Wednesday, October 30, 2019

ட்ரம்பை நினைச்சேன், சிரிச்சேன்


ஐ.எஸ் இயக்கத்தின் தலைவரான பாக்தாதி கொல்லப்பட்டுள்ளார். பெரும்பாலான தீவிரவாத இயக்கங்களின் தோற்றத்தில் அமெரிக்காவின் ஆசி உண்டு. அவர்களால் வளர்க்கப்படுபவர்கள் அவர்களாலேயே கொல்லப்படவும் செய்கிறார்கள்.

பாக்தாதி ஒரு அழிவு சக்தி என்பதிலோ ஐ.எஸ் இயக்கம் உலகத்திற்கு ஒரு மாபெரும் அச்சுறுத்தல் என்பதிலோ மாற்றுக் கருத்தில்லை. உலகின் மிகப் பெரிய அரசு பயங்கரவாதம் என்பது அமெரிக்கா என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் ஒரு மரணத்தை எப்படி அணுகுவது, விவரிப்பது என்பதில் குறைந்தபட்ச நாகரீகம் கூட இல்லாத காட்டு மிராண்டி டொனால்ட் ட்ரம்ப் என்பதை அந்த மனிதன் கூறிய வார்த்தைகளே நிரூபித்து விட்டது.

"அவன் பதுங்கியிருந்த குகையை சுற்றி வளைத்து முன்னேறிய போது தப்பிக்க வழி தெரியாத நாயைப் போல தவித்தான். பிறகு வெடிகுண்டை வெடிக்க வைத்து மூன்று மனைவிகளோடு நாயைப் போல செத்துப் போனான்"

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக் கொள்ளும் அமெரிக்காவின் ஜனாதிபதி பேசுகிற பேச்சு இது!

கொடுமை!

படு மொக்கைப் படமான அஞ்சானில் வில்லன், சூர்யாவையும் அவன் நண்பனையும் பார்த்து "பன்னியை சுடற மாதிரி சுட்டுடுவேன்" என்று சொல்ல அந்த படா வில்லனை சூர்யா கடத்தி வந்து உள்ளாடையோடு உட்கார வைப்பார்.

அது வெறும் சினிமா காட்சி.

நாயைப் போல செத்துப் போனான் என்ற வார்த்தைக்காக யாராவது ட்ரம்பை கடத்தி  வில்லனுக்கு சூர்யா கொடுத்த அதே ட்ரீட்மெண்டை கொடுத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்த போது சிரிப்பு வந்து விட்டது. 





மொட்டை சாமியார்-நீரா ராடியா-மருத்துவமனை

நீரா ராடியா டேப் விவகாரம் வெடித்த போது சங்கிகள் யோக்கிய சிகாமணிகள் போல துள்ளி குதித்தார்கள்.

ஆனால் இப்போது என்ன நிலவரம்?

மோடியின் தொகுதியான வாரணாசியில் நீரா ராடியா கட்டியுள்ள ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையை முதல்வர் மொட்டைச் சாமியார் திறந்து வைத்துள்ளார். அந்த புகைப்படத்தை முதல்வரின் அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிந்து விட்டு அவசரம் அவசரமாக அகற்றி விட்டார்கள். 



அந்த அவசரத்தின் பின்னே உள்ள மர்மம் என்ன?

நீரா ராடியா அம்மையார் முதலில் திறந்த மருத்துவமனை மதுராவில். ரத்தன் டாட்டா தான் திறந்து வைத்துள்ளார்.

ரத்தன் டாடாவும் மோடியும் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பின்னே நிற்பது யாரென்று தெரிகிறதா?


அதே அரசியல் தரகர் நீரா ராடியாதான்.

இப்போது அந்த அம்மையார் அமிர்தசரஸில் 2000 படுக்கை வசதி கொண்ட ஒரு மருத்துவமனை கட்டப் போகிறாராம்.

தரகு வேலை பார்த்து கஜானாவை நிரப்பிய இவரைப் போன்றவர்கள், மக்கள் சேவை செய்யவா மருத்துவமனை திறக்கப் போகிறார்கள்!

லாப நோக்கு என்பதைக் காட்டிலும் அங்கே மூளைச்சாவு என்று அறிவித்து உடல் உறுப்புகளை பறிக்கும் கிரிமினல் நடவடிக்கை ஏதாவது  நடக்கிறதா என்று ஆராய்ந்தால் நல்லது.

தன்னை வசை பாடிய கட்சியின் தலைவர்களைக் கொண்டே தனது மருத்துவமனையை திறக்க வைப்பதுதான் இச்சந்தேகத்திற்கு காரணம். 

மோடி ஆட்சியின் "நீரா ராடியா"



ஐரோப்பிய யூனியனின் நாடாளுமன்ற உறுப்பினர்களை காஷ்மீருக்கு சுற்றுலா வந்து நிலைமையை பார்க்க வருமாறு அவர்களுக்கு கடிதம் அனுப்பியது யார்?

இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம்?

இந்தியாவின் உள்துறை அமைச்சகம்?

அல்லது

பிரதமர் அலுவகம்?

இல்லை.
இவர்கள் யாருமே இல்லை.

பின் யார்?

மாடி சர்மா.

யார் இந்த மாடி சர்மா?




ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்துபவர் என்ற பெயரில் செயல்படுகிற அதிகார புரோக்கர்.

ஐரோப்பிய யூனியனின் ஒரு குழுவின் உறுப்பினர்.

ஐரோப்பிய யூனியனில் உள்ள வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அவர் அழைப்பிதழ் அனுப்புகிறார்.

அதிகாரபூர்வமற்ற அந்த பயணத்தின் போது மோடியுடன் ஒரு சந்திப்பையும் மூன்று நாள் காஷ்மீர் பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் அந்த பயணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அக்கடிதம் சொல்கிறது. கீழே உள்ளது அந்த மின்னஞ்சல். அந்த பயணத்திற்கான விமானக் கட்டணம், தங்கும் வசதி எல்லாவற்றையும் தன்னுடைய அமைப்பு பார்த்துக் கொள்ளும் என்று வேறு அந்த மின்னஞ்சல் சொல்கிறது.



இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை, இந்திய தேர்தல் ஆணையத்தால் தேசியக் கட்சிகள் என்று அங்கீகரிக்கப் பட்ட கட்சிகளின் தலைவர்களை ஜம்மு காஷ்மீர் எல்லைக்குள் அனுமதிக்க மறுக்கிற நேரத்தில் 

ஒரு தனி நபருக்கு வேற்று நாட்டவரை அழைக்கிற தைரியம் எங்கிருந்து வந்தது?

அந்த தூதுக்குழு வந்த பின்பு மோடியை சந்தித்த பின்பு அனுமதி வழங்கியதாய் நாடகம் போட்டார்கள், ஆனால் அக்டோபர் மாதம் ஏழாம் நாள் அனுப்பிய மின்னஞ்சல், காஷ்மீருக்கான முழு பயணத் திட்டத்தையே சொல்கிறது. 

மோடியின் கண்ணசைவு இல்லாமல் இதெல்லாம் நடப்பதற்கான சாத்தியக் கூறு உள்ளதா?

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அதிகார தரகராக நீரா ராடியா செயல்பட்டது அம்பலமான போது பாஜககாரர்கள் ரொம்பவுமே அசிங்கமாக பேசினார்கள்.

இந்த ஆட்சியிலும் இவர்களும் ஒரு அதிகார புரோக்கரை பயன்படுத்திக் கொண்டு சர்வதேச அளவில் நல்ல பெயர் வாங்க நாடகம் நடத்துகிறார்கள். அதற்காக ஏதோ பொய்க்கணக்கில் செலவு செய்கிறார்கள்.

ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியிருந்தால் இப்படிப்பட்ட மோசடி வேலைகள் தேவைப்படாதே!

மோடியின் எந்த நடவடிக்கைதான் உருப்படியாய் இருந்திருக்கிறது, காஷ்மீர் மட்டும் அமைய?

எதை எடுத்தாலும் ஒரு திருட்டுத்தனம், ஒரு கேப்மாறித்தனம் என்று பாக்யராஜை அவர் தந்தை ஒரு படத்தில் திட்டுவார்.

அப்படிப்பட்ட திருட்டுத்தனம்தான் மோடி, மாடி சர்மா மூலம் செய்தது. 

இப்படிப்பட்ட கேவலமான பிழைப்பிற்கு  மோடி அரசு .............................
மோடிக்கு முட்டு கொடுப்பவர்கள்.......................................................................

பிகு : அன்று நீரா ராடியாவை திட்டிய பாஜக இப்போது அவரை எப்படி பார்க்கிறது? நாளை பார்ப்போம்


இந்தியாவை அசிங்கப்படுத்தறாங்கய்யா . . .


ஜம்மு காஷ்மீரில் மோடி அரசு நிகழ்த்திய ஜனநாயகப் படுகொலைக்குப் பின்பு இந்திய அரசியல் தலைவர்கள் யாரும் அங்கே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இரண்டு முறை கைது செய்யப்பட்ட தோழர் சீத்தாராம் யெச்சூரி கூட உச்ச நீதிமன்ற தலையீட்டுக்குப் பின்பே செல்ல முடிந்தது. அப்போது கூட அவரை கிட்டத்தட்ட கைதி போலதான் நடத்தினார்கள்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட காஷ்மீரின் கதவுகள், ஐரோப்பிய யூனியனின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் திறந்து விடப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இவர்கள் ஐரோப்பிய யூனியனின் அதிகாரபூர்வமான பயணக்குழுவாக இல்லாமல் சொந்த பயணமாகவே வந்துள்ளார்கள்.

அடிமை புத்தியின் வெளிப்பாடு என்றுதான் முதலில் தோன்றியது.

இதுவே இந்தியாவிற்கு மிகப் பெரிய அசிங்கமென்றால் இக்குழுவின் வருகைக்கு பின்னே உள்ள மர்மம் இன்னும் அசிங்கம் . . .

எவ்வளவு கேவலமானவர்கள் மோடி வகையறாக்கள் என்று மனசாட்சி உள்ள மனிதர்கள் நிச்சயம் சிந்திப்பார்கள். 

அப்படி என்ன மர்மம்?

மாலை வரை காத்திருங்கள்.

அது வரை நீரா ராடியா பற்றி பாஜகவினர் என்ன பேசினார்கள் என்பதையும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

Tuesday, October 29, 2019

455 கோடி - மாலன் ஒரே குஷியாம் . . .


தீபாவளியை முன்னிட்டு மூன்று நாட்களில் மட்டும் டாஸ்மாக் 455 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்று சாதனை செய்துள்ளதாம்.

இப்படி குடிக்கு நாசமாகப் போகிறார்களே, தமிழக மக்கள் என்ற கவலையை விட "பொருளாதார மந்தம்" இருந்தால் இவ்வளவு விற்பனையாகுமா என்று மேஜர் மாலன் குஷியோடு பேசுவார்  என்பதுதான் மிகவும் கவலையாக உள்ளது.

புதையுண்டு போனது . . .


சவக்குழியில் புதையுண்டு போனது
குழந்தை சுஜித் மட்டுமல்ல. . .

ஆழ்துளைக் கிணற்றிலும் செப்டிக் டேங்குகளிலும் சிக்கிக் கொண்டால் மட்டும் காப்பாற்ற வழி இல்லாத நிலையில் தொழில் நுட்ப முன்னேற்றம் 
அடைந்த நாடென்ற பெருமையும் கூட.

இனி ஒரு சம்பவம் இப்படி நடக்கக்கூடாது என்று ஒவ்வொரு சம்பவத்தின் போதும் எடுத்துக் கொள்கிற உறுதி மொழியும் கூட.

பாதிக்கப்பட்ட குழந்தை மாற்று மதமென்பதால் வக்கிரத்தையும் வன்மத்தையும் அள்ளி வீசுகிற  இழி குணத்தவர் எல்லாம் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால்  நம்பிக்கையும் மனிதாபிமானமும் கூட. . . .

Monday, October 28, 2019

பெரும்பான்மை பெற்றும் அந்தரத்தில் . . .



மஹாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பாஜக-சிவசேனா கூட்டணி மஹாரஷ்டிர மாநிலத்தில் பெரும்பான்மை பெற்றது. ஹரியானாவில் பெரும்பான்மையை இழந்தது.

ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் அஜய் சவுதாலாவின் மகன் துஷ்யந்த் சவுதாலாவுடன் பேரம் பேசி, சிறையில் உள்ள அஜய் சவுத்தாலாவிற்கு பரோல் கொடுத்து, பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான சுயேட்சை கோபால் கண்டாவின் ஆதரவைப் பெற்று மனோகர் லால் கட்டார் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்று விட்டார்.

ஆனால் மஹாராஷ்டிராவிலோ இரண்டு கூட்டணிக் கட்சிகளுக்குள் இது வரை எந்த உடன்பாடும் வரவில்லை. அதிலாரபூர்வமான பேச்சுவார்த்தை கூட இன்னும் நடந்ததாக தெரியவில்லை. ஆனால் இரண்டு கட்சிகளும் தனித்தனியாக ஆளுனரை  சந்தித்துள்ளனர். தீபாவளி வாழ்த்து சொல்ல சென்றதாக வேறு கதைத்துள்ளனர்.

சிவசேனாவிற்கு முதல்வர் நாற்காலி மீது கண். ஐந்து வருடங்கள் இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் இரண்டரை வருடங்களாவது அந்த பதவியின் சுகத்தை ருசி பார்க்க நினைக்கிறது.

வேறு கட்சியாக இருந்திருந்தால் இத்தனை நேரம் சிவசேனா எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியிருப்பார்கள், சி.பி.ஐ ரெய்ட் மூலம் மிரட்டி வழிக்கு கொண்டு வந்திருப்பார்கள்.

ஆனால் சிவசேனாவோ பாஜகவுக்கு நிகரான கிரிமினல் கட்சி, குண்டர் பலம் அதிகம். அதனால் அவர்கள் மீது கைவைக்கும் தைரியம் கிடையாது.

ஆகவேதான் இழுபறி தொடர்கிறது. என்ன காங்கிரஸ் கட்சியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும்  எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிவசேனா காலில் விழுவதற்குப் பதிலாக இந்த இரண்டு கட்சிகளின் எம்.எல்.ஏ க்களை விலைக்கு வாங்கிடலாம் என்று முயற்சி செய்யலாம்.

கொலைகாரனுக்கான இடம் அதுதான் . . .

கீழே உள்ள செய்தி எந்த அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஒரு கிரிமினல் கிரிமினல்களின் கட்சியில் சேர்வது இயல்பானதுதான்.

எல்லா கிரிமினல்களும் பாஜக அல்ல.
ஆனால்
பாஜகவில் உள்ள எல்லோரும் கிரிமினல்களே . . .


Sunday, October 27, 2019

"பிகில்" பிடிச்சிருக்கு . . .

இன்று பார்த்த படம் "பிகில்"



வழக்கமான விஜய் படம். முதல் பாதி கொஞ்சம் மொக்கையாகவும் இரண்டாவது பாதி விறுவிறுப்பாகவும் செல்கிற படம். வழக்கமான எல்லா விளையாட்டுப் படங்களைப் போலவே கடைசி நிமிடத்தில் நாயகனின் அணிக்கு வெற்றி கிடைக்கிறது.

ஆனாலும் இந்த படம் எனக்கு பிடித்திருந்தது.

ஆம்.

அதற்குக் காரணம் படம் சொல்லும் இரண்டு  செய்திகள்.

அமில வீச்சுக்கு உள்ளானவர்கள் விகாரமான தங்கள் முகத்தைக் காண்பிக்க அஞ்சி முடங்காமல் நம்பிக்கையோடு வெளியே வர வேண்டும் 

என்றும்

திருமணத்தோடு பெண்களின் கனவுகள் கருகக் கூடாது, படிப்போ, விளையாட்டோ, பணியோ தொடர வேண்டும்.

இன்றைக்கு அழுத்தமாக பரப்ப வேண்டிய செய்திகள் இவை என்பதால் மற்ற குறைகளை மறந்து விடலாம். 

ஆனாலும் ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும்.

நல்ல நடிகரான ஆனந்தராஜை வீணடித்திருக்க வேண்டாம். மாநகரக் காவல் படத்தை தொலைக்காட்சியில் போட்டால் அவருக்காகவே பார்ப்பேன். கொடூர வில்லனாக இருந்தாலும் ரசிக்க வைப்பார்.

இரவல் கவிதையோடு வாழ்த்து




கொண்டாடும் அனைவருக்கும் 
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

எங்கள் தென் மண்டல துணைத் தலைவர் தோழர் கே,சுவாமிநாதன்
அவர்களின் அர்த்தமிக்க கவிதையை இங்கே இரவல் பெற்று
பகிர்ந்து கொண்டுள்ளேன். 


*என்னருமை தீபத் திருநாளே!*

*ஒளியேற்று என் தேசத்தில்...*
***********************************

என் தேசம் எனக்கு               நிரம்ப நிரம்ப பிடிக்கும்...

அது பன் மலர் குலுங்கும் பரவசமான தோட்டம் என்பதால்...

ஒற்றை இந்தியா என்பதாலல்ல...
ஒன்றுபட்ட இந்தியா என்பதால்...
__________

தீபத் திருநாளே !                
நீயே என் தேசப்  பன்மைத்துவத்தின் சாட்சியம்...

உன்னை கொண்டாடுகிற 
நாள் வேறு...
காரணம் வேறு...                   வெவ்வேறு...

நேற்று ஒரு இந்தியர்        
இன்று ஒரு இந்தியர்        
நாளை ஒரு இந்தியர்         
வெவ்வேறு நாளில்...
___________

நரகாசுரன் வதம் என            நம்புபவர் நிறைய உளர்...
ராமன்- சீதை வனவாசம் முடிந்து திரும்பிய நாளென்பாரும் உண்டு...
காளியின் நாள் என்பார்          வங்கத்து சோதரர்...

ஏற்றத்தாழ்வான தேசத்தில் என்னை எட்டிப் பார்க்க மாட்டாயா என லட்சுமியை வணங்குவார் ஏழைகள் பலர்...

மகாவீரர் எனும் அறிவு தீபம்           
முக்தி பெற்ற நாளென ஒளியேற்றுவார் சமணர்...
குரு ஹர் கோவிந்த சிங் விடுதலையான நாள் என சீக்கியர்...
நேபாள புத்த மக்கள் சிலரும் கொண்டாடுவார்...
___________

அவரவர்க்கு அவரவர் நம்பிக்கை...
வேறு வேறாய் காரணங்கள்...
வண்ண வண்ணமாய் சிதறும் வானத்தில் வாணங்கள்...
தேசமெங்கும் அழகாய்...

காற்றில் அசையும் சுடரின் ஒளி...
ஒன்றாய்ப் பாய்ச்சுகிறது
வேற்றுமையில் ஒற்றுமையெனும் வெளிச்சத்தை...
தேசத் தாயின் திருமுகத்தில்...
______________

நாமும் கொண்டாடுவோம்
தேசத்தின் பன்மைத்துவ பாரம்பரியத்தை....

*தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.*
*********************************

*க.சுவாமிநாதன்*

Saturday, October 26, 2019

கைது செய்யும் "கைதி"

இன்று "கைதி".



ஒரே இரவில் துவங்கி முடியும் படம்.

முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை நம்மை இருக்கையில் கட்டிப் போடுகிற, பதட்டத்தில் ஆழ்த்துகிற படம்.

போலீசாரால் பறிமுதல் செய்து பத்திரமாக வைக்கப்பட்டுள்ள 800 கோடி ரூபாய் போதைப் பொருளையும் அக்கும்பலின் தலைவனையும் மீட்க வெறியோடு புறப்பட்டுள்ள கூட்டம் ஒரு புறம்.

காவல்துறை அதிகாரிகள் யாரும் வராமல் கமிஷனர் அலுவலகத்தின் காவலர்கள் நைஸாக வெளியேறி விட, தற்செயலாக மாட்டிக் கொண்ட ஒரு காவலரும் சில மாணவர்களும் நிலைமையை சமாளிப்பது மறு புறம்.

இதற்கு நடுவில்தான் ஐ.ஜி அளிக்கும் விருந்தில் மதுவில் ஒரு கறுப்பாடால் போதை மருந்து கலக்கப்பட்டதால் மயங்கி விழுந்த அதிகாரிகளையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று போதைப் பொருள் மீண்டும் கொடியவர்கள் கையில் சிக்காமல் இருக்க பயணிக்கும் ஒரு நேர்மையான காவல் அதிகாரி.

பத்து வருடம் சிறைத் தண்டனைக்குப் பிறகு அனாதை விடுதியில் உள்ள மகளை முதல் முறையாக மகளைப் பார்க்கச் செல்லும் கைதி டெல்லி, இந்த பணியில் லாரி ஓட்டி தன்னை ஈடுபடுத்திக் கொள்ள, படம் வேகமாய் பறக்கிறது. 

வேண்டா வெறுப்பாய் லாரி ஓட்டத் தொடங்கினாலும் நிகழ்ச்சிப் போக்குகள் டெல்லியை முழுமையாய் இறங்க வைக்கிறது. 

கடைசியில் கொஞ்சம் வழக்கமான சினிமாத்தனங்களுடன் படம் முடிகிறது.

எப்படி என்பதை படம் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

கைதி டெல்லியாக கார்த்திக்கு தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு. முழுமையாக பயன்படுத்தியுள்ளார்.

பாடல்களோ, காதல் காட்சிகளோ இல்லாத படம். பின்னணி இசை அதை ஈடு செய்கிறது. 

அஞ்சாதே நரேன், கலக்கப்போவது யாரில் வரும் பையன், எஏ, பிபீ வாத்தியார் ஆகியோரும் கலக்குகிறார்கள். 

நிச்சயம் தைரியமாக செல்லலாம். கொடுத்த காசுக்கு சரக்கு உண்டு.

நாளை "பிகில்"

Friday, October 25, 2019

டாக்டர் எடப்பாடி தாத்தாவா விஜய்?


எஸ்.ஏ.சந்திரசேகருக்கு எடப்பாடி அப்பா போன்றவர் என்றால் விஜய்க்கு தாத்தா முறைதானே!

ஒரு சினிமா பிரச்சினை இல்லாமல்  ரிலீஸாவதற்கு எப்படியெல்லாம் ஐஸ் வைக்க வேண்டியுள்ளது!

பாவம்!

அதிகாரத்தின் அராஜகம் செல்லாது . . .



நேற்றைய தேர்தல் முடிவுகள் குறித்து . . .

200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று ஆரவாரமாக ஒருவர் சொன்னார். ஆனால் ஏற்கனவே இருந்ததை இழந்துள்ளோம்.

எதிர்க்கட்சிகளை உடைப்பதன் மூலம் வெற்றி பெறலாம் என்ற நினைப்பிற்கு பெரும் அடி விழுந்துள்ளது. ஏராளமானவர்கள் விலகியதால் இனி எதிர்காலமே கிடையாது என்று நினைக்கப்பட்ட சரத் பவாரின் தேசியவாதக் காங்கிரஸ் கட்சி ஐம்பது இடங்களுக்கு மேல் பெற்றுள்ளது. தலைவரே இல்லாத காங்கிரஸ் கட்சி 44 இடங்களை பெற்றுள்ளது. சிறிய கட்சிகள் 25 இடங்களை பெற்றுள்ளது.

இது மக்கள் விழிப்போடு உள்ளார்கள் என்பதைக் காண்பிக்கிறது. அதிகாரத்தின் அராஜகத்தைக் காண்பித்தால் மக்கள் தக்க பதிலடி தருவார்கள் என்பதை இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.


இது எதிர்க்கட்சிகள் யாரும் சொன்ன அறிக்கை இல்லை.

மஹாராஷ்டிர மாநிலத்தில் பாஜக வுடன் கூட்டணி வைத்துக் கொண்ட சிவசேனா கட்சி தன் அதிகாரபூர்வமான பத்திரிக்கையான சாம்னா வில் இன்று எழுதியுள்ள தலையங்கம்.

பாஜக அராஜகம் என்று நாங்கள் சொன்னால் துள்ளிக் குதிப்பவர்கள், தங்களின் கூட்டாளியே சொன்னதற்கு என்ன பதில் அளிப்பார்கள்?

ஆனாலும் பாஜக எந்நாளும் அராஜகப் போக்கை கைவிடாது என்பதுதான் யதார்த்தம்.

Thursday, October 24, 2019

விபரம் சொல்வரா பேரறிஞர் சீமான்?




சீமான் பேரறிஞராம் !!!

இந்த இணைப்பின் மூலம் காணொளியை அவசியம் பாருங்கள்.

காமராசரின் பேரன் சீமான், அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை, சிவன் ஆகிய பேரறிஞர்கள் எல்லாம் காமராசர் கட்டிய பள்ளிகளில் படித்தவர்கள் என்று சொல்கிறார்.

அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை, சிவன் ஆகியோர் பேரறிஞர்கள் என்பது மிகச் சரியானதே.  சந்தடி சாக்கில் தன்னையும் அந்த பேரறிஞர் பட்டியலில் இணைத்துக் கொள்கிறாரே, அங்கேதான் நிற்கிறார் ஆமைக்கறி சீமான்.

1954 ல் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பி.யூ.சி படித்து முடித்த திரு ஏ.பி.ஜே.அப்துல்கலாம் 1954 ல் முதல்வரான காமராஜர் கட்டிய எந்த பள்ளியில் படித்தார் என்ற விபரத்தை பேரறிஞர் சீமான் சொன்னால் நல்லது.

இடம், நேரம் ஏதும் கிடையாது


நேற்று மாலை சரியாக ஆறு மணிக்கு வேலூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக, வேலூர் கோட்டைக்கு எதிரில் உள்ள, எப்போதும் பரபரப்பாக இய்ங்கும் சாலையில் உள்ள கனரா வங்கியின் வாயிலில் எடுத்த படம்.

அந்த குடிமகனை அப்புறப்படுத்த அந்த வங்கியின் காவலாளி எடுத்த முயற்சியெல்லாம்  எடுபடவில்லை.

இப்போதே இப்படி.

டாக்டர் எடப்பாடி டாஸ்மாக்கிற்கு இலக்கு வேறு வைத்துள்ளார். இன்னும் எத்தனை பேர் இடம், நேரம் தெரியாமல் சாலையில் புரளப் போகிறார்களோ?

Wednesday, October 23, 2019

பாஸானாலும் மோடி ஃபாலோயர்


மோடி பின்பற்றும் யோக்கிய சிகாமணி . . .



ஒரு வெறியனின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற நேற்றைய பதிவின் தொடர்ச்சி இது.

அந்த ஆபாச சங்கி பெருமிதத்தோடும் புளகாங்கிதப்பட்டு போட்டுள்ள ட்விட்டர் பதிவை பாருங்கள்.



இந்த அயோக்கிய சிகாமணியை ட்விட்டரில் தீர்க்கதரிசி மோடி பின்பற்றுகிறார் என்று எவ்வளவு பெருமையாக எழுதியுள்ளார் பாருங்கள்.

இந்தாளின் லட்சணம் ஊரறிந்தது. இவரை பின்பற்றுகிறவரின் லட்சணம் மட்டும் எப்படி இருக்கும்?

அனைவரும் ஒரே காவிக்குட்டையில் ஊறிய மட்டைகள்தானே!

மோடியின் சகவாசம் யாரோடெல்லாம் இருக்கிறது என்று பாருங்கள் மக்கழே!


மோடியின் அப்பா சொத்தல்ல . . .



ஆட்சியிலிருக்கும் ஆணவத்தில் எப்படியெல்லாம் சங்கிகள் ஆடுகிறார்கள் என்பதற்கு மேலே உள்ள விளம்பரம் ஒரு சான்று.

வங்கிக் கடன் வாங்குவதற்கு பாஜக உறுப்பினராக இருக்க வேண்டுமென்று நிபந்தனை போடுவதற்கு எவ்வளவு திமிரும் தெனாவெட்டும் இருக்க வேண்டும்.

பாஜக காரனுக்கு கடன் கொடுக்க வேண்டுமென்றால் கார்ப்பரேட்டுகள் போட்ட எலும்புத் துண்டுகள் கோடிக்கணக்கில் இருக்கிறதே, அதை கொடுக்கட்டும், அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து அள்ளி விட அவை என்ன மோடியின் அப்பா தாமோதர் தாஸ் சேர்த்து வைத்த சொத்தா என்ன?

இந்த லட்சணத்தில் முந்தைய ஆட்சிக்காலத்தில்தான் வங்கிகள் நாசமாகி விட்டதாக நீட் அம்மையார் வேறு பேசுகிறார்.


Tuesday, October 22, 2019

ஒரு வெறியனின் ஒப்புதல் வாக்குமூலம்




“ஜெய் ஸ்ரீராம்” எனும் பெயரில் நடைபெறும் கும்பல் படுகொலைகளை தடுத்து நிறுத்துங்கள் என்று 49 ஆளுமைகள் மோடிக்கு கடிதம் எழுதிய காரணத்தினாலேயே அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு பிறகு திரும்பப் பெறப்பட்டது.

அபாண்டமாக பழி சொல்கிறார்கள், அவதூறு செய்கிறார்கள் என்றெல்லாம் குதித்தார்கள்.

கீழே உள்ளது கல்யாணராமன் எனும் ஆபாச சங்கியின் ட்விட்டர் பதிவு. அதை நானும் என் கண்ணால் பார்த்து உறுதி செய்து கொண்டு ஒரு ஸ்க்ரீன் ஷாட்டும் எடுத்து வைத்துக் கொண்ட பிறகே இதை எழுதுகிறேன்.



அந்த வாலிபன் உயிர் பயம் காரணமாக இவர்கள் சொன்னதை சொல்லி விட்டு போய் விட்டான்.

மறுத்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

கும்பல் படுகொலைகளின் எண்ணிக்கையில் ஒன்று உயர்ந்திருக்கும்.

கட்டைச் சுவரில் அமர்ந்து கொண்டு வெட்டி அரட்டை அடிக்கும் விடலைகள் கூட்டம் போகிறவர்கள், வருபவர்களை வம்புக்கு இழுக்கும். அப்படிப்பட்ட கூட்டத்தை கொலைகாரர்களாக மாற்றி உள்ளதுதான் மோடியின் சாதனை. இதனை மோடி மேஜிக் என்று பெருமையாக வேறு சொல்கிறார்கள்.

இஸ்லாமிய வாலிபனை நாங்கள் “ஜெய் ஸ்ரீராம்” என்று சொல்லச் சொன்னோம் என்று வெளிப்படையாக, ஆணவமாக கூறுகிறவன் மீது அல்லவா தேசத்துரோக வழக்கு பதிய வேண்டும்!

மோடியின் சட்டத்தில் அதற்கெல்லாம் இடமில்லை.

ஏனென்றால்

பேயரசின் ஆட்சியிலே  பிண சப்ளையர்கள்தான் பிரமுகர்கள்!

பிகு : இந்த வெறியன் பெருமையோடு இன்னொரு பதிவு போட்டுள்ளான். அது நாளை

Monday, October 21, 2019

ஓபிஎஸ் கிட்ட என்ன இல்லையாம்?






மோடிக்கு நிகரான நடிப்பாற்றலை தியான நாடகத்தில் வெளிப்படுத்திய மிகச் சிறந்த கலைஞர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இந்த ஏ.சி.சண்முகம் குறைந்த பட்சம் ஒரு அகௌரவ (கௌரவமில்லாத) டாக்டர் பட்டமாவது கொடுத்திருக்கலாம். 

எடப்பாடி மாதிரி தவழ்ந்து போய் சசிகலா காலில் விழுந்த சாதனை படைக்காவிட்டாலும் அவரும் டயரை வணங்கியதில் முக்கியமானவர் அல்லவா! 

ஓபிஎஸ்ஸிடம் இல்லாத எது எடப்பாடியிடம் இருக்கிறது?

டாக்டர் எடப்பாடி டீலிங்




நீட் தேர்வு தேவையில்லை,
சீட் கொடுத்த டீலிங்கில்
சல்லிசாய் கிடைத்தது
கௌரவ டாக்டர் பட்டம்,
அந்த பட்டத்திற்கான
கௌரவத்தை பாழடித்து . . .

Sunday, October 20, 2019

அல்வா வேண்டாம். அப்படியே சாப்பிடுங்கள்





இன்று முயற்சி செய்த இனிப்பு ஆப்பிள் அல்வா

மூன்று ஆப்பிள்களை தோல் சீவிக் கொண்டு பிறகு துருவிக் கொண்டேன். 

முந்திரியை நெய் விட்டு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொண்ட பின்பு அதே வாணலியில் துருவிய ஆப்பிளை போட்டு ஒரு ஏழு நிமிடங்கள் வரை கிளறிக் கொண்டிருந்தேன். பிறகு சர்க்கரை போட்டு இன்னும் ஒரு ஐந்து நிமிடம். நடுவில் கொஞ்சம் கொஞ்சமாய் நெய். கடைசியில் ஏலக்காய்ப் பொடி, முந்திரி போட்டு எடுத்து வைத்து விட்டேன்.

அல்வாவின் நிறத்தில் திடத்தில் வந்தாலும் ஆப்பிள் துண்டத்தை சர்க்கரை தொட்டுக் கொண்டு சாப்பிட்டது போலதான் சுவை இருந்தது. அளவும் அதிகமாக வரவில்லை. நான்கு சிறு கிண்ணங்கள் கூட வரவில்லை.

இவ்வளவு மெனக்கெட்டு அல்வா செய்ததற்கு பதிலாக ஆப்பிளை அப்படியே சாப்பிட்டிருக்கலாமே என்றுதான் தோன்றியது.

வெக்கையை வைரமாய் தீட்டிய அசுரன்




இது ஒரு டூ இன் பதிவு.

“வெக்கை” நாவல் பற்றியும் “அசுரன்” திரைப்படம் பற்றியுமானது.

அசுரன் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்கள் வரத் தொடங்கியவுடன் வெக்கை நாவலை ஆன்லைன் மூலம் வரவழைத்தேன். நாவல் வந்து சேரும் முன்னே திரைப்படத்தை பார்த்து விட்டாலும் நாவல் வந்த பிறகே எழுத வேண்டுமென்று காத்திருந்தேன். கடந்த வியாழன் அன்று நாவல் கைக்கு வந்தது. அன்றே ஒரு பயணம் இருந்ததால் ஒரே மூச்சாக படித்து விட்டேன்.

“சிதம்பரம் நினைத்தது அப்படியில்லை. வலது கையை மட்டும் துண்டிக்க திட்டமிட்டிருந்தான்”

என்ற முதல் வரியே நாவலுக்குள் நம்மை முழுமையாக இழுத்து விடும். அண்ணனைக் கொன்ற வடக்கூரானை வெட்டி விட்டு பின் தொடர்ந்து வந்தவர்கள் மீது தானே தயார் செய்த நாட்டு வெடிகுண்டுகளை வீசி தப்பித்து வருகின்ற சிதம்பரம், தன் தந்தையுடன் காட்டில் பதுங்கி தப்பித்து எட்டாம் நாளில் சரணடைவதற்காக பேருந்தில் ஏறுவதுதான் கதை.

காட்டுக்குள் அலைவது, உணவுக்காக அலைவது போன்ற நிகழ்வுகள் மத்தியில் அவர்கள் சந்தித்த பிரச்சினைகள் சொல்லப்படுகிறது. சிதம்பரத்தின் அப்பா கொலை செய்து விட்டு வேறு ஊருக்கு வருவது, அவரை அரவணைக்கிற குடும்பத்தில் திருமணம் செய்து கொள்வது. சிதம்பரத்தின் மாமா தன் தங்கைக்கு கொடுத்த நிலத்தை பறிக்க வடக்கூரான் முயல்வது, அதற்கான அச்சுறுத்தலாக சிதம்பரத்தின் அண்ணனை கொல்வது, சிதம்பரத்தின் அப்பா, மாமா ஆகியோர் முயற்சி செய்தும் முடியாத கொலையை சிதம்பரம் செய்ததால் அனைவருக்குமான பெருமிதம், குடும்பத்தில் இழையாடும் பாசப் பிணைப்பு என்று வெக்கையின் பயணம் அமையும்.  நிலத்தை காக்கும் போராட்டமாகவே வெக்கை அமைந்துள்ளது. அத்தோடு நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ குணாம்சங்களை அம்பலப்படுத்தி காவல்துறை எப்போதும் அவர்களின் கையாள் என்பதை ஜின்னிங் பேக்டரி சம்பவம் மூலமும் சொல்கிறது வெக்கை.

சிதம்பரமும் அவன் அப்பா சிவசாமியும் காட்டில் இறங்கும் காட்சியோடுதான் அசுரனும் தொடங்குகிறது. வெக்கையைக் காட்டிலும் அசுரன் என்னை அதிகமாக ஈர்த்தது என்றால் அதற்கான காரணங்கள் என்னவென்று ஒரு பட்டியலே தர முடியும்.

நிலத்தில் நடக்கிற பிரச்சினை காரணமாக சிதம்பரத்தின் அண்ணன் முருகன் வடக்கூரான் மகனை அடித்து விட, அதற்காக சிவசாமி ஒவ்வொரு வீட்டிலும் விழுந்து கும்பிட  அதைக்கண்டு வெகுண்டெழும் முருகன் திரைப்பட அரங்கின் கழிவறையில் வடக்கூரானை செருப்பால் அடிக்கிறான். அதை வெளியில் சொல்ல முடியாமல் புழுங்கும் வடக்கூரான் முருகனை கொலை செய்கிறான்.

வடக்கூரானை எதுவும் செய்ய முடியாத கையாலாகதவர்கள் என்று தந்தையையும் மாமாவையும் கருதும் சிதம்பரமே வடக்கூரானை கொன்று விடுகிறான். பிறகுதான் இருவரும் காட்டுக்குள் இறங்குகிறார்கள். காட்டில் கூட அப்பா சிவசாமியை வெறுப்பாக பார்க்கும் சிதம்பரத்திற்கு தன்னைக் கொல்ல வரும் வடக்கூரான் ஆட்களை அவர் தாக்குகிற போதுதான் மரியாதை வருகிறது. அப்போதுதான் சிவசாமியின் முன் கதையும் விரிகிறது.

சாராய வியாபாரியின் நம்பிக்கையான ஆளாக இருக்கும் சிவசாமியால் வேலைக்கு சேர்த்து விடப்படுகிறவனே பின்பு சிவசாமியின் காதலி செருப்பு அணிகையில் இழிவு படுத்துகிறான். அத்தனை பெண்களையும் செருப்பணிந்து ஊர்வலமாய் கூட்டிச் செல்லும் காட்சி ஒரு கவிதை. முதலாளியும் ஜாதிக்காரன் என்பதற்கே முன்னுரிமை அளிப்பதில் சிவசாமிக்கு  ஒளி பிறக்கிறது. முதலாளிகளிடம் சிக்கியுள்ள பஞ்சமி நிலங்களை மீட்பதற்காக தன் அண்ணன் வழக்கறிஞர் சேஷாத்ரி தலைமையில் நடத்தும் போராட்டத்திலும் இணைகிறான். வெண்மணி சம்பவம் போலவே போராட்டம் கொடூரமாக ஒடுக்கப்பட ஆதிக்க சக்திகளை வெட்டி சாய்த்து விட்டு வரும் சிவசாமி பசுபதியின் தங்கையை திருமணம் செய்து கொண்டு அமைதியாக வாழ முயற்சிப்பதுதான் முன் கதை.

உள்ளத்தை உருக்க வைக்கும் முன் கதைதான் திரைப்படம் உயிர்ப்போடு இருப்பதற்கான அஸ்திவாரம். அமைதியாக வாழ நினைத்தாலும் நிலப் பிரபுக்களின் நில ஆக்கிரமிப்பு வெறி அதனை அனுமதிப்பதில்லை என்பதை படம் அருமையாக சொல்கிறது. துண்டு நிலத்திற்காக பெரும் இழப்புக்களை  சந்தித்து விட்டு மகனின் உயிரைக் காக்க அதனை இழந்து சமரசம் செய்து கொள்கிற சிவசாமி மீண்டும் ஒரு துரோகத்தை சந்திக்க ஆயுதம் ஏந்துவது தவிர்க்க இயலாததாகிறது.

படத்தின் உயிர் மூச்சாக திகழும் வசனங்களைப் பற்றி இத்தனை நாள் கழித்து எழுதினால் அடிக்க வருவீர்கள். இந்த படத்தின் மிகப் பெரிய சிறப்பு, அதில் நடித்தவர்கள் காண்பித்த திறமை. மோடிக்கே சவால் விடும் நடிப்பாற்றல்.

குடிகாரனாக, சமரசம் செய்து கொள்கிறவனாக, ஆவேசமாய் எழுகிறவனாக அற்புதமாய் அடுத்த தேசிய விருதை தட்டிச் செல்லப் போகிறார் தனுஷ். கிராமத்து அம்மாவாய் பொருத்தமாய் உள்ளார் மஞ்சு வாரியர். பசுபதி மிகவும் பாந்தமாய். வில்லன் கூட்டமும் கச்சிதமாய். சிதம்பரமாய் நடிக்கிற கென் கருணாஸ் அபாரம். தன்னை தாக்க வந்தவர்களை அப்பா திருப்பி தாக்குகையில் கண்ணில் தெரியும் கணப் பொழுது பெருமிதம் அற்புதம். எத்தனையோ படத்தில் நடிச்ச உன் அப்பா லொடுக்கு பாண்டிக்குப் பிறகு ஒரு படத்தில கூட உருப்படியா நடிக்கலையே தம்பி,

பிரகாஷ்ராஜின் பாத்திரப்படைப்பு கீழத்தஞ்சை போராட்ட நாயகர் தோழர் பி.சீனிவாசராவை நினைவு படுத்துகிறது. வழக்கம் போல அருமையான நடிப்பு. மயானப் பாதை பிரச்சினைக்காக வருபவர்களிடம் “சாவு வந்தாதான் பிரச்சினை ஞாபகம் வருமா, போராடனும்யா, தொடர்ந்து போராடனும்” என்று சொல்வது களத்தில் நிற்பவர்களுக்கும் கூட.  இளையராஜாவைத் தவிர பின்னணி இசைக்காக யாரையும் புகழ்ந்தது கிடையாது. ஜி.வி.பிரகாஷின் பிஜிஎம் சூப்பர் என்று அரங்கத்திலிருந்து வெளியே வரும் போதே என் மகனிடம்  கூறினேன்.

நிலம் மீதான உரிமை என்பது திரைப்படங்களின் பேசு பொருளாக மாறுவது ஒரு நல்ல அம்சம். அதில் பஞ்சமி நிலம் பற்றி பேசியுள்ளது இன்னும் சிறப்பு. வெக்கையை மேம்படுத்தும் முக்கிய அம்சங்களில் இதுவும் ஒன்று.

நாவல்கள் படமாக்கப்படும் போது அது பெரும்பாலும் சிதைக்கப்படுவது என்பதே அரிய விதி விலக்குகள் நீங்கலாக பெரும்பாலும்  நிகழ்ந்து வருபவை. சுஜாதாவின் ப்ரியா அப்படிப்பட்ட சொதப்பலுக்கு மிகச் சிறந்த உதாரணம். காகிதச் சங்கிலிகள் மிகப் பெரிய கொடுமை. கரையெல்லாம் செண்பகப் பூவை அந்த அச்சத்தின் காரணமாகவே பார்க்கவில்லை.

ஒரு நாவலை திரைப்படம் மூலம் மேம்படுத்த முடியும். இன்னும் அதிகமான தாக்கத்தை உருவாக்க முடியும் என்பதை வெற்றி மாறன் விசாரணை திரைப்படத்திலேயே சாதித்தார். அசுரனின் அந்த கலை இன்னும் மேம்பட்டுள்ளது. வெக்கையை அசுரன் மூலம் வைரமாய் தீட்டியுள்ளார் என்று சம்பிரதாய வார்த்தையாக சொல்லவில்லை. நாவலை படித்த பின்பு உணர்ந்தே சொல்கிறேன்.

உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும் வெற்றி மாறன்.

Saturday, October 19, 2019

பாஜகவில் யாரேனும் உண்டோ?




மறைந்த மகத்தான தோழர் ஐ.மாயாண்டி பாரதி பற்றி மறைந்த பத்திரிக்கையாளர் சௌபா எழுதியது.

இப்படி ஒரு வீர வரலாறு, தியாக வரலாறு பாஜகவில் உள்ள யாருக்காவது உள்ளதா?

காட்டிக் கொடுத்தவர்களும் மன்னிப்பு கேட்டவர்களும்தான் இருக்கிறார்கள்.

அதனால்தான் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்று சங்கிகள் புறப்பட்டுள்ளார்கள்.


"ரெட் சல்யூட்!”

———சௌபா,------------------------------

12 வயதில் தொடங்கிய பொதுவாழ்க்கை. இளம்பிராயத்தில் தேச விடுதலைக்காக முழுதாக 13 ஆண்டுகள் சிறைவாசம்; நெல்லை சதி வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை; திரு.வி.-வின் நவசக்தியில் தொடங்கி, லோகோபகாரி லோகசக்தி, பாரதசக்தி, ஜீவாவின் ஜனசக்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீக்கதிர் போன்ற பத்திரிகைகளில், 50 ஆண்டுகள் எழுத்துப் பணி

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை முதலில் அடையாளம் கண்டவர்; வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி முதலில் எழுதி பிரபலப்படுத்தியவர்

பாவலர் வரதராஜனை அவரது தம்பிகளோடு சேர்த்து இசைக் குழு ஆரம்பிக்கவைத்து மேடை ஏற்றியவர்... இத்தனை சிறப்புகளுக்கும் உரியவர் மதுரை மக்களால் அன்புடன் '.மா.பாஎன அழைக்கப்படும் .மாயாண்டி பாரதி.

  தாத்தாவுக்கு தற்போது வயது 98. வயோதிகத்தில் சோர்ந்திருப்பார் என்ற நினைப்பில்தான்மதுரையில் உள்ள அவரது பாரத மாதா இல்லத்துக்குச் சென்றேன். மனிதர் பரபரப்பாக சில படங்களை வெட்டி ஒட்டி ஏதோ லேஅவுட் செய்துகொண்டிருந்தார்.

''கண்ணாடி தேவைப்படலையா?'' - என்று கேட்டதும் சீறினார்.

''எனக்கு எதுக்குடா கண்ணாடி? உங்களை மாதிரி வயசாகிப்போனவன்களுக்குத்தான் கண்ணாடி வேணும். எனக்கு எதுக்கு?'' என்று சிரிக்கிறார்.

''நான் 23 வயசுல எழுதின 'படுகளத்தில் பாரத மாதாபுத்தகம் இப்போ மறுபதிப்பு வரப்போகுதுல. அதுக்குத்தான் புது லேஅவுட்!'' என்கிறார் உற்சாகமாக

அர்த்தம் பொதிந்த புன்னகையுடன் தன் பால்ய காலத்துக்குள் பிரவேசித்தார்...

''அப்ப எனக்கு 12 வயசு. கள்ளுக் கடை மறியல் தீவிரமா நடந்துட்டு இருந்துச்சு. தேசபக்தர்கள் எல்லாரும் கள்ளுக் கடைகளை மூடச் சொல்லி கூட்டங்கூட்டமா  மறியல் பண்ணாங்க. போலீஸ் லத்தி சார்ஜ் பண்ணி அவங்களை வெரட்டி அடிச்சாங்க. மதிச்சியம் கள்ளுக் கடை மறியல் நடந்தப்ப, நான் படிச்ச பள்ளிக்கூட ஜன்னல் வழியா பார்த்தேன்

போலீஸ் அடிக்க, தொண்டர்கள் கையில் கிடைச்சதை எல்லாம் எடுத்து, போலீஸ் மீது எறிஞ்சாங்க. ஒரே கலவரம். என் புத்தகப் பையை எடுத்துட்டு நைஸா வெளியே ஓடி வந்துட்டேன். பையில் இருந்த புத்தகங்களை தரையில் கொட்டிட்டு கொஞ்சம் தள்ளி குவிச்சுருந்த சரளைக் கற்களை, பையில் அள்ளிட்டுப் போய் தேசபக்தர்கள் பக்கத்தில் கொட்டினேன். அவங்க அதை எடுத்து போலீஸ் மேலே எறிஞ்சாங்க... 

இப்படித்தான் என் பொதுவாழ்க்கை ஆரம்பிச்சது. கண் மூடி கண் திறக்கிறதுக்குள்ள 86 வருஷம் ஓடிருச்சு. எத்தனை ஜெயில்... எத்தனை அடி - உதை! தமிழ்நாட்டில் என்னை அடைக்காத ஜெயிலே கிடையாது. 'ஏறுனா ரயிலு... இறங்குனா ஜெயிலுனு எனக்குப் பட்டப் பெயர்கூட உண்டு.

ரெண்டாவது உலக யுத்தம் தொடங்கினப்போ, ஆங்கிலேயர்கள் பட்டாளத்துக்கு ஆள் எடுத்தாங்க; யுத்த நிதி திரட்டினாங்க. 'பட்டாளத்தில் சேராதே... பணம்-காசு கொடுக்காதேனு சிவகாசியில் பேசினேன். அதுக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் சப் ஜெயிலில் ஆறு மாசம் அடைச்சு, 50 ரூபாய் அபராதம் விதிச்சாங்க. எனக்கு ஜாமீன் கொடுக்க அப்போ இருந்த வெள்ளைக்கார டெபுடி கலெக்டர், ' உனக்கு சொத்து ஏதும் இருக்கா?’னு கேட்டார். 'இருக்குங்கய்யா... மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரில் இருக்கிற மங்கம்மா சத்திரம் என் சொத்து. மீனாட்சி அம்மன் கோயில், நாயக்கர் மகால், வண்டியூர் தெப்பக்குளம் எல்லாம் எங்க அப்பாவோட சொத்து. காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரைக்கும் எங்க பாட்டன், முப்பாட்டன் சொத்துதாங்கனு சொன்னேன்

இதை மொழிபெயர்த்துச் சொன்னதும் டெபுடி கலெக்டர் கடுப்பாகி, 'இவனுக்கு ஜாமீன் கிடையாது. ஜெயிலில் தூக்கிப்போடுங்கனு சொல்லிட்டுப் போயிட்டாரு.

1938-ல் ராஜபாளையத்தில் காங்கிரஸ் மாநாடு. அதுக்கு குமாரசாமி ராஜா தலைமை. அந்த மாநாட்டில் விநியோகிக்க மதுரையில் துண்டுப் பிரசுரங்கள் அச்சடிச்சு, 'திருப்பூர் குமரனை அங்கீகரிக்கணும்னு கோரிக்கை வெச்சுருந்தோம். அச்சடித்த நோட்டீஸ்களோடு மதுரையில் இருந்து நானும் என் நண்பனும் சைக்கிள்லயே ராஜபாளையம் போனோம். இப்ப இருக்கிற மாதிரி ரோடு இல்லை. வண்டிப்பாதைதான். பல தடவை விழுந்து எழுந்து கை கால் எல்லாம் காயங்களோடு போய்ச் சேர்ந்தோம்

அங்கு வந்திருந்த சக்திதாசன் சுப்ரமணியம், கே.ராமநாதன், மா..குருவேங்கடம்... மூவரும்தான் என் வாழ்க்கைப் பாதையை மாற்றினாங்க.

'நல்லா எழுதுற; பேசுற. நீ எங்ககூட பத்திரிகை ஆபீஸ் வேலைக்கு மெட்ராஸுக்கு வர்றியா?’னு கேட்டாங்க

நான் அப்போ போராட்டம், ஜெயில்னு அநாதைப் பயபோலத்தானே சுத்தித் திரிஞ்சுட்டு இருந்தேன். 'சரி வர்றேன்னு வண்டி ஏறிட்டேன். 'லோகசக்தியில் உதவி ஆசிரியர் வேலை. அண்ணா சாலைக்குப் பக்கத்தில் ஒரு தகரக் கொட்டகையில் எங்க பிரஸ் மறைவா இருக்கும். பகல் முழுக்க கை ரிக்ஷா இழுக்கிறவன் மாதிரி அப்பாவியா உட்காந்திருப்பேன். இரவு எல்லாம் கம்போஸிங், பிரின்டிங் நடக்கும்.

அப்ப நான் எழுதின, 'போருக்குத் தயார்’, 'கம்பெனியைக் கலக்கிய கட்டபொம்மன்கட்டுரைகள் ரொம்பப் பிரபலம்

போலீஸ் தேடி வந்து, 'மாயாண்டி பாரதிங்கிறது யாரு... தெரியுமா?’னு எங்கிட்டயே கேட்டாங்க. 'நான் ரிக்ஷா கூலி சாமிஎன் வண்டியில்தான் அவரு ஏறுவார். நாளைக்கு வருவாருனு சொல்வேன். மறுநாள் போலீஸ் வரும். 'அடடா... இப்பத்தான் அவரை பிராட்வேயில் எறக்கிவிட்டுட்டு வர்றேன்னு சொல்வேன்

அப்புறம் ஒரு வழியா, அது நான்தான்னு எப்படியோ கண்டுபிடிச்சு ஜெயிலில் போட்டானுக. வெளியே வந்த பின்னாடி, என்னை சோஷலிஸ்ட் இளைஞர் சங்கத்தின் செயலாளர் ஆக்கிட்டாங்க. அப்போ நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், காந்தியின் எதிர்ப்பை மீறி இரண்டாவது முறையா காங்கிரஸ் தலைவராத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

காங்கிரஸ்காரர்கள் யாரும் அவரை வரவேற்கவில்லை. ரயில் நிலையத்தில் நான்தான் அவருக்குக் கைகொடுத்து வரவேற்றேன். அவரோடது அகலமான முரட்டு கை. அப்புறம் மதுரைக்குப் போனார் நேதாஜி. எனக்கும் போக ஆசைதான்; ஆனா முடியலை. அங்கே முத்துராமலிங்கத் தேவர், கோபி, ஜானகியம்மா எல்லாரும் அவரை வரவேற்றாங்க!'' - ஆழ்ந்த பெருமூச்சு விட்டபடி தொடர்ந்தார் .மா.பா.

''சுதந்திரம் வாங்கிட்டோம். வெள்ளைக்காரன்கிட்ட வாங்கின அடியும் உதையும் முடிஞ்சுதுனு நினைச்சோம். ஆனா முடியலை. 'சீனாவை ஆதரிச்சோம்னு சொல்லி கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்தது காங்கிரஸ் சர்க்கார். ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அடக்குமுறை காலம். நர வேட்டையாடினாங்க. சிக்கினவங்களை எல்லாம் சிறையில் போட்டாங்க.       பல தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கைக்குப் போயிட்டாங்க. ஆனால், செயல்பாடுகள் மட்டும் நிற்கலை.

வி.பி.சிந்தன், .கே.கோபாலன், பி.ராமமூர்த்தி போன்ற தலைவர்களுடன் கோவை சிறையில் இருக்கும் பாக்கியம் எனக்குக் கிடைச்சது. சிறைக்குள்ளயே வகுப்பு எடுப்பாங்க. சிறைக்குள்தான் நான் முழுமையான கம்யூனிஸ்ட் ஆனேன். அதுக்காக இப்ப வரைக்கும் நான் ரொம்பப் பெருமைப்படுறேன்

பரோல்ல வெளியே வந்தப்போ, 'இவன் நாடு, மக்கள்னு திரியிறான். இவனுக்குக் கல்யாணம் முடிச்சுவெச்சா பொண்டாட்டி, புள்ளைனு திருந்திருவான். ஊர் வேலைக்குப் போகாம இருப்பான்னு எனக்கு பொண்ணு பாத்தாங்க. நமக்கு யாரு பொண்ணு குடுப்பா? கடைசியா எங்க அக்கா மக பொன்னம்மாவைக் கட்டிவெச்சாங்க

நான் கடலூர் ஜெயிலில் இருந்தப்ப, மனு எழுதிப் போட்டு பார்க்க வந்தா எம் பொஞ்சாதி.

'ஏன் மாமா, இந்தச் சீனாக்காரன் பண்ணுறது தப்புனு ஒரு வார்த்தை சொல்லிட்டீங்கன்னா, உங்களை வெளியில் விட்டுருவாகளாமே?’னு கேட்டா. அன்னைக்கு அவ கன்னத்துல ஓங்கி ஒரு அறை அறைஞ்சுட்டேன். 'இதுக்காடி நீ இங்க வந்தே, காங்கிரஸ்காரன் அனுப்பிவெச்சானா?’னு கேட்டேன். அவ அழுதுக்கிட்டே போயிட்டா. ஆனா, அதுக்குப் பிறகு அவ சாகிற வரைக்கும், அவ மேல் கோபமா என் கை பட்டது இல்லை.

நான் விடுதலையான கொஞ்ச காலத்தில், சேலம் சிறையில் அரசியல் கைதிகள் உரிமை கேட்டுப் போராடினாங்க. 22 பேரைச் சுட்டுக் கொன்னுட்டாங்க. நான் பல நாட்கள் சாப்பிடலை; தூக்கம் இல்லை. ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. அப்போ தூத்துக்குடியில் தலைமறைவா  இருந்தோம். தூத்துக்குடி அருகே 'மீளவிட்டான்என்ற இடத்தில் ரயிலைக் கவிழ்க்கணும்னு முடிவு பண்ணினோம். அஞ்சே பேர்தான். தண்டவாளத்தைக் கழற்றிட்டுக் காத்திருந்தோம்.

அதிகாலையில் வந்த ரயில் கவிழ்ந்துச்சு. பயங்கர சத்தம். ஆனா, உயிர்சேதம் எதுவும் இல்லை. நாங்கதான் இதைச் செய்தோம்னு போலீஸ் கண்டுபிடிச்சிருச்சு. மாநிலம் முழுக்கத் தேடினாங்க. நாங்க திருநெல்வேலி மேலப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரில் இருந்த வீட்டில்தான் குடியிருந்தோம். காலையில் போலீஸுக்கு டீ வாங்கிக் குடுப்போம். பலமுறை அவங்களும் எங்களுக்கு      டீ வாங்கிக் குடுத்தாங்க. ஆனா, எவனோ தகவல் சொல்லி எங்களைப் புடிச்சுட்டாங்க. மறுபடியும் ஜெயில்.

'ஏகலாம் சிறைச்சாலையே - நமக்கு
அதைவிட வேறென்ன வேலையே
னு பாடிக்கிட்டே ஜெயிலுக்குப் போனோம். எல்லாம் முடிஞ்சு மறுபடியும் ஜீவாவின் 'ஜனசக்தியில் வேலைக்குச் சேர்ந்தேன்.

ஒருநாள் நெடுநெடுனு வளர்த்தியா ஒரு பையன் வந்தான். 'உம் பேரு என்ன?’னு கேட்டேன். 'பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்னு சொன்னான். 'நண்டு செய்த தொண்டுனு ஒரு கவிதை எழுதியிருக்கேன். உங்க பத்திரிகையில் போட முடியுமா?’னு கேட்டான். '

இதுக்கு முன்னாடி பத்திரிகையில் உன் கவிதை வந்திருக்கா?’னு கேட்டேன். 'இல்லைனு உதட்டைப் பிதுக்கினான்.

'கவிதை இருக்கட்டும். இதைப் பாட்டா படிக்க முடியுமா?’னு நான் கேட்ட மறுநிமிஷமே, மேஜையில் தாளம் போட்டு, அதைப் பாட்டா படிச்சான். 'இப்படி இசையோட எழுதுனு சொல்லிட்டு, கவிதையைப் பிரசுரித்தேன்

அடிக்கடி கவிதையோடு வருவான். நானும் பிரசுரம் பண்ணுவேன். ஒருநாள் படபடப்போடு வந்து, 'எம்.ஜி.ஆர்., பாட்டு எழுதக் கூப்பிடுறார். நான் போகட்டுமா?’னு கேட்டான்.

'டேய்... கட்சிக்காரன் எவன்கிட்டயும் சொல்லாத. 'வேணாம்னுவாங்க. அவரு மகா நடிகர்டா. உனக்கும் நல்லது; அவருக்கும் நல்லதுனு சொல்லி அனுப்பிவெச்சேன்.

தேவிக்குளம், பீர்மேடு இடைத்தேர்தல் சமயத்தில் பண்ணைபுரத்தில் இருந்து 'வரதராஜன்னு ஓர் இளைஞன் வந்தான். அவனே பாட்டுக் கட்டி ஒரு கி.மீ சுற்றளவுக்குக் கேட்கிற மாதிரி பாடுவான். அப்படியொரு  கூட்டம் கூடுச்சு. தேர்தல் முடிஞ்சதும் மதுரைக்கு வந்தான்.

'எனக்கு ஏதாச்சும் நீங்க வழி சொல்லணும்னு சொன்னான்.

'நான் என்ன வழி சொல்ல... ஒண்ணு செய்யிநீ தனியாளா பாடினது போதும். உன்கூடப் பாடுறதுக்கு ஆளுங்க இருக்கானுகளா?’னு கேட்டேன்.

'என் தம்பிகள் இருக்காங்கனு சொன்னான்.
'பொண்ணுக?’

'என் தம்பி ராசைய்யா பெண் குரலில் பாடுவான்னு சொன்னான்.
'நீங்க இசைக்குழு ஆரம்பிங்கனு சொன்னேன்


உடனே 'பாவலர் சகோதரர்கள் இன்னிசை நாடக மன்றம்னு ஆரம்பிச்சாங்க. ஊர் ஊராப் போயி சக்கபோடு போட்டாங்க. அந்த ராசைய்யாதான் நம்ம இளையராஜா.

இதையெல்லாம் நினைச்சுப் பார்த்தா, நேத்து நடந்ததுபோல இருக்கு. ரொம்பப் பெருமிதத்தோடு இருக்கேன். ஒரே ஒரு வருத்தம் மட்டும்தான் என் மனசை அறுக்குது!'' என்றார் .மா.பா.

சற்றுநேர மௌனத்துக்குப் பிறகு, ''அப்ப போலீஸ்காரன் எங்களை அடிக்கிறப்ப நாலு அடிதான் வலிக்கும். மீதி நாப்பது அடி பொத்து பொத்துனு சத்தம்தான் கேட்கும். இப்ப பேப்பர்களில் வர்ற செய்திகளைப் பார்த்தா ஒவ்வொரு வரியும் வலி தருது. இதுக்குத்தானா இத்தனை வருஷம் சிறைப்பட்டோம், அடிபட்டோம், குடும்பம் பெருசு இல்லை... நாடுதான் முக்கியம்னு அலைஞ்சோம்?’னு வருத்தமா இருக்கு.

சாதிச் சண்டைங்கிறான், மதக் கலவரம்கிறான், சொத்து குவிச்சிட்டாங்கங்கிறான். அரசியல்ல ஆலமரங்கள்கூட காளான்கள்கிட்ட அண்டி நிக்குது

ஒண்ணு மட்டும் சொல்றேன்... அதிக சொத்தும் பணமும் சேர்ந்தா, அது சனியன் பிடிச்சது மாதிரி. எனக்கு இருந்த சொத்துக்களைப் பிரிச்சு சொந்தபந்தங்களுக்குக் கொடுத்திட்டு, பென்ஷன் பணத்தில் நிம்மதியா இருக்கேன். எனக்கு புள்ளகுட்டி இல்லைங்கிற குறைகூட இல்லை. எல்லாருமே என் புள்ளைங்கதானே!'' என்கிறார் .மா.பா.

விடை பெறும் முன் கைகூப்பி வணங்கினேன். தனது இடது கையால் என் கையை அழுத்திப் பிடித்து, தனது வலது கை முஷ்டியை உயர்த்தி .மா.பா-வின் உதடுகள் பெருமிதம் பொங்க உச்சரித்தன.

''ரெட் சல்யூட்!'