதாரணமாக சந்திப்பதைக் கூட ஒரு நிகழ்ச்சியாக்கி பதிவு செய்து விளம்பரதாரர் நிகழ்ச்சியாக்கி காசு பார்க்கும் வித்தை தெரிந்தவர்கள்  தமிழ்த் திரைப்பட உலகத்தினரும், தமிழ்த் தொலைக்காட்சி சேனல்களும்தான்.

இப்போது சன் டி.வி யில் நடந்து கொண்டிருக்கும் எவர்கிரீன் 80 நிகழ்ச்சியை பார்க்கும் போது அப்படித்தான் தோன்றியது.

Thursday, October 17, 2013

ஏமாற்றி விட்டாரே சொய் சொய் பாடலாசிரியர்


 

தற்போதைய திரைப்பாடல்கள் மீது அவ்வளவு ஈர்ப்பு கிடையாது.
வயது அதிகமாகி வருவது கூட காரணமாக இருக்கலாம். ஆனால்
சமீபத்தில் நான் ரசித்த ஒரு பாடல் கும்கி படத்தில் வரும்
சொய் சொய் பாடல்.

கச்சிதமான தாளம், இயல்பான குரல் இவையோடு என்னை
மிகவும் ரசிக்க வைத்தது அந்த பாடலின் முதல் வரிகள்தான்.

" கையளவு நெஞ்சத்திலே கடலளவு ஆசை வச்சான் "

பரவாயில்லடா, இப்ப வர பாட்டுல கூட அழகா எழுதியிருக்கான்
என்று என் மகனிடம் சொல்லியிருக்கிறேன்.

ஆனால் இப்போது மிகுந்த அதிர்ச்சியில் உள்ளேன்.

கவியரசு கண்ணதாசன் பாடல்கள் பற்றிய ஒரு ஆய்வு நூலை
இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் வாங்கியிருந்தேன். படிக்க
காத்திருக்கும் நூல்களில் அதுவும் ஒன்று. இன்று கவியரசு
நினைவு நாள் என்பதால் அவரைப் பற்றி எழுத ஏதாவது
புதிய செய்தி கிடைக்கிறதா என்று பார்க்க அந்த புத்தகத்தை
புரட்டினேன்.

அப்போதுதான் தெரிந்தது.

எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி

என்ற பாடலிலே 

கையளவு உள்ளம் வைத்துக்
கடல் போல் ஆசை வைத்து
விளையாடச் சொன்னானடி

என்ற வரிகள் வருகிறது. 
சே! நாம் ரசித்த ஒரே ஒரு புதுப் பாடலும்
இப்படி ஆகி விட்டதே என்று புலம்பிய போது
என் மனைவி ஒரு தகவல் சொன்னார்கள்.

அது கே.பாலசந்தரின் தொலைக்காட்சி தொடரான

கையளவு மனசு தொடரின் முகப்புப் பாடல்

"கையளவு கையளவு மனசு
அதில் கடலளவு கடலளவு கனவு"

என்றுதான் தொடங்கும் என்றார்கள்.

ஆனால் இப்போதைய பாடலாசிரியர்களையும் 
குறை சொல்ல முடியாது.

கண்ணதாசன் எழுதாத பாடல்கள் கிடையாது,
பயன்படுத்தாத வார்த்தைகள் கிடையாது,
அவர் சொல்லாத உவமைகள் கிடையாது.
அவருக்கு உதிக்காத கற்பனைகள் கிடையாது.

சிவாஜி கணேசனின் தாக்கம் இல்லாத நடிகன் கிடையாது.
கண்ணதாசனின்  தாக்கம் இல்லாத கவிஞன் கிடையாது.

நீ நிரந்தரமானவன், அழிவதில்லை
எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை.



                                                                                             

Tuesday, June 25, 2013

எப்படி மனம் வந்தது அந்த பெரிய மனிதருக்கு?

மறைந்த நடிகர் மணிவண்ணன் பற்றி நடிகர் இயக்குனர்
பார்த்திபன் கூறியது பற்றி இப்போதுதான் முகநூலில்
பார்த்தேன். உண்மையிலேயே மனம் நெகிழ்ந்து போனது.

இப்படிப்பட்ட ஒரு மனிதரைப் பற்றி தரக்குறைவாக,
அதுவும் ஆயிரக்கணக்கானவர்கள் படிக்கும் ஒரு
வார இதழில் எழுத அந்த பெரிய மனிதர் பாரதிராஜாவிற்கு
எப்படித்தான் மனம் வந்ததோ?

இதோ பார்த்திபன் எழுதியது...

"நான் டப்பிங் பேசிக் கொண்டிருந்த காலத்தில்...

ஒரு கதாபாத்திரத்திற்கு என் குரல் பொருத்தம் என முடிவு செய்து ரூ 500 முன் பணம் கொடுத்தார்கள். அதற்கு 10% கமிஷன் யாருக்கோ கொடுக்க வேண்டும் என்ற சூட்சமம் அறியாத நான், டீ கடன்,பன் கடன்,டிபன் கடன் இப்படி எல்லாக் கடன்களையும் அடைத்து விட்டு டப்பிங் அரங்கிற்கு சென்றேன். இன்றே அந்த கேரக்டருக்கு பேசி முடித்து விட்டால் மீதி 1500 கிடைக்கும் அதில் தீபாவளியை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என்ற 1000 கற்பனையில் உதடு தானாய் விசிலியது.

ஆனால் எனக்கு பதில் அந்த கேரக்டருக்கு வேறு யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள். கேட்டால் என் குரல் பொருந்த வில்லையாம்(10%)!
கலங்கிய படி வாசலில் நின்றிருந்தேன்.

அப்படத்தின் இயக்குனர் வந்தார். விஷயம் அறிந்து என்னை சமாதானப் படுத்தினார். அடுத்த படத்தில் டப்பிங் வாய்ப்பு தருவதாக சொன்னார். நான் சொன்னேன் அதற்காக நான் அழவில்லை நீங்கள் கொடுத்த முன் பணத்தை நான் செலவழித்து விட்டேன், உடனே என்னால் திருப்பி தர முடியாது நான் என்ன செய்வேன் என்றேன்.

என் தோளைத் தட்டி கொடுத்து "பரவாயில்ல போங்க" என்று சிரித்தார். அந்த சிரிப்பு மட்டும் இன்னமும் என் எண்ணத்தில் மறையவே இல்லை. அந்த இயக்குனர் சற்று முன் மறைந்த மணிவண்ணன்!

- நடிகர் பார்த்திபன்.