Wednesday, November 30, 2011

நான்காய் பிரித்தால் நஷ்டமல்லவோ ?





உத்திர பிரதேசத்தை  நான்காகப் பிரிப்பது  என்ற முடிவை 
மாயாவதி  அவசரப்பட்டு  எடுத்து விட்டார் என்றே 
தோன்றுகின்றது. 


நான்கு  மாநிலத்திலும்  அவரது  கட்சி  வெற்றி பெறுகின்றது
என்று  வைத்தாலும் கூட  அவரால் நான்கு மாநிலத்திலும்
முதலமைச்சராக முடியாதே! அதற்கு  அரசியல் சாசனத்தில் 
இடம் கிடையாதே!  வேறு யாராவது ஒருவரைத்தானே 
முதலமைச்சர் ஆக்க வேண்டும்! அம்மா, மாயா, மம்தா 
ஆகிய மூவருக்குமே  அடுத்தவருக்கு முக்கியத்துவம்
கொடுக்க மனம் வராதே!


ஏதாவது  மாநிலத்தில் தோற்றுப் போய் விட்டால் அந்தப்
பகுதியிலிருந்து  வருகின்ற  வருவாய்  அடிபட்டு விடுமே,
அது நஷ்டமாயிற்றே! 




அதே போல் அவர் போட்டியிடும்  மாநிலத்திலேயே 
அவர் கட்சி தோற்றுப் போய் விட்டால் முதலுக்கே 
மோசமாய் விடுமே? 

என்ன கணக்கோ! என்ன எழவோ?

Tuesday, November 29, 2011

சூறையாடுவதில் சுகமோ?



தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளை  மட்டுமே  அரங்கேற்றி
வரும் மத்தியஅரசின்  புதிய நாசகார செயல் சில்லறை வணிகத்தில் 
அந்நிய நேரடி முதலீட்டை  அனுமதிப்பது. 


யாருக்கு  இதனால் லாபம் ?


ஏற்கனவே  இந்திய முதலாளிகள் பலர் நுகர் பொருள் வணிகம் 
செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். பிரம்மாண்டமான 
வணிக வளாகங்கள்  இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் 
அவற்றிலே  சாமானிய மக்களால் நுழைய  முடியுமா? 
அப்படியே நுழைந்தாலும்  பொருட்களை  வாங்கத்தான் 
முடியுமா? 


ஆக நுகர்வோருக்கு  எவ்வித லாபமும் கிடையாது.


அடுத்து  விவசாயிகள். 


விவசாயப் பொருட்களை கொள்முதல் செய்யும் பொறுப்பை
அரசு மொத்தமாக  கைகழுவும்  ஏற்பாடுதான் இது. பன்னாட்டு
நிறுவனங்கள்  கொள்முதல் செய்வது  என்பது  முன் பேர
ஊக வணிகத்தின் மூலம் மட்டுமே நடக்கும். விவசாயிகளுக்கு
அடிமாட்டு விலை கொடுத்து விட்டு இவர்கள் கொள்ளை லாபம்
சம்பாதிக்கப்போகின்றார்கள். 


இந்தியாவில் சில்லறை வணிகத்தில் கிட்டத்தட்ட நான்கு கோடி
பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் 
என்பதுதான் நிகர விளைவாக இருக்கும்.


கோடிக்கணக்கான  மக்களின் வாழ்வை சூறையாடுவதில் 
சுகம் காணும் சுய நல மத்தியஅரசை  தூக்கி எறிய தயாராவோம்.
      

Sunday, November 27, 2011

தமிழத்தில் காங்கிரசை ஒழிக்க ராகுல் காந்தி குறி




ஐயா, நான் ஒன்றும் தவறாகவோ எழுத்துப் பிழை, இலக்கிய பிழையாகவோ எழுதவில்லை. சொற்குற்றம், பொருட்குற்றம்
எதுவும் இல்லை.


தமிழக காங்கிரசின் புதிய தலைவர் ஞான தேசிகன் கல்கி 
வார இதழிற்கு அளித்த பேட்டியில் ராகுல் காந்தி தமிழகத்தை குறி வைத்துள்ளார் என்று  கூறியுள்ளார். 


ராகுல் காந்தி பீகாரை குறி வைத்தார். இரண்டு இலக்க எம்.எல்.ஏ
எண்ணிக்கை  ஒற்றை இலக்கமானது. 


உத்திர பிரதேச மாநிலத்திலும் அதே கதிதான். 


தமிழகத்தில் இருப்பது என்னவோ நான்கு எம்.எல்.ஏ தான். 
ராகுல் குறி வைத்த பின்பு அது பூஜ்ஜியமாகத்தானே மாறப்
போகின்றது?   

Saturday, November 26, 2011

நாட்டு நடப்பு நல்லாவே இல்ல



கீழே  உள்ள கார்டூன்கள் சொல்லும் செய்தி இதுதான்.
ரொம்ப புத்திசாலி, நல்லவர்னு தலைவர்கிட்ட சர்டிபிகேட், முன் ஜாமீன்
இரண்டுமே எப்பவுமே  வச்சிருப்பார். 

 
 ஜெயிலில ஏ.சி போட்டு போன், பிரிட்ஜ் எல்லாம்
வைங்கப்பா, நாம போற போது பயன்படும். 


 பைலட் லைசன்ஸ் வாங்கவே நிறைய செலவழிச்சுட்டானாம்
அதனாலதான் நிறைய சம்பளம் வேணுமாம்
 


 ஏப்ரல் ஒன்னாம் தேதி தேர்தல் வாக்குறுதியை
வெளியிடுவோம், அப்பத்தான் என் செய்யலன்னு 
ஒரு  பய கேட்க முடியாது .


வேற வேற கட்சிதான் ஆனா முன்னாடி
ஜெயிலில் ஒரே ரூமில் இருந்தோம்ல 
 


 சும்மா கிரிக்கெட், சினிமா பத்தி மட்டும் பேசி கதைய 
முடிப்போம். வேற எதுவும் தேவையில்லை.



கேடிங்க பட்டியல், வரி பாக்கி பட்டியல் இதுலதான் உங்க பேர் 
இருக்கு, வேட்பாளர் பட்டியலில் இல்ல,


காமன்வெல்த் போட்டிக்கு 200 கோடி ரூபாய் 
காண்ட்ராக்ட் கொடுத்த கம்பெனி விலாசம் இதுதானா?
சரியா பார்த்தியா?
 



இந்த கட்சிக்கு ஒட்டு போட்டா ஏழு நாள் சிம்லா கூப்பிட்டு
போவாங்களாம், 

கலைந்து போன பிரதமர் கனவு


எங்கள் சங்க இதழான சங்கச்சுடரில் வரும் தொடருக்காக எழுதப்பட்டது. 


ஊழல்களின்  ஊர்வலம்

கால்நடைத் தீவனத்தால் கலைந்து போன பிரதமர் கனவு

"சமோசாவில் ஆலு (உருளைக்கிழங்கு) இருக்கும் வரை பீகாரின் முதல்வராக நான் இருப்பேன்'  என்று ஆரவாரமாக அறிவித்த லாலு பிரசாத் யாதவ் இந்தியப் பிரதமர் பதவியையும் குறி வைத்தார். ஆனால் அவரது முதலமைச்சர் பதவியையும்
பறி கொடுக்க வைத்தது கால்நடைத் தீவன ஊழல்.

சிற்றோடைகளிலிருந்துதான் மிகப் பெரிய நதிகள் உருவாகின்றது  என்ற சொற்றொடர் இந்த மிகப் பிரம்மாண்டமான 950  கோடி ரூபாய் ஊழலுக்கும்  பொருந்தும். கால்நடைகளைப் பாதுகாக்க அவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க
விவசாயிகளுக்கு  இலவசமாக தீவனம், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வழங்குவது  என்ற திட்டத்தை பீகார் மாநில அரசு அறிமுகம் செய்கின்றது.

1970 களின் இறுதியில் இத்திட்டம் துவங்குகின்றது. முதலில் ஒரு மாவட்டத்தில் செலவு செய்யாமல் பொய்யானரசீதுகள் போட்டு  அரசு கஜானாவிலிருந்து பணம் சுருட்டுகின்றார்கள். அதை அப்படியே மாநிலம் முழுதும் விரிவு படுத்துகின்றனர். ஜகன்னாத் மிஷ்ரா முதலமைச்சராக இருந்த போது தொடங்குகின்ற இந்த முறைகேடு லாலு பிரசாத் யாதவ் காலத்தில் விஸ்வரூபம் எடுக்கிறது. இந்த வகையில் பணம் சுருட்ட ஒரு மாபியா கும்பலே செயல்படுகின்றது.
பணம் பலருக்கும் செல்கின்றது.

பீகார் அரசு, மத்தியரசுக்கு  அனுப்ப வேண்டிய சில அறிக்கைகளை அனுப்பாமல் கால தாமதம் செய்கின்றபோதுதான் இந்த ஊழல் வெளி வருகின்றது. இந்த ஊழலை மத்திய புலனாய்வுத்துறை விசாரிக்கிறது. பீகார் மாநில அதிகாரிகள்
விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கின்றார்கள் என உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ  புகார் செய்ய நீதிமன்றம் கண்டித்த பின்பே விசாரணை வேகம் பிடித்தது. இந்த விசாரணையை முடக்குவதற்காக லாலு பிரசாத் யாதவ் அளித்த
நிர்ப்பந்தத்தால் சி.பி,ஐ இயக்குனர் ஜோகீந்தர்சிங்கை அப்போதைய பிரதமர் ஐ.கே.குஜ்ரால் மாற்றினார் என்று குற்றச்சாட்டு சொல்லப்பட்டது.

இறுதியில் ஜகன்னாத் மிஷ்ரா, லாலு பிரசாத் யாதவ் மற்றும் ஏராளமான அதிகாரிகள் கைது செய்யப்படுகின்றனர்.லாலு முதல்வர் பதவியிலிருந்து விலகி அவரது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்குகின்றார். இந்த ஊழல்
வழக்கின் இறுதி தீர்ப்பு இன்னமும் வரவில்லை.

ின் குறிப்பு: இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராகக் கருதப்பட்ட பீகார் கால்நடைத்துறை இயக்குனர் கடற்கரை ஆறுமுகம் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி, இந்த ஊழல்  தொடர்பாக  ஒரு இணைய தளத்தையே துவக்கி உள்ளார். அதிலே பீகாரின் தற்போதைய முதல்வர் நிதீஷ் குமாரும் ஒரு கோடி ரூபாய் லஞ்சப் பணத்தை இந்த ஊழலில் தொடர்புள்ள அதிகாரி தூபே யிடமிருந்து பெற்றார் என்று சொல்லப்பட்டுள்ளது.


Friday, November 25, 2011

தங்கமோ தங்கம் - அல்சர் இருந்தால் பார்க்க வேண்டாம்.

தங்கம்  விற்கும் விலையில்  வாங்குவது  என்பதல்ல,
வாங்க வேண்டும்  என நினைப்பதே  சிரமம். எனவே 
தங்கம் எப்படியெல்லாம் அடுக்கப்பட்டு இருக்கிறது
என்பதை  படத்தில்  பார்த்து மகிழ்ச்சி அடையவும். 








Thursday, November 24, 2011

அடுத்து அறை வாங்கப் போவது யார்?


மத்திய விவசாய அமைச்சர் சரத் பவாரை  ஒரு இளைஞரை 
கன்னத்தில் அறைந்துள்ளார். அவர் ஒரு ஊழல் பேர்வழி 
என்பது  அறைக்கான காரணம். பல அமைச்சர்களுக்கும் 
இது போன்ற வைத்தியம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக 
அவர் கூறியுள்ளார். 




இது ஏற்புடையதா என்ற விவாதத்திற்கு நான் செல்ல 
விரும்பவில்லை. இது போல நடப்பது  சரியல்ல என்று 
உதடு சொன்னாலும்  இவர்களுக்கு நன்றாக இப்படி 
கொடுப்பதுதான் சரி என்று  உள்ளம் சொல்லும். 
ஒவ்வொருவருடைய மனசாட்சியும்  இதை 
ஒப்புக்கொள்ளும்.




ஊழலுக்காக மட்டும்  அறை கொடுப்பது சரியல்ல. 
நாட்டின் சொத்துக்களை பன்னாட்டு முதலாளிகளுக்கு
தாரை வார்ப்பது. ஏழை மக்களை கண்ணீரில் தவிக்க
விட்டு செல்வந்தர்களுக்காக  பாடுபடுவது, ஜாதிய,
மத உணர்வுகளைத் தூண்டி மக்களைப் பிரிக்க 
நினைப்பது, சுய லாபத்திற்காக கலவரங்களை 
தூண்டுவது, சர்வதேச அனுபவங்களைப் பொருட்படுத்தாமல்
இந்திய நிதித்துறையை பன்னாட்டு நிதி மூலதனம் 
சூறையாட அனுமதிப்பது, கோடிக்கணக்கான 
சில்லறை வணிகர்களை  காவு கொடுத்து  அந்நிய
பகாசுர நிறுவனங்களை  அனுமதிக்க முயல்வது என
பல்வேறு காரணங்களுக்காக  பலரும் அறை வாங்க
தகுதியானவர்கள். 


மன்மோகன்சிங், அத்வானி, நரேந்திர மோடி, பிரணாப் 
முகர்ஜி, மம்தா பானர்ஜி, ப.சிதம்பரம், என பலரும் 
அறை வாங்க தகுதியானவர்கள்தான்.    

நொந்தே போனேன்.





சில நாட்களுக்கு முன்பாக 
இப்படியுமா இழிவுபடுத்துவார்கள் 
என்று ஒரு பதிவு  எழுதியிருந்தேன்.
தற்கொலை செய்து கொள்ள தூக்கில்
தொங்கும் கணவனைப் பார்த்து
அது எனது புதிய ஸ்கார்ப் என்று
மனைவி கதறுவதாக  இருந்த
படத்தைப் பார்த்து எழுதியது.


இன்று வெளியான ஆனந்த விகடனில்
பொக்கிஷம் பகுதியைப் பார்த்து
அதிர்ந்து போனேன். 


அதிலே  மதனின் ஜோக் ஒன்று


தற்கொலை செய்ய முயலும் கணவனைப்
பார்த்து மனைவி கண்டிக்கிறாள்.


"கொஞ்சமாவது உங்களுக்கு புத்தி இருக்கா!
அது நான் துணி உலர்த்தரதுக்காக வாங்கி
வெச்சிருக்கிற கயிறு '


காலம் காலமாக இப்படி பெண்களை 
இழிவு படுத்தும் போக்கைப் பார்த்து
நொந்தே போனேன்.
 

அம்மாவிற்கு சமர்ப்பணம்


பஸ்  கட்டண உயர்வு குறித்து வெளியான சில 
கேலிச்சித்திரங்கள்  இங்கே. அவை அனைத்தும் 
அம்மாவிற்கே  சமர்ப்பணம். 





ஆனால்  ஒரு விஷயம் தெரியுமா? 


சாதாரணக் கட்டணங்கள்  கடுமையாக   உயர்ந்துள்ளதே  தவிர 
ஏ.சி பஸ் கட்டணம்  அல்ல. 


வேலூர்- சென்னை ஏ.சி பஸ் கட்டணம் முன்பு ரூபாய் 145 
இப்போது வெறும் 160  ரூபாய் மட்டுமே. 


இந்த கருணை உள்ளத்தை  ஏன் யாரும் பாராட்டவில்லை?