Showing posts with label மோசடி. Show all posts
Showing posts with label மோசடி. Show all posts

Thursday, July 24, 2025

இல்லாத நாட்டுக்கு போலி ......

 



மேற்கு ஆர்டிகா,

சபோர்கா,

பௌல்வியா,

லோடோனியா

ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளீர்களா? குறைந்த பட்சம் கேள்வியாவது பட்டுள்ளீர்களா?

நான் இன்றுதான் கேள்விப்பட்டேன், அந்த பெயர்களில் எந்த நாடும் கிடையாது என்றும் அந்த நாடுகளின் தூதர் என்றபெயரில் ஒருவன் போலி தூதரகம் நடத்தி மோசடி செய்து வந்துள்ளான் என்று இன்றுதான் கேள்விப்பட்டேன்.

உபி மாநிலம் காஸியாபாத்தில் ஒரு ஆடம்பர மாளிகையில் ஹர்ஷவர்த்தன் ஜெயின் என்பவன் தன்னை தூதராக காண்பித்துக் கொண்டு "வெளிநாடுகளில் வேலை, ஹவாலா ஆகிய மோசடிகளை செய்து வந்துள்ளான். நேற்று அவன் கைதாகியுள்ளான்.

பழைய போலிச்சாமியார் சந்திராசாமி, போபோர்ஸ் பீரங்கி தரகர் அட்னான் கஷோகி ஆகியோருக்கு நெருக்கமாக இருந்தவன் என்று சொல்லும் ஊடகங்கள் இப்போது அவனுக்கு பின்புலம் யார் என்றோ எத்தனை வருடங்களாக இந்த மோசடியை செய்து வருகிறான் என்பதை மட்டும் சொல்லவில்லை.

ஒரு வலைத்தளத்தில் நான் பார்த்த சில கமெண்டுகள் சுவாரஸ்யமானவை.

இந்த முறை குஜராத்தை மிஞ்சி விட்டது உ.பி.

உ.பி யில் புத்திசாலிகளும் கூட இருக்கிறார்கள் என்பது இப்போதுதான் தெரிகிறது.

காஸியாபாத் மக்கள் பெருமைப்பட வேண்டிய தருணம் இது. குஜ்ராத்திகள் கூட சிந்திக்காத மோசடி இது!

சரி, இதில் மொட்டைச்சாமியார் பங்கு என்ன?

Thursday, March 27, 2025

சாம்சங்- ஜியோ மோசடி - 5000 கோடி அபராதம்

 


இந்திய சுங்கத்துறை சாம்சங் நிறுவனத்தின் மீது 601 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 5000 கோடி ரூபாய்) அபராதம் விதித்துள்ளது. 

அலைபேசிகளுக்கான பாகங்களை இறக்குமதி செய்து ரிலையன்ஸ் ஜியோ விற்கு விற்றதில் வரி விலக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் என்று பொய் சொன்னதற்காக இந்த அபராதத்தை விதித்துள்ளது.

சாம்சங் இந்த அபராதத்தை கட்டுமா? கட்ட மத்தியரசு அனுமதிக்குமா?

கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் தன் முதலாளி அம்பானிக்கும் எதிராக மோடியால் செயல்பட முடியுமா?

இன்னொரு தகவலும் உள்ளது. அது நாளை . . .

Saturday, February 15, 2025

பக்தியின் பெயரால் சதுரங்க வேட்டை

 


இதை நம்பி எத்தனை பேரோ?

 நேற்று முகநூலில் பார்த்த விளம்பரம் கீழே. 



இதில் குறிப்பிட்டுள்ள எண்ணிற்கு (நம் பதிவை பார்க்கும் சங்கிகள் யாரும் அனுப்பக்கூடாது என்பதற்காக நான் இங்கே மறைத்து விட்டேன்) புகைப்படத்தை 500 ரூபாய் பணத்தோடு அனுப்பினால் புகைப்படத்தை பிரதி எடுத்து கங்கையில் அவர்கள் முங்கும் போது அதையும் சேர்த்து முக்குவார்களாம். இதன் மூலம் 144 வருடங்களுக்கு ஒரு முறை வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்ற புண்ணியம் உங்களுக்கு கிடைக்குமாம். உங்கள் முன்னோர்கள் உங்களை ஆசீர்வதிப்பார்களாம். தெய்வீக அருள் கிட்டுமாம்.

 அப்பாவி மக்களின் பணத்தை சுரண்ட சங்கி மோசடிக்கும்பல்,    ரூம் போட்டு யோசிக்கும் போல.

 இதை நம்பி எத்தனை முட்டாள் சங்கிகள் 500 ரூபாய் அனுப்பப் போகிறார்களோ, மொட்டைச்சாமியாருக்கே வெளிச்சம்!

 பக்தியின் பெயரால் நடைபெறும் சதுரங்க வேட்டைகளில் இதுவும் ஒன்று.

Wednesday, January 8, 2025

தேர்தல் கமிஷனுக்கும் நடத்தை விதி வேண்டும்.

 


புதுடெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. தேர்தல் நடத்தை விதிகள் அங்கே அமலுக்கு வந்து விட்டது.

அதற்கு முன்பாக டெல்லிக்கான திட்டங்களை அறிவிப்பது, அரைகுறையான திட்டங்களை திறந்து வைப்பது என்று முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மோடி முடித்து விட்டார்.

தேர்தல் கமிஷனுக்கு இதுவே பிழைப்பாகி விட்டது. எந்தெந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதோ, அங்கெல்லாம் மோடி சென்று அவரது அளப்புக்களை அள்ளி வீசுவார். எலும்புத்துண்டுகளை வீசி எறிவார். அவருடைய தேர்தலுக்கு முந்தைய நடவடிக்கைகள் முடிந்த பின்பே தேர்தல் நாட்கள் அறிவிக்கப்படும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தாங்கள் மோடியால் பொறுக்கி எடுக்கப்பட்டவர்கள் என்பதால் வாலை ஆட்டிக் கொண்டு விசுவாசத்தை காண்பிக்கின்றனர் தேர்தல் ஆணையர்கள்.

இவர்கள் நடத்தையை கட்டுப்படுத்தவும் விதிகள் வேண்டும்.

Monday, December 9, 2024

சதுரங்க வேட்டையோ என்றொரு சந்தேகம்

 


இரண்டு மாத காலத்தில் ஐந்து முறை நடந்ததால் உருவான சந்தேகம் இது.

ஏ.டி.எம் மில் பணம் எடுக்கச் சென்ற போது நிகழ்ந்ததுதான்.

“சார், ஏ.டி.எம் கார்டை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டேன். உங்கள் எண்ணுக்கு ஜி.பே அனுப்புகிறேன். உங்கள் கார்டில் பணம் எடுத்துக் கொடுங்கள்” இது போல மொத்தம் மூன்று முறை.

ஏ.டி.எம் மில் பணம் கட்ட வேண்டும். போக மாட்டேங்குது. நீங்க என் கிட்ட இருக்கற பணத்தை வாங்கிட்டு. நான் சொல்ற நம்பருக்கு ஜிபே செஞ்சிடுங்க. – இது போல இரண்டு முறை.

முன் பின் தெரியாதவர்களோடு ஜிபே மூலம் பணப்பறிமாற்றம் வேண்டாம் என்று யோசித்துஎன்னிடம் ஜிபே யே கிடையாது என்று மறுத்து விட்டேன்.

மீண்டும் மீண்டும் நடப்பதால் இதில் ஏதோ மோசடித் திட்டம் ஒளிந்திருப்பதாய் ஒரு சந்தேகம்.

யாருக்காவது ஏதாவது அனுபவம் இருக்கிறதா?

 

Thursday, November 21, 2024

அதானியும் மோடியும் என்ன பேசினார்கள்?

 


                                          

இப்படி ஒரு உரையாடல் நடந்திருக்குமல்லவா!

மோடி : என்ன ஜி இப்படியாயிடுச்சு?

அதானி: இப்ப என்ன ஆயிடுச்சு?

மோடி: அதான் ஜி, அமெரிக்காவில கைது வாரண்டெல்லாம் கொடுத்திருக்காங்க!

அதானி : அரெஸ்ட் வாரண்ட் போட்டுட்டா அரெஸ்ட் செஞ்சிடுவாங்களா? அப்படி அவங்க இந்தியா வந்துட்டு திரும்பி போயிட முடியுமா? திரும்பிப் போக நீதான் விட்டுடுவியா? அப்புறம் எதுக்கு உன்னை பிரதமரா வச்சுருக்கேன்!

மோடி : அதெல்லாம் பார்த்துக்கலாம்ஜி. அப்படி யாராவது வந்தா அமித்து அவங்களை ஏரோர்ட்டிலயே தூக்கிடுவான். அவங்களுக்கு திஹார் வாசனை காட்டிடலாம்.

அதானி : திஹார்ல தள்ளிடுவியா! என்ன காரணம் சொல்லுவே!

மோடி :இந்தியாவின் முக்கிய பிரமுகர்களை கொலை செய்யும் திட்டத்தோட வந்தாங்கன்னு சொன்னா மக்கள் நம்பிடுவாங்க.

அதானி : உன் ப்ரென்ட் ட்ரம்பு கோச்சுக்க மாட்டாரா?

மோடி : அவந்தான் இன்னும் பொறுப்பெடுத்துக்கலயே! அவனும் என்னை மாதிரிதான். நீதி, நேர்மை, நியாயம்னு பேசற அதிகாரிங்களை அவனுக்கும் பிடிக்காது.

சரி ஜி! நீங்க எதுக்கு அமெரிக்காவுல தொழில் செய்ய ப்ளான் செய்யறீங்க! நீ சொல்றதை செய்ய்தான் நான் ஒத்தன் இங்கே இருக்கேனே!

அதானி : இனிமே இந்தியாவில என்னய்யா இருக்கு? எல்லாத்தையும்தான் ஏற்கனவே  கொடுத்துட்டியே!

மோடி : நீங்க எல்லாத்தையும் கரெக்டா செய்வீங்களே! எப்படி பிரச்சினையாச்சு?

அதானி : நானும் உலகம் முழுக்க தொழில் செய்யறேன். பாகிஸ்தானில கூட தொழில் நடக்குது.

 மோடி : ஆமாம் ஜி.

 அதானி : நீதானய்யா பாகிஸ்தானுல விருந்து சாப்பிட போயிட்டு ஒப்பந்தத்தை தட்டிக்கிட்டு வந்தே!

 மோடி : உங்க தொழிலுக்கு சிக்கல் வரக்கூடாதுன்னுதான் பாகிஸ்தானுக்கு எதிரா நான் எதுவும் செய்யறதே இல்லை.

 அதானி : இல்லைன்னா மட்டும் கிழிச்சிடுவியா! என் கிட்டயே 56 இஞ்ச் சீன் போடறியே! சீனா ன்னு சொன்னாலே உன் காலெல்லாம் நடுங்கும்.  

 மோடி : அதை விடுங்கஜி! விஷயத்துக்கு வாங்க!

 அதானி: உலகம் முழுக்க துட்டு கொடுத்துத்தான் தொழில் செய்யறேன். அமெரிக்காவிலயும்தான். இந்த டீலில்தான் ஏதோ மிஸ்ஸாயிடுச்சு.  விடு பாத்துக்கலாம்.

 மோடி: ஜி இப்ப நான் என்ன செய்யனும்னு உத்தரவு போடுங்க! பிடேன் கிட்ட பேசவா இல்லை ட்ரம்பு கிட்ட பேசவா? அமெரிக்காவோட புதுசா ஒரு ஆயுத டீல் போட்டா முடிஞ்சுது மேட்டர்.

 அதானி: அதெல்லாம் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு  வந்த பின்னாடி பாத்துக்கலாம். இப்போ லோக்கல்லதான் கொஞ்சம் வேலை இருக்கு.

 மோடி: சொல்லுங்கஜி

 அதானி: பெரிய சேனல் எல்லாத்தையும் அடக்கியாச்சு. எவனும் வாயே திறக்க மாட்டான். இந்த ஃபேஸ்புக்கு, ட்விட்டரு, இன்ஸ்டா அதிலதான் சில பேரு கத்திக்கிட்டு இருக்காங்க. உங்க ஐ.டி விங் ஆளுங்களை கூப்பிட்டு அதானி மீதான நடவடிக்கை இந்தியா மீதான தாக்குதல், அதானி நல்லவரு, வல்லவரு, அப்டின்னு மானே,தேனே, பொன் மானே எல்லாம் சேர்த்து எழுதச் சொல்லு. வழக்கமா கொடுக்கறதை விட கூட போட்டு கொடுத்திடறேன்.

 மோடி : அவ்வளவுதானேஜி! நம்ம பசங்க தூள் கிளப்பிடுவாங்க! அது மட்டும் இல்லை, வேற ஏதாவது சில்லறை பிரச்சினையை பெருசாக்கி இதை மறக்கடிச்சுடுவாங்க! ஏ.ஆர்.ரகுமான் வேற டைவர்ஸாம். இது போதாதா நம்மாளுங்களுக்கு!

 அதானி : கரெக்டா செய்ய சொல்லுங்க, எல்லாம் கரெக்டா வந்து சேரும்.

 மோடி : ஆனாலும் ஒரு வருத்தம் ஜி.

 அதானி : என்னய்யா வருத்தம்?

 மோடி : உங்க கம்பெனி பங்கு  விலையெல்லாம் குறையுதாமே! உங்க சொத்து மதிப்பு குறைஞ்சிடுமே!

 அதானி : அதைப் பத்தி கவலைப்படாதே! ஜங்க விக்கற பங்கையெல்லாம் நாந்தான் வாங்கிக்கிட்டு இருக்கேன். கொஞ்ச நாள் போச்சுன்னா டிவிடெண்ட் கொடுப்பேன், மறுபடியும் வாங்க ஆரம்பிப்பாங்க, அப்போ ஒன்னுக்கு நூறா வித்து லாபம் பாத்துடுவேன்.

 மோடி : சூப்பர்ஜி

 அதானி : இதெல்லாம் தொழில்ல சகஜமப்பா . . .

Tuesday, August 13, 2024

கழுதைப்புலியும் கடிக்கும் ஆட்டுக்காரா!

 


செபி தலைவராக உள்ள அம்மையாரின் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என்று ஆட்டுக்காரன் சொன்ன காணொளியை பார்த்தேன். "அதானி புலி வருது, அம்பானி புலி வருதுன்னு சொன்னாங்க, ஒரு கழுதைப்புலி கூட வரலை" என்பது ஆட்டுக்காரன் கூற்று.

தம்பி ஆட்டுக்காரா, கழுதைப்புலியை அவ்வளவு சாதாரணமா நினைக்காதே! அது கடிச்சாலும் கதை ஓவர்தான் . . .

ரொம்ப நாள் உங்க தெய்வக்குழந்தையோட முதலாளி தப்பிக்க முடியாது. இந்த முறை இப்படித்தான் ஆகும்.....

எப்படி?????




Thursday, June 27, 2024

நீட் – நடத்துவது ??????

 


பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் அழுதால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என்பதுதான் “நீட்” தேர்வு வேண்டாம் என்பதற்கான முக்கியக் காரணம்.

இப்போது என்ன நிலைமை?

 நீட் பயிற்சி மையங்கள் இப்போது தரகு மையங்களாக மாறி விட்டது. “நீட்” மூலம் தரம் உறுதி செய்யப்படுகிறது என்பதெல்லாம் கட்டுக்கதை ஆகி பணம் உள்ளவர்களுக்கு சீட் வாங்கித்தரும் தரகர்களாக பயிற்சி மையங்களும் நீட் தேர்வின் நிர்வாகிகளும் மாறியுள்ளனர்.

நீட் அமைப்பின் தலைமை நிர்வாகி நீக்கப்பட்டுள்ளார்.

 பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 குற்றச்சாட்டுக்களும் ஆதாரங்களும் பல மாநிலங்களிலிருந்தும் குவியத் தொடங்குகிறது. கைதுகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

 “நீட்” தேர்வை  ஒட்டு மொத்தமாக நீக்க வேண்டும் என்பதற்கு இவற்றை விட இன்னும் ஒரு முக்கியமான காரணம் புதிதாக கிடைத்துள்ளது.

 ஆம்.

 நீட்டை நடத்தும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி என்ன மாதிரியான அமைப்பு?

 அரசின் துறையா?

அரசு நிறுவனமா?

 இல்லை, இல்லை, இல்லை.

 


மன மகிழ் மன்றம், குடியிருப்போர் அமைப்பு (பதிவு செய்யப்படாத டுபாக்கூர் சங்கங்களை குறிப்பிடவில்லை) போல சாதாரண “சொஸைட்டி”.

 ஆமாம்.

 சொஸைட்டி சட்டத்தின் படி பதிவு செய்யப்பட்ட சாதாரண சொஸைட்டி.

 எந்த சட்டத்தின் படியும் உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல. அதனால் யாருக்கும் எந்த பதிலும் சொல்ல வேண்டிய பொறுப்பும் இல்லாத அமைப்பு. இதனை நம்பி பல லட்சம் மாணவ/மாணவியரின் எதிர்காலத்தை ஒப்படைத்திருப்பது கொடுமையானது. பி.எம் கேர்ஸ் நிதிக்கு முன்பாகவே மோடி அரசு செய்த மோசடி நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸியை சொஸைட்டி என்ற அளவிலேயே வைத்துக் கொண்டது. அதிலிருந்தே தெரிகிறது மோசடி செய்யும் நோக்கில்தான் மோடி அப்படி உருவாக்கினார் என்பது.

 அதனால் உரக்கச் சொல்வோம்.

 “நீட்” தேர்வை அகற்று . . .

”நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி”யை கலைத்திடு

Thursday, June 6, 2024

ஒடிஷா வெற்றி - தேர்தல் கமிஷனின் பரிசு

 


பாஜக தன்னுடைய கோட்டை என்று கருதிக் கொண்டிருந்த உத்தரப் பிரதேசத்தில் மிகப் பெரும் இழப்பை சந்தித்த வேளையில் அதற்கு கை கொடுத்த மாநிலம் ஒடிஷா. ஒடிஷாவில் பாஜக பெற்ற வெற்றிக்குக் காரணம் தேர்தல் ஆணையம்தான்.

இந்தியா இவ்வளவு நீண்ட கால தேர்தலை இதுவரை பார்த்ததேயில்லை. மோடி பிரச்சாரம் செய்வதற்காகத்தான் பல கட்டங்களில் தேர்தல் நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே. தேர்தல் அட்டவணையில் செய்த வில்லங்கம் என்ன என்பது முடிவுகள் வந்த பின்னரே புரிகிறது.

தமிழ்நாட்டுக்கு  19.04.2024 அன்று  தேர்தல் முடிந்து ஐம்பது நாட்களுக்குப் பிறகே 01.06.2024 அன்று  ஒடிஷாவில் தேர்தல் நடந்தது.

 இடைப்பட்ட காலத்தில் பாஜக தமிழ்நாட்டு மக்களுக்கு  எதிராக விஷத்தை கக்கினார்கள், தமிழர்களை திருடர்கள் என்றார்கள். தமிழ்நாட்டு ஒப்பந்ததாரர்களே ஒடிஷாவில் வேலை செய்வதாக சொன்னார்கள். ஒடிஷாவை தமிழன் ஆளுவதா என்று கேட்டார்கள்.  பூரி ஜெகன்னாதரை துணைக்கு இழுத்தார்கள்.

 தெய்வக்குழந்தை, கிரிமினல் ஜண்டா, சீதையாக நடித்தவர் தொடங்கி சில்லறைகள் வரை அனைவரும் தேர்தல் பிரச்சாரம் என்று இதைத்தான் செய்தார்கள். ஒரு தமிழரை சொல்வதற்குப் பதில் ஒட்டுமொத்த தமிழர்களையும் பேசினார்கள்.

 தமிழர்களை இழிவு படுத்தி ஒடிஷா மக்களை உசுப்பேற்றினார்கள். தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து விட்டதால் அது எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்ற தைரியம் அவர்களுக்கு. ஆனாலும் தோற்றார்கள் என்பது வேறு விஷயம். தமிழ்நாட்டு முடிவுகள் பற்றி தனியாக எழுத வேண்டும்.

 தமிழ்நாட்டிற்கும் ஒடிஷாவிற்கும் ஒரே நாளில் தேர்தல் நடந்திருந்தாலோ அல்லது ஒடிஷாவிற்குப் பிறகு தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதாக இருந்திருந்தாலோ அல்லது கால இடைவெளி மிகக் குறைவாக இருந்தாலோ பாஜக வாயை பொத்திக் கொண்டிருந்திருப்பார்கள்.

 பாஜக விரும்பிய வண்ணம் தேர்தல் பிரச்சாரம் செய்ய வசதியாக தேர்தல் அட்டவணையை தயாரித்துக் கொடுத்தது தேர்தல் ஆணையம். அதனால்தான் ஒடிஷா மக்களை உசுப்பேற்றி அங்கே பெரிய வெற்றியை பெற்றது பாஜக. அது தேர்தல் ஆணையம் பரிசளித்த வெற்றிதான்.

 இது போல நடக்க வேண்டும் என்பதற்காகத்தானே அபூர்வக்குழந்தை தேர்தல் ஆணையர்களை “பொறுக்கி” எடுத்து நியமித்தது! பெற்ற எலும்புத்துண்டுகளுக்கு விசுவாசமாக வாலாட்டுவதுதானே அவர்கள் வேலை! கச்சிதமாக வாலாட்டி விட்டார்கள்…

பிகு: அயோத்தி ராமர் கைவிட்டதால் மோடி தன் சாமியை மாற்றி விட்டாராம்.

Wednesday, February 21, 2024

ராஜ தந்திரம் தோற்று விட்டதே டிமோ

 



தேர்தல் அதிகாரியை திருடனாக்கி எட்டு ஓட்டுக்களை செல்லாத ஓட்டுக்கள் என்று சொல்ல வைத்து உங்காளே வெற்றி பெற்றான் என்று அறிவிக்க வைத்தீர்.

 அது உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டதால் மூன்று ஆம் ஆத்மி கவுன்ஸிலர்களை விலைக்கு வாங்கி குதிரை பேரம் நடத்தினீர்.

 மறு தேர்தல் வரும் என்ற உம் நம்பிக்கையை தகர்த்தெறிந்தது உச்ச நீதிமன்ற தீர்ப்பு. செல்லாது என்று அறிவிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்களை செல்லத்தக்கது என்று முடிவு செய்து அதன் அடிப்படையில் வாக்கு எண்ணிக்கை நடந்ததால் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மேயராகிறார்.

 ஒரு அதிகாரியை விலைக்கு வாங்கினீர், மூன்று கவுன்சிலர்களை விலைக்கு வாங்கினீர். ஆனாலும் உம் ராஜ தந்திரம் தோற்று இந்தியா வென்று விட்டதே டிமோ!

 இது உமக்கான முதல் அடி. இன்னும் அடிகள் விழுந்து கொண்டே இருக்கும்.

 

Monday, February 19, 2024

ராஜினாமா –மோசடிக்கான ஒப்புதல் வாக்குமூலம்

 


சண்டிகர் மாநகராட்சி தேர்தல் முறைகேடாக நடந்ததற்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தது. இன்று வழக்கு விசாரணை வரவுள்ள நிலையில் மோசடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் மனோஜ் சோன்கர்  என்பவர் நேற்று நள்ளிரவு பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

 


இவரது ராஜினாமாவே மோசடி நடந்தது என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம். இந்த மனிதன் ராஜினாமா செய்வது மட்டும் போதாது. அந்த மோசடியில் தொடர்புடைய அனைவரும் அரசுப்பதவியோ, ஆட்சிப் பதவியோ அதை ராஜினாமா செய்ய வேண்டும், சிறையிலும் அடைக்கப்பட வேண்டும்.

 

Tuesday, October 17, 2023

“ஒரே நாடு, ஒரே தேர்தல் – டிமோ மோசடி

 



நாட்டில் எப்போது பார்த்தாலும் ஏதோ ஒரு பகுதியில் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது என்று டிமோ  ஒரு மொக்கைக்  காரணத்தை முன்வைத்து நாடாளுமன்றம் தொடங்கி உள்ளாட்சி தேர்தல் வரை ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்திட திட்டமிடுகிறார். துடைப்பக்கட்டைக்கு பட்டுக் குஞ்சலம் என்பது போல இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் அவர்களின் தலைமையில் ஒரு குழு ஒன்றையும் அமைத்துள்ளது.

இது அமலானால் என்ன ஆகும்?

நாடாளுமன்றத் தேர்தல் 2024 ல் நடைபெறவுள்ளது. அத்துடன் அனைத்து மாநில சட்டமன்றங்களின் தேர்தல்களையும் ஒன்றாக நடத்த வேண்டும் என்றால் பல மாநில சட்ட மன்றங்கள் அவர்களின் முழுமையான பணிக் காலத்திற்கு முன்பே முடிந்து விடும்.

உதாரணமாக  தமிழக சட்டமன்றத்தின் ஆயுள் இரண்டாண்டுகள் முன்பே முடியும். கர்னாடக சட்டமன்றத்தின் ஆயுள் நான்காண்டுகளுக்கு முன்பே முடித்து வைக்கப்படும். அப்பட்டமான ஜனநாயக படுகொலை இது.

தேர்தலுக்குப் பிறகு அந்த ஆட்சி தொடர முடியாத சூழல் வருமானால் என்ன ஆகும்?

அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரும் வரை அந்த மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி நடக்குமா அல்லது மறு தேர்தல் நடக்குமா? குடியரசுத்தலைவர் ஆட்சி பல ஆண்டுகள் நீடிப்பது ஜனநாயகமாகுமா? அது போன்ற சூழலில் அம்மாநிலங்களில் தேர்தல் நடைபெறுமானால் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” அர்த்தமற்றதாகி விடுமல்லவா?

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர் இறந்து போனாலோ அல்லது பதவி விலகினாலோ அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டாலோ, அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படுமா அல்லது அடுத்த தேர்தல் வரை காலியாகவே இருக்குமா?

ஒரு வேளை மத்தியரசே கவிழ்ந்து போனால் என்ன ஆகும்?

நாடாளுமன்றத் தேர்தலோடு அனைத்து மாநில சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டு அவற்றுக்கும் சேர்ந்து தேர்தல் நடைபெறுமா அல்லது சட்டமன்றத் தேர்தல் நிகழும் வரை மக்களவைத் தேர்தல் நடைபெறாமல் காபந்து அரசு நீடிக்குமா?

இக்கேள்விகள் அனைத்தும் ஒரே ஒரு உண்மையைத்தான் சொல்கிறது. “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்பது நடைமுறை சாத்தியமற்றது. ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவது.

பிகு" ரொம்ப நாள் முன்னாடியே எழுதியது. வேறு ஒரு கேலிக்கூத்து பற்றி எழுத நினைத்தேன். அதனை முடிக்க முடியாததால் இதனை பகிர்ந்து கொண்டு விட்டேன். 

 

Monday, March 20, 2023

ஆட்டுக்காரன் எனும் பொய்யன்

 


வாயைத் திறந்தாலே பொய், பொய் மட்டுமே என்பது ஆட்டுக்காரனின் வாடிக்கையாகி விட்டது.

லேட்டஸ்ட் பொய் . . .

"தேர்தலில் செலவு செய்ததால் என் சேமிப்பெல்லாம் போய் கடன் காரனாக மாறி விட்டேன்"

ஆனால் தேர்தல் ஆணையத்துக்கு கொடுத்த அறிக்கையில்

"சொந்தப் பணத்தை செலவு செய்யவில்லை"


சொந்தப் பணத்தை செலவு செய்து கடன் காரனாகியிருந்தால் தேர்தல் ஆணையத்திடம் சொன்னது பொய்.

தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த அறிக்கைதான் சரியானது என்றால் நான் கடங்காரனாகி விட்டேன் என்று அனுதாபம் தேடிக் கொள்வது பொய்.

எப்படிப்பார்த்தாலும் ஆட்டுக்காரன் ஒரு பொய்யன் என்பது மட்டும்தான் உண்மை.

பிகு: ஆனாலும் "மத்யமர் ஆட்டுக்காரன்" குழு சங்கிகள் ஆட்டுக்காரனுக்கு கொடுக்கிற முட்டுக்கள் இருக்கே, அது வேற லெவல் . . .

Friday, December 23, 2022

ஆட்டுக்காரன் ரீல் அறுந்து போச்சு

 


ஆட்டுக்காரன் தினமும் கண்டெண்ட் தருகிறான்.

செவித்திறன் குறைந்தவர்களுக்கு 10,000 ரூபாய் மதிப்பில் இயந்திரம் தருவதாய் அறிவித்தான்.



அது வெறும் 345 ரூபாய் என்று அம்பலமாகி விட்டது.

அதனால் அனைவருக்கும் 10,000 ரூபாய் மதிப்பு இயந்திரமே தருவேன் என்று அறிவித்துள்ளான். 



அது கொடுக்கும் போதுதான் தெரியும். இப்படி பல வாக்குறுதி கொடுத்து கண்டுகொள்ளாமல் இருந்ததுதான் ஆட்டுக்காரன் வரலாறு.

ஆட்டுக்காரன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பின்னும் கூட ஆட்டுக்காரனை அவதூறு செய்யாதீர் என பொங்கும் சங்கிகளை என்ன சொல்வீர்?



முட்டாள், முட்டாள், முட்டாள்.

Thursday, June 9, 2022

கருமுட்டை வணிகம் -கைது செய்யுங்கள்

 


 

தன் தாயும் தன் தாயுடன் வாழ்பவரும் தன்னை பல முறை பல   மருத்துவமனைகளில் போலி ஆதார் அட்டைகளைக் கொண்டு கரு முட்டை கொடுக்க வைத்துள்ளனர் என்ற இளம் பெண்ணின் குற்றச்சாட்டு தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று.

 உடல் உறுப்புத் திருட்டுக்கு இணையான குற்றம் என்று சொன்னால் கூட தவறில்லை. அது மனிதன் இறந்து போனதற்கு பின்பு நடப்பது. இது மனிதன் பிறப்பிற்காக செய்யப்படுவது.

 அந்த பெண்ணின் குற்றச்சாட்டு ஆழ்கடலில் ஒளிந்துள்ள பெரும் பனிப்பாறையின் விளிம்பாகவே தோன்றுகிறது. எத்தனை பெண்கள் இது போல பாதிக்கப்பட்டனரோ என்று பதைக்க வைக்கிறது.

 ஆம்.

 இன்று மருத்துவத் தொழிலில் அதிலும் தனியார் மருத்துவ மனைகளில் கொடி கட்டி பறப்பது செயற்கை கருத்தரிப்பு நிலையங்கள்தான். புற்றீசல் போல பல செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள்தான். பல மருத்துவமனைகள் ஊருக்கு ஊர் கிளை திறந்து கொண்டிருக்கிறார்கள்.

 எப்படியாவது குழந்தை வேண்டும் என்று தவித்துக் கொண்டிருக்கிறவர்கள், இவர்கள் என்ன செய்தாலும் பரவாயில்லை என்று பணத்தை கொட்டித் தர தயாராக இருக்கிறார்கள்.

 அந்த பலவீனத்தை இம்மையங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. அதற்காக எப்படிப்பட்ட முறைகளையும் கையாள்வார்கள்.

 அதனால் தமிழ்நாட்டு அரசு இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்து தவறிழைத்த  மருத்துவமனைகள் மூடப் பட வேண்டும்.

 

Sunday, April 24, 2022

வெள்ளைத்துணி முன்னேற்றம்

 


கொரோனாவுக்கு முன்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குஜராத் வந்த போது அவர் கண்ணில் படக் கூடாது என்பதற்காக குடிசைப் பகுதிகளை சுவர் கட்டி மறைத்தார்கள்.

இப்போது இங்கிலாந்து பிரதம மந்திரி போரீஸ் ஜான்சன் வந்த போது வெள்ளைத்துணி கட்டி மறைத்துள்ளார்கள்.

சுவர் கட்ட இப்போது காசு கிடையாதா?

அல்லது

எதற்கு தேவையில்லாமல் சுவருக்கு செலவு செய்ய வேண்டுமென்று வெள்ளைத்துணி கட்டினார்களா?

கடந்த முறை ட்ரம்பிற்காக நூறு கோடி செலவு செய்தார்கள். அதிலே பூ அலங்காரத்துக்காக மட்டும் செய்த ஊதாரித்தனம் மூனே முக்கால் கோடி.

அதையெல்லாம் மக்களுக்காக செலவு செய்திருந்தால் இப்போது வெள்ளைத்துணி போட்டு மறைக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

வெள்ளைத்துணி மறைத்தது குடிசைகளை மட்டுமல்ல . . .

குஜராத் மாடல் என்று ஊதிப் பெருக்கப்பட்ட ஒரு பிம்பம் என்ற உண்மையையும் கூட.


Friday, January 7, 2022

பஞ்சுப் பொங்கல் போச்சா மோடி

 


மேலே உள்ள செய்திதான் கீழே உள்ள செய்தியை படித்தவுடன் நினைவுக்கு வந்தது.


பல சுவாரஸ்யமான காமெடிக் காட்சிகளை தமிழ்நாடு மோடி வருகை ரத்தானதன் மூலம் இழந்து விட்டது.


Thursday, December 30, 2021

சட்டபூர்வ சதுரங்க வேட்டை

 


இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் முதல் பக்கம் கீழே உள்ள விளம்பரத்தைப் பார்த்தேன்.



ஒரு சவரன் தங்கம் ரூபாய் 2,022 என்று அந்த விளம்பரம் சொல்கிறது. ஒரு சவரனுக்கு முப்பதாயிரம் ரூபாய் குறைத்து தரும் நல்லவர்களா என்ற சந்தேகத்தோடு அந்த விளம்பரத்தை முழுமையாக படித்தேன்.

01.01.2022 அன்று மட்டுமே இந்த சலுகை . . .

அந்த கடையின் நான்கு கிளைகளில் மட்டும்தான் இந்த சலுகை விலையாம்.

இந்த சலுகை நான்கு மணி நேரத்துக்கு ஒருவர் என்ற அடிப்படையில் மூவருக்குத் தரப்படும்.

ஆக மொத்தம் 12 பேருக்கு தரப்படும்.

சலுகை விலையால் அந்த கடைக்கு இழப்பு 3,60,000 ரூபாய்.

அந்த சலுகை யாருக்குக் கிடைக்கும்?

குறைந்த பட்சம் ஐயாயிரம் ரூபாய்க்கு தங்கம் வாங்குபவருக்கு ஒரு சீட்டு தரப்படும். அந்த சீட்டில் அந்த கடைக்கு ஒரு விளம்பர முழக்கம் எழுதித் தர வேண்டும். அப்படி ஐயாயிரம் ரூபாய்க்கு நகை வாங்கி விளம்பர முழக்கம் எழுதித் தந்தால் அந்த முழக்கம் திருப்தியாக இருந்தால் நான்கு மணி நேரத்துக்கு ஒருவருக்கு சலுகை விலையில் தங்கம் விற்கப்படும்.

அதிர்ஷ்டக் குலுக்கல் கிடையாது. தகுதியான விளம்பர முழக்கத்திற்கே சலுகை விலை என்று சொல்லி விட்டது.

2022 ரூபாய்க்கு ஒரு சவரன் என்ற ஆசையை தூண்டி விட்டாயிற்று.

விளம்பர வாசகத்தின் அடிப்படையில் பரிசு என்று சொல்லியாகி விட்டது.

பிறகென்ன நம் மக்கள் தங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்காதா என்று ஐயாயிரம் ரூபாய்க்கு தங்கம் வாங்கிக் குவிக்கப் போகிறார்கள்.

 நான் விளம்பரத்தைப் பார்த்தது ஆங்கில இந்து நாளிதழில். இன்னும் எத்தனை நாளிதழ்களில் வந்துள்ளதோ? நாளையும் வெளி வரலாம். அவர்கள் செலவழிக்கும் 3,60,000 ரூபாயை விட விளம்பரக் கட்டணமே பல மடங்கு இருக்கும்! சலுகை தருவது என்பது ஜூம்லா. அதன் பேரில் ஐயாயிரம் ரூபாய்க்கு தங்கம் வாங்க கூட்டத்தை சேர்ப்பதுதான்.

இதுவும் ஒரு வகை சதுரங்க வேட்டைதானே!

பிகு: அந்த கடைக்கு நாம் வேறு விளம்பரம் தர வேண்டுமா என்று அக்கடையின் பெயர் விலாசத்தையெல்லாம் நீக்கி விட்டேன். திருவண்ணாமலை, புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய ஊர்க்காரர்கள் மட்டும் உஷாராக இருக்கவும்.

 

Sunday, April 25, 2021

போலி முகநூல் கணக்கு -எச்சரிக்கை

 




போன மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர்களின் முக நூல் கணக்கைப் போல ஒரு போலி கணக்கு துவக்கப்பட்டு அந்த கணக்கிலிருந்து சிலருக்கு பண உதவி வேண்டும் என்று இன் பாக்ஸில் மெசேஜ் போயுள்ளது. கிட்டத்தட்ட அதே நேரத்தில் எங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு அலுவலர் பெயரிலும் ஒரு போலி கணக்கு துவக்கப்பட்டு பணம் வேண்டும் என்ற செய்தி சென்றது.

இரண்டு நாட்களுக்கு முன்பாக எங்கள் கோட்டத்தின் உயரதிகாரி ஒருவர் பெயரில் ஒரு நட்பழைப்பு வந்தது. அவருக்குத்தான் ஏற்கனவே முகநூல் கணக்கு உள்ளதே! இப்போது ஏன் புதிதாக? பழைய கணக்கின் பாஸ்வேர்ட் மறந்திருக்குமா அல்லது போலிக் கணக்கா? என்று பேசிக் கொண்டோம். நேரில் பார்க்கும் போது கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.  அதற்கெல்லாம் அவசியமில்லாமல் என் பெயரில் யாராவது பணம் கேட்டால் தர வேண்டாம் என்று அவரே தெளிவாக அவரது ஒரிஜினல் முகநூல் கணக்கிலிருந்து விளக்கமளித்து விட்டார்.

இப்போது இதுதான் புதிய சதுரங்க வேட்டை போல் உள்ளது.

சரி முக நூல் நிர்வாகம் என்ன செய்கிறது?

மேலே குறிப்பிட்ட மூன்று சம்பவங்களிலும் அவை போலிக் கணக்கு என்று ரிப்போர்ட் செய்தேன். 


அவர்கள் கம்யூனிட்டி ஸ்டாண்டர்ட் படி அது சரியான அக்கவுண்ட்தான். வேண்டுமானால் நீ ப்ளாக் செய்து கொள் என்று சொல்லி விட்டது முகநூல். என்னை எப்படி அனாமதேயம் என்று சொன்னது என்பதும் புரியவில்லை

ஆகவே போலிக் கணக்குகள் அதிகமாக உலா வருகிறது. எச்சரிக்கையாக இருப்பீர்.

என்னிடமிருந்து ஏதாவது புதிய முக நூல் கணக்கின் பெயரால் நட்பழைப்பு வந்தால் ஏற்க வேண்டாம்.

பொதுவாகவே நான் யாரிடமும் எனக்காக பணம் கேட்க மாட்டேன். நான் சார்ந்த இயக்கத்திற்காக கேட்டால் கூட நேரடியாக கேட்பேனே தவிர, நிச்சயமாக இன் பாக்ஸ் மூலமாக கேட்க மாட்டேன். அப்படி கேட்டால் அது போலி என்று உணர்க. பணம் எதுவும் அனுப்ப வேண்டாம். 

Saturday, April 3, 2021

ஓவர் சைட்டாம், நம்புங்கய்யா, நம்புங்க . . .

 


சேமிப்புக்கான வட்டி விகிதங்களை குறைத்து விட்டு எதிர்வினைகளைப் பார்த்து அது ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என்று அஞ்சி அதை திரும்பப் பெற்ற மத்தியரசும் நிர்மலா அம்மையாரும் சொன்ன காரணம்தான் அவர்களின் மோசடித்தனத்தை (மோடித்தனத்தை) அம்பலப்படுத்துகிறது. 

ஓவர் சைட்டால், அதாவது கவனக் குறைவால் தவறாக ஆணை வெளி வந்து விட்டதாம்.

ஒரு மருத்துவர் ஓவர் சைட்டால் தவறான மருந்தை கொடுத்தால்,

ஒரு வழக்கறிஞர் ஓவர் சைட்டால் தவறான செக்சனை சொன்னால்,

ஒரு ஊழியர் ஓவர் சைட்டால் தவறான வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்தினால்

இவர்கள் எல்லாம் ஏராளமான விமர்சனத்திற்கு உள்ளாக வேண்டியிருக்கும்.  தவறான வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்திய ஊழியர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டியிருக்கும். கவனக் குறைவு என்பதை எல்லாம் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.

அப்படி இருக்க இந்த அம்மணி, ஜஸ்ட் லைக் தட் கவனக்குறைவு என்று சொல்கிறார். 

தேர்தலுக்காகத்தான் இந்த முடிவு என்று சொல்லும் நேர்மை கூட இந்த மோசடிக் கூட்டத்திற்கு கிடையாது.

ஆனால் மக்களே எச்சரிக்கையாக இருங்கள்.

கவனக்குறைவால் வெளியான அரசாணை மீண்டும் கவனத்தோடு தேர்தலுக்குப் பிறகு வெளியாகும்.

இருபது நாளாக உயராத பெட்ரோல் டீசல் விலையும் உயரும்.

அதனால் உங்கள் ஓட்டு திமுக கூட்டணிக்கே இருக்கட்டும்.