Showing posts with label விளம்பரம். Show all posts
Showing posts with label விளம்பரம். Show all posts

Sunday, November 16, 2025

விளம்பரம்னாலும் நியாயம் வேணாமாடா?


 இன்று காலையில் நாளிதழ் தாமதமாகத்தான் வந்தது. புதிதாக வெளியான திரைப்படத்தின் முதல் நாள், முதல் காட்சி பார்க்க கல்லூரி முதல்வர் கட் அடித்து விட்டு போனார் என்பது தலைப்புச்செய்தி.

இதெல்லாம் ஒரு தலைப்புச் செய்தியா என்று எரிச்சலுடன் பார்த்தால் முதல் பக்கத்தில் வந்தது ஒரு நூடுல்ஸின் விளம்பரம்  என்றும் எல்லா செய்திகளுமே கிறுக்குத்தனமான செய்திகளாகத்தான் இருந்தன.


மத்த செய்தியை எல்லாம் கூட ஏத்துக்கலாம். இந்தியாவோட ஒட்டு மொத்த உற்பத்தி (ஜி.டி.பி) வரலாறு காணாத அளவு உயர்ந்தது என்ற செய்தியை மட்டும் என்னால் மன்னிக்கவே முடியவில்லை.

மோடியோட ஆட்சியில பொருளாதாரத்தின் எல்லா அளவுகோள்களிலும் வீழ்ச்சிதான் ஏற்பட்டுள்ளதே தவிர எந்நாளும் உயர்ந்ததில்லை. உயரப் போவதும் இல்லை.

விளம்பரம்னாலும் ஒரு நியாயம் வேண்டாமாடா?

Thursday, March 13, 2025

"கறை" நல்லது, விளம்பரமும் . . .

 


ஹோலிப் பண்டிகையை முன்வைத்து சங்கிகள் தாங்கள் ஆளும் மாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீது புதிய அச்சுறுத்தல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். கலவரத்தீக்கு அடி கோலுகிறார்கள் காவிக் கயவர்கள். 

இப்படிப்பட்ட சூழலில் சர்ப் வெளியிட்டுள்ள புதிய விளம்பரம் மிகவும் சிறப்பாக உள்ளது, ஒற்றுமையை வலியுறுத்துகிறது.



பாருங்கள், பரப்புங்கள், அமைதியை நாம் விதைத்துக் கொண்டே இருப்போம் . . .



Friday, October 18, 2024

பஜாஜ் வீட்டுக்கு அமலாக்கப்பிரிவு போகலையா?

 


பஜாஜ் நிறுவனத்தின் முதலாளிகளில் ஒருவரான ராஜீவ் பஜாஜ், நான்கு வருடங்களுக்கு முன் சொன்ன ஒரு கருத்தை இப்போதுதான் பார்த்தேன்.

 


மோடியின் சத்தமான ஜால்ராவான, தன்னை மோடியின் நாய் என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட  அர்ணாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவிக்கு விளம்பரம் தர முடியாது என்று  சொன்ன ராஜீவ் பஜாஜின் வீட்டுக்கோ அலுவலகத்திற்கு ஏன் உங்கள் எடுபிடிகளாக இருக்கும் அமலாக்கத்துறை, வருமான வரித் துறை ஆகியோரை ஏன் இன்னும் அனுப்பவில்லை

Wednesday, August 14, 2024

வெயிகல்கவர்?????

 


நாளிதழுடன் வந்த விளம்பர நோட்டீஸில் அச்சிடப்பட்டிருந்த "வெயிகல்கவர்" என்ற வார்த்தையை மட்டும் முதலில் படித்து விட்டு ஒரு கணம் குழம்பிப் போனேன்.

படத்தைப் பார்த்ததும்தான் புரிந்தது. அது "VEHICLE  COVER"

அய்யா விளம்பரதாரர்களே, அச்சகத்தாரே, தமிழை கொஞ்சம் விட்டு விடுங்களேன். தமிழ் வாழ வேண்டும். 

Saturday, October 21, 2023

சங்கி விளம்பர ஏஜென்ஸி

 





பொட்டு வைக்காத பெண்களின் புகைப்படத்தை விளம்பரத்தில் வெளியிட்டதால் கஜானா ஜ்வெல்லரிக்கும் நல்லி சில்க்ஸுக்கும் எதிராக ட்வீட்டி அவர்களின் விளம்பர தூதராகினார் சங்கி எஸ்.ஆர்.சேகர்.

அடையார் ஆனந்த பவன் உரிமையாளர் தந்தை பெரியாரை பாராட்டி ஒரு வார்த்தை சொன்ன காரணத்திற்காக அந்த ஹோட்டலை புறக்கணிக்கச் சொல்லி சங்கிகள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அநேகமாக அதன் காரணமாகவே அந்த ஹோட்டலின் வணிகம் அதிகமாகும் என்று நினைக்கிறேன்.

இப்படியே இன்னும் எத்தனை நிறுவனங்களுக்கு சங்கிகள் விளம்பரம் தேடித் தரப்போகிறார்களோ!

பிகு: ஏ2பி ஹோட்டலின் இட்லி, சாம்பார், சாப்பாடு ஆகியவை சுமார்தான் என்றாலும் அவர்களின் காபி எனக்கு பிடிக்கும். பருப்பு போளி, தேங்காய் போளி ரொம்பவே பிடிக்கும்

Wednesday, June 1, 2022

எங்கதாம்பா படிச்சீங்க?????

 



ஒவ்வொரு வருடமும் சிவில் சர்வீஸஸ் தேர்வு, ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வு முடிவுகள் வந்ததும் பயிற்சிப் பள்ளிகள் தங்கள் வெற்றி மாணவர்கள் என்றொரு பட்டியலை நாளிதழ்களின் முதல் பக்கத்தில் பல வண்ண விளம்பரமாக அளிப்பார்கள்.

பல மாணவர்கள் எல்லா பட்டியலிலும் இருப்பார்கள்.

இந்த வருடம் சிவில் சர்வீஸஸ் தேர்வு முடிவுகளுக்குப் பின் வெளியான மூன்று விளம்பரங்களைப் பாருங்கள்.




 
6, 9, 12 இடங்களில் வந்தவர்கள் மூன்று விளம்பரங்களிலும் உள்ளார்கள். 

2,15,16,19 இடங்களில் வந்தவர்கள் தங்கள் பள்ளியில் படித்ததாக இரண்டு விளம்பரங்கள் சொல்கிறது.

ஏம்பா, நீங்க நிஜமாக எங்கதான் படிச்சீங்க? ஒன்றிலா? இரண்டிலா? இல்லை மூன்றிலுமா?

இல்லை மூன்றிலும் பணம் கட்டி கோனார் நோட்ஸ் போல ஏதாவது வாங்கிக் கொண்டீர்களா?

ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் படிக்க எப்படித்தான் நேரம் கிடைத்ததோ? செலவு செய்ய பணம் கிடைத்ததோ?

பயிற்சி மையங்களில் படித்தால்தான் தேர்வு என்றொரு நிலை வந்தால் நாளை சிவில் சர்வீஸஸ் தேர்வுகளிலும் பணம் படைத்தவர்கள்தான் வெற்றி பெற முடியும் என்றாகி விடும். 

இந்த விளம்பரங்களைப் பார்த்தால் அந்த கவலைதான் வருகிறது. 

Wednesday, September 22, 2021

காந்தி வேட்டியின் விளம்பரத்தூதர் அல்ல . . .

 




மகாத்மா காந்தி நூறாண்டுகளுக்கு முன்பு இந்த நாளில்தான் மேற்கத்திய ஆடைகளை துறந்து அரை ஆடை அணியத் தொடங்கினார். மதுரையில் ஒரு விவசாயியைப் பார்த்து அவர்களின் துயரங்களை அறிந்து அவர்கள் நிலை மேம்படும் வரை அரை ஆடை மட்டுமே அணிவேன் என்று உறுதியேற்றார்.

 இந்த சம்பவத்தை நினைவு படுத்துவது நல்லது. அதுவும் ஒவ்வொரு வேளையும், ஆடம்பர உடை உடுத்தும் அல்பத்தனமிக்கவர்கள் தலைமை தாங்கும் தேசத்தில் இந்த நிகழ்வு நினைவு படுத்தப் படுவது அவசியம்தான்.  ஆனால்  வேட்டிதான் காந்தியின் அடையாளம், காந்திதான் வேட்டியின் அடையாளம் என்று ஒரு வேட்டி நிறுவனம் காந்தியை தன் விளம்பர தூதுவராக மாற்றுவது என்பது ஏற்புடையதல்ல. காந்தியின் சிறப்பம்சங்கள் எவ்வளவோ இருக்க “ஸ்வச்ச பாரத்” என்று அவரை சுருக்க மோடி முயன்றது போலத்தான் இதுவும்.

 காந்தி ஏன் அரையாடைக்கு மாறினார் என்பதன் நோக்கத்தையே தொலைக் காட்சி விளம்பரங்களும் நாளிதழ் முதல் பக்க, முழு பக்க விளம்பரங்களும் சிதைத்து விடுகிறது.

 பிகு: இன்று காலை நாளிதழ்களில் வந்த விளம்பரம்தான் மேலே உள்ளது. அந்த நிறுவனத்திற்கு நாமும் விளம்பர தூதுவராக வேண்டுமா என்று அந்த நிறுவனத்தின் பெயரை மறைத்து விட்டேன்.

 

Thursday, January 7, 2021

எடப்பாடி நல்லா கொடுக்கறாரு பாதுகாப்பு



 காலையில் கதவைத் திறந்ததும் எரிச்சலூட்டியது இந்த படம்.



 இந்து ஆங்கில இதழின் முதல் பக்க விளம்பரத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பதில் இணையற்ற மாநிலமாக தமிழகம் வழி காட்டுகிறதாம்.

பொள்ளாச்சி பாலியல் கொடுமைகள் ஒன்று போதும் இந்த ஆட்சி யாருக்கு பாதுகாப்பு கொடுக்கிறது என்பதை சொல்ல? அதுவும் நேற்றுதான் அவர்கள் கட்சிக்காரன் கைது செய்யப்பட்டுள்ளான்.

இப்படியெல்லாம் விளம்பரம் கொடுக்க இவர்களுக்கு கொஞ்சம் கூட கூசாதா? 


Thursday, June 28, 2018

என்னதான் விளம்பரமென்றாலும் இப்படியா?



வாட்ஸப்பில் வந்தது.

யப்பா! விளம்பர இயக்குனர்களா,
உங்கள் கற்பனைக்கு அளவே கிடையாதா?
முடியலைப்பா!






Saturday, January 20, 2018

விளம்பரம்தான். அப்டியே ஷாக்காயிட்டேன்



வாட்ஸப்பில் வந்த ஒரு வீடியோ இது.

ஒரு பொருளின் விளம்பரம் இது

குளிர் கண்ணாடி?

கார்?

டயர்?

நீங்களே பாருங்கள்.

அப்படியே ஷாக்காயிடுவீங்க! என்னை மாதிரியே . . .




Sunday, November 5, 2017

இதை வச்சு என்னய்யா செய்யறது?




தீபாவளி சமயத்தில் வார இதழ்களோடு வந்த இலவசப் பொருள் இது. மூன்று இதழ்களுக்கு மூன்று இணைப்புக்கள். எல்லாமே ஐம்பது கிராம் குலாப் ஜாமூன் மிக்ஸ். ஒரே கம்பெனியுடையதுதான். ஐம்பது கிராமில் எதுவும் செய்ய முடியாது. இரண்டு ஜாமூன் வருமா என்பதே சந்தேகம். சரி மூன்று பாக்கெட் வந்துள்ளதே என்று பார்த்தால்

ஒன்று  எந்த ப்ளேவரும் இல்லாதது
இன்னொன்று ஆரஞ்சு ப்ளேவர்
மற்றொன்று ஸ்ட்ராபெரி

மூன்றையும் ஒன்றாகக் கலந்தால் எப்படி இருக்கும்!

தூக்கிப் போடவும் முடியலை. வீட்டிற்கு வெறும் அடைசல்தான். 

இப்படி பயன்படுத்த முடியாத ஒரு பொருளை தருவதற்குப் பதிலாக கொடுக்காமலே இருந்திருக்கலாம்.

Tuesday, November 29, 2016

மோடியின் முகத்தைக் காண்பிக்க

மோடியின் முகத்தைக் காண்பிக்க அவரது ஆட்சிக்கு வந்த நாள் முதல் செய்யப்பட்ட தொலைக்காட்சிக்கான விளம்பரங்களுக்கு மட்டும் செலவான தொகை எவ்வளவு தெரியுமா?

அதிகமில்லை ஜெண்டில் மேன் அன்ட் உமன் . . .

வெறுமனே ஒரு நாளைக்கு 1.40  கோடி ரூபாய்தானாம்.

இது அதிகாரபூர்வமான தகவல். தகவல் அறியும் சட்டத்தின் படி அரசே தந்துள்ள தகவல்.





 நாளிதழ் விளம்பரங்களுக்கான செலவு எவ்வளவு கோடியோ?

அப்படி என்னய்யா ஒரு விளம்பர மோகம்?

யார் காசுல யாருக்கு விளம்பரம்?

ஊதாரித்தனமான அரசாங்கம்.

இப்படி தொலைக்காட்சியிலும் நாளிதழிலும் கோடிக்கணக்கான ரூபாய் செலவழிச்சு காண்பிக்கிற முகத்தை ஏன்யா நாடாளுமன்றத்தில மட்டும் காண்பிக்க மாட்டேங்கறே?

அதுக்கும் காசு கொடுக்கனுமோ?

அங்க கூட டி.வி இருக்கே. அந்த டி.வி க்களில் இவர் முகம் அழகா தெரியாதோ?

இந்த லட்சணத்தில காவிங்க உபதேசம் செய்யவும், அடுத்தவங்களை விமர்சனம் செய்யவும் கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம வந்துடறாங்க. 

Saturday, September 3, 2016

மோடிக்கு கிடைத்த பேறு

உலகில் எந்த பிரதமருக்கும் கிடைக்காத பெரும் பேறு மோடிக்கு கிடைத்துள்ளது. ஒரு பிரதமராகவும் அதே நேரம் ஒரு பெரு முதலாளியின் விளம்பர தூதராகவும் செயல்படும் பிரதமர் வேறு யாராவது உண்டா? இதற்கு நீங்கள் வாங்கியது எவ்வளவு கோடி ரூபாய் சார்? மாத அடிப்படையிலா அல்லது ஒன் டைம் பேமெண்டா? சரியாக கணக்கில் வைத்து வரியெல்லாம் கட்டுவீர்கள் அல்லவா? 

 

Thursday, June 23, 2016

ஆனாலும் பாட்டி ஆக்ஷன் சூப்பர்




அலைபேசியிலிருந்த  பழைய புகைப்படங்கள், வீடியோக்களை நீக்கிக் கொண்டிருந்தேன். அப்போது தேர்தல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கஸ்தூரி பாட்டியின் வீடியோ கிடைத்தது. மீண்டும் ஒரு முறை போட்டுப் பார்த்தேன். 

இரு கட்சியின் விளம்பரங்களிலுமே பாட்டி சூப்பராகத்தான் நடித்துள்ளார். அவருக்கு கொடுத்த சம்பளமான ஆயிரத்து ஐநூறு ரூபாயும் ஆயிரம் ரூபாயும்தான் மிகவும் குறைவு. வெறும் இரண்டு வோட்டுக்கு செலவு செய்த தொகைதான்.

இந்த விளம்பரங்கள் மட்டுமல்ல, இன்னும் இரண்டு திரைப்படக் காட்சிகளும் வருகிறது. அதில் தனுஷ் நடிக்கும் படத்தில் பாட்டியின் நடிப்பு சூப்பரோ சூப்பர்.

இந்த காணொளியை அவசியம் பார்த்து ரசியுங்கள்.

 

Sunday, May 15, 2016

சன் டி.வி, பாஜக, காசு, துட்டு, பணம், மணி அல்லது ??????





கலைஞர் பிரச்சாரம் செய்கையில் அவரோடு நிழல் போல தயாநிதி மாறன் இருக்கிறார்.

கலாநிதி – தயாநிதி மாறன் பிரதர்ஸ்க்கு சொந்தமான சன் டி.வி யிலோ ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை பாஜகவின் தேர்தல் விளம்பரம் வந்தது.

அந்த விளம்பரம் திமுக வையும் சேர்த்தே தாக்கியது.

திமுக கூட்டணிக்கு எதிரான விளம்பரத்தை திமுக தலைவர் குடும்பத்தைச் சேர்ந்தவரின் தொலைக்காட்சியே ஒளிபரப்பியதே!

என்ன காரணம்?

வெறும் காசு, பணம், துட்டு, மணி, மணி மட்டும்தானா
இல்லை இவர்களுக்குள் வேறு ஏதாவது டீல் உண்டா?

பின் குறிப்பு 1: லக்கானி சார், இது தேர்தல் பிரச்சாரம் அல்ல

பின் குறிப்பு 2 : தலைவர்கள் பணத்திற்காக, வழக்கிற்காக என்ன வேண்டுமானால் டீலிங் செய்து கொள்வார்கள். இது புரியாத யாராவது ஒரு முட்டாள் உ.பி, அனானியாக வந்து அபத்தமாக உளருவார்கள் பாருங்களேன்.
 


Wednesday, February 24, 2016

திமுக வின் ஜெமோ பாணி தமிழ்த்துரோகம்




திமுக வின் தேர்தல் விளம்பரங்கள்தான் சமூக வலைத்தளங்களின் புதிய பரபரப்பு. ஜெயலலிதா மீது விமர்சனம் வைத்திட வேண்டும் என்ற ஞானோதயம் இப்போதாவது திமுக விற்கு வந்தது மகிழ்ச்சி. ஏனென்றால் மக்கள் நலக் கூட்டணி அளவிற்கு  ஜெ அரசை திமுக விமர்சிப்பதே இல்லையே என்ற புரிதலோ குற்ற உணர்ச்சியோ கொஞ்சம் கூட இல்லாமல் கீழ்த்தரமான முறையில் மக்கள் நலக் கூட்டணி மீதான தங்கள் எரிச்சலை, வயிற்றெரிச்சலை உடன் பிறப்புக்கள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

திமுக வின் விளம்பரம், அதற்கு அதிமுக வின் எதிர்வினை ஆகியவற்றை பார்க்கும் போது தேர்தல் நெருங்க நெருங்க இருவருமே தரம் தாழ்ந்து போவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

ஒரு தவறான முன்னுதாரணத்தை திமுக உருவாக்கியுள்ளது.

மேலே உள்ளது திமுக நேற்று ஹிந்து நாளிதழில் கொடுத்துள்ள விளம்பரம்.

தமிழ் வாசகங்களை ஆங்கில எழுத்துருக்களில் (Fonts) கொடுத்துள்ளர்கள்.

இந்த விளம்பரத்தை அவர்களால் தமிழிலேயே கொடுத்திருக்க முடியாதா? எதற்கு ஆங்கில எழுத்துருக்கள்? ஆங்கிலத்திலேயே மொழி பெயர்த்துக் கூட விளம்பரத்தைக் கொடுத்திருக்கலாமே?

தமிழ் எழுத்துருக்கள் அவசியமில்லை, ஆங்கில எழுத்துருக்களையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஜெயமோகன் சொன்ன அபத்தமான ஆலோசனையை திமுக ஏன் பின்பற்றுகிறது? தமிழை கொல்லும் முயற்சியல்லவா இது? தமிழினக் காவலர் என்று சொல்லிக் கொள்பவர் இதை ஊக்குவிக்கிறாரா?

ஜெயமோகன் தனது அரிய ஆலோசனையைச் சொன்ன போது அவருக்கு எதிராக அப்போது வீரமாக பொங்கிய திமுக வலைத்தள போராளி மனுஷ்ய புத்திரன் உள்ளிட்டவர்கள் இதை மட்டும் ஆதரிக்கிறார்களா?

இந்த விளம்பரம் கண்டிப்பாக திமுக தமிழிற்கு செய்துள்ள துரோகம்.