Showing posts with label ரஜினிகாந்த். Show all posts
Showing posts with label ரஜினிகாந்த். Show all posts

Thursday, November 28, 2024

சூர்யா - நீங்கள் வொர்த்தில்லை சங்கிகளே!

 


சூர்யாவும்  ஜோதிகாவும் நேற்று திருப்பதி கோயிலுக்கு போய் விட்டார்களாம். எட்டு மணிக்கு பாடத்துவங்கும் வெள்ளியங்கிரி போல சங்கிகளும் ஆரம்பித்து விட்டார்கள்.

கங்குவா தோல்வியால் அடிபட்டதால் புத்தி வந்து சனாதனத்திடம் அடிபணிந்து விட்டார்கள் என்றும்  கோயிலுக்கு செலவழிக்காதே என்று சொன்னதற்கு ஜோதிகா மன்னிப்பு கேட்காவிட்டால் கங்குவா போல எல்லா படங்களையும் தோல்வியடைய வைப்போம் என்று பீற்றல் பெருமித மிரட்டல் வேறு.

ஒரு பொய்யை திரும்ப திரும்பச் சொல்லி அதை உண்மையாக முயலும் சங்கிகளின் உத்தி இது.

ஜோதிகா சொன்னது என்ன? அந்த காணொளியை நான் முழுமையாக பார்த்தேன்.

“தஞ்சை பெரிய கோயிலுக்குச் சென்றிருந்தேன். அது மிகவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டிருந்தது. மறுநாள் அதே தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பு. மிகவும் மோசமான முறையில் புதர் மண்டிப் போய் பாம்புகள் உலாவும் இடமாக அது இருந்தது. கோயிலை பராமரிப்பதில் காண்பிக்கும் அதே அக்கறையை மருத்துவமனையை பராமரிப்பதிலும் காண்பிக்க வேண்டும்.”

இதில் என்ன தவறு உள்ளது?

கோயிலுக்கு போகாதே என்று சொன்னாரா அல்லது கோயிலுக்கு பணம் கொடுக்காதே என்று சொன்னாரா?

ஆனால் சங்கிகள் சொல்லாத ஒன்றை சொன்னதாக மீண்டும் மீண்டும் பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். மோடியை நல்லவர், வல்லவர் என்று சொல்லும் கூட்டத்திடம் நேர்மையை எதிர்பார்க்க முடியுமா என்ன? அவர்கள் சொல்வது பொய்,பொய்யைத் தவிர வேறில்லை.

நாங்கள் கோயிலுக்கு போக மாட்டோம் என்றோ அல்லது கடவுள் நம்பிக்கை கிடையாது என்றோ எப்போதுமே சொல்லாதவர்கள் கோயிலுக்கு சென்றதை ஏளனம் செய்வது வன்மம் இன்றி வேறில்லை.

நிற்க

கங்குவா சங்கிகளால்தான் தோற்றதா?

படம் வெளிவருவதற்கு முன்பு ஓவர் ஹைப்பை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கொடுத்திருந்தார். வாயை பிளந்து பார்ப்பீர்கள் என்று சூர்யா சொன்னார். எனக்கு சிரிப்புதான் வந்தது.

ஏனென்றால் அஜித்தின் சில மொக்கைப் படங்களையும் ரஜினிகாந்தின் மோசமான மொக்கைப்படமான அண்ணாத்தை யும் இயக்கிய சிறுத்தை சிவா இப்படத்தின் இயக்குனர் என்பதுதான் காரணம்.

அஜித், ரஜினி போல சூர்யாவையும் வச்சு செய்திட்டார் சிவா.

கொடுத்த பில்ட் அப் போல படம் இல்லாததால் கங்குவா தோற்றது.

சரியில்லாத படம் என்பதால் மட்டுமே தோல்வியே தவிர சங்கிகள் காரணமல்ல, அதே போல பாமக வகையறாக்களும் காரணமில்லை. அப்படி அவர்களால் ஒரு படத்தை தோல்வியடையச் செய்ய முடியுமென்றால் வெற்றி பெறச் செய்யவும் முடியுமல்லவா? ஏன் சங்கி, பாமக கருத்தியலை கொண்டு வெளிவந்த மோகன்.ஜி யின் அனைத்து படங்களும் மரண அடி வாங்கியது?

ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய இடத்தில் சங்கிகளோ பாமகவோ இல்லை.

அந்த அளவுக்கு அவர்கள் வொர்த் இல்லை.



பிகு : எட்டு மணிக்கு வெள்ளைச்சாமிதானே பேசுவாரு, இதென்ன வெள்ளியங்கிரி என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். “வைதேகி காத்திருந்தாள்”  வெள்ளைச்சாமி விஜயகாந்த் பாடலை மக்கள் ரசிப்பார்கள். ஆனால் “பூவே உனக்காக” வெள்ளியங்கிரி மீசை முருகேஷ் பாட வாய் திறந்தால் மக்கள் தெறித்து ஓடுவார்கள். அவர் பாடல் போலத்தான் சங்கிகளின் பதிவுகளையும் சகிக்க முடியாது.

Saturday, April 27, 2024

செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் . . .

 

மகேந்திரனின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும் படத்தில் இளையராஜாவின் இசையில் கண்ணதாசனின் வரிகளில் உருவான "செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது வீசுதம்மா" பாடலின் வயலின் வடிவம் என் மகனின் கைவண்ணத்தில் . . .

யூட்யூப் இணைப்பு இங்கே . . .

Sunday, February 4, 2024

ஆலப் போல், வேலப் போல்

 


ரஜினிகாந்த் நடித்த எஜமான் திரைப்படத்தில் வரும் "ஆலப் போல. வேலப் போல்" பாடலின் வயலின் வடிவம் என் மகனின் கைவண்ணத்தில் . . .

யூட்யூப் இணைப்பு இங்கே

Sunday, January 28, 2024

உங்கப்பா சங்கிதான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

 


பாவம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அப்பாவை அசிங்கப்படுத்தினால் மனசு கஷ்டமாகத்தானே இருக்கும். நீங்க கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, உங்கப்பா சங்கிதான், சொல்லப்போனால் சங்கியை விட மோசமான சந்தர்ப்பவாதி. படம் ரிலீஸாகர சமயத்தில அவர் செய்யற ட்ராமாவை நீங்க செய்யறீங்க! அவ்வளவுதான்.

லால் சலாம் படத்தில நடிச்சதையெல்லாம் பெருசா பேசாதீங்க! "நிலம் எங்கள் உரிமை" ன்னு "காலா" படத்தில போராட்டம் நடத்திட்டு "போராட்டம், போராட்டம்னா தமிழ்நாடு சுடுகாடாயிடும்" ன்னு பேசியவர்தான இவரு!

அதனால இவர நம்பவே முடியாது . . .

Monday, January 15, 2024

ஆட்டுக்காரன் -ரஜினி-விஷமூர்த்தி-பொய்

 கீழே உள்ள இரண்டு படங்களையும்  பாருங்கள். ஆட்டுக்காரன் பேசுவது மட்டும் பொய்யல்ல, ஆட்டுக்காரனை பற்றி பேசப்படுவதும் பொய் என்பது தெளிவாகும்.

ரஜினி உண்மை பேசுவது கூட ஆச்சர்யமாக இருக்கிறது. அதிலென்ன ஆதாயம் அவருக்கு இருக்கிறதோ! விஷமூர்த்தி அசிங்கப்பட்டது சந்தோஷம்.







Sunday, October 29, 2023

ரத்தமாரே, ரத்தமாரே

 


ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் வரும் "ரத்தமாரே, ரத்தமாரே" பாடலின் வயலின் வடிவம் என் மகனின் முயற்சியில் . . .

யூட்யூப்  இணைப்பு இங்கே . . .

Monday, August 28, 2023

சாமியாரை கேட்டுச் சொல்லுங்க ரஜினி . . .

 


காலில் விழுந்து உங்கள் பக்தியை வெளிப்படுத்திக் கொண்டதால் உங்களிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டியுள்ளது ரஜினிகாந்த்.

நீங்கள் காலில் விழுந்தீர்களே மொட்டைச்சாமியார், அந்த யோகியார் பரிபாலனம் செய்யும் உபி யில் ஒரு சம்பவம்.



அங்கே ஒரு ஆசிரியை தன்னிடம் பயிலும் ஒரு மாணவன் வாய்ப்பாடு மறந்த காரணத்தால் மற்ற மாணவர்களை வைத்து அடித்திருக்கிறார். 

இஸ்லாமிய மாணவர்களை அப்படித்தான் நடத்த வேண்டும் என்று விஷத்தை வேறு கக்கியுள்ளார்.

PIZZA வை விட வேகமாக உடனடியாக குற்றவாளிகள் என்று அவர்கள் நினைப்பவர்களின் வீடுகளை இடிக்க புல்டோசரை அனுப்பும் மொட்டைச் சாமியார் அந்த ஆசிரியையின் வீட்டை இடிக்கவும் புல்டோசரை அனுப்பினாரா என்று கேட்டுச் சொல்லுங்கள் ர்ஜினிகாந்த்.

இல்லையென்றால்

இஸ்லாமியர்கள் வீடுகளை மட்டும் அவரின் புல்டோசர்கள் இடிக்குமா என்ற விபரத்தையாவது கேட்டுச் சொல்லுங்கள் மாணிக் பாஷா ....

Sunday, August 20, 2023

டைமில்லை ரஜினி , பிஸி . . .

 


கீழேயுள்ள படத்தை ஒரு தோழர் அனுப்பியிருந்தார். ஏன் இன்னும் இதைப் பற்றி எதுவும் எழுதவில்லை என்று வேறு கேட்டிருந்தார்.


ரஜினி முருகன் படத்தில் சூரி டைமில்லை என்று சொல்லும் காட்சியின் படத்தை அனுப்பினேன்.

ஆமாம் மொட்டைச்சாமியார் காலில் ரஜினி விழ்ந்ததில் அதிர்ச்சியடையவோ இல்லை ஆச்சர்யப்படவோ என்ன இருக்கிறது!

காரியமாக வேண்டுமென்றால் யார் காலிலும் விழத் தயங்காத சந்தர்ப்பவாதிதானே இவர்! இப்போது என்ன தேவையோ?

ரஜினி திரையில் கொலைகளை செய்பவர், பெண்களை இழிவாகப் பேசுபவர்.

மொட்டைச்சாமியார் நிஜத்தில் செய்பவர், புதைக்கப்பட்ட இஸ்லாமிய பெண்களின் சடலங்களை தோண்டி எடுத்து வன் புணர்ச்சி செய்யச் சொன்னவர்.

இதிலென்ன அதிர்ச்சியும்  விரிவான பதிவும் தேவைப்படுகிறது.


Monday, February 20, 2023

அபத்தமாக பேச வேண்டாம் ரஜினி

 


மயில்சாமியின் மறைவு ஒரு துயரம். அதற்கு ரஜினிகாந்த் கொடுத்துள்ள வியாக்யானம் அதை விட துயரம்.

திருப்பி ஆயிரம் கேள்விகள் கேட்கலாம். அசிங்கமாகி விடும் ரஜினி.

பாவம் வயதாகி விட்டது. ஓய்வெடுக்க வேண்டிய வேளையிலும் ஓயாமல் உழைக்க வைக்க்கிறார்கள். அதனால் சிந்தனைத் திறன் மழுங்கி விட்டது.

அதனால் பேசுவதை நிறுத்திக் கொள்ளவும் ரஜினி.

அதுதான் உங்களுக்கு நல்லது. . .

Tuesday, January 31, 2023

ரஜினி – கலாய்க்கலாம், விமர்சிக்கலாம்

 


தன்னுடைய பெயரையோ, புகைப்படத்தையோ, குரலையோ யாரும் பயன்படுத்தக் கூடாது என்று ரஜினிகாந்த் தடை விதித்துள்ளதாக முதலில் ஒரு செய்தி வந்தது. வணிக நோக்கத்திற்குத்தான் பயன்படுத்தக்கூடாது என்று இன்னொரு செய்தி விளக்கமாக சொன்னது.

 

இரண்டாவது செய்திதான் சரியானது என்றால் . . .

 

புதிய திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் பரபரப்பை உருவாக்குபவர் ரஜினிகாந்த் என்று தாராளமாக சொல்லலாம்

 

அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி பல வருடங்களாக தன் ரசிகர்களை ஏமாற்றி வந்தவர் ரஜினிகாந்த் என்று நீங்கள் நன்றாகவே விமர்சிக்கலாம்.

 

ஆணாதிக்க கருத்துக்களை தன் திரைப்படங்களில் வெளிப்படுத்துபவர் என்று கடுமையாகவே திட்டலாம்.

 

கொலுகைன்னாலே தலை சுற்றக்கூடியவர் ரஜினிகாந்த் என்று நையாண்டி செய்யலாம்.

 

தன் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளுக்கு வாடகை கட்டாததையோ அங்கே பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்காததையோ கண்டு கொள்ளாத கஞ்சப்பிசினாறி என்றும்      அழைக்கலாம்.

 

பட்டியலிட்டால்  பக்கங்கள் போதாது.. இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக்  கொள்கிறேன்.

 

ரஜினி மீண்டும் மாட்டாமலா போகப் போகிறார்! அப்போது பார்த்துக் கொள்வோம், மிச்சத்தை . . . அதற்குள்ளாக மேலே உள்ள படத்தில் இருப்பது போல செய்யாமல் இருக்க வேண்டும்.                                                                                                                                                                                                                                                                                                                                                                    

 

Monday, January 23, 2023

கலைஞர், விஷ மூர்த்தி, ரஜினி

 


மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய பாடலின் சில வரிகளை தமிழ்த்தாய் வாழ்த்துக்காக கலைஞர் வெட்டுவதா? முழுப்பாடலையும் நான் ஒலிக்க விடுகிறேன்  என்று விஷ மூர்த்தி துக்ளக் ஆண்டு விழாவில் பாட வைத்தார்.

 இதோ கலைஞர்  வெட்டிய அந்த வரிகள்.

 



“ஆரியம் போல உலக வழக்கொழிந்து  சிதையா உன்”  என்ற வரிகளை பாட வைத்து, சேம் சைட் கோல் போட்டு விட்டார் விஷ மூர்த்தி.

 “ஆரியம் அழிந்து சிதைந்து” என்ற வரிகள் வேண்டாமென்று கலைஞ்ர் பெருந்தன்மையோடு  நடந்து கொண்டால் அவரை மட்டம் தட்டுவதாகக் கருதி முட்டாளென காட்சியளிக்கிறார் விஷமூர்த்தி.

 துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியரே இவ்வளவு பெரிய முட்டாளென்றால் “துக்ளக் படிப்பவர்கள் எல்லாம் புத்திசாலிகள்” என்று சொன்ன ரஜினிகாந்த் மற்றும் துக்ளக் வாசகர்களின் புத்திசாலித்தனம் எப்படி இருக்கும் !


Saturday, November 5, 2022

ரஜினி வழங்கும் மீ.கு.ச யில் ச.பொ


 ஆம்.
ரஜினிகாந்த் வழங்கும்
"மீன் குழம்பு சட்டியில் சர்க்கரைப் பொங்கல்"

இடதுசாரிப் போராட்டக்காரர்கள்  உயிர்ப்போடு பயன் படுத்துகிற "செவ்வணக்கம்" என்ற முழக்கத்தின் இந்தி வடிவம் "லால் சலாம்"

"போராட்டம், போராட்டம்னா தமிழ்நாடு சுடுகாடாயிடும்" என்று எரிந்து விழுந்த மனிதனின் அடுத்த படத்தின் தலைப்பு "லால் சலாம்"



படத்தின் போஸ்டரைப் பாருங்கள். போராட்டத்தைத்தான் உணர்த்துகிறது. முதலாளித்துவம் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும். தங்களுக்கு பிடிக்காதவற்றைக் கூட காசு கிடைக்கும் என்றால் வியாபாரம் செய்யும். 

Friday, August 19, 2022

ரஜினியே மன்னிப்பு கேள்

 


சமூக விரோதிகள் உள்ளே நுழைந்த காரணத்தால்தான் தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்தது என்றும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடு ஆகி விடும் என்று சொன்னார் சங்கிகளின் கைப்பாவை ரஜினிகாந்த். 

“[T]here is no material on record to show that it was only to deal with a militant crowd of protesters that the opening of fire was resorted to”. She has also stated that the firing was “unprovoked”.

According to the report, the police “had fired on the fleeing protesters...”. It further says: “Here is a case of police indulging in shooting from their hide-outs at the protesters who were far away from them.” The report makes it clear that the protesters were unaware of where and which direction the bullets were coming from, resulting in total chaos, destruction, and death.

எந்த முகாந்திரமும் இல்லாமல்தான் போலீஸ் சுட்டது என்றும் கலெக்டர், எஸ்.பி உட்பட பல அதிகாரிகள் மீது நடவரிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைக்கிறது. 

போராடியவர்கள் மீது அபாண்டமாக பழி போட்ட ரஜினியே மக்களிடம் மன்னிப்பு கேள்


Friday, July 15, 2022

ரஜினிக்கும் பசிக்கும்ல . . .

 


கடைசியாக வந்த தர்பார், அண்ணாத்தே ஆகிய இரண்டு படங்களும் மொக்கையாகி விட்டது. தற்போது எடுத்துக் கொண்டிருக்கும் படமான ஜெயிலர் படத்தை இயக்கும் நெல்சனின் முந்தைய படமான "பீஸ்ட்" படம் வேறு ஃப்ளாப்பாகி "மரண பயத்தை காண்பிச்சுட்டாங்கடா பரமா" என்ற ரேஞ்சில் கொண்டு வந்து விட்டார்கள். 

போதாக்குறைக்கு கமலஹாசனின் "விக்ரம்" வேறு பயங்கர ஹிட்டாகி விட்டது.

அதனால்


அவருக்கு வேறு வழியில்லை. இப்படித்தான் ஏதாவது செய்து ரசிகர்களை பரபரப்பாக வைத்தாக வேண்டும்.

ஆமாம்.

அவருக்கும் பசிக்குமுல்ல . . .

Sunday, May 22, 2022

ரஜினி படத்து லிங்கமிது

 



தொலைக்காட்சி சேனல்களை மாற்றி வருகையில் ஒரு லோக்கல் சேனலில் "அதாண்டா, இதாண்டா, அருணாச்சலம் நாந்தாண்டா" பாடல் ஒடுகையில் அருணாச்சலம் பட இயக்குனர் சுந்தர்.சி ஒரு பேட்டியில் சொன்னது நினைவுக்கு வந்து விட்டது. 

"அந்த பாடலை படமெடுக்கையில் ஒரு சிவலிங்கம் இருக்க வேண்டும் என்று ரஜினி சொல்லி விட்டார். அந்த நேரத்தில் லிங்கத்துக்கு எங்கே போவது என்று அனைவரும் தவிக்கையில் சாப்பாடு வந்திருந்த அண்டாவை கவிழ்த்து கரி பூசி சிவலிங்கமாக்கி விட்டார் கலை இயக்குனர் ஜி.கே"

அதைக் கேட்ட பின்பு அந்த பாடலை பார்க்கையில் சிவலிங்கம் மறைந்து பிரியாணி அண்டாதான் தெரிகிறது.

இதை எழுதுகையில்தான் கோவையில் சசிகுமார் என்ற சங்கி குடும்பப் பிரச்சினையால் கொல்லப்பட்ட போது சங்கிகள் அந்த சடலத்தை வைத்துக் கொண்டு கலவரம் செய்ததும் "ஆஜ்மீர் பிரியாணி" என்ற கடையில் பிரியாணியை அண்டாவோடு திருடிக் கொண்டு ஓடியதும் நினைவுக்கு வந்தது.

சங்கிகள் ஒரு வேளை அந்த பிரியாணி அண்டாவில் சிவலிங்கத்தைப் பார்த்து பக்தியோடு தூக்கிக் கொண்டு போயிருப்பார்களோ?



Monday, September 13, 2021

"அண்ணாத்த"

 


"அண்ணாத்த"  திரைப்படத்தின் தீம் இசை - வயலினில் . . .

என் மகனின் முயற்சியில் 

யூட்யூப் இணைப்பு இங்கே . . .

Saturday, June 12, 2021

சீமானே ரியல் பாட்சா!


சுகா எழுதிய “தாயார் சன்னதி” நூலில் சீமான் பற்றிய முக்கிய தகவல் ஒன்றிருப்பதாக சில நாட்களுக்கு முன்பாக எழுதியிருந்தேன். அந்த தகவல் கீழே உள்ளது.

 


 பாட்சா படத்தில் ஆனந்தராஜ் முதலில் ரஜனியை கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கும் காட்சியும் பின்பு ரஜினி ஆனந்தராஜை கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கும் காட்சியும் என் வீட்டில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்துத்தான் எடுத்தார்கள் என்று சீமான் ஏன் இன்னும் சொல்லவில்லை என்பதுதான் வியப்பாக இருக்கிறது

சீமானின் தம்பிகள் அடிதடிகளில் ஈடுபட்டு கைதாவதில் வியப்பென்ன இருக்கிறது? தென்னை மட்டையால் அடிப்பேன் என்று தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் சொன்னதும்  “மோடியின் 15 லட்ச ரூபாய் ஜூம்லா” போல அல்ல. நிஜமாகவே அவர் செய்யக் கூடியவர்தான் என்பதும் இப்போது தெளிவாகி விட்டது அல்லவா! அதனால் சீமான் மோடிக்கு மேல்.

Friday, April 23, 2021

ரஜினியின் திடீர் பல்டி

 


“தூத்துக்குடி  ஸ்டெரிலைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்தனர். அவர்கள்தான் பஸ்ஸை கொளுத்தி கலவரத்தை தூண்டினார்கள். அதனால்தான் துப்பாக்கிச் சூடு நடந்தது”

 இந்த வீர வசனத்தை பேசி பரபரப்பை உண்டாக்கிய ரஜினிகாந்த், விசாரணைக் கமிஷனுக்கு வர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியதுமே பயந்து பம்மி பதுங்கி விட்டார்.

 நான் வந்தால் ரசிகர்கள் திரண்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும் என்றும் கொரோனாவை காரணம்  காட்டியும் விசாரணைக்குச் செல்லாமல் தப்பித்துக் கொண்டிருந்தார்.

 “தூத்துக்குடி ஸ்டெரிலைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவி விட்டனர்” என்று நான் சொன்னதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ரஜினி இப்போது விசாரணைக் கமிஷனுக்கு பிரமாண வாக்குமூலம் அனுப்பி உள்ளார்.

 எந்த ஆதாரமும் இல்லாத போது போராட்டக்காரர்களை கொச்சைப் படுத்தி பேச வேண்டிய தேவை என்ன?

 ரஜினி யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தை பேசுவதை சினிமாவோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் இப்படித்தான் அசிங்கப்பட வேண்டும்.

 அதிலும் அந்த விஷ மூர்த்தி பேச்சை கேட்டால் மேலே உள்ள படத்தில் இருப்பதுபோல  ரத்தக் களறி ஆகி விடும்.

இனிமேலாவது கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். 

 

Thursday, April 1, 2021

ரஜினி - விருது - தருணம்

 


தாதா சாஹேப் பால்கே விருது பெற்றமைக்கு ரஜினிகாந்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 

நிஜமாகவே சொல்கிறேன். அவரது நண்பர் போல "திரையில் தோன்றினாலே விருது" என்றெல்லாம் உள் குத்து இல்லாமல் சொல்கிறேன்.

ரஜினிகாந்த் என்ற நடிகரை எனக்கு பிடிக்கும். சூப்பர் ஸ்டார் என்ற பிம்பச் சிறையில் அடைபடுவதற்கு முந்தைய நடிகர் ரஜினியை.

அந்த நடிகர் இப்போதும் சில சமயம், பெரும்பாலும் காமெடிக் காட்சிகளில் வெளிப்படத்தான் செய்கிறார்.

ஆகவே அவருக்கு விருது கிடைத்ததில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

ஆனால் விருது கிடைத்த தருணம்தான் நெருடலாக இருக்கிறது. 

போன வருடமோ அல்லது இந்த வருடமோ விருது அளிக்கப்பட்டிருந்தால் இந்த நெருடல் ஏற்பட்டிருக்காது.

அவரே முத்து திரைப்படத்தில் சொன்னது போல "கிடைக்கிறது கிடைக்காம போகாது, கிடைக்காம போறது கிடைக்காது"

அதனால்

இன்னும் ஐந்து நாட்களில் தமிழகம் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில் விருது அறிவித்துள்ளதில் எந்த அரசியல் உள் நோக்கமும் இல்லை என்று யார் சூடமேற்றி சத்தியம் செய்தாலும் நம்ப முடியாது. 

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று வோட்டுக்காக அலையும் பாஜக, ரஜினிக்கான விருதை சர்ச்சையாக்கி விட்டது.

Friday, February 26, 2021

கமல்-ரஜினி-மாலன்-சக்கர நாற்காலி

 


சிங்கப்பூர் லீக்வான் க்யூ போல ரஜினிகாந்த் சக்கர நாற்காலியிலாவது அரசியல் செய்ய வேண்டும் என்று சொன்ன மாலன் அவர்களே, சக்கர நாற்காலியில் இருந்து அரசியல் செய்பவர்களை கமலஹாசன் இழிவு படுத்தி பேசியுள்ளாரே, அதை கண்டிக்க மாட்டீர்களா?

ஓ!

அவர் இழிவுபடுத்தியது உங்கள் பழைய முதலாளி கலைஞரைத்தானே! இப்போது படியளிக்கிற மோடியை அல்லவே!



உடல் ஊனம் உள்ளவரை கேலி செய்யும் காமெடிகளை உங்களின் எத்தனையோ படங்களில் வைத்துள்ளீர்கள். அது திரைப்படத்தில் மட்டும் அல்ல, உங்கள் பார்வையே அப்படித்தான் என்பது இப்போது புரிகிறது.

இப்போது நக்கலடிக்கும் நீங்கள், இதனை மலர்ந்த முகத்தோடு கரம் பற்றிய போதே சொல்லியிருக்கலாமே.

எனினும் நீங்கள் பேசியது நல்லதுதான்.

வேடம் கலைகிறது.