Friday, April 24, 2020

டபிள் பேமெண்டா மாலன்?




மூமூமூமூமூமூத்த பத்திரிக்கையாளர் என்றழைக்கப்படுகிற சங்கி பிரச்சார பீரங்கி இப்போதெல்லாம் மிகவும் ஆக்டிவாக பாஜக  எதிர்க்கட்சிகள் மீது விழுந்து பிறாண்டிக் கொண்டிருக்கிறார்.

இவர் தன்னுடைய முக நூல் பதிவுகளில் இவரின் அணுக்கத் தொண்டர்களைத் தவிர வேறு யாரையும் பின்னூட்டமிட அனுமதிக்க மாட்டார். ஆனால் இவர் எல்லா பதிவுகளுக்கும் சென்று வக்கிரத்தை கொட்டி வருவார்.

சமீபத்திய சில உதாரணங்கள்.

ரேபிட் கிட் இன்னும் வந்து சேராதது பற்றிய ஒரு  கவிஞரின் பதிவில் “ரேபிட் கிட் பற்றி பேசுமளவிற்கு கவிஞர்களுக்கு அறிவு வந்து விட்டதா? “ என்று கேட்டார். கவிஞர்கள் முட்டாள்கள் என்ற நினைப்பா அவருக்கு?

ஒரு பெரியவர் தமிழ்ப் புத்தாண்டு அன்று தன்னை மூவர் வந்து சந்தித்து ஆசி பெற்று போனார்கள் என்று எழுதப் போக காச் மூச் என்று குதித்து நீங்கள் வயதானவர், டேஞ்சர் ஸோனில் உள்ளவர் என்று கொஞ்சமும் மேனர்ஸ் இல்லாமல் அநாகரீகமாக எழுதினார்.

கொரோனாவால் இறந்து போன மருத்துவருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் தர வேண்டும் என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிக்கைக்கு “ஆழ்துளை கிணற்றில் இறந்த குழந்தைக்கே நிவாரணம் தரும் போது கொரோனாவில் செத்துப் போனாலும் தரலாம், ஆனால் தொற்று பரவியது சிங்கிள் சோர்ஸாலா அல்லது அதன் மூலமான தொடர்பாலா” என்று தெரிய வேண்டும் என்று சங்கிகளின் விஷத்தை கக்கினார். 

ஆனந்த் டெல்டும்ப்டே, ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால் கைது செய்யப் பட்டாரே தவிர அவரை ஒன்று முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே தள்ளவில்லை என்று எழுதுகிறார். அந்த கைதே அராஜகம், ஜனநாயக விரோதம் என்கிற போது இவரது வருத்தம் அவரை முட்டிக்கு முட்டி தட்டவில்லை என்பதாக இருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாலும் மக்கள் இப்போது சிரமப்படுவதாலும் பெற்றோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று எழுத்தாளரும் விசிக கட்சியின் விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினரும் ஆன திரு டி.ரவிக்குமார் தான் மத்தியரசிடம் கோரிக்கை வைத்திருப்பதாக முக நூலில் பதிவிட்டிருந்தார்.

ஊரடங்கு காலத்தில் மக்கள் வெளியவே வரக்கூடாது. நீங்கள் விலையைக் குறைக்கவா சொல்றீங்க. சொல்லப்போனால் விலையை இரட்டிப்பாக்க வேண்டும்  என்று மாலன் அங்கேயும் சண்டைக்கு வந்து விட்டார். அத்தியாவசியப் பணிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பணிக்குச் செல்ல வேண்டும். காய்கறி, மளிகைப் பொருட்கள் வாங்க அனுமதி உள்ளது. அந்த சரக்குகளை எடுத்துச் செல்ல அனுமதி உள்ளது. இரட்டிப்பானால் அந்த கூடுதல் சுமையும் மக்கள் தலை மீதல்லவா விழும் என்று பலர் எதிர்வினையாற்றினாலும் தான் பிடிக்காத முயலுக்கு மூன்று கால் என்றே பிதற்றிக் கொண்டிருந்தார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் தனிமையில் இருப்பதால் புத்தி பேதலித்துப் போய் இருக்குமோ என்று யோசித்தேன்.

ஒரு வேளை இந்த கொரோனா காலத்தில் டபுள் பேமெண்ட் கூட கொடுப்பதாக உறுதி மொழி கொடுத்திருக்கலாம். அதனால் இப்படி வன்மத்தை வாந்தி எடுக்கிறாரோ என்று வேறு சந்தேகம் வருகிறது.

மாலன் சொல்லுங்க

நீங்கள் மெண்டலாயிட்டீங்களா இல்லை டபுள் பேமெண்டா.

சொல்லுங்க, சொல்லுங்க, சொல்லுங்க

(இதை மட்டும் பாட்ச்சாவில் ரஜினி தம்பி கேட்கும் மாடுலேஷனில் நினைத்துப் பாருங்கள்)


1 comment:

  1. காலம் ரெம்பக் கொடுமையானது
    எப்படி இருந்த மாலன்
    ஹிம்

    ReplyDelete