Showing posts with label அரசு மருத்துவமனை. Show all posts
Showing posts with label அரசு மருத்துவமனை. Show all posts

Monday, November 18, 2024

உபியில் தொடரும் குழந்தை மரணங்கள்

 


மேலே உள்ளது உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு.

கோரக்பூர் மருத்துவமனை துயரத்தினை தொடர்ந்து இங்கேயும் மிகப் பெரிய மோசமான நிகழ்வு நடந்தது. 

கடந்த வெள்ளிக்கிழமையன்று அங்கே நடத்த தீ விபத்தில் புதிதாய் பிறந்த 11 குழந்தைகள் உட்பட 16 குழந்தைகள் இறந்து விட்டது. கிட்டத்தட்ட நாற்பது குழந்தைகள் தப்பித்து விட்டது. )இதில் ஒரு துயரக்கதை ஒன்றுண்டு. அது பற்றி தனியாக)

மருத்துவமனையின் பராமரிப்புப் பணிகள் நடந்து பல ஆண்டுகளாகி விட்டது விபத்துக்கு முக்கியக்காரணம். தீவிர சிகிச்சைப் பிரிவில் 16 குழந்தைகளுக்கு மட்டுமேயான வசதி உண்டு. ஆனால் அது போல நான்கு மடங்கு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் என்பதால் ஒரே இன்குபேட்டரில்  மூன்று, நான்கு குழந்தைகள் இருக்குமாம்.

உத்திரப் பிரதேசத்தில் பல்வேறு மருத்துவமனைகளை இதே மோசமான தரத்தில் வைத்துள்ளதுதான் மொட்டைச்சாமியாரின் சாதனை.

இத்தனை குழந்தைகள் இறந்த பின்பு அவர் அங்கே போனாரா?

ஜார்கண்டிலும் மகாராஷ்டிராவிலும் தேர்தல் பிரச்சாரம் செய்வதை விடவா இதெல்லாம் முக்கியம்!


Wednesday, November 16, 2022

உங்களை நம்பித்தானே டாக்டர்?

 


இளம் கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம் துயரமும் கோபமும் தருகிறது.

ஜவ்வு கிழிந்ததற்கு தரப்பட்ட சிகிச்சை மரணத்திற்கு கொண்டு சென்றுள்ளது. மருத்துவர்களின் அலட்சியத்தைத் தவிர வேறெதுவும் காரணமில்லை என்பதுதான் மிகவும் கோபம் அளிக்கிறது.

அந்தப் பெண் தன் உடல் நலன், எதிர்காலம், உயிர் எல்லாவற்றையும் உங்களிடம் முழுமையாக நம்பி அளித்ததே,, அந்த நம்பிக்கைக்கேற்றார் போல பொறுப்போடு நடந்து கொண்டிருக்க வேண்டாமா? இந்திய கால்பந்து அணியில் இணைய வேண்டுமென்ற கனவை சுவாசித்துக் கொண்டிருந்த அந்தப் பெண் தன் காலை அகற்றிய போதே இறந்து போயிருப்பாள்!

அந்தப் பெண்ணின் நம்பிக்கை மட்டுமா தகர்ந்தது?

கொரோனா காலத்திற்குப் பின்புதான் மக்களுக்கு அரசு மருத்துவமனைகள் மீது நம்பிக்கை வரத் தொடங்கியது. அந்த நம்பிக்கையையும் சிதைக்குமே உங்கள் அலட்சியம்!

Monday, November 2, 2020

கொலைக்கு சமமன்றோ?

  


அரசு மருத்துவமனைகளின் பணியாற்றுபவர்களின் அர்ப்பணிப்பு உணர்வை நாம் புரிந்து கொள்ள,

 அரசு மருத்துவமனைகளின் தேவையையும் முக்கியத்தையும் நாம் உணர்ந்து கொள்ள

 ஒரு கொரோனா வர வேண்டி உள்ளது.

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்களின் முக்கியமான பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 “உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் ஒருவரிடம் மருத்துவம் பார்க்க இயலாது என்று கை விரிப்பது ஒரு கொலைக்குச் சமம்”

 எவ்வளவு காத்திரமான வரிகள் இவை!

 இந்த கொரோனா காலத்தில் தனியார் மருத்துவ மனைகள் எத்தனை கொலைகளை நிகழ்த்தியுள்ளார்கள் என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.



 "உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் ஒருவரிடம் மருத்துவம் பார்க்க இயலாது என்று கைவிரிப்பது ஒரு கொலைக்குச் சமம்" !

 குடும்பத்தினரால் கைவிடப்பட்ட 30 வயோதிகர்களை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தொடர்ச்சியாக பராமரித்து கொண்டிருக்கிறது என்கிற செய்தி நேற்றைய புதிய தலைமுறை யில் ஒளிபரப்பாகியது .அந்த செய்தியை வெளிக்கொண்டு வந்த திரு. சுகன்யாவிடம் Suganya Mercy Bai  நான் பேசும்போது

  "உண்மையில் அவர்களை பராமரித்து கொண்டிருக்கும் 20 வயது இளைஞர்  ஒருவரது பெயரைச் சொல்ல மறந்து விட்டோம் .என்னால் அந்த இடத்தில் இரண்டு மணி நேரம் கூட நிற்க முடியவில்லை .ஆயினும் அந்த இளைஞர்(கௌரிசங்கர் -வார்டுபாய்) தொடர்ச்சியாக இந்தப் பணியை செய்து கொண்டிருக்கிறார்" என்று கூறினார்.

  அதோடு மட்டுமின்றி பொதுவாக அவர்களைப் பராமரிக்க  ராஜீவ்காந்தி மருத்துவமனை எடுத்துக் கொண்டிருக்கும் பல்வேறு முயற்சிகளையும் தெரிவித்தார்.

 உண்மையிலேயே இப்படி ஒரு பணியை எந்த தனியார் மருத்துவமனையாவது செய்கிறதா என்று தேடினால் அப்படி ஒரு மருத்துவமனையை நீங்கள் பார்க்கவே முடியாது

 நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். இந்த பேச்சின் ஊடாக சுகன்யா "அரசு மருத்துவமனைகள் எத்தனை உயிர்களை எப்படி எல்லாம் போராடி பாதுகாத்துக் கொண்டிருக்கின்றன என்பதை நேரில் சென்று நீங்கள் பார்க்கவேண்டும்" என்று குறிப்பிட்டார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன்கள் தான் அங்கு செல்லும் நேரமெல்லாம் மருத்துவமனையிலேயே இருக்கிறார்கள். இப்படி ஒரு அர்ப்பணிப்பு பாராட்டப்படாமலேயே இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். அவர் சொன்னது உண்மைதான். ஏதாவது மருத்துவமனையில் தவறுகள் நேர்ந்து விட்டால் உடனடியாக நாம் விமர்சிக்கும் அதே சமயம் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி இத்தகைய மருத்துவமனைகளில் அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளை  நோக்க பூர்வமாக இல்லை என்றாலும் கவனம் செலுத்துவது இல்லை .

 இது குறித்து மேலும் விபரங்களை தெரிந்து கொள்வதற்காக சிலரிடம் பேசியபோது ராஜீவ்காந்தி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருப்பவர்கள் 575 பேர் என்று குறிப்பிட்டார் .வேறு சிலரும் கூட இதுபற்றி கூறும்போது இந்தியாவிலேயே வேறு எங்கும் இத்தனை நோயாளிகள் இந்தக் காலத்தில் டயாலிசிஸ் செய்து கொள்வதில்லை என்று குறிப்பிட்டார்கள். இதற்கு காரணம் என்ன திடீரென ஏன் இந்த எண்ணிக்கை இப்படி உயர்ந்திருக்கிறது என்று கேட்டபோது இவர்களில் பெரும்பாலானோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தவர்கள் என்றும் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது ஏதோ ஒரு வகையில் தொற்று ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனைகளால்  கைவிடப்பட்டவர்கள் என்றும் இன்னும் சிலருக்கு நோய்த் தொற்றுஏற்பட்டால்  என்ன செய்வது என்பதால் தனியார் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் என்றும் குறிப்பிட்டார்

 ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள ஒரு மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது இதை எப்படி உங்களால் சாதிக்க முடிந்தது என்று கேட்டேன் அவர் தெரிவித்த பதில்

 " இது வேறு ஒரு தொழில்  இல்லையே! உயிர் காக்கும் பணி அல்லவா உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் ஒருவர் உங்களிடம் வந்து நிற்கிறபோது மருத்துவம் பார்க்க இயலாது என்று கைவிரிப்பது ஒரு கொலைக்குச் சமம் எனவே எங்களிடம் இருக்கக்கூடிய கட்டமைப்புகளையும் திறமையையும் வைத்துக்கொண்டு எப்படியாவது இந்த உயிர்களை காப்பாற்றுவதற்கு முயற்சிக்கிறோம்

 என்று கூறினார் .

 ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் Therani Rajan, மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உதவியாளர்கள் அனைவருக்கும் நாம் பாராட்டுகள்.வணக்கங்கள்.அன்பும் மகிழ்ச்சியும்